Categories
தேசிய செய்திகள்

டெல்லியில் காஷ்மீர் பண்டிதர்கள் போராட்டம்!

காஷ்மீரில் தங்குவதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை மத்திய அரசு செய்து கொடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லி ஜந்தர் மந்தரில் காஷ்மீர் பண்டிதர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். காஷ்மீர் பண்டிதர்கள் 1990ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 19ஆம் தேதி, அகதிகளாகத் துரத்தப்பட்டனர். அந்தத் துயரத்தை அவர்கள் ஒவ்வொரு ஆண்டும் நினைவுபடுத்துவார்கள். அந்த வகையில் இன்று டெல்லி ஜந்தர் மந்தரில் அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, தாங்கள் காஷ்மீர் திரும்ப தயாராகவுள்ளதாக முழக்கமிட்ட போராட்டக்காரர்கள், அங்கு நடந்துவரும் பயங்கரவாத செயல்களுக்கு […]

Categories
தேசிய செய்திகள்

உன் மனைவி, குழந்தையை பாலியல் தொழிலாளி ஆக்குவோம்…. போராடுவார்கள் மீது போலீஸ் காட்டம் …!!

குடியுரிமைச் சட்டத்திற்கு எதிரான போராட்டத்தில் கலந்து கொண்டவரின் மனைவியைபாலியல் தொழிலாளியாக்குவோம் என்று காவல்துறை மிரட்டிய சம்பவம், பாஜக ஆளும் உத்தரப்பிரதேச மாநிலத்தில் நடந்துள்ளது. குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராக, கடந்த டிசம் பர் 20-ஆம் தேதி லக்னோவில் போராட்டங்கள் நடைபெற்றன. இப்போராட்டத்தில் கலந்து கொண்டவர்களில் ராபின் வர்மாவும் ஒருவராவார். உத்தரப்பிரதேச பாஜக காவல்துறை அவரை கைது செய்து சிறையில் அடைத்தது. இந்நிலையில், ஜாமீனில் வெளியே வந்துள்ள ராபின் குமார் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்துள்ளார். அதில், குடியுரிமைச் சட்டத்தை […]

Categories
உலக செய்திகள்

ஈராக் போராட்டத்தில் 2 செய்தியாளர்கள் சுட்டுக் கொலை..!

ஈராக் தலைநகர் பாக்தாத்தில் நடைபெற்ற அரசுக்கு எதிரான போராட்டத்தில் இரண்டு செய்தியாளர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈராக்கில் அரசுக்கு எதிராக கடந்த சில மாதங்களாக தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றது. இந்நிலையில், அந்நாட்டு தலைநகர் பாக்தாத்தில் ஞாயிற்றுக்கிழமை நடந்த போராட்டம் குறித்து செய்தி சேகரிப்பதற்காக இரண்டு செய்தியாளர்கள் காரில் சென்றுகொண்டிருந்தனர். அப்போது, அவ்வழியாக ஜிப்பில் வந்த அடையாளம் தெரியாத கும்பல் அந்தக் கார் மீது துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பியோடியது. இதில், அந்த இரண்டு […]

Categories
மாநில செய்திகள்

மத்திய அரசு ஊழியர்களுக்கு ஆதரவாக துப்புரவு பணியாளர்கள் வேலை நிறுத்தம்.!!

மத்திய அரசு ஊழியர்கள் வேலை நிறுத்தத்திற்கு ஆதரவாகவும், மாநகராட்சியின் தொழிலாளர் விரோதப் போக்கை கண்டித்தும் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட துப்புரவு பணியாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். நாடு முழுவதும் பத்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய அரசு ஊழியர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த போராட்டங்களுக்கு ஆதரவாக தமிழ்நாட்டில் பல்வேறு அமைப்புகளும் போராடிவருகின்றன. இந்நிலையில், சென்னை மாநகராட்சியில் பணியாற்றும் துப்புரவுப் பணியாளர்கள் மத்திய அரசு ஊழியர்களின் போராட்டத்திற்கு ஆதரவாகவும், மாநகராட்சியால் ஊழியர்களுக்கு கடைபிடிக்கப்படும் தொழிலாளர் […]

Categories
மாநில செய்திகள்

வேலை நிறுத்தத்தால் வெறிச்சோடிய வருமான வரித்துறை அலுவலகம்..!!

மத்திய அரசை கண்டித்து நாடு முழுவதும் நடைபெற்று வரும் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஊழியர்கள் பங்கேற்றுள்ளதால், சென்னை வருமான வரித்துறை அலுவலகம் வெறிச்சோடி காணப்பட்டது. புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், மத்திய அரசு அலுவலங்களில் உள்ள 6 லட்சம் காலியிடங்களை நிரப்ப வேண்டும் உள்பட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நாடெங்கும் மத்திய அரசைக் கண்டித்து மத்திய அரசு ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் இன்று ஈடுபட்டு வருகின்றனர். இதில் ஒரு பகுதியாக, சென்னை நுங்கம்பாக்கத்தில் […]

Categories
மாநில செய்திகள்

நாடு தழுவிய வேலை நிறுத்தம் – மாணவர் அமைப்புகள் சாலை மறியல்!

இன்று நடைபெறும் நாடு தழுவிய வேலைநிறுத்தப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து மாணவர் அமைப்பினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். 13 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று நடைபெறும் நாடுதழுவிய வேலைநிறுத்தப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து, அண்ணா சாலை சிம்சனில் உள்ள தந்தை பெரியார் சிலை அருகில் மாணவர் கூட்டமைப்பினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். திமுக மாணவரணி, திராவிடர் கழக மாணவரணி, இந்திய மாணவர் சங்கம் உள்ளிட்ட அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்றபோது அவர்களைக் […]

Categories
சேலம் தர்மபுரி திருவள்ளூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

”குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு” பல்வேறு மாவட்டங்களில் போராட்டம் …!!

தேசிய குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தருமபுரி, சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் அனைத்து அரசியல் கட்சிகள் ஒருங்கிணைந்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தின. திருவள்ளூர் மாவட்டம்: திருத்தணியில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி பள்ளிவாசலில் தொடங்கிய பேரணி கமலா திரையரங்கின் அருகே நிறைவுபெற்றது. அதனைத் தொடர்ந்து ஒருங்கிணைந்த இஸ்லாமிய ஜமாத் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் திருத்தணி, பள்ளிப்பட்டு வட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட பள்ளிவாசல்களை சேர்ந்த இஸ்லாமியர்கள் தேசியக் […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

சீ….. சீ….. ரோடா இது ? ”நாற்று நட்ட திமுகவினர்” போராட்டம் நடத்தினர்…!!

இரண்டு மாதங்களாக சரி செய்யாமல் சேறும் சகதியுமாய் கிடக்கும் மயிலாடுதுறை நகராட்சி சாலையில் திமுகவினர் நாற்று நடும் போராட்டம் நடத்தினர். நாகப்பட்டினம் மாவட்டம் மயிலாடுதுறை நகராட்சியில் செயல்பட்டுவரும் பாதாள சாக்கடையால் அடிக்கடி குழாயில் உடைப்பு ஏற்பட்டு சாலையில் கழிவுநீர் வெளியேறி சாலை மற்றும் வீதிகளில் ஓடுவதும் வாடிக்கையாக உள்ளது. இந்த முக்கிய சாலைகளில் ஏற்படும் உடைப்பால் போக்குவரத்து தடைபட்டு பொதுமக்கள் அவதிக்குள்ளாகின்றனர். மயிலாடுதுறை – தரங்கம்பாடி செல்லும் கொத்தத்தெரு சாலையில் இரண்டு மாதங்களுக்கு முன்பு பாதாள சாக்கடை […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

குடியுரிமை திருத்தச்சட்டம் : மேலப்பாளையத்தில் கடையடைப்பு போராட்டம் ….!!

குடியுரிமை திருத்தச்சட்ட மசோதாவை எதிர்த்து மேலப்பாளையத்தில் கடையடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. குடியுரிமை சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நெல்லை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் போராட்டம் நடைபெற்று வந்த நிலையில் இன்று மாநகர பகுதியான மேலப்பாளையத்தில் இருக்கக்கூடிய , இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் போராட்டம் கடையடைப்பு போராட்டத்தை நடத்துவதற்காக ஏற்கனவே அறிவிப்பு வெளியிடப்பட்டு இருந்தது. இந்நிலையில் நெல்லை மேலப்பாளையத்தில் உள்ள வணிகர்கள் கடையடைப்பு போராட்டம் நடத்துகின்றனர். அதைத்தொடர்ந்து கண்டன பொதுக்கூட்டம் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே போல […]

Categories
மாநில செய்திகள்

#JUSTNOW: தமிழகத்தில் தமிழகர்களுக்கே வேலை….. சென்னை சென்ட்ரலில் போராட்டம் …!!

தமிழ்நாட்டு வேலை தமிழர்களுக்கே என வலியுறுத்தி தமிழ் தேசிய பேரியக்கம் சார்பில் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்று வருகின்றது. சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் முகப்பு பகுதியில் உள்ள நுழைவாயில் வளாகத்தில் தமிழ்நாட்டு வேலை தமிழர்களுக்கே என வலியுறுத்தி மனித சங்கிலி தமிழ் தேசிய பேரியக்கம் போராட்டத்தை நடத்தி வருகின்றது. தமிழர்களின் வேலை தமிழருக்கே என்ற கோரிக்கையை முன்னிறுத்தி நடைபெறும் இந்த போராட்டத்தில் 200க்கும் அதிகமானோர் பங்கேற்றுள்ளனர். இந்த போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் தமிழகத்த்தில் உள்ள வேளைகளில் அதிகளவில் […]

Categories
மாநில செய்திகள்

குவிண்டாலுக்கு 2,500 ரூபாய் வழங்க வேண்டும்-பி.ஆர்.பாண்டியன்…!!!

நெல்லுக்கு குவிண்டால் ஒன்றுக்கு 2,500 ரூபாய் வழங்க வலியுறுத்தி தலைமைச் செயலகம் நோக்கி பேரணியாக செல்ல முயற்சி செய்த விவசாயிகள் சங்கத்தினரை போலீசார் கைது செய்தனர்.   சென்னை சேப்பாக்கத்தில் நெல்லுக்கு குவிண்டால் 2500 ரூபாய் வழங்க வலியுறுத்தி விவசாயிகள் சங்கம் சார்பில் போராட்டம் நடைபெற்றது. அப்போது,செய்தியாளர்களை சந்தித்த, பி.ஆர்.பாண்டியன் நெல்லுக்கு குவிண்டால் ஒன்றுக்கு 2,500 ரூபாய் வழங்க வலியுறுத்தி கடந்த 5 ஆண்டுகளாக போராடி வருவதாக தெரிவித்தார். மேலும், சத்தீஸ்கர், ராஜஸ்தான் மாநில அரசுகள் 2 ஆண்டு […]

Categories
மாநில செய்திகள்

குடியுரிமை சட்ட மசோதா நகலை தீ வைத்து எரித்து ஆர்ப்பாட்டம்..! சென்னையில் பரபரப்பு..!!

மத்திய அரசின் புதிய குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை எதிர்த்து திராவிட இயக்க தமிழர் பேரவை தலைமையில், அம்மசோதாவின் நகலை எரித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. மத்திய அரசின் புதிய குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை எதிர்த்து திராவிட இயக்க தமிழர் பேரவை தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அண்ணா சாலையின் தர்கா அருகில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் திராவிடர் இயக்க தமிழர் பேரவை பொதுச்செயலாளர் சுப. வீரபாண்டியன், தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன், சட்டப்பேரவை […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

திறக்கப்பட்ட இரண்டே மணி நேரத்தில் மூடப்பட்ட டாஸ்மாக்!

பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தியதால் அரியப்பம்பாளையம் பகுதியில் புதியதாக திறக்கப்பட்ட டாஸ்மாக் கடை இரண்டே மணி நேரத்தில் மூடப்பட்டது. ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த அரியப்பம்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் புதியதாக டாஸ்மாக் கடை கட்டப்பட்டு, ஞாயிற்றுக்கிழமை திறக்க தயாரானது. ஆனால் புதிய டாஸ்மாக் கடைக்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தால் கடை திறக்கப்படவில்லை. இந்நிலையில், டாஸ்மாக் கடை திடீரென்று திறக்கப்பட்டது. மதுபான பிரியர்களின் கூட்டம் அலைமோதியதால் அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து கடை திறப்புக்கு எதிர்ப்பு […]

Categories
தேசிய செய்திகள் மாநில செய்திகள்

‘ஃபரூக் அப்துல்லாவை விடுவிக்க வேண்டும்’… நாடாளுமன்ற வளாகத்தில் திமுக எம்பிக்கள் போராட்டம்..!!

வீட்டுக்காவலிலுள்ள காஷ்மீரின் முன்னாள் முதலமைச்சர் ஃபரூக் அப்துல்லாவை விடுவிக்கக்கோரி நாடாளுமன்ற வளாகத்திற்கு முன்பு திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். காஷ்மீருக்கு அளிக்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்துக்குரிய சட்டப்பிரிவு 370ஐ நீக்குவதற்கு முன்பாக, அங்குள்ள எதிர்க்கட்சித் தலைவர்களை வீட்டுக் காவலில் மத்திய அரசு அடைத்தது. அதில், முன்னாள் முதலமைச்சர்களான ஃபரூக் அப்துல்லா, ஒமர் அப்துல்லா, மெகபூபா முஃப்தி உள்ளிட்டோரும் வீட்டுக் காவலில் அடைக்கப்பட்டனர். தலைவர்களை வீட்டுக்காவலில் வைத்திருப்பதை கண்டித்து நாடு முழுவதும் உள்ள எதிர்க்கட்சித் தலைவர்கள் எதிர்ப்பு […]

Categories
தேசிய செய்திகள்

யாருக்கும் பணி இல்ல…. ”சிக்கலில் ஊழியர்கள்”…. தெலங்கானாவில் தொடரும் பதற்றம்…!!

வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு பணிக்குத் திரும்பிய ஊழியர்கள் அனுமதிக்கப்படாததால் தெலங்கானாவில் பதற்றம் நிலவிவருகிறது. தெலங்கானா மாநிலத்தில் கடந்த 52 நாட்களாக, போக்குவரத்துக் கழகத்தைச் சேர்ந்த 50,000க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். தெலங்கானா போக்குவரத்துக் கழகத்தை அரசுடன் இணைக்க வேண்டும் உள்ளிட்ட 26 கோரிக்கைகளை முன்வைத்து அவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதனால், லட்சக்கணக்கான மக்கள் பாதிப்படைந்தனர். நவம்பர் 5ஆம் தேதிக்குள் போராட்டத்தை நிறுத்தி வேலைக்குத் திரும்ப வேண்டும், இல்லையெனில் அதற்கான தண்டனையை அவர்கள் அனுபவிப்பார்கள் […]

Categories
கோயம்புத்தூர் சேலம் நீலகிரி மாவட்ட செய்திகள்

’4ஜி சேவை வழங்க வேண்டும்’ – பிஎஸ்என்எல் ஊழியர்கள் போராட்டம்..!!

பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு 4ஜி சேவையை உடனடியாக மத்திய அரசு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி, சேலம் பிஎஸ்என்எல் ஊழியர்கள் உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொண்டனர். பிஎஸ்என்எல் தொலைத்தொடர்பு நிறுவனத்திற்கு 4ஜி சேவையை வழங்க வேண்டும், ஊழியர்களுக்கு உரிய தேதியில் மாதச் சம்பளம் வழங்க வேண்டும், ஒப்பந்த ஊழியர்களுக்கு நிலுவையிலுள்ள ஊதியத்தொகையை உடனடியாக வழங்க வேண்டும் உள்ளிட்ட 11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பிஎஸ்என்எல் தொலைத்தொடர்பு ஊழியர்கள் பல்வேறு போராட்டங்களை நாடு முழுவதும் நடத்தி வருகின்றனர். அதன் ஒருபகுதியாக, சேலம் […]

Categories
தேசிய செய்திகள்

போராட்டம் நடத்தல…. வேலைக்கு வாரோம்….. சரணடைந்த தொழிலாளர்கள் ..!!

தெலங்கானா போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது. கடந்த 52 நாட்களாக, தெலங்கானா போக்குவரத்துக் கழகத்தைச் சேர்ந்த 50,000க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். தெலங்கானா போக்குவரத்துக் கழகத்தை அரசுடன் இணைக்க வேண்டும் உள்ளிட்ட 26 கோரிக்கைகளை முன்வைத்து அவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதனால், லட்சக்கணக்கான மக்கள் பாதிப்படைந்தனர். நவம்பர் 5ஆம் தேதிக்குள் போராட்டத்தை நிறுத்தி வேலைக்கு திரும்ப வேண்டும் இல்லையெனில் அதற்கான தண்டனையை அவர்கள் அனுபவிப்பார்கள் என தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ் […]

Categories
மாநில செய்திகள்

‘மருத்துவர்கள் மீதான நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு கைவிட வேண்டும்’ – உயர்நீதி மன்றம்..!!

வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்ட அரசு மருத்துவர்கள் மீதான நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு கைவிட வேண்டுமென சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பதவி உயர்வு, மத்திய அரசு மருத்துவர்களுக்கு இணையான ஊதியம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த அக்டோபர் மாதம் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்ட அரசு மருத்துவர்கள் மீது பணியிட மாற்றம், ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படுமென சுகாதாரத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மருத்துவர்களிடம் நடத்திய பேச்சுவார்த்தையின் அடிப்படையில் போராட்டம் கைவிடப்பட்ட நிலையில், […]

Categories
தேசிய செய்திகள்

சர்தார் சரோவர் அணை விவகாரம்: மேதா பட்கர் தலைமையில் காலவரையற்ற போராட்டம்

சர்தார் சரோவர் அணையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் கோரி சமூக செயற்பாட்டாளர் மேதா பட்கர் தலைமையிலான குழுவினர் காலவரையற்ற எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நர்மதா அணை விவகாரம் தொடர்பாக டெல்லி ஜந்தர் மந்தரில் சமூக செயற்பாட்டாளர் மேதா பட்கர் தலைமையிலான நர்மதா பச்சோ அந்தோலன் குழுவினர் மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நர்மதா நதிக்கரை அருகே வாழ்ந்துவரும் 32 ஆயிரம் பேர் அந்த இடத்தில் அகற்றப்படுவார்கள் என்பதற்காக அவர்களுக்காக போராடிவரும் நர்மதா பச்சோ அந்தோலன் இயக்கம் தொடர் போராட்டங்களை முன்னெடுத்து […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

”முழுமையாக வேலை கொடுங்க” சர்க்கரை ஆலை ஊழியர்கள் போராட்டம்…!!

ஆம்பூர் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் பணிபுரிந்த தற்காலி ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். வேலூர் மாவட்டம் ஆம்பூர் அருகே உள்ள வடபுதுப்பட்டு கிராமத்தில் 1961ஆம் ஆண்டு அப்போதைய முதலமைச்சர் காமராஜர் அவர்களால் தொடங்கப்பட்ட ஆம்பூர் கூட்டுறவு சர்க்கரை ஆலை தொடர்ந்து இயங்கி வருகிறது. இங்கு ஆரம்ப காலத்தில் சுமார் 1,500 ஊழியர்கள் பணிபுரிந்த நிலையில் தற்போது படிப்படியாக குறைந்து 250 ஊழியர்கள் மட்டுமே பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில் பருவகாலத்தில் அதிகளவு கரும்புகள் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

வாக்குச்சாவடி இடமாற்றம்: கிராம மக்கள் போராட்டம்!

வாக்குச்சாவடி இடமாற்றம் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 50க்கும் மேற்பட்ட மக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் போராட்டம் நடத்தினர். திண்டுக்கல் அடுத்துள்ள செட்டிநாயக்கன்பட்டி பஞ்சாயத்துக்கு உட்பட்டது அழகர் சிங்கம்பட்டி. இங்கு 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் இதுவரை நடந்த அனைத்து தேர்தல்களிலும் ஊரின் அருகே உள்ள சென்னமநாயக்கம்பட்டியில் அமைந்திருக்கும் வாக்குச்சாவடிக்கு சென்று வாக்களித்துள்ளனர். இந்நிலையில், விரைவில் நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலுக்கு வாக்குச்சாவடிகள் சரி பார்க்கும் பணி நடைபெற்று வருகிறது. இதில் அழகர் சிங்கம்பட்டியைச் சேர்ந்த […]

Categories
தேசிய செய்திகள்

5_ஆம் தேதிக்குள் வாங்க ”குடும்ப நலன் கருதி வாய்ப்பு” சந்திரசேகர ராவ் கெடு …!!

தெலுங்கானாவில் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்ட போக்குவரத்துத் தொழிலாளர்கள் வரும் 5ஆம் தேதிக்குள் வேலைக்குத் திரும்ப வேண்டும் என்று அந்த மாநில முதலமைச்சர் சந்திர சேகர ராவ் அறிவுறுத்தியுள்ளார். தெலுங்கானாவில் நடைபெற்று வரும் போக்குவரத்துத் தொழிலாளர்களின் போராட்டம் குறித்து, அம்மாநில முதலமைச்சர் சந்திரசேகர ராவ் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், ‘தெலங்கானா போக்குவரத்துத் தொழிலாளர்களுக்கு மீண்டும் ஒருமுறை வாய்ப்பை வழங்குகிறோம். வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள், வருகிற 5ஆம் தேதிக்குள் பணிக்குத் திரும்ப வேண்டும். உங்களின் குடும்ப […]

Categories
மாநில செய்திகள்

பள்ளி வளாகத்திற்குள் மாணவர்களை வெளுத்து வாங்கிய போலீஸ்…… வெறிசெயலுக்கு பெற்றோர்கள், பொதுமக்கள் கண்டனம்….!!

கேரளாவில் காவல்துறையினர்பள்ளி வளாகத்திற்குள் நுழைந்து ,மாணவர்களை தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  கேரள மாநிலம் வர்க்கலா பகுதியில் யூத் பெஸ்டிவல் என்ற பண்டிகை நடைபெற்று உள்ளது. அந்த பண்டிகையை கொண்டாடும் விதமாக பள்ளி மாணவர்கள் பள்ளி வளாகத்திற்குள் பட்டாசு வெடித்து கொண்டாடி உள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த பள்ளி முதல்வர் காவல்துறையினருக்கு தகவல் அளித்துள்ளார். இதையடுத்து அங்கு விரைந்த காவல்துறையினர் பள்ளி வளாகம் என்றும் பாராமல் மாணவர்களை சரமாரியாக தாக்கியுள்ளனர். இதில் பன்னிரண்டாம் வகுப்பு மாணவன் சதீஷ் என்பவர் […]

Categories
மாநில செய்திகள்

அக். 30, 31இல் வேலைநிறுத்தப் போராட்டம்: மருத்துவர்கள் சங்கம் அறிவிப்பு…!!

ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அக்டோபர் 30, 31ஆம் தேதிகளில் வேலைநிறுத்தப் போராட்டம் நடத்தப்படும் என்று தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கத்தின் மாநிலச் செயலாளர் ரவிசங்கர் அறிவித்துள்ளார். தமிழ்நாடு முழுவதும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 18 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளிகள் அவதிக்குள்ளாகிவருகின்றனர். அரசுத் தரப்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டும் தோல்வியைத் தழுவியது.இந்நிலையில், கோவை அரசு மருத்துவமனையில் தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கத்தின் மாநிலச் செயலாளர் டாக்டர் ரவிசங்கர் செய்தியாளர்களைச் […]

Categories
உலக செய்திகள்

”தீபாளிக்கு முற்றுகை போராட்டம்” இந்தியத் தூதரகத்துக்கு பாதுகாப்பு …!!

இந்தியத் தூதரகத்தைப் பாதுகாக்க அனைத்துவித நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என இங்கிலாந்து காவல் துறை உறுதியளித்துள்ளது. காஷ்மீர் பிரச்னையை எழுப்பி பாகிஸ்தான் ஆதரவு அமைப்புகள் தீபாவளி நாளில், லண்டனில் உள்ள இந்திய தூதரகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகின.இது குறித்து தகவலறிந்த ’ஸ்காட்லாந்து யார்டு’ காவல் துறையினர் இந்தப் போராட்டத்தைக் கட்டுப்படுத்த நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். போராட்டக்காரர்கள் பேரணியாக வரும் பாதைகளில் தடுப்புகள் போடப்பட்டுள்ளன என்றும் பத்திரிகையாளர்களுக்கும் இந்தப் பகுதியில் அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாகவும் லண்டன் காவல் துறை […]

Categories
உலக செய்திகள்

ஈராக் அரசைக் கண்டித்து போராட்டம் : வன்முறையால் 21பேர் பலி ….!!

ஈராக்கில் அரசைக் கவிழ்க்க நடைபெற்ற போராட்டத்தில் வன்முறை வெடித்தது. தடியடி நடத்தி கண்ணீர் குண்டுகளை வீசி காவல்துறையினர் போராட்டத்தைக் கலைத்தனர். ஈராக்கில் அரசுக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தின்போது பெரும் வன்முறை வெடித்தது. இதில் 21 பேர் உயிரிழந்தனர். 1700க்கும் அதிகமனோர் படுகாயம் அடைந்தனர்.ஈராக்கில் மனித உரிமை மீறல்களைக் கண்டித்து கடந்த மூன்று வார காலமாக அரசுக்கு எதிரான போராட்டம் வலுத்து வருகிறது. இந்நிலையில் பாக்தாத் தெருக்களில் பல்லாயிரக்கணக்கானோர் திரண்டு போராட்டம் நடத்தினர். வேலைவாய்ப்பின்மை, ஊழலுக்கு உள்ளிட்டவற்றுக்கு எதிராக […]

Categories
உலக செய்திகள்

கேட்டலோன் மக்கள் போலீசார் மீது குப்பை வீசி போராட்டம்..!!

கேட்டலோனிய மக்கள் தங்கள் கைகளில் கிடைக்கும் குப்பைகளைக் காவல் துறையினர் அமைத்து வைத்திருந்த தடுப்புகளுக்கு வெளியே வீசி, அரசாங்கத்துக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பினர். ஸ்பெயின் நாட்டில் உள்ள கேட்டலோனியா மாகாணத்தை தனிநாடாக அறிவிக்கக் கோரி அங்குள்ள மக்கள் பல ஆண்டுகளாக போராடி வருகின்றனர். ஆனால் கேட்டலான்களின் இந்தக் கோரிக்கைக்கு ஸ்பெயின் அரசு செவிசாய்க்கவில்லை. இந்நிலையில், 2017ஆம் ஆண்டு கேட்டலோனியாவை தனிநாடாக அறிவிப்பது தொடர்பாக அம்மாகாண அரசு பொது வாக்கெடுப்பு நடத்தியது. இந்த வாக்கெடுப்பில் 90 சதவிகித கேட்டலோன் […]

Categories
உலக செய்திகள்

5,00,000 கேட்டலோன் மக்கள் போராட்டம்…. ஸ்தம்பித்துப் போன பார்சிலோனா..!!

கேட்லோனியா தலைவர்களுக்கு வழங்கப்பட்ட தண்டனைக்கு எதிராக நேற்று கேட்டலோனியா மக்கள் நடத்திய போராட்டத்தால் பார்சிலோனா நகரமே ஸ்தம்பித்துப் போனது. ஸ்பெயின் நாட்டில் உள்ள கேட்டலோனியா மாகாணத்தை தனிநாடாக அறிவிக்கக் கோரி அங்குள்ள மக்கள் பல ஆண்டுகளாக போராடி வருகின்றனர். ஆனால் கேட்டலான்களின் இந்தக் கோரிக்கைக்கு ஸ்பெயின் அரசு செவிசாய்க்கவில்லை. இந்நிலையில், 2017ஆம் ஆண்டு கேட்டலோனியாவை தனிநாடாக அறிவிப்பது தொடர்பாக அம்மாகாண அரசு பொது வாக்கெடுப்பு நடத்தியது. இந்த வாக்கெடுப்பில் 90 சதவிகித கேட்டலோன் மக்கள், தனிநாட்டுக்கு ஆதரவாக […]

Categories
தேசிய செய்திகள் மாநில செய்திகள்

ரூ 48,000,00,00,000……”பரிவர்த்தனை பாதிப்பு” 2_நாள்….4,00,000 ஊழியர்கள்…. வங்கி ஊழியர்கள் எச்சரிக்கை…!!

வருகின்ற 26,27_ஆம் தேதி வங்கி ஊழியர்கள் போராட்டம் குறித்து இந்திய வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பின் மாநில செயலாளர் சேகரன் செய்தியாளர்களை சந்தித்தார். அகில இந்திய வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பின் மாநில செயலாளர் சேகரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில் ,நாடு முழுவதும் 4 லட்சம் அதிகாரிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் 4 வங்கி அதிகாரிகள் சங்கம் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வருகின்ற 26 , 27ஆம் தேதி நாடு முழுவதும் இரண்டு நாள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளோம்.  இதில் இந்தியளவில் 4 […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

”வேலூரை போல எங்களையும் பிரியுங்க” மாவட்டமாக பிரிக்க கோரி பேரணி…!!

சங்கரன்கோவிலை தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டுமென்று மாபெரும் பேரணி நடைபெற்றது. திருநெல்வேலி  மாவட்டத்தில் இருந்து தென்காசியை தனியாகப் பிரித்து தனி மாவட்டமாக அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து சங்கரன்கோவிலையும் தலைமையிடமாக கொண்டு தனி மாவட்டம்ம அமைக்கவேண்டுமென்று வியாபாரிகள் மாபெரும் பேரணி நடத்தி வருகின்றனர். 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விசைத்தறிகள் கடைகள் ,  சிறு கடைகள் முதல் பெரிய கடைகள் என அனைத்து கடைகளையும் மூடி 10,000த்திற்கும் அதிகமான மக்கள் பேரணியாக சென்று வட்டாட்சியரிடம் மனு கொடுக்கின்றனர். இது குறித்து அவர்கள் கூறும் போது சங்கரன்கோவில் […]

Categories
உலக செய்திகள்

ஒருவழியாக முடிவை மாற்றிய ஹாங்காங்…. கைதிகளை நாடு கடத்தும் திட்ட மசோதா வாபஸ்.!!

போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவருவதற்காக கைதிகளை நாடு கடத்தும் திட்ட மசோதா வாபஸ் பெறப்படும் என ஹாங்காங்  அறிவித்தது.     கடந்த 3 மாதங்களாக  சீனாவின் கட்டுப்பாட்டில் இருக்கும் ஹாங்காங்கில் அரசை எதிர்த்து மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். எதற்காக போராட்டம் நடத்துகிறார்கள் என்றால் ஹாங்காங் குற்றவாளிகளை சீனாவுக்கு அரசு அழைத்து செல்லும் திட்ட மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து தான். ஆகவே அரசின் முடிவை எதிர்த்து மக்களின் போராட்டம் தொடங்கியது. மேலும்  ஹாங்காங் நிர்வாக ஆட்சியாளர் கேரிலாம் பதவி விலககோரியும் தொடர்ந்து மக்கள் போராட்டங்கள் […]

Categories
மாநில செய்திகள்

”மாற்றுத்திறனாளிகள் போராட்டம்” அனைவரையும் கைது செய்தது போலீஸ்…!!

சென்னையில் முற்றுகை போராட்டம் நடத்திய மாற்றுத்திறனாளிகளை காவல்துறையினர் கைது செய்தனர். மாற்றுத் திறனாளிகள் எங்களுக்கான வேலைவாய்ப்பு , இடஒதுக்கீடு  உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி அதிகாரிகளிடம் பலமுறை முறையிட்டும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று மாற்றுத்திறனாளிகள் சென்னை எழிலகத்தில் மாற்றுத்திறனாளிகள் முற்றுகை போராட்டம் நடத்தினர்.அதில் மாற்றுத்திறனாளிகள் நலச்சட்டத்தி முழுமையாக அமுல்படுத்த வேண்டும். மாற்றுத்திறனாளி நல வாரியத்தை ஏற்படுத்த வேண்டுமென்று முழக்ககங்களை முழங்கினார். போராட்டம் நடத்தியவர்களிடம்  துணை ஆணையர் சுதாகர் நீண்ட நேரமாக பேச்சுவார்த்தை நடத்தியும் போராட்டக்கார்கள் உடன்படாத காரணத்தால் அனைவரையும்  காவல்துறையினர் கைது […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

“மயிலாடுதுறையை தனி மாவட்டமாக்க வேண்டும்” ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம்..!!

மயிலாடுதுறையை தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என்று கோரிக்கையை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  சமீபத்தில்  தென்காசி, செங்கல்பட்டு, கள்ளக்குறிச்சி, ராணிப்பேட்டை, திருப்பத்தூர் ஆகிய 5  புதிய மாவட்டங்களை புதிதாக தமிழக அரசு அறிவித்தது. அதன் பிறகு மயிலாடுதுறை பகுதி  மக்களும் தனி மாவட்டமாக அறிவிக்கவேண்டும் என்று  கடந்த ஒரு மாதத்திற்கும்  மேலாக தொடர்ந்து போராட்டம் நடத்தி  வருகின்றனர்.பல ஆண்டுகளாகவே மயிலாடுதுறை கோட்ட மக்கள் மயிலாடுதுறையை புதிய மாவட்டமாக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால் இதுவரையில் […]

Categories
அரசியல் தேசிய செய்திகள் மாநில செய்திகள்

டெல்லியில் திமுக போராட்டம்- 14 கட்சிகள் பங்கேற்பு ….!!

டெல்லியில் திமுக நடத்தும் போராட்டத்தில் 14 கூட்டணி கட்சிகள் பங்கேற்றுள்ளனர். ஜம்மு-காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து இரத்து செய்து கடந்த 6_ஆம் தேதி மத்திய அரசு அதற்கான மசோதாவை நிறைவேற்றியது. மேலும் ஜம்மு-காஷ்மீர் மற்றும்  லடாக் என்ற யூனியன் பிரதேசமாக அறிவிக்கப்பட்டது.மேலும் அங்குள்ள முன்னாள் முதல்வர்கள் வீட்டுச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இது ஜனநாயக படுகொலை என்று கடுமையான கண்டனம் தெரிவித்த திமுக டெல்லியில் உள்ள ஜந்தர் மந்த் பகுதியில் திமுக மக்களவை தலைவர் TR.பாலு தலைமையில் போராட்டம் நடத்தி வருகின்றது. […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

காஷ்மீர் விவகாரம் : டெல்லியில் இன்று திமுக போராட்டம்….!!

ஜம்மு காஷ்மீர் விவகாரம் தொடர்பாக டெல்லியில் இன்று திமுக சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெறுகின்றது. ஜம்மு-காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து இரத்து செய்து கடந்த 6_ஆம் தேதி மத்திய அரசு அதற்கான மசோதாவை நிறைவேற்றியது. மேலும் ஜம்மு-காஷ்மீர் மற்றும்  லடாக் என்ற யூனியன் பிரதேசமாக அறிவிக்கப்பட்டது.மேலும் அங்குள்ள முன்னாள் முதல்வர்கள் வீட்டுச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மேலும் பல்வேறு கட்டுப்பாடுகளை மத்திய அரசாங்கம் பிறப்பித்துள்ளது.காஷ்மீரில் மத்திய அரசின் விவகாரம் குறித்து கடந்த 19_ஆம் தேதி திமுக தலைவர் முக.ஸ்டாலின் அதிரடி அறிக்கை ஒன்றை […]

Categories
தேசிய செய்திகள் மாநில செய்திகள்

காஷ்மீர் விவகாரம் : ”டெல்லிக்கே சென்று போராட்டம்” திமுக அறிவிப்பு..!!

ஜம்மு காஷ்மீர் விவகாரம் தொடர்பாக டெல்லியில் திமுக சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெறும் என மு.க ஸ்டாலின் அறிவித்துள்ளார். ஜம்மு-காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து இரத்து செய்து கடந்த 6_ஆம் தேதி மத்திய அரசு அதற்கான மசோதாவை நிறைவேற்றியது. மேலும் ஜம்மு-காஷ்மீர் மற்றும்  லடாக் என்ற யூனியன் பிரதேசமாக அறிவிக்கப்பட்டது.இந்த விவகாரம் தொடர்பாக டெல்லியில் வரும் 22ஆம்  டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தரில் அனைத்து கட்சி எம்பிக்களும் பங்கேற்கும் ஆர்ப்பாட்டத்தை திமுக நடத்துகின்றது. இதற்காக திமுக தலைவர் ஸ்டாலின் விடுத்துள்ள அறிக்கையில் […]

Categories
மாநில செய்திகள்

தண்ணீர் இல்லை…. தண்ணீர் இல்லை…. ” தீடிர் போராட்ட அறிவிப்பு” வர போகுது சிக்கல் ..!!

ஆகஸ்ட் 21_ஆம் தேதி முதல் தனியார் தண்ணீர் லாரி ஓடாது என்று போராட்டம் அறிவித்துள்ளனர். தமிழகத்தில் நடக்கும் தண்ணீர் திருட்டுக்கு தனியார் லாரிகள் காரணமாக இருக்கின்றது என்று லாரி மீதும் , லார்ரி உரிமையாளர்கள் திருட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதற்க்கு லாரி உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இந்நிலையில் தமிழகம் முழுவதும் ஆகஸ்ட் 21-ஆம் தேதி முதல் தனியார் தண்ணீர் லாரிகள் ஓடாது என்று போராட்டம் அறிவித்துள்ளனர். இதில் தமிழகம் முழுவதும் திருட்டு வழக்கு பதிவதை கண்டித்தும் , லாரிகளை […]

Categories
உலக செய்திகள்

ஹாங்காங் ”போராட்டம் முடிந்தது” விமான சேவை தொடங்கியது …!!

ஹாங்காங் விமான நிலையத்துக்கு வளாகத்தில் நடைபெற்ற வந்த சற்று தணிந்த நிலையில் விமான சேவையை தொடங்கியுள்ளது ஹாங்காங்கில் கைதிகள் பரிமாற்ற சட்ட மசோதாவுக்கு எதிராக போராட்டம் தீவிரமாக நடைபெற்று வந்தது. கடந்த ஞாயிற்றுக்கிழமை போராட்டக்காரர்கள் விக்டோரியா பூங்காவில் அமைதிப் பேரணி நடத்தினர்.ஆனால் ஒரு கட்டத்தில் போராட்டக்காரர்கள் போலீசாரின் தடையை மீறி சாலைக்கு சென்றனர். இதனால் போலீசாருக்கும் , போராட்டக்காரர்களுக்கு மோதல் ஏற்பட்டது. இதேபோல ஹாங்காங் விமானத்தை முற்றுகையிடும் தொடர் போராட்டத்தை நடத்தி வந்தனர். இதன் காரணமாக   விமான சேவைகள் […]

Categories
திருச்சி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

“அய்ய்யாக்கண்ணு படுத்து புரண்டு போராட்டம்” திருச்சியில் பரபரப்பு …!!

விவசாய பிரச்சனைக்கு தீர்வு காணாமல் வேலூர் தேர்தலை நடத்தக் கூடாது என்று திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அய்யாக்கண்னு போராட்டத்தில் ஈடுபட்டார். விவசாய கடனை தள்ளுபடி செய்யவேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி  டெல்லிலியில் உள்ள சந்தர் மந்தரில் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தியவர்  அய்யாக்கண்னு. ஆனால் இவர் தொடர்ந்து  போராட்டங்களை நடத்தியும்  பலனும் இல்லை. இந்நிலையில் வேலூர் மக்களவை தேர்தலை நடத்தக் கூடாது என்று படுத்து புரண்டு அய்யாக்கண்ணு போராட்டம் நடத்தியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மக்களவைக்கு நிறுத்தி வைக்கப்பட்ட […]

Categories
மாநில செய்திகள்

“விவசாயிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் எந்தத் திட்டத்தையும் ஏற்க மாட்டோம்” முதல்வர் நாராயணசாமி..!!

விவசாயிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் ஹைட்ரோகார்பன் உள்ளிட்ட எந்தத் திட்டத்தையும் ஏற்க மாட்டோம் என்று முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்  புதுச்சேரியில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு பல இடங்களில் போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் டெல்லி ஜந்தர் மந்தரில் விவசாயிகளின் உண்ணாவிரத போராட்டத்தை புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தொடங்கி  வைத்தார். அப்போது அவர் பேசுகையில் ஹைட்ரோகார்பன் எடுக்கும் திட்டத்தை கைவிடக்கோரி பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் சந்திக்க உள்ளதாக கூறினார். மேலும் புதுச்சேரியில் விவசாயிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் ஹைட்ரோகார்பன் உள்ளிட்ட எந்தத் திட்டத்தையும் […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

“பருத்தி கொள்முதல்” பாதிக்கப்பட்ட விவசாயிகள் சாலை மறியல்… நாகையில் பரபரப்பு..!!

நாகையில் பருத்திக் கொள்முதலின் போது திடீரென ஏற்பட்ட பிரச்சனையால் பாதிக்கப்பட்ட  விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர். நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் உள்ள மாயூரம் கூட்டுறவு விற்பனை பண்டக சாலையில் நேற்று நடைபெற்ற பருத்தி ஏலத்தில் குவிண்டாலுக்கு 5,800 ரூபாய் வரை வியாபாரிகளால் விலை நிர்ணயம் செய்யப்பட்டது. அதன் பின் திடீரென்று வியாபாரிகளுக்கு இடையில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக பருத்தியை கொள்முதல் செய்யாமல் அப்படியே விட்டு சென்றனர். இதனால் ஆத்திரமடைந்த வியாபாரிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர். மேலும் தங்களுக்கு […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

“நியூட்ரினோ ஆய்வு திட்டத்திற்கு எதிர்ப்பு” தொடரும் பரபரப்பு ….!!

நியூட்ரினோஆய்வு திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து , போரட்டம் நடத்தி வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தேனி மாவட்டம் அம்பரப்பர் மலை பகுதியில் அமைய உள்ள நியூட்ரினோஆய்வு திட்டத்திற்கு கிராம மக்களும் , இயற்கை ஆர்வலர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறை ஆகிய துறை சார்பாக இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.நுண்துகள் மற்றும் பிரபஞ்ச யுக்திகளை கண்டறியும் ஆய்வாக இது அமைகின்றது. இந்த ஆய்விற்காக மலையை குடைந்து ஆய்வுமையத்தை தேனிமாவட்டத்தில் அமைக்கின்றனர். இது அங்குள்ள கிராமப்புரவாசிகள் மற்றும் இயற்கை […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

ஹைட்ரோகார்பன் திட்டம் எதிர்ப்பு ..!!”13 கிராம மக்கள் தொடர் போராட்டம் “

தஞ்சாவூரை சுற்றியுள்ள 13 கிராமத்து மக்கள் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக போராட்டத்தை தொடங்கியுள்ளனர் . மீண்டும் ஹைட்ரோ கார்பன் திட்டம் ஆனது  தஞ்சாவூரை சுற்றியுள்ள     கிராமங்களில்    செயல்படுத்தப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனை அடுத்து ஹைட்ரோ கார்பன் திட்டம் செயல்படுத்தப்பட உள்ள பகுதிகளை சுற்றியுள்ள 13 கிராம மக்கள்  இத்திட்டத்தை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஹைட்ரோ கார்பன் திட்டமானது உறுதியாக செயல்படுத்தப்பட இருக்கும் நிலையில் அதற்கான உபகரணங்களான குழாய்கள், இயந்திரங்கள் போன்றவை கிராமங்களுக்கு தினந்தோறும் […]

Categories
தேசிய செய்திகள்

“காஷ்மீரில் 3 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை” கல்லூரி மாணவர்கள் போராட்டம்!!

ஜம்மு-காஷ்மீரில் 3 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை  செய்யப்பட்டதையடுத்து  கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.  ஜம்மு- காஷ்மீர் மாநிலத்தின் பந்திபோரா (Bandipora) மாவட்டத்தின் அருகே உள்ள சும்பல் (Sumbal) பகுதியில் 3 வயது சிறுமி பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்டார். இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக நடவடிக்கை எடுக்க கோரி, ஸ்ரீநகரைச் சேர்ந்த இரு கல்லூரிகளின் மாணவர்கள், போராட்டத்தில் ஈடுபட்டனர். கல்லூரி மாணவர்கள் கல்லூரி வளாகத்திற்கு வெளியே வந்து போராட்டம் நடத்த முயன்றதால் போலீசார் மற்றும் பாதுகாப்பு படையினர் அவர்களை தடுத்தனர். இதனால்  இரு தரப்புக்கும் இடையே கடுமையான  மோதல் ஏற்பட்டது. […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

விசைத்தறி தொழிலாளிகள் போராட்டம் வாபஸ்…!!

விசைத்தறி தொழிலாளிகள் ஊதிய உயர்வு கேட்டு போராட்டம் நடத்தியதில் ஊதிய உயர்வு உறுதி செய்யப்பட்டதையடுத்து  போராட்டத்தை கைவிட்டனர். விருதுநகர் மாவட்டம்  ராஜபாளையம் அருகே உள்ள சத்திரப்பட்டியில் 500-க்கும் மேற்பட்ட விசைத்தறி கூடங்கள் உள்ளன. இங்கு சுற்று வட்டார பகுதிகளைச் சேர்ந்த பெண்கள் உள்பட 7 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வேலை பார்த்து வருகின்றனர். சத்திரப்பட்டி விசைத்தறி கூடங்களில் உற்பத்தி செய்யப்படும் பேண் டேஜ் துணிகள் இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளுக்கும்  அனுப்பப்பட்டு வருகிறது.கடந்த 2016-ம் ஆண்டு விசைத்தறி உரிமையாளர்களுக்கும், தொழிலாளர்களுக்கும் இடையே கூலி […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

“விண்ணப்பம் வழங்குவதில் பாரபட்சம் ,தனியார் பள்ளியை முற்றுகை செய்த பெற்றோர்கள் “விருதுநகரில் பரபரப்பு !!…

விருதுநகரில் தனியார் பள்ளியை பெற்றோர்கள் முற்றுகை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது . விருதுநகர் நகராட்சி அலுவலகம் எதிரே அரசு உதவி பெறும் தனியார் ஷத்திரிய பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 1ஆம் வகுப்பு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்களை பெற இரவு முழுவதும் நீண்ட வரிசையில்  பெற்றோர்கள் காத்திருந்தனர்.இந்நிலையில் குறிப்பிட்ட சிலருக்கு மட்டும் விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு விண்ணப்பங்கள் முடிவடைந்ததாக அறிவிக்கப்பட்டதால், ஆத்திரமடைந்த பெற்றோர்கள் பள்ளியை முற்றுகை செய்தனர். இதனையடுத்து மேலும் ஆத்திரமடைந்த பெற்றோர்களில் சிலர் மூடப்பட்ட பள்ளியின் […]

Categories
அரியலூர் மாநில செய்திகள்

24_ஆம் தேதி தமிழகம் முழுவதும் விசிக போராட்டம்….. திருமாவளவன் அறிவிப்பு…!!

பொன்பரப்பி கிராமத்தில் நடைபெற்ற தாக்குதல் சம்பவத்தை கண்டித்து, தமிழகம் முழுவதும் விசிக கட்சி சார்பில் 24_ஆம் தேதி ஆர்ப்பாட்டம் என திருமாவளவன் தெரிவித்துள்ளார். சிதம்பரம் மக்களவைத் தொகுதிக்குட்பட்ட அரியலூர் மாவட்டத்தில் உள்ள பொன்பரப்பி பகுதியில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனின் போட்டியிடும் சின்னமான பானையை ஒரு சிலர் உடைத்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக ஏற்பட்ட மோதலில் ஒருவர் தாக்கப்பட்டார். இதனையடுத்து மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்றுக் கொண்டிருந்த வேளையில், பொன்பரப்பி கிராம குடியிருப்பில் புகுந்த மற்றொரு தரப்பினர் அங்கிருந்த 20க்கும் மேற்பட்ட வீடுகளை […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

பசும்பொன் முத்துராமலிங்க தேவர் பெயரை வைக்க போராட்டம்…… 172 பேர் மீது வழக்கு பதிவு….!!

விமான நிலையத்திற்கு பசும்பொன் முத்துராமலிங்க தேவர்  பெயரை வைக்க கோரி மதுரையில் போராட்டம் நடத்திய 172 பேர் மீது காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளது. மதுரை விமான நிலையத்திற்கு பசும்பொன் முத்துராமலிங்கம் பெயரை வைக்க கோரி தேவர் அமைப்புகள் கோரிக்கை வைத்து வருகின்றது . கடந்த சில வாரங்களுக்கு முன்பு கூட இதே கோரிக்கையை வைத்து மதுரையில் முழு கடையடைப்பு போராட்டம் நடத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் முக்குலத்தோர் புலிப்படை , பார்வர்ட் பிளாக் மற்றும் தேவர் அமைப்புகளை […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

பொள்ளாச்சி விவகாரம் : மன்னார்குடி அரசினர் கலைக் கல்லூரி மாணவ, மாணவிகள் போராட்டம்….!!

பொள்ளாச்சியில் ஆபாச வீடியோ விவகாரத்தில் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மாணவ, மாணவிகள்  போராட்டம் நடத்தினர்.  கோவை  மாவட்டம் பொள்ளாச்சியில் சில தினங்களுக்கு முன்பாக கல்லூரி மாணவிகளை பாலியல் சீண்டலுக்கு உட்படுத்தப்பட்டு ஆபாச வீடியோ எடுத்து அவர்களை மீண்டும் பாலியலுக்கு  உட்படுத்திய 4 பேர் கொண்ட கும்பலை கைது செய்தனர். மேலும் பெண்களை ஆபாசமாக கொடுமை படுத்தும் வீடியோவை வெளியிட்டனர்.இது சமூக வலைதளத்தில் வைரலாகி தமிழகம் முழுவதும்  பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதற்க்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர். […]

Categories

Tech |