பள்ளி வளாகத்தில் தேங்கிய மழை நீரை வெளியேற்ற வலியுறுத்தி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அனுமந்தபுரம் கிராமத்தில் அரசு தொடக்கப்பள்ளி அமைந்துள்ளது. இங்கு 50-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக அப்பகுதியில் மழை பெய்ததால் பள்ளியின் மேற்கூரைகள் சேதமடைந்து மழை நீர் ஒழுகி பள்ளிக்கூடத்தில் தேங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் சிரமப்படும் மாணவ மாணவிகள் காரிமங்கலம்- பாலக்கோடு சாலையில் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து அறிந்த தாசில்தார் […]
Tag: students protest
பள்ளி மாணவர்கள் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள ரெட்டியார்பட்டியில் இருக்கும் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஏராளமான மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். இந்நிலையில் பள்ளி மாணவர்கள் புத்தக பையுடன் சாலையில் அமர்ந்து திடீரென போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். அப்போது பள்ளிக்கூடத்தில் போதிய அளவு குடிநீர் இல்லை. அதன்பின் கூடுதல் கழிப்பறை வசதி அமைத்துத் தரவேண்டும். பள்ளிக்கு […]
தென்காசி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு அரசு பள்ளி மாணவர்கள் இலவச மடிக்கணினி வழங்கக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர். தென்காசி மாவட்டத்தில் உள்ள நெடுவயல் பகுதியில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. அந்த பள்ளியில் படிக்கும் சில மாணவர்கள் கலெக்டர் அலுவலகம் முன்பு தரையில் அமர்ந்து கொண்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அப்போது கலெக்டர் அலுவலகத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அவர்களை அங்கு அமர கூடாது என்று கூறி அப்புறப்படுத்தியுள்ளனர். அதன் பின் அந்த மாணவர்கள் கலெக்டர் அலுவலகத்தில் […]