Categories
தேசிய செய்திகள்

BREAKING : சற்று நேரத்தில் தீர்ப்பு…. வரலாற்றில் முதல்முறையாக சுப்ரீம் கோர்ட்டில் நேரலையில் வழக்கு விசாரணை..!!

உச்சநீதிமன்றத்தில் முதல்முறையாக நேரலையில் வழக்கு விசாரணை செய்யப்பட்டு வருகிறது. அரசியல் கட்சிகள் தேர்தல் இலவசங்களை அறிவிக்க தடை கோரி பா.ஜ.க வழக்கறிஞர் அஸ்வினி உபாத்யாய் தொடர்ந்த வழக்கில் சற்று நேரத்தில் உத்தரவு பிறப்பிக்கிறது உச்சநீதிமன்றம். தலைமை நீதிபதி என்.வி.ரமணா அமர்வு இதுதொடர்பான உத்தரவை பிறப்பிக்கிறது. இந்த வழக்கு விசாரணை உச்சநீதிமன்றத்தில் முதல்முறையாக நேரலையில் ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது. https://webcast.gov.in/events/MTc5Mg– இணையதளத்தில் உச்ச நீதிமன்ற வழக்கு விசாரணை நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டுள்ளது. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி ரமணா […]

Categories
தேசிய செய்திகள்

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை வழக்கு- உச்சநீதிமன்றத்தில் மீண்டும் விசாரணை..!!!

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை தொடர்பான வழக்கு வரும் 9-ஆம் தேதி உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வர உள்ளது. முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி வழக்கில் சிறையில் உள்ள பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை விவகாரத்தில் ஒரு வாரத்தில் முடிவு எடுக்க வேண்டும் என கடந்த 21ஆம் தேதி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. அப்போது  தமிழக அமைச்சரவை அனுப்பிய பரிந்துரையின் மீது மூன்று நாட்களில் ஆளுநர் முடிவு எடுப்பார் என உச்சநீதிமன்றத்தில் ஆளுநர் தரப்பில் உறுதி அளிக்கப்பட்டது. ஆனால் […]

Categories
தேசிய செய்திகள்

வங்கி கடன் இருக்கிறதா…? OCT-5 ஆம் தேதிக்குள்…. உச்ச நீதிமன்றம் உத்தரவு….!!

கடன் பெற்றவர்கள் மாதத் தவணை செலுத்துவது குறித்து விளக்கம் அளிக்க மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.   கொரோனா  பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக மத்திய, மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். இதனுடைய பாதிப்பைக் கட்டுப்படுத்த தொடர்ந்து ஊரடங்கு அமலில் இருந்த காரணத்தினால், வங்கியில் கடன் பெற்றவர்கள், இஎம்ஐ கட்டுபவர்கள் ஆகியோர் மாதத்தவணை செலுத்துவதற்கு கால அவகாசம் அளிக்கப்பட்டது.  இந்நிலையில் வங்கி கடன் பெற்றவர்களுக்கு, பொருளாதார சுமையை குறைக்கும் திட்டத்தை ஒரு வாரத்திற்குள் […]

Categories
தேசிய செய்திகள்

“கொரோனா சிகிச்சை”… நாடு முழுவதும் ஒரே மாதிரியான கட்டணத்தை நிர்ணயிக்க வேண்டும்: உச்சநீதிமன்றம்..!

கொரோனா சிகிச்சை அளிக்கும் மருத்துவமனைகளில் ஆய்வு மேற்கொள்ள மருத்துவ நிபுணர்களை கொண்ட குழு அமைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கொரோனா சிகிச்சை தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றம் பல அதிரடி உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. மருத்துவ நிபுணர்கள் கொண்ட குழுவை அமைக்க அனைத்து மாநிலங்களுக்கும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் கொரோனா பரிசோதனைக்கு அனைத்து மாநிலங்களும் ஒரே மாதிரியான கட்டணங்களை நிர்ணயிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதேபோல கொரோனா சிகிச்சை மேற்கொள்வதற்கான கட்டணங்களை மத்திய அரசே நிர்ணயிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது. […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனாவை கட்டுப்படுத்த மாற்று மருந்தை சோதனை செய்யக்கோரி வழக்கு: மறுப்பு தெரிவித்த உச்சநீதிமன்றம்!

கொரானா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த மாற்று மருத்துவ முறைகளை ஆராய உத்தரவிட கோரிய மனுவை விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. கொரோனா ஒரு புதிய வகை வைரஸ் என்பதால் மாற்று மருத்துவத்தை தற்போது சோதித்துப் பார்க்க முடியாது என கூறி மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர். மேலும், கொரோனாவுக்கான தடுப்பு ஊசியை மருத்துவ நிபுணர்கள் கண்டுபிடிக்கும் வரையில் பொறுத்திருங்கள் என்று கூறி உச்சநீதிமன்ற நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான அமர்வு மனுவை நிராகரித்தது. உலக அளவில் கொரோனா வைரசால் […]

Categories
தேசிய செய்திகள்

மருத்துவம் சார்ந்த அனைத்து தனியார் நிறுவனங்களையும் தேசியமயமாக்க முடியாது: உச்சநீதிமன்றம்

கொரோனா தொற்று கட்டுப்படுத்தப்படும் வரை நாட்டிலுள்ள மருத்துவம் சார்ந்த அனைத்து தனியார் நிறுவனங்களையும் தேசியமயமாக்க உத்தரவிட முடியாது என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மருத்துவ பணியாளர்களுக்கான தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்கள் (பிபிஇ), என் 95-முகக் கவசங்கள் ஆகியவற்றின் தட்டுப்பாடுகளை உடனடியாக தீவு காண கோரி வழக்கறிஞர் அமித் சஹானி உள்ளிமருத்துவம் ட்ட 3 பேர் தனித்தனியாக ஒரு பொதுநல மனுக்களை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர். அந்த மனுக்கள் நீதிபதிகள் அசோக் பூஷன், ரவீந்திர பட் ஆகியோர் அடங்கிய அமர்வு […]

Categories
தேசிய செய்திகள்

BREAKING : கொரோனா – சிறையில் கைதிகளை குறைக்க அறிவுறுத்தல்! 

கொரோனா அச்சம் காரணமாக சிறையில் கைதிகளை குறைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. நாடு முழுவதும் சிறைகளில் உள்ள கைதிகளை குறைக்க மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. சட்ட வல்லுநர் குழுவை அமைத்து கைதிகளை குறைப்பது பற்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளது. சிறைக்கைதிகளுக்கு பரோல் வழங்குவது குறித்து மாநில அரசுகள் முடிவு எடுக்க உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. சிறையில் கைதிகளின் நெரிசலை குறைக்கும் வகையில் நடவடிக்கை எடுக்குமாறு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

இன்னும் சிறிது நேரத்த்தில் தூக்கு….. திகாரில் அதிகாரிகள் ஆலோசனை …!!

டெல்லி மருத்துவ மாணவி நிர்பயா வழக்கின் முக்கிய குற்றாவளிகளான முகேஷ் சிங், வினய் சர்மா, பவன் குப்தா, அக்ஷய்குமார் தாகூர் ஆகிய நால்வருக்கும் இன்று தூக்கு தண்டனை விதிக்கப்பட இருக்கின்றது . காலை 5.30 மணிக்கு நிறைவேற்றப்பட இருக்கும் தூக்கு தண்டனையை தொடர்ந்து திகார் சிறையில் அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர். Tihar jail officials to ANI: The executioner has woken up and a meeting is underway with jail officials. The […]

Categories
தேசிய செய்திகள்

நிர்பயா குற்றவாளிகளை தனி தனியாக தூக்கிலிட கோரிய வழக்கு மார்ச் 5ஆம் தேதி ஒத்தி வைப்பு..!

நிர்பயா வழக்கின் விசாரணையை மார்ச் 5ஆம் தேதி உச்ச நீதிமன்றம் ஒத்தி வைத்துள்ளது. டெல்லியில் மருத்துவ மாணவி நிர்பயா கடந்த 2012 ஆம் ஆண்டு ஓடும் பேருந்தில் பாலியல் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு தூக்கி வீசப்பட்டார். இதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிர்பயா, சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் இந்தியாவையே உலுக்கியது. இது தொடர்பாக கைது செய்யப்பட்டவர்களில் 4 பேருக்கும் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. ஆனால் இவர்கள் நால்வரும் ஒவ்வொருவராக தங்களுக்கான சட்ட வாய்ப்பை பயன்படுத்தி […]

Categories
தேசிய செய்திகள்

ராணுவத்தில் பெண் அதிகாரிகளுக்கு கமாண்டர் பொறுப்பு வழங்க அனுமதி : உச்சநீதிமன்றம் உத்தரவு!

இந்திய ராணுவத்தில் உள்ள பெண் அதிகாரிகளுக்கு ஆண் அதிகாரிகளுக்கு இணையாக உத்தரவுகளை பிறப்பிக்கும் உயர் அதிகாரியாக பணியாற்ற அனுமதி அளித்து உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ராணுவ நியமனத்தில் ஆண், பெண் பாகுபாடு பார்க்கப்படுவதாக மூத்த வழக்கறிஞர்கள் மீனாட்சி லேகி, ஐஸ்வர்யா பட்டி ஆகியோர் மனு தாக்கல் செய்தனர். உயர்பதவியில் பெண்களை நியமக்க அனுமதிக்க வேண்டும் என்று அந்த மனுவில் கோரிக்கை விடுத்தனர். இந்த வழக்கின் விசாரணையில் மத்திய அரசு தாக்கல் செய்த பதில் மனுவில், குடும்பப் பராமரிப்பில் பெண்களின் […]

Categories
தேசிய செய்திகள்

BREAKING : நிர்பயா வழக்கில் குற்றவாளிகள் 4 பேருக்கு தூக்கு -உச்சநீதிமன்றம் அதிரடி..!

நிர்பயா பாலியல் வன்கொடுமை வழக்கில் ,குற்றவாளிகளுக்கு  மார்ச் 3-ஆம் தேதி தூக்குத்தண்டனை விதித்து உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு  பிறப்பித்தது.  கடந்த 2012ஆம் ஆண்டு தலைநகர் டெல்லியில் ஓடும் பஸ்சில் மருத்துவ மாணவி நிர்பயா பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்டார். இந்த கொடூர சம்பவம் நாடுமுழுவதும் அதிர்ச்சியை உள்ளாக்கியது.  முக்கிய 4 குற்றவாளிகளிகளுக்கு வழங்கப்பட்டுள்ள தூக்கு தண்டனை  தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ள நிலையில் ஒவ்வொரு குற்றவாளிகளும் தங்களுக்கான சட்ட வாய்ப்பை பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில் நிர்பயா கொலை வழக்கு குற்றவாளிகள் […]

Categories
தேசிய செய்திகள்

குடியுரிமை திருத்தச் சட்டத்தை உச்ச நீதிமன்றம் நீக்கும் – சிதம்பரம் நம்பிக்கை..!!

நாட்டின் கருத்தாக்கத்தின் மேல் குடியுரிமை திருத்தச் சட்டம் தாக்குதல் நடத்துவதாகவும் எனவே உச்ச நீதிமன்றம் அதனை நீக்கும் எனவும் காங்கிரஸ் மூத்தத் தலைவர் ப. சிதம்பரம் தெரிவித்துள்ளார். காங்கிரஸ் மூத்தத் தலைவரும் முன்னாள் நிதியமைச்சருமான ப. சிதம்பரம் டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், “அஸ்ஸாமில் நடைபெறும் வன்முறைக்குக் காரணமே குடியுரிமை திருத்தச் சட்டம்தான். இந்தியாவின் அடிப்படை கொள்கைகளின் மீது தாக்குதல் நடத்தப்படுகிறது. நாட்டில் பிறக்கும் 40 விழுக்காட்டினர் குறித்து பதிவு செய்யப்படுவதில்லை. சட்டத்தில் சில […]

Categories
மாநில செய்திகள்

‘அதிமுக அரசிற்கு உச்ச நீதிமன்றம் வைத்த குட்டு’..!!

எழுவர் விடுதலை தொடர்பான தீர்மானத்தில் ஆளுநர் எடுத்த நடவடிக்கை குறித்து கேட்டு இரண்டு வாரங்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்யக் உத்தரவிட்டுள்ள உச்ச நீதிமன்றம், அதிமுக அரசிற்கு குட்டு வைத்துள்ளதாக மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ஏழு தமிழர் விடுதலை குறித்து தமிழ்நாடு சட்டப்பேரவை நிறைவேற்றிய தீர்மானம் மீது ஆளுநர் எடுத்த நடவடிக்கை என்ன என்பது குறித்து ஆளுநரிடம் கேட்டு இரண்டு வாரங்களுக்குள் அறிக்கையாக தமிழ்நாடு அரசு தாக்கல் செய்யவேண்டும் என உச்ச நீதிமன்றம் இன்று தெரிவித்துள்ளது. இதையொட்டி திமுக […]

Categories
தேசிய செய்திகள்

“இடஒதுக்கீடு தீர்ப்பு” எங்களுக்கும் இதுக்கும் சம்மந்தமில்லை….. காங்கிரஸ் தான் காரணம்…. மத்திய அரசு விளக்கம்…!!

வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு வழங்குவது மாநில அரசுகளுக்கு கட்டாயமில்லை என்ற உச்ச நீதிமன்ற தீர்ப்பிற்கும், தங்களுக்கும் தொடர்பில்லை என்று மத்திய அரசு விளக்கம் தந்திருக்கிறது. வேலைவாய்ப்புகளில் இட ஒதுக்கீடு வழங்குவது மாநில அரசுகளுக்கு கட்டாயமில்லை என்று ஒரு வழக்கில் உச்சநீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டிருந்தது. இதனால் இட ஒதுக்கீட்டை நம்பி இருக்கக்கூடிய பட்டியலினத்தவர்கள், பிற்படுத்தப்பட்டவர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் பாதிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக கூறி காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. உச்ச நீதிமன்ற உத்தரவை மீறி சீராய்வு மனு […]

Categories
தேசிய செய்திகள்

நிர்பயா பாலியல் வழக்கு : “4 பேரை தனித்தனியாக தூக்கிலிடுங்க”…. மத்திய அரசு சார்பில் மேல்முறையீடு..!!

நிர்பயா குற்றவாளிகள் 4 பேரை தனித்தனியாக தூக்கிலிட அனுமதி கோரி மத்திய அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது  நிர்பயா கூட்டுப் பாலியல் வன்புணர்வு வழக்கில் தண்டனைக் கைதிகளாக சிறையில் வாடும் அக்சய் தாக்கூர், முகேஷ் சிங், பவன் குப்தா, வினய் சர்மா ஆகியோருக்கு நீதிமன்றம் தூக்குத் தண்டனை விதித்துள்ளது. அவர்களுக்குத் தண்டனை நிறைவேற்ற நீதிமன்றம் நாள் குறித்த நிலையில், தண்டனைக் கைதிகள் ஒருவர் பின் ஒருவராக குடியரசுத் தலைவர் மற்றும் நீதிமன்றங்களில் கருணை மனு, மறுஆய்வு […]

Categories
தேசிய செய்திகள்

BREAKING : ”ராமர் கோவில் கட்ட ரெடி” பிரதமர் மோடி அறிவிப்பு …!!

அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கான திட்டம் தயார் என மக்களவையில் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். உச்ச நீதிமன்ற தீர்ப்புப்படி அயோத்தியில் ராமர் கோவில் கட்டுமானத்திற்காக இடம் ஒதுக்குதல், பணிகளை எப்படி செயல்படுத்த போறோம் போன்ற பல்வேறு விஷயங்களை உள்ளடக்கி ஒரு டிராப்ட் தயாரிக்க வேண்டும். பின்னர் தான் அதை செயல்படுத்த வேண்டும் என்பதையொட்டி தான் பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் நடந்த மத்திய அமைச்சரவை கூட்டத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்துவதற்கான முடிவுகள் எடுக்கப்பட்டிருக்கின்றன.அதன்படியே ராமஜென்ம பூமியில் கோவில் […]

Categories
தேசிய செய்திகள்

தீவிர ஆய்வுக்கு பின்…. ஆப்ரிக்க சிறுத்தைகளுக்கு இந்தியாவில் அனுமதி…. உச்சநீதிமன்றம் தீர்ப்பு….!!

ஆப்பிரிக்கன் சிறுத்தைகளை இந்தியாவில் அனுமதிக்க உச்சநீதிமன்றம் சம்மதம் தெரிவித்துள்ளது. ஆப்பிரிக்கா செய்திகளை இந்தியாவில் அனுமதிப்பது தொடர்பாக வழக்கு கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வந்துள்ளது. தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவின் மீதான விசாரணை இன்று நடைபெற்றது. அதில், தீவிர ஆய்வுக்குப் பிறகு ஆப்பிரிக்கன் சிறுத்தைகளை உரிய பாதுகாப்புடன் இந்திய காடுகளில் அனுமதிக்கலாம் என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி உத்தரவிட்டுள்ளார். மேலும் வனவிலங்கு ஆர்வலரான ரஞ்சித் சிங் […]

Categories
தேசிய செய்திகள்

சட்டத்தின்படியே நீதிமன்றம் செயல்பட வேண்டும் – உச்ச நீதிமன்றம்

நீதிமன்றங்களும் நீதிபதிகளும் சட்டத்தின்படியே செயல்பட வேண்டும் என உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. நிர்பயா வழக்கு குற்றவாளிகள் ஜனவரி 22ஆம் தேதி தூக்கிலிடுவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கருணை மனு நிலுவையில் இருந்த காரணத்தால் தூக்கு தண்டனை ஒத்திவைக்கப்பட்டது. இதையடுத்து, பிப்ரவரி 1ஆம் தேதி காலை 6 மணிக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, தூக்கு தண்டனைகள் காலதாமதமாக நிறைவேற்றப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து, காதலருடன் சேர்ந்து தனது குடும்பத்தை சேர்ந்த ஏழு பேரை […]

Categories
தேசிய செய்திகள்

பேரறிவாளன் விடுதலை வழக்கு: அரசுக்கு உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு

பேரறிவாளன் விடுதலை தாமதமாவது தொடர்பாக இன்னும் 2 வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய தமிழ்நாடு அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பேரறிவாளன் முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்துவருகிறார். பேரறிவாளன் தந்தையின் உடல்நலத்தைக் கருத்தில்கொண்டு, ஒரு மாதம் பரோல் வழங்கிய நீதிமன்றம் பின்னர் மேலும் ஒரு மாதம் பரோலை நீட்டித்தது. பரோல் முடிந்து ஜனவரி 12ஆம் தேதி அவர் மீண்டும் சிறைக்குத் திரும்பினார். இதனிடையே, தன் தண்டனையை நிறுத்திவைக்கக்கோரி உச்ச நீதிமன்றத்தில் […]

Categories
தேசிய செய்திகள்

நிர்பயா குற்றவாளிகளின் தூக்கு தண்டனையை நிறுத்திவைக்க நீதிமன்றம் மறுப்பு!

நிர்பயா வழக்கு குற்றவாளிகளுக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை நிறுத்திவைக்க டெல்லி உயர் நீதிமன்றம் மறுத்துள்ளது. நிர்பயா வழக்கில் உச்ச நீதிமன்றம் 2017ஆம் ஆண்டு உச்சபட்ச தண்டனையான மரண தண்டனையை குற்றவாளிகளுக்கு உறுதி செய்தது. இதையடுத்து குற்றவாளிகள் நான்கு பேரும், குடியரசுத் தலைவருக்கு கருணை மனுக்கள் அனுப்பினர். இந்த மனுக்களை குடியரசுத் தலைவர் தள்ளுபடி செய்தார். இதையடுத்து குற்றவாளிகள் வினய் குமார் சர்மாவும், முகேஷ் ஆகிய இருவரும் உச்ச நீதிமன்றத்தில் கடைசி நிவாரண மனுத்தாக்கல் செய்தனர். அதனையும் நீதிமன்றம் […]

Categories
தேசிய செய்திகள்

வீதி மீறல் : சீட்டுக்கட்டாய் சரிந்த அடுக்குமாடி குடியிருப்புகள்..!!

 கொச்சியில் விதிமுறைகளை மீறி கட்டப்பட்ட அடுக்குமாடி குடியிருப்புகள் இன்று காலை வெடிபொருட்களைக் கொண்டு தரைமட்டமாக்கப்பட்டன. கேரள மாநிலம், கொச்சியில் உள்ள மரது பகுதியில் ஹெச்2ஓ ஹோலி ஃபெயித், ஆல்ஃபா செரினா என இரண்டு அக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பிட்டிருந்தன. இந்த இரண்டு கட்டங்களும் கடற்கரை ஒழுங்குமுறைச் சட்ட விதிகளை (Coastal Regulations Zone rules) மீறி கட்டப்பட்டதாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில், சட்டவிரோதமாகக் கட்டப்பட்ட அடுக்குமாடி குடியிருப்புகளை இடிக்கலாம் என நீதிமன்றம் கடந்த ஆண்டு […]

Categories
தேசிய செய்திகள்

நிர்பயா குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனையை நிறைவேற்றுகிறார் பவன் ஜலாட்!

நிர்பயா குற்றவாளிகள் இன்னும் சில நாள்களில் தூக்கில் போடப்பட உள்ளனர். இவர்களுக்கு தூக்கு தண்டனையை பவன் ஜலாட் என்பவர் நிறைவேற்றவுள்ளார். நிர்பயா வழக்கில் தூக்கு கைதிகளுக்கு தண்டனையை நிறைவேற்றும்வகையில் பவன் ஜலாட், குற்றவாளிகளைத் தூக்கில்போட வேண்டும் என திகார் சிறை நிர்வாகம் விரும்புகிறது. இதுதொடர்பாக உத்தரப் பிரதேசத்தில் அவர் பணிபுரியும் சிறைக்கு, திகார் நிர்வாகம் ரகசிய கடிதமும் எழுதி உள்ளது. குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனையை நிறைவேற்ற பவன் ஜலாட் தேவை என திகார் சிறை நிர்வாகம் விரும்ப […]

Categories
மாநில செய்திகள்

“விதிமுறை மீறல்” உச்சநீதிமன்றம் தீர்ப்பு….. விரைவில் வெடித்து சிதற போகும் பிரம்மாண்ட கட்டிடம்…!!

கேரளாவில் விதிமுறைகளை மீறி கட்டிய அடுக்குமாடி குடியிருப்புகளை  உச்சநீதிமன்றத்தின் அறிவுரையின் படி வெடிமருந்து நிரப்பி வெடிக்க வைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.   விதிகளை மீறி கட்டப்பட்ட மாரடி  அடுக்குமாடி குடியிருப்புகளை இடிப்பதற்கான  இறுதிகட்ட நடைமுறைகள் தொடங்கி உள்ள நிலையில், அதனை சுற்றியுள்ள பகுதிகளில் 144 தடை உத்தரவு விதிக்கப்பட்டுள்ளது. கேரள மாநிலம் மாரடி பகுதியில் கடலோர மண்டல விதிகளை விதிகளை மீறி கட்டப்பட்ட நான்கு அடுக்குமாடி குடியிருப்புகளை அகற்ற உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி வரும் 11ம் தேதி […]

Categories
தேசிய செய்திகள்

18 வயதுக்குட்பட்ட ஆண்கள் சட்டப்படி திருமணம் செய்யலாம்…. உச்ச நீதிமன்றம் தீர்ப்பு…!!

21 வயது பூர்த்தியாகாத ஒருவர் தன்னை விட வயது மூத்த பெண்ணை திருமணம் செய்து கொண்டால் அவரை தண்டிக்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. 21 வயது பூர்த்தி அடையாத ஒரு ஆண் 21 வயது பூர்த்தி அடைந்த ஒரு பெண்ணை  அதாவது வயது மூத்த பெண்ணை திருமணம் செய்து கொள்வது குழந்தை திருமணம் ஆகாது என்று நீதிபதி மோகன் சந்தானம் தலைமையிலான அமர்வு முடிவு செய்துள்ளது. 17 வயது சிறுவன் ஒருவன் 21 வயது […]

Categories
தேசிய செய்திகள்

“தூக்கு தண்டனையை உறுதி செய்தது மகிழ்ச்சி”… நிர்பயாவின் தாயார்..!!

அக்சய் குமாரின் சீராய்வு மனுவை தள்ளுபடி செய்து, உச்ச நீதிமன்றம் தூக்கு தண்டனையை உறுதி செய்தது மகிழ்ச்சியளிக்கிறது என நிர்பயாவின் தாயார்  ஆஷா தேவி தெரிவித்துள்ளார் 2012ஆம் ஆண்டு டிசம்பர் 16ஆம் தேதி மருத்துவ மாணவி நிர்பயா பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டார். இந்த வழக்கில் கைதான ஆறு நபர்களில் ஒருவர் 18 வயதுக்கு கீழ் என்பதால் விடுதலை செய்யப்பட்டார். திகார் சிறையிலிருந்த மற்றொருவரான ராம்சிங் 2013ஆம் ஆண்டு தற்கொலை செய்துகொண்டார். எஞ்சியுள்ள நால்வரான முகேஷ், பவன் […]

Categories
தேசிய செய்திகள்

BREAKING : நிர்பயா வழக்கில் அக்‌ஷய் குமாருக்கு தூக்கு தண்டனை உறுதி…. உச்ச நீதிமன்றம் அதிரடி.!!

நிர்பயா வழக்கின் குற்றவாளியான அக்‌ஷய் குமார் தாக்கல் செய்திருந்த சீராய்வு மனுவிற்கான தீர்ப்பு இன்று நண்பகல் ஒரு மணியளவில் வெளியாகும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. 2012ஆம் ஆண்டு டிசம்பர் 16ஆம் தேதி மருத்துவ மாணவி நிர்பயா பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டார். இந்த வழக்கில் கைதான ஆறு நபர்களில் ஒருவர் 18 வயதுக்கு கீழ் என்பதால் விடுதலை செய்யப்பட்டார். திகார் சிறையிலிருந்த மற்றொருவரான ராம்சிங் 2013ஆம் ஆண்டு தற்கொலை செய்துகொண்டார். எஞ்சியுள்ள நால்வரான முகேஷ், பவன் […]

Categories
தேசிய செய்திகள்

நிர்பயா வழக்கு : தூக்கு தண்டனையா?… மதியம் 1 மணிக்கு தீர்ப்பு- உச்ச நீதிமன்றம்..!!

நிர்பயா வழக்கில் குற்றவாளி அக்‌ஷய் குமார் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட சீராய்வு மனு விசாரிக்கப்பட நிலையில் 1மணிக்கு உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்குகிறது.   2012-ஆம் ஆண்டு டிசம்பர் 16ஆம் தேதி மருத்துவ மாணவி நிர்பயா பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டார். இந்த வழக்கில் கைதான 6 நபர்களில் ஒருவர் மைனர் என்பதால் விடுதலை செய்யப்பட்டார். திகார் சிறையிலிருந்த மற்றொருவரான ராம்சிங் 2013-ஆம் ஆண்டு தற்கொலை செய்துகொண்டார். எஞ்சியுள்ள நால்வரான முகேஷ், பவன் குப்தா, வினய் ஷர்மா, அக்‌ஷய் […]

Categories
தேசிய செய்திகள்

நிர்பயா வழக்கு : அக்‌ஷய் குமார் தொடர்ந்த சீராய்வு மனு… விலகினார் தலைமை நீதிபதி எஸ். ஏ. பாப்டே..!!

நிர்பயா வழக்கில் அக்‌ஷய் குமார் தொடர்ந்த சீராய்வு மனு மீதான விசாரணையில் தலைமை நீதிபதி எஸ். ஏ. பாப்டே விலகினார். நிர்பயா வழக்கில் முக்கியக் குற்றவாளிகளில் ஒருவரான அக்‌ஷய் குமார், தன்னுடைய மரண தண்டனையை சீராய்வு செய்வதற்காக உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். உச்ச நீதிமன்றத்தில் இந்த மனு மீதான விசாரணை தலைமை நீதிபதி எஸ்.ஏ. பாப்டே, நீதிபதிகள் பானுமதி, அசோக் பூஷன் ஆகியோர் அடங்கிய அமர்வின் முன்பு இன்று நடப்பதாக இருந்தது. 2012ஆம் ஆண்டு […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

அரசியல் பழி விளையாட்டு…. ஜாமியா மாணவர்களுக்கு குரல்கொடுக்கும் பதான்..!!

இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் இர்ஃபான் பதான், டெல்லியில் நடைபெற்றுவரும் ஜாமியா பல்கலைக்கழக மாணவர்களுக்கு எதிரான தாக்குதல் குறித்து கவலை தெரிவித்துள்ளார். குடியுரிமை திருத்த சட்டம் காரணமாக நாடு முழுவதும் பரபரப்பான சூழல் நிலவிவருகிறது. இந்நிலையில் அச்சட்டத் திருத்தத்தை எதிர்த்து டெல்லியிலுள்ள ஜாமியா பல்கலைக்கழக மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக நேற்று மாலை பல்கலைக்கழக வளாகத்திற்குள் சென்ற டெல்லி காவல் துறையினர், மாணவர்களிடையே போராட்டத்தை கைவிடும்படி கூறியுள்ளனர். ஆனால் அதனை ஏற்காமல் போராட்டத்தில் […]

Categories
தேசிய செய்திகள்

போராட்டம் வருத்தமளிக்கிறது… ஆனால் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டுள்ளது… பிரதமர் மோடி ட்வீட்..!!

குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிரான போராட்டங்கள் துரதிஷ்டவசமானவை, வருத்தமளிக்கிறது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். குடியுரிமை சட்ட திருத்த மசோதா கடந்த வாரம் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டது. இதற்கு  எதிராக இந்தியாவின் வடகிழக்கு பகுதியில் மிகப்பெரிய போராட்டம் நடைபெற்று வருகிறது. அதேபோல் டெல்லியிலும் ஜாமியா பல்கலை கழக மாணவர்கள்  போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் பேருந்துகள் மீது தீ வைத்து எரிக்கப்பட்டது. 3-பேருந்துகள் மற்றும் தனியார் வாகனங்களும் சேதமடைந்தது. இப்போராட்டத்தில் போலீசார் மாணவர்கள் மீது தடியடி நடத்தினர். இதில் […]

Categories
தேசிய செய்திகள்

குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு…. மேற்கு வங்க முதல்வர் தலைமையில் பிரம்மாண்ட பேரணி..!!

குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிராக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் பிரம்மாண்ட பேரணி நடைபெற்று வருகிறது. குடியுரிமை சட்ட திருத்த மசோதா கடந்த வாரம் நிறைவேற்றப்பட்டது. இதற்கு  எதிராக இந்தியாவின் வடகிழக்கு பகுதியில் மிகப்பெரிய போராட்டம் நடைபெற்று வருகிறது. அதேபோல் டெல்லியிலும் ஜாமியா பல்கலை கழக மாணவர்கள்  போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் பேருந்துகள் மீது தீ வைத்து எரிக்கப்பட்டது. 3-பேருந்துகள் மற்றும் தனியார் வாகனங்களும் சேதமடைந்தது. இப்போராட்டத்தில் போலீசார் மாணவர்கள் மீது தடியடி நடத்தினர். […]

Categories
தேசிய செய்திகள்

டெல்லி போராட்டம் : அமைதி நிலவட்டும்… “சட்டம் ஒழுங்கை பாதுகாக்கவே காவல்துறை”.. உச்ச நீதிமன்றம் அதிருப்தி..!!

டெல்லியில் நடந்த போராட்டத்தில் பேருந்துகள் தீவைத்து கொளுத்தப்பட்டுள்ளது தொடர்பாக உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே அதிருப்தியடைந்துள்ளார்.  மக்களவை மற்றும் மாநிலங்களவை என இரு அவைகளிலும் குடியுரிமை சட்ட திருத்த மசோதா கடந்த வாரம் நிறைவேற்றப்பட்டது. இதற்கு  எதிராக இந்தியாவின் வடகிழக்கு பகுதியில் மிகப்பெரிய போராட்டம் நடைபெற்று வருகிறது. அதன் ஒருபகுதியாக டெல்லியிலும் நேற்று போராட்டம் வெடித்தது. குறிப்பாக டெல்லி ஜாமியா பல்கலை கழக மாணவர்கள் நடத்திய இந்த போராட்டத்தில் பேருந்துகள் மீது தீ வைத்து எரிக்கப்பட்டது. 3-பேருந்துகள் […]

Categories
தேசிய செய்திகள்

“மிருகமாகிய காவல்துறை” உச்சநீதிமன்றம் எதிர்கருத்தால்….. ரத்தம் சிந்திய மாணவர்கள் அதிருப்தி….!!

டெல்லியில் குடியுரிமை திருத்த மசோதாவிற்கு எதிராக மாணவர்கள்  நடாத்திய போராட்டம் குறித்து உச்சநீதிமன்றம் அதிருப்தியான கருத்தை தெரிவித்துள்ளது. டெல்லியில் குடியுரிமை திருத்த மசோதாவிற்கு எதிராக JNU  பல்கலைக்கழக மாணவர்கள், jmu பல்கலைக்கழக மாணவர்கள் உட்பட பல்வேறு மாணவ அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் திடீரென வன்முறை ஏற்பட்டது. இதையடுத்து காவல்துறையினர் பயங்கரமாக மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தியது. இது மனித உரிமை மீறல் என்று கூறி டெல்லி காவல்துறை உயர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மாணவர்கள் விடிய […]

Categories
தேசிய செய்திகள்

சபரிமலை செல்லும் பெண்களுக்கு பாதுகாப்பு கிடையாது…….. உச்சநீதிமன்றம் அதிரடி…..!!

சபரிமலை கோவிலுக்கு செல்லும் பெண்களுக்கு பாதுகாப்பு வழங்கமுடியாது என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கான  சீசன் தொடங்கியுள்ள நிலையில் பெண்கள் சபரிமலை கோயிலுக்கு ஐயப்பனை தரிசிக்க தயாராக இருந்தார்கள். பல்வேறு காரணங்கள் குறிப்பாக பெண்கள் கோயிலுக்குள் வரக்கூடாது என்று தொடர் போராட்டங்கள் கடந்த ஆண்டிலிருந்தே நடைபெற்று வருவதால் பெண்கள் போக முடியாத சூழ்நிலை இருக்கிறது. கடந்த வருடம் பாதுகாப்பு வழங்க முடியும் என்று சொன்ன கேரள காவல்துறை இந்த வருடம் பாதுகாப்பு  வழங்க முடியாது என்று […]

Categories
இந்திய சினிமா சினிமா தேசிய செய்திகள்

நடிகை கடத்தல் வழக்கு: நடிகர் திலீப்பின் கோரிக்கை நிராகரிப்பு..!!

நடிகை கடத்தப்பட்ட வழக்கில் கடத்தலின்போது எடுக்கப்பட்டதாகக் கூறப்படும் வீடியோ மற்றும் அதனை எடுக்க பயன்படுத்திய ஃபோனையும் தங்கள் வசம் ஒப்படைக்க வேண்டும் என்ற நடிகர் திலிப்பின் கோரிக்கையை உச்சநீதிமன்றம் நிராகரித்துள்ளது. கடந்த 2017ஆம் ஆண்டு பிரபல மலையாள நடிகை காரில் கடத்தப்பட்டு பாலியல் ரீதியாக துன்புறுத்தல் செய்யப்பட்டார். இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இதுதொடர்பாக முக்கிய குற்றவாளியான பல்சர் சுனில் உள்ளிட்ட சிலரை கேரள காவல் துறை கைது செய்தது. இந்த வழக்கு விசாரணையில் […]

Categories
மாநில செய்திகள் மாவட்ட செய்திகள் வேலூர்

‘என்னையும் எனது கணவரையும் கருணைக் கொலை செய்யுங்கள்’… பிரதமருக்கு நளினி கடிதம்.!!

விடுதலை செய்ய முடியாவிட்டால், தன்னையும் தன் கணவரையும் கருணைக் கொலை செய்து விடுங்கள் என, பிரதமர் நரேந்திர மோடிக்கு நளினி உருக்கமாகக் கடிதம் எழுதியுள்ளார். முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் நளினி, முருகன் ஆகிய இருவரும் வேலூர் மத்திய சிறையில் உள்ள ஆண்கள், பெண்கள் பிரிவில் தனித்தனியே தண்டனை அனுபவித்து வருகின்றனர். இந்த வழக்கில், இவர்கள் உள்ளிட்ட ஏழு பேரையும் விடுதலை செய்வது தொடர்பாக தமிழ்நாடு ஆளுநர் முடிவெடுக்கலாம் என்று உச்ச நீதிமன்றம் கருத்து […]

Categories
தேசிய செய்திகள்

”சீராய்வு மனு தாக்கல் செய்ய போவதில்லை” சன்னி வக்பு வாரியம் அதிரடி …!!

அயோத்தி வழக்கில் நீதிமன்ற உத்தரவினை எதிர்த்து சீராய்வு மனு தாக்கல் செய்யப் போவதில்லை என்று சன்னி வக்பு வாரியம் அறிவித்துள்ளது. அயோத்தி வழக்கில் உச்ச நீதிமன்றத் தீர்ப்பினை எதிர்த்து மேல்முறையீடு செய்வது தொடர்பாக , சீராய்வு மனுவை தாக்கல் செய்யலாமா ?  வேண்டாமா ? என்பது குறித்த முடிவு எடுக்க உத்தர பிரதேச மாநிலம் லக்னோவில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்குப் பிறகு ஒருமித்த குரலாக சீராய்வு மனுவையும் தாக்கல் செய்ய வேண்டாம் என்று ஒரு […]

Categories
தேசிய செய்திகள்

BREAKING: 1 நாள் கெடு…. ”சிக்கலில் பாஜக அரசு”… உச்சநீதிமன்றம் அதிரடி …!!

மகாராஷ்டிராவில் பாஜக  அரசு நாளை பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டுமென்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மகாராஷ்டிராவில் யாரும் எதிர்பாராத விதமாக தேவேந்திர ஃபட்னாவிஸ் தலைமையிலான பாஜக அரசு ஆட்சி அமைத்தது. முதலமைச்சராக தேவேந்திர ஃபட்னாவிஸ், துணை முதலமைச்சராக தேசியவாத காங்கிரஸ் கட்சியின் அஜித் பவார் பதவியேற்ற நிலையில், பாஜக ஆட்சி அமைத்த விதம் சட்டவிரோதமானது எனக் கூறி விவகாரத்தை சிவசேனா உச்ச நீதிமன்றத்துக்கு எடுத்துச் சென்றது. நேற்று முன்தினம் நடைபெற்ற விசாரணையில் அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், ‘பெரும்பான்மைக்கான […]

Categories
தேசிய செய்திகள்

JUST IN : ”சபரிமலையில் 5 பேர் கொண்ட பெண்கள் குழு” கேரளாவில் பரபரப்பு …!!

சபரிமலை கோவிலுக்கு செல்ல திருப்பதி தேசாய் கொச்சி விமான நிலையம் வந்தடைந்தார் . கடந்த ஆண்டு சபரிமலை ஐயப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என்ற உச்சநீதிமன்ற உத்தரவை கேரள அரசு செயல்படுத்த முயன்ற போது கேரளாவில் பாஜக , இந்து அமைப்புகள் , பக்தர்கள் கடும் போராட்டம் நடத்தினர். இதனால் பல்வேறு பகுதிகளில் வன்முறை நிகழ்ந்தது. இதை தொடர்ந்து போலீஸ் பாதுகாப்போடு பெண்களும் சபரிமலையில் வழிபட்டனர். இதையடுத்து கேரளாவில் கடும் பரபரப்பு ஏற்பட்டது. அயப்பன் […]

Categories
தேசிய செய்திகள்

மகாராஷ்டிர எம்.எல்.ஏக்களின் ஆதரவு கடிதத்தைக் கேட்டு வழக்கை ஒத்திவைத்த உச்ச நீதிமன்றம்..!!

மகாராஷ்டிராவில் ஆட்சி அமைக்க சமர்ப்பிக்கப்பட்ட ஆதரவு கடிதத்தை அம்மாநில ஆளுநர் உச்ச நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கக் கோரி, உத்தரவிட்டு வழக்கு விசாரணையை உச்ச நீதிமன்றம் நாளை ஒத்திவைத்துள்ளது. மகாராஷ்டிராவில் யாரும் எதிர்பாராத விதமாக தேவேந்திர ஃபட்னாவிஸ் தலைமையிலான அரசு ஆட்சி அமைத்து. முதலமைச்சராக தேவேந்திர ஃபட்னாவிஸ், துணை முதலமைச்சராக அஜித் பவார் பதவியேற்ற நிலையில், இந்த விவகாரத்தை சிவசேனா உச்ச நீதிமன்றத்துக்கு எடுத்துச் சென்றுள்ளது. மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி அதிகாலை அவரச அவரசமாக நீக்கப்பட்டு, திடீரென ஆட்சி […]

Categories
தேசிய செய்திகள்

#BREAKING: சபரிமலைக்கென்று தனி சட்டம் – உச்சநீதிமன்றம் உத்தரவு …!!

சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கென்று தனி சட்டம் உருவாக்குங்கள் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. கடந்த வருடம் சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கப்பட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்தது நம் அனைவருக்கும் தெரியும்,  அதற்கு பிறகு ஏற்பட்ட பல்வேறு சட்ட ரீதியிலான பிரச்சனைகளும் நமக்கு தெரியும்.அதனை தொடர்ந்து உச்ச நீதிமன்றத்தில் சபரிமலை தீர்ப்பை எதிர்த்து பல்வேறு வழக்குகள் தனித்தனியாக தொடரப்பட்டது. இந்த சட்டத்தினால் சட்ட ரீதியிலான பிரச்சனைகளை சமாளிப்பதற்காக அப்போது , உச்சநீதிமன்றம் கோவில் நிர்வாகம் மற்றும் […]

Categories
தேசிய செய்திகள்

சபரிமலையில் அலைமோதும் பக்தர்கள் – வருமானம் அதிகரிப்பு…!!

சபரிமலையில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்ததால், வருமானம் இரட்டிப்பாகியுள்ளதாக கேரள தேவசம் போர்டு அறிவித்துள்ளது. மண்டல பூஜையை முன்னிட்டு சபரிமலை ஐயப்பன் கோயிலில் நவம்பர் 16ஆம் தேதி நடை திறக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, கோயிலில் பக்தர்கள் கூட்டம் தொடர்ந்து அதிகரித்து காணப்படுகிறது. இதனிடையே கோயிலை நிர்வகிக்கும் கேரள தேவசம் போர்டின் தலைவர் என். வாசு செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, “பக்தர்கள் கூட்டமும் வருமானமும் கோயிலில் அதிகரித்துள்ளது. 2 கோடியே 4 லட்சத்து 23 ஆயிரத்தி 533 ரூபாய் வருவாய் […]

Categories
தேசிய செய்திகள்

எழுமலையானை தரிசித்த ரஞ்சன் கோகாய்..!!

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பதவியிலிருந்து ஓய்வுபெறவுள்ள ரஞ்சன் கோகாய் திருப்பதி கோயிலுக்குச் சென்று வழிபட்டார். உச்ச நீதிமன்றத்தின் 46ஆவது தலைமை நீதிபதியாக ரஞ்சன் கோகாய் 2018ஆம் ஆண்டு அக்டோபர் 18ஆம் தேதி பதவி ஏற்றார். தீபக் மிஸ்ரா தலைமை நீதிபதியாக இருக்கும்போது, அவர் ஒரு தலைபட்சமாக செயல்படுகிறார் என ரஞ்சன் கோகாய் உட்பட நான்கு மூத்த நீதிபதிகள் செய்தியாளர் சந்திப்பினை நடத்தி சர்ச்சையை ஏற்படுத்தினர். ஆனால், இவர் தலைமை நீதிபதியாக பதவி ஏற்றதிலிருந்து, தீபக் மிஸ்ரா […]

Categories
தேசிய செய்திகள்

”அயோத்தி தீர்ப்பு சரியில்லை” எதிர்த்து மறுசீராய்வு மனு ….!!

உச்ச நீதிமன்றம் வழங்கிய அயோத்தி வழக்கின் தீர்ப்பை எதிர்த்து அனைத்திந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம், மறுசீராய்வு மனுவை தாக்கல் செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அயோத்தி வழக்கின் 40 நாள் விசாரணை அக்டோபர் 16ஆம் தேதி முடிவடைந்ததைத் தொடர்ந்து, தீர்ப்பு நவம்பர் 9ஆம் தேதி வெளியிடப்பட்டது. சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலம் ராம் லல்லாவுக்குச் சொந்தம். அங்கு ராமர் கோயில் கட்டலாம். மசூதி கட்டிக்கொள்ள இஸ்லாமியர்களுக்கு அயோத்திலேயே 5 ஏக்கர் மாற்று இடம் வழங்கப்படும எனத் தீர்ப்பில் […]

Categories
தேசிய செய்திகள்

BREAKING: ”தீர்ப்பை முழுமையாக அமல்படுத்துங்கள்” உச்சநீதிமன்றம் அதிரடி …!!

சபரிமலை விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தின் முந்தைய தீர்ப்பை முறையாக அமல்படுத்துங்கள் என்று உச்சநீதிமன்றம் உறுதிபடுத்தியுள்ளது. நேற்றைய தினம் சபரிமலை வழக்கை 7 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றி உத்தரவிட்ட உச்சநீதிமன்றம் பெண்கள் நுழைவதற்கு எதிரான எந்த உத்தரவையும் பிறப்பிக்கமாக் இருந்தது. உச்சநீதிமன்றம் தீர்ப்புக்கு இடைக்கால தடை என எதையுமே உச்சநீதிமன்றம் தெரிவிக்க வில்லை. இதனால் சற்று குழப்பம் நிலவி வந்த நிலையில் இன்று உச்சநீதிமன்ற நீதிபதி பாலி நரிமன் தெளிவு படுத்தியுள்ளார்.கர்நாடக முன்னாள் அமைச்சர் டிகே சிவகுமாருக்கு ஜாமீன் வழங்கியதை எதிர்த்து […]

Categories
தேசிய செய்திகள் மாநில செய்திகள்

#BREAKING: ”பேனர் வைக்க தடை கோரிய மனு தள்ளுபடி” உச்சநீதிமன்றம் அதிரடி …!!

தமிழகத்தில் அரசியல் கட்சிகள் மட்டுமின்றி அரசும் பேனர் வைக்க தடை கோரிய வழக்கை  உச்சநீதிமன்றத்தில் தள்ளுபடி செய்துள்ளது. டிராபிக் ராமசாமி உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் தமிழகம் முழுவதும் பேனர் கலாச்சாரத்திற்கு தடை விதிக்க வேண்டும் , ஏனென்றால் பேனர் விழுந்து விழுந்து ஏராளமான சாலை விபத்துகள் , மரணம் ஏற்படுகிறது.இது தமிழகம் முழுவதும் சட்டம் ஒழுங்கு பிரச்சினையை ஏற்படுத்தும் அளவிற்கு பெரிய ஒரு பிரச்சனையாக உருவாகி வருகிறது. எனவே உச்ச நீதிமன்றம் தலையிட்டு உடனடியாக தமிழகம் முழுவதும் பேனர் வைக்க […]

Categories
தேசிய செய்திகள்

வெற்றியும் இல்ல…. தோல்வியும் இல்ல ….. மோடி ட்விட்

அயோத்தி வழக்கில் உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு யாருடைய வெற்றியாகவும், தோல்வியாகவும் பார்க்கப்படாது என பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அயோத்தியில் ராமர் கோயில் கட்டலாம் என உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது. இந்நிலையில், உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு குறித்து பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில்,உச்ச நீதிமன்ற தீர்ப்பு யாருடைய வெற்றியாகவும், தோல்வியாகவும் பார்க்கப்படாது. நாட்டு மக்கள் அனைவரும் ஒற்றுமை மற்றும் அமைதியை உறுதிப்படுத்த வேண்டும். அனைத்து […]

Categories
தேசிய செய்திகள்

BREAKING : அயோத்தி நிலம் ”இந்துக்களுக்கே” உச்சநீதிமன்றம் உத்தரவு ….!!

அயோத்தி வழக்கின் இறுதி தீர்ப்பு இன்று வெளியாவதால் நாடு முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த அயோத்தி வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியது. தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான 5 நீதிபதிகள் அடங்கிய அமர்வு இன்று அயோத்தி சர்சை இடம் யாருக்கு என்பது குறித்த வழக்கை விசாரித்து இன்று அதற்கான இறுதி தீர்ப்பை வழங்கி உள்ளனர். அயோத்தியில் 1992 ஆம் ஆண்டு இடிக்கப்பட்ட பாபர் மசூதி இருந்த 2.77 ஏக்கர் நிலம் யாருக்கும் […]

Categories
தேசிய செய்திகள்

BREAKING: அயோத்தி வழக்கில்….. ”ராமர் கோவில் கட்டலாம்” கோர்ட் அதிரடி…

இந்திய நீதித்துறை வரலாற்றில் மிகவும் முக்கிய வழக்குகளில் ஒன்றாக கருதப்படும் அயோத்தி நிலம் தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. பராசக்தி திரைப்பட காட்சி போல நீதிமன்றம் விசித்திரம் நிறைந்த பல வழக்குகளை சந்தித்து இருக்கிறது. அந்த வரிசையில் கடவுள் ராமருக்காக வழக்கு தொடர்ந்த விநோதம் மட்டுமல்லாமல் வரலாறு மத நம்பிக்கை , தொல்லியல் ஆய்வு , அரசியல் என அனைத்தும் பின்னிப் பிணைந்த ஒரு வழக்கு உண்டு என்றால் அது பாபர் மசூதி வழக்கு தான். மசூதி இடிக்கப்பட்டதோ […]

Categories
Uncategorized தேசிய செய்திகள்

BREAKING : அயோத்தியாவில் இஸ்லாமியர்களுக்கு மாற்று இடம் – உச்சநீதிமன்றம்

நாடே உற்றுநோக்கியுள்ள அயோத்தி வழக்கின் தீர்ப்பை தலைமை நீதிபதி ரஞ்சன் கோக்காய் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு ஒருமித்த தீர்ப்பை வழங்குகின்றது. தலைமை நீதிபதி தொடர்ந்து வாசிக்கப்பட்டுக் கொண்டு இருக்கின்றது. சர்ச்சைக்குரிய இடத்தில் இந்துக்களை தவிர்த்துவிட்டு இஸ்லாமியர்கள் மட்டுமே வழிபாடு செய்தார்கள் என்பதற்கு ஆதாரங்கள் இல்லை அயோத்தியாவில் இஸ்லாமியர்களுக்கு மாற்று இடம் அகழாய்வில் கண்டறியப்பட்ட கட்டுமானங்களில் அங்கு இந்து கோயில் இருந்தது என உச்சநீதிமன்றமே கூறினாலும் அதை மட்டுமே வைத்து முடிவெடுத்துவிட முடியாது.

Categories

Tech |