கோயம்புத்தூர் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலகத்தில் சுபஹான் நிஷா என்பவர் கணக்காளராக வேலை பார்த்து வருகிறார். இவர் பத்திரப்பதிவு துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி மோசடியில் ஈடுபடுவதாக புகார்கள் எழுந்தது. அந்த புகார்களின் அடிப்படையில் விசாரணை நடத்துமாறு மாவட்ட ஆட்சியர் சமீரன் உத்தரவு பிறப்பித்தார். அந்த உத்தரவின் படி மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர், செய்தி மக்கள் தொடர்பு அதிகாரி ஆகியோர் விசாரணை நடத்தியதில் நிஷா மோசடியில் ஈடுபட்டது உறுதியானது. இதனையடுத்து மாவட்ட ஆட்சியர் […]
Tag: suspended
நகராட்சி அதிகாரி துப்புரவு பணி மேற்பார்வையாளரை பணியிடை நீக்கம் செய்து அதிரடியாக உத்தரவிட்டார். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி நகராட்சியில் காசி என்பவர் துப்புரவு பணி மேற்பார்வையாளராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் காசி முறையாக பணிக்கு வராமல் இருந்துள்ளார். மேலும் ஆயக்குடி பகுதியில் காசி இறைச்சி கடை நடத்தி வருவதாகவும் பல்வேறு புகார்கள் வந்தது. இது குறித்து நகராட்சி அதிகாரிகள் விசாரணை நடத்தியுள்ளனர். அதன் அடிப்படையில் நகராட்சி ஆணையர் கமலா காசியை பணியிடை நீக்கம் செய்து அதிரடியாக […]
தலைமை ஆசிரியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள ஆடூர்கொளப்பாக்கம் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் திருவிக்ரமன்(52) என்பவர் தலைமை ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் 2-ஆம் வகுப்பு படிக்கும் மாணவியை திருவிக்ரமன் தொட்டு பேசியதாக கூறப்படுகிறது. இதற்கிடையில் பள்ளியில் படிக்கும் மாணவிகளை தலைமையாசிரியர் அடிக்கடி தொட்டுப் பேசுவதாக புகார் எழுந்தது. இதனை அறிந்த மாணவியின் பெற்றோர் மற்றும் கிராம மக்கள் ஒன்று சேர்ந்து பள்ளியை […]
லஞ்சம் வாங்கிய கூட்டுறவு சங்க செயலாளரை அதிகாரி பணியிடை நீக்கம் செய்து அதிரடியாக உத்தரவிட்டார். சேலம் மாவட்டத்தில் இருக்கும் 252 கூட்டுறவு சங்கங்களில் 5 பவுன் தங்க நகை பெற்றவர்களின் கடன் தள்ளுபடி செய்யப்பட்டு அதற்கான சான்றிதழும், நகையும் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு காடையாம்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் நகை கடன் தள்ளுபடி பெற்ற பயனாளி ஒருவர் நகை மதிப்பீட்டாளர் சான்றிதழை சரிபார்க்க சென்றுள்ளார். அப்போது கூட்டுறவு சங்க செயலாளர் […]
சரியாக வேலை பார்க்காத டாஸ்மாக் மேற்பார்வையாளரை அதிகாரி பணியிடை நீக்கம் செய்து அதிரடியாக உத்தரவிட்டுள்ளார். நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டி மணிக்கூண்டு பகுதியில் இருக்கும் டாஸ்மாக் கடையில் உமேஷ் என்பவர் மேற்பார்வையாளராக வேலை பார்த்து வருகிறார். இவர் சரியான நேரத்தில் வேலைக்கு வருவதில்லை எனவும், பணியை ஒழுங்காக மேற்கொள்வது இல்லை எனவும் பல்வேறு புகார்கள் எழுந்துள்ளது. அந்த புகாரின் அடிப்படையில் உயர் அதிகாரிகள் விசாரணை நடத்திய போது உமேஷ் வரவு-செலவு கணக்கு உள்ளிட்ட அலுவலக பதிவேடுகளை முறையாக […]
பாலியல் ரீதியாக மாணவிகளுக்கு தொந்தரவு அளித்த ஆசிரியரை அதிகாரி பணியிடை நீக்கம் செய்து அதிரடியாக உத்தரவிட்டுள்ளார். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள வெள்ளலூரில் இருக்கும் அரசு மேல்நிலைப் பள்ளியில் விஜய் ஆனந்த் என்பவர் கணித ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். கடந்த 3 மாதங்களுக்கு முன்பு அதே பள்ளியில் படிக்கும் 11 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவிகளுக்கு விஜய் ஆனந்த் வாட்ஸ் அப்பில் ஆபாசமாக புகைப்படங்கள் மற்றும் தகவல்களை அனுப்பியுள்ளார். இதுகுறித்து மாணவிகள் பள்ளி தலைமை ஆசிரியரிடம் புகார் அளித்துள்ளனர். […]
பள்ளியின் தலைமை ஆசிரியர் உட்பட 4 பேரை அதிகாரி பணியிடை நீக்கம் செய்து அதிரடியாக உத்தரவிட்டுள்ளார். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள சாப்டர் மேல்நிலைப்பள்ளியில் கடந்த 17-ஆம் தேதி கழிப்பறையின் ஒருபக்க சுவர் இடிந்து விழுந்ததால் சுதீஷ், அன்பழகன், விஸ்வரஞ்சன் ஆகிய மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 6 மாணவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் பள்ளியின் தாளாளர் செல்வகுமார், தலைமை ஆசிரியர் பெர்சிஸ் ஞான செல்வி, கட்டிட ஒப்பந்ததாரரான ஜான் கென்னடி ஆகியோரை கைது […]
மாணவனிடம் பணம் பறித்த 2 போலீஸ்காரர்களை அதிகாரி பணியிடை நீக்கம் செய்து அதிரடியாக உத்தரவிட்டுள்ளார். சிவகங்கை மாவட்டத்தில் 11ஆம் வகுப்பு படிக்கும் மாணவர் ஒருவர் வசித்து வருகிறார். இந்த மாணவன் தனது பெற்றோரிடம் சண்டை போட்டு விட்டு வீட்டில் இருந்த 63 ஆயிரத்து 500 ரூபாய் பணத்தை எடுத்துக்கொண்டு சென்னைக்கு சென்றுவிட்டார். இந்நிலையில் அந்த மாணவர் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இறங்கியவுடன் எங்கே செல்வது என்று தெரியாமல் அங்கேயே படுத்து தூங்கியுள்ளார். இந்த மாணவரை பார்த்த கோயம்பேடு […]
முதல் மனைவிக்குத் தெரியாமல் நடிகை ராதாவை சப்-இன்ஸ்பெக்டர் இரண்டாவதாக திருமணம் செய்ததால் கமிஷனர் அவரை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார். சென்னை மாவட்டத்திலுள்ள ஆர்.எஸ்.புரம் போலீஸ் குடியிருப்பில் வசந்த ராஜ் என்ற சப்-இன்ஸ்பெக்டர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் சுந்தரா டிராவல்ஸ் போன்ற பல்வேறு படங்களில் நடித்த பிரபல நடிகை ராதாவை வசந்தராஜா இரண்டாவதாக திருமணம் செய்துள்ளார். இவர்கள் இருவரும் விருகம்பாக்கத்தில் இருக்கும் ராதா வீட்டில் வாழ்ந்து வருகின்றனர். இதனை […]
பெண் போலீசிடம் ஆபாசமாகப் பேசிய இரயில்வே காவல் நிலைய எஸ்.ஐ சரவணனை பணி இடைநீக்கம் செய்து ரயில்வே காவல் கண்காணிப்பாளர் செந்தில் குமார் உத்தரவிட்டுள்ளார். தென்காசி மாவட்டம், இரயில்வே காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராகப் பணியாற்றி வருபவர் தான் சரவணன். இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்னதாக திருச்சி ரயில்வே காவல் நிலையத்தில் பணிபுரிந்தார். அப்போது, அவருக்குக் கீழ் பணிபுரிந்து வரும் திருமணமாகாத பெண் போலீஸ் ஒருவரிடம் போனில் ஆபாசமாகப் பேசியுள்ளார். பெண் காவலரை, தனது ஆசைக்கு […]
கோவையில் குடிபோதையில் இளம்பெண்ணை துரத்தி சென்று வர்ணித்து அத்துமீறிய காவலரை பொதுமக்கள் பிடித்து காவல்நிலையத்தில் ஒப்படைத்திருக்கிறார்கள். கோவை மாவட்டம் பெரியநாயக்கன் பாளையத்தில் சேர்ந்த வன்னியன் கோவில் பகுதியில் ஒர்க் ஷாப் நடத்தி வருபவர் ரவிகுமார். இவரது மனைவி சரண்யா செவ்வாய்க்கிழமை மதியம் கீழநத்தம் பகுதியில் உள்ள தனது உறவினர்களை பார்க்க இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அத்திப்பாளையம் பகுதியை அடுத்துள்ள டாஸ்மார்க் கடை அருகே இருந்து போலீஸ் உடை அணிந்த நபர் ஒருவர் பின் தொடர்ந்துள்ளார். காவலர் ஒருவர் பின்தொடர்ந்து […]
அறைநிலைத்துறை கூடுதல் ஆணையர் கவிதா மீதானசஸ்பெண்ட் நடவடிக்கையை மறுபரிசீலனை செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் சோமாஸ்கந்தர் சிலை மோசடி வழக்கில் அறநிலையத் துறையின் கூடுதல் ஆணையர் கவிதா மீது சிலை கடத்தல் தடுப்பு பிரிவு வழக்கு பதிவு செய்தது. மேலும் இந்த வழக்கில் அவர் கைதும் செய்யப்பட்டார். இதை தொடர்ந்து கவிதா சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.இந்நிலையில் தன்னுடைய சஸ்பெண்ட் உத்தரவை எதிர்த்து கவிதா சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதன் மீதான விசாரணை இன்று நடைபெற்ற போது , கவிதா மீதான […]