நடிகை டாப்சி முதல்முறையாக நியூயார்க் சென்ற அனுபவத்தை ரசிகர்களிடம் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. இதன் காரணமாக அடுத்த மாதம் 14ஆம் தேதிவரை நாட்டில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் திரையுலகைச் சேர்ந்த பிரபலங்கள் அனைவரும் தங்களது வீட்டில் முடங்கியுள்ளனர். ஓய்வில்லாமல் எப்போதும் கடிகாரம் போல் தொடர்ந்து சுற்றித் திரிந்த அவர்கள், தற்போது வீட்டில் முடங்கியுள்ளதால் ஏதாவது செய்து அதனை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு ஆக்டிவாக செயல்பட்டு வருகின்றனர். […]
Tag: TaapseePannu
நடிகை டாப்சி நடிப்பில் உருவாகியுள்ள ‘தப்பட்’ படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது. நடிகை டாப்சி சமீபகாலமாக கதாநாயகிக்கு முக்கியத்துவம் நிறைந்த கதைகளைத் தேர்வு செய்து நடித்து வருகிறார். அந்த வகையில் முல்க் திரைப்படத்தைத் தொடர்ந்து அனுபவ் சின்ஹா இயக்கத்தில் அவர் நடித்துள்ள படம் ‘தப்பட்’. பூஷன்குமார், கிரிஷன் குமார், அனுபவ் சின்ஹா ஆகியோர் இணைந்து தயாரிக்கும் இப்படம் வரும் பிப்ரவரி 28-ஆம் தேதி வெளியாகவுள்ளது. இதற்கிடையில் நேற்று இப்படத்தின் போஸ்டர் வெளியாகி வைரலான நிலையில், இன்று படத்தின் ட்ரெய்லர் […]
கோயிலில் வைத்து தன்னை தவறான நோக்கத்தில் தொட முயற்சித்த நபரின் கை விரல்களை முறுக்கி ஓட வைத்த சம்பவம் பற்றி நினைவு கூர்ந்துள்ளார் பாலிவுட், தென்னிந்திய படங்களில் கலக்கி வரும் நடிகை டாப்ஸி. குருபூரம் நிகழ்வின்போது தான் சந்தித்த மோசமான அனுபவத்தையும், அதிலிருந்து தைரியமாக தன்னை தற்காத்துக்கொண்ட விதம் பற்றியும் விவரித்தார் நடிகை டாப்ஸி. பாலிவுட் நடிகை கரீனா கபூர் ‘வாட் உமென் வான்ட்’ என்ற நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனை தொகுத்து வழங்கிவருகிறார். 104.8 இஸ்க் எஃப்-இல் […]
இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி வீராங்கனை மித்தாலி ராஜின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தின் தலைப்பு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி வீராங்கனை மித்தாலி ராஜ் இன்று தனது 37ஆவது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். ராஜஸ்தான் மண்ணில் பிறந்து, தமிழ்நாட்டில் வளர்ந்து, இன்று தெலங்கானாவில் குடிபெயர்ந்து இந்தியாவின் மகளாக வெற்றிவாகை சூடியவர் மித்தாலி ராஜ். சிறந்த பேட்ஸ்வுமன், அதிக ஆண்டுகள் கிரிக்கெட் விளையாடி பல்வேறு சாதனைகளைப் படைத்திருக்கும் இவர் உமன் சச்சின் என ரசிகர்களால் கொண்டாடப்படுகிறார். ஒருநாள் […]
தமன்னா நடிப்பில் தேவி 2 விரைவில் வெளியாக இருக்கும் நிலையில் அவர் தெலுங்கில் வெற்றி பெற்ற ஹாரர் படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிக்க இருக்கிறார். 2017-ம் ஆண்டு தெலுங்கில் வெளியான படம் ‘அனந்தோ பிரம்மா’. இது ஒரு ஹாரர் காமெடி படமாகும். இந்த படத்தில் டாப்சி, வெண்ணிலா கிஷோர், ஸ்ரீனிவாஸ் ரெட்டி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இப்படம் தெலுங்கில் நல்ல வரவேற்பைப் பெற்றது. அதனால் இந்த படத்தை மற்ற மொழிகளிலும் ரீமேக்காக தயாரிப்பதற்கு நீண்ட நாட்களாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் அனந்தோ பிரம்மா படத்தை தமிழில் ரீமேக்காக தயாரிக்கவுள்ளனர். இந்த படத்தில் டாப்சி நடித்த […]