ஆப்கானிஸ்தானில் இந்தியர்கள் பாதுகாப்பாக உள்ளதாக மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது. ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றி விட்ட நிலையில், அந்நாட்டில் வாழ பிடிக்காமல் ஆப்கான் மக்கள் விமான நிலையங்களில் குவிந்து அமெரிக்கா, கனடா உள்ளிட்ட நாடுகளுக்கு தப்பித்து செல்கின்றனர்.. ஆப்கானில் சிக்கியிருக்கும் தங்களது தூதரக அதிகாரிகளை சர்வதேச நாடுகள் விமானம் மூலம் மீட்டு வருகின்றனர்.. அதேபோல இரண்டு கட்டங்களாக இந்திய தூதரக அதிகாரிகள் 250 பேர் மீட்கப்பட்டு தாயகம் திரும்பியுள்ளனர்.. இதனை தொடர்ந்து காபூலில் இருந்து இந்திய விமானப்படை […]
Tag: Taliban
இந்தியர்களை மீட்பதே நோக்கம் என்று வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.. ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றி விட்டனர்.. சர்வதேச நாடுகள் அந்நாட்டில் சிக்கியிருக்கும் தூதரக அதிகாரிகளை மீட்டு வருகின்றனர்.. இந்திய அரசு தரப்பிலும் இரண்டு கட்டங்களாக 250 தூதரக அதிகாரிகள் விமானம் மூலம் அழைத்து வரப்பட்டுள்ளனர்.. மேலும் இந்தியர்கள் அங்கு சிக்கியிருக்கின்றனர்.. பிரதமர் மோடி தலைமையில் ஆப்கான் விவகாரம் தொடர்பாக ஆலோசனையும் நடத்தப்பட்டது.. இந்த நிலையில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், ஆப்கானிஸ்தானில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்டு கொண்டு […]
தலிபான்கள் கைவசம் தற்போது 3 லட்சம் ஆயுதங்கள் உள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.. உலகமே இப்பொழுது பேசிக் கொண்டிருக்கும் ஒரு முக்கியமான விஷயம் என்னவென்றால் அது ஆப்கானிஸ்தானில் நடந்து கொண்டிருக்கும் நிலைமைதான்.. ஆம், ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றி விட்டனர்.. இன்னும் ஓரிரு நாளில் தலிபான்கள் ஆட்சி அமைய இருக்கிறது.. ஆப்கான் அரசு படைகளும், அமெரிக்க படைகளும் இணைந்து 20 ஆண்டுகளாக போரிட்டு வந்த நிலையில், அமெரிக்க படைகள் அதிபரின் உத்தரவையடுத்து வெளியேற தொடங்க, தலிபான்கள் எளிதாக ஆப்கானை […]
ஆப்கானில் விமான சேவை முழுமையாக ரத்து செய்யப்பட்டதை தொடர்ந்து, வீடுகளுக்குள் மக்கள் முடங்கிய நிலையில், தலிபான் அமைப்பு சோதனையை தொடங்கியுள்ளது ஆப்கானிஸ்தான் தற்போது தலிபான்கள் கட்டுப்பாட்டில் இருக்கிறது.. அந்நாட்டில் உள்ள காபூல் உட்பட அனைத்து பகுதியையும் தலிபான்கள் கைப்பற்றி விட்டனர்.. அந்நாட்டின் அதிபர் அஷ்ரப் கனி நாட்டை விட்டு தப்பி ஓடி விட்டார்.. ஓரிரு நாளில் அங்கு தலிபான் ஆட்சி அமைந்து விடும்.. அந்நாட்டு மக்கள் காபூல் விமான நிலையத்தில் கூட்டமாக கூடி எப்படியாவது தப்பித்து வேறு […]
தலிபான்களுடனான ஒப்பந்தத்தைத் தொடர்ந்து அடுத்த 10 நாட்களில் அமெரிக்கப் படைகள் ஆப்கானிஸ்தானில் இருந்து வாபஸ் பெறத்தொடங்குவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ஆப்கானிஸ்தானில் இருக்கும் அமெரிக்க செய்தித் தொடர்பாளர் கர்னர் சன்னி லெகெட் (Sonny Leggett) செய்தியாளர்களிடம் பேசிய போது, அடுத்த 135 நாட்களுக்குள் வீரர்களின் எண்ணிக்கையை 12 ஆயிரத்திலிருந்து 8 ஆயிரமாகக் குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்தார். மேலும் ஐ.எஸ், அல்கொய்தா உள்ளிட்ட அமைப்பினருடன் எதிர்த்துப் போராடுவதற்காக ஆப்கானிஸ்தானின் பாதுகாப்புப் படையினருடன் தாங்கள் சேர்ந்துள்ளதாகவும் அவர் […]
அமெரிக்கா – தலிபான்கள் இடையே கடந்த 18 ஆண்டுகளாக ஆப்கானிஸ்தானில் நடைபெற்று வருகின்ற போர் முடிவுக்கு வருகிறது. கடந்த 2002 ஆம் ஆண்டுமுதல் ஆப்கானிஸ்தான் நாட்டின் அரசு படைகளுக்கும், தலிபான் தீவிரவாதிகளுக்கும் இடையே பெரும் போர் நடைபெற்று வருகின்றது. இந்த போரில் கிட்டத்தட்ட 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர். இந்நிலையில் அமெரிக்கா ஒரு அதிரடி முடிவு எடுத்தது. அதாவது, ஆப்கான் அரசு படைக்கு உதவும் வகையில் 14,000 அமெரிக்க வீரர்களை ஆப்கானில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவதற்கு அனுப்பியது […]
ஈரான் பாதுகாப்புப் படை தளபதி காசிம் சுலைமானி கொலைக்கு காரணமான சிஐஏ அலுவலர் ஆப்கானிஸ்தானில் நேற்று ஏற்பட்ட விமான விபத்தில் உயிரிழந்ததாக தலிபான் பயங்கரவாத அமைப்பு தெரிவித்துள்ளது. ஆப்கானிஸ்தானின் காஸ்னி மாகாணத்தில் அமெரிக்கப் படையைச் சேர்ந்த விமானம் ஒன்று நேற்று விழுந்து நொறுங்கியது. இந்த விபத்தில் ஈரான் பாதுகாப்புப் படை தளபதி காசிம் சுலைமானியின் கொலைக்கு காரணமான மைக்கேல் தே ஆன்ரே உள்ளிட்ட பல மூத்த சிஐஏ அலுவலர்கள் உயிரிழந்ததாக தலிபான் பயங்கரவாத அமைப்பின் ஊடகம் செய்தி […]
ஆப்கானிஸ்தான் ராணுவத்தினரின் தீவிர நடவடிக்கையால் கடந்த சில வாரங்களில் மட்டும் 150க்கும் மேற்பட்ட தாலிபான்கள் ஆப்கானிஸ்தான் ராணுவத்திடம் சரணடைந்துள்ளனர். ஆப்கானிஸ்தானில் தாலிபான்களை ஒடுக்க ராணுவத்தினர் தங்கள் நடவடிக்கைகளை தீவிரபடுத்தியுள்ளனர். அதன்படி ஆப்கன் ராணுவமும், காவல் துறையும், புலனாய்வுத் துறையும் ஒருங்கிணைந்து பல்வேறு பகுதிகளில் தேடுதல் வேட்டை நடத்தினர். அதன்படி கோர் மாகாணத்தின் மேற்கு பகுதியிலுள்ள ஷாஹ்ராக் மாவட்டத்தில் தேடுதல் வேட்டை நடத்தியபோது, செவ்வாய்கிழமை (ஜனவரி 21) ஒரே நாளில் மட்டும் சுமார் 40 தாலிபான்கள் தங்கள் ஆயுதங்களை […]
ஆப்கானில் இருக்கும் அமெரிக்க படைகளை விலகிக்கொள்வதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. தலிபான்கள் ஆதிக்கம் செலுத்தி வரும் ஆப்கானிஸ்தானில் அங்குள்ள அரசுக்கு எதிராக தலிபான்கள் உள்நாட்டு போரை நடத்தி வருகின்றனர். இதை கட்டுப்படுத்த அமெரிக்காவும் தனது படைகளை அனுப்பி பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டு வந்த சூழலில் தற்போது அமெரிக்கா படைகளை விலகிக்கொள்ள அமெரிக்கா முடிவு செய்துள்ளது. ஆப்கானிஸ்தானில் 18 ஆண்டுகளாக நிலைகொண்டுள்ள தமது படைகளை முற்றிலுமாக விலக்கிக் கொள்ள அமெரிக்கா முடிவு செய்துள்ளது. இதற்காக தலிபான்களுடன் மேற்கொண்டுள்ள அரசியல் தீர்வுகாண பேச்சுவார்த்தையில் […]
பலுசிஸ்தான் மாகாணத்தில மசூதியில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் 4 பேர் பலியாகி 32 பேர் காயமடைந்துள்ளனர். வடமேற்கு மாநிலமாக இருக்கக்கூடிய பலுசிஸ்தான் தலைநகரம் குச்லாக் பகுதியில் இருக்க கொடிய மசூதியில் போலீஸ் வாகனத்தை குறி வைத்து நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் வாகனத்தில் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதில் 4 உயிரிழப்பதாகவும் 32 பேர் காயமடைந்திருப்பதாகவும் சொல்லப்படுகின்றது.காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். பலுசிஸ்தான் பகுதி ஏராளமான பழங்குடி மக்கள் வசித்து வருகிறார்கள். தலிபான் இயக்கம் வலுவாக இருக்க கூடிய பகுதியாகும். இங்கு […]