தெலுங்கில் உருவாகிவரும் ‘சீத்திமார்’ படத்தில் நடிகை தமன்னா கபடி பயிற்சியாளராக நடிக்கிறார். சுந்தர் சி இயக்கத்தில் விஷால் நடிப்பில் வெளியான ‘ஆக்ஷன்’ படத்தில் கடைசியாக தமன்னா நடித்திருந்தார். ஆனால் இந்தப்படம் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றியடையவில்லை. இந்த நிலையில், தெலுங்கில் கோபிசந்த் நடிக்கும் ‘சீத்திமார்’ படத்தில் நடிகை தமன்னா நடிக்கிறார். கபடி விளையாட்டை மையப்படுத்தி உருவாகும் இந்தப்படத்தில் தமன்னா கபடி பயிற்சியாளராக ஜுவாலா ரெட்டி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். பிரபல இயக்குநர் சம்பத் நந்தி இயக்கும் இப்படத்தில், […]
Tag: #Tamannaah
டிஜிட்டல் களத்தில் நடிக்கும் சமந்தா, ரம்யா கிருஷ்ணன், பாபி சிம்ஹாவைத் தொடர்ந்து நடிகை தமன்னாவும் லிஸ்ட்டில் இணைந்துள்ளார். தற்போது டிஜிட்டல் தளத்தில் கதைகள் பலவும் சிறப்பாக எடுக்கப்பட்டு வரும் நிலையில் பல நடிகர்களும் வெப் சீரிஸில் ஆர்வத்துடன் நடித்து வருகின்றனர். தமிழிலும் சிறந்த திறம் வாய்ந்த நடிகர்கள் வெப் சீரிஸில் நடிக்க ஆர்வத்துடன் முன்வருகின்றனர். இந்நிலையில் நடிகை தமன்னாவும் ஹாட் ஸ்டார் தளத்தில் வெளி வரும் வெப் சீரிஸில் நடிக்கப்போகிறார். தமிழில் தயாரிக்கப்பட்டு வரும் இந்த வெப் […]
தெலுங்கு உச்ச நட்சத்திரமான சிரஞ்சீவியின் “சைரா நரசிம்மா ரெட்டி” படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது. ஆந்திராவில் ராயலசீமாவில் வாழ்ந்த உய்யாலவாடா நரசிம்ம ரெட்டி என்ற சுதந்திர போராட்ட வீரருடைய உண்மை வாழ்க்கை வரலாரை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள படம் “சைரா நரசிம்மா ரெட்டி”. சுரேந்தர் ரெட்டி இயக்கத்தில் சிரஞ்சீவியின் மகனும் நடிகருமான ராம் சரண் தயாரிப்பில் உருவாகியிருக்கும் இப்படத்தின் ஹீரோ தெலுங்கு உச்ச நட்சத்திரமான சிரஞ்சீவி. மேலும் இப்படத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, நயன்தாரா, தமன்னா அமிதாப் பச்சன், […]
என் அம்மா எனக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று முடிவு செய்துவிட்டார் என்று தமன்னா பேட்டியளித்துள்ளார். அஜித், விஜய், சூர்யா என முன்னணி ஹீரோக்களுடன் நடித்து தனக்கென தனி இடத்தை பிடித்தவர் நடிகை தமன்னா. இவர் கிட்டத்தட்ட 12 வருடங்களாக சினிமாவில் நடிதுக்கொண்டு கொண்டு வருகிறார். தற்போது 29 வயதாகும் தமன்னா தன்னுடைய சினிமா வாழ்க்கை, திருமணம் குறித்து ருசிகர பேட்டி ஓன்று அளித்துள்ளார். “அவர் அளித்த பேட்டியில், “நான் வருடத்திற்கு 4 முதல் 5 படங்களில் நடித்து வந்தேன். இப்போது […]
தமன்னா நடிப்பில் தேவி 2 விரைவில் வெளியாக இருக்கும் நிலையில் அவர் தெலுங்கில் வெற்றி பெற்ற ஹாரர் படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிக்க இருக்கிறார். 2017-ம் ஆண்டு தெலுங்கில் வெளியான படம் ‘அனந்தோ பிரம்மா’. இது ஒரு ஹாரர் காமெடி படமாகும். இந்த படத்தில் டாப்சி, வெண்ணிலா கிஷோர், ஸ்ரீனிவாஸ் ரெட்டி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இப்படம் தெலுங்கில் நல்ல வரவேற்பைப் பெற்றது. அதனால் இந்த படத்தை மற்ற மொழிகளிலும் ரீமேக்காக தயாரிப்பதற்கு நீண்ட நாட்களாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் அனந்தோ பிரம்மா படத்தை தமிழில் ரீமேக்காக தயாரிக்கவுள்ளனர். இந்த படத்தில் டாப்சி நடித்த […]
‘அதே கண்கள்’ படத்தின் இயக்குனர் ரோகின் வெங்கடேசனின் அடுத்த படத்தில் நடிகை தமன்னா நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ரோகின் வெங்கடேசன் இயக்கத்தில் வெளியான படம் ‘அதே கண்கள்’. வசூல் ரீதியாக பலத்த வரவேற்பை பெற்ற இப்படத்தினை, சி.வி.குமார் தயாரித்தார். இந்நிலையில் இயக்குனர் ரோகின் வெங்கடேசன் தனது அடுத்த படத்திற்கான கதைக்கு பொறுமை காத்து தற்போது திகில் மற்றும் காமெடி நிறைந்த படத்தை உருவாக்கினார். இது குறித்து அவர் தெரிவித்த போது இப்படத்தில் நடிக்க பிரபல நடிகை தமன்னா சம்மதம் கூறியுள்ளார். மேலும் இதை பற்றி அவர் கூறுகையில் […]