புதிய மருத்துவ கல்லூரிகளுக்கு ஒப்புதல் வழங்கிய மத்திய அரசுக்கும், பிரதமருக்கும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நன்றி தெரிவித்துள்ளார். இதுகுறித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது: மாவட்டம்தோறும் மருத்துவக் கல்லூரிகள் அமைக்கப்படும் என மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்திருந்தார். அதன்படி பெரும்பாலான மாவட்டங்களில் மருத்துவக் கல்லூரிகள் அமைக்கப்பட்டு வருகின்றன. கடந்த 2019ஆம் ஆண்டில் ஒன்பது மருத்துவக் கல்லூரிகள் அமைக்க மத்திய அரசு அனுமதி வழங்கி உத்தரவிட்டது. இந்நிலையில், புதிதாக 5 மாவட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. […]
Tag: Tamil Nadu Chief Minister
தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சேலம் வருவதையொட்டி அவருக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஜனவரி 21ஆம் தேதி சென்னையிலிருந்து விமானம் மூலமாக, சேலம் வரவுள்ளார். இதனால், அவருக்கு இசட் பிளஸ் (Z+) பாதுகாப்பு வழங்கும்படி, சம்பந்தப்பட்ட விமான நிலையங்கள், காவல் கண்காணிப்பு மண்டல காவல் துறை ஆகியவற்றிற்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. முதலமைச்சரின் உயிருக்கு ஆபத்து உள்ளதால், அவருக்கு இசட் பிளஸ் பிரிவு பாதுகாப்பு வழங்க உத்தரவிடப்பட்டுள்ளதாக காவல் துறை அலுவலர்கள் […]
தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வயலில் இறங்கி வேலைசெய்வதைப் பார்க்க மகிழ்ச்சியாக இருக்கிறது என குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு பாராட்டியுள்ளார். குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு தனது ட்விட்டர் பக்கத்தில், தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நெற்பயிருடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். அந்த ட்வீட்டில் வெங்கையா நாயுடு, “கடந்து வந்த பாதையை மறக்காத தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வயலில் இறங்கி வேலை செய்வதைப் பார்க்க மகிழ்ச்சியாக உள்ளது. இது மக்களை ஊக்கப்படுத்துகிறது. […]