வேலூர் அருகே கூலித்தொழிலாளி ரயிலில் அடிபட்டு இறந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டம் ஆலம்பட்டறை கிராமத்தைச் சேர்ந்தவர் ரஞ்சன். இவரது மனைவி யுவராணி. கூலி வேலை செய்து வருகிறார். திருமணமாகி இரண்டு ஆண்டுகள் கடந்த நிலையில், இவர்களுக்கு குழந்தை ஏதும் இல்லை. இந்த நிலையில், ரஞ்சன் நேற்றைய தினம் காலை சுமார் 8 மணி அளவில் தனது இருசக்கர வாகனத்திற்கு பெட்ரோல் நிரப்புவதற்கு குடியாத்தம் பகுதியில் உள்ள ரயில் நிலையம் அருகே சென்று, பெட்ரோல் […]
Tag: #tamilanadu
தஞ்சாவூர் அருகே பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் சங்கம் சார்பாக காந்தி சிலையிடம் மனு அளிக்கும் போராட்டம் நடைபெற்றது. தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தை சுற்றியுள்ள விவசாயிகள் தேசிய ஊரக வளர்ச்சித் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் நூறு நாள் வேலைத் திட்டத்தை இரு நூறு நாள்கள் ஆக உயர்த்தி வழங்க வேண்டும் என்றும், 55 வயதை கடந்த வேளாண் தொழில் சார்ந்தவர்களுக்கும், விவசாயிகளுக்கும் குறைந்தபட்சம் ரூபாய் 5 ஆயிரம் உதவித்தொகை வழங்க வேண்டும் என்றும், பயிர் கடன் ரத்து […]
இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 4 பேரும் செப்.3 வரை நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கோட்டைப்பட்டினம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து மீனவர்கள் 232 விசைப்படகுகளுடன் நேற்று காலை கடலுக்குச் மீன் பிடிக்கச் சென்றனர். இதில் ஒரு விசைப் படகில் சென்ற உரிமையாளர் மணிகண்டன், பாலகிருஷ்ணன், கார்த்திக், சதீஷ், ஆகியோர் கோட்டைப்பட்டினத்தில் இருந்து சுமார் 35 கடல் மைல் தூரத்தில் இரவு 11: 30 மணியளவில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த […]
புதுக்கோட்டை மீனவர்கள் 4 பேரை எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தமிழக மீனவர்கள் கடலில் மீன்பிடித்து கொண்டிருக்கும் போது அவர்களை இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி சிறை பிடித்து செல்கின்றனர். இது தொடர் கதையாகவே இருந்து வருகிறது. அதன்படி புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கோட்டைப்பட்டினம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து மீனவர்கள் 232 விசைப்படகுகளுடன் நேற்று காலை கடலுக்குச் மீன் பிடிக்கச் சென்றனர். இதில் ஒரு விசைப் படகில் சென்ற […]
ஈரோட்டில் கெமிக்கல் ஏஜென்சி நடத்தி வரும் ராஜா என்பவரது வீட்டில் 62 சவரன் நகைகள் மற்றும் 10,000 ரூபாய் பணத்தை கொள்ளையரகள் கொள்ளையடித்து விட்டு தப்பிச்சென்றனர். ஈரோட்டை அடுத்த ரகுபதி நாயக்கன் பாளையத்தில் வசித்துவரும் ராஜா என்பவர் கெமிக்கல் ஏஜென்சியை நடத்தி வருகிறார். இவர் தனது குடும்பத்தினருடன் வீட்டில் நன்கு அயர்ந்து உறங்கிக் கொண்டிருந்தார். அப்போது அப்போது சாமர்த்தியமாக உள்ளே நுழைந்த கொள்ளையர்கள் உறங்கிக்கொண்டிருந்த அறையினை தாழ்பாள் போட்டு பூட்டி விட்டு பீரோவில் இருந்த 62 சவரன் நகைகள் […]