92வது ஆஸ்கர் விருது நிகழ்ச்சியின் மான்டேஜ் விடியோவில் பழம்பெரும் இயக்குநர் சத்யஜித்ரேவின் பதர் பஞ்சாலி, ஏஆர் ரஹ்மான் ஜெய் ஹோ பாடல்கள் இடம்பிடித்தது ரசிகர்களிடையே மிகழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. லாஸ் ஏஞ்சலிஸ்: உலக சினிமாக்கள் கொண்டாடப்பட்ட ஆஸ்கர் விருது நிகழ்வில் இந்திய சினிமாவை இணைக்கும் விதமாக சத்யஜித்ரேவின் பதர் பஞ்சாலி காட்சி, இசைப்புயல் ஏஆர் ரஹ்மான் இசையமைத்த ஜெய் ஹோ பாடல் ஆகியவற்றின் மான்டேஜ் விடியோ காட்சியில் காட்டப்பட்டது. மறைந்த பழம்பெரும் இயக்குநர் சத்யஜித்ரே இயக்கிய முதல் படம் […]
Tag: tamilcinema
மலையாளத்தில் கடந்த ஆண்டு வெளியாகி பெரும் வெற்றி பெற்ற ‘ஹெலன்’ என்ற படத்தின் ரீமேக் உரிமையை நடிகர் அருண் பாண்டியன் வாங்கி இருக்கிறார். மலையாளத்தில் கடந்த 2019 நவம்பர் மாதம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற படம் ஹெலன். இந்த படம் தந்தை, மகள் பாச உறவை மையமாக வைத்து எடுக்கப்பட்டது. வினித் சீனிவாசன் தயாரிப்பில் மதுக்குட்டி சேவியர் இயக்கியிருந்த இப்படம் தந்தை, மகள் பாச உறவை மையமாக வைத்து வந்தது. இதில் நர்சிங் மாணவி ஹெலனுக்கு […]
தற்போது நடிகை ரம்யா நம்பீசன் இயக்குனராக அவதாரம் எடுத்துள்ளார். தமிழில் ராமன் தேடிய சீதை, ஆட்ட நாயகன், இளைஞன், குள்ளநரி கூட்டம், பீட்சா, ரெண்டாவது படம், சேதுபதி, சீதக்காதி உள்ளிட்ட படங்களில் நடித்து அசத்தியவர் ரம்யா நம்பீசன். தமிழ் மட்டுமில்லாமல் மலையாள பட உலகிலும் முன்னணி நடிகையாக இவர் இருக்கிறார். தற்போது ரம்யா நம்பீசன் தமிழில் விஜய் ஆண்டனியுடன் தமிழரசன், ரியோவுடன் பிளான் பண்ணி பண்ணனும் உள்ளிட்ட சில படங்களில் நடித்து வருகின்றார். இவர் நடிப்பில் மட்டும் […]
நடிகர் சூரி படப்பிடிப்பின்போது பஜ்ஜி சுட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. நடிகர் சசிகுமார் மற்றும் கார்த்திக்கா நடிக்கும் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது. இதில் நகைச்சுவை நடிகர் சூரி இதில் நடித்து வருகிறார். இந்த நிலையில் பரபரப்பான படப்பிடிப்புக்கு நடுவே படக்குழுவுக்கு வழங்கும் விதமாக சூரி சுடச் சுட பஜ்ஜி தயார் செய்தார். அந்த வீடியோவை இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் அவர் பதிவு செய்துள்ளார்.. இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி […]
சினிமா துறையில் அரசியல் வரவேண்டாம் என்று பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி கேட்டுக்கொண்டுள்ளார். கடந்த 5 ஆம் தேதி நெய்வேலியில் நடைபெற்று கொண்டிருந்த ‘மாஸ்டர்’ படப்பிடிப்பு தளத்திற்கு சென்ற வருமான வரித்துறையினர் பிகில் பட வருவாய் தொடர்பாக நடிகர் விஜயை பனையூரில் உள்ள அவரது வீட்டிற்கு அழைத்து கொண்டு வந்து விசாரணை நடத்தினர். மேலும் நீலாங்கரை மற்றும் சாலிகிராமத்தில் உள்ள வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டது. 23 மணி நேரத்திற்கும் மேலாக நடந்த சோதனை நேற்று முன்தினம் இரவு 8 […]
விஜய் படம் என்பதால் நெய்வேலியில் மாஸ்டருக்கு எதிராக பாஜகவினர் போராட்டம் நடத்தவில்லை என்று பாஜகவின் மூத்த தலைவர் இல.கணேசன் கூறியுள்ளார். பிகில் படம் வருவாய் தொடர்பாக கடந்த 5 ஆம் தேதி நெய்வேலியில் நடைபெற்று கொண்டிருந்த ‘மாஸ்டர்’ படப்பிடிப்பு தளத்திலிருந்து சென்ற வருமான வரித்துறையினர் விஜயை சென்னை பனையூரில் உள்ள அவரது வீட்டுக்கு அழைத்து கொண்டு வந்து விசாரணையை தொடங்கினர். அதேபோல் விஜயின் மனைவி சங்கீதாவிடமும் வாக்குமூலம் பெற்றனர். அப்போது விஜய் பிகில் சம்பளமாக 30 கோடி […]
கிராமியப் பாடகியான பரவை முனியம்மா அபி சரவணன் நடித்த ‘மாயநதி’ திரைப்படத்தை கண்டு களித்தார். கிராமியப் பாடகியும் நடிகையுமான பரவை முனியம்மா உடல் நிலை சரியில்லாமல், கேட்பாரற்று இருந்தபோது, அவருக்கு உதவிக்கரம் நீட்டி மருத்துவமனையில் சேர்த்து அருகிலிருந்து பார்த்துக்கொண்டவர், நடிகர் அபி சரவணன். கடந்த வாரம் நடிகர் அபி சரவணன் நடிப்பில் ‘மாயநதி’ என்னும் திரைப்படம் வெளியானது. இந்தப் படத்தை பரவை முனியம்மா அபி சரவணன் குடும்பத்தினருடன் சேர்ந்து மதுரையில் கண்டுகளித்தார். பிறகு திரைப்படத்தை பார்த்துவிட்டு, அபி […]
யோகிபாபு, சுனைனா நடிப்பில் உருவாகி வரும் ‘ட்ரிப்’ படத்தின் டீஸர் நேற்று வெளியாகியுள்ளது. அறிமுக இயக்குநர் டென்னிஸ் மஞ்சுநாத் இயக்கத்தில் நடிகர் யோகிபாபு, கருணாகரன் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘ட்ரிப்’ படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிகை சுனைனா நடிக்கிறார். மேலும் இவர்களுடன் இந்தியாவில் முதல் முறையாக அமெரிக்காவின் பிட்புல் ரக நாயும் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளது. இப்படத்தை சாய் ஃபிலிம் ஸ்டூடியோஸ் சார்பில் ஏ.விஸ்வநாதன், பிரவீன் குமார் ஆகியோர் தயாரிக்கின்றனர். செப்டம்பர் மாதம் படத்தின் படப்பிடிப்பு […]
என்.எல்.சி நிறுவனத்தில் படப்பிடிப்பு நடத்தக்கூடாது என்று பாஜகவினர் போராட்டம் நடத்திய நிலையில் #தாமரை_மயிர்ல_கூடமலராது என்ற ஹேஸ்டேக்கை விஜய் ரசிகர்கள் ட்ரெண்ட் செய்து வருகின்றனர். நேற்று முன்தினம் முதல் பிகில் படத்தை தயாரித்த AGS நிறுவனம் , பிகில் பட விநியோகஸ்தர் அலுவலகம் , பைனான்சியர் அன்புசெழியன் ஆகியோரின் அலுவலகத்தில் வருமானவரித்- துறையினர் அதிரடி சோதனை மேற்கொண்டனர். அதேசமயம் நடிகர் விஜயையும் விட்டுவைக்காத வருமானவரித்துறையினர், நெய்வேலியில் நடைபெற்று கொண்டிருந்த ‘மாஸ்டர்’ படப்பிடிப்பு தளத்திலிருந்து சென்றனர். அங்கு அவரிடம் சிறிது […]
விஜயின் மாஸ்டர் படப்பிடிப்பு நடைபெறும் என் எல் சி இரண்டாவது சுரங்கத்தில் பாஜகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பிகில் படத்தின் வருவாய் தொடர்பாக வருமான வரித்துறையினர் நேற்று முன்தினம் முதல் AGS நிறுவனம் , பிகில் பட விநியோகஸ்தர் அலுவலகம் , பைனான்சியர் அன்புசெழியன் ஆகியோரின் அலுவலகத்தில் சோதனை மேற்கொண்டனர். அதேபோல நெய்வேலி படப்பிடிப்பு தளத்திலிருந்து அழைத்து வரப்பட்ட நடிகர் விஜயிடம் அவரின் மனைவி சங்கீதாவிடம் வாங்குமூலம் பெற்றனர். தமிழ் திரையுலகை உலுக்கிய இந்த சோதனையில் அன்புசெழியன் […]
திரையரங்குகளில் மாற்றுத் திறனாளிகளுக்கு தனி இடவசதி குறித்து பரிசீலனை செய்யப்படும் என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார். ஏஜிஎஸ் படம் தயாரிப்பு நிறுவனம், சினிமா பைனான்சியர் அன்புச்செழியன் , நடிகர் விஜய் ஆகியோரின் வீடு அலுவலகங்கள் என 38 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதில் சினிமா பைனான்சியர் அன்புசெழியன் வீட்டிலிருந்து 300 கோடி ரூபாய் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் , 77 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் வருமானவரித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். அதேசமயம் நெய்வேலி மாஸ்டர் […]
விஜய் மீண்டும் தனது மாஸ்டர் படப்த்தின்படப்பிடிப்பில் கலந்து கொண்டார். பிகில் படத்தின் வருவாய் தொடர்பாக வருமான வரித்துறையினர் நேற்று முன்தினம் முதல் AGS நிறுவனம் , பிகில் பட விநியோகஸ்தர் அலுவலகம் , பைனான்சியர் அன்புசெழியன் ஆகியோரின் அலுவலகத்தில் சோதனை மேற்கொண்டனர். நடிகர் விஜய் இந்த படத்தில் எவ்வளவு சம்பளம் வாங்கினார் போன்ற விவரங்களை பெற்ற வருமானவரித்துறையினர் விஜய் மற்றும் அவரின் மனைவி சங்கீதாவிடம் வாங்குமூலம் பெற்றனர். தமிழ் திரையுலகை உலுக்கிய இந்த சோதனையில் அன்புசெழியன் மாற்றும் […]
சிம்பு நடிப்பில் உருவாக உள்ள ‘மாநாடு’ படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாகும் தேதி குறித்து தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார். ‘வந்தா ராஜாவாதான் வருவேன்’ படத்திற்குப் பிறகு சிம்பு நடிக்கும் படம் ‘மாநாடு’. வெங்கட் பிரபு இயக்கும் இந்தப்படத்தை சுரேஷ் காமாட்சி தயாரிக்கிறார். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். இந்தப்படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷன் நடிக்கிறார். மூத்த இயக்குநர்களும் நடிகர்களுமான பாரதி ராஜா, எஸ்.ஏ. சந்திரசேகர் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். மேலும், […]
நடிகர் விஜய் வீட்டில் சோதனை நிறைவு பெற்ற நிலையில், நீதிமன்றத்தில் வழக்கு தொடரலாம் என்று பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணிய சுவாமி தெரிவித்துள்ளார். ஏஜிஎஸ் படம் தயாரிப்பு நிறுவனம் , அதேபோல சினிமா பைனான்சியர் அன்புச்செழியன் , பிகில் பட விநியோகஸ்தர்கள் , நடிகர் விஜய் என வீடு அலுவலகங்கள் உட்பட 38 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். கடந்த இரண்டு நாட்களாக இந்த சோதனை நடந்து கொண்டிருக்கிறது. இதில் சினிமா பைனான்சியர் அன்புசெழியனுக்கு […]
நடிகர் விஜய் வீட்டில் வருமானவரித்துறையினர் நடத்திய சோதனை நிறைவு பெற்றுள்ளதாக வருமானவரித்துறையினர் தெரிவித்துள்ளனர். ஏஜிஎஸ் படம் தயாரிப்பு நிறுவனம் , அதேபோல சினிமா பைனான்சியர் அன்புச்செழியன் , பிகில் பட விநியோகஸ்தர்கள் , நடிகர் விஜய் என வீடு அலுவலகங்கள் உட்பட 38 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். கடந்த இரண்டு நாட்களாக இந்த சோதனை நடந்து கொண்டிருக்கிறது. இதில் சினிமா பைனான்சியர் அன்புசெழியனுக்கு சொந்தமான சென்னை , மதுரை ஆகிய இடங்களில் நடந்த […]
நடிகர் விஜய் வீட்டில் தற்போது வரை வருமானவரித்துறை சோதனை நடந்து வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நேற்றும் , இன்றும் தமிழகத்தில் குறிப்பாக சினிமா வட்டாரத்தில் பரபரப்பாக பார்க்கக்கூடிய விஷயம் AGS பட நிறுவனத்தின் ரெய்டு. பிகில் படத்தின் வருவாய் தொடர்பாக எழுந்த முறைகேடுகளால் தமிழகம் முழுவதும் உள்ள 38 இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகின்றது. இந்த சோதனையில் பிகில் பட ASG நிறுவன அலுவலகம் , உரிமையாளர் வீடு , பைனான்சியர் அன்புசெழியன் அலுவலகம் , […]
நடிகர் விஜய்யின் ரசிகர்களை விமர்சனம் செய்யும் வகையில் பாஜக தேசிய செயலாளர் ஹெச். ராஜா தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ளார். நடிகர் விஜய் – அட்லீ கூட்டணியில் கடந்தாண்டு தீபாவளிக்கு வெளியான பிகில் திரைப்படம் ரூ. 300 கோடிக்கும் அதிகமாக வசூலை ஈட்டியதாக சமூக வலைதளங்களில் செய்திகள் வெளியானது. இதனிடையே வரி ஏய்ப்பு புகார் காரணமாக பிகில் படத்தை தயாரித்த ஏ.ஜி.எஸ் நிறுவனம், திரைப்பட ஃபைனான்சியர் அன்புச்செழியன், நடிகர் விஜய்யின் வீடு உள்ளிட்ட இடங்களில் நேற்று […]
நடிகர் விஜய் வீட்டில் வருமானவரித்துறையினர் சோதனை நடத்தி வரும் நிலையில் ரசிகர்கள் ஹாஷ்டாக் ட்ரெண்ட் செய்து கொண்டாடி வருகின்றனர். நேற்றும் , இன்றும் தமிழகத்தில் குறிப்பாக சினிமா வட்டாரத்தில் பரபரப்பாக பார்க்கக்கூடிய விஷயம் AGS பட நிறுவனத்தின் ரெய்டு. பிகில் படத்தின் வருவாய் தொடர்பாக எழுந்த முறைகேடுகளால் தமிழகம் முழுவதும் உள்ள 38 இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகின்றது. இந்த சோதனையில் பிகில் பட ASG நிறுவன அலுவலகம் , உரிமையாளர் வீடு , பைனான்சியர் […]
அச்சுறுத்தல்களுக்கு எல்லாம் தமிழக இளைஞர்களின் நம்பிக்கை நாயகனாக இருக்கிற விஜய் அஞ்சக் கூடாது என்று காங்கிரஸ் தலைவர் கேஎஸ் அழகிரி அறிக்கை மூலம் தெரிவித்துள்ளார். ஏஜிஎஸ் படம் தயாரிப்பு நிறுவனம் , அதேபோல சினிமா பைனான்சியர் அன்புச்செழியன் , நடிகர் விஜய் ஆகியோரின் வீடு அலுவலகங்கள் என 38 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். கடந்த 2 நாட்களாக இந்த சோதனை நடந்து கொண்டிருக்கிறது. இதில் சினிமா பைனான்சியர் அன்புசெழியனுக்கு சொந்தமான சென்னை […]
பிகில் பட வருவாய் தொடர்பான முறைகேட்டில் வருமான வரித்துறை அதிரடி சோதனை மேற்கொண்டு வருகின்றது. பிகில் திரைப்படம் சம்பந்தமான அனைத்து இடங்களிலும் நேற்று காலை இருந்து வருமானவரித்துறையினர் சோதனை செய்துவருகிறது. குறிப்பாக நேற்று தயாரிப்பு நிறுவனமான AGS நிறுவனத்தில் இந்த சோதனை தொடங்கினார்கள். அதை தொடர்ந்து அந்த படத்திற்கு பைனான்ஸ் செய்த அன்புச்செழியன் அலுவலகங்கள் , வீடுகள் போன்ற எல்லா இடங்களிலும் இந்த சோதனை நடைபெற்றது. அதைத் தொடர்ந்து தான் நடிகர் விஜய் படப்பிடிப்பு தளத்திற்கு சென்ற […]
நடிகர் விஜய் பனையூர் வீட்டுக்கு மேலும் இரண்டு வருமானவரித்துறை அதிகாரிகள் வந்துள்ளனர். ஏஜிஎஸ் படம் தயாரிப்பு நிறுவனம் , அதேபோல சினிமா பைனான்சியர் அன்புச்செழியன் , நடிகர் விஜய் ஆகியோரின் வீடு அலுவலகங்கள் என 38 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். கடந்த இரண்டு நாட்களாக இந்த சோதனை நடந்து கொண்டிருக்கிறது. இதில் சினிமா பைனான்சியர் அன்புசெழியனுக்கு சொந்தமான சென்னை , மதுரை ஆகிய இடங்களில் நடந்த சோதனையில் பல்வேறு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டாக […]
முகாந்திரம் இருப்பதால்தான் நடிகர் விஜய் வீட்டில் வருமான வரிச் சோதனை நடப்பதாகவும், அதற்கும் அரசிற்கும் எந்தத் தொடர்பும் இல்லையென்றும் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். சென்னை மாநிலக் கல்லூரியின் 150ஆவது பட்டமளிப்பு விழா சென்னைப் பல்கலைக்கழக நூற்றாண்டு விழா அரங்கில் நடைபெற்றது. இவ்விழாவில் உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி. அன்பழகன், மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், உயர்கல்வித்துறைச் செயலாளர் அபூர்வா ஆகியோர் கலந்துகொண்டு மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினர். இதில் இளங்கலை பட்டப்படிப்பில் 1,600 மாணவர்கள், முதுகலை பட்டப்படிப்பில் 700 மாணவர்கள், […]
நடிகர் விஜயிடம் வருமானவரித் துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஏஜிஎஸ் படம் தயாரிப்பு நிறுவனம் , அதேபோல சினிமா பைனான்சியர் அன்புச்செழியன் , நடிகர் விஜய் ஆகியோரின் வீடு அலுவலகங்கள் என 38 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். கடந்த இரண்டு நாட்களாக இந்த சோதனை நடந்து கொண்டிருக்கிறது. இந்த சூழ்நிலையில் 77 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டதாக வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். குறிப்பாக சினிமா பைனான்சியர் அன்புசெழியனுக்கு சொந்தமான சென்னை […]
பிகில் படம் தொடர்பாக நடைபெற்று வரும் சோதனையில் ரூ 77 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டு இருப்பதாக வருமானவரித்துறையினர் தெரிவித்துள்ளனர். ஏஜிஎஸ் படம் தயாரிப்பு நிறுவனம் , அதேபோல சினிமா பைனான்சியர் அன்புச்செழியன் , நடிகர் விஜய் ஆகியோரின் வீடு அலுவலகங்கள் என 38 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். கடந்த இரண்டு நாட்களாக இந்த சோதனை நடந்து கொண்டிருக்கிறது. இந்த சூழ்நிலையில் 77 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டதாக வருமான வரித்துறை அதிகாரிகள் […]
பிகில் படத்தின் சம்பளமாக நடிகர் விஜய் 30 கோடி பெற்றதாக வருமானவரித்துறையினர் தெரிவித்துள்ளனர். நேற்று காலை முதல் வருமானத்துறையினர் AGS நிறுவனத்தின் வீடு , அலுவலகம் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடத்தினர். சுமார் 200 அதிகாரிகள் பங்கேற்ற இந்த சோதனை நடிகர் விஜய்யையும் விட்டு வைக்கவிலை. பிகில் படத்தில் நடித்ததற்காக ரூ 50 கோடி வாங்கினார் என்ற தகவலை தொடர்ந்து நடிகர் விஜயை விசாரிக்க, கடலூர் மாவட்டம் நெய்வேலியில் நடந்த மாஸ்டர் படப்பிடிப்பு தளத்துக்கு […]
பிகில் திரைப்பட பைனான்சியர் அன்புச்செழியனின் நண்பர் வீட்டிலிருந்து ரூ 15 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. GS நிறுவனம் சார்பில் தயாரிக்கப்பட்ட படம் பிகில். AR முருகதாஸ் இயக்கிய இப்படத்தில் நடிகர் விஜய் , நயன்தாரா , கதிர் யோகிபாபு உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். கடந்த தீபாவளிக்கு வெளியான இந்த படம் நல்ல வசூல் குவித்தது . இந்த வசூல் குறித்து பட தயாரிப்பு நிறுவனம் அதிகாரபூர்வமாக தெரிவித்த கருத்தும் , வருமானவரித்துறையிடம் கணக்கு காட்டிய கணக்கும் […]
இயக்குனர் AR முருகதாஸ் வீட்டுக்கு பாதுகாப்பு கொடுப்பது தொடர்பாக காவல்துறை பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் பொங்கலுக்கு வெளியான படம் தர்பார். AR முருகதாஸ் இயக்கிய இந்த படம் விநியோகஸ்தருக்கு நஷ்டம் என்று சொல்லப்படுகின்றது. இதையடுத்து பட வினியோகஸ்தர்கள் எங்களுக்கு ரஜினி , முருகதாஸ் இழப்பீடு வழங்க வேண்டுமென்று கோரிக்கை வைத்து வருவது தமிழ் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விநியோகஸ்தர்களும் நடிகர் ரஜினி , இயக்குனர் முருகதாஸ்சை தங்களால் சந்திக்க முடியவில்லை என்று தொடர்ந்து […]
பிகில் பட பைனான்சியர் அன்பு செழியன் வீட்டில் 65 கோடி கைப்பற்றப்பட்ட்தாக தகவல் வெளியாகியுள்ளது. AGS நிறுவனம் சார்பில் தயாரிக்கப்பட்ட படம் பிகில். AR முருகதாஸ் இயக்கிய இப்படத்தில் நடிகர் விஜய் , நயன்தாரா , கதிர் யோகிபாபு உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். கடந்த தீபாவளிக்கு வெளியான இந்த படம் நல்ல வசூல் குவித்தது . இந்த வசூல் குறித்து பட தயாரிப்பு நிறுவனம் அதிகாரபூர்வமாக தெரிவித்த கருத்தும் , வருமானவரித்துறையிடம் கணக்கு காட்டிய கணக்கும் தவறாக இருந்தது என்ற […]
ரிக்கி பர்செல் இயக்கியுள்ள ‘ட்ராப் சிட்டி’ என்ற ஹாலிவுட் படத்தில் நடிகர்கள் நெப்போலியன், ஜி.வி.பிரகாஷ் இணைந்து நடித்துள்ளனர். தமிழ் திரையுலகில் கிழக்குச் சீமையிலே, சீவலப்பேரி பாண்டி, எஜமான், போக்கிரி, சீமராஜா உள்ளிட்ட பல வெற்றி படங்களில் நடித்து தமிழ் திரையுலகின் மிக முக்கிய நடிகர்களில் ஒருவராக இருக்கும் நெப்போலியன் ஹாலிவுட்டில் ஏற்கனவே சில படங்களில் நடித்துள்ளார். அமெரிக்காவில் வசித்துவரும் அவர், ஹாலிவுட் படங்களில் அடுத்தடுத்து நடித்து வருகிறார். தற்போது முதன் முறையாக ஜி.வி.பிரகாஷ் உடன் இணைந்து ஹாலிவுட் […]
‘மெட்ராஸ்’ படத்துக்குப் பின் தான் 4 படங்களில் ஒப்பந்தமானதாகவும் ஆனால் அவை அனைத்தும் கைவிடப்பட்டதாகவும் நடிகர் கலையரசன் கூறியுள்ளார். திருக்குமரன் என்டெர்டெயின்மெண்ட் நிறுவனம் சார்பில் சிவி வி குமார் தயாரிக்கும் படம் ‘டைட்டானிக் காதலும் கவுந்து போகும்’. அறிமுக இயக்குநர் ஜானகிராமன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படத்தில் கலையரசன் நாயகனாக நடிக்கிறார். இவருடன் ஆனந்தி, ஹரிகிருஷ்ணன், காளி வெங்கட் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். நிவாஸ் கே பிரசன்னா இசையமைத்துள்ள இப்படத்தின் இசை வெளியிட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. […]
5, 8ஆம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளதற்கு நடிகர் தனுஷ் வரவேற்பு தெரிவித்துள்ளார். 5, 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 2019-2020ஆம் ஆண்டு முதல் பொதுத் தேர்வு நடத்துவது தொடர்பாக கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 13ஆம் தேதி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டது. இந்த விவகாரத்தில் அரசின் முடிவுக்கு கல்வியாளர்கள், பெற்றோர்கள், அரசியல் கட்சியினர் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இந்த முடிவை அரசு திரும்பப் பெறவும் வலியுறுத்தப்பட்டுவந்தது. இந்த நிலையில், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், […]
5, 8ஆம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளதற்கு நடிகர் சூர்யா வரவேற்பு தெரிவித்துள்ளார். 5, 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 2019-2020ஆம் ஆண்டு முதல் பொதுத் தேர்வு நடத்துவது தொடர்பாக கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 13ஆம் தேதி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டது. இந்த விவகாரத்தில் அரசின் முடிவுக்கு கல்வியாளர்கள், பெற்றோர்கள், அரசியல் கட்சியினர் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இந்த முடிவை அரசு திரும்பப் பெறவும் வலியுறுத்தப்பட்டுவந்தது. இந்த நிலையில், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், […]
நடிகர் விஜய்யிடம் வருமானவரித்துறையினரிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். AGS நிறுவனம் சார்பில் தயாரிக்கப்பட்ட படம் பிகில். AR முருகதாஸ் இயக்கிய இப்படத்தில் நடிகர் விஜய் , நயன்தாரா , கதிர் யோகிபாபு உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். கடந்த தீபாவளிக்கு வெளியான இந்த படம் நல்ல வசூல் குவித்தது . இந்த வசூல் குறித்து பட தயாரிப்பு நிறுவனம் அதிகாரபூர்வமாக தெரிவித்த கருத்தும் , வருமானவரித்துறையிடம் கணக்கு காட்டிய கணக்கும் தவறாக இருந்தது என்ற புகாரையடுத்து AGS […]
AGS நிறுவனத்தில் வருமானவரித்துறை நடந்திய சோதனையில் ரூ 25 கோடி கைப்பற்றப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. AGS நிறுவனம் சார்பில் தயாரிக்கப்பட்ட படம் பிகில். AR முருகதாஸ் இயக்கிய இப்படத்தில் நடிகர் விஜய் , நயன்தாரா , கதிர் யோகிபாபு உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். கடந்த தீபாவளிக்கு வெளியான இந்த படம் நல்ல வசூல் குவித்தது . இந்த வசூல் குறித்து பட தயாரிப்பு நிறுவனம் அதிகாரபூர்வமாக தெரிவித்த கருத்தும் , வருமானவரித்துறையிடம் கணக்கு காட்டிய கணக்கும் தவறாக […]
நடிகர் விஜய்யின் இரண்டு இல்லத்திலும் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருவது ரசிகர்களை கதிகலங்க வைத்துள்ளது. நடிகர் விஜய் நடித்த பிகில் படம் தீபாவளிக்கு வெளியாகி நல்ல வசூல் வேட்டை நடத்தியது. இந்த படத்திற்கு மக்களிடம் இருந்த அமோக ஆதரவால் கோடிக்கணக்கில் நல்ல லாபம் கிடைத்தது. இதனை அப்படத்தின் தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்து. மேலும் இந்த படத்தில் நடிகராக நடித்த விஜய்க்கு 50 கோடி ஊதியமாக கொடுக்கப்பட்டதாக சொல்லப்படுகின்றது. இந்நிலையில் இன்று காலை முதல் தமிழகத்தில் […]
நடிகர் விஜய்க்கு சொந்தமான இரண்டு வீட்டில் வருமானவரித்துறையினர் சோதனை நடத்தி வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நடிகர் விஜய் நடித்த பிகில் படம் தீபாவளிக்கு வெளியாகி நல்ல வசூல் வேட்டை நடத்தியது. இந்த படத்திற்கு மக்களிடம் இருந்த அமோக ஆதரவால் கோடிக்கணக்கில் நல்ல லாபம் கிடைத்தது. இதனை அப்படத்தின் தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்து. மேலும் இந்த படத்தில் நடிகராக நடித்த விஜய்க்கு 50 கோடி ஊதியமாக கொடுக்கப்பட்டதாக சொல்லப்படுகின்றது. இந்நிலையில் இன்று காலை முதல் தமிழகத்தில் AGS […]
சென்னை சாலிகிராமம் , நீலாங்கரையில் உள்ள விஜயின் வீட்டில் வருமானவரித்துறை சோதனை நடைபெறுவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. திரைப்பட தயாரிப்பாளர் கல்பாத்தி அகோரம் வீட்டுக்கு சொந்தமான வீடு , அலுவலகம் என்று காலையில் இருந்து வருமான பரிசோதனை சோதனை நடந்து கொண்டிருக்கிறது. பிகில் திரைப்படம் தொடர்பாக இந்த சோதனை நடத்தப்பட்டு வருவதாகவும் தகவல் தெரியவந்துள்ளது. பிகில் படத்தில் நடித்த விஜய்யிடம் நேரடியாக சென்று வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி இருக்கிறார்கள். நெய்வேலியில் மாஸ்டர் திரைப்படத்தின் படப்பிடிப்பு படப்பிடிப்பு […]
நடிகர் விஜய்யிடம் வருமான வரித்துறையினர் விசாரணை மேற்கொண்ட நிலையில் அவரை அழைத்து சென்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் AGS நிறுவனத்திற்கு சொந்தமான வீடு , நிறுவனம் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட பகுதிகளில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். நடிகர் விஜய் AGS நிறுவனம் சார்பில் தயாரிக்கப்பட்ட பிகில் படத்தில் நடித்ததால் நடிகர் விஜய்யிடமும் வருமான வரித்துறையினர் விசாரணையை நடத்தி வருகின்றனர். கடலூர் மாவட்டத்தில் உள்ள வரும் நெய்வேலி நிலக்கரி சுரங்கத்தில் நடிகர் விஜய் நடித்துவரும் மாஸ்டர் […]
நடிகர் விஜய்யிடம் சம்மன் அளித்து வருமான வரித்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் AGS நிறுவனத்திற்கு சொந்தமான வீடு , நிறுவனம் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட பகுதிகளில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். நடிகர் விஜய் AGS நிறுவனம் சார்பில் தயாரிக்கப்பட்ட பிகில் படத்தில் நடித்ததால் நடிகர் விஜய்யிடமும் வருமான வரித்துறையினர் விசாரணையை நடத்தி வருகின்றனர். கடலூர் மாவட்டத்தில் உள்ள வரும் நெய்வேலி நிலக்கரி சுரங்கத்தில் நடிகர் விஜய் நடித்துவரும் மாஸ்டர் படத்தின் […]
நகைச்சுவை நடிகர் யோகிபாபுவுக்கு இன்று காலை உறவினர்கள், நண்பர்கள் முன்னிலையில் திருமணம் நடைபெற்றது. நகைச்சுவை நடிகர் யோகிபாபு மஞ்சு பார்கவி என்ற பெண்ணை இன்று (05-02-2020) திருமணம் செய்துகொண்டார். அவரது குலதெய்வக் கோயிலில் மஞ்சு பார்கவிக்கும் யோகிபாபுவுக்கும் நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் முன்னிலையில் திருமணம் முடிந்தது. தனது திருமணப் புகைப்படத்தை பகிர்ந்துள்ள யோகிபாபு, வரும் மார்ச் மாதம் சென்னையில் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெறவுள்ளது என தெரிவித்திருக்கிறார். முன்னதாக, கடந்த சில மாதங்களுக்கு முன்பு சின்னத்திரை நடிகை சபீதா […]
கிரிக்கெட் வீரராக இந்திய அணியில் விளையாடுவது எனது கனவாக இருந்தது. பாடலாசிரியராக வருவேன் என்று கனவிலும் நினைத்ததில்லை என ‘வானம் கொட்டட்டும்’ பாடலாசிரியர் சிவா ஆனந்த் கூறியுள்ளார். இயக்குநர் மணிரத்னம் தயாரிப்பில் தனா இயக்கத்தில் விக்ரம் பிரபு, ஐஸ்வரயா ராஜேஷ் நடிப்பில் உருவாகியுள்ள படம் வானம் கொட்டட்டும். மேலும் இவர்களுடன் சரத்குமார், ராதிகா சரத்குமார், மடோனா செபாஸ்டின், சாந்தனு உள்ளிட்டோர் நடித்துள்ளனர். பிப்ரவரி 7ஆம் தேதி இப்படம் வெளியாகவுள்ளது. இப்படத்தின் மூலம் பாடகர் சித் ஸ்ரீராம் இசையமைப்பாளராக […]
பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகையாக வலம்வந்த பர்வீன் பாபியின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு உருவாகும் வெப் சீரிஸில் நடிக்கும் நடிகர்கள், நடிகைகள் பற்றிய அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. பாலிவுட் திரையுலகில் 1970-களில் முன்னணி நடிகையாகத் திகழ்ந்த பர்வீன் பாபியின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்ட வெப் சீரிஸில் நடிகை அமலாபால் நடிக்கவிருப்பது உறுதியாகியுள்ளது. பாலிவுட்டின் முன்னணி இயக்குநர் மகேஷ் பட் இயக்கும் இந்த வெப் சீரிஸில் பர்வீன் பாபி கதாபாத்திரத்தில் அமலாபால் நடிக்கிறார். இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை […]
சூர்யாவின் அடுத்தப் படத்தில், நடிகை ராஷ்மிகா நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள ‘சூரரைப் போற்று’ படத்தை, சுதா கொங்கரா இயக்கியுள்ளார். அப்படத்தின் இறுதிகட்டப் பணிகள் அனைத்தும் முடிந்த நிலையில், கோடை விடுமுறைக்குப் படம் வெளியாகவுள்ளதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து சூர்யா, ஹரி இயக்கத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். சூர்யாவின் 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனம், தயாரிக்கவுள்ள இப்படத்தின் முதல்கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இதில் சூர்யாவுக்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. […]
விமல் நடித்து வரும் சோழ நாட்டான் படத்தின் முதல் பாடல் விரைவில் வெளியாகவுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. நடிகர் விமல் வரலாற்று கதைக்களத்தில் நடித்துவரும் படம் சோழ நாட்டான். முழுக்க முழுக்க ஆக்ஷன் த்ரில்லராக உருவாகும் இப்படத்தை ரஞ்சித் கண்ணா இயக்குகிறார். வரலாற்றை அடிப்படையாக கொண்ட கதையில் விமல் நடிக்கும் முதல் படம் ‘சோழ நாட்டான்’ ஆகும். இந்நிலையில் அடுத்தகட்ட படப்பிடிப்பிற்காக படக்குழு சத்தியமங்கலம், மலைப்பகுதிக்கு செல்லவுள்ளனர். இதையடுத்து தஞ்சாவூர், ஹைதராபாத், வைசாக் போன்ற இடங்களில் படப்பிடிப்பு நடத்த […]
இயக்குநர் கார்த்திக் நரேன் தனுஷை வைத்து #D43 படத்தை இயக்கவிருப்பதாக அதிகராப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது. தனுஷ் தற்போது இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ‘சுருளி’, மாரி செல்வராஜ் இயக்கத்தில் ‘கர்ணன்’ என பிஸியாக இருக்கிறார். இதனையடுத்து தனுஷின் 43ஆவது படத்தை இயக்குநர் கார்த்திக் நரேன் இயக்கவிருப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. தற்காலிகமாக ‘#D43’ என தலைப்பு வைத்துள்ள இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார். சத்யா ஜோதி ஃபிலிம்ஸ் தயாரிக்கும் இத்திரைப்படம் இந்தாண்டு அக்டோபர் மாதம் வெளியாகும் என […]
நடிகை பிரணிதா தான் 108 முறை சூரிய நமஸ்காரம் செய்துள்ள வீடியோவை வெளியிட்டுள்ளார். திரையுலகில் உள்ள நடிகைகள் பலரும் தங்களது உடலை கச்சிதமாக வைத்துக்கொள்வதில் ஆர்வமுடையவர்கள். இதற்காக படப்பிடிப்பு இல்லாத நேரத்தில் உடற்பயிற்சி செய்வது, யோகா செய்வது என்று எப்போதும் தங்களை பிஸியாக வைத்துள்ளனர். அந்த வகையில் நடிகை பிரணிதா, 108 முறை சூரிய நமஸ்காரம் செய்யும் வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில், ‘108 சூரிய நமஸ்காரம் செய்துள்ளேன். ரத சப்தமி என்பது பருவத்தை […]
நடிகர் சிம்பு தனது நண்பரும், நடிகருமான மகத் திருமணத்திற்கு நேரில் சென்று வாழ்த்து தெரிவித்துள்ளார். தமிழ் சினிமாவில் வல்லவன், காளை உள்ளிட்ட படங்களில் சிறிய வேடத்தில் நடித்திருந்த மகத், அஜித்தின் மங்காத்தா படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். நடிகர் சிம்புவின் நெருங்கிய நண்பரான இவர், பிக்பாஸ் 2 நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். அந்நிகழ்ச்சியில் பங்கேற்றபோது அவரும், சக போட்டியாளரும், நடிகையுமான யாஷிகாவும் காதலிப்பதாக கிசுகிசுக்கப்பட்டது. இதனால் கோபமடைந்த மகத்தின் காதலியும், மாடல் அழகியுமான பிராச்சி மிஸ்ரா, மகத்துடன் பிரேக்அப் […]
நடிகை ஹேம மாலினி பிகார் மாநிலத்தின் கயாவில் அமைந்துள்ள புத்தர் கோயிலில் வழிபாடு செய்தார். பிரபல நடிகையும் பரதநாட்டியக் கலைஞருமான ஹேம மாலினி இந்தி, தெலுங்கு, தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்து பிரபலமடைந்தவர். தமிழில் ‘இது சத்தியம்’, ‘ஹேராம்’ ஆகிய படங்களில் நடித்துள்ள இவர், அடுத்ததாக அஜித் நடிக்கும் ‘வலிமை’ படத்தில் அவருக்கு தாயாக நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. 71 வயதாகும் நடிகை, நேற்று பிகார் மாநிலம் கயாவில் உள்ள பிரசித்தி […]
மலை, மழை மீது நம்பிக்கை வைத்து சைக்கோ படம் உருவாக்கப்பட்டதாக இயக்குநர் மிஷ்கின், சைக்கோ படம் குறித்து மனம்திறந்து பேசினார். மிஷ்கின் இயக்கத்தில் கடந்த வாரம் வெளியான சைக்கோ திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. உதயநிதி ஸ்டாலின், நித்யா மேனன் உள்ளிட்டோர் இதில் நடித்துள்ளனர். இந்த நிலையில் இப்படத்தின் வெற்றிவிழா நேற்று சென்னையில் உள்ள பிரசாத் லேபில் நடைபெற்றது. இதில் உதயநிதி ஸ்டாலின், நித்யா மேனன், மிஷ்கின் ஆகியோர் கலந்து கொண்டனர். அப்போது நிகழ்ச்சியில் இயக்குநர் […]
இயக்குநர் மிஷ்கின் தன்னை ஒரு குழந்தைப்போல பெற்றுக்கொண்டதாக நடிகை நித்யா மேனன் தெரிவித்துள்ளார். உதயநிதி ஸ்டாலின், நித்யா மேனன் நடிப்பில் கடந்த வாரம் வெளியான படம் சைக்கோ. மிஷ்கின் இயக்கியுள்ள இப்படம் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பு பெற்று திரையரங்கத்தில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டு வருகிறது.இதையடுத்து இதைக் கொண்டாடும்விதமாக, சைக்கோ படத்தின் சக்சஸ் மீட் நேற்று சென்னை பிரசாத் லேபில் நடைபெற்றது. இவ்விழாவில் பேசிய நடிகை நித்யா மேனன், “சைக்கோ திரைப்படம் வெற்றிப்படமாக அமைந்தால் மகிழ்ச்சி அடைவேன். நல்ல கதையம்சம் […]