Categories
சினிமா தமிழ் சினிமா

வீட்டிலேயே பின்னணி இசையை உருவாக்கி வரும் இளையராஜா …!!!

விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகி வரும் ‘தமிழரசன்’ படத்திற்காக வீட்டிலேயே பின்னணி இசையை உருவாக்கி வருகிறார் இளையராஜா. விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘தமிழரசன்’. இதில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக ரம்யா நம்பீசன் நடித்துள்ளார். இளையராஜா இசையமைத்து வரும் இப்படத்தை பாபு யோகேஸ்வரன் இயக்கியுள்ளார். எஸ்.என்.எஸ் மூவிஸ் சார்பில் கொளசல்யா ராணி தயாரித்து வருகிறார். இப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா தற்போது நடைபெற்றது. தற்போது பின்னணி இசை கோர்ப்பு நடந்து வருகிறது. இதுவரை இளையராஜா ஒரு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

மீண்டும் அண்ணன் தயாரிப்பில் தம்பி …!! ரசிகர்கள் எதிர்பார்ப்பு …!!!

நடிகர் கார்த்தி நடிக்கும் புதிய படத்தை சூர்யாவின் 2டி என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழில் முன்னணி நடிகராக இருக்கும் சூர்யா, நடிப்பதோடு மட்டுமில்லாமல் படங்களை தயாரிப்பதிலும் கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில் இவர் தயாரித்த” 36 வயதினிலே, பசங்க 2, 24, உறியடி 2″ ஆகிய படங்கள் நல்ல வரவேற்பை பெற்றன. இதேபோல் கார்த்தி நடித்து வெற்றி பெற்ற `கடைக்குட்டி சிங்கம்’ படத்தையும் சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரித்திருந்தது. அந்த படம் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஜீவா நடிக்கும் “சீறு” படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு …!!!

ரத்தின சிவா இயக்கத்தில் ஜீவா, ரியா சுமன் நடிப்பில் உருவாகி வரும் ‘சீறு’ படத்தின் அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. விஜய் சேதுபதியின் றெக்க படத்தை இயக்கிய ரத்தின சிவா, அடுத்ததாக இயக்கி இருக்கும் படம் ‘சீறு’. ஜீவா நாயகனாக நடித்துள்ள இப்படத்தை வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் சார்பில் ஐசரி கணேசன் தயாரித்திருக்கிறார். ஜீவாவிற்கு ஜோடியாக ரியா சுமன் நடித்துள்ளார். டி.இமான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இப்படத்தில் இடம்பெறும் செவ்வந்தியே பாடல் தற்போது வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. குடும்பங்கள் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

7 மொழிகளில் உருவாகும் சமுத்திரக்கனி படம் …!!!

பிரபல நடிகரும், இயக்குனருமான சமுத்திரக்கனி, அடுத்ததாக நடிக்கும் படம் 7 மொழிகளில் உருவாக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. தமிழ் படங்களில் போராளியாகவும், நல்ல ஆசிரியராகவும், விவசாயியாகவும் நடித்து தனக்கென ஒரு நல்ல இடத்தை உருவாக்கி வைத்திருக்கும் சமுத்திரக்கனி, தெலுங்கில் அடுத்தடுத்து வில்லனாக நடிக்க ஒப்பந்தமாகி வருகிறார். பாகுபலி படத்திற்கு பிறகு எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கும் ஆர்ஆர்ஆர் படத்தில் சமுத்திரக்கனி வில்லனாக நடித்து வருகிறார். இதேபோல், அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘அல வைகுந்தபுராமுலு’ படத்திலும் அவர் வில்லனாக நடித்திருக்கிறார். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

மாமனாருடன் சேர்ந்து இறங்கும் தனுஷ்… ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்..!!

வரும் பொங்கல் பண்டிகையையொட்டி ‘தர்பார்’, ‘பட்டாஸ்’ ஆகிய இரு படங்கள் வெளியாவதைத் தொடர்ந்து தனுஷ் ரசிகர்களுக்கு ‘பட்டாஸ்’ படக்குழு ஸ்பெஷல் சர்ப்ரைஸ் ஒன்றை அளிக்கவுள்ளது.     பொங்கலுக்கு ரஜினியின் ‘தர்பார்’, தனுஷின் ‘பட்டாஸ்’ என இரு படங்களும் மோதுகின்றன. இதனால் ஒரே குடும்பத்தில் போட்டி நிழவுவதாக சமூக வலைதளங்களில் பேசப்பட்டது. இந்நிலையில் ‘தர்பார்’ திரைப்படம் 9ஆம் தேதியிலும், ‘பட்டாஸ்’ திரைப்படம் 16ஆம் தேதியிலும் வெளியாகும் தகவலையடுத்து தனுஷ் ரசிகர்களுக்கு ‘பட்டாஸ்’ படக்குழு ஸ்பெஷல் சர்ப்ரைஸ் ஒன்றை அளிக்க […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

ஒத்த செருப்பை அணியப்போகும் நவாசுதீன்..!!

ஒத்த செருப்பு சைஸ் 7 திரைப்படத்தின் இந்தி ரீமேக்கில் நடிக்க நடிகர் நவாசுதீன் சித்திக்குடன் பேச்சுவார்த்தை நடப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. நடிகரும் இயக்குநருமான ரா. பார்த்திபன் கடந்த ஆண்டு இயக்கி நடித்த ஒத்த செருப்பு சைஸ் 7 திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவை அடுத்த தரத்துக்கு எடுத்துச் சென்றுள்ளார் என்று இயக்குநர் பாரதிராஜா புகழ்ந்தார். ஒரே ஒரு கதாபாத்திரம் மட்டுமே நடிக்கும் ஒத்த செருப்பு சைஸ் 7 திரைப்படத்துக்காக பல விருதுகளையும் குவித்தார் ரா. பார்த்திபன். இதையடுத்து […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘தர்பார்’ திரைப்படத்திற்கு சான்றிதழ் வழங்கிய தணிக்கை குழு.!

ஏ. ஆர். முருகதாஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘தர்பார்’ திரைப்படத்திற்கு தணிக்கை குழு சான்றிதழ் வழங்கியுள்ளது. ஏ. ஆர். முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளியாக இருக்கும் திரைப்படம் ‘தர்பார்’. இந்த படத்தில் நடிகர் ரஜினிக்கு ஜோடியாக நடிகை நயந்தாரா நடிக்கிறார். மேலும் சுனில் ஷெட்டி , நிவேதா தாமஸ் , யோகி பாபு , தம்பி ராமையா , ஸ்ரீராம் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

விஸ்வாசம் ஸ்டைலில் தலைவர் 168 பட பாடல் …!!!

சிவா இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகி வரும் ‘தலைவர் 168’ படத்தில் அஜித்தின் விஸ்வாசம் ஸ்டைலில் ஒரு பாடல் உருவாக்கி இருக்கிறார்கள். ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள ‘தர்பார்’ திரைப்படம் ஜனவரி 9-ந் தேதி வெளியாக உள்ளது. இதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ள இப்படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது. சமீபத்தில் சிவா இயக்கத்தில் உருவாகும் படத்தில் கவனம் செலுத்தி வருகிறார் ரஜினி. இந்த படத்தில் குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ், சூரி, பிரகாஷ்ராஜ், சதீஷ் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

மீண்டும் இணையும் சிவகார்த்திகேயன் பாண்டியராஜ் கூட்டணி …!!!

இயக்குநர் பாண்டியராஜ் சிவகார்த்திகேயனை வைத்து படம் இயக்க தயாராகி கொண்டிருக்கிறார் . பாண்டியராஜ் இயக்கிய மெரினா படத்தில் நாயகனாக அறிமுகமானவர் சிவகார்த்திகேயன் .அதன் பிறகு அவரது இயக்கத்தில் கேடிபில்லா கில்லாடி ரங்கா ,நம்ம வீட்டு பிள்ளை ஆகிய படங்களில் நடித்தார் சிவகார்த்திகேயன் .இந்த மூன்று படங்களும் அவருக்கு வெற்றியாகவே அமைந்தது . இந்தநிலையில் ,மீண்டும் சிவகார்த்திகேயனை வைத்து ஒரு படம் இயக்க தயாராகிக் கொண்டிருக்கிறார் பாண்டிய ராஜ் .இந்த படத்தையும் நம்ம வீட்டு பிள்ளை படத்தை தயாரித்த […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகர் ரஜினி படம் ரிலீஸ் தேதி மாற்றம் …!!!

தமிழில் முன்னணி நடிகராக இருக்கும் ரஜினிகாந்த், அடுத்ததாக நடித்து வரும் படத்தின் ரிலீஸ் தேதியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள ‘தர்பார்’ திரைப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வருகிற 9-ந் தேதி வெளியாக இருக்கிறது. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ள இப்படத்தில் நயன்தாரா, நிவேதா தாமஸ், யோகிபாபு, சுனில் ஷெட்டி உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். அனிருத் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இப்படத்தை தொடர்ந்து ரஜினி நடிக்கும் 168-வது படத்தின் படப்பிடிப்பு தொடங்கி நடைபெற்று வருகிறது. சிவா இயக்கும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சூர்யாவுடன் மீண்டும் இணைந்த ஜி வி பிரகாஷ் ….ரசிகர்கள் எதிர்பார்ப்பு …!!!

சூரரைப்போற்று படத்தை அடுத்து சூர்யா நடிப்பில் உருவாக இருக்கும் புதிய படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்க இருக்கிறார். சூர்யா நடிப்பில் சமீபத்தில்  சூரரைப் போற்று திரைப்படம் உருவாகியுள்ளது. சுதா கொங்கரா இயக்கியுள்ள இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து தற்போது பின்னணி வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்து வருகிறார். இப்படத்தை அடுத்து வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிக்க இருக்கிறார். வி.கிரியேஷன்ஸ் சார்பாக கலைப்புலி தாணு தயாரிக்கும் இப்படம் சூர்யாவின் 40வது படமாகும். இதற்கான அறிவிப்பு தற்போது  வெளியானது. […]

Categories
இந்திய சினிமா சினிமா

வாடகை வீட்டில் வசிக்கும் தீபிகா படுகோன் …!!!

பாலிவுட்டில் முன்னணி நடிகையாக இருக்கும் தீபிகா படுகோன், தான் வசிக்கும் வீட்டுக்கு மாதம் 8 லட்சம் ரூபாய் வாடகை கொடுத்து வருகிறார். இந்தி சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் தீபிகா படுகோன்.இவர் இந்தி நடிகர் ரன்வீர் சிங்கை திருமணம் செய்து கொண்டுள்ளார். தீபிகா படுகோன் அவரது கணவர் ரன்வீர் சிங் இருவரும் மும்பையின் பிரபாதேவி பகுதியில் உள்ள பீனாமண்ட் டவர் என்ற அடுக்குமாடி குடிருப்பில் ஒரு பிளாட்டை வாடகைக்கு எடுத்துள்ளனர். அதன் ஒரு மாத வாடகை மட்டும் 7.25 […]

Categories
சினிமா தமிழ் சினிமா

முதல் முழு நீள சிங்கிள் ஷாட் படம்! – அசரவைக்கும் பார்த்திபன்

இயக்குநர் பார்த்திபன் தான் இயக்கி நடிக்கும் அடுத்த படம் குறித்தான தகவலை வெளியிட்டார். அந்தப் படம் முழுவதும் ஒரே ஷாட்டில் எடுக்கப்போவதாகவும் அதிகாரப்பூர்வ அறிக்கையை வெளியிட்டுள்ளார். இந்த ஆண்டு வெளியான ‘ஒத்த செருப்பு சைஸ் 7′ திரைப்படத்தை இயக்கி நடித்த இயக்குநர் பார்த்திபன் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றார்.எப்போதும் புதிய முயற்சியில் ஈடுபடும் பார்த்திபன் தான் இயக்கி நடிக்கும் அடுத்த படம் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.’இரவின் நிழல்’ என பெயரிடப்பட்ட அந்த படத்தை பார்த்திபன் ஒரே ஷாட்டில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சூரனின் செகண்ட் லுக் போஸ்டா் ரிலீஸ்.!!

நடிகர் சூர்யாவின் ‘சூரரைப் போற்று’ திரைப்படத்தின் செகண்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டது. 2டி என்டர்டெயின்மன்ட் தயாரிப்பில் சூர்யா நடிக்கும் திரைப்படம் ‘சூரரைப் போற்று’. இப்படத்தினை ‘இறுதிச்சுற்று’ திரைப்படத்தை இயக்கிய சுதா கொங்கரா இயக்குகிறார். இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ஏற்கனவே வெளியான நிலையில், புத்தாண்டு ட்ரீட்டாக படத்தின் செகண்ட் லுக் போஸ்டரை நடிகர் சூர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார். விஜய் நடித்துவரும் ‘மாஸ்டர்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானதைத் தொடர்ந்து சூர்யாவின் ‘சூரரைப் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

துப்புரவுத் தொழிலாளர்களுடன் புத்தாண்டை கொண்டாடிய கௌதமி.!!

புத்தாண்டு தினத்தை முன்னிட்டு நடிகை கௌதமி துப்புரவுத் தொழிலாளர்களைச் சந்தித்து பரிசுப்பொருள்களை வழங்கி புத்தாண்டை கொண்டாடி மகிழ்ந்தார். தமிழ் திரையுலகில் 1980களின் இறுதியில் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்தவர் நடிகை கௌதமி. ரஜினி, கமல், சத்யராஜ், ராமராஜன், விஜயகாந்த் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் பலருடனும் ஜோடி சேர்ந்துள்ளார். திரைப்பயணம் தவிர்த்து புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மறுவாழ்வு அளிக்கும் மையமான ‘லைஃப் அகைன்’ என்ற தொண்டு நிறுவனத்தையும் நடத்திவருகிறார். படத்தின் மூலம் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை, வாழ்க்கையின் முக்கியத்துவம், தன்னம்பிக்கை, […]

Categories
சினிமா தமிழ் சினிமா

புலி வேட்டைக்குத் தயாராகிய ‘ரேஞ்சர்’ சிபிராஜ்

சிபிராஜ் நடிப்பில் தரணிதரன் இயக்கும் ‘ரேஞ்சர்’ திரைப்படம் பற்றிய புதிய அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. நடிகர் சிபிராஜ் நடிப்பில், ஜாக்சன் துரை, ராஜா ரங்குஸ்கி படங்களின் இயக்குநர் தரணிதரனின் இயக்கத்தில், உருவாகிவரும் படம் ‘ரேஞ்சர்’. மகாராஷ்டிரா மாநிலம் யாவாத்மல் மாவட்டத்தில் மனிதர்களைக் கொன்று தின்று மாமிச வேட்டையாடிவந்த அவ்னி எனும் புலி நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. அந்தச் சம்பவத்தை கதைக்களமாகக்கொண்டு இந்தப் படம் உருவாகிவருகிறது. இதில் ரம்யா நம்பீசன், மதுஷாலினி, காளி வெங்கட் உள்ளிட்ட பலரும் முக்கியக் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஸ்டார் நடிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்த சுசீந்திரன்.!!

ரஜினி, கமல், விஜய், அஜித் ஆகியோர் தங்களது ரசிகர்களுக்குப் புத்தாண்டு ஏற்படும் விபத்து குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தவேண்டும் என இயக்குநர் சுசீந்திரன் வேண்டுகோள் விடுத்துள்ளார். ஆங்கிலப் புத்தாண்டு பிறக்க உள்ள நிலையில் சினிமா துறை சார்ந்த பிரபலங்கள் தங்கள் வாழ்த்துகளை மக்களுக்குத் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் இயக்குநர் சுசீந்திரன் வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார். அதில் இதுவரை நடந்த புத்தாண்டுக் கொண்டாட்டத்தில் பல்லாயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர் என்று குறிப்பிட்டுள்ளார். 2020ஆம் புத்தாண்டிலாவது யாரும் விபத்தினால் மரணம் அடையக்கூடாது என்று […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ரஞ்சித் ஜெயக்கொடியின் அடுத்த த்ரில்லர் ரெடி.!!

இயக்குநர் ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கிவரும் த்ரில்லர் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. நடிகர் விஜய் சேதுபதி நடித்த ‘புரியாத புதிர்’, ஹரீஷ் கல்யாண் நடித்த ‘இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்’ போன்ற திரைப்படங்களை இயக்கிய ரஞ்சித் ஜெயக்கொடி, அடுத்ததாக தனது தர்ட் ஐ என்டர்டெயின்மென்ட் சார்பில் தயாராகும் பெயரிடப்படாத படத்தை இயக்கிவருகிறார். தற்போது இந்தப் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. இது குறித்து இயக்குநர் ரஞ்சித் ஜெயக்கொடி, ஊட்டியில் பனிசூழ்ந்த சுற்றுப்புற சூழலில் மிகுந்த கஷ்டத்திற்கிடையே 30 […]

Categories
சினிமா தமிழ் சினிமா

கெத்தான லுக்… புத்தாண்டில் மாஸ் காட்டிய ‘மாஸ்டர்’ விஜய்… கொண்டாடும் ரசிகர்கள்.!

லோக்கேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் தளபதி 64 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படத்தின் தயாரிப்பு நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டது. நடிகர் விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜின் இயக்கத்தில் உருவாகிவரும் திரைப்படம் ‘தளபதி 64’. படத்தில் விஜய்க்கு வில்லனாக விஜய் சேதுபதி நடிப்பதாக அறிவித்தவுடனே படத்திற்கு எதிர்பார்ப்பு கூடியது. படத்தின் தலைப்பு இன்னும் வைக்கப்படாமல் இருந்த நிலையில் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகும் தேதியை படக்குழு வெளியிட்டது. இந்நிலையில் போஸ்டரை படத்தின் தயாரிப்பு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

டுவிட்டரில் இணைகிறாரா நடிகர் அஜித் …???

நடிகர் அஜித்குமார் டுவிட்டரில் இணைய வேண்டும் என்று டுவிட்டர் இந்தியா சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது. ரஜினிகாந்த், கமல்ஹாசன் போன்ற பிரபல நடிகர்கள் முதல் இளம் நடிகர் நடிகைகள் வரை டுவிட்டரில் கணக்கு வைத்துள்ளனர். தங்கள் கருத்துக்களையும் நடிக்கும் படங்கள் குறித்த விவரங்களையும் அதில் பதிவிட்டு ரசிகர்களுடன் நேரடி தொடர்பில் இருக்கிறார்கள். ஆனால் விஜய்யும், அஜித்குமாரும் டுவிட்டரில் இல்லை. ஆனாலும் இருவரின் ரசிகர்களும் அவ்வப்போது ஹேஸ்டேக்குகளை உருவாக்கி டுவிட்டரை தெறிக்க விடுகின்றனர். விஜய், அஜித் நடிக்கும் புதிய […]

Categories
சினிமா தமிழ் சினிமா

இத்தனைபேர் துணையிருக்க எனக்கென்ன மனக்கவலை…? – வைரமுத்து நன்றி!

கவுரவ டாக்டர் பட்டம் வழங்கும் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்ட விவகாரத்தில் தனக்காக ஆதரவு தெரிவித்த அனைவருக்கும் கவிஞர் வைரமுத்து நன்றி தெரிவித்துள்ளார். கவிஞர் வைரமுத்துவின் சாதனைகளைப் பாராட்டி அவரை கவுரவிக்கும் வகையில் தனியார் கல்வி நிறுவனம் சமீபத்தில் அவருக்கு கவுரவ டாக்டர் பட்டம் அளிப்பதாக அறிவித்திருந்தது.அந்த நிகழ்ச்சியில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கலந்துகொள்ள இருந்தார். இதனிடையே, பாடகி சின்மயி வைரமுத்து குறித்து புகார் தெரிவிக்கும் வகையில் ட்வீட் செய்ததை அடுத்து திடீரென கவுரவ டாக்டர் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பொம்மையுடன் ரொமான்ஸ் செய்யும் எஸ். ஜே. சூர்யா

எஸ்.ஜே. சூர்யா நடித்துவரும் ‘பொம்மை’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியானது. இந்த ஆண்டு வெளியான ‘மான்ஸ்டர்’ திரைப்படத்தின் மூலம் மக்களிடையே எஸ்.ஜே. சூர்யா நல்ல வரவேற்பை பெற்றார். அதைத்தொடர்ந்து செல்வராகவன் இயக்கத்தில் உருவான தனது ‘நெஞ்சம் மறப்பதில்லை’ படத்தின் வெளியீட்டிற்காக எஸ்.ஜே. சூர்யா காத்துக்கொண்டிருக்கும் வேளையில் ஆண்டின் இறுதியில் மக்களுக்கு இன்னொரு ஸ்பெஷலான செய்தியையும் அவர் வழங்கியிருக்கிறார். தற்போது ராதாமோகன் இயக்கத்தில் எஸ்.ஜே. சூர்யா நடித்துவரும் பொம்மை திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

தெலங்கானா சம்பவத்தின் பின்னணியில் உருவாகியிருக்கும் ‘வன்முறை’..!

தெலங்கானா பாலியல் வன்புணர்வு சம்பவத்தின் பின்னணியில் தமிழ், மலையாளம் என இரு மொழிகளில் உருவாகியுள்ள திரைப்படம் ‘வன்முறை’. இப்படம் குறித்த இயக்குநரின் சுவாரஸ்யமான தகவல்கள் இதோ… ஆர்யா ஆதி இண்டர்நேஷனல் மூவீஸ் தயாரித்திருக்கும் திரைப்படம் ‘வன்முறை’. தமிழ், மலையாளம் என இரு மொழிகளிலும் உருவாகி உள்ள இந்தப் படத்தில் கதாநாயகனாக ஆர்.கே. சுரேஷ் நடித்துள்ளார். மேலும் அர்ஷிதா ஸ்ரீதர், வினோத், நேகா சக்சேனா, சார்மிளா, அபுபக்கர், ரத்னவேலு, மாஸ்டர் ஷகர் அப்துல் லத்தீப் என பலரும் இப்படத்தில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

விவசாயிக்கு உதவிய விஜய் சேதுபதி ரசிகர் மன்றத்தினர்..!!

விவசாயம் செய்ய முடியாமல் தவித்து வந்தவருக்கு உதவி செய்த விஜய் சேதுபதி ரசிகர் மன்றத்தினருக்கு, அந்த விவசாயி நன்றி தெரிவித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்தவர் விவசாயி பிரகாஷ். இவர் விவசாயம் செய்வதற்குப் பணம் இல்லாததால் வட்டிக்கு கடன் வாங்கும் நிலைமைக்கு தள்ளப்பட்டார். இதையடுத்து, பிரகாஷ் தனக்கு தெரிந்த நபர்களின் பரிந்துரைக்கிணங்க கள்ளக்குறிச்சி விஜய் சேதுபதி ரசிகர் மன்றத்தை அணுகி தனது பிரச்னையை முறையிட்டுள்ளார். இதைத்தொடர்ந்து விஜய் சேதுபதி ரசிகர் நற்பணி மன்றத்தினர், உழவு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அறந்தாங்கியில் எண்ட்ரி கொடுத்த குட்டி நிஷா..!!

சின்னத்திரை காமெடியனான அறந்தாங்கி நிஷா தனக்கு பெண் குழந்தை பிறந்துள்ளதாக இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருக்கிறார். பிரபல சின்னத்திரை காமெடியனான அறந்தாங்கி நிஷாவுக்கு குழந்தை பிறந்துள்ளது. ஏற்கனவே நிஷாவுக்கும் அவரது கணவர் ரியாஸ் அலிக்கும் பள்ளி செல்லும் மகன் இருக்கிறார். சின்னத்திரையில் நகைச்சுவை நிகழ்ச்சி, திரைப்படங்கள் என பிஸியாகவே இருந்த நிஷா, ‘நான் கர்ப்பமாக இருக்கிறேன்’ என சில மாதங்களுக்கு முன்னர் தெரிவித்திருந்தார். அவரது சொந்த ஊரான அரந்தாங்கியில் வளைகாப்பு நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெற்றது. இந்நிலையில் கடந்த வியாழக்கிழமையன்று நிஷாவுக்கு […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

ஜில் ஜில்.. கூல் கூல்..! ‘இருட்டு’ பட நாயகியின் அட்டகாசமான படங்கள்.!!

சுந்தர். சி நடிப்பில் வி.இசட்.துரை இயக்கத்தில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்ற ‘இருட்டு’ திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் தடம்பதித்தவர் சாக்‌ஷி சௌத்ரி. உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனைச் சேர்ந்த இவர், தெலுங்கில் 5க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். இருட்டு படத்தில் நடித்ததன் மூலம் அதிக கவனம் பெற்றுள்ளார். இந்நிலையில் இவரது அசத்தலான புகைப்படங்கள் சமூக வலைதளங்களை ஆக்கிரமித்துள்ளது. இந்த புகைப்படம் ரசிகர்களை கிறங்கடித்துள்ளது. இதோ அந்த புகைப்படங்கள் :   சிறுத்தை தோல் போர்த்திய கவர்ச்சிக் கன்னி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

விஷ்ணு விஷால் படத்தில் இணைந்த பிரபல இயக்குனர்…!!!

அறிமுக இயக்குனர் மனு ஆனந்த் இயக்கத்தில் விஷ்ணு விஷால் நடிப்பில் உருவாகி வரும் படத்தில் பிரபல இயக்குனர் இணைந்திருக்கிறார். விஷ்ணு விஷால் நடிப்பில் தற்போது எப்.ஐ.ஆர். என்ற படம் உருவாகி வருகிறது. அறிமுக இயக்குனர் மனு ஆனந்த் இயக்கும் இப்படத்தில் விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக மஞ்சிமா மோகன், ரைசா வில்சன், ரெபா மோனிகா ஜான் ஆகிய 3 ஹீரோயின்கள் நடிக்கின்றனர். தற்போது தொடங்கிய இதன் படப்பிடிப்பு சமீபத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இப்படத்தில் பிரபல இயக்குனரான […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘அந்நியன்’, ‘ஐ’ பட வரிசையில் ‘கோப்ரா’..!!

விக்ரம் நடிப்பில் அஜய் ஞானமுத்து இயக்கும் ‘கோப்ரா’ திரைப்படத்தின் மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ள நிலையில், படம் குறித்த சுவாரஸ்ய தகவல்கள் வெளியாகியுள்ளன. நடிகர் விக்ரம் ‘டிமாண்டி காலனி’ பட இயக்குநர் அஜய் ஞானமுத்து கூட்டணியில் உருவாகிவரும் படம் ‘கோப்ரா’. இந்தப் படத்தில் கேஜிஎஃப் பட நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி, கிரிக்கெட் வீரர் இர்ஃபான் பதான், கே.எஸ். ரவிக்குமார் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரிக்கிறார். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

வெங்கட் பிரபு சொன்ன ஒரு வார்த்தை… துளைத்தெடுக்கும் அஜித் – சிம்பு ரசிகர்கள்..!!

சிம்பு நடிப்பில் வெங்கட் பிரபு ‘மாநாடு’ திரைப்படத்தை இயக்கும் நிலையில் ‘மங்காத்தா 2’ படம் பற்றிய அறிவிப்பு எப்போது வெளியாகும் என ரசிகர்கள் கேள்விக் கணைகளைத் தொடுத்துள்ளனர். சிம்பு – வெங்கட் பிரபு கூட்டணியில் மாநாடு படம் உருவாகி வருகிறது. இப்படத்தை சுரேஷ் காமாட்சி தயாரிக்கிறார். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கவுள்ளார். இந்தப் படத்தில் ‘நான் ஈ’ சுதீப் வில்லனாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், இதுவரை படக்குழு தரப்பில் இருந்து எதுவும் உறுதி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

2020ல் வெளியாகும் தமிழ் ஸ்டார்களின் படங்கள் ……!!

2020ஆம் ஆண்டு வெளியாக இருக்கும் தமிழ் திரைப்படங்கள் ‘தலைவர் 168’ ரஜினிகாந்த்-கீர்த்தி சுரேஷ், மீனா, குஷ்பு நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வரும் தலைவர் 168 திரைப்படம் 2020 தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு நவம்பர் மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ‘வலிமை’ அஜித்குமார் நடிப்பில் ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவாகிவரும் வலிமை திரைப்படம் 2020 தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு நவம்பர் மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ‘யாதும் ஊரே யாவரும் கேளீர்’ விஜய்சேதுபதி-மோகன்ராஜா உள்ளிட்டோர் நடிப்பில் வெங்கட […]

Categories
சினிமா தமிழ் சினிமா

இதுதான் “விக்ரம்-58” ன் படத்தலைப்பு ….. கொண்டாட்ட மழையில் ரசிகர்கள்….!!!

விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் ‘விக்ரம் 58’ படத்தின் டைட்டிலை படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். தமிழில் டிமாண்டி காலனி, இமைக்கா நொடிகள் போன்ற திரைப்படங்களை இயக்கியவர் அஜய் ஞானமுத்து. இவர் அடுத்ததாக, ’விக்ரம்-58’  படத்தை இயக்குக்கின்றார். 7 ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் மற்றும் வியாகாம் 18 ஸ்டுடியோஸ் நிறுவனம் சேர்ந்து தயாரிக்கும் இப்படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கின்றார். இதில் நட்சத்திர கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். ஆக்‌ஷன், திரில்லர் என்று முழுக்க […]

Categories
சினிமா தமிழ் சினிமா

தேசிய விருது பெற்ற கீர்த்திக்கு கேக் ஊட்டிய ரஜினி..!!

சிரிப்பு, அழுகை, முகபாவணை என அனைத்திலும் மகாநடி படத்தில் சாவித்திரியை உரிதெடுத்தாற்போல் திரையில் தோன்றி சிலிர்க்க வைத்த கீர்த்தி சுரேஷுக்கு, ‘தலைவர் 168’ படக்குழுவினர் சர்ப்ரைஸாக கேக் வெட்டி வாழ்த்து தெரிவித்துள்ளனர். சென்னை: ‘மகாநடி’ படத்துக்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருது வென்ற கீர்த்தி சுரேஷுக்கு சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்தின், ‘தலைவர் 168’ படக்குழுவினர்கள் கேக் வெட்டி வாழ்த்து தெரிவித்துள்ளனர். கடந்த ஆண்டு தெலுங்கில் வெளியாகி சூப்பர்ஹிட்டான படம் ‘மகாநடி’. மறைந்த பழம்பெரும் நடிகை சாவித்திரியின் வாழ்க்கையை அடிப்படையாகக் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

வினோத் கிஷன் – அம்மு அபிராமி நடிக்கும் ‘அடவி’ – புது அப்டேட்!

வினோத் கிஷன் மற்றும் அம்மு அபிராமி நடிக்கும் ‘அடவி’ திரைப்படத்தின் வெளியீடு குறித்த அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. நந்தா திரைப்படம் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின் ‘கிரீடம்’, ‘நான் மகான் அல்ல’, ‘நெஞ்சில் துணிவிருந்தால்’ உள்ளிட்ட படங்களில் வில்லன் மற்றும் எதிர்மறையான கதாபாத்திரங்களில் நடித்தவர் வினோத் கிஷன். தற்போது இவர் இயக்குநர் ரமேஷ் ஜி இயக்கும் அடவி திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக ‘ராட்சசன்’, ‘அசுரன்’ படங்களில் நடித்த அம்மு அபிராமி நடிக்கிறார். ஸ்ரீ […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சென்சாரில் வெட்டப்பட்ட காட்சிகளைக் கட் இல்லாமல் வெளியிட்ட துருவ் விக்ரம்!

‘ஆதித்ய வர்மா’ படத்தின் சென்சார் செய்யப்பட்ட காட்சிகளை வெளியிட்டுள்ள துருவ் விக்ரம் சென்சாரால் படைப்பாளிகளின் சுதந்திரம் கத்தரிக்கப்படுவதை மறைமுகமாகச் சாடியுள்ளார். இதைத்தொடந்து படம் வெளியாகி ஒரு மாதத்துக்கு மேல் ஆகியிருக்கும் நிலையில், தற்போது படத்தில் சென்சார் செய்யப்பட்ட காட்சிகள், வசனங்களின் தொகுப்பை துருவ் விக்ரம் தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். இதில், இந்த காட்சிகள், சில வசனங்களும் வெளிவருவதற்கான வாய்ப்பு இல்லை. நான் என்ன சொல்ல வருகிறேன் என்பது உங்களுக்கு புரியும். ஆதித்ய வர்மாவின் சில தருணங்கள் என்று […]

Categories
சினிமா தமிழ் சினிமா

குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிரான போராட்டம் வெல்லும் – நடிகர் பார்த்திபன்..!!

குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிரான போராட்டத்திற்கு வெற்றி கிடைக்கும் என திரைப்பட நடிகர் பார்த்திபன் நம்பிக்கை தெரிவித்துள்ளார். ஈரோடு மாவட்டம், ரயில்வே காலனியில் சிறகுகள் அமைப்பின் சார்பில் நடைபெற்ற மரம் நடும் நிகழ்ச்சியில் நடிகர் பார்த்திபன் பங்கேற்றார். அதன்பின், அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், ‘ஒத்த செருப்பு’ படத்திற்குக் கிடைத்த வரவேற்பு மகிழ்ச்சி அளிக்கிறது. ஆனால், அரசின் பரிந்துரை இல்லாமல் தனியாக ஒரு படம் ஆஸ்காருக்கு போனது இதுவே முதல்முறை, ஆஸ்கர் தேர்வுக் குழு பட்டியலில் உள்ள ‘ஒத்த […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

5 ரூபாய் டாக்டர் விருதினை பெற்றார் ராகவா லாரன்ஸ் …!!!

சென்னை ராயபுரத்தில் 5 ரூபாய்க்கு மருத்துவ சேவை செய்த மக்கள் மருத்துவர் டாக்டர் எஸ்.ஜெயச்சந்திரனின் விருதை நடிகர் ராகவா லாரன்ஸ் பெற்றிருக்கிறார். சென்னை ராயபுரத்தில் 5 ரூபாய்க்கு மருத்துவ சேவை செய்தவர் மக்கள் மருத்துவர் டாக்டர் எஸ்.ஜெயச்சந்திரன். இவரது முதல் ஆண்டு நினைவு நாளையொட்டி விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது. இவ்விழாவில், நடிகர் ராகவா லாரன்சுக்கு மக்கள் மருத்துவர் டாக்டர் எஸ்.ஜெயச்சந்திரன் விருது வழங்கி தாயன்பு ட்ரஸ்ட் கௌரவித்தது. மக்கள் சேவைக்காக சென்ற வருடம் ராகவா லாரன்ஸ் அன்னை […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

குடியை நிறுத்திவிட்டேன்- நடிகை சோனா …!!!

குடியை நிறுத்திவிட்டேன் என்று நடிகை சோனா கூறியுள்ளார் . ஷாஜகான், குசேலன், குரு என் ஆளு உட்பட்ட  பல படங்களில் கவர்ச்சி வேடத்தில் நடித்தவர் சோனா. கடந்த ஆண்டு பிரசாந்த் உடன் ஜானி படத்தில் நடித்திருந்தார். அதன் பின்னர் அவர் நடித்த படங்கள் எதுவும் வெளியாகவில்லை.இந்நிலையில் அவர் ஒரு அறிக்கை வெளியிட்டிருக்கிறார். அதில் சோனா கூறியிருப்பதாவது:- சிலர் என்னை திரையில் காணவில்லை. ஏன் படங்களில் நடிப்பதில்லை. எங்கே போய்விட்டீர்கள் என்று கேள்வி எழுப்புகின்றனர். இந்த வருடத்தில் 4 […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

66ஆவது ஃபிலிம்பேர் விருதுகள் 2019 – யார் யார் விருதுபெற்றார்கள் தெரியுமா?

66ஆவது ஃபிலிம்பேர் விருதுகள் வழங்கும் விழா சென்னையில் நேற்று நடைபெற்றது. விழாவில் தென்னிந்திய மொழிகளுக்கான திரைப்பட விருதுகள் வழங்கப்பட்டன. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளத் திரையுலகத்திலிருந்து பல சினிமா பிரபலங்கள் விருது வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். நடிகர்கள் சுந்தீப் கிஷன் மற்றும் ரெஜினா கசாண்ட்ரா தொகுத்து வழங்கினர்.   திரையுலகம் வாரியாக விருது பெற்ற படங்கள், கலைஞர்கள் : தமிழ் :  சிறந்த படம் – பரியேறும் பெருமாள், சிறந்த இயக்குநர் – ராம் குமார் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“நான் பேசியதற்கும், ரஜினிக்கும் எந்தத் தொடர்பும் இல்லை” – ராகவா லாரன்ஸ்!

‘தர்பார்’ படத்தின் இசை வெளியீட்டு விழாவின்போது நடிகர் ராகவா லாரன்ஸ் சர்ச்சைக்குரிய வகையில் பேசியதால் பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன. இதுகுறித்து ராகவா லாரன்ஸ் ஏற்கனவே அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள நிலையில், தற்போது மீண்டும் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில்,’ ‘தர்பார்’ இசை வெளியீட்டுக்குப் பிறகு என்னை பல ஊடக நண்பர்கள் பேட்டி கொடுக்கும்படி கேட்கின்றனர். தற்போது நான் ‘இந்தி’ படப்பிடிப்பில் சற்று பிஸியாக இருப்பதால், தற்சமயம் என்னால் பேட்டி எதுவும் கொடுக்க இயலாது. ஆனால், எனது […]

Categories
இந்திய சினிமா சினிமா தேசிய செய்திகள்

சிறந்த கலைஞர்களுக்கு தேசிய விருது…… என்ன போக கூடாதுனு சொல்லிட்டாங்க….. அமிதாப்பச்சன் பங்கேற்க மறுப்பு…..!!

டெல்லியில் தேசிய விருது பெற்ற திரைப்படங்களுக்கும் கலைஞர்களுக்கும் குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு விருதுகளை இன்று வழங்குகிறார். கடந்த 2018 ஆம் ஆண்டில் சிறந்த திரைப்படங்கள் கலைஞர்களின் பட்டியல் வெளியிடப்பட்டது. அவர்களுக்கு விருது வழங்கும் விழா இன்று நடைபெறுகிறது. சிறந்த தமிழ் படமான பாரம் படம் விருது பெறுகிறது. பாபாசாகேப் பால்கே விருது அறிவிக்கப்பட்ட அமிதாப்பச்சன் உடல்நலக்குறைவு ஏற்பட்டு விட்டதால் இந்த விழாவில் பங்கேற்க இயலாது என்று தெரிவித்துள்ளார். மேலும் உடல்நலக்குறைவினால் மருத்துவர் தன்னை பயணம் செய்ய […]

Categories
சினிமா தமிழ் சினிமா

மாலத்தீவில் அரைகுறை ஆடையில் காஜல்…. வைரலாகும் போட்டோஸ்……!!!

தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாகன காஜல் அகர்வால், பிகினி உடையில் இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகின்றன. தமிழ் திரையுலகில் 2008-ம் ஆண்டு பொம்மலாட்டம் என்ற படத்தின் மூலம்  அறிமுகமானாவர் காஜல் அகர்வால். விஜய், அஜித், சூர்யா, கார்த்தி, விஷால், ஜெயம்ரவி, தனுஷ் உட்பட அனைத்து முன்னணி நாடிகர்களுடன் ஜோடியாக நடித்துள்ளார். தெலுங்கு, ஹிந்தி படங்களிலும்  பிரபலமாக உள்ளார். தற்போது பாரிஸ் பாரிஸ் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படம் கூடிய சீக்கிரம் திரைக்கு வர […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

மகேஷ் பாபு படம் குறித்து படத்தின் நாயகி ராஷ்மிகா ட்விட்..!!

மகேஷ் பாபு நடிப்பில் வெளியாகவுள்ள தெலுங்கு திரைப்படமான ‘சரிலேரு நீக்கெவரு’ படத்தின் டப்பிங் பணிகளை நிறைவு செய்துள்ளதாக அப்படத்தின் கதாநாயகி ட்வீட் செய்துள்ளார். தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு நடிப்பில் உருவாகியுள்ள ‘சரிலேரு நீக்கெவரு’ திரைப்படம் மகா சங்கராந்தி பண்டிகையையொட்டி 2020 ஜனவரி 11-ஆம் தேதி வெளியாகிறது. மகேஷ் பாபுவின் 26ஆவது படமான இதில் அவர் ராணுவ அதிகாரியாக நடித்திருக்கிறார். மேலும் இத்திரைப்படத்தில் ‘லேடி சூப்பர் ஸ்டார்’ விஜயசாந்தி, ‘கீதா கோவிந்தம்’ படப்புகழ் ராஷ்மிகா, ஆதி, […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சிறந்த கிரிக்கெட் வீரர் விருதை பெற்ற சூரியின் மகன்…!!!

மதுரையில் நடைபெற்ற போட்டியில் சிறந்த வீரர்களுக்கான விருதினை தன் மகன் பெற்றதால் மகிழ்ச்சி அடைந்துள்ளார் சூரி . தமிழ் சினிமாவில் சமீபத்தில் உள்ள நகைச்சுவை நடிகர்களில் பிஸியாக இருப்பவர் சூரி.தற்போது ரஜினிகாந்த் படத்திலும் ,வேறு சில படங்களிலும் நடித்து வருகிறார் .இதையடுத்து கதாநாயகனாகவும் நடிக்க உள்ளார் .மதுரையை சொந்த ஊராக கொண்டவர் சூரி .இந்நிலையில் இவருடைய மகன் சஞ்சய் 14 வயதுக்குட்பட்டவர்களுக்கான கிரிக்கெட் போட்டியில் கலந்துகொண்டு விளையாடி உள்ளார் . மதுரை கிரிக்கெட் அசோஷியன் சார்பில் நடைபெற்ற […]

Categories
சினிமா தமிழ் சினிமா

இணையதளத்தில் வெளியான இருபடங்கள்…படக்குழுவினர் அதிர்ச்சி …!!!

ஹீரோ ,தம்பி ஆகிய இருபடங்களும் இணையத்தளத்தில் வெளியானதால் படக்குழுவினர் மிகுந்த வருத்தமடைந்துள்ளார். நடிகர் கார்த்தி ,ஜோதிகா ,சத்யராஜ் ,சவுகார் ஜானகி ,உள்ளிட்டப் பலர் நடித்திருக்கும் படம்” தம்பி”.இந்த படம் நேற்று வெளியானது .இதே போன்று சிவகார்த்திகேயன் ,அர்ஜுன் ,கல்யாணி பிரியதர்சன் உள்ளிட்ட பலர் நடித்த “ஹீரோ” படமும் நேற்று முன்தினம்  வெளியானது . கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் தொடங்கி இருக்கும் நிலையில் ,அரையாண்டு தேர்வுகள் முடிந்து விடுமுறையும் விடப்படுவதால் இந்தசமயத்தில்  இருபடமும் வெளியிடப்பட்டது .இதனால் மக்கள் கூட்டம் தியேட்டருக்கு வரும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘சிலுக்குவார்பட்டி சிங்கம்’ விஷ்ணு விஷாலின் அடுத்த பட அறிவிப்பு..!!

நடிகர் விஷ்ணு விஷால், இயக்குநர் செல்லா அய்யாவு இயக்கும் ஸ்போர்ட்ஸ் சம்பந்தப்பட்ட குடும்பப் படம் ஒன்றில் நடிக்கவுள்ளார். நடிகர் விஷ்ணு விஷாலுக்கு கடைசியாக ‘ராட்சசன்’ திரைப்படம் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்தது. அமெரிக்காவின் புகழ்பெற்ற லாஸ் ஏஞ்சல்ஸ் திரைப்பட விருதுகள் விழாவில் ‘ராட்சசன்’ திரைப்படத்துக்கு சிறந்த படம், சிறந்த நடிகர், சிறந்த த்ரில்லர், சிறந்த இசைமைப்பாளர் என நான்கு பிரிவுகளில் விருதுகள் கிடைத்தன. ராட்சசன் படத்தைத் தொடர்ந்து அவர் மீண்டும் அடுத்த படத்தை தயாரிக்கும் வேலையில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்தார் வடிவேலு …!!!

தன்னை குறித்து பரவிய வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார் வடிவேலு. தமிழ் பட உலகில் முன்னணி நகைச்சுவை நடிகராக கலக்கிய வடிவேலுக்கு குழந்தைகள் முதல் வயதானவர்கள்  வரை அனைத்து வயதிலும் ரசிகர்கள் உள்ளனர். இந்தநிலையில் இம்சை அரசன் 24-ம் புலிகேசி படத்தில் நடிக்க அவர் மறுத்ததால் இயக்குனர் ஷங்கர் அளித்த புகாரின் பேரில் வடிவேலுவை புதிய படங்களுக்கு ஒப்பந்தம் செய்ய தயாரிப்பாளர் சங்கம் தடை விதித்தது.  இதனால் கடந்த சில வருடங்களாக படங்களில் வடிவேல் நடிக்கவில்லை. தயாரிப்பாளர் சங்கத்தின் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சரவணன் அண்ணாச்சி நடிக்கும் ‘Production Number 1’ – புது அப்டேட்..!!

லெஜண்ட் சரவணா ஸ்டோர்ஸின் உரிமையாளர் சரவணன் நடிக்கும் ‘Production Number 1’ திரைப்படத்தின் பாடல் காட்சிக்கான பிரமாண்ட படப்பிடிப்பு சமீபத்தில் நடந்துள்ளது. லெஜண்ட் சரவணா ஸ்டோர்ஸின் உரிமையாளர் சரவணன் நடிக்கும் ‘Production Number 1’ திரைப்படத்தின் படப்பிடிப்புப் பணிகள் சமீபத்தில் தொடங்கி நடைபெற்றுவருகிறது. சரவணன் தயாரித்து நடிக்கும் இந்தப்படத்தை இரட்டை இயக்குநர்கள் ஜேடி-ஜெர்ரி ஆகியோர் இயக்குகின்றனர். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கும் இந்தப் படத்துக்கு வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்கிறார். இப்படத்தில் சரவணனுக்கு ஜோடியாக அறிமுக நடிகை கீத்திகா திவாரி […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

“இவர்கள் இருவரை தான் எனக்கு பிடிக்கும்”… மனம்திறந்த யாமி கௌதம்..!!

பாலிவுட் திரையுலகில் தனக்கு பிடித்த மிக ஸ்டைலிஷான இரு நடிகர்கள் பற்றி நடிகை யாமி கௌதம் மனம் திறந்துள்ளார். ‘தமிழ் செல்வனும் தனியார் அஞ்சலும்’ திரைப்படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை யாமி கௌதம். பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகையாக இருக்கும் இவர், அமிதாப் பச்சன், ரித்திக் ரோஷன், அஜய் தேவ்கான் உள்ளிட்ட பலரது படங்களிலும் நடித்துள்ளார்.யாமி தற்போது ‘கின்னி வெட்ஸ் சன்னி’ என்ற பாலிவுட் படத்தில் நடித்துவருகிறார். இந்த நிலையில், மும்பையில் நடைபெற்ற விருது வழங்கும் […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

ரஜினி – கமல், அஜித் – விஜய்… டாப் இந்தியர்கள் ஃபோர்ப்ஸ் பட்டியலில் இடம்பிடித்த 10 தமிழ் பிரபலங்கள்..!!

வழக்கமாக பாலிவுட் பிரபலங்கள் ஆக்கிரமிக்கும் இந்தியாவின் டாப் 100 பிரபலங்களின் இந்த ஆண்டு பட்டியலில் தமிழ் பிரபலங்கள் பலர் இடம்பிடித்துள்ளனர். நியூயார்க்: ஃபோர்ப்ஸ் வெளியிட்டுள்ள இந்தியாவின் டாப் 100 பிரபலங்கள் பட்டியலில் தமிழ்ப் பிரபலங்கள் 10 பேர் இடம்பிடித்துள்ளனர். அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல பத்திரிகையான ஃபோர்ப்ஸ் ஆண்டுதோறும் டாப் பிரபலங்களின் பட்டியல்களைப் பல்வேறு பிரிவுகளில் வெளியிட்டுவருகிறது. அந்த வகையில் இந்தியாவின் டாப் 100 பிரபலங்கள் பட்டியலை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 10 பிரபலங்கள் இடம்பிடித்துள்ளனர். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகர் அஜித் வீட்டில் மலைப்பாம்பா?… வனத்துறை அதிரடி சோதனை…!!

நடிகர் அஜித்தின் உதவியாளர் 3 அடி மலைப்பாம்பை வளர்ப்பதாக கிடைத்த தகவலின்படி அவரது வீட்டிற்குச் சென்ற வனத்துறையினர் சோதனை நடத்தினர். தமிழ் சினிமாவின் அல்டிமேட் ஸ்டாரான நடிகர் அஜித்குமாரின் உதவியாளர் சுரேஷ் சந்திரா என்பவர் 3 அடி மலைப்பாம்பை வளர்ப்பதாகவும் அந்த பாம்பிற்கு தினமும் நான்கு எலிகளை உணவாக அளிப்பதாகவும் சமூக வலைதளங்களில் செய்தி வெளியாகியுள்ளது. இதனை அறிந்த வனத் துறையினர், மதுரவாயலில் உள்ள அஜித் குமாரின் உதவியாளர் சுரேஷ் சந்திரா வீட்டில் திடீர் சோதனையை மேற்கொண்டனர். […]

Categories

Tech |