Categories
சினிமா தமிழ் சினிமா

தல அஜித்தின் ‘வலிமை’ – வில்லனாகும் தெலுங்கு நடிகர்?

அஜித்- ஹெச். வினோத் கூட்டணியில் உருவாகி வரும் ‘வலிமை’ திரைப்படத்தில் இளம் தெலுங்கு நடிகர் ஒருவர் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அஜித் – ஹெச்.வினோத் கூட்டணி இரண்டாவது முறையாக இணைந்திருக்கும் படம் வலிமை. நேர்கொண்ட பார்வை திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து சதுரங்க வேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று படங்களை இயக்கிய ஹெச். வினோத் உடன் அஜித் இணைந்திருக்கிறார்.அஜித்தின் 60ஆவது படம் என்பதால் இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. காவல் துறை […]

Categories
சினிமா சென்னை தமிழ் சினிமா மாவட்ட செய்திகள்

‘குயின்’ இணைய தொடருக்கு தடைவிதிக்கக் கோரிய வழக்கு தள்ளுபடி!

சென்னை: உள்ளாட்சித் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ள நிலையில், ‘குயின்’ இணைய தொடருக்கு தடைவிதிக்கக் கோரிய மனு மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் உயர் நீதிமன்றம் தள்ளிவைத்தது. தமிழ்நாட்டில் ஊரக பகுதிகளுக்கான உள்ளாட்சித் தேர்தல் வரும் 27, 30 ஆகிய தேதிகளில் இருகட்டமாக நடைபெறவுள்ளது. தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளதால், மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட ‘குயின்’ இணைய தொடருக்கு தடைவிதிக்கக்கோரி சென்னை அரும்பாக்கத்தைச் சேர்ந்த ஜோசப் என்பவர் உயர் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“சும்மா கிழி” வெளியான தர்பார் ட்ரைலர்……. கொண்டாடும் ரசிகர்கள்…..!!

தர்பார் ட்ரைலர் யூடூப்பில் லைக்கா புரோடக்ஷன் வெளியிட்டதை தொடர்ந்து ரசிகர்கள் பார்த்து கொண்டாடி வருகின்றனர். சமீபத்தில் தர்பார் இசை வெளியீட்டு விழா விழாவில் அனைத்து பாடல்களும் வெளியான நிலையில் பாடல்கள் அனைத்தும் செம ஹிட்டானது. அதிலும் சும்மா கிளி பாடல் வேற லெவல் ஹிட் என்றே கூறலாம். இதனை தொடர்ந்து தர்பார் படத்தின் மீதான எதிர்பார்ப்பு மக்களிடையே அதிகரித்து வந்தது. எப்போது படத்தின்  ட்ரைலர் வரும் என்று காத்திருந்த ரசிகர்களுக்கு தற்பொழுது விருந்தாக இன்றைக்கு லைகா புரோடக்சன் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஆக்ஷனில் களமிறங்கும் ‘பிக் பாஸ்’ சாக்‌ஷி அகர்வால்..!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகை சாக்‌ஷி அகர்வால் பெயரிடப்படாத ஒரு புதிய படத்தின் மூலம் ஆக்ஷன் அவதாரம் எடுக்கவிருக்கிறார். தமிழ்த் திரையுலகில் சமீபகாலமாக நாயகிகள் ஆதிக்கம் செலுத்தத் தொடங்கியுள்ளனர். நாயகிக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்படும் படங்களின் எண்ணிக்கை தமிழ்த் திரையுலகில் அதிகரித்துவருகிறது. நாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும் படங்களில் பெரும்பாலானவை ஆக்ஷன் படங்களே ஆகும். அந்த வகையில் நடிகை சாக்‌ஷி அகர்வால் பெயரிடப்படாத ஒரு புதிய படத்தின் மூலம் ஆக்ஷன் அவதாரம் எடுக்கவிருக்கிறார். இதற்காக அவர் சிறப்புச் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சிக்கலில் சிக்கித்தவிக்கும் மிஷ்கினின் ‘சைக்கோ’..!!

மிஷ்கின் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ள ‘சைக்கோ’ திரைப்படத்திற்கு இதுவரை தணிக்கை சான்று கிடைக்காத நிலையில், அறிவிக்கப்பட்ட தேதியில் படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. துப்பறிவாளன் படத்தைத் தொடர்ந்து மிஷ்கின் இயக்கியுள்ள படம் ‘சைக்கோ’. உதயநிதி ஸ்டாலின், அதிதி ராவ், நித்யா மேனன், சிங்கம்புலி, ராம், ஆடுகளம் நரேன் உள்ளிட்டோர் நடிக்கும் இந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.யுத்தம் செய், பிசாசு, துப்பறிவாளன் பட வரிசையில் இந்தமுறை சைக்கோ திரில்லர் கதைக்களத்தில் மிஷ்கின் புதிய படைப்பை உருவாக்கியிருக்கிறார்.டபுள் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நானும் தளபதியும் புதிய படத்திற்கு ரெடி – சங்கர்…… கொண்டாட்டத்தில் ரசிகர்கள்….. எப்போது படப்பிடிப்பு….?

தமிழ் சினிமாவில் பிரமாண்ட இயக்குனர் என்று சொல்லப்படும் சங்கர் மீண்டும் விஜய்யை வைத்து புதிய படம் இயக்க உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது . தளபதி விஜய் – டரைக்டர் சங்கர் கூட்டணியில் கடைசியாக 2012-ல் வெளிவந்த நண்பன் படம் பெரிய வெற்றி படமாக அமைந்தது. எனினும் அது நேரடியான தமிழ் படம் கிடையாது. ஹிந்தி மொழியில் அமீர்கான் நடித்து வசூல் அடித்த 3 இடியட்ஸ் என்ற திரைப்படத்தின் தமிழ் ரீமேக்காக இயக்கி இருந்தனர். இருவரும் இன்னொரு […]

Categories
சினிமா

KGF 2 படக்குழுவினரிடமிருந்து வெளியாகும் முக்கிய அறிவிப்பு…!!

கே.ஜி.எப். படத்தின்  வெற்றியை தொடர்ந்து தற்போது உருவாகி வரும் ‘கே.ஜி.எப். சாப்டர் 2’ படத்தின் முக்கிய அறிவிப்பு ஒன்று  வெளியாகியுள்ளது. கன்னட திரையுலகின் பிரம்மாண்ட தயாரிப்பான கே.ஜி.எப் திரைப்படம் சென்ற வருடம் டிசம்பர் மாதம் வெளியானது. கன்னட திரையுலகில் முன்னணி நடிகர்களுள் ஒருவரான யாஷ் கதாநாயகனாக நடித்திருந்த இந்த படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகி ஹிட் ஆனது. மேலும் ரூ.100 கோடி வசூல் செய்து சாதனை படைத்த கே.ஜி.எப் படத்தின் 2ம் பாகமான […]

Categories
சினிமா தமிழ் சினிமா

திருமணத்தில் முடியப்போகும்…… தொழிலதிபர் – காஜல் அகர்வால் காதல்…..!!!!!!

 காஜலுக்கும் , தொழிலதிபருக்கும் திருமணம் நடைபெற இருப்பதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.  2004-ம் ஆண்டில் சினிமாவில் அறிமுகமாகி தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்தவர் காஜல் அகர்வால். சமீபத்தில் அவரது நடிப்பில் வெளி வந்த கோமாளி படத்திற்கு வரவேற்பு கிடைத்தது. தற்போது கமல்ஹாசனுக்கு ஜோடியாக இந்தியன்-2 திரைப்படத்தில் நடித்து வருகின்றார். மேலும் பாரிஸ் பாரிஸ் என்ற படத்திலும் நடித்து முடித்துள்ளார். இத்திரைப்படம் தணிக்கை குழு நடவடிக்கையால் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.நடிகை காஜல் அகர்வாலுக்கு இப்போது 34 […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

பழம்பெரும் அஜித் பட இயக்குனர் காலமானார்… திரையுலகினர் அஞ்சலி..!!

பழம்பெரும் தெலுங்கு நடிகரும், எழுத்தாளருமான கொல்லபுடி மாருதி ராவ் உடல்நலக் -குறைவால் சென்னையில் காலமானார்.  சுவாதி, முத்தியம், பிரேமா, லீடர் உள்ளிட்ட 250க்கும் மேற்பட்ட தெலுங்கு திரைப்படங்களில் நடித்தவர் பழம்பெரும் நடிகர் கொல்லபுடி மாருதி ராவ் (வயது 80). 1939ஆம் ஆண்டு ஆந்திரமாநிலம் விஜயநகரம் என்ற இடத்தில் பிறந்த இவர், தெலுங்கு திரையுலகின் பல்வேறு முன்னணி நடிகர்களுடன் நடித்திருக்கிறார். நகைச்சுவை மற்றும் குணச்சித்திர நடிகரான மாருதி ராவ் ஆந்திர அரசின் உயரிய விருதுகள் உள்ளிட்ட பல்வேறு விருதுகளைப் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

வெளியானது விஜய் சேதுபதியின் “கடைசி விவசாயி” ட்ரெய்லர் ….. கொண்டாட்டத்தில் ரசிகர்கள்…!!!

நல்லாண்டி மற்றும் விஜய் சேதுபதி இருவரும் இணைந்து நடிக்கும்  “கடைசி விவசாயி” படத்தின் ட்ரெய்லர் வெளியாகி உள்ளது. மக்கள் செல்வன் நடிகர் விஜய்சேதுபதி நடித்து வரும் “கடைசி விவசாயி”  திரைப்படத்தின் டிரைலர் இன்று மாலை அளவில் வெளியிடப்பட்டது. இந்த திரைப்படத்தை மணிகண்டன் இயக்கி உள்ளார். இவர் காக்கா முட்டை, குற்றமே தண்டனை, ஆண்டவன் கட்டளை போன்ற படங்களை இயக்கியவர்  என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் “கடைசி விவசாயி” படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்திருக்கிறார் . கலை இயக்குனர் தொட்டா […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“12 நாட்களில் முடிந்த படப்பிடிப்பு”… இரகசியத்தை உடைத்த இயக்குநர்..!!

படப்பிடிப்புக்கு செல்வதற்கு முன்பு, எப்படி தயாராக வேண்டும், என்பதில் தெளிவாக இருந்ததால் தான் ‘என் சங்கத்து ஆள அடிச்சவன் எவன்டா’ படத்தை 12 நாட்களில் முடித்தாக இயக்குநர் நவீன் மணிகண்டன் கூறியுள்ளார். இயக்குநர் நவீன் மணிகண்டன் இயக்கத்தில் நடிகர் விகாஷ், நடிகை மதுமிதா நடித்திருக்கும் படம் ‘என் சங்கத்து ஆள அடிச்சவன் எவன்டா’. மேலும் இப்படத்தில் டெல்லி கணேஷ், சித்ரா, ராகுல் தாத்தா, விஜய் டிவி ராமர், நாஞ்சில் விஜயன், அம்பானி சங்கர், நெல்லை சிவா உள்ளிட்டோர் […]

Categories
பல்சுவை

அன்றும்…. இன்றும்….. என்றும்….. உணர்ச்சியை கிளப்பும் ரஜினியின் TOP-10 படங்கள்…!!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அபூர்வராகங்கள் முதல் தர்பார் வரை சுமார்  179 படங்கள் தமிழிலும் பிற மொழிகளிலும் நடித்துள்ளார். ஆனால் அவற்றில் என்றென்றும் பார்க்க பார்க்க சலிக்காத உணர்ச்சிகளை தூண்டி சிலிர்க்க வைக்கும்  சிறந்த 10 படங்கள் குறித்து இந்த செய்தித் தொகுப்பில் காணலாம். 10வது இடம்: இந்த வரிசையில் பத்தாவது இடத்தை பிடிப்பது முரட்டுக்காளை திரைப்படம். இந்தப் படம்தான் ரஜினியின் சினிமா வாழ்க்கையை புரட்டிப்போட்டது என்று கூறலாம். இதில் அவர் தனது நடை உடை பாவனைகள் […]

Categories
பல்சுவை

“WORLD STYLE DAY” சினிமா முதல் அரசியல் வரை…… என்றும் எதிலும் SUPER STAR….!!

இன்று பிறந்தநாள் கொண்டாடும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் முழு வாழ்க்கை வரலாற்றை இந்த செய்தித்தொகுப்பில்  காணலாம். இன்று பிறந்தநாள் கொண்டாடும் நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் தமிழகம் இந்தியாவில் மட்டுமல்லாமல் உலக அளவில் ரசிகர்களை கொண்டவர் என்றால் அது மிகையாகாது. இவரை மக்கள் அனைவரும் சூப்பர் ஸ்டார் என்று செல்லமாக அழைக்கின்றனர். ஆசியாவில் நடிகர் ஜாக்கிசானுக்கு அடுத்தபடியாக அதிக அளவில் சம்பளம் வாங்கும் நடிகர் இவர்தான். 2016ஆம் ஆண்டு நாட்டின் உயரிய விருதான  பத்ம விபூஷண் விருதுக்குத் […]

Categories
சினிமா தமிழ் சினிமா பல்சுவை

#HBDRajinikanth: பேர கேட்டாலே சும்மா அதிருதுல்ல..!!

1950 ஆம் ஆண்டு சிவாஜி ராவாக பிறந்து தனது நடிப்பாலும் ஸ்டைலாலும் மக்களைத் தனது கலையை ரசிக்கும் வண்ணம் கட்டி வைத்திருக்கும் தலைவர் ரஜினிகாந்திற்கு இனிய  பிறந்த நாள் வாழ்த்துக்கள். ஸ்டைல் மன்னன்…எல்லா வயசு ரசிகர்களின் கண்ணன் கண்ணா பன்னி தான் கூட்டமா வரும் “சிங்கம்” சிங்கிளாத்தான் வரும் என் வழி… தனி… வழி சும்மா கிழி நடிப்பின் எந்திரன்..! பாத்தாலே பச்ச மோகம்..ஆனா ஆக்டிங் அல்டி…! வயசானலும் அழகும் ஸ்டைலும் இன்னும் குறையால அதான் ரஜினி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ரஜினி படத்தில் இணையும் விஜய் பட பிரபல நடிகை ….!! -அதிகாரப்பூர்வ வெளியீடு.

நடிகர் ரஜினி தற்போது சிவா இயக்கத்தில் நடிக்கும் 168வது படத்தில் முதல்முறையாக விஜய் பட நடிகை நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது நடித்து வரும் படம் “தர்பார்”. இத்திரைப்படம் பொங்கல் தினத்தன்று  வெளிவரஇருக்கிறது. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ள இப்படத்தில்  அனிருத் இசையமைத்துள்ளார். நிவேதா தாமஸ் ,சுனில்  ஷெட்டி, நயன்தாரா,யோகிபாபு போன்றோர் இப்படத்தில் நடித்துள்ளனர். இப்படத்தின் வெளியீட்டிற்கு பின்னர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் சிவா இயக்கத்தில் தலைவர் 168 படத்தில் நடிக்க உள்ளார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்தில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

வெளியானது தல வலிமை படத்தின் படப்பிடிப்பு தேதி….!!! கதாநாயகி நயன்தாரா..??

நடிகர் அஜித் நடிப்பில் வெளியான “நேர்கொண்ட பார்வை” திரைப்படம்  மிகப்பெரிய வெற்றி பெற்றதையடுத்து , அஜித் நடிக்கும் வலிமை படப்பிடிப்பு பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. தல அஜித் நடிப்பில் இந்த வருடம் வெளிவந்த விஸ்வாசம், நேர்கொண்ட பார்வை உள்ளிட்ட இரு படங்களுமே வெற்றியடைந்த நிலையில், இயக்குநர் எச்.வினோத் மற்றும் தயாரிப்பாளர் போனி கபூர் இருவரும் இணைந்து வலிமை திரைப்படத்தை உருவாக்கி வருகின்றார்கள்.இப்படத்தில் அஜித் இரு வேடங்களில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது . மேலும்  இந்த படத்தில் தல […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அஜித்தின் போலீஸ் அவதாரம் – தயாரிப்பாளர் போனி கபூர் தகவல்..!!

அஜித் நடிக்கும் வலிமை திரைப்படத்தில் அவர் போலீஸ் கதாபாத்திரத்தில் நடிப்பதை தயாரிப்பாளர் போனி கபூர் உறுதி செய்துள்ளார். அஜித் – ஹெச்.வினோத் கூட்டணி இரண்டாவது முறையாக இணைந்திருக்கும் படம் வலிமை. நேர்கொண்ட பார்வை திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து சதுரங்க வேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று படங்களை இயக்கிய ஹெச்.வினோத் உடன் அஜித் கை கோர்த்திருக்கிறார். அஜித்தின் 60ஆவது படம் என்பதால் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. வலிமை என்ற பெயரில் உருவாகி வரும் இந்தப்படத்திற்கான ஆரம்பக்கட்ட […]

Categories
சினிமா தமிழ் சினிமா

என் மீது மக்கள் கொண்டுள்ள நம்பிக்கை வீண் போகாது…! இசை வெளியீட்டு விழாவில் பேசிய ரஜினிகாந்த் …

நடிகர் ரஜினிகாந்த் தர்பார் இசை வெளியீட்டு விழாவில் பேசியபோது , மக்கள் என் மீது வைத்துள்ள நம்பிக்கை வீனாகாது என்று கூறினார். தர்பார் படத்தினுடைய இசை வெளியீட்டு விழாநேற்று மாலை சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்திருக்கும் படம் ‘தர்பார்’.   ரஜினி பெரிய இடைவெளிக்கு பின்  போலீஸாக இப்படத்தில் நடித்திருக்கின்றார். இப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்நிகழ்ச்சியில் நடிகர் ரஜினி பேசிய போது, ஏ ஆர் முருகதாஸ் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

வெற்றிமாறனுடன் இணையவுள்ள விஜய்…?

தளபதி விஜய்யின் 65-வது படத்தை அசுரன் படத்தை இயக்கிய வெற்றிமாறன் இயக்கவுள்ளதாக  சமூக வலைதளங்களில் தற்போது தகவல் வெளியாகியுள்ளது. தமிழில்  வசூல் மன்னனாக வலம் வரும் நடிகர் விஜய் நடிப்பில் சமீபத்தில் வெளியான 63வது படமான பிகில்  வசூலில் பல  சாதனைகளை படைத்த நிலையில்,அடுத்ததாக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கும் ‘தளபதி 64’ படத்தில் விஜய் நடித்துக் கொண்டிருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு சூடுபிடிப்புடன் நடைபெற்றுவருகிறது. இந்த படம் அடுத்தாண்டு கோடை விடுமுறையில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்தை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சிவகார்த்திகேயனின் ‘டாக்டர்’ – வில்லனாகிறாரா வினய்?

சிவகார்த்திகேயன் நடிப்பில் தயாராகிவரும் ‘டாக்டர்’ திரைப்படத்தில் நடிகர்கள் வினய், யோகிபாபு நடிகை பிரியங்கா மோகன், ஆகியோர் இணைந்துள்ளனர். சிவகார்த்திகேயன் நடிப்பில் வரும் 20ஆம் தேதி திரைக்கு வருகிறது ஹீரோ திரைப்படம். இந்தப்படத்தைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் டாக்டர் திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். சிவகார்த்திகேயனின் எஸ்கே புரொடக்‌ஷன் மற்றும் கேஜேஆர் ஸ்டுடியோஸ் நிறுவனங்கள் தயாரிக்கும் இப்படத்தை கோலமாவு கோகிலா பட இயக்குநர் நெல்சன் இயக்குகிறார். அனிருத் இசையமைக்கும் இப்படத்திற்கு விஜய் கார்த்திக் கண்ணன் ஒளிப்பதிவு செய்கிறார். இதனிடையே இப்படத்திற்கான நடிகர்கள், நடிகைகள் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஸ்பை ஆக்‌ஷன் த்ரில்லர் கதையுடன் களம் இறங்கும் ‘குற்றம் 23’ ஜோடி..!!

தமிழ்த்திரையுலகில் இதுவரை வெளிவராத புதுமையான ஒரு ஸ்பை ஆக்‌ஷன் த்ரில்லர் கதையுடன் அருண் விஜயை வைத்து இயக்குநர் அறிவழகன் புதிய படத்தை இயக்கவுள்ளார். ‘குற்றம் 23’ படத்தையடுத்து இயக்குநர் அறிவழகன் – அருண் விஜய் கூட்டணி மீண்டும் ஒரு படத்தின் மூலம் இணைய உள்ளது. அருண் விஜயை வைத்து இம்முறை அறிவழகன் ஸ்பை ஆக்‌ஷன் த்ரில்லர் படத்தை இயக்கவுள்ளார். பெரும் பொருட்செலவில் தயாரிக்கவுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு இன்னும் ஒருசில நாட்களில் பூஜையுடன் தொடங்கவுள்ளது. இதுகுறித்து அறிவழகன் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘அக்னி சிறகுகள்’அருண்விஜய் மிருகத்தைப் போல் சண்டையிடுவார் – இயக்குநர் நவீன்..!!

அருண் விஜய், விஜய் ஆன்டனி இருவருமே ‘அக்னி சிறகுகள்’ படத்தில் ஏற்றியிருக்கும் கதாபாத்திரங்கள் வன்முறை காட்சிகள் நிறைந்தது என்று படத்தின் இயக்குநர் நவீன் தெரிவித்துள்ளார். ‘மூடர்கூடம்’ திரைப்படம் மூலம் தமிழ் திரையுலகை திரும்பிப் பார்க்கச் செய்தவர் இயக்குநர் நவீன். இயக்குநர் மட்டுமல்லாது நடிகராகவும் வலம் வரும் இவர், ‘அலாவுதீனின் அற்புத கேமரா’ திரைப்படத்தை இயக்கி நடிக்கிறார். இதனிடையே விஜய் ஆண்டனி மற்றும் அருண் விஜய்யை வைத்து ‘அக்னிச் சிறகுகள்’ படத்தை நவீன் இயக்கி வருகிறார். அம்மா கிரியேஷன்ஸ் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

இந்த வேடத்தை நான் ஏற்க இதுதான் காரணம்… ‘குயின்’ ரம்யா கிருஷ்ணன்..!!

சில கதைகள் சொல்லியே ஆகவேண்டும் என்ற தகுதியைப் பெற்றிருக்கும், அத்தகைய கதைதான் ‘குயின்’ என்று படத்தின் இயக்குநர் கெளதம் வாசுதேவ் மேனன் கூறியுள்ளார். இயக்குநர் கெளதம் மேனன் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை இணையத் தொடராக இயக்கியுள்ளார். இதில் ஜெயலலிதாவாக ரம்யா கிருஷ்ணண் நடித்துள்ளார். இத்தொடருக்கு ‘குயின்’ என்று பெயர் வைத்துள்ளார். இதில் முக்கிய கேரக்டரில் மலையாள நடிகர் இந்திரஜித் நடித்துள்ளார். வெப் சீரிஸ் தொடராக வெளிவரவிருக்கும் குயின், 11 எபிசோடுகளாக எம்எக்ஸ் பிளேயர் ஆன்லைன் ஸ்டீரிமிங் தளத்தில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சசிகலாவாக அவதாரம் எடுக்கும் பிரபல நடிகை..!!

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு படத்தில் சசிகலா வேடத்தில் பிரபல நடிகை நடிக்க உள்ளார்.  மறைந்த முன்னாள்  முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை மையமாக கொண்டு  ’தலைவி’ என்ற திரைப்படம் தயாராகி வருகிறது .  இப்படத்தை  ஏ.எல்.விஜய் இயக்குகிறார்.  இப்படத்தில் ஜெயலலிதா வேடத்தில் கங்கனா ரனாவத் நடித்து வருகிறார் .  இவர்  தீவிர பயிற்சி எடுத்து ஜெயலலிதாவாக நடித்து வருகிறார்.மேலும் இப்படத்தில் எம் .ஜி .ஆர் வேடத்தில் தனி  ஒருவன் படத்தில் வில்லனாக நடித்த அரவிந்த் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘பெண்கள் குறித்து நான் தவறாகப் பேசவில்லை’ – இயக்குநர் பாக்யராஜ் விளக்கம்

பெண்கள் குறித்து தான் தவறாகப் பேசவில்லை என்றும் தான் பேசிய கருத்து திரித்து கூறப்பட்டுள்ளது என இயக்குனர் பாக்யராஜ் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார். ‘திருவாளர் பஞ்சாங்கம்’ எனும் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் கலந்துகொண்ட பின்னர் இயக்குநர் பாக்யராஜ் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது ‘ பெள்ளாச்சி விவகாரத்தில் பெண்கள் கவனமாக இருந்தால், அச்சம்பவத்தை தவிர்த்திருக்கலாமே என்று மட்டும்தான் தான் கூறியதாகவும், ஆனால் அச்செய்தி திரித்துக் கூறப்பட்டது’ என்றும் கூறினார். இதனால் […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

புதிய படத்திற்காக உடல் எடையை குறைத்தார் ஆரி..!!

எஸ்.காளிங்கன் அவர்கள் இயக்கும் புதிய படத்துக்காக நடிகர் ஆரி தன்  இடையை 10 கிலோ வரைகுறைத்திருப்பதாக  இருப்பதாக கூறப்படுகிறது. சென்னை T .R கார்டனில்  நடிகர் ஆரி கதாநாயகனாக நடிக்கும் ஒரு புதிய படப்பிடிப்பு தொடங்கியது . இப்படத்தில் நடிகர் ஆரிக்கு ஜோடியாக ஐதராபாத்தை சேர்ந்த பூஜிதா பொன்னாடா நடிக்கின்றார். இந்த நடிகை , ‘ரங்கஸ்தலம்’ என்ற தெலுங்கு படத்தில் நடித்தவர்.இப்படத்தை வி.மஞ்சுநாதன் தயாரிக்கின்றார். எஸ்.காளிங்கன், கதை, திரைக்கதை,மற்றும் வாசனைங்களை எழுதி டைரக்டு செய்கிறார். இவர்,ரிச்சி ‘என்றென்றும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

டாக்டரை தட்டிப்பறித்த சிவகார்த்திகேயன் ..!! கொந்தளிப்பில் விஜய் ரசிகர்கள் …….

விஜய் நடித்துக்கொண்டிருக்கும் 64வது படத்தின் பெயர் டாக்டர் என்று பேசப்பட்டு வந்த நிலையில் சிவகார்த்திகேயன் நடிக்கவிருக்கும் புதிய படத்தின் பெயர் டாக்டர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் சிவகார்த்திகேயன் அவர்கள் நடித்த ’நம்ம வீட்டு பிள்ளை’படம்  சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி கண்ட நிலையில் அவர் தற்போது ’ஹீரோ’ என்னும் படத்தை முடித்துள்ளார். இந்த படம் வருகின்ற 20ஆம் தேதி வெளியாகும் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது . இந்நிலையில் சிவகார்த்திகேயனின் அடுத்த படத்தை ’கோலமாவு கோகிலா’  படத்தை இயக்கிய […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பத்தாண்டுகளில் ப்ளாக் பஸ்டர் சாதனையில் முன்னணி வகிக்கும் ‘தங்கல்’..!!

இந்தியாவின் ப்ளாக் பஸ்டர் திரைப்படங்களின் பட்டியலில் இந்த தசாப்தத்தில் 2000 கோடி ரூபாய் வசூல் சாதனை செய்து முதலிடத்தை பிடித்திருக்கிறது ஆமிர் கானின் தங்கல் திரைப்படம். இந்த ஆண்டு யாஹூ இந்தியா வெளியிட்ட அறிக்கையில் தசாப்தத்தின் ப்ளாக் பஸ்டர் திரைப்படங்களில் ஆமிர் கான் நடிப்பில் 2016ஆம் ஆண்டு வெளியான ‘தங்கல்’ திரைப்படம் முதலிடத்தைப் பிடித்திருக்கிறது. இப்படம் இந்தியா மட்டுமல்லாது சீனாவிலும் பெரும் வசூல் சாதனையை ஈட்டியுள்ளது. நிதீஷ் திவாரியின் இயக்கத்தில் மல்யுத்தத்திற்குத் தன் இரு மகள்களை இந்தியாவுக்காக […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘ஜெ. ஜெயலலிதா எனும் நான்’ – இரும்பு மனுஷியாய் உருவெடுத்தவரின் கதை

கடந்த பல ஆண்டுகளாய் தமிழ்நாட்டில் கல்ட் பெண்மணியாய் வாழ்ந்தவர் முன்னாள் முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதா. வெற்றிக்கான பாதை அவருக்கு அத்தனை சுலபமாய் கிடைத்து விடவில்லை. ஒரு வெற்றி பெற்ற நடிகையிலிருந்து உலகறிந்த அரசியல்வாதியாய் ஜெ. தன் வாழ்க்கைப் பாதையில் பல இன்னல்களைச் சந்தித்தே வந்தார். ஒரு வலுவான தன்னம்பிக்கையுள்ள பெண்ணாக பலருக்கும் காட்சியளித்தவர் உண்மையில் வெகுளியாகவும் அப்பாவியாகவும் இருந்துள்ளார். அவரது தனிப்பட்ட வாழ்க்கையில் அவர் எப்படி வாழ்ந்துள்ளார் என்பதைப் பற்றி பார்ப்போம். ஒவ்வொறு பிரகாசமான கண்களுக்குப் பின்னும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘சம்பவம்’ செய்யாத ‘விஜய்’ – பட தலைப்பு பிரச்னைக்கு முற்றுப்புள்ளி..!!

மைனா, சாட்டை, சவுகார்பேட்டை, பொட்டு ஆகிய படங்களை தயாரித்த ஷாலோம் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் ரஞ்சித் பாரிஜாதம் இயக்கும் புதிய திரைப்படத்திற்கு ‘சம்பவம்’ என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. ஸ்ரீகாந்த் மற்றும் நடன இயக்குனர் தினேஷ், பூர்ணா, சிருஷ்டி டாங்கே, பேபி ஸ்ருதிகா, கிஷோர், இயக்குனர் ஏ.வெங்கடேஷ், தம்பி ராமையா, மொட்டை ராஜேந்திரன், ஜெயபிரகாஷ் உள்ளிட்டோர் நடித்து வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறஇந்நிலையில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் தளபதி 64 […]

Categories
சினிமா தமிழ் சினிமா

புதிய படத்தின் படத்தின் அப்டேட்…. வெளியிட்டார் சிவகார்த்திகேயன் …!!

நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்க இருக்கும் புதிய படத்தின் பெயர் வெளியாகியுள்ளது. நடிகர் சிவகார்த்திகேயன் அவர்கள் நடித்த ’நம்ம வீட்டு பிள்ளை’படம்  சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி கண்ட நிலையில் அவர் தற்போது ’ஹீரோ’ என்னும் படத்தை முடித்துள்ளார். இந்த படம் வருகின்ற 20ஆம் தேதி வெளியாகும் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது .             இதனை  அடுத்து இயக்குனர் ரவிக்குமார் அவர்கள்  இயக்கி வரும் படத்தில் இப்போது  சிவகார்த்திகேயன் நடித்து கொண்டிருக்கின்றார். இந்த […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘நாற்காலி’ அரசியல் பேசும் அமீர் – படப்பிடிப்பு தொடக்கம்..!!

இயக்குநர் அமீர் நடிக்கும் ‘நாற்காலி’ திரைப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் இன்று முதல் தொடங்கியது. மௌனம் பேசியதே, ராம், பருத்திவீரன் உள்ளிட்ட படங்களை இயக்கி தமிழ் திரையுலகை திரும்பிப் பார்க்கச் செய்தவர் அமீர். இயக்குநர் மட்டுமல்லாது நடிகராகவும் சாதித்துள்ள அமீர், யோகி, வட சென்னை உள்ளிட்ட படங்களில் தனது தனித்துவமான நடிப்பை வெளிக்காட்டி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறார். இதனிடையே, முகவரி, தொட்டி ஜெயா மற்றும் வரும் டிசம்பர் 6ஆம் தேதி சுந்தர் சி நடிப்பில் திரைக்கு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“MIDDLE CLASS” பொண்ணுங்க வாழ்க்கை எவ்வளோ கஷ்டம் தெரியுமா….?? அனல் தெறிக்கும் வசனங்களால் மக்கள் மனதை வென்ற அதுல்யா ரவி….!!

மிடில் கிளாஸ் பெண்கள்  வாழ்க்கை குறித்தும், சாதிய வன்மங்களுக்கு எதிராகவும் அதுல்யா ரவி பேசிய வசனங்கள் தமிழக மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. சில வருடங்களுக்கு முன்பு வெளியான சாட்டை திரைப்படம் பள்ளி மாணவர்களுக்காக எடுக்கப்பட்ட ஒரு விழிப்புணர்வு படமாக அமைந்தது. இது தமிழக மக்களிடையே விமர்சன ரீதியாக பெரும் வரவேற்பைப் பெற்றிருந்தது. இதையடுத்து கல்வி ரீதியாக அடுத்த சாட்டை என்ற தலைப்பில் கல்லூரி மாணவர்களை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படம் சென்ற வெள்ளிக்கிழமை அன்று வெளியானது. […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

‘என்னை கண்டுபிடித்ததற்கு நன்றி’ – காதலில் உருகும் பிரியங்கா சோப்ரா..!!

கடந்த 2018ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்ட நட்சத்திர தம்பதிகளான பிரியங்கா-நிக் ஜோனஸ், தங்களது ஒராண்டு திருமண நாளை இன்று கொண்டாடுகின்றனர். ஹாலிவுட் பாடகர் நிக் ஜோனஸ் சென்ற ஆண்டு பாலிவுட்டின் முன்னணி நடிகையான பிரியங்கா சோப்ராவை திருமணம் செய்துகொண்டார். ராஜஸ்தானில் உள்ள ஜோத்பூரில் இவர்களது திருமணம் கோலாகலமாக நடைபெற்றது. இதையடுத்து தனது அழகு மனைவிக்கு திருமண நாள் வாழ்த்து தெரிவிக்கும் வண்ணம் நிக் ஜோனஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து செய்தி ஒன்றை பதிவு செய்திருந்தார். அதில் […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

பெண் மீது இயக்குனர் பி.வாசு புகார்.!!

சினிமா திரைப்பட இயக்குனர் பி.வாசு, பெண் மீது சென்னை கோடம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். சென்னை கோடம்பாக்கம் டிரஸ்ட்புரம் 6ஆவது தெருவில் திரைப்பட இயக்குனர் பி.வாசுவுக்கு சொந்தமான வீடு உள்ளது. அதனை ஜானகி என்பவருக்கு வாடகைக்கு விட்டுள்ளார். அந்த இடத்தில் ஜானகி, சக்தி என்ற பெயரில் மகளிர் விடுதி நடத்தி வருகிறார். வாடகையாக மாதத்துக்கு ரூ.75 ஆயிரம் ஜானகி கொடுக்க வேண்டும் என்பது ஒப்பந்தம். இந்த நிலையில் வாடகை பாக்கி ரூ.7 லட்சத்து 50 ஆயிரம் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ராத்திரி பன்னிரெண்டு மணிக்குத் தோன்றிய ‘கைதி’ இரண்டாம் பாகம் ஐடியா – ‘தம்பி’ விழாவில் கார்த்தி பேச்சு.!!

அண்ணி கூட நடித்தது எனக்கு ஸ்பெஷல். சத்யராஜ் இல்லை என்றால் இந்தப் படமே வேண்டாம் என்று சொன்னேன் என நடிகர் கார்த்தி தம்பி பட இசை வெளியீட்டு விழாவில் பேசிய நிலையில், ரஜினிகாந்திடம் இணைந்து நடித்தபோது இருந்த ஃபீலிங் கார்த்தியுடன் இணைந்து நடித்தபோது இருந்ததாக நடிகை ஜோதிகா அவரைப் புகழ்ந்து தள்ளியுள்ளார்.  கார்த்தி – ஜோதிகா முதல் முறையாக இணைந்து நடித்துள்ள தம்பி படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. வயாகம்18 ஸ்டுடியோஸ் மற்றும் பாரலல் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“ரஜினியின் அரசியல் பயணம் குறித்துப் பேச விரும்பவில்லை” – பாரதி ராஜா..!!

ரஜினியின் அரசியல் பயணம் குறித்து நான் பேச விரும்பவில்லை என இயக்குநர் பாரதி ராஜா பேசினார். நடிகர் ரஜினிகாந்தின் எழுபதாவது பிறந்த நாள் விழா வேலூர் மாவட்டம் ரங்காபுரத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. இதில் திரைப்பட இயக்குநர் பாரதி ராஜா தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தாணு, பட்டிமன்ற பேச்சாளர் ராஜா, பத்திரிகையாளர் ரங்கராஜ் பாண்டே உள்பட பலர் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் வேலூர் மாவட்ட ரஜினி மக்கள் மன்றம் சார்பில் பல்வேறு நபர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. […]

Categories
சினிமா தமிழ் சினிமா

தமிழ்த் திரையுலகில் இது புதுசு – சசிகுமாரின் ‘ராஜவம்சம்’

அறிமுக இயக்குநர் கதிர்வேலு இயக்கும் ‘ராஜவம்சம்’ திரைப்படத்தில் 49 முக்கிய நடிகர்கள் நடித்துள்ளனர். இயக்குநர் சசிகுமார் நடித்து செந்தூர் பிலிம் இன்டர்நேஷனல் சார்பில் டி.டி. ராஜா தயாரித்துள்ள ‘ராஜவம்சம்’ என்னும் திரைப்படத்தை அறிமுக இயக்குநர் கதிர்வேலு இயக்குகிறார். இவர் இயக்குநர் சுந்தர் சியின் உதவி இயக்குநராகப் பணியாற்றியுள்ளார். இப்படத்தில் பணியாற்றிய அனுபவம் சிறப்பாக இருந்ததாக இயக்குநர் கதிர்வேலு தெரிவித்தார். மேலும் முதல் படத்திலேயே 49 நடிகர்களை வைத்து படம் இயக்கியது சவாலான விஷயமாக இருந்ததாகவும் கதிர்வேலு கூறினார். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

வெப் சீரிஸ் லிஸ்ட்டில் இணைந்துள்ளார் தமன்னா..!!

டிஜிட்டல் களத்தில் நடிக்கும் சமந்தா, ரம்யா கிருஷ்ணன், பாபி சிம்ஹாவைத் தொடர்ந்து நடிகை தமன்னாவும் லிஸ்ட்டில் இணைந்துள்ளார். தற்போது டிஜிட்டல் தளத்தில் கதைகள் பலவும் சிறப்பாக எடுக்கப்பட்டு வரும் நிலையில் பல நடிகர்களும் வெப் சீரிஸில் ஆர்வத்துடன் நடித்து வருகின்றனர். தமிழிலும் சிறந்த திறம் வாய்ந்த நடிகர்கள் வெப் சீரிஸில் நடிக்க ஆர்வத்துடன் முன்வருகின்றனர். இந்நிலையில் நடிகை தமன்னாவும் ஹாட் ஸ்டார் தளத்தில் வெளி வரும் வெப் சீரிஸில் நடிக்கப்போகிறார். தமிழில் தயாரிக்கப்பட்டு வரும் இந்த வெப் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

டிஜிட்டல் களத்தில் கலக்க வரும் செல்ஃபி புள்ள..!!

டிஜிட்டல் தளத்தில் மிகவும் பிரபலமாக செயல்பட்டு வரும் அமேசான் பிரைமில் இடம்பெறும் ‘த ஃபேமிலி மேன்’ வெப் சீரிஸில் நடிகை சமந்தா நடிக்கவுள்ளார். தனது ட்விட்டர் பக்கத்தில் ‘த ஃபேமிலி மேன்’ வெப் சீரிஸில் நடிக்கவிருப்பதாகத் தனது ட்வீட்டில் நடிகை சமந்தா தெரிவித்துள்ளார்.குடும்பஸ்தனாக சீரிஸில் வலம் வரும் நாயகன் மனோஜ் பாஜ்பாய், தேசிய புலனாய்வு நிறுவனத்தில் ரகசியமாகப் பணியாற்றி வருவதைப்போல முதல் பாகம் வெளி வந்தது. இந்த சீரிஸ் வெளியான நாள் முதலே மக்களை ஈர்த்து வந்தது. […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘மிருகத்தனமான மனநோயாளிகள் வேட்டையாடப்படவேண்டும்’ – பதறிப்போன கீர்த்தி சுரேஷ்..!!

ஹைதராபாத்தில் மருத்துவர் பிரியங்கா ரெட்டியை கூட்டு பாலியல் வன்புணர்வு செய்து கொடூரமாக எரித்துக் கொன்ற வழக்கில் குற்றவாளிகளை விரைந்து தண்டிக்க வேண்டும் என நடிகை கீர்த்தி சுரேஷ் வலியுறுத்தியுள்ளார். தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் பணிக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பிய அரசு கால்நடை மருத்துவர் பிரியங்கா ரெட்டி நேற்று இரவு மிருகத்தனமான கொடும் வெறியர்களால் கூட்டு பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு எரித்துக்கொலை செய்யப்பட்டார். இச்சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக லாரி ஓட்டுநர் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நகைச்சுவை மன்னன் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனுக்கு இன்று 111ஆவது பிறந்தநாள்..!!

தமிழ் திரையுலகின் நகைச்சுவை மன்னனாக காலம்கடந்து மக்கள் மனதில் வாழும் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனுக்கு இன்று 111ஆவது பிறந்தநாள். நாட்டுப்புற நாடக கலைஞராக இருந்து தமிழ் திரையுலகின் நகைச்சுவை மன்னராக வெற்றிவாகை சூடியவர் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன். கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் 1908ஆம் ஆண்டு சுடலைமுத்து-இசக்கியம்மாள் தம்பதியின் மகனாகப் பிறந்தார். ஏழ்மையான குடும்பத்தில் பிறந்து கல்வியை முழுமையாக சுவைக்காமல் நான்காம் வகுப்பு வரை மட்டுமே கற்றார் கிருஷ்ணன். கல்வியறிவு மட்டுமே மனிதனை செதுக்குவதில்லை என்பதை உணர்ந்த அவர், நாடக கொட்டகைகளில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘பொல்லாதவன்’ நடிகைக்கு இன்று 37ஆவது பிறந்தநாள்..!!

நடிகையும், முன்னாள் எம்.பி.,யுமான ரம்யா இன்று தனது 37ஆவது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார். சிம்பு நடிப்பில் 2004இல் வெளியான ‘குத்து’ திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ரம்யா. தொடர்ந்து கிரி, பொல்லாதவன், தூண்டில், வாரணம் ஆயிரம், சிங்கம் புலி உள்ளிட்ட படங்களில் நடித்தார். அபி என்ற கன்னடத் திரைப்படம் மூலம் திரையுலகப் பயணத்தை தொடங்கிய இவர், கன்னடம், தெலுங்கு, தமிழ் ஆகிய மொழிகளில் 35க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். மேலும், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த இவர், […]

Categories
இந்திய சினிமா சினிமா

அரசியலுக்கு அடுத்து அதிரடி! முதல் மார்ஷியல் ஆர்ட்ஸ் பட டீஸரை வெளியிட்ட ராம்கோபால் வர்மா

அரசியல் படமான ‘கம்மா ராஜ்யம் லோ கடப்பா ரெட்லு’ படத்தின் ட்ரெயல்ரை வெளியிட்ட சில நாட்களில் இந்தியாவின் முதல் மார்ஷியல் ஆர்ட்ஸ் படம் என்ற டேக்லைனுடன், அதிரடி மன்னன் என்ற போற்றப்பட்ட புரூஸ்லீ பிறந்தநாளன்று ‘என்டர் தி கேர்ள் ட்ராகன்’ என்ற தனது அடுத்த படத்தின் டீஸரை வெளியிட்டுள்ளார் சர்ச்சை புகழ் இயக்குநர் ராம்கோபால் வர்மா இந்தியாவின் முதல் மார்ஷியல் ஆர்ட்ஸ் படம் என்று கூறி, ‘என்டர் தி கேர்ள் ட்ராகன்’ என்ற படத்தின் டீஸசரை ராம்கோபால் […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

பிரபல நடிகர் பாலாசிங் உடல் நலக்குறைவால் காலமானார்..!!

திரைப்பட நடிகர் பாலாசிங் உடல் நலக்குறைவால் சென்னை தனியார் மருத்துவமனையில் காலமானார். பிரபல குணச்சித்திர நடிகர் பாலாசிங் (67) உடல் நலக்குறைவால் சென்னை தனியார் மருத்துவ மனையில் இன்று அதிகாலை காலமானார். காய்ச்சல் மற்றும் மூச்சுத்திணறல் காரணமாக சென்னை வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் இவருக்கு தீவிரச் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. நேற்றைய தினமே உடல்நிலை மிக மோசமானதாகத் தகவல் வெளியாகியிருந்த நிலையில், இன்று அதிகாலை 2 மணியளவில் காலமானார். நடிகர் பாலாசிங் தமிழில், நடிகர் நாசர் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

மக்கள் செல்வனுக்கு பிடித்த அந்த 4 பேர் யார் தெரியுமா?

தனது நேரத்தை கழிக்க விரும்பும் நடிகர்களின் பெயர் பட்டியலை மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தெரிவித்தார். சங்கத்தமிழன் திரைப்படத்தை தொடர்ந்து நடிகர் விஜய் சேதுபதி லாபம், மாமனிதன், கடைசி விவசாயி, யாதும் ஊரே யாவரும் கேளிர் போன்ற திரைப்படங்களில் நடித்துவருகிறார். அதுமட்டுமல்லாமல் தெலுங்கு, இந்தி படங்களிலும் கவனம் செலுத்திவருகிறார். சமீபத்தில், தான் நேரத்தை கழிக்க விரும்பும் நடிகர்களின் பெயர் பட்டியலை குறிப்பிட்டு, அந்த காரணத்தையும் விளக்கியுள்ளார் விஜய் சேதுபதி. தனது முதல் ஆப்ஷனாக நடிகர் திலகம் சிவாஜி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

கௌதமுடன் மீண்டும் இணையும் இளம் இசையமைப்பாளர்..!!

‘எனை நோக்கி பாயும் தோட்டா’ திரைப்படம் இந்த வாரம் ரிலீஸ் ஆகவுள்ள நிலையில், தனது அடுத்த படமான ‘ஜோஸ்வா இமை போல் காக்க’ படத்துக்குத் தயாராகிக் கொண்டிருக்கிறார், இயக்குநர் கௌதம் மேனன். மூன்று வருடங்களுக்குப் பிறகு இயக்குநர் கௌதம் மேனனின் இயக்கத்தில் வெளிவரயிருக்கிறது ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ திரைப்படம். பல தாமதங்களுக்குப் பின் இத்திரைப்படத்தை வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் வெளியிடுகிறது. படத்தின் வெளியீட்டுப் பணிகள் நிறைவடைந்ததும், அடுத்தப் படமான ‘ஜோஸ்வா இமை போல் காக்க’ […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

உடல் தோற்றத்துக்காக சிறு வயதில் கேலி செய்யப்பட்ட இலியானா..!!

சிறு வயதில் மெலிதான தோற்றத்துக்காக கேலிக்கு ஆளாகி, மனம் நொந்ததாக நடிகை இலியானா சர்வதேச அமைப்பு ஒன்றில் தெரிவித்தார். தமிழில் கேடி திரைப்படம் மூலம் அறிமுகமான நடிகை இலியானா. அதற்குப் பின் தமிழில் நடிக்காமல் தெலுங்கில் நடித்து வந்தார். பின் 2012ஆம் ஆண்டு வெளிவந்த ‘நண்பன்’ திரைப்படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களை ஒல்லி பெல்லி இடுப்பால் கவர்ந்திழுத்தார். இதையடுத்து வேறு எந்தத் தமிழ் திரைப்படங்களிலும் அவர் நடிக்கவில்லை. இந்தியில் மட்டுமே ஆர்வமாய் நடித்து வந்தார். இந்தியிலும் தொடர்ந்து […]

Categories
Uncategorized சினிமா தமிழ் சினிமா

’பிக்பாஸ்’ புகழ் காயத்ரி ரகுராம் மீது வழக்குப்பதிவு..!!

சமூக வலைதளங்களில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் குறித்து கருத்து தெரிவித்த நடிகை காயத்ரி ரகுராம் மீது கடலூர் புதுநகர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்து கோயில்கள் குறித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், புதுச்சேரியில் சமீபத்தில் நடைபெற்ற மாநாட்டில் சர்ச்சைக்குறிய வகையில் கருத்து தெரிவித்திருந்தார். இதனையடுத்து பல்வேறு இந்து அமைப்புகள், அவரின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து அவருக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தினர். மேலும் இந்து அமைப்புகள் அளித்த புகாரின் பேரில், பல்வேறு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

1 கோடியா ? 2 கோடியா ? ஏதும் வேண்டாம்…. உதறித்தள்ளிய ரவுடி பேபி …!!

பிரேமம் திரைப்படத்தில் நாயகியாக அறிமுகமான பின்பு நல்ல கதாப்பாத்திரங்களில் நடித்து வருகிறார் நடிகை சாய் பல்லவி. தொடர்ந்து இவருக்கு நாளுக்கு நாள் ரசிகர்களும் பெருகிக்கொண்டே இருக்கின்றனர். இந்த ஆண்டு வெளிவந்த என்.ஜி.கே திரைப்படத்தைத் தொடர்ந்து எந்தப் படத்திலும் சாய் பல்லவியை காணவில்லை. இந்நிலையில் சாய் பல்லவி செய்த ஒரு காரியத்தை பலரும் பாராட்டி வருகின்றனர். ஒரு பிரபல ஆடை நிறுவனத்தின் விளம்பரத்தில் சாய் பல்லவி நடிப்பதற்கு மறுத்ததே பாராட்டுக்குக் காரணம். அந்நிறுவனம் ஒரு கோடி ரூபாய்க்கு ஒப்பந்தம் […]

Categories

Tech |