Categories
சினிமா தமிழ் சினிமா

தர்பார் நஷ்டம்… இயக்குனருக்கு மிரட்டல்… போலீஸ் பாதுகாப்பு..

திரைப்பட இயக்குனர் முருகதாஸுக்கு பாதுகாப்பு தருவது குறித்து பதிலளிக்க காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தர்பார் திரைப்படம் நஷ்டம் தொடர்பாக மிரட்டல் வருவதால் இயக்குனர் முருகதாஸ் தன்னுடைய வீட்டிற்கும் அலுவலகத்திற்கும் போலீஸ் பாதுகாப்பு கேட்டு உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அவரது மனு நீதிபதி ராஜமாணிக்கம் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது முருகதாசின் கோரிக்கை மீது எடுத்த நடவடிக்கை குறித்து பிப்ரவரி 10ஆம் தேதி விளக்கம் அளிக்க காவல் துறைக்கு நீதிபதி உத்தரவிட்டார்.

Categories

Tech |