டெல்லி :இலங்கை தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்க நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர் நரேந்திர மோடியிடம் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை விடுத்துள்ளார். மகாத்மா காந்தியின் 150ஆவது பிறந்தநாள் கொண்டாட்டம் குறித்த மாநாடு டெல்லியில் நடைபெற்றது. இதில் கலந்து கொள்ள டெல்லி சென்ற முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி , குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய போது, தமிழகத்தில் சட்டம், ஒழுங்கும் முறையாக பேணப்படுகிறது எனக் குறிப்பிட்டுள்ளார். அத்தோடு இந்தியாவில் […]
Tag: # Tamilnadu Politics
உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக திமுகவுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை சுமுகமாக நடைபெற்றதாக விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் சந்தித்து பேசினார். பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக ஸ்டாலினுடன் ஆலோசித்தாக தெரிவித்தார். குடியுரிமை திருத்த சட்டம் மிகவும் ஆபத்தானது என்றும் நாட்டின் ஒற்றுமை மற்றும் பாதுகாப்பை சீர்குலைக்க கூடியது எனவும்,தலைவர் […]
சென்னை மாநகராட்சியில் ஆற்று மணலுக்கு பதில் எம்-சாண்ட்-ஐப் பயன்படுத்தியதன் மூலம் 1000 கோடி ரூபாய் ஊழல் நடைபெற்று இருப்பது குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,மாநகராட்சிகளில் மூன்று ஆண்டுகளுக்கு மேலாக தொடரும் ஊழல் பற்றி லஞ்ச ஊழல் தடுப்புத்துறை சார்பில் நடத்தப்பட்ட திடீர் சோதனை எத்தனை எனக் கேள்வியெழுப்பியுள்ளார். அமைச்சர்கள் மட்டத்தில் நடக்கும் டெண்டர் ஊழல்கள் குறித்து இதுவரை இலஞ்ச ஊழல் தடுப்புத் துறை […]
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகிலுள்ள புளியம்பட்டி வியாபாரியிடம் தேர்தல் பறக்கும் படை ரூ :77 ஆயிரம் பறிமுதல் செய்து தாசில்தார் கணேசனிடம் ஒப்படைப்பு. ஈரோடு மாவட்டத்திலுளா அந்தியூர் அருகே அத்தாணி எனும் பகுதியில் வாகனசோதனையில் தேர்தல் பறக்கும் படை அலுவலர் செல்வராஜ் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக சென்ற சரக்கு ஏற்றும் வண்டியினை சோதனை செய்தபோது சின்னராஜ் 46 என்பவர் இவர் புளியம்பட்டியை சார்ந்தவர் இவர் புளியம்பட்டியில் இருந்து அந்தியூர் வழியாக அருகிலுள்ள சென்னம்பட்டியில் வாழைக்காய் வாங்கசெல்வதாகவும் […]