Categories
தேசிய செய்திகள்

தொடர்ந்து குறையும் வட்டி விகிதம்…. அச்சத்தில் மூத்த குடிமகன்கள்…..!!

பாரத ஸ்டேட் வங்கியானது மூத்த குடிமக்களுக்கான வட்டி விகிதத்தை 7 சதவீதத்திலிருந்து 6.9 சதவீதமாக குறைந்துவிட்டது. ஓய்வுபெற்ற மற்றும் வயது முதிர்ந்த பலர் வங்கிகள் தரும் வட்டியை தான் வாழ்வாதாரமாக கருதுகின்றனர். பாரத ஸ்டேட் வங்கி அண்மையில் ஒரு லட்சத்திற்கான முதலீட்டிற்க்கான வட்டி விகிதத்தை 3.50 லிருந்து 3.25 ஆக மாற்றி கால் சதவீதமாக குறைத்த நிலையில், இதர வங்கிகளும் இதனை பின்பற்ற உள்ள நிலையில் முதியவர்கள் கூடுதல் பங்கு சந்தை போன்ற வழிகளை நாட வேண்டிய […]

Categories
மாநில செய்திகள்

”கர்நாடகாவுக்கு அனுமதி கொடுக்காதீங்க” முதல்வர் – மத்திய அமைச்சருக்கு கடிதம் …!!

மேகதாது விவகாரம் தொடர்பாக மத்திய ஜலசக்தி துறை அமைச்சர் கஜேந்திர சிங்  ஷெகாவத்துக்கு ஒரு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார் மேகதாதுவில் அணை கட்டுவது தொடர்பாக ஏற்கனவே பல்வேறு நிலைகளில் தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் தமிழக முதலமைச்சர் தற்போது மத்திய ஜலசக்தி துறை அமைச்சர் கஜேந்திர சிங்  ஷெகாவத்துக்கு ஒரு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் மேகதாது விவகாரம் தொடர்பாக கர்நாடகாவின் திட்ட அனுமதிக்கு அனுமதியை மத்திய அரசு வழங்க கூடாது என்று தனது கடிதத்தின் வாயிலாக தமிழக […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

நள்ளிரவில் திருட்டு முயற்சி…. பிடிபட்ட திருடன்…. தர்மஅடி கொடுத்த பொதுமக்கள்….!!

கோவை மாவட்டம் சூலூர் அருகே வீட்டில் திருட முயன்ற திருடனை பொதுமக்கள் பிடித்து மரத்தில் கட்டி வைத்து தர்ம அடி கொடுத்து காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். கோவை மாவட்டம் சூலூர் பகுதியை அடுத்த  காக்காபாளையம் பகுதியில் தனது வீட்டில் ஜன்னல் கதவு மர்ம நபர்களால் திறக்கப்பட்டுவதை  மாணிக்கம் என்பவர் பார்த்துள்ளார். இதையடுத்து அங்கிருந்த சிலரை உதவிக்கு அழைத்து தப்பி ஓட முயன்ற  தஞ்சாவூரை சேர்ந்த கவியரசன் என்பவனை பிடித்து மரத்தில் கட்டி வைத்து தர்மஅடி கொடுத்ததாக கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து […]

Categories
மாநில செய்திகள்

”குற்றவாளிகளை ஆஜர்படுத்த முடியாது” நீதிபதிக்கு கடிதம் எழுதிய காவல்துறை ….!!

சீன அதிபரை வருவதால் குற்றவாளிகளை அழைத்து வருவதில் சிக்கல் ஏற்படுவதால் ஏ கே விஸ்வநாதன் நீதிபதிக்கு கடிதம் எழுதியுள்ளார். சீன அதிபர் , பிரதமர் மோடி சந்திப்பை ஒட்டி வரலாறு காணாத பாதுகாப்பு ஏற்பாடுகள் மாமல்லபுரம், சென்னையில் செய்யப்பட்டு இருக்கிறது. குறிப்பாக 16 ஆயிரத்துக்கும் அதிகமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருப்பதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த நிலையில் 10, 11 , 12 ஆம் தேதிகளில் நீதிமன்றங்களில் ஆஜர் படுத்த வேண்டிய விசாரணை கைதிகளை ஆஜர் […]

Categories
தேசிய செய்திகள்

25,00,000 பேர் பாதிப்பு…. 1,09,000 வீடுகள் சேதம்…. 2120 பேர் மரணம்…. 25 ஆண்டுகளில் வரலாறு காணாத இயற்கை பேரிடர்….!!

தென்மேற்கு பருவமழை காலத்தில் நாடு முழுவதும் மழை மற்றும் வெள்ளத்திற்கு 2100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். கடந்த இருபத்தைந்து ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இந்த சீசனில் அதிகபட்ச மழை பதிவாகியுள்ள நிலையில், மழை மற்றும் வெள்ளத்தால் நாடு முழுவதும் 2120 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 46 பேர் மாயமாக, 238 பேர் காயமடைந்துள்ளதாகவும் உள்துறை அமைச்சக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் அவர்கள் அளித்த தகவலின்படி 22 மாநிலங்களில் 25 இலட்சம் பேர் மழை வெள்ளத்தால் பாதிப்படைகின்றனர். 20 ஆயிரம் கால்நடைகள் […]

Categories
மாநில செய்திகள்

சீன அதிபருக்கு வரவேற்பு : ”9, 11 வகுப்பு…. 5,750 மாணவர்கள் பங்கேற்பு ….!!

சீன அதிபரை 5750 9 மற்றும் 11_ஆம் வகுப்பு மாணவர்கள் வரவேற்கின்றனர். நாளை மற்றும் நாளை மறுநாள் மாமல்லபுரத்தில் பிரதமர் மோடி மற்றும் சீன அதிபர் சந்திப்பு நடைபெற இருக்கின்றது. அதற்கான முன்னேற்பாடுகளை தமிழக அரசு துரிதமாக செய்து வருகின்றது. இந்நிலையில் நாளை சென்னை விமான நிலையம் வரும் சீன அதிபரை வரவேற்க பள்ளி மாணவர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர்.  ஒவ்வொரு பள்ளியில் இருந்தும்  எவ்வளவு மாணவர்கள் கலந்து கொள்கிறார்கள் என்ற பட்டியல் வெளியாகி இருக்கிறது. அந்த வகையில் சீன அதிபரை […]

Categories
தேசிய செய்திகள்

“ரூ100 கோடி ஒதுக்கீடு” விவசாய தொழில் முனைவோருக்கு மத்திய அரசின் அதிரடி திட்டம்…!!

விவசாயத்துறையில் இளம் தொழில் முனைவோரை ஊக்குவிக்கும் வகையில் மத்திய அரசு 100 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கூட்டுறவு தொழில்துறை ஊக்குவிப்பு திட்டத்தை தொடங்கியுள்ளது. இந்திய நாட்டின் 94 சதவிகித விவசாயிகள் கூட்டுறவு நிறுவனங்களில் உறுப்பினர்களாக உள்ள நிலையில் இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளிலும் உள்ள கூட்டுறவு நிறுவனங்களுக்கு இடையேயான வர்த்தகம் ஏற்றுமதி உள்ளிட்டவை மூலம் விவசாயிகள் வருமானத்தை இரட்டிப்பாக்க மத்திய அரசு சார்பில்  திட்டமிடப்பட்டுள்ளது. தொழில்துறை ஊக்குவிப்பு மற்றும் புதிய கண்டுபிடிப்பு திட்டம் என்ற புதிய திட்டத்தை டெல்லியில் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

நெல்லையில் சிறுக்கிழங்கு சாகுபடி மும்முரம்…. குதூகலத்தில் விவசாயிகள்….!!

நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சிறுகிழங்கு நடவு பணியில் விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவில் நாயக்கர்பட்டி வேப்பங்குளம் உள்ளிட்ட கிராமங்களில் ஆயிரம் ஏக்கருக்கு மேல் சிறுகிழங்கு பயரிடப்பட்டு உள்ளது. சீனா பொட்டேட்டோ என்று ஆங்கிலத்தில் குறிப்பிடப்படும் சிறுக்கிழங்கு நல்ல மணமும், சுவையும் கொண்டது. பெரிய அளவில் சாகுபடி செலவு தேவைப்படாமல் நல்ல வருமானம் கொடுக்கும் பயிராக இருப்பதால் விவசாயிகள் பலர் இதனை விரும்பி சாகுபடி செய்கின்றனர். மூன்று மாதங்களுக்கு முன்பு விதைகளை […]

Categories
மாநில செய்திகள்

”தமிழகம் வரும் சீன அதிபர்” 49 KM …… 49,000 பேர் …. 34 இடங்களில் வரவேற்பு ….!!

சென்னை வரும் சீன அதிபருக்கு 34  இடங்களில் வரவேற்பு அளிக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது நாளை மற்றும் நாளை மறுநாள் பிரதமர் மோடி மற்றும் சீன அதிபர் ஜி ஜிங்பிங் மாமல்லபுரத்தில் சந்திக்கின்றனர். இதற்காக தமிழகம் வரும் இரு தலைவர்களையும் 34 இடங்களில் வரவேற்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. சென்னை விமான நிலையத்தில் கரகாட்டம் , ஒயிலாட்டம் உள்ளிட்ட பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளோடு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது. விமான நிலையத்தில் இருந்து 5 கிலோ மீட்டர் தூரம் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சென்னை கடற்கரைகளில் தொடரும் மரணம்…. போலீஸ் நடவடிக்கைக்கு குவியும் பாராட்டு….!!

சென்னை திருவொற்றியூர் கடற்கரையில் அதிக அளவு உயிரிழப்புகள் நிகழ்ந்த பகுதிகளில் எச்சரிக்கை பலகைகளை காவல்துறையினர் நட்டு வருகின்றனர். சென்னை திருவெற்றியூர் கடற்கரை சாலையில் உள்ள கேவி குப்பம், ஒண்டிகுப்பம், கடற்கரை பகுதிகளில் அதிக அளவில் உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. குறிப்பாக பள்ளி, கல்லூரி மாணவர்கள் பலர் ஆபத்தை உணராமல் ஆழமான பகுதிகளுக்கு சென்று குளிப்பதற்கு முன்பு செல்பி எடுப்பது உள்ளிட்ட செயல்களில் ஈடுபடுவதால் உயிரிழப்பு அதிகரித்து வருகிறது. இதை தொடர்ந்து உயிரிழப்பு அதிகம் நடைபெற்ற இடங்களில் அதனை தடுக்கும் […]

Categories
மாநில செய்திகள்

தலைவர்கள் வருகை : கப்பற்படை …. விமானப்படை ….. போர்க்கப்பல் ….. 15,000 போலீஸ் பாதுகாப்பு …!!

பாதுகாப்பு வளையத்துக்குள் மாமல்லபுரம் பிரதமர் மோடி சீன அதிபர் ஜின்பிங் வருகையால் மாமல்லபுரத்தில் வரலாறு காணாத பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மாமல்லபுரத்தில் சீன  அதிபருடன் பிரதமர் மோடியும் நாளையும், மறுநாளும் பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர். இதற்காக மாமல்லபுரத்தில் கடற்படை , போர் கப்பல்கள் , விமானப்படை , விமானங்கள் , போலீசார் என இதுவரை இல்லாத பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இரு தலைவர்களின் வருகையை ஒட்டி மாமல்லபுரம் மற்றும் சென்னையில் 15 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

2 பச்சிளம் குழந்தைகளுடன் கழுத்தை அறுத்து தற்கொலை செய்து கொண்ட தாய்…. சென்னை கடற்கரையில் நிகழ்ந்த சோகம்….!!

சென்னையில் குழ்நதைகளின் கழுத்தை அறுத்து தாயும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படடுத்தியுள்ளது. மதுரையைச் சேர்ந்த பவித்ரா என்ற பெண் பெங்களூரில் கணவருடன் வசித்து வந்தார். புதன்கிழமை இரவு கணவருக்கு தெரியாமல் ஆறு வயது மகள் அனுஷ்யா மூன்று வயது மகன் பத்மேஷ் ஆகியோருடன் சென்னை வந்துள்ளார் பவித்ரா. மெரினா கடற்கரை விவேகானந்தர் இல்லம் பின்புறம் வைத்து குழந்தைகளின் கழுத்தையும் கத்தியால் அறுத்து அவரும் தனது கழுத்தையும் அறுத்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். குழந்தைகளின் அழும் சத்தம் […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

வாடிய பயிரை கண்டு வாடும் விவசாயிகள்….. நடவடிக்கை எடுக்குமா..?? தமிழக அரசு…!!

நாகை  மாவட்டத்தை சுற்றியுள்ள கிராம பகுதிகளில் தண்ணீர் இல்லாமல் கருகி கொண்டிருக்கும் பயிர்களை கண்டு விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். சீர்காழி சுற்றுவட்டாரங்களில் கடந்த 10 ஆண்டுகளாக மேட்டூர் நீர் வராததாலும் மழை பொய்த்து போனதாலும் முப்போகம் விளைந்த பகுதியில் தற்போது ஒரு போகம் விளைய வழி இல்லாமல் விவசாயிகள் தவித்து வருகின்றனர். இந்த ஆண்டு மேட்டூர் அணை விரைவில் நிரம்பியது. இதனால் சம்பா சாகுபடிக்கு மேட்டூர் அணை கடந்த ஆகஸ்ட் 13-ம் தேதி திறக்கப்பட்டது. இதனை நம்பி […]

Categories
காஞ்சிபுரம் சென்னை மாநில செய்திகள்

சீன அதிபர் வருகை : தனியார் பள்ளிகளே முடிவு செய்யலாம்… பள்ளி கல்வித்துறை அறிவுறுத்தல்..!!

சீன அதிபர் வருகையால்  தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அளிப்பது குறித்து பள்ளிகளே முடிவு செய்துகொள்ளலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது . பிரதமர் மோடி மற்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங் ஆகிய இரு நாட்டு தலைவர்கள் நாளை (12 ஆம்தேதி)  மற்றும் 13  ஆகிய இரு தேதிகளில் காஞ்சிபுரம்  மாவட்டம் மாமல்லபுரத்தில் நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த இருக்கின்றனர்.சீன அதிபர் தமிழகம் வருகையையொட்டி பல்வேறு  ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பல்வேறு பகுதிகளில் போக்குவரத்து மாற்றமும் செய்யப்பட்டுள்ளன. மேலும் சென்னை விமான நிலையம் முதல் மாமல்லபுரம் வரை 10,000-த்திற்கு அதிகமான […]

Categories
மாநில செய்திகள்

இதுவரை நிகழ்ந்த முக்கிய செய்திகள் …..!!

சென்னையில் நாளை முதல் இரண்டு நாட்களுக்கு போக்குவரத்து மாற்றம் கல்வி மற்றும் வணிக நிறுவனங்கள் முன் ஏற்பாடு செய்துகொள்ள அறிவுறுத்தல்.. சீன அதிபர் ஜி ஜின்பிங் வரவேற்க பிரம்மாண்ட ஏற்பாடுகள்… கண்கவர் கலை நிகழ்ச்சிக்கு கலை  கலைஞர்கள் ஒத்திகை. பிரதமர் மோடி சீன அதிபர் வருகையால் வரலாறு காணாத பாதுகாப்பு சிசிடிவி கேமராக்கள் 2 போர்க்கப்பல் என 5,000 போலீசார்  உச்ச கட்ட பாதுகாப்பு சீன அதிபரின் நிகழ்ச்சிக்கு நிகழ்ச்சி ஏற்பாடு பாதுகாப்பு உங்க பொறுப்பு 34 சிறப்பு […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

தமிழக ஓட்டுனரை தாக்கிய வடமாநிலத்தவர்கள்….. ஆதரவு அளித்த போலீசாருடன் பொதுமக்கள் மோதல்….. சென்னையில் பரபரப்பு…!!

தமிழக ஓட்டுனரை தாக்கிய வடமாநில இளைஞர்களுக்கு அடைக்கலம் கொடுத்ததாக கூறி பொதுமக்களுக்கும் காவல்துறை அதிகாரிகளுக்கும் இடையில் மோதல் ஏற்பட்டது. சென்னை நீலாங்கரையை சேர்ந்த சிவச்சந்திரன் என்பவர் ஓலா கால் டாக்ஸி ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார். புதன்கிழமை இரவு சென்னை டிஜிபி அலுவலகம் எதிரே சிவச்சந்திரனின் கால் டாக்ஸியில் வடமாநிலத்தவர்கள் ஏறியுள்ளனர். குடிபோதையில் இருந்த இருவரும் ஆர்கே சாலையில் வந்து கொண்டிருந்தபோது காரில் ஏசி குளிர்ச்சி போதவில்லை என்று கூறி தகராறு செய்ததோடு தாக்கியதாகவும் கூறப்படுகிறது. காரை நிறுத்திய […]

Categories
பல்சுவை

மகிழ்ச்சி….. மகிழ்ச்சி ….. ”பெட்ரோல் விலை குறைச்சுட்டு” கொண்டாடும் பொதுமக்கள் ….!!

பெட்ரோல் , டீசல் விலை குறைந்து  விற்பனை செய்யப்படுவதால் வாகன ஓட்டிகள்  மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தொடர்ந்து அதிகரித்து வந்த பெட்ரோல் மற்றும் டீசல் விலை தீடிரென சரிய தொடங்கியது. பின்னர் ஏற்றம் , இறக்கமாக இருந்து வருகின்றது . இதனால் வாகன ஓட்டிகள் தினம் தினம் என்ன விலை இருக்குமோ என்று சற்று குழம்பியே இருக்கின்றனர். ஒருநாள் அதிகமாகவும், ஒருநாள் குறைவாகவும், ஒருநாள் ஏற்ற இறக்கம் இல்லாமல் நிலையாகவும் இருந்து வருகின்றது.   விலை நிர்ணயம் : […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

”நடவு செய்த பள்ளி மாணவர்கள்” வேளாண் முக்கியத்துவத்தை உணர்த்தினர் ….!!

வேளாண் தொழிலின் முக்கியத்துவத்தை உணர்த்தும் விதமாக சிவகங்கையில் உள்ள தனியார் பள்ளி மாணவர்கள் வயலில் இறங்கி நாற்று நட்டனர்.  சிவகங்கையில் உள்ள மவுண்ட் லிட்டர் என்ற தனியார் பள்ளிகள் பாடத்திட்டத்துடன் சேர்ந்து வேளாண் தொழிலின் முக்கியத்துவத்தையும் அதன் பணிகளையும் மாணவர்களுக்கு கற்பித்து வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக சிவகங்கை பகுதிக்கு  அருகில் உள்ள குக்கிராமத்தில் இயற்கை வேளாண் பண்ணைக்குப் பள்ளி சார்பில் அழைத்து செல்லப்பட்ட மாணவர்கள் வயலில் இறங்கி பயிரிடப்பட்ட செடிகளை பார்வையிட்டனர். அதன்பிறகு ஆடுகள் வளர்க்க […]

Categories
மாநில செய்திகள் வானிலை

12 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு…. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை…!!

அக்டோபர் 20ம் தேதிக்கு மேல் வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் வளிமண்டல காற்று திசை மாறுபாட்டினால் கடந்த சில நாட்களாக தமிழகத்தின் சில மாவட்டங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்து வந்தது. இந்நிலையில் இம்மாதம் 20ம் தேதிக்கு மேல் வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதேசமயம் அடுத்த 24 மணி நேரத்தில் வெப்பச்சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் ஒரு […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

கோவில் உண்டியலை உடைத்து ரூ50,000 கொள்ளை…. சென்னையில் பரபரப்பு…!!

சென்னை புதுவண்ணாரப்பேட்டை சிசிடிவி கேமராவை திசை திருப்பிவிட்டு கோவில் உண்டியலை உடைத்து 50 ஆயிரம் ரூபாய் காணிக்கை பணம் திருடப்பட்டுள்ளது.  சென்னை  வண்ணாரப்பேட்டை பகுதியை அடுத்த  காமராஜர் சாலையில் உள்ள அரசு அச்சக குடியிருப்பு பகுதியில் இந்து அறநிலைய துறை கட்டுப்பாட்டில் பழமை வாய்ந்த ஸ்ரீ தேவி கருமாரியம்மன் ஆலயம் அமைந்துள்ளது. இன்று காலை கோவிலுக்கு வழக்கம்போல் சென்ற பூசாரி கோவிலின் கதவு திறக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். இதையடுத்து உள்ளே சென்று பார்த்தபோது உண்டியல் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

இடுப்பில் சொருகிய கத்தி…. வயிற்றை கிழித்ததால் பரிதாபமாக உயிரிழந்த இளைஞர்….!!

சென்னை அயனாவரத்தில் இடுப்பில் சொருகி வைத்திருந்த கத்தியை அவசரத்தில் எடுத்தபொழுது அடிவயிற்றில் அறுபட்டு இளைஞர் உயிரிழந்தார். சென்னை  வில்லிவாக்கத்தை சேர்ந்த மனோகரன் என்பவர் கஞ்சா மற்றும் மது போதைக்கு அடிமையானவர் என்று கூறப்படுகிறது. இதன் காரணமாக அவரை விட்டுப் பிரிந்த மனைவி சபிதா அயனாவரம் பகுதியில் உள்ள தனது தாய் வீட்டிற்கு சென்று வசித்து வந்தார். இந்நிலையில் நேற்று இரவு அங்கு சென்ற மனோகரன் மனைவியை தன்னுடன் அனுப்பி வைக்குமாறு தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. மேலும் சரிதாவின் […]

Categories
மாநில செய்திகள்

“பெற்றோர்களே கவனம்”அங்கீகாரமின்றி 2000 தனியார் பள்ளிகள்….. 250 பள்ளிகளுக்கு மெட்ரிக் பள்ளி இயக்ககம் எச்சரிக்கை….!!

தமிழகத்தில் அங்கீகாரமின்றி செயல்படும் 250 தனியார் பள்ளிகள் விரைந்து அங்கீகாரத்தை பெறுமாறு மெட்ரிக் பள்ளிகள் இயக்ககம்  அறிவுறுத்தியுள்ளது. தமிழகம் முழுவதும் அங்கீகாரம் இன்றி செயல்பட்ட 2000 மெட்ரிக் பள்ளிகளில் 1750 பள்ளிகள் அங்கீகாரம் பெற்றுள்ள நிலையில், இவற்றில் 250 தனியார் பள்ளிகள் என்னும் அங்கீகாரம் பெறாமல் இருந்துவரும் வருகின்றனர். இதையடுத்து  அங்கீகாரம் பெறாமல் செயல்பட்டு வரும் 250 பள்ளிகள் விரைந்து அங்கீகாரம் பெற வேண்டும் என மெட்ரிக் பள்ளிகள் இயக்ககம் அறிவுறுத்தியுள்ளது. மேலும் 2020 ஆம் ஆண்டு […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“பெற்றோர் அலட்சியம்” 6 வயது குழந்தை பலி…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

சென்னை தாம்பரம் அருகே வீட்டின் அருகே விளையாடிக்கொண்டிருந்த ஆறு வயது பெண் குழந்தை இரண்டாவது மாடியிலிருந்து கீழேவிழுந்து உயிரிழந்துள்ளது. சென்னை தாம்பரம்  பகுதியை அடுத்த திருமலை நகர் அருகே அடுக்குமாடி குடியிருப்பில் பார்த்திபன் சூரியகல என்ற தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு ராகவி என்ற பெண் குழந்தையும், ஒரு ஆண் குழந்தையும் உள்ளது. ராகவி வீட்டின் அருகே உள்ள தனியார் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் நேற்று மதியம் வீட்டில் விளையாடிக்கொண்டிருந்த ராகவி எதிர்பாராத […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

பெண் IT ஊழியர் ரயில் மோதி பலி….. செல்போனால் ஏற்பட்ட கோர விபத்து…!!

பெருங்களத்தூரில் கவனக்குறைவாக தண்டவாளத்தை கடக்க முயன்ற பொழுது ஐடி பெண் ஊழியர் ரெயில் மோதி உயிரிழந்தார். உடுமலைப் பேட்டையைச் சேர்ந்த ஸ்ரீ மித்ரா என்பவர் பெருங்களத்தூரில் தங்கி தனியார் IT  நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். வழக்கம்போல் வேலைக்கு நேற்று வேலைக்கு பெருங்களத்தூர் ரயில் நிலையம் சென்றார்  ஸ்ரீமித்ரா. அப்பொழுது தண்டவாளத்தை கவனக்குறைவாக செல்போன் பேசியபடியே கடக்க முயன்றுள்ளார். அப்போது அந்த வழியாக வந்த விரைவு ரயில் மோதியதில் தூக்கி வீசப்பட்ட சுமித்ரா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். […]

Categories
காஞ்சிபுரம் மாநில செய்திகள்

மோடி வருகையால் நடராஜா சர்வீஸ்…. மாமல்லபுர நகரத்தில் வாகனங்களுக்கு தடை…. திடீர் நடவடிக்கையால் மக்கள் அதிருப்தி….!!

காஞ்சிபுரம் மாவட்டம் மாமல்லபுரத்தில் இன்று காலை முதல் நான்கு சக்கர வாகனங்கள் நுழைய தடை விதிக்கப்பட்டு உள்ளது. பிரதமர் மோடி மற்றும் சீன அதிபர் ஜி ஜிங்பிங் ஆகியோர் வருகின்ற 12,13 ஆகிய தேதிகளில் காஞ்சிபுர மாவட்டம் மாமல்லபுரத்தில் பேச்சுவார்த்தை நடத்த இருக்கின்றனர். இந்நிலையில் தலைவர்களின் பாதுகாப்பு காரணங்களுக்காக இன்று முதல் மாமல்லபுரம் நகரத்திற்குள்  நான்கு சக்கர வாகனங்கள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. மாமல்லபுர நகரத்திற்குள் இருக்கும் பேருந்து நிலையம் தற்காலிகமாக மாற்றப்பட்டு கிழக்கு கடற்கரை சாலையில் […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

“ஓஎன்ஜிசி அட்டூழியம்” கருப்பு நிறத்தில் குடிநீர்….. நாகை மக்கள் வேதனை…!!

நாகை மாவட்டம் சீர்காழி அருகே ஓஎன்ஜிசி எண்ணெய் தொழில்நுட்ப பணியால் நிலத்தடி நீர் மாசு அடைந்து விட்டதாக பொதுமக்கள் புகார் அளிக்கின்றனர். நாகை மாவட்டம் சீர்காழி பகுதியை அடுத்த பழைய பாளையம் கிராமத்தில் ஓஎன்ஜிசி நிறுவனம் ஆழ்துளை கிணறுகள் அமைத்து எண்ணெய்  எடுப்பதற்கான பணிகளை மேற்கொண்டு வருகிறது. இதனால் அப்பகுதிகளில் உள்ள நிலத்தடி நீர் மாசடைந்து அடி பம்பில் தண்ணீர் கருப்பு நிறத்துடனும், துர்நாற்றத்துடனும்  வருவதாக அப்பகுதி மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர். மேலும் பழையபாளையம், புதுப்பட்டினம் உள்ளிட்ட 8 கிராமங்களில் நிலத்தடி […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

கத்தி குத்து வாங்கிய கூலி தொழிலாளி…. தப்பி ஓடிய மர்ம நபர்கள்…. திண்டுக்கல்லில் பரபரப்பு….!!

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே நள்ளிரவில் கூலித் தொழிலாளியை கத்தியால் தாக்கி விட்டு தப்பி ஓடிய மர்ம நபர்களை காவல்துறையினர்  தேடி வருகின்றனர். திண்டுக்கல் மாவட்டம்  வேடசந்தூர் பகுதியை அடுத்த குக்கிராமத்தைச் சேர்ந்தவர் கூலித்தொழிலாளி சின்னசாமி. இவருக்கு சொந்தமாக ஒரு தோட்டமும் உள்ளது. இவர் எப்பொழுதும் வேலை முடித்து விட்டு வீட்டில் உணவு உண்டு பின் காற்றோட்டமாக தூங்க தோட்டத்தில் உறங்குவது வழக்கம். அதே போல்  நேற்று தனது தோட்டத்தில் உறங்கிக் சின்னசாமி கொண்டிருந்தார். அப்பொழுது  நள்ளிரவில் இவரது தோட்டத்தில் […]

Categories
அரசியல்

பற்றி எரிகிறது ”ரஜினி அரசியலுக்கு வருவார்” எஸ்.வி. சேகர் கருத்து ….!!

ரஜினியை முதலமைச்சர் என்றால் பலருக்கு பத்திக்கொண்டு வருகிறது என்று நடிகர் எஸ்.வி. சேகர் தெரிவித்துள்ளார். ரஜினியின் வாழ்க்கை நன்றாக இருக்கிறது. தொடர்ந்து அவர் வாழ்க்கையில் சிறப்பாக வர வேண்டும். ரஜினி முதலமைச்சர் என்று சொன்னாலே பலருக்கு பற்றிக்கொண்டு வருகிறது ஏன் என்று தெரியவில்லை இந்த குதிரைதான் பஸ்ட் ஓடிவரும் நான் சொல்றதுக்கு என்ன உங்களுக்கு ஏன்கோவம் வருது ன்னு தெரியல. ரஜினி அரசியலுக்கு வரக்கூடாது  என்றால் அது சரியான விஷயம் கிடையாது. அதே போல ரஜினியும் எதுவும் செய்யல வர […]

Categories
அரசியல்

”ரஜினி அரசியலுக்கு வருவார்” நான் அவர் பின்னால் நிற்பேன் ….. ராதாரவி கருத்து …!!

ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவேன் வருவேன் என்று சொல்லிக்கொண்டிருக்கிறார் என்று நடிகர் ராதாரவி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் பேசும் போது, ரஜினி பின்னால நீக்க ஏன் இருக்கீங்கன்னு சொல்றாங்க. அவர் பிஜேபி நான் அண்ணா திமுக. நாங்க அல்லயன்ஸ் தானே இது தெரியாம பேசிட்டு இருக்கீங்கள.   S.V சேகர் சார் கிட்ட  ரஜினி சார் கண்டிப்பா அரசியலுக்கு வருவார் அப்படின்னு சொன்னேன். அதற்க்கு ரஜினி வந்தா எப்படி ஜெயிப்பீங்க என்று கேட்டார். ஜெயிக்க வேண்டுமென்றால் பவர் இருக்க வேண்டும் , பணம் இருக்க வேண்டும் , […]

Categories
அரசியல்

நாம குறைஞ்சவுங்க இல்ல….. தான்மனம் இருக்கணும்… கொதித்தெழுந்த தியாகராஜன் ….!!

காமராசர் சமாதிக்கு இதுவரை மலர்வளையம் வைத்திருக்கிறாரா மு.க.ஸ்டாலின்? – கராத்தே தியாகராஜன் கேள்வி எழுப்பியுள்ளார். இன்று செய்தியாளர்களை சந்தித்த கராத்தே தியாகராஜன் கூறுகையில் தென் சென்னையில் இருக்கின்ற அனைத்து நிர்வாகிகளும் காங்கிரஸ் படம் போட்டு, தலைவர் ராகுல் காந்தி , அன்னை சோனியா காந்தி , தலைவர் சிதம்பரம் படத்தை போட்டு தான் நாங்க போஸ்டர் அடிக்கின்றோம்.  எங்களை பொறுத்த வரைக்கும் காங்கிரஸ் கட்சியோட ஆதரவாக இருக்கின்றோம். இன்னைக்கு வந்து காங்கிரஸ் கட்சித் தலைவராக இருக்கும் அழகிரி திமுக […]

Categories
பல்சுவை

”மாற்றமின்றி பெட்ரோல் டீசல் விலை” பொதுமக்கள் மகிழ்ச்சி ……!!

பெட்ரோல் , டீசல் விலை மாற்றமின்றி  விற்பனை செய்யப்படுவதால் வாகன ஓட்டிகள்  மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தொடர்ந்து அதிகரித்து வந்த பெட்ரோல் மற்றும் டீசல் விலை தீடிரென சரிய தொடங்கியது. பின்னர் ஏற்றம் , இறக்கமாக இருந்து வருகின்றது . இதனால் வாகன ஓட்டிகள் தினம் தினம் என்ன விலை இருக்குமோ என்று சற்று குழம்பியே இருக்கின்றனர். ஒருநாள் அதிகமாகவும், ஒருநாள் குறைவாகவும், ஒருநாள் ஏற்ற இறக்கம் இல்லாமல் நிலையாகவும் இருந்து வருகின்றது. விலை நிர்ணயம் : சர்வதேச […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

6 பகுதி …. 6 வருடம் ….. 6000 கழிப்பறை…. சாதனை படைத்த மதுரை பெண் …!!

அரசு பணியை துறந்து சுகாதாரப் பணியில் சாதனை படைத்த மதுரை பெண் அனைவரையும் நெகிழ்ச்சி அடைய வைத்துள்ளார். அரசுப் பணியை துறந்து சுகாதாரப் பணியில் சாதனை படைத்த பெண் தமிழகத்தின் சுகாதாரத்திற்காக தனது வாழ்நாளை அர்ப்பணித்த மதுரை பெண்ணை 6 ஆயிரம் கழிப்பறைகள் கட்டி சாதனை படைத்துள்ளார் அவரது சாதனை பயணத்தை பற்றி தற்போது பார்க்கலாம்.மதுரை மாவட்டம் ஒத்தக்கடை சேர்ந்த திருமதி செல்வி என்பவர் இளம் வயதிலிருந்தே சுகாதாரத்தில் ஆர்வம் கொண்டவராக விளங்கினார். இந்த ஆர்வத்தின் வெளிப்பாடாக […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் சாதியை கையில் எடுக்கும் கட்சிகள் ….!!

வன்னியர்களுக்கான இட ஒதுக்கீடு தொடர்பாக திமுக மற்றும் பாமக இடையே கருத்து மோதல் வலுத்து வருகிறது. விக்கிரவாண்டி தொகுதிக்கு அக்டோபர் 21ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அரசியல் கட்சிகளின் பிரசாரம் சாதிரீதியாக திரும்பியுள்ளது. திமுக ஆட்சிக்கு வந்தால் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் , வன்னியர்களுக்கு இட ஒதுக்கீட்டில் உள் ஒதுக்கீடு வழங்கப்படும் என திமுக தலைவர் மு க ஸ்டாலின் அண்மையில் அறிக்கை வெளியிட்டிருந்தார்.இதற்கு பதில் அறிக்கை வெளியிட்ட பாமக நிறுவனர் ராமதாஸ் விக்ரவாண்டி சட்டப்பேரவைத் தொகுதிகளில் […]

Categories
சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

”தமிழகத்தில் 2,951 பேருக்கு டெங்கு” சுகாதாரத்துறை செயலாளர் தகவல் …!!

தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் அறிகுறியுடன் சுமார் 3000 பேர் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதாரத்துறை செயலாளர் திருமதி பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார். சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் காய்ச்சலுக்கான சிறப்பு சிகிச்சை பிரிவில் சுகாதாரத்துறை செயலாளர் திருமதி ஷீலா செய்து ஆய்வு மேற்கொண்டார் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் தமிழகம் முழுவதும் இதுவரை டெங்கு காய்ச்சல் அறிகுறியுடன் 2, 951 பேர் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவித்தார். சென்னையை பொறுத்தவரையில் வட சென்னையில் டெங்கு பாதிப்பு அதிகமாக இருப்பது […]

Categories
அரசியல்

விஸ்வாசம் அற்றவர்கள் ”ரஜினியை பயன்படுத்திட்டாங்க” காங்கிரஸ் மீது பாயும் கராத்தே ….!!

திருநாவுக்கரசர் நடிகர் ரஜினியை நன்றாக பயன்படுத்திவிட்டார், அவர் விஸ்வாசமற்றவர் என்று கராத்தே தியாகராஜன் கடுமையாக குற்றம் சாட்டியுள்ளார். இதுகுறித்து நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறும் போது , திருநாவுக்கரசர் ரஜினியை பயன்படுத்தி விட்டார். ஒருநாள் பட்டியில் சொல்றாரு எனக்கு நெருங்கிய நண்பர் 40 ஆண்டு கால நண்பர் என்று சொல்கிறார்கள். ஒரு தடவை ரஜினியை சொந்தக்காரர் என்று சொல்கிறார். இப்போ ஸ்டாலின் தான் முதலமைச்சர் என்று சொல்கிறார். திருநாவுக்கரசு  ரஜினி அரசியலுக்கு வந்துவிட்டார் என்றால் ”தப்பா நினைச்சுக்காதீங்க […]

Categories
மாநில செய்திகள்

அலறும் போராளிகள் ”பிரதமர் மோடியின் அதிரடி” கலக்கத்தில் தமிழ்நாடு …..!!

சீனா பொருட்களால் இந்தியாவின் வியாபாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதால் சீனாப் பொருட்களுக்கு, குறிப்பாக சீனாப் பட்டாசுக்கு மோடி தடை விதிக்க உள்ளார். மேக் இன் இந்தியா பொருட்கள் மட்டுமே விற்பனை செய்ய முடியும். இது சீனா ஏஜெண்டுகள் வயிற்றில் புளியைக் கரைத்து விட்டது.இந்தியாவின் வளர்ச்சி பிடிக்காமல் ஸ்டெர்லைட் போராட்டத்தை  சீனா தூண்டிவிடுவதாக பாஜக தலைவர்களும், ஒரு சில நடிகர்களும் கூறினார்கள். பிரதமர் மோடி சீனா அதிபர் ஜி ஜின்பிங் உடன் போனில் பேசும் போது, ஸ்டெர்லைட் போராட்டத்துக்கு, யார் […]

Categories
மாநில செய்திகள்

”வன்னியர்கள் ஒன்றும் அப்பாவி திமுக தொண்டர்கள் அல்ல” ராமதாஸ் காட்டமான அறிக்கை ….!!

வன்னியர்கள் ஒன்றும் அப்பாவி திமுக தொண்டர்கள் அல்ல’  என்று ராமதாஸ் காட்டமான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். முழுக்க முழுக்க வன்னியர்களுக்கு எதிராக செயல்பட்டு வரும் ஸ்டாலின் அவர்கள், இப்போது திடீரென தம்மை வன்னியர்களின் தோழன் என்று கூறிக் கொண்டால் அதை நம்பி ஏமாற வன்னியர்கள் ஒன்றும் அப்பாவி திமுக தொண்டர்கள் அல்ல என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார். பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் வெளியிட்ட அறிக்கையில், “வன்னியர்கள் என்றாலே எட்டிக்காயாக கசக்கும் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“அடுத்த மாதம் உள்ளாட்சித் தேர்தல் நடந்தே தீரும்”… அடித்து சொல்லும் செங்கோட்டையன்.!!

அடுத்த மாதம் உள்ளாட்சித் தேர்தல் நடந்தே தீரும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.  நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி ஆகிய 2 சட்ட மன்ற தொகுதிகளுக்கு வரும் 21 -ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகின்றது. இதில் போட்டியிடும் அதிமுக,  திமுக, காங்கிரஸ், நாம்தமிழர் உள்ளிட்ட கட்சிகள் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. அதிமுக சார்பில் வேட்பாளராக விக்கிரவாண்டி தொகுதியில் முத்தமிழ் செல்வனும், நாங்குநேரி தொகுதியில் ரெட்டியார்பட்டி வெ.நாராயணனும்  களம் காண்கின்றனர். இந்தநிலையில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் விக்கிரவாண்டி தொகுதி வேட்பாளர் முத்தமிழ்செல்வனுக்கு  ஆதரவாக […]

Categories
ஈரோடு கரூர் கிருஷ்ணகிரி திருநெல்வேலி தேனி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

தமிழக அணைகளின் இன்றைய (08.10.19) நீர் மட்டம்…..!!

தமிழக அணைகளின் உள்ள நீர் இருப்பு , நீர்வரத்து மற்றும் நீர் வெளியேற்றம் போன்ற விவரங்களை தெரிந்து கொள்ளலலாம். ஈரோடு பவானிசாகர் அணை : அணையின் நீர்மட்டம்- 95.60 அடி நீர் அணையின் நீர் இருப்பு 25.4 டிஎம்சி அணைக்கு நீர்வரத்து 2, 410 கன அடி அணையில் இருந்து நீர் வெளியேற்றம் 2, 900 கன அடி நெல்லை பாபநாசம் அணை : அணையின் நீர்மட்டம் 143 அடி அணையின் நீர் இருப்பு 106.40 அடி […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

”விசுவாசம் இல்ல” பாஜகவின் காலில் விழுகிறார் … அசிங்கப்பட்ட EPS …!!

முதல்வர் பதவி கொடுத்த சின்னம்மாவுக்கே விசுவாசமில்லாத பழனிசாமி தமிழக மக்களுக்கா விசுவாசமாக இருக்கப்போகிறார்? என்று சீமான் அவேசம் அடைந்துள்ளார் . இதுகுறித்து அவர் தெரிவித்த்தில் , தமிழகத்தில் ஆட்சியைக் காப்பாற்றிக்கொள்ள பாஜகவின் காலில் விழுந்து வருகிறார் பழனிச்சாமி. முதலமைச்சர் பதவி கொடுத்த சின்னம்மாவுக்கு விசுவாசமில்லாத பழனிச்சாமி தமிழக மக்களுக்கா விசுவாசமாக இருக்க போகிறார். மக்களின் வாக்கை பெறாதவர் அமைச்சராக முடியாது என்ற சட்டம் கொண்டு வரவேண்டும் சீமான் ஆவேசமாக தெரிவித்தார்.

Categories
அரசியல் மாநில செய்திகள்

”ஸ்டெர்லைட் திறந்த மகாராஜா நீங்க தானே” திமுக_வை விளாசிய சீமான் …!!

ஸ்டெர்லைட் ஆலையை திறந்து வைத்தது திமுக தான் என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் குற்றம் சாட்டினார். நெல்லை மாவட்டம் நாங்குநேரி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மூலைக்கரைப்பட்டி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ராஜநாராயணன் அறிமுக கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய சீமான் தமிழக மக்களை ஏமாற்றலாம் என திமுக நம்புவதாக தெரிவித்தார். தொடர்ச்சியாக மத்திய அமைச்சரவையிலிருந்து திமுக தான் இருந்தது என்றும் , அப்போது மீட்காத கச்சத்தீவை ஆட்சியில் இல்லாதபோதா மீட்கப் போகின்றது என்று […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

20 வழக்குகள்… தப்பிக்க தனக்கு தானே தீ வைத்த ரவுடி…. சேலத்தில் பரபரப்பு…!!

சேலத்தில் காவல் நிலையம் முன்பு தீக்குளிக்கும் முயற்சியில் ஈடுபட்ட ரவுடியை பொதுமக்கள் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். சேலம் மாவட்டம் கிச்சி பாளையம் பகுதியை சேர்ந்த பிரபல ரவுடி சிலம்பரசன் என்பவர் மீது 20க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. இந்த நிலையில் கடந்த ஞாயிறு அன்று கிச்சிப்பாளையம் காவல் நிலையம் அருகே வந்த சிலம்பரசன் தனது காலில் டீசலை ஊற்றி தீ வைத்துக் கொண்டார். இதனை பார்த்த பொதுமக்கள் அவரை மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.   […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

பழனியில் ரோப் கார் சேவை தொடக்கம்….. மகிழ்ச்சியில் பக்தர்கள்…!!

பழனி மலை கோவிலில் வருடாந்திர பராமரிப்பு பணிகள் முடிந்து 70 நாட்களுக்கு பின் பக்தர்களுக்கான ரோப்கார் சேவை இன்று மீண்டும் துவங்கியது. திண்டுக்கல் மாவட்டம் பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலில் பக்தர்கள் வருகைக்காக ரோப் கார்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரோப் கார் சேவை வருடத்திற்கு ஒருமுறை நிறுத்தப்பட்டு பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவது வழக்கம். இதன்படி கடந்த ஜூலை மாதம் 20ஆம் தேதி வருடாந்திர பராமரிப்பு சேவை நிறுத்தப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டது. பராமரிப்பு பணிகள் முடிவடைந்த […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

ஒரே நேரத்தில்…. வெடித்து சிதறிய வீட்டின் கதவுகள்… காற்றை அடைத்ததால் ஏற்பட்ட விபரீதம்…!!

சென்னையில் திடிரென்று வீட்டின் அனைத்து கதவுகளும் ஒரே நேரத்தில் வெடித்து சிதறிய சம்பவம் அப்பகுதியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை கிண்டி அடுத்த நேருநகர் வீரபாண்டிய கட்டபொம்மன் தெருவை சேர்ந்த மாரிமுத்து என்பவர் நேற்றைய தினம் தனது மருமகள் பேரன் ஆகியோருடன் வீட்டின் அனைத்துக் கதவு மற்றும்  ஜன்னல்களை மூடி டிவி பார்த்துக் கொண்டிருந்தார். மேலும் வீட்டின் உள் அறையில் ஏசி ஆன் செய்திருந்ததால் அந்த கதவையும் பூட்டிவிட்டு டிவி பார்த்துக்கொண்டிருந்தார். இந்நிலையில் திடீரென்று அவர் வீட்டில் இருந்த […]

Categories
அரசியல் சென்னை மாவட்ட செய்திகள்

பாரம்பரியம் காக்க…. பூம் பூம் மாட்டிடம் ஆசி…. வைரலாகும் அமைச்சர் வீடியோ…!!

மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் பூம்பூம்மாட்டிடம் ஆசி பெற்ற வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. சென்னை பட்டினப்பாக்கத்தில் அமைந்துள்ள அமைச்சர் ஜெயக்குமார் வீடு இருக்கும் வீதியில் குடுகுடுப்பைக்காரர் ஒருவர் சென்றுகொண்டிருந்தார். இதை கண்ட அமைச்சர் ஜெயக்குமார் வீட்டை விட்டு வெளியே சென்று பூம்பூம்மாட்டிடம் ஆசி பெற்றார். இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளத்தில் வைரலாக, இது குறித்து பேசிய அமைச்சர் ஜெயக்குமார், பூம் பூம் மாட்டுக்காரன் தெருவில் வந்தாண்டி டும் டும் மேளம் தட்டி […]

Categories
பல்சுவை

”தொடர்ந்து சரியும் பெட்ரோல், டீசல் விலை” வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி ….!!

இன்றும் பெட்ரோல் , டீசல் விலை குறைத்து  விற்பனை செய்யப்படுவதால் வாகன ஓட்டிகள்  மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தொடர்ந்து அதிகரித்து வந்த பெட்ரோல் மற்றும் டீசல் விலை தீடிரென சரிய தொடங்கியது. பின்னர் ஏற்றம் , இறக்கமாக இருந்து வருகின்றது . இதனால் வாகன ஓட்டிகள் தினம் தினம் என்ன விலை இருக்குமோ என்று சற்று குழம்பியே இருக்கின்றனர். ஒருநாள் அதிகமாகவும், ஒருநாள் குறைவாகவும், ஒருநாள் ஏற்ற இறக்கம் இல்லாமல் நிலையாகவும் இருந்து வருகின்றது. விலை நிர்ணயம் : சர்வதேச சந்தை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

”சொத்தை பாதுகாக்க குடும்ப அரசியல்” ஸ்டாலின் மீது அமைச்சர் பாய்ச்சல் …!!

சொத்துக்களை பாதுகாக்கவே திமுக தலைவர் மு க ஸ்டாலின் குடும்ப அரசியல் செய்து வருவதாக அமைச்சர் ஆர் வி உதயகுமார் குற்றம் சாட்டியுள்ளார்.  நாங்குநேரி சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளரை ஆதரித்து நாங்குநேரி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் அமைச்சர் ஆர் பி உதயகுமார் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். தெருக்களில் வீடு வீடாக சென்று மக்களிடம் பிரச்சாரம் செய்த அமைச்சர் RB உதயகுமார் அதிமுக ஆட்சியில்தான் காவல்துறையினர் சுதந்திரமாக செயல்பட்டு தமிழகம் அமைதிப் பூங்காவாக மாறி உள்ளதாக தெரிவித்தார். அதேபோல் தமிழக முதல்வர் […]

Categories
மாநில செய்திகள்

”மோடி ஷி ஜின்பிங் சந்திப்பு” தயாராகும் தமிழகம் …..!!

தமிழகம் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் சீன அதிபர் ஷி ஜின்பிங் கை வரவேற்க தயாராகி வருகிறது. வருகின்ற 11ம் தேதி அரசு முறை பயணமாக தமிழ்நாடு வரும் சீன அதிபர் ஜிங்பிங்_கை  வரவேற்பதற்கான பல்வேறு முன்னேற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தமிழ்நாடு வரக்கூடிய சீன அதிபர் 11 , 12, 13 ஆகிய மூன்று நாட்கள் இங்கேயே தங்கி இருக்கிறார். இந்திய சீன நல்லுறவு தொடர்பான பேச்சுவார்த்தையை பிரதமர் மோடியுடன் காஞ்சிபுரம் மாவட்டத்தில் மேற்கொள்கிறார். 11-ஆம் தேதி சென்னை விமான நிலையம் வரக்கூடிய சீன […]

Categories
அரசியல்

”தேச துரோக வழக்கை இரத்து செய்” பிரதமருக்கு கடிதம் அனுப்பும் விசிக …..!!

பிரதமருக்குக் கடிதம் எழுதிய இயக்குநர் திரு.மணிரத்னம் உள்ளிட்ட 49 பேர் மீது தேச துரோக வழக்கை இரத்து செய்ய விடுதலை சிறுத்தைகள் கட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது. கடந்த ஜூலை மாதம் நாட்டின் சினிமா, கலை, இலக்கியம், அறிவியல், மருத்துவம் உட்பட பல்வேறு துறையைச் சார்ந்த , பிரபலங்கள் , முக்கிய ஆளுமைகள் அனைவரும் ஒன்றிணைந்து பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் ஒன்றை எழுதியிருந்தனர். இயக்குநர் மணிரத்னம், நடிகை ரேவதி, திரைப்படத் தயாரிப்பாளர் ஷியாம் பெனகல், அபர்ணா சென், உட்பட முக்கிய 49 […]

Categories
பல்சுவை

”பெட்ரோல் , டீசல் விலை குறைவு” பொதுமக்கள் மகிழ்ச்சி ….!!

இன்றும் பெட்ரோல் , டீசல் விலை குறைத்து  விற்பனை செய்யப்படுவதால் வாகன ஓட்டிகள்  மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தொடர்ந்து அதிகரித்து வந்த பெட்ரோல் மற்றும் டீசல் விலை தீடிரென சரிய தொடங்கியது. பின்னர் ஏற்றம் , இறக்கமாக இருந்து வருகின்றது . இதனால் வாகன ஓட்டிகள் தினம் தினம் என்ன விலை இருக்குமோ என்று சற்று குழம்பியே இருக்கின்றனர். ஒருநாள் அதிகமாகவும், ஒருநாள் குறைவாகவும், ஒருநாள் ஏற்ற இறக்கம் இல்லாமல் நிலையாகவும் இருந்து வருகின்றது.   விலை நிர்ணயம் : சர்வதேச […]

Categories

Tech |