Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

“உயர்மின் கோபுரம்” விவசாய நிலங்களுக்குள் அத்துமீறல்… பெண்களிடம் இரக்கமின்றி நடந்து கொண்ட போலீசார்..!!

பல்லடம் அருகே உயர் மின் கோபுரம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளை காவல்துறையினர் வலுக்கட்டாயமாக கைது செய்தனர். திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே சாலையூர் உள்ளிட்ட கிராமங்களில் உயர் மின் கோபுரங்கள் அமைப்பதற்காக நில அளவீடு செய்ய அதிகாரிகள் வந்து இருந்தனர். அவர்களை சிறைபிடித்த விவசாயிகள் விவசாய நிலத்தில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து வந்த காவல்துறை அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை வலுக்கட்டாயமாக கைது செய்ததால் இருதரப்பினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதையடுத்து செய்தியாளர்களை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

பரிதாபத்தில் ப.சி…”கை கழுவிய தமிழ்.காங்” புறக்கணித்த தலைவர்கள்…!!

ப.சிதம்பரம் கைது செய்ததை கண்டித்து நடைபெற்ற போராட்டத்தில் பல்வேறு முக்கிய தலைவர்கள் பங்கேற்காதது தொண்டர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம்  24 மணி நேரத்திற்கு பின்பு நேற்று செய்தியாளர்களை சந்திக்க காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகத்திற்கு வருகை தந்தார்.இதையறிந்த சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகத்திற்கு விரைந்தனர். இதை தொடர்ந்து தன்னுடைய பத்திரிக்கையாளர் சந்திப்பை விரைவாக முடித்துக் கொண்ட ப.சிதம்பரம் டெல்லி வீட்டிற்கு சென்றார்.இதையடுத்து […]

Categories
மாநில செய்திகள்

“TET தேர்வு 1% மட்டுமே தேர்ச்சி” வேணும்னு தான் செய்தோம்… கனவில் மண் அள்ளி போட்ட டிஆர்பி..!!

டெட் தேர்வில் ஒரு சதவீதத்திற்கும் குறைவான தேர்ச்சி விகிதம் வந்துள்ளது இதற்கு வினாத்தாள் கடுமையாக எளிதாக பலரும் குற்றம் சாட்டி வந்த நிலையில் அதற்கான காரணத்தை டிஆர்பி அதிகாரிகள் வெளியிட்டுள்ளனர். கட்டாய கல்வி உரிமை சட்டத்தின்படி அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் ஆசிரியராக பணியாற்ற ஆசிரியர் தகுதித் தேர்வில் கட்டாயம் தேர்ச்சி பெற வேண்டும் என்ற விதிமுறை தமிழகத்தில் 2011ஆம் ஆண்டு முதல் அமலில் இருந்தது. இந்த வகையில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை கற்பிக்கும்  […]

Categories
தேசிய செய்திகள்

எட்டு வழி சாலை ”குழப்பமான திட்டம்” உச்சநீதிமன்றம் அதிரடி…!!

எட்டு வழி சாலை திட்டமே குழப்பமாக இருக்கின்றது என்று உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. எட்டு வழிச்சாலை தொடர்பாக ஏற்கனவே தமிழக அரசு பிறப்பித்த அரசாணையை ரத்து செய்த சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து இந்தத் திட்டத்தின் இயக்குனராக  இருக்க கூடிய நபர் சார்பாக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யபட்டது. இந்த மேல்முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்றத்தில் நீதிபதி  ரமணா அமர்வு முன்பு விசாரணைக்கு  வந்தது.இதில் நீதிமன்றம் பல்வேறு கேள்விகளை எழுப்பியது. நிலம் கையகப்படுத்தும் முறையானது எந்த அடிப்படையில் நீங்கள் மேற்கொள்ள இருக்கிறீர்கள், இதற்கான விரிவான […]

Categories
தேசிய செய்திகள் மாநில செய்திகள்

சேலம்-சென்னை எட்டுவழிசாலை தொடங்கப்படாது- மத்திய அரசு பதில்

சுற்றுச்சூழல் அனுமதி இல்லாமல் சேலம்-சென்னை எட்டு வழி சாலை தொடங்கப்படாது என்று மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில்  தெரிவித்துள்ளது. எட்டு வழிச்சாலை தொடர்பாக ஏற்கனவே தமிழக அரசு பிறப்பித்த அரசாணையை ரத்து செய்த சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து இந்தத் திட்டத்தின் இயக்குனராக  இருக்க கூடிய நபர் சார்பாக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யபட்டது. இந்த மேல்முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்றத்தில் நீதிபதி  ரமணா அமர்வு முன்பு விசாரணைக்கு  வந்தது. இதில் எட்டுவழிசலை திட்டத்தை செயல்படுத்துவது தொடர்பான திட்ட வரைபடத்தை நீதிபதி முன்பு சமர்ப்பித்தது. அதுமட்டுமில்லாமல் சுற்றுச்சூழல் அனுமதி […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ப.சிதம்பரம் கைது : தமிழகம் முழுவதும் காங்கிரஸ் போராட்டம்…..!!

ப.சிதம்பரத்தை  கைது செய்யப்பட்டதை எதிர்த்து தமிழகம் முழுவதும் காங்கிரஸ் கட்சி போராட்டம் அறிவித்துள்ளது. ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம்  24 மணி நேரத்திற்கு பின்பு நேற்று செய்தியாளர்களை சந்திக்க காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகத்திற்கு வருகை தந்தார்.இதையறிந்த சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகத்திற்கு விரைந்தனர். இதை தொடர்ந்து தன்னுடைய பத்திரிக்கையாளர் சந்திப்பை விரைவாக முடித்துக் கொண்ட ப.சிதம்பரம் டெல்லி வீட்டிற்கு சென்றார்.இதையடுத்து இரவோடு இரவாக சிபிஐ […]

Categories
அரசியல்

சிதம்பரத்தின் கைது எதிர்க்கட்சிகளுக்கு விடுக்கப்பட்ட மிரட்டல்… R.S.பாரதி கருத்து..!!

அனைத்து எதிர்க்கட்சி தலைவர்களுக்கு மிரட்டல் விடுக்கும் விதமாக பா சிதம்பரம் கைது செய்யப்பட்டுள்ளார் என திமுகவின் அமைப்புச் செயலாளர் ஆர் எஸ் பாரதி கூறியுள்ளார். ஐஎன்எக்ஸ் வழக்கில் ஒரு நாள் முழுவதும் தேடப்பட்டு வந்த காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் மூத்த வழக்கறிஞருமான ப.சிதம்பரத்தை நேற்று இரவு அவரது இல்லத்தில் சுவர் ஏறி குதித்து சிபிஐ அதிகாரிகள் அதிரடியாக கைது செய்தனர். இரவோடு இரவாக சிபிஐ தலைமை அலுவலகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு  தற்போது வரை விசாரிக்கப்பட்டு வருகிறார். […]

Categories
பல்சுவை

2_ஆவது நாளாக ”மாற்றமின்று பெட்ரோல் ,டீசல்” பொதுமக்கள் மகிழ்ச்சி…!!

பெட்ரோல்  மற்றும் டீசல் விலை இரண்டாவது நாளாக மாற்றமின்றி விற்பனை செய்யப்படுவதால் வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தொடர்ந்து அதிகரித்து வந்த பெட்ரோல் மற்றும் டீசல் விலை தீடிரென சரிய தொடங்கியது. பின்னர் ஏற்றம் , இறக்கமாக இருந்து வருகின்றது . இதனால் வாகன ஓட்டிகள் தினம் தினம் என்ன விலை இருக்குமோ என்று சற்று குழம்பியே இருக்கின்றனர். ஒருநாள் அதிகமாகவும், ஒருநாள் குறைவாகவும், ஒருநாள் ஏற்ற இறக்கம் இல்லாமல் நிலையாகவும் இருந்து வருகின்றது. விலை நிர்ணயம் :  சர்வதேச சந்தை […]

Categories
மாநில செய்திகள்

”தண்ணீர் லாரிகள் ஸ்டிரைக் வாபஸ்” பேச்சுவார்த்தையில் உடன்பாடு…!!

பேச்சுவார்த்தையில் ஏற்பட்ட உடன்பாட்டின் காரணமாக தனியார் குடிநீர் லாரி போராட்டம் வாபஸ் பெறப்பட்ட்டுள்ளது. நிலத்தடி நீர் உறிஞ்சுவதை தடுக்க நீதிமன்றம் பல்வேறு நிபந்தனைகளை விதித்தது. தமிழக அரசும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தது.அந்த வகையில் உரிமம் இல்லாமல் தண்ணீர் எடுக்கும் தனியார் தண்ணீர் லாரி மீது வழக்கு பதிவு செய்து லாரி சிறப்படுத்தப்பட்டது. இந்நிலையில் தமிழகம் முழுவதும் தனியார் தண்ணீர் லாரிகள் போராட்டம் அறிவித்து இன்று காலை முதல் வேலை நிறுத்தத்தை நடத்தினர். மேலும் எங்களுக்கு நிரந்தர உரிமம் வழங்க […]

Categories
அரசியல்

கெட்ட வார்த்தை போட்டி… நான் தான் “FIRST AND BEST” புகழ்ந்து கொண்ட ஜெயக்குமார்..!!

மோசமான வார்த்தைகளை பேச வேண்டும்  என்ற போட்டி வைத்தால் நான்  தான்  முதலிடத்தை பெறுவேன்  என்று அமைச்சர் ஜெயக்குமார் குறிப்பிட்டுள்ளார். தமிழ்நாடு அரசு பணியாளர்கள் குரூப்-4 தேர்வுக்கான ஒரு நாள் முகாம் சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றிய அமைச்சர் ஜெயக்குமார். ஆசிரியர்கள், மாணவர்கள், அரசு ஊழியர்கள் ஆகியோர் அவரவர் பணியில்  சிறந்து விளங்க தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பயிற்சி முகாம்கள்  நடத்தப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார். பின் செய்தியாளர்களை  சந்தித்த அவர்,  சிதம்பரத்திற்கு […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

கணவன் வெளியூரில்…. சந்தர்ப்பத்தை பயன்படுத்திய வாலிபர்… கமிஷனரிடம் மனு கொடுத்த இளம்பெண்..!!

இளம்பெண் ஒருவர் தான் தனியாக வசித்து வருவதால் பக்கத்து வீட்டு வாலிபர் பாலியல் தொல்லை கொடுப்பதாக  கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார்.  சென்னையை அடுத்துள்ள மாங்காடு பகுதியைச் சேர்ந்தஇளம்பெண் ஒருவர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் ஒரு புகார் மனு ஒன்றை அளித்தார். அதில் அவர் தெரிவித்திருப்பதாவது, கோவூர் பகுதியில் கடந்த 10 ஆண்டுகளாக வசித்து வருகிறேன். எனது கணவர் பெங்களூருவில் கார் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். பக்கத்து வீட்டில் வசித்து வரும் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

சினிமாவை மிஞ்சிய கொடூரம்… காவல் நிலைய வாசலிலே தொழிலதிபர் வெட்டி கொலை..!!

தூத்துக்குடியில் சினிமாவை மிஞ்சும் வகையில் காவல் நிலையம் அருகே ரியல் எஸ்டேட் அதிபர் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார். நெல்லை பாளையங்கோட்டை கேடிசி நகரை சேர்ந்தவர் சிவகுமார்.  ரியல் எஸ்டேட் தொழில் செய்து வரும் இவர் மீது கொலை வழக்கு ஒன்று நிலுவையில் இருப்பதாகவும், பல்வேறு நிலையில் தொழில் போட்டி இருந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் இன்று காலை தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலையம் அருகில் உள்ள தனது அண்ணன் முத்துக்குமார் அலுவலகத்திற்கு சென்று விட்டு சிவகுமார் திரும்பியுள்ளார். அப்போது […]

Categories
மாநில செய்திகள்

நீதிபதி வேண்டாம்…”தலைமை நீதிபதிக்கு மனு”….திரண்ட 64 வழக்கறிஞர்கள்…!!

கிறிஸ்துவ மத வழக்குகளை நீதிபதி வைத்தியநாதன் முன் பட்டியலிட வேண்டாம் என்று 64 வழக்கறிஞ்சர்கள் தலைமை நீதிபதிக்கு மனு அளித்துள்ளனர். சென்னையில் உள்ள மெட்ராஸ் கிறிஸ்தவ கல்லூரியில் பாலியல் புகாரில் சிக்கி பணிநீக்கம் செய்யப்பட்ட பேராசிரியர் ஒருவர் தனது பணி நீக்க உத்தரவை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு  தொடர்ந்தார். அந்த வழக்கை விசாரித்த நீதிபதி வைத்தியநாதன் பேராசிரியரின் பணிநீக்கத்தை இரத்து செய்யமுடியாது என்று கூறியதோடு கிருத்துவ கல்விநிலையங்களில் பெண் குழந்தைகளின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது.இதனால் பெற்றோர் அச்சத்தில் இருப்பதாக தெரிவித்தார். மேலும் கட்டாய மதமாற்றம் […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

உடையும் நிலையில் அணை… 1500 ஏக்கர் நாசமாகும் அபாயம்… வேதனையில் விவசாயிகள்..!!

திருச்சி லால்குடி அருகே உடையும் நிலையில் உள்ள பங்குனி அணைக்கட்டை சீரமைக்க கோரி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள திருமங்கலத்தில் பங்குனி அணைக்கட்டு காவிரி ஆற்றில் இருந்து வரும் நீர் மற்றும் உபரி நீரால் நிரம்புகிறது. சுமார் 1500 ஏக்கருக்கும் மேற்பட்ட விளை நிலங்களுக்கு பாசன தேவையை பூர்த்தி செய்து வரும் பங்குனி அணை கட்டு, தற்போது சேதமடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ளது. இது குறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் கோரிக்கை […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

கத்தி முனையில் கார் கடத்தல்… 1 மணி நேரத்தில் மடக்கி பிடித்த போலீசார்..!!

கோவை அருகே ஓட்டுனரை கத்தியால் குத்திக் கீழே தள்ளிவிட்டு மர்மநபர்கள் காரை கடத்திய பரபரப்பு சம்பவம் நடைபெற்றுள்ளது வசந்தகுமார் என்பவர் கோவையில் ரெட் டாக்ஸி என்ற பெயரில் கார் ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார். இரண்டு நபர்கள் இவரை அணுகி மதுரைக்கு கார் பேசி அழைத்துச் சென்றுள்ளனர். சூலூர் அருகே வந்தபோது ஏடிஎம்மில் பணம் எடுக்க வேண்டும் என்று நிறுத்த சொல்லியுள்ளனர். அப்போது திடீரென ஓட்டுநர் வசந்தகுமாரை கத்தியால் குத்திக் கீழே தள்ளி விட்டு இருவரும் காரை கடத்திச் […]

Categories
மாநில செய்திகள்

நேற்று அப்பாக்கு டெல்லி….. இன்று மகனுக்கு சென்னை….. ஆப்படிக்கும் நீதிமன்றம்….!!

நிலம் வாங்கியதை கணக்கில் காட்டவில்லை என்று தொடரப்பட்ட வழக்கில் கார்த்தி சிதம்பரம் கோரிக்கையை சென்னை உயர்நீதிமன்றம் நிராகரித்துள்ளது. 2015 மற்றும் 16 ஆம் ஆண்டில் முட்டு காட்டில் 1.8 ஏக்கர் நிலம் வாங்கியதில் 1.35 கோடி ரூபாய் கணக்கில் காட்டவில்லை என்று வருமான வரித்துறையினர் முன்னாள் மத்திய நிதியமைச்சர் அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் மீதும் அவரது மனைவி ஸ்ரீநிதி மீதும்  வழக்கு பதிவு செய்தனர். 2018-ஆம் ஆண்டு தொடரப்பட்ட இந்த வழக்கு எழும்பூரில் அமைக்கப்பட்ட சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வருகின்றது. இந்த வழக்கை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

24 மாதத்திற்குள் அனைவருக்கும் வீடு… OPS அறிவிப்பு..!!

18 முதல் 24 மாதங்களுக்குள்  அனைத்து  கட்டிட பணிகளும் முடிக்கப்பட்டு குடிசை மக்கள் கட்டிடங்களுக்கு மாற்றப்படுவார்கள்   என்று துணை முதல்வர் o.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார். கடந்த ஜூலை மாதம் நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டத்தொடரில் தமிழகம் குடிசைகள் இல்லாத மாநிலமாக மாறும் என்று விதி எண் 110-ன் கீழ் துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் அறிவித்தார். அதன்படி சென்னையில் பல்வேறு குடிசைப் பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டு அங்கே இருக்கக்கூடிய மக்களை அப்பார்ட்மெண்ட்க்கு மாற்றக்கூடிய பணிகள் விரைவாக நடைபெற்று வருகின்றன. […]

Categories
அரசியல்

”உப்பு தின்னா தண்ணீர் குடிக்கனும்” பிரேமலதா கருத்து …!!

ப.சிதம்பரத்துக்கு எதிரான அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ நடவடிக்கை குறித்து உப்பு தின்றால் தண்ணீர் குடிக்க வேண்டும் என்று பிரேமலதா தெரிவித்துள்ளார். ஐ.என்.எக்ஸ் மீடியா நிறுவனத்தின் 305 கோடி அன்னிய முதலீட்டில் முறைகேடு செய்த வழக்கில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் டெல்லி உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கேட்டிருந்தார். இதில் பொருளாதார குற்றங்கள் புரிந்தவர்கள் எளிதில் முன்ஜாமீன் பெற்றால் அந்த வழக்கு பலவீனப்பட்டு விடும் என்று டெல்லி உயர்நீதிமன்றம் சிதம்பரத்துக்கு முன் ஜாமின் வழங்க மறுத்தது  இந்த நிலையில் ப.சிதம்பரம் முன்ஜாமீன் இரத்து_க்கு எதிராக மேல்முறையீடு செய்து […]

Categories
Uncategorized

ரூ20,00,000 போதைப்பொருள் பறிமுதல்… தனிப்படை போலீசாரின் அதிரடி நடவடிக்கை…!!

சென்னை அருகே பெருங்களத்தூரில் 2 மினி வேன்களில் கடத்தப்பட்ட 20 லட்சம் மதிப்புள்ள குட்கா, பான்மசாலா பறிமுதல் செய்யப்பட்டது.  சென்னை தேசிய நெடுஞ்சாலையில் ஸ்டிங் ஆப்ரேஷன் என்ற பெயரில் தனிப்படை காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வந்த இரண்டு மினி வேனை நிறுத்தி சோதனையிட்டதில், 1338 கிலோ எடையுள்ள புகையிலை பொருட்கள் இருப்பது தெரியவந்தது. இது தொடர்பாக பெருங்குளத்தூரை  சேர்ந்த பிரகாஷ், முகமது ஆசாத் திருவண்ணாமலையைச் சேர்ந்த அருண்குமார் ஆகிய 3 பேரை காவல்துறையினர் […]

Categories
மாநில செய்திகள்

“தன் வினை தன்னை சுடும்” போஸ்க்கோ சட்டத்தை தவறாக பயன்படுத்திய பெண்ணிற்கு நேர்ந்த விபரீதம்..!!

தமிழகத்தில் முதன்முறையாக பெண் மீது போஸ்கோ சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் தனது மகளை கணவர் பாலியல் தொந்தரவு அளிப்பதாக  பொய் புகார் அளித்தது வழக்கை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்க்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது குறித்து அவர் அளித்த தீர்ப்பில், சம்மந்தப்பட்ட பெண் போஸ்கோ சட்டத்தை தவறாக பயன்படுத்தி உள்ளதாகவும், இது  முற்றிலும் தவறான உதாரணம் என்றும் கூறிய  அவர் , மகளின் எதிர்காலம் பற்றி கவலைப்படாமல் கணவருக்கு […]

Categories
மாநில செய்திகள்

“ஆசிரியர் தகுதி தேர்வு” 1,62,323 பேரில் 482 பேர் மட்டுமே தேர்ச்சி…. வெளியான அதிர்ச்சி ரிப்போர்ட்..!!

ஆசிரியர் தகுதித் தேர்வின் முதல் தாளில் ஒரு சதவீதம் பேர் கூட தேர்ச்சி பெறாதது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு கற்பிக்கும் ஆசிரியர்களுக்கான தகுதித் தேர்வின் முதல் தாள் கடந்த ஜூன் மாதம் எட்டாம் தேதி நடைபெற்றது. 1,62,323 பேர் இந்த தேர்வை எழுதினர். இதில் ஒரு சதவீதத்திற்கும் குறைவாக 482 பேர் மட்டுமே தேர்ச்சி அடைந்துள்ளனர். 150 மதிப்பெண்களுக்கு நடத்தப்பட்ட இந்த தேர்வில் அதிக பட்சமாக ஒருவர் மட்டுமே 99 […]

Categories
மாநில செய்திகள்

மழை விட்டதும் அணையை மூடிய கர்நாடகா… மேட்டூரில் 20,000 கனஅடியாக சரிந்த நீர்மட்டம்..!!

ஒகேனக்கல் மற்றும் மேட்டூருக்கு வரும் நீரின் அளவு 20,000 கன அடியாக குறைந்துள்ளது. காவிரி நீர்பிடிப்பு இடங்களில் பெய்த கனமழை காரணமாக கர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் நீர்வரத்து அதிகரித்து. தற்போது மழையின் அளவு குறைந்து விட்டதால் கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணையிலிருந்து நீர்திறப்பு வெகுவாக குறைந்து விட்டது. இதனால் ஒகேனக்கலுக்கு வந்து கொண்டிருக்கும் நீரின் அளவு வினாடிக்கு 10 ஆயிரம் கன அடியாக சரிந்துள்ளது. நீர்வரத்து குறைந்த போதிலும் தொடர்ந்து 14-வது நாளாக ஒகேனக்கல் அருவியில் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

தவறான உறவால் ஏற்பட்ட விபரீதம்…. காதலனோடு சேர்ந்து கணவனை போட்டு தள்ளிய மனைவி…!!

கணவனை கழுத்தை நெரித்து கொன்ற மனைவி மற்றும் கள்ளக்காதலன் ஆகிய இருவரையும் போலீசார் சிறையில் அடைத்தனர்.  மதுரையை அடுத்துள்ள ஜெய்ஹிந்த் புரத்தில் வசித்து வரும் தென்னரசு என்பவர் கார்களுக்கு பெயிண்ட் அடிக்கும் வேலை செய்து வருகிறார். இவரிடம் ஓட்டுநராக சரவணன் என்பவர் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் தென்னரசு மனைவி விஜயலெட்சுமிக்கும்  சரவணனுக்கும் இடையே தகாத உறவு இருப்பதாக சொல்லப்படுகிறது.தனது மனைவிக்கும் சரவணனுக்கும் இடையே தவறான உறவு இருப்பதை அறிந்த சரவணன் அவனை வேலையிலிருந்து நீக்கி யுள்ளார். இதனால் […]

Categories
மாநில செய்திகள் வானிலை

“கனமழை” 4 மாவட்டங்களில் 2 நாள் நீடிக்கும்… வானிலை ஆய்வு மையம் தகவல்..!!

தமிழகத்தில் சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வரும் நிலையில், மேலும் 2 நாட்களுக்கு மழை  நீடிக்கும்  என  வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் கடந்த சில நாட்களாகவே நல்ல மழை பெய்து வருகிறது. கடந்த இரண்டு நாட்களாக அதிகாலையில் பெய்து வரும் மழையால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் மற்றும் அதன் சுற்று வட்டாரங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதேபோல் சேலத்தில் அம்மாபேட்டை புதிய பேருந்து நிலையம் […]

Categories
காஞ்சிபுரம் சென்னை மாவட்ட செய்திகள்

“20,000 லிட்டர்” நிலத்தடி நீர் வேண்டும்… தண்ணி லாரிகள் வேலை நிறுத்தம்..!!

நிலத்தடி நீரை உறிஞ்சி எடுக்க அரசு அனுமதிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தனியார் தண்ணீர் லாரிகள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். சென்னையில் தனியார் தண்ணி லாரி உரிமையாளர்கள் 20 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு தண்ணீர் எடுக்க அனுமதிக்க வேண்டும் என்றும், நிலத்தடி நீரை உறிஞ்சி எடுக்க உரிமம் தரவேண்டும்  உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூரில் இன்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர். ஆனால் 20 […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“நடிகையை அழைத்து வருகிறேன்” ஆட்டோவை ஆட்டைய போட்ட பலே திருடன்..!!

சென்னையில் துணை நடிகையை அழைத்து வருவதாக கூறி மர்ம நபர் ஒருவர் ஆட்டோவை திருடி சென்றுள்ளார்.  சென்னை புளியந்தோப்பை சேர்ந்த ஜாவித் என்பவர் தனது ஆட்டோவை தனியார் கால் டாக்ஸி நிறுவனத்துடன் இணைத்து ஓட்டி வருகிறார். இந்நிலையில் இவரது ஆட்டோவில் ஏறிய ஒருவர் சாலிகிராமத்திற்கு  போகும்படி கூறியுள்ளார். அவரும் சாலி கிராமம் நோக்கி சென்றுள்ளார். சாலிகிராமம் அருகில் வந்ததும் துணை நடிகையை அழைத்து வரவேண்டும் நான் மட்டும் போகிறேன் நீங்கள் வந்தால் அது சரியாக இருக்காது என்று ஜாவித்திடம் தெரிவித்துள்ளார். அதன்படி […]

Categories
பல்சுவை

பெட்ரோல், டீசல் விலை மாற்றமில்லை…. வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி..!!

பெட்ரோல்  மற்றும் டீசல் விலை மாற்றமின்றி விற்பனை செய்யப்படுவதால் வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தொடர்ந்து அதிகரித்து வந்த பெட்ரோல் மற்றும் டீசல் விலை தீடிரென சரிய தொடங்கியது. பின்னர் ஏற்றம் , இறக்கமாக இருந்து வருகின்றது . இதனால் வாகன ஓட்டிகள் தினம் தினம் என்ன விலை இருக்குமோ என்று சற்று குழம்பியே இருக்கின்றனர். ஒருநாள் அதிகமாகவும், ஒருநாள் குறைவாகவும், ஒருநாள் ஏற்ற இறக்கம் இல்லாமல் நிலையாகவும் இருந்து வருகின்றது. விலை நிர்ணயம் :  சர்வதேச சந்தை கச்சா […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“30 ஆண்டு சகாப்தம்” கமலுடன் முதன்முதலாக இணையும் விவேக்..!!

நடிகர் விவேக் சினிமா வாழ்க்கைக்கு வந்து 30 ஆண்டுகள் கடந்த நிலையில் முதன்முறையாக  கமலுடன் இணைந்து நடிக்கிறார். பிரபல காமெடி நடிகரான விவேக் 30 ஆண்டுகளுக்கும் மேல் சினிமா வாழ்க்கையில் புகழ்பெற்ற  நடிகராக திகழ்ந்து வந்தார். அவர் நடிகர் விஜய், அஜித், ரஜினி, சூர்யா,தனுஷ் உள்ளிட்ட பல தமிழக சூப்பர் ஸ்டார்களுடன் நடித்துள்ளார். ஆனால் இதுவரை ஒரு முறை கூட உலக நாயகன் கமலுடன் இணைந்து நடித்ததே இல்லை. இந்நிலையில் 30 ஆண்டுகளுக்குப் பிறகு நடிகர் கமல் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

ராமநாதபுரம் அருகே கார் மீது பைக் மோதி விபத்து… 4 பேர் பரிதாப பலி..!!

ராமநாதபுரம் பரமக்குடி அருகே  கார் மீது பைக் மோதி விபத்துக்குள்ளானதில் 4 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். சாத்தான்குளத்தை சேர்ந்த உஸ்மான் என்பவர்  தனது 2  மகள்களுடன் மதுரை விமான நிலையத்திலிருந்து, புறப்பட்டு ராமநாதபுரத்திற்கு காரில் சென்று கொண்டிருந்தார். கார் பரமக்குடியை  அடுத்துள்ள  சோமநாதபுரம் நான்கு வழி சாலை சந்திப்பில் சென்று கொண்டிருந்த போது, எதிரே வந்த பைக்  ஒன்று திடீரென குறுக்கிட்டதாக சொல்லப்படுகிறது. இதனால் உடனே பிரேக் பிடிக்க முடியாமல் பைக் மீது மோதிய அந்த கார், சாலை நடுவில் இருந்த தடுப்பு […]

Categories
கல்வி மாநில செய்திகள்

ஆசிரியர் தகுதி தேர்வு-மதிப்பெண் 22_ஆம் வெளியீடு…!!

ஆசிரியர் தேர்வின் மதிப்பெண் விவரம் வருகின்ற 22_ஆம் தேதி வெளியாகுமென்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. கடந்த ஜூன் 8_ஆம் தேதி ஆசிரியர் தகுதி தேர்வின் முதல் தாளும் , 9-தேதி  தாளுக்கான தேர்வு நடத்தப்பட்டது. இதில் முதல் தாள் தேர்வை 1,62,314 பேர் எழுதினர்.இந்நிலையில் ஆசிரியர் தகுதித் தேர்வு முதல் தாள் முடிவுகள் இன்று மாலை வெளியிடப்பட்டது. தகுதி தேர்வின் இராண்டாம் தாளை 4 லட்சத்துக்கும் அதிகமானோர் எழுதியதால் அதற்கான முடிவுகள் அறிவிக்க தாமதம்  ஏற்பட்டுள்ள நிலையில் இன்று வெளியான ஆசிரியர் தகுதி தேர்வின் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

சொந்த மாவட்டத்திலையே அரசு வேலை… அதிமுக அமைச்சர் அறிவிப்பு..!!

ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு 10 நாட்களுக்குள் கலந்தாய்வு நடத்தப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். சென்னை அடையாறில் பள்ளி கல்வித்துறை பொது நூலக இயக்கத்தின் சார்பில் புதுப்பிக்கப்பட்ட குழந்தைகளுக்கான நூலகத்தை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் திறந்து வைத்தார். பின் மழலை  மாணவர்கள் முன்பு சிறிது நேரம் உரையாற்றினார். பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், புதிய கல்விக் கொள்கைக்கு ஏற்றவாறு மாணவர்களை தயார் படுத்தும் விதமாக சிறு வயதிலேயே பல்வேறு பயிற்சிகளை அளிக்க பள்ளி […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

தமிழ் படிப்போருக்கு ஏராளமான வேலைவாய்ப்பு… அமைச்சர் பாண்டியராஜன்..!!

கலை இலக்கியம் படித்தவர்களுக்கு ஏராளமான வேலைவாய்ப்புகள் காத்திருப்பதாக அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்திருந்தார். தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் மதுரை உலகத் தமிழ்ச் சங்கத்தில் இளந்தமிழர் இலக்கியப் பட்டறை தொடங்கியது. இந்தப் பட்டறையில் இரண்டாம் நாள் நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் பாண்டியராஜன் இணையதளம் மூலம் தகவல்களை பரிமாற தொடங்கிய பிறகு தாய் மொழி பயன்பாடு குறைந்து வருகிறது என்றார். மத்திய அரசின் கணக்கெடுப்பின்படி 2001- 2011 ஆம் ஆண்டுக்கு இடைப்பட்ட நாட்களில் தமிழில் பேசுவோரின் எண்ணிக்கை 55 சதவீதம் அதிகரித்திருப்பதாக […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

”வீட்டுக்கு CBI சென்றது பாஜகவின் பயம்” நடிகை குஷ்பூ கருத்து…!!

பா சிதம்பரம் வீட்டுக்கு CBI சென்றது பாஜகவின் பயத்தை காட்டுகின்றது என்று நடிகை குஷ்பூ விமர்சித்துள்ளார். கடந்த 2007ஆம் ஆண்டு மத்திய நிதியமைச்சராக இருந்த ப.சிதம்பரம் வெளிநாட்டிலிருந்து ஐ.என்.எக்ஸ் மீடியா நிறுவனத்தின் 305 கோடி அன்னிய முதலீட்டில் முறைகேட்டு வழக்கில் முன்ஜாமீன் கேட்ட வழக்கை டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்ததை தொடர்ந்து டெல்லியில் உள்ள ப.சிதம்பரம் வீட்டிற்கு CBI மற்றும் அமுலாக்கத்துறையினர் சென்றனர். ப.சிதம்பரத்தின் முன்ஜாமீன் இரத்து செய்யப்பட்ட நிலையில் அவரை கைது செய்ய CBI மற்றும் அமலாக்கத்துறையினர் முனைப்பு காட்டி […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

”பாஜக_வுக்கு அமலாக்கத்துறை உறுப்பினர் பதிவு” டிகேஎஸ் இளங்கோவன் விமர்சனம்..!!

பாஜக அமலாக்கத்துறையினரை வைத்து உறுப்பினர் சேர்க்கை நடத்துகிறார்கள் என்று திமுக செய்தித் தொடர்பாளர் டிகேஎஸ் இளங்கோவன் விமர்சித்துள்ளார். கடந்த 2007ஆம் ஆண்டு மத்திய நிதியமைச்சராக இருந்த ப.சிதம்பரம் வெளிநாட்டிலிருந்து ஐ.என்.எக்ஸ் மீடியா நிறுவனத்தின் 305 கோடி அன்னிய முதலீட்டில் முறைகேட்டு வழக்கில் முன்ஜாமீன் கேட்ட வழக்கை டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்ததை தொடர்ந்து டெல்லியில் உள்ள ப.சிதம்பரம் வீட்டிற்கு CBI மற்றும் அமுலாக்கத்துறையினர் சென்றனர்.அவரை கைது செய்ய CBI மற்றும் அமலாக்கத்துறையினர் முனைப்பு காட்டி வருகின்றனர். இதுகுறித்து  திமுக செய்தித் தொடர்பாளர் டிகேஎஸ் இளங்கோவன் கூறுகையில், எல்லா […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

“காட்டாறு வெள்ளம்” 500 ஏக்கர் பயிர்கள் சேதம்… சோகத்தில் விவசாயிகள்..!!

ராசிபுரத்தில் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த கனமழையால்  வெள்ளம் ஏற்பட்டு 500 ஏக்கருக்கு மேல் விவசாய நிலம் பாதிக்கப்பட்டுள்ளது.   நாமக்கல் மாவட்டம், ராசிபுரத்தை அடுத்த புதுப்பட்டி, சீர்காழி உள்ளிட்ட பகுதிகளில் கன மழை பெய்து வந்தது. இதன் காரணமாக கரிய பெருமாள் கோவில், உப்புக்கள் தட்டு, உள்ளிட்ட பகுதிகளில் விவசாய நிலங்களுக்குள் நீர் புகுந்தது அங்கு பயிரிடப்பட்டு இருந்த நெல், வெங்காயம், நிலக்கடலை உள்ளிட்ட பயிர்கள் சேதமடைந்துள்ளன. மேலும் பங்களா சாலையில் உள்ள தரைப்பாலம் சேதமடைந்து இடிந்து […]

Categories
மாநில செய்திகள்

எல்லை தாண்டியதாக புகார்… தமிழக மீனவர்களை கைது செய்த இலங்கை காவற்படை…!!

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி புதுக்கோட்டை மீனவர்கள் 4 பேரை இலங்கை கடற்படையினர் நடுக்கடலில் கைது செய்துள்ளனர்.  புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம்  மீன்பிடித் துறைமுகத்திலிருந்து 132 விசைப்படகுகள் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர். அதில் ஒரு விசைப்படகில் சென்ற உரிமையாளர் மணிகண்டன், பாலகிருஷ்ணன், கார்த்திக் ஆகியோர் கோட்டை பட்டினத்தில் இருந்து சுமார் 35 மைல் தூரத்தில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். இரவு 11.31  மணி அளவில் அங்கே  வந்த இலங்கை கடற்படையினர் எந்த எச்சரிக்கையும் அளிக்காமல்  விசைப்படகையும், 4 மீனவர்களையும் சிறைபிடித்தனர். […]

Categories
அரசியல் புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

“கடைமடை வரை காவேரி” போர்க்கால முறையில் தூர்வாரும் பணி… அமைச்சர் பேட்டி..!!

புதுக்கோட்டை கடைமடை பகுதி வரை காவேரி நீரை கொண்டுவர  தூர்வாறும் பணிகள் நடைபெற்று வருவதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.  புதுக்கோட்டை மாவட்டம் முக்கண்ணாமலைப்பட்டி பகுதியில் குடிமராமத்து பணி திட்டத்தின் கீழ் தூர்வாரும் பணியை பூமி பூஜை நடத்தி பின் கொடியசைத்து தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர்,காவிரி கடைமடை பகுதிகளில் ஆய்வு செய்து பொக்லைன் இயந்திரங்கள் மூலம் போர்க்கால அடிப்படையில் தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருவதாகவும்,  இதனால் கடைமடை பகுதி வரை காவிரி நீர் வந்து […]

Categories
சினிமா தமிழ் சினிமா மாநில செய்திகள்

நடிகர் சங்க வழக்குகள் : ஒரே நீதிபதிக்கு மாற்ற பரிந்துரை….!!

நடிகர் சங்க அனைத்து வழக்குகளும் ஒரே நீதிபதிக்கு மாற்ற பரிந்துரை செய்து நீதிபதி  ஆதிகேசவலு உத்தரவிட்டுள்ளார். கடந்த ஜூன் 23-ஆம் தேதி தேர்தல் முடிந்து வாக்குகள் எண்ணப்படமால் வைக்கப்பட்டுள்ளது. மேலும் நடிகர் சங்க தேர்தலில் பதிவாகிய வாக்குகளை என்ன தடை விதிக்க வேண்டும் என்றும் வழக்கு தொடுக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் நடிகர் சங்கம் தொடர்பான வழக்குகளை வேறு நீதிபதிக்கு மாற்ற பரிந்துரை செய்து நீதிபதி ஆதிகேசவலு உத்தரவிட்டுள்ளார். நடிகர் சங்க வழக்குகளை ஒரே நீதிபதி முன்பு பட்டியலிட்டவும் , ஒரே விவகாரம் தொடர்பாக வெவ்வேறு […]

Categories
கல்வி மாநில செய்திகள்

ஆசிரியர் தகுதி தேர்வு – முடிவு வெளியீடு…!!

 தமிழகத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வின் முதல் தாள் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. கடந்த ஜூன் 8_ஆம் தேதி ஆசிரியர் தகுதி தேர்வின் முதல் தாளும் , 9-தேதி  தாளுக்கான தேர்வு நடத்தப்பட்டது. இதில் முதல் தாள் தேர்வை 1,62,314 பேர் எழுதினர்.இந்நிலையில் ஆசிரியர் தகுதித் தேர்வு முதல் தாள் முடிவுகள் தற்போது வெளியாகி இருக்கின்றது.இந்த முதல் தாள் தேர்வுக்கான ஆன்சர் கீ ( தோராய விடை ) குறிப்பு கடந்த மாதத்தில் வெளியிடப்பட்டது. அதில் உள்ள மாறுபட்ட கருத்துக்களை தெரிவிக்கலாம் என்று  5 நாட்கள் […]

Categories
மாநில செய்திகள்

வேறு மாநிலத்துக்கு ஒன்னுனா விட்டுருவோமா…? தயாநிதி மாறன் கேள்வி …!!

வேறு ஒரு மாநிலம் பாதிக்கப்பட்டால் விட்டுவிடுவோமா என்று திமுக மக்களவை உறுப்பினர் தயாநிதி மாறன் கேள்வி எழுப்பியுள்ளார். சென்னையில் தெற்கு ரயில்வே மேலாளர் பொது மேலாளரை ராகுல் ஜெயின் உடன் ஆலோசனை ஆலோசனை நடத்திய பின்பு செய்தியாளர்களை சந்தித்த தயாநிதிமாறன் எம்பி  கூறும் போது, சென்ட்ரல் முதல் செங்கல்பட்டு வரை ரயில் நிலையத்தில் கழிவறை வசதிகள் குறைவாக உள்ளன.எமர்ஜென்சி வந்தபோது கலைஞர் எழுந்து எப்படி குரல் கொடுத்தாரோ அதே போல இன்று ஸ்டாலின் குரல் கொடுக்கின்றார். காஷ்மீரில் இன்று ஜனநாயகத்தின் குரல் […]

Categories
அரசியல் மதுரை மாநில செய்திகள்

“பொதுக்கணக்கு கமிட்டி” அரசு துறைகளில் முறைகேடா..? ஆய்வு மேற்கொள்ளும் திமுக..!!

பொது கணக்கு கமிட்டி மூலம் அரசு தொடர்புடைய துறைகளில் முறைகேடு நடைபெறுகிறதா என்று திமுக ஆய்வு மேற்கொண்டு வருவதாக திமுக பொருளாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். மதுரை ராஜாஜி மருத்துவமனையில் நோயாளிகளுக்கு சரியான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என்று திமுக சார்பில் பொருளாளர் துறை முருகன் அவர்கள் ஆய்வு மேற்கொண்டார். பின்  செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய அவர் சட்டமன்றத்தில் ஏராளமான கமிட்டிகள் உள்ளன. ஒவ்வொரு கமிட்டிக்கு ஒரு எம்எல்ஏ சேர்மனாக இருப்பார். இந்த சேர்மன் பதவியில் எல்லா ஆளும் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

சரிந்து விழுந்த கல்லூரி கட்டிடம்… “6 பேர் படுகாயம்” கோவையில் பரபரப்பு..!!

கோவை அவிநாசி சாலையில் இயங்கி வரும் தனியார் தொழில்நுட்பக் கல்லூரியில் புதிதாக கட்டப்பட்ட கட்டிடம் ஒன்று திடீரென இடிந்து விழுந்த விபத்தில் 6 பேர் காயமடைந்துள்ளனர். கோவை அவிநாசி சாலையில் நடைபெற்று வரும் பிரபல பொறியியல் கல்லூரி ஒன்று புதிதாக பிளாக் என்று சொல்லப்படும் பெரிய கட்டிடம் ஒன்றை  கட்டி வந்துள்ளது. இந்த நிலையில் இதற்கான கட்டுமான பணிகள் இன்று நடைபெற்று வந்தன. அப்போது சிமெண்ட் கொண்டு நிரப்படும் மேல் தளம் அமைக்கும் பணி நடைபெற்று வந்தது. […]

Categories
அரசியல் சென்னை மாநில செய்திகள்

விலை வாசியை கூடாமல் பார்த்துக்கொள்வது அரசின் கடமை… துரைமுருகன் கருத்து..!!

விலைவாசி கூடும் நிலை ஏற்பட்டாலும் அதனை கூட விடாமல் பார்த்து கொள்வது அரசின் கடமை என்று திமுக பொருளாளர் துரைமுருகன் கருத்து தெரிவித்துள்ளார் தமிழகத்தில் பாலின் விலை உயர்த்தப்பட்டது குறித்து பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவர் மு க ஸ்டாலின், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் ஜி ராமகிருஷ்ணன் காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் உள்ளிட்டோர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். தொடர்ந்து பாலின் […]

Categories
அரசியல் காஞ்சிபுரம் மாநில செய்திகள்

“பால் விலை”உற்பத்தியாளர்கள் சொன்னதால் தான் விலை ஏற்றினோம்… அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி..!!

உற்பத்தியாளர்கள் கேட்டுக் கொண்டதால்தான் பாலின் விலை உயர்த்தப்பட்டுள்ளதாக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.  கல்வி அலுவலர்களுக்கான நிர்வாக பயிற்சி முகமானது காஞ்சிபுரம் மாமல்லபுரத்தில் இன்று தொடங்கியது. மூன்று நாட்களுக்கு மேல் இந்த பயிற்சி நடைபெற உள்ளது. இதன் தொடக்க விழாவில் அமைச்சர் செங்கோட்டையன், ஜெயக்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செங்கோட்டையன், மாணவர்கள் எளிதாக கணிதத்தை கற்றுக் கொள்ளும் வகையில் மிக விரைவில் தமிழகம் முழுவதும் பயிற்சி அளிக்கப்பட உள்ளதாக தெரிவித்தார். அவரை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஸ்டாலின் மேடைக்கு வாங்க….”துண்டு சீட்டு இல்லாம நான் வாரேன்”…. தமிழிசை பதிலடி..!!

நான் துண்டு சீட்டு இல்லாமல் பேசுகின்றேன் சவாலுக்கு ஸ்டாலின் தயாரா என்று தமிழிசை ஸ்டாலினை சாடியுள்ளார். நெல்லையில் திமுக தலைவர் முக.ஸ்டாலின் செய்தியாளர்களிடம் பேசிய போது ,  நீங்கள் தூண்டு சீட்டு இல்லாமல் எங்கேயும் பேச மாட்டிங்களே என்று பாஜகவினர் விமர்சனம் செய்கின்றார்கள் என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு  எதையும் ஆதாரத்தோடு சொல்லனும். வாய்க்கு வந்தபடி சொல்லிட்டு போக கூடாது. ஆதாரம் இல்லாமல் தமிழிசை மாதிரி ,H.ராஜா மாதிரி பேச கூடாது என்று ஸ்டாலின் தெரிவித்தார். ஸ்டாலினின் இந்த குற்றச்சாட்டுக்கு […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

விபத்துக்குள்ளான பெண்ணிடம் ஆம்புலன்ஸ் டிரைவர் செய்த கேவலமான செயல்…!!

திருவள்ளூரில் விபத்துக்குள்ளாகி மயங்கிய நிலையில் இருந்த பெண்களிடம் இருந்து 4 சவரன் நகையை திருடி சென்ற ஆம்புலன்ஸ் டிரைவரை காவல்துறையினர் தேடி வருகின்றனர். திருவள்ளூர் பகுதியில் வசித்து வருபவர் ராஜு. இவர் தனது  சகோதரிகளான லாவண்யா, சரண்யா உள்ளிட்டோருடன் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டு இருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக விபத்து ஏற்பட்டது. பின் அவர்களை காப்பாற்றுவதற்காக 108 ஆம்புலன்ஸுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைவாக அவ்விடத்திற்கு வந்த ஆம்புலன்ஸ் மூவரையும் மீட்டு ஏற்றிச்  சென்றது. இதில் செல்லும் வழியிலேயே […]

Categories
அரசியல்

2 வாரத்திற்குள் 10,000 விவசாயிகளுக்கு மின்னிணைப்பு… அமைச்சர் தங்கமணி தகவல்..!!

10,000 விவசாயிகளுக்கு 2 வாரத்திற்குள் மின் இணைப்பு கொடுக்கப்படும் என்று மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார். தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சட்டமன்றத்தில் அறிமுகப்படுத்திய முதல்வர் குறைதீர்க்கும் திட்டம்  தற்பொழுது அமுல்படுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம் மக்கள் அதிகாரிகளிடம் குறையாக அளிக்கும்  மனுவை நேரடியாக முதல்வரே பெற்று அதனை பரிசீலித்து உடனடியாக தீர்வு காண முடியும்.  இந்த திட்டம் தமிழக மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றிருந்தத நிலையில், மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி அவர்கள் விவசாயிகளுக்கு ஆதரவாக முதல்வர் மற்றொரு திட்டத்தை வெளியிட இருப்பதாக […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

மீண்டும் கர்ப்பிணி பெண்ணுக்கு HIV ரத்தம் ஏற்றம்… திடீர் புகாரால் மதுரையில் பரபரப்பு..!!

மதுரையில் மீண்டும் ஒரு கர்ப்பிணி பெண்ணுக்கு எய்ட்ஸ் தொற்று உள்ள ரத்தம் ஏற்றப்பட்டதாக புகார் எழுந்ததால் அப்பகுதியில்  பதற்றம் உண்டானது. மதுரை மாவட்டம் உசிலம்பட்டியை சேர்ந்த 28 வயதான கர்ப்பிணி ஒருவர் கடந்த 17ம் தேதி உடல் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு சென்று இருக்கிறார். அங்கு அவரது ரத்தத்தில் ஹீமோகுளோபின் குறைவாகவும், மஞ்சள் காமாலை இருப்பதாகவும் கூறி உடனடியாக ரத்தம் ஏற்ற வேண்டும் என்று மருத்துவர்கள் தெரிவித்திருந்தனர்.ரத்தம் ஏற்றப்பட்ட சிறிது நேரத்திலேயே கர்ப்பிணிப் பெண்ணின் உடலில் அரிப்பு […]

Categories
சென்னை மாநில செய்திகள்

கேன்சரை உண்டாக்கும் “SO2 “உற்பத்தியில், உலகஅளவில் இடம் பிடித்த சென்னை..!!

உடல் நலத்திற்கு தீங்கை விளைவிக்கக் கூடிய சல்பர் டை ஆக்சைடு என்ற நச்சு வாயுவை வெளியேற்றுவதில் சென்னை உலக அளவில் 29வது இடத்தைப் பிடித்துள்ளது.  கிரீன்பீஸ் என்ற உலகளாவிய அமைப்பு உடல் ஆரோக்கியத்திற்கு அதிகத் தீங்கை விளைவிக்கக் கூடிய சல்பர் டை ஆக்சைடு என்ற நச்சு வாயுவை வெளியேற்றுவதில் சென்னை மாநகரம் உலகிலேயே 29வது இடத்தைப் பிடித்துள்ளதாக அதிர்ச்சி புள்ளி விவரத்தை வெளியிட்டு உள்ளது. அதில் SO2 என்று அழைக்கப்படும் சல்பர் டை ஆக்சைடை  அதிகம் வெளியிடும் நகரங்களில் […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

நண்பரை பேருந்தில் ஏற்றாத நடத்துனர் தாக்குதல் “விசாரணை நடத்திய காவலருக்கும் அடி” இருவர் கைது..!!

திருத்தணியில் நண்பரை பேருந்தில் ஏற்றாததால் நடத்துனர் மற்றும் காவலரை தாக்கிய இருவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியைச் சேர்ந்த சக்கரவர்த்தி என்பவர், தனது நண்பர் விஜய்யை ரேணிகுண்டாவிற்கு வழியனுப்ப ஆந்திரா அரசு பேருந்தில் ஏற்றி விடுவதற்கு  பேருந்து நிலையம் வந்துள்ளார். அப்போது பேருந்தில் பயணிகள் கூட்டம் மிகவும் அதிகமாக இருந்ததால் விஜய்யை ஏற வேண்டாம் என்று  நடத்துனர் கூறியதால்  சக்கரவர்த்தி ஆத்திரமடைந்து நடத்துனரை சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது. இதனை கண்டு அங்கிருந்த போக்குவரத்து காவலரான ராமன் என்பவர் வந்து […]

Categories

Tech |