Categories
அரசியல் மாநில செய்திகள்

மு.க.ஸ்டாலின் அனல் பறக்க பிரச்சாரம்… பரபரப்பாகும் தேர்தல் களம்..!!

வேலூர் மக்களவை தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளரை ஆதரித்து மு.க.ஸ்டாலின் அனல் பறக்கும் பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகிறார். தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 18ஆம் தேதியன்று நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் வேலூர் தொகுதியை தவிர்த்து அனைத்து இடங்களிலும் தேர்தல் நடைபெற்றது. ஆகஸ்ட் 5ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்ததை அடுத்து, வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டது. இதை தொடர்ந்து அதிமுக ,திமுக, நாம் தமிழர் உள்ளிட்ட அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். […]

Categories
புதுச்சேரி மாநில செய்திகள்

பைக் திருடும் இளைஞர்… காட்டி கொடுத்த சிசிடிவி.. போலீஸ் வலைவீச்சு..!!

புதுச்சேரியில் இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்டு வரும் இளைஞரை சிசிடிவி காட்சிகளின் உதவியோடு காவல்துறையினர் தேடி வருகின்றனர். புதுச்சேரியில் கடந்த சில மாதங்களாக தொடர்ச்சியாக இரு சக்கர வாகனங்கள் திருடப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் சின்ன காலாப்பட்டு என்ற இடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரு சக்கர வாகனத்தை டிப்டாப் உடை அணிந்த இளைஞர் ஒருவர் திருடிச் சென்றுள்ளார். இந்த காட்சி அங்கு பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளது. அங்கும் இங்கும் பார்த்த நிலையில் அந்த இளைஞர் வாகனத்தை […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

இலவச பட்டாக்கு ரூ2000 பணம்…. வைரலாகும் அதிமுக நிர்வாகி ஆடியோ..!!

ஈரோட்டில் அரசு சார்பில் ஏழை மக்களுக்கு வழங்கப்படும் இலவச பட்டாவிற்கு அதிமுக நிர்வாகி ரூ 2000 பணம் கேட்ட ஆடியோ சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது. ஈரோட்டில் இலவச வீட்டுமனை பட்டா வழங்குவதற்கு பயனாளிகளிடம் அதிமுக நிர்வாகி ஒருவர் 2000 பணம் கேட்டு மிரட்டும் செல்போன் ஆடியோ ஒன்று சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது. ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி அருகே  அரசருக்கு சேர்ந்த 10 ஏக்கர் நிலத்தைப் பிரித்து ஏழை மக்களுக்கு இலவச வீட்டு மனை […]

Categories
சேலம் மாநில செய்திகள்

’75’ நாளில் ’50’ அடி…. சரசரவென உயர்ந்த மேட்டூர் அணை நீர்மட்டம்..!!

கர்நாடாகாவின்  இரண்டு  அணைகளில் இருந்து தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளதால்  மேட்டூர் அணையின் நீர்மட்டம் 75 நாட்களில்  50 அடியை கடந்துள்ளது.  கர்நாடகாவில் உள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணையில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறப்பு படிப்படியாக அதிகரிக்கப்பட்டு உள்ளது. இந்த அணைகளில் இருந்து 11,443 கன அடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து மேலும் அதிகரித்துள்ளது. மேட்டூர் அணையில் இன்று காலை நிலவரப்படி 10 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. […]

Categories
அரசியல் மாநில செய்திகள் வேலூர்

தனியார் மண்டப சீலை அகற்ற வேண்டும்…. திமுக உயர்நீதிமன்றத்தில் மனு..!!

வேலூரில் தேர்தல் அதிகாரிகளால் தனியார் மண்டபத்திற்கு வைக்கப்பட்ட சீலை நீக்க கோரி திமுக சார்பில் உயர்நீதிமன்றத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது. வேலூர் மக்களவை தேர்தலில் வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டதை அடுத்து, அத்தொகுதியில் தீவிர பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஆகஸ்ட் 5 ஆம் தேதி நடைபெற இருக்கும் தேர்தலை முன்னிட்டு வேலூர் தொகுதி முழுவதும் தேர்தல் ஆணையம் தேர்தலுக்கான விதிமுறைகளை விதித்து பின்பற்றிவருகிறது. இந்நிலையில் முன் அனுமதி இல்லாமல் திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவர் மு க ஸ்டாலின் […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

“சமாதானம் பேச அழைத்து” மனைவியை குத்திக்கொலை செய்த கணவன்..!!

திருப்பூரில் சேர்ந்து வாழ்வதற்கு சமாதானம் பேச தாய் வீட்டிற்கு அழைத்து சென்று கணவன் மனைவியை கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூரில் உள்ள டி.எம்.எஸ் நகரை சேர்ந்த ரமேஷ் மற்றும் பிரியா ஆகிய இருவரும் 10 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து வாழ்ந்து வந்துள்ளனர். இந்த ஜோடிக்கு  ஒரு மகன் மற்றும் மகள் இருக்கின்றனர். கடந்த சில மாதங்களாகவே இவர்கள் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதன்  காரணமாக பிரிந்து வாழ்ந்து வந்துள்ளனர். இந்நிலையில்  மனைவி பிரியாவுடன் சேர்ந்து […]

Categories
அரசியல் மாநில செய்திகள் வேலூர்

வேலூரில் திண்ணை பிரச்சாரம்… ஸ்டாலினிடம் கிராம மக்கள் கோரிக்கை..!!

வேலூர் மக்களவை தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்தை ஆதரித்து மு.க.ஸ்டாலின் திண்ணை பிரச்சரத்தில் ஈடுபட்டு வருகிறார். தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 18ஆம் தேதியன்று நடைபெற்ற மக்களவைத் தேர்தலில்  வேலூர் தொகுதியை தவிர்த்து அனைத்து தொகுதிகளிலும் தேர்தல் நடைபெற்றது. இதையடுத்து ஆகஸ்ட் 5ம் தேதி வேலூர் தொகுதியிலும் மக்களவைத் தேர்தல் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்ததை  தொடர்ந்து வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு, தற்போது தீவிரமான பிரச்சாரங்கள் அரசியல் கட்சிகள் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. […]

Categories
பல்சுவை

”பெட்ரோல் குறைவு , மாற்றமின்றி டீசல்” பொதுமக்கள் மகிழ்ச்சி …!!

பெட்ரோல் விலை குறைந்தும் ,  டீசல் விலை மாற்றமின்றியும் விற்பனை செய்யப்படுவதால்  வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தொடர்ந்து அதிகரித்து வந்த பெட்ரோல் மற்றும் டீசல் விலை தீடிரென சரிய தொடங்கியது. பின்னர் ஏற்றம் , இறக்கமாக இருந்து வருகின்றது . இதனால் வாகன ஓட்டிகள் தினம் தினம் என்ன விலை இருக்குமோ என்று சற்று குழம்பியே இருக்கின்றனர். ஒருநாள் அதிகமாகவும், ஒருநாள் குறைவாகவும், ஒருநாள் ஏற்ற இறக்கம் இல்லாமல் நிலையாகவும் இருந்து வருகின்றது. விலை நிர்ணயம் […]

Categories
மாநில செய்திகள்

“ஊழியர்களுக்கு ஜூலை மாத ஊதியம் 5-ஆம் தேதி வழங்கப்படும்” பி.எஸ்.என்.எல் தலைவர்..!!

ஊழியர்களுக்கு ஜூலை மாதத்திற்கான ஊதியம் வரும் 5-ஆம் தேதி வழங்கப்படும் என்று பி.எஸ்.என்.எல் தலைவர் தெரிவித்துள்ளார்.  பிஎஸ்என்எல் நிறுவனத்தில் பணிபுரியும்  ஊழியர்களுக்கு ஒவ்வொரு மாதமும் கடைசி வேலை நாளில் ஊதியம் வழங்கப் படுவது வழக்கம். ஆனால் கடந்த பிப்ரவரி மாதத்திற்கான ஊதியம் 2 வாரங்களுக்கு மேல் கடந்து தாமதமாக வழங்கப்பட்ட நிலையில் தற்போது ஜூலை மாதத்திற்கும்  தாமதம் ஏற்பட்டுள்ளது. இதுவரையில் ஊழியர்களுக்கு ஊதியம் வழங்கப்படவில்லை. இந்நிலையில் பி.எஸ்.என்.எல் தலைவர் பி.கே புர்வார் இது குறித்து பேசியதாவது, “வரும் 5-ஆம் தேதி ஊழியர்களுக்கு […]

Categories
மாநில செய்திகள்

105 டி.எஸ்.பிக்கள் “இடமாற்றம்”.. டி.ஜி.பி திரிபாதி அதிரடி உத்தரவு..!!

தமிழகம் முழுவதும் 105 டி.எஸ்.பிக்களை இடமாற்றம் செய்து புதிய டி.ஜி.பி திரிபாதி உத்தரவிட்டுள்ளார்.  தமிழகத்தில் புதிய டிஜிபியாக திரிபாதி பதவியேற்றதையடுத்து காவல் துறையினர் மத்தியில் பல்வேறு  மாற்றங்களை ஏற்படுத்தி வந்தார். குறிப்பாக காவல்துறையினர் ஹெல்மெட் அணியவில்லை என்றால் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் உள்ளிட்டவற்றை நடைமுறையில் அமல்படுத்தினார். இதனை தொடர்ந்து டி.ஜி.பி திரிபாதி தமிழகம் முழுவதும் 105 டிஎஸ்பிக்களை இடம் மாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளார்.  

Categories
மாநில செய்திகள்

தூத்துக்குடி கடலோரத்தில் தஞ்சம்… மாலத்தீவு துணை அதிபரை அதிரடியாக கைது செய்த இந்திய காவல் படை..!!

மாலத்தீவு அதிபர் கொலை முயற்சி வழக்கிற்கு அஞ்சி மாலத்தீவில் இருந்து தப்பிய முன்னாள் துணை அதிபர் அகமது அதீப் தூத்துக்குடி அருகே பிடிபட்டுள்ளார்.  தூத்துக்குடி துறைமுகம் அருகே சிறிய வகை கப்பல் ஒன்று சந்தகத்திற்கிடமாக நின்று கொண்டிருந்தது. இதையடுத்து கடலோர காவல் படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து மத்திய மாநில உளவுத் துறை மற்றும் கடலோர காவல் படை அதிகாரிகள் அங்கு விரைந்து சென்றனர். பின் படகை சோதனையிட்ட அதிகாரிகள் எவ்வித ஆவணங்களும் இல்லாமல் 9 பேர் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

காணாமல் போன “சிவன் கோவில்”… அதிர்ச்சியில் மதுரை மக்கள் ..!!

மதுரையில் பழங்கால கோவில் இருந்த இடம் தெரியாமல் அதன் மேல்  கட்டம் கட்டிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .  மதுரையில் பழங்காநத்தம் ரவுண்டானம்  அருகே குடியிருப்பு பகுதிகள் மற்றும்  ஏராளமான கடைகள் உள்ளன. இங்கு ஒரு கடையை அதன் உரிமையாளர் இடித்து விட்டு புதிதாக கட்டிடம் கட்டும் பணியில் ஈடுபட்டார் . இதற்கிடையில்  அதன் அருகே கோயில் மண்டபம் போன்ற சுவடுகள்  காணப்பட்டதால் , இதுபற்றி தகவலறிந்த அப்பகுதி மக்களும், சிவனடியார்களும் அங்கு சென்று பார்த்தபோது பராமரிப்பில்லாத […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

“ஒரு தலைகாதல்” செல்போன் டவரில் இருந்து குதித்து வாலிபர் தற்கொலை… வைரலாலாகும் வாட்ஸ் ஆப் வீடியோ..!!

சேலம் அருகே ஒருதலைக் காதலுக்கு எதிர்ப்பு கிளம்பியதால் இளைஞர் ஒருவர் செல்போன் கோபுரத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  சேலம் மாவட்டம் இரட்டை பாலத்தை சேர்ந்தவர் ரவி சங்கர்.  கோவையில் தங்கி கேட்டரிங் வேலை செய்து வந்த இவர், ஈரோட்டைச் சேர்ந்த பெண்ணை ஒருதலைபட்சமாக காதலித்து வந்ததாக தெரிகிறது.  இதற்கு அந்தப் பெண்ணின் உறவினர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் மனமுடைந்த ரவிசங்கர் தற்கொலை செய்து கொள்ளப்போவதாக வாட்ஸ் அப்பில் வீடியோ பதிவு செய்தார். அதில் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

பிஜேபி அட்டூழியத்தால் அதிமுக டெபாசிட் இழக்கும்… கே.பால கிருஷ்ணன் பரபரப்பு பேட்டி..!!

நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு மோடி எதிர்ப்பு அதிகரித்து உள்ளதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். திருச்சி மாநகரில் பல மடங்கு உயர்த்தப்பட்டு உள்ள வீட்டு வரி, சொத்து வரி உள்ளிட்டவற்றை திரும்பப் பெறக் கோரி திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்துப் பேசுகையில், ஏற்கனவே தமிழக […]

Categories
அரசியல் மாநில செய்திகள் வேலூர்

BREAKING : மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்திய மண்டபத்திற்கு சீல்… தேர்தல் அதிகாரிகள் அதிரடி..!!

வேலூரில் முன் அனுமதி பெறாமல் மு.க.ஸ்டாலின் ஆலோசனை கூட்டம் நடத்திய தனியார் மண்டபத்திற்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். கடந்த ஏப்ரல் 18ம் தேதியன்று மக்களவை தேர்தல் தமிழகத்தில் வேலூர் தொகுதியை தவிர்த்து அனைத்து தொகுதிகளிலும் நடைபெற்றது. இதையடுத்து ஆகஸ்ட் 5 ஆம் தேதி அன்று தேர்தலை நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம்  அறிவித்ததையடுத்து, வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு பிரச்சார பயணங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும் தேர்தலை முன்னிட்டு தேர்தலுக்கான விதிமுறைகள் வேலூர் தொகுதியில் அமுலுக்கு வந்தது. இந்நிலையில் […]

Categories
மாநில செய்திகள்

“நடிகர் சங்க தேர்தல்” முடிவுகளை வெளியிட இடைக்கால தடை நீட்டிப்பு…. உயர்நீதிமன்றம் அதிரடி..!!

நடிகர் சங்க தேர்தல் முடிவுகளை வெளியிட விதிக்கப்பட்ட தடையை மேலும் நீட்டிப்பு செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நடிகர் சங்க தேர்தலை தடை செய்யக்கோரி தென்சென்னை மாவட்ட சங்கங்களின் பதிவாளர் உத்தரவு பிறப்பித்தார். இதை எதிர்த்து நடிகர் விஷால்  தேர்தலை நடத்த அனுமதிக்கக் கோரி உயர்நீதிமன்றத்தில் மனு அளித்தார். இதனை விசாரித்த நீதிபதிகள் நடிகர் சங்க தேர்தலை நடத்திக் கொள்ளலாம் என்றும், ஆனால்   வாக்குகளை எண்ணுவதற்கு அனுமதியில்லை என்றும் உத்தரவிட்டனர். இதையடுத்து நடிகர் விஷால் வாக்குகளை […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சென்னை மண்ணடி பி.எஸ்.என்.எல் அலுவலகத்தில் திடீர் தீ விபத்து..!!

சென்னை மண்ணடி பி.எஸ்.என்.எல் அலுவலகத்தில் அதிகாலை 4 மணிக்கு திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. சென்னை மண்ணடியில் இயங்கி வரும் பி.எஸ்.என்.எல். அலுவலக ஐந்து மாடிக் கட்டடத்தின் முதல் தளத்தில் அதிகாலை 4 மணிக்கு திடீரென்று ஏற்பட்ட தீ விபத்து ஏற்பட்டது. இதனால் அப்பகுதி புகை மண்டலமாக காட்சி அளித்தது. தகவல் அறிந்து  10 தீயணைப்பு வாகனங்களில் விரைந்துவந்த 80 தீயணைப்பு வீரர்கள் 4 மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர். இந்த தீ விபத்தில் கணிப்பொறிகள், தொலை தொடர்பு இணைப்புகள், மற்றும் ஆவணங்கள் எரிந்து சேதமடைந்தன. கடுமையான புகை மூட்டம் காரணமாக  […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

தாராபுரம் வருவாய் ஆய்வாளரை கொல்ல முயற்சி செய்த மணல் திருட்டு கும்பல்..!!

தாராபுரம் வருவாய் ஆய்வாளரை கொல்ல முயற்சி செய்த மணல் திருட்டு கும்பலை போலீஸார் தேடி வருகின்றனர். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள  தாராபுரம் அருகே ஆற்று மணல் திருட்டை தடுக்க சென்ற கன்னிவாடி வருவாய் ஆய்வாளர் கார்த்திக்குமார், அமராவதி ஆற்றின் மையப் பகுதியில் மணல் திருட்டை முயற்சி செய்தார்.அப்போது எதிரே வந்த மணல் கடத்தல் கும்பல் மினி வேனைக் கொண்டு ஆய்வாளர் கார்த்திக்குமார்  மீது மோதினர். இதில் சில காயங்களுடன் உயிர் தப்பினார். மேலும் காயமடைந்த வருவாய் ஆய்வாளர் கார்த்திக்குமார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகிறார். இந்நிலையில் அவர் அளித்த  […]

Categories
நாமக்கல் மாநில செய்திகள்

“குழந்தை விற்பனை வழக்கு” 4 பேருக்கு ஜாமீன் வழங்க உயர்நீதிமன்றம் உத்தரவு..!!

ராசிபுரத்தில் குழ்நதை விற்பனை வழக்கில்  சிறையில் அடைக்கப்பட்ட 4 பேருக்கும் ஜாமீன் வழங்கி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் அரசு மருத்துவமனையில் நர்சாக பணிபுரிந்து வந்த அமுதவல்லி என்பவர் கடந்த 2012 ஆம் ஆண்டு பணியில் இருந்து விருப்ப ஓய்வு பெற்றார்.  அதன் பின் ஏழை குடும்பத்தில் பிறக்கும் குழந்தைகளை குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு பணத்திற்காக விற்பனை செய்து வந்துள்ளார். இதையடுத்து புகார் அளிக்கப்பட்டதன் அடிப்படையில், அமுதவல்லி ,அவரது கணவர் ரவிச்சந்திரன், மற்றும் அவர்களுக்கு உதவிய […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

“புதிய கல்வி கொள்கை-2019” மாணவர் பேரவை சார்பில் சிறப்பு கருத்தரங்கம்..!!

நாகலாபுரத்தில் மத்திய அரசு அறிமுகம் செய்த புதிய கல்வி கொள்கை குறித்து மாணவர் பேரவை சார்பில் சிறப்பு கருத்தரங்கம் நடைபெற்றது. மத்திய அரசு அறிமுகம் செய்த புதிய கல்விக் கொள்கை குறித்து சரியான கருத்தை மக்களிடம் தெரிவிக்க விழிப்புணர்வுகளை மேற்கொள்ள வேண்டும் என பலரும் தெரிவித்து வந்தனர். அந்த வகையில், நேற்று தூத்துக்குடி  மாவட்டம் விளாத்திகுளத்தை அடுத்த நாகலாபுரம் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக உறுப்பு கல்லூரியில், புதிய கல்விக் கொள்கை-2019 என்ற தலைப்பில் சிறப்புக் கருத்தரங்கம் அக்கல்லூரி மாணவர் […]

Categories
சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

சென்னையில் அதிசயம் “7 வயது சிறுவன் வாயில் 526 பற்கள்” மருத்துவர்கள் சாதனை..!!

சென்னையில் சிறுவன் வாயில் இருந்து 526 பற்களை அகற்றி மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர்.   சென்னையை சேர்ந்த பிரபு தாஸ் என்பவரின் மகன்  3 வயதாக இருக்கும் போது வாயின் வலது பக்கத்தில் வீக்கமாக  இருந்துள்ளது. இதனால் சிறுவன் அடிக்கடி வலியால் துடித்து வந்துள்ளான். அதன் பிறகு 7  வயதான போது இந்த சிறுவனுக்கு வலி அதிகமாக ஏற்பட்டுள்ளது. இதனால்  மருத்துவமனைக்கு பெற்றோர்கள்  அழைத்துச் சென்றனர். பின்னர் அங்குதான் ஸ்கேன் எடுத்து பார்த்ததில்  மருத்துவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.அப்படி என்ன அதிர்ச்சியென்றால் சிறுவனின் வாயில் வலது பகுதியில் […]

Categories
பல்சுவை

”குறைந்த பெட்ரோல் , மாற்றமின்றி டீசல்” வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி …!!

பெட்ரோல் விலை குறைந்தும் ,  டீசல் விலை மாற்றமின்றியும் விற்பனை செய்யப்படுவதால்  வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தொடர்ந்து அதிகரித்து வந்த பெட்ரோல் மற்றும் டீசல் விலை தீடிரென சரிய தொடங்கியது. பின்னர் ஏற்றம் , இறக்கமாக இருந்து வருகின்றது . இதனால் வாகன ஓட்டிகள் தினம் தினம் என்ன விலை இருக்குமோ என்று சற்று குழம்பியே இருக்கின்றனர். ஒருநாள் அதிகமாகவும், ஒருநாள் குறைவாகவும், ஒருநாள் ஏற்ற இறக்கம் இல்லாமல் நிலையாகவும் இருந்து வருகின்றது. விலை நிர்ணயம் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஆகஸ்ட் 10 முதல் “கட்டணம் குறைப்பு”… 130+ ஜிஎஸ்டி மட்டுமே… EPS அதிரடி அறிவிப்பு..!!

தமிழகத்தில் அரசு கேபிள் டிவிக்கான கட்டணம் ஆகஸ்ட் 10 ஆம் தேதி முதல் குறைக்கப்படும் என்று முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார். ஏப்ரல் 18-ம் தேதி அன்று நடைபெற்ற மக்களவை தேர்தலில் தமிழகத்தின் வேலூர் தொகுதியை தவிர்த்து மற்ற தொகுதிகளில் தேர்தல்  நடைபெற்றது. இதையடுத்து இந்திய தேர்தல் ஆணையம் ஆகஸ்ட் ஐந்தாம் தேதியன்று தேர்தலை நடத்த வேண்டும் என்று உத்தரவிட்டது. அதன்படி, வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு தீவிர பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில் வேலூர் மக்களவைத் தொகுதியில் முதல்வர் எடப்பாடி […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

“நாடகத்தில் மூழ்கிய தாய்” 7-வயது மகளை சீரழித்த காமக்கொடூரன்..!!

திருச்சியில் நாடகம் பார்க்கும் ஆசையில் ஒரு பெண் வீட்டு வாசலில் மகளை தூங்க வைத்த பின் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது   திருச்சி மாவட்டத்தில் உள்ள முசிறி அருகில் இருக்கும்  கிராமத்தில் கணவனை இழந்த ஒரு பெண் தனது 7 -வயது மகளுடன் வாழ்ந்து வருகிறார். இக்கிராமத்தில் மழை பொழிய வேண்டும் என்று வேண்டி அர்ச்சுனன் தபசு என்ற நாடகம் கடந்த 3 நாட்களாகவே  நடைபெற்று வருகிறது இந்த நாடகத்தைப் பார்ப்பதற்காக தாய் மற்றும் மகள் இருவரும் சென்றுள்ளனர். நாடகத்தை பார்த்துக் கொண்டிருந்த […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

விரைவில் அறிமுகமாகும் பேட்டரி பேருந்துகள்… அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பேட்டி..!!

தமிழகத்தில் பேட்டரி பேருந்துகள் விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். தமிழக அரசு சார்பில் பல்வேறு அரசுத் திட்டங்கள் மற்றும் அரசு கட்டிடங்களை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று காலை தலைமைச் செயலகத்தில் காணொலிக் காட்சி மூலம் திறந்து வைத்தார். அதன் படி, கரூர் மாவட்டம் காந்திபுரத்தில் புதிய அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி திறந்து வைத்தார். இந்நிகழ்வில் போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர் உட்பட ஏராளமான அதிமுக […]

Categories
சென்னை மாநில செய்திகள்

#RIPVIJAY.. எல்லை மீறிய மோதல்… கத்தி குத்தில் முடிந்தது..!!

தல-தளபதி மோதலால் நண்பரையே கத்தியால் இளைஞர் ஒருவர் சரமாரியாக தாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  சமீபத்தில் #RIPVIJAY என்ற ஹாஷ்டகை தல அஜித் ரசிகர்கள் ட்விட்டர் பக்கத்தில் ட்ரெண்டாக்கி வந்தனர். இதற்கு எதிராக #longlivevijay என்ற ஹாஷ்டகை விஜய் ரசிகர்கள் ட்விட்டரில் ட்ரெண்டாக்கி நம்பர் ஒன் இடத்தை பிடித்தனர். இது சமூக வலைதளத்திலேயே மிகப்பெரிய மோதலை இருதரப்பு ரசிகர்களிடையே ஏற்படுத்தி வந்தது. இந்நிலையில் சென்னையில் ஒரே தெருவை  சேர்ந்த உமாசங்கர் என்ற தல ரசிகரும் ரோஷன் என்ற […]

Categories
அரசியல் ஆன்மிகம் காஞ்சிபுரம்

“அத்திவரதர்” சயன கோலத்தின் கடைசி நாள்… தொண்டர்களுடன் OPS தரிசனம்..!!

காஞ்சிபுர அத்திவரதரை அதிமுக ஒருங்கிணைப்பாளர் O.பன்னீர் செல்வம் தனது தொண்டர்களுடன் சென்று தரிசனம் செய்தார். காஞ்சிபுரத்தில் 40 நாள்கள் நடைபெறும் அத்திவரதர் உற்சவம் சிறப்பாக நடைபெற்று வருகிறது. அத்திவரதரை தரிசிக்க நாளுக்கு நாள் பக்தர்களின் கூட்டமும் அதிகரித்து வரும் நிலையில், அவ்வப்போது பிரபலங்களும் அரசியல் கட்சித் தலைவர்களும் அத்திவரதரை தரிசிக்க தொடர்ந்து வருகை தருகின்றனர். இந்நிலையில் அத்திவரதரின் சயன கோல காட்சி இன்றுடன் நிறைவடைய இருப்பதால், அதிமுகவின் ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான ஓ பன்னீர்செல்வம் அத்திவரதரை தரிசனம் செய்தார். […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

பொள்ளாச்சியில் பரபரப்பு …. பல இடங்களில் வருமான வரி சோதனை…..!!

வரி ஏய்ப்பு செய்ததாக பொள்ளாச்சியில்  பல்வேறு பகுதியில் வருமானவரி சோதனை நடைபெற்றதால் பரபரப்பு ஏற்பட்டது. பொள்ளாச்சியில் கடைவீதி செயல்படும் சின்னஅண்ணன் நகைக்கடை மற்றும் கணபதி ஜுவல் சிட்டி ஆகிய நகைக்கடைகள் வரி ஏய்ப்பு செய்ததாக வருமானவரித்துறை அதிகாரிகளுக்கு கிடைத்த ரகசிய தகவலையடுத்து கோவை மற்றும் திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த 10க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர். சம்பந்தப்பட்ட  பிரபல நகைக் கடைகள் அதிபர் வீடு உள்ளிட்ட பல இடங்கள் நடந்த இந்த சோதனை  8 […]

Categories
ஆன்மிகம் இந்து காஞ்சிபுரம் மாநில செய்திகள்

நாளை முதல் “நின்ற கோலத்தில் அத்திவரதர்”… தரிசன நேரம் மாற்றம்..

நாளைமுதல் அத்திவரதர் நின்ற கோலத்தில் காட்சி அளிப்பதால் அத்திவரதரை தரிசிப்பதற்கான நேரம் மாற்றப்பட்டுள்ளது. காஞ்சிபுரத்தில் மொத்தம் 40 நாட்கள் நடைபெறும் அத்திவரதர் திருவிழா வெகுவிமர்சியாக  நடைபெற்று வருகிறது. அத்திவரதரை நாளுக்கு நாள் காண வரும் பக்தர்களின் கூட்டம் அதிகரித்துக்கொண்டே வருகிறது. இதைத் தொடர்ந்து இன்று சயனகோலத்தில் அத்திவரதரை காலை முதலே பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். இந்நிலையில் நாளை முதல் அத்திவரதர் நின்ற கோலத்தில் காட்சி அளிப்பார் என்றும் ஆகஸ்ட் 17ஆம் தேதி அத்திவரதர் திருவிழா […]

Categories
தேசிய செய்திகள்

டிஜிபி எஸ்.ஆர். ஜாங்கிட் இன்றுடன் ஒய்வு பெறுகிறார்..!! 

தமிழகத்தில் நுழைந்து கொலை செய்து  கொள்ளையடித்த பவாரியா கும்பலை ஒழித்த டிஜிபி எஸ்.ஆர். ஜாங்கிட் இன்றுடன் ஒய்வு பெறுகிறார்.  ராஜஸ்தான் மாநிலம் பார்மர் பகுதியைச் சேர்ந்த எஸ்.ஆர்.ஜாங்கிட் 1959 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 1-ம் தேதி பிறந்தார். இவரது முழுப்பெயர் சங்காராம் ஜாங்கிட். நடுத்தர குடும்பத்தில் பிறந்து வளர்ந்த ஜாங்கிட் முதுகலை பொருளாதாரம் படித்தார். பின்னர் அங்குள்ள அரசு கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றியுள்ளார்.  அதன்பின் இவர் சிவில் சர்வீஸ் தேர்வு எழுதி 1985 ஆம் ஆண்டில் ஐ.பி.எஸ் பதவி பெற்றார். […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

தமிழ்நாடு பிரீமியர் லீக் : 58 ரன் வித்தியாசத்தில் காஞ்சி அணி வெற்றி …!!

தமிழ்நாடு பிரீமியர் லீக்  20-20 கிரிக்கெட் தொடரில் தூத்துக்குடி அணிக்கு எதிரான ஆட்டத்தில் 58 ரன்கள் வித்தியாசத்தில் காஞ்சி அணி வெற்றிபெற்றது. இந்தியன் பிரிமியர் லீக் ( IPL ) தொடரை போன்று தமிழகத்தில் உள்ள மாவட்ட வாரியாக 8 அணிகள் பங்கேற்கும் கிரிக்கெட் தொடர் தமிழ்நாடு பிரிமியர் லீக் போட்டி நடத்த படுகின்றது. இந்த போட்டி தொடர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. இந்நிலையில் நெல்லையில் நடைபெற்ற இப்போட்டியில் தூத்துக்குடி அணியும் ,  காஞ்சி அணியும் மோதியது. முதலில் ஆடிய காஞ்சி […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

TNPL  தொடர் ”மதுரை , திருச்சி” அணிகள் மோதல் …!!

TNPL  தொடரில் இன்று மதுரை அணியும் , திருச்சி அணியும் மோதுகின்றன.   இந்தியன் பிரிமியர் லீக் ( IPL ) தொடரை போன்று தமிழகத்தில் உள்ள மாவட்ட வாரியாக 8 அணிகள் பங்கேற்கும் கிரிக்கெட் தொடர் தமிழ்நாடு பிரிமியர் லீக் போட்டி நடத்த படுகின்றது. இந்த போட்டி தொடர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றுள்ளது.TNPL  தொடரில் இன்று மதுரை அணியும் , திருச்சி அணியும் மோதுகின்றன. திண்டுக்கல் MGR கல்லூரி மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டியில் […]

Categories
கல்வி மாநில செய்திகள்

”தமிழைவிட சமஸ்கிருதம் முதன்மையானது” முழுமையாக நீக்கி சுற்றறிக்கை ….!!

தமிழைவிட சமஸ்கிருதம் முதன்மையானது என்ற பாடத்திட்டம் முழுவதையும் நீக்கி சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. 1_ஆம் வகுப்பு முதல் +2 வரையிலான இந்த கல்வியாண்டின் பாடத்திட்டத்தை பள்ளிக்கல்வித்துறை மாற்றியமைத்தது. இதில் பல்வேறு சர்சைக்குரிய கருத்துகளுடனும் , பிழைகளுடன் பாடத்திட்டம் இருந்தது சர்சையை ஏற்படுத்தி பல்வேறு கல்வியாளர்களின் விமர்சனத்துக்குட்பட்டது. இதையடுத்து பாடத்திட்டத்தில் இருந்த 19 பிழைகளை வரை நீக்கப்பட்டது. கடந்த சில நாட்களுக்கு முன்பு மீண்டும் ஒரு சர்சையை ஏற்படுத்தியது +2 ஆங்கில பாடத்திட்டம். அதில் தமிழ் மொழியை விட சமஸ்கிருதம் தொன்மையானது என்ற அர்த்தத்தில் இருந்தது. இதை […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

“பேத்தியை” கல்லால் அடித்து கொன்ற “கொடூர தாத்தா” … மனைவி விட்டு சென்றதால் நடந்த விபரீதம் ..!!

பொள்ளாச்சி அருகே தனது பேத்தியை கல்லால் அடித்து கொலை செய்த கொடூர தாத்தாவை காவல் துறையினர் கைது செய்தனர்.  கோவை மாவட்டம்  பொள்ளாச்சி அருகே அரசம்பாளையத்தைச் சேர்ந்த செல்வராஜ் என்பவர் தனது முதல் மனைவி பிரிந்து சென்றதால் ,  இரண்டாவதாக ஒரு பெண்ணை  திருமணம் செய்து கொண்டார். பின் இவரும் , இவரது மனைவி மற்றும் மகன் குமார் , மருமகள் முத்துமாலை மற்றும் 10 வயது பேத்தியுடன் வசித்து வந்தார் . இந்நிலையில், இவரது  இரண்டாவது மனைவி […]

Categories
மாநில செய்திகள்

”அ.தி.மு.க. வெளிநடப்பு செய்தது வெட்கக்கேடானது” கனிமொழி எம்.பி ட்வீட் …!!

 மாநிலங்களவையில் முத்தலாக் தடை மசோதா வெற்றி பெற வசதியாக அ.தி.மு.க. வெளிநடப்பு செய்தது வெட்கக்கேடானது என்று கனிமொழி தெரிவித்துள்ளார். முத்தலாக் தடை மசோதா இன்று மாநிலங்களவையில் மத்திய சட்ட அமைச்சர் ரவிசங்கர்பிரசாத்  தாக்கல் செய்யப்பட்டது. மக்களவையில் ஆதரவு தெரிவித்த அதிமுக மாநிலங்களவையில் எதிர்ப்பு தெரிவித்தது. இது குறித்து நடைபெற்ற விவாதத்தில் பேசிய அ.தி.மு.க மாநிலங்களவை உறுப்பினர்கள்  எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியன், நவநீதகிருஷ்ணன் இந்த மசோதாவை நாடாளுமன்ற ஆய்வுக்குழுவுக்கு அனுப்ப வலியுறுத்தினர். மேலும் முத்தலாக் தடை சட்ட  விவகாரத்தில் எதிர்ப்பு தெரிவித்த அதிமுக , பகுஜன் சமாஜ், ஐக்கிய […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

போலி சிகிச்சையால் “கருவுற்ற பெண்” … 20,00,000 இழப்பீடு வழங்க கோரிக்கை..!!

நெல்லை அரசு மருத்துவமனையில் போலி சிகிச்சை பெற்ற பெண் கருவுற்றதால் 20 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டுமென  நீதிமன்றத்தில் கோரிக்கை வைத்துள்ளார். நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் ஊர் காலப் பகுதியைச் சேர்ந்த ஷிபா என்ற பெண்ணுக்கு திருமணம் ஆகி 2 ஆண் குழந்தைகள் உள்ளன. அவர் சிறுவயதிலேயே வலிப்பு நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். ஆகையால், வலிப்பு நோயை கருத்தில் கொண்டு தனக்கு இரண்டு குழந்தைகள் போதுமென , நெல்லை அரசு மருத்துவமனையில் கடந்த 2014ஆம் ஆண்டு குடும்ப கட்டுப்பாடு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

பயன்பாட்டில் “நாப்கின்” எரிக்கும் இயந்திரம் … பேரவையில் அமைச்சர் அறிவிப்பு ..!!

ராமநாதபுரம் மாவட்டம் அரசு மேல்நிலைப் பள்ளியில் முதன்முதலாக சானிடரி நாப்கின்  எரிக்கும் மின்இயந்திரம் பொருத்தப்பட்டுள்ளது.  ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் 350க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். அதில், மாணவிகள் மட்டும் சுமார் 150 பேர் பயிலுகின்றனர். இதனால் மாணவிகள் நலனுக்காக தமிழக அரசு சுகாதாரத் துறையின் மூலமாக பள்ளிகளில் சானிட்டரி நாப்கின் வழங்கி வருகிறது. இதற்குமுன் அதனை பயன்படுத்திய பின் அந்த நாப்கின்களை அளிப்பதற்கான சாதனங்கள் இல்லாமல் இருந்தது. இந்நிலையில் , […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“பிகிலுக்கு” போட்டியாக “பட்டாஸ்” திரைப்படம் … எதிர்பார்ப்பில் ரசிகர்கள் ..!!

விஜயின் திகில் படமும் தனுஷின் பட்டாஸ் படமும் தீபாவளி அன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  சினிமா என்றால் மக்களுக்கு மிகவும் பிடித்தமான ஒன்று.  அதிலும் தனக்குப் பிடித்த ஹீரோவின் படம் பொங்கல் மற்றும் தீபாவளி போன்ற பண்டிகை நாட்களில் வெளிவருவது ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் பலருக்கு டபுள் கொண்டாட்டமாக அமையும் . சென்ற வருடம்  தமிழக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் படமான பேட்ட திரைப்படமும் , தல அஜித் குமாரின் விசுவாசம் திரைப்படமும் தீபாவளியன்று வெளியாகி ரசிகர்களுக்கு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

”என் வீட்டின் முன் நின்று அழைத்தார்கள்” இனி அரசியலுக்கு வரமாட்டேன்…. தீபா பேட்டி

என் வீட்டின் முன் நின்று அழைத்தால் நான் அரசியலுக்கு வந்தேன்.  இனி அரசியலுக்கு வரமாட்டேன் என்று ஜெயலலிதா அண்ணன் மகள் தீபா பேட்டியளித்துள்ளார். தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பின் அதிமுக_வை சசிகலா கைப்பற்ற முயற்சித்த நிலையில் அதிமுக பல்வேறு அணிகளாக பிரிந்தது. அதில் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவும்  திடீரென அரசியலில் குதித்தார். எம்.ஜி.ஆர். – அம்மா – தீபா பேரவை என்ற இயக்கத்தை தொடங்கி அதனை அதிமுகவுடன் இணைப்பதாக தெரிவித்தார். இந்நிலையில் தீபா, முழுமையாக பொதுவாழ்க்கையில் இருந்து விலகுகிறேன். இனி […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

”மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு” நீர் மட்டம் 46.49 அடியாக உயர்வு …!!

கர்நாடக அணையிலிருந்து திறந்து விடப்பட்டுள்ள நீரின் அளவு அதிகரித்துள்ளதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. கர்நாடகாவின்காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் தொடரும் பருவமழையால் K.R.S  மற்றும் கபினி அணைகளில் இருந்து திறந்துவிடப்படும் நீரின் அளவு அதிகரித்துள்ளது. இதனால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 8, 400 கன அடியிலிருந்து 8,900 கனஅடியாக அதிகரித்துள்ளது. மேலும் நீரின் வரத்து அதிகரித்த நிலையில் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 46.49 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் நீர் இருப்பு 15.6 7 டிஎம்சியாக இருப்பு உள்ள நிலையில் வினாடிக்கு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

தேர்தல் வெற்றியை கலைஞரின் காலடியில் சமர்பிப்போம் …. உதயநிதி ஸ்டாலின்

வேலூர் தேர்தல் வெற்றியை  தலைவர் கலைஞரின் காலடியில் நாம் சமர்ப்பிப்போம் என்று உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். வேலூர் தொகுதி வெற்றியை வேலூர் தொகுதி திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த்தை ஆதரித்து வைத்து குடியாத்தம் உழவர் சந்தை பகுதியில் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் வாக்கு சேகரித்தார். அப்போது அங்கு திரண்டிருந்த மக்களிடையே பேசிய உதயநிதி, அனைவரும் உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும். வாக்குச்சாவடிக்கு செல்லுங்கள் வாக்கு இயந்திரத்தில் முதல் சின்னம் நம்முடைய உதயசூரியன், முதல் வேட்பாளர் பெயர் கதிர் ஆனந்த். ஆகஸ்ட் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

”திமுக வேட்பாளருக்கு பாடம் புகட்டடுங்கள்” G.K வாசன் வேண்டுகோள் …!!

வேலூர் மக்களவைத் தேர்தலில் திமுக வேட்பாளர் ஆனந்த்துக்கு வாக்காளர்கள் தகுந்த பாடம் புகட்ட வேண்டும் என்று  தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜிகே வாசன் தெரிவித்துள்ளார். வருகின்ற ஆகஸ்ட் 5_ஆம் தேதி வேலூர் மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறுகின்றது. இதில் அதிமுக வேட்பாளர் ஏசி சண்முகத்தை ஆதரித்து தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி கே வாசன் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். பிரசார பொதுக் கூட்டத்தில்  பேசிய அவர் , வேலூர் மக்களவை தேர்தல் நிறுத்தப்பட்டதற்கு காரணமாக இருந்த திமுக வேட்பாளர் மீண்டும் தேர்தலில் போட்டியிடுவதாக சுட்டிக்காட்டினார். […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

A.C சண்முகத்தை ஆதரித்து அமைச்சர்கள் தீவிர பிரச்சாரம் ….!!

வேலூர் மக்களவை தேர்தல் அதிமுக வேட்பாளரை ஆதரித்து அமைச்சர்கள் விஜயபாஸ்கர் , கே. பி அன்பழகன் , காமராஜ் உள்ளிட்டோர் பிரச்சாரம் செய்தனர். வருகின்ற ஆகஸ்ட் 5_ஆம் தேதி வேலூர் மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறுகின்றது. இதில் திமுக சார்பில் அக்கட்சியின் பொருளாளர் துரைமுருகனின் மக்கள் கதிர் ஆனந்த்தும் , அதிமுக சார்பில் புதிய நீதி கட்சியின் தலைவர் ஏசி சண்முகம் வேட்பாளராக களமிறங்குகின்றார். வாக்குப்பதிவுக்கு இன்னும் ஒரு வாரங்களே உள்ள நிலையில் வேலூரில் தேர்தல் பிரசாரம் களைகட்டியுள்ளது. இந்நிலையில் அதிமுக […]

Categories
மாநில செய்திகள்

“ஆணவக்கொலை” நடவடிக்கை எடுக்க தவறினால் தண்டனை… காவல்துறைக்கு உயர்நீதிமன்றம் எச்சரிக்கை..!!

ஆணவ கொலைக்கு சரியான நடவடிக்கை எடுக்கவில்லையெனில் காவல்துறை உயர் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படுமென உயர்நீதிமன்றம் எச்சரித்துள்ளது. தமிழகத்தைப் பொறுத்தவரையில் சமீப காலமாக காதல் திருமணம் செய்து கொள்ளும் தம்பதிகள் ஆணவ படுகொலை செய்யப்பட்டு வருவது வழக்கமாக இருக்கிறது. ஆணவக்கொலைக்கு எதிராக பல்வேறு அரசியல் கட்சிகள், இயக்கங்கள் போராட்டங்களை மேற்கொண்டும், அதற்கு எதிராக சரியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வழக்கு தொடுத்தும் வந்தனர்.     இந்நிலையில் இவ்வழக்கை உயர்நீதிமன்றத்தில் மணிகண்டன் , சுப்பிரமணிய பிரசாத் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

தமிழ் மொழியைக் காக்க – தமிழ் சொற்குவை வலைதளம் அறிமுகம் ..!!

தமிழக அரசு தமிழ் மொழியைக் காக்க தமிழ் சொற்குவை வலைதளம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. தமிழ் பேசும் போதும் எழுதும் போதும் பிற மொழிச் சொற்களின் கலப்பை தவிர்க்கவும் கலைச் சொற்களைத் தமிழில் பயன்படுத்தும் சொற்குவை வலைதளத்தை தமிழக அரசு அறிமுகப்படுத்தி இருக்கிறது. தமிழக அரசின் தமிழ் வளர்ச்சி மற்றும் பண்பாட்டுத்துறை சார்பில் சென்னை தரமணியில் உள்ள உலகத் தமிழ் ஆராய்ச்சி மையத்தில் தனி அலுவலகம் அமைக்கப்பட்டு sorkuvai.com எனும் இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது.   பிறமொழிச் சொற்களை நீக்கி தமிழ்ச் சொற்களைப் பயன்படுத்தவும் […]

Categories
மாநில செய்திகள்

மேயர் கொலைக்கும் தன் மகனுக்கும் சம்மந்தம் இல்லை….திமுக பிரமுகர் சீனியம்மாள்…!!

திருநெல்வேலியில் முன்னாள் மேயர் உட்பட 3 பேர் கொலை வழக்கில் தனது மகனுக்கு எந்த தொடர்பும் இல்லை என திமுக பிரமுகர் சீனியம்மாள் தெரிவித்துள்ளார். நெல்லை மாநகராட்சி முன்னாள் மேயர் உமாமகேஸ்வரி. அவரது கணவர் முருக சங்கரன் மற்றும் பணிப்பெண் மாரியம்மாள் ஆகியோர் கொலை செய்யப்பட்டனர். இதுகுறித்து 3 தனிப்படைகள் அமைத்து விசாரணை நடத்திய காவல்துறையினர் திமுக பிரமுகர் சீனியம்மாள் மகன் கார்த்தியை கைது செய்தனர். 8 மணி நேர விசாரணைக்குப் பிறகு அவர் நேற்று இரவு 7 […]

Categories
மாநில செய்திகள்

“தடையை நீக்க கோரிக்கை” ஆறுமுக சாமி ஆணையம் உச்ச நீதிமன்றத்தில் மனு..!!

ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணைக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க கோரி ஆறுமுகசாமி ஆணையம் சார்பில் உச்சநீதிமன்றத்தில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணைக்கு தடை விதிக்க கோரி அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் தொடர்ந்த வழக்கிற்கு எதிராக ஆறுமுகசாமி ஆணையம் பதில் மனுவை தாக்கல் செய்துள்ளனர். அதில், விசாரணைக்கு அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் தடை விதிக்க கூறுவதில் உள்நோக்கம் இருப்பதாகவும், அப்பலோ மருத்துவமனை நிர்வாகம் எதையோ மறைக்க நினைப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. இதையடுத்து விசாரணை தற்பொழுது தொய்வில்லாமல் சென்று கொண்டிருப்பதாகவும், […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

“கத்திரி கோலால் 10-ம் வகுப்பு மாணவன் குத்திக்கொலை” மற்றொரு மாணவன் கைது..!!

கொடைக்கானலில் உள்ள ஒரு பள்ளியில் இரு மாணவர்களுக்கிடையே ஏற்பட்ட மோதலில் ஒரு மாணவன்  கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது  திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் கோல்ப்  கிளப் அருகே பவான்ஸ் காந்தி வித்யாஸ்ரம் எனும் தனியாக உண்டு உறைவிட பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வரும் இரண்டு மாணவர்களுக்கிடையே நேற்றிரவு திடீரென வாய் தகராறு ஏற்பட்டு, வாக்குவாதம் முற்றியது. இதில் ஆத்திரம் அடைந்த ஒரு மாணவன் மற்றொரு மாணவனான கபில் ராகவேந்திராவை கத்திரிக்கோலால் கழுத்தில் குத்தியது  அதுமட்டுமில்லாமல்  அங்கிருந்த கிரிக்கெட் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

”என்னை அரசியலுக்கு அழைக்காதீங்க” போலீசில் புகார் கொடுப்பேன்…. ஜெ.தீபா அதிரடி

என்னை யாரும் அரசியலுக்கு அழைக்காதீங்க ,  நான் அரசியலில் இருந்து விலகுகின்றேன் என்று ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா அறிவித்துள்ளார். தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பின் அதிமுக_வை சசிகலா கைப்பற்ற முயற்சித்த நிலையில் அதிமுக பல்வேறு அணிகளாக பிரிந்தது. சசிகலா , EPS , டிடிவி தினகரனை உள்ளடக்கி அதிமுகவும் , ஓபிஎஸ் தலைமையில் ஒரு அணியும் , ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா தலைமையில் ஒரு அணியும் இயங்கி வந்தது. இதை தொடர்ந்து சசிகலா_வுக்கு சொத்துகுவிப்பு வழக்கில் தண்டனை வழங்கியதையடுத்து TTV தினகரனை […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

இந்தியா முழுவதும் விருப்பமொழியாக “தமிழ்”… பேரவையில் அதிமுக MP வலியுறுத்தல்..!!

இந்தியா முழுவதும் தமிழை விருப்ப மொழியாக அறிவிக்க வேண்டுமென அதிமுக MP கருப்பண்ணன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். இந்நிலையில் புதிய கல்விக் கொள்கையின் அடிப்படையில் மூன்றாவது மொழியை மாணவர்கள் தங்களது விருப்பத்திற்கு ஏற்ப தேர்வு செய்து கொள்ளலாம் என்ற அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டிருந்தது. இதையடுத்து மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கைக்கு ஆதரவாகவும், எதிராகவும் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். மேலும் இதற்கு முன் நடைபெற்ற […]

Categories

Tech |