Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

ஏகாம்பரநாதர் கோவில் குளத்தில் சிறுவர்களால் கண்டடுக்கப்பட்ட ஐம்பொன் பெருமாள் சிலை…!!

ஏகாம்பரநாதர் கோவிலுக்கு சொந்தமான தீர்த்த குளத்தில் இருந்து ஐம்பொன் பெருமாள் சிலையை மீட்ட சிறுவர்கள் அதனை காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர். காஞ்சிபுரம் மாவதிலுள்ள  ஏகாம்பரநாதர் கோவில்  தீர்த்த குளம் தண்ணீர் இன்றி வறண்டு காணப்படுவதால், அதில் அப்பகுதி  சிறுவர்கள் கிரிக்கெட் விளையாடுவது வழக்கமாக உள்ளது. நேற்று புதன்கிழமையன்று வழக்கம்போல் விளையாடிக்கொண்டிருந்தபோது,சிறுவர்கள் குளத்தில் சிலை ஒன்றை கண்டுள்ளனர். சிறுவர்கள் அச்சிலையை மீட்டு சிவகாஞ்சி காவல்நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்’. இதைபோன்று சில மாதங்களுக்கு முன் காஞ்சி குமரக் கோயிலின் அர்ச்சகர் கார்த்திகேயன் என்பவர் குடிபோதையில் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

சொகுசு கார்களில் வளம் வந்த கள்ள நோட்டு கும்பல் கைது…!!!

கள்ளநோட்டு ஆசை காட்டி பொதுமக்களிடம் மோசடி செய்தது வந்த  கும்பலை போலீசார் கைது செய்தனர். சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகிலுள்ள தாண்டவராயபுரத்தில் காவல் துணை கண்காணிப்பாளர் ராஜு தலைமையிலான போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது  அந்த வழியாக பதிவெண்கள் அச்சிடப்படாமல் தாள் ஒட்டப்பட்ட இரு சொகுசு கார்கள் வந்துள்ளன. சந்தேகத்தின் அடிப்படையில் காரை வழிமறித்து  பிடித்த போலீசார் அந்த சொகுசு கார்களை சோதனையிட்ட போது ஆறரை லட்சம் ரூபாய் ரொக்கப் பணம் இருந்ததாக கூறப்படுகிறது. அந்தசொகுசு கார்களில் […]

Categories
பல்சுவை மாநில செய்திகள் வானிலை

“புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி” வானிலை ஆய்வு மையம் தகவல் …!!

வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதால் மழைக்கு வாய்ப்பிருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த ஒரு வாரமாக பெய்து வந்த தென்மேற்கு பருவமழை வலுவிழந்த காரணத்தால் குறைவாக அளவே மழை பெய்துள்ளது. இதனால் அதிகளவில் பருவமழையை எதிர்பார்த்த மக்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. பருவ மழையை தொடங்கிய நாள் முதல் வானிலை ஆய்வு மையம் வானிலை நிலவரங்களை தொடர்ந்து தெரிவித்து வருகின்றது. இன்று மாலை இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள முன்னெச்சரிக்கை அறிவிப்புப்பில் , […]

Categories
தேசிய செய்திகள் மாநில செய்திகள்

தொடங்கியது “காவிரி ஒழுங்காற்று குழு கூட்டம்” 4 மாநில பிரதிநிதிகள் பங்கேற்பு …!!

காவிரி ஒழுங்காற்று குழு கூட்டம் டெல்லியில் தொடங்கி நடைபெற்று வருகின்றது. டெல்லியில் 9-ஆவது காவிரி ஒழுங்காற்று குழு கூட்டம் டெல்லியில் தொடங்கி நடைபெறுகின்றது. காவிரி ஒழுங்காற்று குழு_வின்  தலைவர் நவீன் குமார் தலைமையில் நடைபெறும் இக்கூட்டத்தில் தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, புதுச்சேரி ஆகிய 4 மாநிலங்களை சேர்ந்த பிரதிநிதிகள் பங்கேற்றுள்ளனர். தமிழகத்துக்கு 9.19 டிஎம்சி தண்ணீரை திறந்துவிட வேண்டுமென்று கடந்த ஜூன் மாதத்தில் காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டிருந்தது. இதையடுத்து கர்நாடகா கடந்த செவ்வாய்க்கிழமை வரை வெறும் 1.7 டிஎம்சி நீரை மட்டுமே திறந்துவிட்டுள்ளது. இந்நிலையில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா மாநில செய்திகள்

விஷாலை தொடர்ந்து ஆளுநரை சந்திக்கும் பாக்யராஜ் அணியினர்…..!!

நடிகர் சங்க தேர்தல் தொடர்பாக விஷால் ஆளுநரை சந்தித்த நிலையில் பாக்யராஜ் , ஐசரி கணேஷ் அணியினரும் தமிழக ஆளுநரை சந்திக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. வருகிற 23-ஆம் தேதி  எம்ஜிஆர் ஜானகி மகளிர் கல்லூரியில் நடைபெற தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 2019- 2022_ஆம் ஆண்டுக்கான தேர்தலில் போட்டியிடும் விஷால் , நாசர் தலைமையிலான பாண்டவர் அணியும் , கே பாக்யராஜ் தலைமையிலான ஸ்வாமி சங்கரதாஸ் அணியும் போட்டியிடுகின்றன. அடுத்தடுத்து ஏற்பட குழப்பங்களால் தேர்தல் நடத்த தடை விதித்து தென் சென்னை […]

Categories
பல்சுவை

“4_ஆவது நாளாக மாற்றமின்றி பெட்ரோல் விலை” பொதுமக்கள் மகிழ்ச்சி …!!

பெட்ரோல் விலை தொடர்ந்து நான்காவது நாளாக மாற்றமின்றி இருப்பதால் பொதுமக்கள்  மகிழ்ச்சியடைந்துள்ளனர். தொடர்ந்து அதிகரித்து வந்த பெட்ரோல் மற்றும் டீசல் விலை தீடிரென சரிய தொடங்கியது. பின்னர் ஏற்றம் , இறக்கமாக இருந்து வருகின்றது . இதனால் வாகன ஓட்டிகள் தினம் தினம் என்ன விலை இருக்குமோ என்று சற்று குழம்பியே இருக்கின்றனர். ஒருநாள் அதிகமாகவும், ஒருநாள் குறைவாகவும், ஒருநாள் ஏற்ற இறக்கம் இல்லாமல் நிலையாகவும் இருந்து வருகின்றது. இதையடுத்து சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் […]

Categories
கல்வி மாநில செய்திகள்

பாடப் புத்தகங்களில் எழுத்து பிழைகளுடன் அச்சிடப்பட்ட தேசிய கீதம்…!!

இவ்வாண்டு அச்சடித்து வழங்கப்பட்டுள்ள ஒன்றாம் வகுப்பு மற்றும் இரண்டாம் வகுப்பு பாடப் புத்தகத்தில் எழுத்துப் பிழைகளுடன் தவறாக அச்சிடப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு  மற்றும் இந்த ஆண்டு முதல் 1 முதல் 12-ஆம் வகுப்பு வரை பாடத் திட்டங்கள் மாற்றப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஒன்று மட்டும் இரண்டாம்வகுப்பு பாடப்புத்தகங்களில் அச்சிடப்பட்டுள்ள தேசிய கீதமான ஜன கண மன என கீதையில் உள்ள பல வார்த்தைகள் தவறாக அச்சிடப்பட்டுள்ளன. திராவிட உத்கல வங்கா என்ற வரியில் வங்கா என்தற்கு பதில் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

காவிரி கூட்டுக்குடிநீர் குழாய்யில் இருந்தது பல லட்சம் லிட்டர் தண்ணீர் வீணாவதாக குற்றசாட்டு…!!!

காவிரி கூட்டுக்குடிநீர் குழாயில் வால்விலிருந்து பல லட்சம் லிட்டர் குடிநீர் வீணாவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர். ராமநாதபுரத்தை அடுத்துள்ள காவனூர் எனும் பகுதியில் வைகை ஆற்றுப் பாலத்தின் கீழ் காவிரி கூட்டுக்குழாய் அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழாயில் பல லட்சம் அளவிலான நீர் வெளியாவதாகவும் பலமுறை புகார் அளித்தும் மாற்று ஏற்பாடு செய்யப்படவில்லை எனவும் பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர். மாதத்திற்கு ஒருமுறையாவது இதுபோன்று நீர் நிரம்பி பல லட்சம் லிட்டர் அளவில் தண்ணீர் வீணாவதாகவும். குடிநீர் பஞ்சம் தலைவிரித்தாடும் நிலையில் வீணாகும் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

நாளை டெல்லி செல்கிறார் துணை முதல்வர் ஓ.பி.எஸ்..!!

டெல்லியில் நடைபெறும் பட்ஜெட் தொடர்பான ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொள்வதற்கு தமிழக துணை முதல்வர் ஓபிஎஸ்  நாளை டெல்லி செல்கிறார்.   மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையை  தாக்கல் செய்வதற்கு முன்னதாக மாநில நிதி அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தி அவர்களின்  கருத்துகளை கேட்பது வழக்கம். அதன் படி மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் பட்ஜெட் தொடர்பாக நாளை மறுநாள் (21-ம் தேதி) மாநில நிதியமைச்சர்களுடன் ஆலோசனை கூட்டம் டெல்லியில் நடைபெறுகிறது.இந்த கூட்டத்தில் பங்கேற்க, தமிழக துணை முதல்வரும், நிதியமைச்சருமான […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

தொடரும் தண்ணீர் பஞ்சம்…. ஜூன் 22_ஆம் தேதி முதல் போராட்டம் ….ஸ்டாலின் அறிவிப்பு …!!

தண்ணீர் பிரச்சனையை போக்க தமிழகம் முழுவதும் ஜூன் 22_ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்த ஸ்டாலின் மாவட்ட செயலாளர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். தமிழகம் முழுவதும் தண்ணீர் பிரச்னை தலை விரித்தாடுகின்றது. ஆங்கங்கே பொதுமக்கள் போராட்டம்  நடத்தி வருகின்றனர். இதனால் அரசியல் கட்சிகள் மற்றும் பொதுமக்கள் ஆங்காங்கே போராட்டம் நடத்தி வருகின்றனர்.ஆனால் அரசு தமிழக அமைச்சர்கள் தண்ணீர் பஞ்சம் என்பது வெறும் வதந்தி , இதை வைத்து அரசியல் செய்கின்றார்கள் என்று மறுப்பு தெரிவித்தனர். இந்நிலையில் திமுக தலைவர் முக.ஸ்டாலின் […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

“ஒரே நாடு ஒரே தேர்தல்”ஆலோசனையில் அதிமுகவிற்கு அனுமதி மறுப்பு….!!

ஒரே நாடு ஒரே தேர்தல் தொடர்பான பிரதமர் மோடியின் ஆலோசனை கூட்டத்தில் அதிமுக_வுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பாஜக கடந்த முறை ஆட்சி பொறுப்புக்கு வந்தது முதல் ஒரே நாடு , ஒரே மொழி , ஒரே தேர்தல்என்கின்ற வகையில் நாடாளுமன்றம், மாநில சட்டமன்றம் என ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தும் நிலையை உருவாக்க வேண்டும் என்பதை குறிக்கோளாக கொண்டுள்ளது. மாநில சட்டப்பேரவை , மக்களவை என அடிக்கடி தேர்தலை நடத்துவதால் ஏற்படும் பண இழப்பு , அதற்கான நேரம் வீணாவது போன்ற காரணங்களை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“வைகோ மீது தேச துரோக வழக்கு” ஜூலை 5_ஆம் தேதி தீர்ப்பு …!!

இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியதாக வைகோ மீதி பதியப்பட்டுள்ள தேச துரோக வழக்கின் தீர்ப்பு ஜூலை 5_ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 2009_ஆம் ஆண்டு இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியதாக வைகோ மீது தேசத் துரோக வழக்க்கு பதிவு செய்யப்பட்டது. இதில் வைகோ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவுவாகவும் ,  மத்திய அரசுக்கு எதிராக பேசியதாக சென்னை ஆயிரம் விளக்கு போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கு அரசியல் கட்சி MLA போன்றோரை விசாரிக்கும் சிறப்பு நீதி மன்றத்திற்கு மாற்றம் செய்யப்பட்டு […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

“ஒரே நாடு ஒரே தேர்தல்”ஆலோசனை கூட்டத்தில் அதிமுக பங்கேற்கவில்லை…!!

ஒரே நாடு ஒரே தேர்தல் தொடர்பான பிரதமர் மோடியின் ஆலோசனை கூட்டத்தில் அதிமுக பங்கேற்கவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது. பாஜக கடந்த முறை ஆட்சி பொறுப்புக்கு வந்தது முதல் ஒரே நாடு , ஒரே மொழி , ஒரே தேர்தல்என்கின்ற வகையில் நாடாளுமன்றம், மாநில சட்டமன்றம் என ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தும் நிலையை உருவாக்க வேண்டும் என்பதை குறிக்கோளாக கொண்டுள்ளது. மாநில சட்டப்பேரவை , மக்களவை என அடிக்கடி தேர்தலை நடத்துவதால் ஏற்படும் பண இழப்பு , அதற்கான நேரம் வீணாவது போன்ற […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“நடிகர் சங்க தேர்தல் ரத்து “தேர்தல் அதிகாரி அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!!!

நடிகர் சங்க தேர்தல் பணிகளை நிறுத்தஉள்ளதாக தேர்தல் ஆணையர் பத்மநாபன் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். வருகிற 23-ஆம் தேதி  எம்ஜிஆர் ஜானகி மகளிர் கல்லூரியில் நடைபெற தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 2019- 2022_ஆம் ஆண்டுக்கான தேர்தலில் விஷால் , நாசர் தலைமையிலான பாண்டவர் அணியும் , கே பாக்யராஜ் தலைமையிலான ஸ்வாமி சங்கரதாஸ் அணியும் போட்டியிடுகின்றன. ஆனால் எம்ஜிஆர் ஜானகி மகளிர் கல்லூரியில் தேர்தல் நடைபெறுவதில் இருந்த சிக்கலையடுத்து விஷால் தொடர்ந்த வழக்கில் எம்ஜிஆர் ஜானகி மகளிர் கல்லூரியில் […]

Categories
மாநில செய்திகள்

“பா.ரஞ்சித் பிரிவினைவாதத்தை தூண்டுகிறார் “அமைச்சர் கருத்து..!!

ராஜராஜ சோழன் குறித்து பா.ரஞ்சித் அவர்கள் பேசியது பிரிவினைவாதத்தை தூண்டும் வகையில் இருக்கிறது என்று அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் கருத்து தெரிவித்துள்ளார். சில நாட்களுக்கு முன்பு ராஜராஜசோழன் குறித்து சர்ச்சைக்குரிய விதமாக பா ரஞ்சித் அவர்கள் பேசினார். அதில் ராஜராஜ சோழனின் ஆட்சிக்காலம் ஒடுக்கப்பட்டவர்களின் கற்காலம் என்று அவர் பேசி இருந்தார். இது குறித்து பல்வேறு சமூக ஆர்வலர்களும், ராஜராஜ சோழனின் ஆதரவாளர்களும் பா.ரஞ்சித்தின்  கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பேசிவந்தனர். இந்நிலையில் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் இது குறித்து […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“சட்டம் தன் கடமையை செய்யும்” நடிகர் சங்க தேர்தல் தடை குறித்து ராதாரவி கருத்து …!!

சட்டம் தன் கடமையை செய்யும் என்று நடிகர் சங்க தேர்தல் தடை குறித்து நடிகர் ராதாரவி தெரிவித்துள்ளார். வருகிற 23-ஆம் தேதி  எம்ஜிஆர் ஜானகி மகளிர் கல்லூரியில் நடைபெற தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 2019- 2022_ஆம் ஆண்டுக்கான தேர்தலில் விஷால் , நாசர் தலைமையிலான பாண்டவர் அணியும் , கே பாக்யராஜ் தலைமையிலான ஸ்வாமி சங்கரதாஸ் அணியும் போட்டியிடுகின்றன. ஆனால் எம்ஜிஆர் ஜானகி மகளிர் கல்லூரியில் தேர்தல் நடைபெறுவதில் இருந்த சிக்கலையடுத்து விஷால் தொடர்ந்த வழக்கில் எம்ஜிஆர் ஜானகி மகளிர் கல்லூரியில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“நடிகர் சங்க தேர்தலை ரத்து செய்தது சரியானது தான்”எஸ்.வி.சேகர் கருத்து ..!!

சட்ட ரீதியாக  எந்த நிகழ்வும் நடிகர் சங்கத்தில் நடைபெறவில்லை என்று நடிகர் எஸ்.வி.சேகர் குற்றம் சாட்டியுள்ளார். தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 2019- 2022_ஆம் ஆண்டுக்கான தேர்தல் வருகிற 23ம் தேதி எம்ஜிஆர் ஜானகி மகளிர் கல்லூரியில் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் கடந்த முறை வெற்றி பெற்ற நாசர் ,விஷால் ,கார்த்தி ஆகியோர் உள்ளிட்ட பாண்டவர் அணியும் , கே பாக்யராஜ் தலைமையிலான ஸ்வாமி சங்கரதாஸ் அணியும் இந்த தேர்தலில் போட்டியிட இருந்தன. ஆனால் 23_ஆம் தேதி நடிகர் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

கவர்னரை சந்தித்த பாண்டவர் அணியினர்… நடிகர் சங்க தேர்தலில் தொடரும் பரபரப்பு..!!!

நடிகர் சங்க தேர்தலில் போற்றிடும் பாண்டவர் அணியினர் திடீரென ஆளுநரை சந்தித்து பேசியது தேர்தல் காலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது . தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 2019- 2022_ஆம் ஆண்டுக்கான தேர்தல் வருகிற 23ம் தேதி எம்ஜிஆர் ஜானகி மகளிர் கல்லூரியில் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் கடந்த முறை வெற்றி பெற்ற நாசர் ,விஷால் ,கார்த்தி ஆகியோர் உள்ளிட்ட பாண்டவர் அணியும் , கே பாக்யராஜ் தலைமையிலான ஸ்வாமி சங்கரதாஸ் அணியும் இந்த தேர்தலில் போட்டியிடுகின்றன. ஆனால் […]

Categories
மாநில செய்திகள்

சந்து பொந்து சென்று மக்களுக்கு தண்ணீர் கொடுக்கிறோம்… அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி ..!!

சந்து பொந்து எல்லாம் சென்று மக்களுக்கு தண்ணீர் வழங்கி வருகின்றோம் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். தமிழகம் முழுவதும் தண்ணீர் பிரச்னை தலை வீரித்தாடுகின்றது. ஆங்கங்கே பொதுமக்கள் போராட்டம்  நடத்தி வருகின்றனர். இந்நிலையில் சென்னையில் உள்ள நந்தம்பாக்கத்தில் மீன்வளத்துறைஅமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் பேட்டியளித்தார்.இந்த ஆண்டுக்கான  100% பருவ மழையில் 40% தான் மழை பெய்துள்ளது. 60 சதவீதமான மழை இல்லை. பாதிக்குமேல் பருவமழை கிடையாது. இந்த சூழ்நிலையில் வைத்துக்கொண்டு அரசு சமாளித்து வருகிறது. எனவே யாரும் இதில் அரசியல் செய்வது என்பது […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

ஆசிரியர் தாக்கி +2 மாணவன் படுகாயம்….குமரியில் பரபரப்பு..!!

கன்னியகுமாரியில் தனியார் பள்ளி ஆசிரியர் தாக்கியதால் படுகாயம் அடைந்த மாணவன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்பட்ட முதல் நாளிலே பாடப்புத்தகங்கள் வழங்கப்பட்டு பாடத்திட்டத்தின் படி ஆசிரியர்கள் பாடங்களை மாணவர்களுக்கு கற்பித்து வருகின்றனர். இந்நிலையில் கன்னியாகுமரி மாவட்டம் தக்கல் அருகே தனியார் பள்ளி ஒன்றில் பிளஸ் 2 படித்து வருகிறார் மாணவரின் ஜோசப் இவரை அப்பள்ளியில் பணிபுரிந்து வரும் ஆசிரியர் ஒருவர்  கடுமையாக தாக்கியதால் படுகாயமடைந்த மாணவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மேலும் இச்சம்பவம் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

ரவுடிகளுக்கிடையே மோதல் “குண்டடி பட்டு 10 நாட்கள் கழித்து” மருத்துவமனையில் சேர்ந்த ரமேஷ்…!!

சென்னையில் ரவுடிகளுக்கிடையே ஏற்பட்ட மோதலில் குண்டடிபட்டு 10 நாட்கள் கழித்து ரவுடி செந்தில் மருத்துவமனையில் அட்மிட்டாகியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.   சென்னை எண்ணூரில் கடந்த சில தினங்களுக்கு முன்பாக இரு தரப்பு ரவுடி கேங்குகளுக்கு இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இந்த மோதலில் ரவுடிகள் நாட்டு துப்பாக்கியை வைத்து துப்பாக்கிசூடு நடத்தி சண்டையிட்டுள்ளார். இந்த சண்டையில் ஒரு ரவுடி குண்டடி பட்டுள்ளார். இச்சம்பவம் கடந்த ஜூன் 8ம் தேதி நடைபெற்றுள்ளது. இந்நிலையில் சம்பவம் நடைபெற்று 10 நாட்கள் கழித்து குண்டடி பட்ட  ரவுடி […]

Categories
வானிலை

தமிழகத்தில் அனல் காற்று..”105 டிகிரி கொதிநிலை வெப்பம் ” வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!!!

தமிழகத்தின் ஒரு சில மாவட்டங்களில் இன்று அனல் காற்று வீசும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நான்கு நாட்களுக்குப் பின்னர் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி வெப்பம் குறைய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. 29ம் தேதியுடன் கத்திரி வெயில் முடிந்த நிலையில் வெயிலின் அளவு குறையும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தினம் தோறும் பகல் நேர வெப்பநிலை கொதிநிலை ஆக மாறுகிறதே தவிர குறையவேயில்லை. அடுத்த 24 மணி நேரம் […]

Categories
மாநில செய்திகள் வைரல்

“மையிறவா புடுங்க போன” ஆபாசமாக பேசி அடிக்கும் SI …. வைரலாகும் வீடியோ….!!

புகார் கொடுக்க வந்தவரை SI ஒருவர் ஆபாசமாக பேசி அடிக்கும் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகின்றது. காவல்துறை பொதுமக்களின் நண்பன் என்பார்கள்.ஆனால் சில காவல்துறை அதிகாரிகளின் மோசமான அணுகுமுறையால் மக்கள் மத்தியில் போலீஸ் என்றாலே ஒரு வித பயம் ஏற்றப்படுகின்றது. இதை உறுதிப்படுத்தும் வகையில் பல்வேறு சம்பவங்கள் அரங்கேறியுள்ளது நமக்கு தெரியும். சமீபத்தில் கூட ஹெல்மட் அணியாததால் லத்தியால் தாக்கி கொடூரமாக ஒருவர் உயிரிழந்தார். இந்நிலையில் தற்போது சமூக வலைதளத்தில்  புகார் கொடுக்க வந்த ஒருவரை காவல்நிலைய […]

Categories
சென்னை மாநில செய்திகள்

“மக்களை வாட்டி வதைக்கும் தண்ணீர் பஞ்சம் “தமிழக அரசுக்கு நீதிமன்றம் கடும் கண்டனம் ..!!

தமிழகத்தில் நீர் மேலாண்மைக்கு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு கடும் தண்ணீர் பஞ்சத்தை சென்னை தற்போது சந்தித்து வருகிறது. தமிழகத்திலேயே சென்னையில்தான் அதிக மக்கள் தொகையானது இருந்துவருகிறது ஆகையால் சென்னையில்  நாள் ஒன்றுக்கு 850 லிட்டர் தண்ணீர் தேவைப்படுகிறது ஆனால் தற்போது அது குறைந்து வெறும் 525 லிட்டர் தண்ணீர் மட்டுமே விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இது சென்னையில் கடும் தண்ணீர் பஞ்சத்தை […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

“சாதியை அழிக்கும் சக்தியாக கலப்பு திருமணம் திகழ்கிறது “உயர்நீதிமன்ற நீதிபதி கருத்து ..!!

இளைஞர்கள் சாதியை வெறுத்ததன் காரணமாகவே கலப்புத் திருமணம் அதிகமாக நடைபெறுகிறது என்று உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேசன் கருத்து தெரிவித்துள்ளார். நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த நிவேதிதா மற்றும் பாலாஜி ஆகியோர் நீண்ட நாட்களாக காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில் திருமணத்திற்கு வீட்டில் அனுமதி கேட்கும் பொழுது இருவரது வீட்டிலும் திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. பெற்றோரின் எதிர்ப்பை மீறி இருவரும் திருமணம் செய்து கொண்டதை அடுத்து இருவருக்கும் பல அச்சுறுத்தல்கள் ஏற்பட்டு உள்ளது. இதனால் தங்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

போலி விமான டிக்கெட்…சீன இளைஞர்க்கு சிறை தண்டனை..!!

போலி விமான டிக்கெட்டை தயாரித்த சீன இளைஞரை காவல்துறைனர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் . சீனாவைச் சேர்ந்த கலிஸூ  என்ற இளைஞர் சென்னை விமான நிலையத்தில் போலி டிக்கெட்டை  வைத்திருந்ததால் சந்தேகத்திற்கு   உட்பட்டு விமான நிலைய காவல் துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். அதன் பின் அவரிடம் மேற்கொண்ட விசாரணையில் , ஹாங்காங் செல்லவிருந்த தனது காதலிக்கு போலி விமான டிக்கெட் அவரே தயார் செய்ததாக தெரியவந்துள்ளது . போலி விமான டிக்கெட் தயார் செய்ததன் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

திமுக_வின் துரைமுருகன் அப்பல்லோ_வில் அனுமதி….!!

திமுக_வின் பொருளாளர் துரைமுருகன் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார். திமுக_வின் பொருளாளர் துரைமுருகன் உடல் நலக்குறைவு காரணமாக சென்னை ஆயிரம் விளக்கு கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார். துரைமுருகன் காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், இன்று மதியம் வீடு திரும்புவார் எனவும் கூறப்படுகிறது. இதையடுத்து திமுகவின் முக்கிய நிர்வாகிகள் அப்போலோ மருத்துவமனையை சூழ்ந்துள்ளனர்.

Categories
பல்சுவை

3_ஆவது நாளாக மாற்றமின்றி பெட்ரோல், டீசல்….. பொதுமக்கள் மகிழ்ச்சி …!!

பெட்ரோல் மற்றும் டீசல் விலை எவ்வித மாற்றமின்றி இருப்பதால் பொதுமக்கள்  மகிழ்ச்சியடைந்துள்ளனர். தொடர்ந்து அதிகரித்து வந்த பெட்ரோல் மற்றும் டீசல் விலை தீடிரென சரிய தொடங்கியது. பின்னர் ஏற்றம் , இறக்கமாக இருந்து வருகின்றது . இதனால் வாகன ஓட்டிகள் தினம் தினம் என்ன விலை இருக்குமோ என்று சற்று குழம்பியே இருக்கின்றனர். ஒருநாள் அதிகமாகவும், ஒருநாள் குறைவாகவும், ஒருநாள் ஏற்ற இறக்கம் இல்லாமல் நிலையாகவும் இருந்து வருகின்றது. இதையடுத்து சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் […]

Categories
அரசியல்

“தமிழை ஆட்சி மொழியாக மாற்ற வேண்டும் “கவிஞர் வைரமுத்து கருத்து ..!!

தமிழை ஆட்சி மொழியாக மாற்ற முழுமூச்சோடு பயணிக்க வேண்டும் என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்ற புதிய எம்.பிகளுக்கான பதவியேற்பு விழா இரண்டாவது நாட்களாக தொடர்ந்து நீடித்து வருகிறது. அதில் இன்றைய நிகழ்வில் தமிழகம் மற்றும் புதுச்சேரியை சேர்ந்த 39 எம்பிக்கள் பதவியேற்றுக் கொண்டனர். பதவியேற்ற அனைவரும் தமிழ்மொழியிலே பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர். மேலும் பதவிப்பிரமாணத்தின் இறுதியில் தமிழ் வாழ்க என்ற முழக்கத்தையும் ஏற்படுத்தியுள்ளனர். இது இந்திய அளவில் டிரெண்ட் ஆகி அனைவரிடமும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“எல்லா பக்கத்திலும் இருந்தும் தடை வருகின்றது ” நடிகர் நாசர் வேதனை..!!

எல்லா பக்கத்திலும் இருந்து எங்களுக்கு தடை வருகின்றது என்று நடிகர் நாசர் வேதனையுடன் தெரிவித்துள்ளார். தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 2019- 2022_ஆம் ஆண்டுக்கான தேர்தல் வருகிற 23ம் தேதி எம்ஜிஆர் ஜானகி மகளிர் கல்லூரியில் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் கடந்த முறை வெற்றி பெற்ற நாசர் ,விஷால் ,கார்த்தி ஆகியோர் உள்ளிட்ட பாண்டவர் அணியும் , கே பாக்யராஜ் தலைமையிலான ஸ்வாமி சங்கரதாஸ் அணியும் இந்த தேர்தலில் போட்டியிடுகின்றன. ஆனால் 23_ஆம் தேதி நடிகர் SV சேகர் […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

புதுக்கோட்டை அருகே விவசாய நிலங்களில் கண்டுபிடிக்கப்பட்ட ஐம்பொன் சிலைகள்…!!

திருமயம் அருகே நிலத்தை சமன் செய்யும் பணியின்போது 17 ஐம்பொன் சிலைகளும் சிலை பீடம் ஒன்றும் கண்டெடுக்கப்பட்டுள்ளன. புதுக்கோட்டை மாவட்டம் பேரையூரைச் சேர்ந்த விவசாயி முத்தையாவிற்கு  சொந்தமான நிலத்தில் சமன் செய்யும் பணிகள் ஜேசிபி இயந்திரத்தின் உதவியுடன் நடைபெற்றது. அங்கிருந்த மரம் ஒன்றை அப்புறப்படுத்தும்போது 2 சிலைகள் கிடந்துள்ளன.இதையடுத்து அவர்கள்  வருவாய்த்துறைக்கும் தொல்பொருள் துறையினருக்கும் தகவல் தெரிவித்துள்ளனர். அவ்விடத்திற்கு விரைந்து வந்த அதிகாரிகள், அந்த இரண்டு சிலைகைளையும் கைப்பற்றினர் மேலும் அருகிலுள்ள பகுதிகளில்   இவ்வாறு தோண்டத் தோண்ட […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“பேமானித்தனம்” முதல்வர் , பிரதமர் என்று பாராமல் ஆவேசமான தமிழ் நடிகர்…!!

பேமானித்தனம் பண்ணி முதல்வர் , பிரதமர் ஆகிவிட்டார்கள் என்று நாம் தமிழர் கட்சியை சேர்ந்த நடிகர் மண்சசூரலிகான் கடுமையாக வசைபாடியுள்ளார்  தமிழகத்தில் தண்ணீர் உட்பட பல பிரச்சனைகள் இன்று விவாதிக்க கூடிய விஷயமாக இருக்கின்றது. அணுக்கழிவு கிடங்கு அமைப்பு விவகாரம் , ஹைட்ரோ கார்பன் , மீத்தேன் வாயு போன்ற இயற்க்கை வளங்கள் பாதிக்கக்கூடிய பல்வேறு திட்டங்களை தமிழகத்தில் செயல்படுத்த ஆளும் அதிமுக அரசும் , மத்திய பாஜக அரசும் முனைப்பு காட்டி வருகின்றது. தமிகத்திற்கு எதிரான […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

எண்ணூரில் ரவுடிகள் இடையே மோதல்….துப்பாக்கியால் சுட்ட ரவுடி ரமேஷ் கைது..!!

சென்னை எண்ணூரில் ரவுடிகள் இடையேயான மோதலில் துப்பாக்கியால் சுட்ட ரவுடி ரமேஷ் கைது செய்யப்பட்டார். சென்னை எண்ணூரில் ஒரு வாரத்திற்கு முன்பு ரவுடி ரமேஷ் மற்றும் செந்திகுமார் இருவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த ரமேஷ் தான் வைத்திருந்த நாட்டு துப்பாக்கியால் செந்தில்குமாரை துப்பாக்கியால் சுட்டுள்ளார்.  இதில் அவரது இடுப்பு பகுதியில் குண்டுபாய்ந்து படுகாயம் அடைந்தார். இந்நிலையில் கடந்த சில தினங்களாக தேடி வந்த போலீசார் எண்ணூரில் இன்று ரவுடி செந்தில் குமாரை சுட்ட ரவுடி ரமேஷை கைது செய்தனர். ரவுடி […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

திமுக_வை சமாளித்தலும் , அதிமுக_வை சமாளிக்க முடியவில்லை… அதிமுக MLA குமுறல் ..!!

எதிர்கட்சியினரை கூட சமாளித்து விடலாம் ஆனால் நம் கட்சியினரை சமாளிக்க முடிய வில்லை என்று MLA தோப்பு வெங்கடாச்சலம் கூறியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நடந்து முடிந்த மக்களவை மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலில் அதிமுக படு தோல்வி அடைந்தது. அதே சமயம் சட்டமன்ற இடைத்தேர்தல் வெற்றியால் இந்த ஆட்சி தப்பியது. அதோல்வியையடுத்து அதிமுகவிற்கு ஒற்றை தலைமை வேண்டும் என்று பல்வேறு பிரச்சனைகளை அதிமுக MLA-க்கள் கிளப்பினார். இதையடுத்து அதிமுக தலைமை கட்சி விவகாரங்களை யாரும் பொது வெளியில் பேச கூடாது என்ற […]

Categories
பல்சுவை

இரண்டாவது நாளாக மாற்றமின்றி பெட்ரோல் , டீசல் ….. பொதுமக்கள் மகிழ்ச்சி …!!

பெட்ரோல் மற்றும் டீசல் விலை எவ்வித மாற்றமின்றி இருப்பதால் பொதுமக்கள்  மகிழ்ச்சியடைந்துள்ளனர். தொடர்ந்து அதிகரித்து வந்த பெட்ரோல் மற்றும் டீசல் விலை தீடிரென சரிய தொடங்கியது. பின்னர் ஏற்றம் , இறக்கமாக இருந்து வருகின்றது . இதனால் வாகன ஓட்டிகள் தினம் தினம் என்ன விலை இருக்குமோ என்று சற்று குழம்பியே இருக்கின்றனர். ஒருநாள் அதிகமாகவும், ஒருநாள் குறைவாகவும், ஒருநாள் ஏற்ற இறக்கம் இல்லாமல் நிலையாகவும் இருந்து வருகின்றது. இதையடுத்து சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் […]

Categories
பல்சுவை

“மாற்றமின்றி பெட்ரோல் , டீசல் விலை” பொதுமக்கள் மகிழ்ச்சி….!!

பெட்ரோல் மற்றும் டீசல் விலை எவ்வித மாற்றமின்றி இருப்பதால் பொதுமக்கள்  மகிழ்ச்சியடைந்துள்ளனர். தொடர்ந்து அதிகரித்து வந்த பெட்ரோல் மற்றும் டீசல் விலை தீடிரென சரிய தொடங்கியது. பின்னர் ஏற்றம் , இறக்கமாக இருந்து வருகின்றது . இதனால் வாகன ஓட்டிகள் தினம் தினம் என்ன விலை இருக்குமோ என்று சற்று குழம்பியே இருக்கின்றனர். ஒருநாள் அதிகமாகவும், ஒருநாள் குறைவாகவும், ஒருநாள் ஏற்ற இறக்கம் இல்லாமல் நிலையாகவும் இருந்து வருகின்றது. இதையடுத்து சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் […]

Categories
மாநில செய்திகள்

தமிழக மருத்துவ கல்லூரிகளுக்கு நீட் தேர்வில் இருந்து விலக்களிக்க கோரிக்கை – முதல்வர் பழனிசாமி..!!

முதல்வர் பழனிசாமி, சிறப்பு விலக்கு மூலம் தமிழகத்தில் உள்ள மருத்துவ கல்லூரிகளுக்கு நீட் தேர்வில் இருந்து விலக்களிக்க கோரிக்கை வைத்துள்ளதாக தெரிவித்துள்ளார்   டெல்லியில் நேற்று பிரதமர் மோடியை அவரது இல்லத்தில் தமிழக முதல்வர் பழனிசாமி சந்தித்து தமிழ்நாட்டின் பல்வேறு வளர்ச்சி திட்டங்கள் குறித்து கோரிக்கை மனுவினை வழங்கினார். அதை தொடர்ந்து நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்து தமிழகத்திற்கு தர வேண்டிய நிலுவை தொகையை வழங்குமாறு கேட்டுக்கொண்டார். தொடர்ந்து ஜலசக்தித்துறை அமைச்சர் கஜேந்திரசிங் ஷெகாவத்தை  சந்தித்து தமிழகத்திற்கான நதி நீர் […]

Categories
மாநில செய்திகள்

“கோதாவரி – காவிரி நதிநீர்” இணைப்பை முதன்மையாக நிறைவேற்ற கோரிக்கை – முதல்வர் பழனிசாமி..!!

டெல்லியில்முதல்வர் பழனிசாமி, கோதாவரி – காவிரி நதிநீர் இணைப்பை முதன்மையாக நிறைவேற்ற கோரிக்கை வைத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.  டெல்லியில் நேற்று பிரதமர் மோடியை அவரது இல்லத்தில் தமிழக முதல்வர் பழனிசாமி சந்தித்து தமிழ்நாட்டின் பல்வேறு வளர்ச்சி திட்டங்கள் குறித்து கோரிக்கை மனுவினை வழங்கினார். அதை தொடர்ந்து நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்து தமிழகத்திற்கு தர வேண்டிய நிலுவை தொகையை வழங்குமாறு கேட்டுக்கொண்டார். தொடர்ந்து ஜலசக்தித்துறை அமைச்சர் கஜேந்திரசிங் ஷெகாவத்தை  சந்தித்து தமிழகத்திற்கான நதி நீர் திட்டங்கள் மற்றும் மேகதாது அணை […]

Categories
மாநில செய்திகள்

தந்தையர் தின வாழ்த்து தெரிவித்த முக.ஸ்டாலின்….!!

திமுக தலைவர் முக.ஸ்டாலின் அனைவருக்கும் தந்தையர் தின வாழ்த்த்தை டிவீட்டரில் தெரிவித்துள்ளார். தந்தையர் தினம் என்பது தந்தையர்களை கெளரவிப்பதற்காக கொண்டாப்படும் ஒரு நாளாகும். உலகின் பல்வேறு  நாடுகளில் ஜூன் மாதத்தின் 16_ஆம் தேதி  இந்த தினம் கொண்டாப்படுகிறது. இதையடுத்து அனைவரும் தங்களின் தந்தைக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். தந்தையர் தினத்தை முன்னிட்டு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் டுவிட்டரில் தெரிவித்துள்ள வாழ்த்து குறிப்பில் , அனைத்து தந்தையர்க்கும் தந்தையர் தின வாழ்த்துக்கள்….தந்தை சொல்மிக்க மந்திரமில்லை என்று நான் வாழ்ந்ததாகச் சொல்லுவார் தலைவர் கலைஞர். அவர் எனக்கு தந்தையுமானவர். […]

Categories
பல்சுவை

“தொடர் சரிவில் பெட்ரோல் டீசல் விலை” மகிழ்ச்சியில் பொதுமக்கள்…!!

தொடர்ந்து பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறைந்துள்ளதால்  வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். தொடர்ந்து அதிகரித்து வந்த பெட்ரோல் மற்றும் டீசல் விலை தீடிரென சரிய தொடங்கியது. பின்னர் ஏற்றம் , இறக்கமாக இருந்து வருகின்றது . இதனால் வாகன ஓட்டிகள் தினம் தினம் என்ன விலை இருக்குமோ என்று சற்று குழம்பியே இருக்கின்றனர். ஒருநாள் அதிகமாகவும், ஒருநாள் குறைவாகவும், ஒருநாள் ஏற்ற இறக்கம் இல்லாமல் நிலையாகவும் இருந்து வருகின்றது. இதையடுத்து சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“மேகதாது அணை கட்ட அனுமதியளிக்க கூடாது” முதல்வர் பழனிசாமி வலியுறுத்தல்..!!

தமிழக முதல்வர் பழனிசாமி கர்நாடகா மேகதாது அணை கட்ட அனுமதியளிக்க கூடாது என்று ஜலசக்தித்துறை அமைச்சரிடம் வலியுறுத்தியுள்ளார்  நிதி ஆயோக் கூட்டம் இன்று பிற்பகல் நடைபெற்றது. பிரதமர் மோடி தலைமையில் நடைபெறும் இந்த 5வது நிதி ஆயோக் கூட்டத்தில் மாநில முதலமைச்சர்கள் கலந்து கொள்கின்றனர். அத்துடன் சிறப்பு விருந்தினர்களாக மத்திய அமைச்சர்கள் அழைக்கப்பட்டுள்ளனர். இதில் கலந்து கொள்வதற்கு தமிழக முதல்வர் பழனிசாமியும் டெல்லி சென்றுள்ளார். இந்நிலையில் பிரதமர் மோடியை முதல்வர் பழனிச்சாமி காலை டெல்லியில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்து பேசியுள்ளார். […]

Categories
தேனி மாநில செய்திகள்

தண்ணீர் பிரச்சினைக்கு போர்க்கால நடவடிக்கை…. துணை முதல்வர் உறுதி …!!

தண்ணீர் பிரச்சினையை போக்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். தமிழகம் முழுவதும் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. வீடுகளுக்கு தண்ணீர் கிடைக்காமல் பொதுமக்கள் சிரமப்பட்டு வரக்கூடிய இந்த குடிநீர் கேட்டு அதிகமான இடங்களில் மக்கள் போராட்டமும் நடத்தி வருகின்றனர். குடிநீர் தட்டுப்பாட்டை போக்க பல்வேறு அரசியல் கட்சிகள் தமிழக அரசிடமும் , மத்திய அரசிடமும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறுகையில் , தமிழகத்தில் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்தார் முதல்வர் பழனிசாமி..!!

டெல்லியில் முதல்வர் பழனிசாமி, நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்து பேசினார்  மக்களவை தேர்தலில் பாஜக வெற்றி பெற்றதையடுத்து பிரதமர் மோடி மீண்டும் 2 வது முறையாக பதவியேற்ற பிறகு, நிதி ஆயோக் கூட்டம் இன்று பிற்பகல் நடைபெறுகிறது. பிரதமர் மோடி தலைமையில் நடைபெறும் இந்த 5வது நிதி ஆயோக் கூட்டத்தில் மாநில முதலமைச்சர்கள் கலந்து கொள்கின்றனர். அத்துடன் சிறப்பு விருந்தினர்களாக மத்திய அமைச்சர்கள் அழைக்கப்பட்டுள்ளனர். இதில் கலந்து கொள்வதற்கு தமிழக முதல்வர் பழனிசாமியும் டெல்லி சென்றுள்ளார். இந்நிலையில் பிரதமர் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

பிரதமர் மோடியை சந்தித்து பேசினார் பழனிசாமி..!!

டெல்லியில் தமிழக முதல்வர் பழனிசாமி பிரதமர் மோடியை சந்தித்து பேசினார்  மக்களவை தேர்தலில் பாஜக வெற்றி பெற்றதையடுத்து பிரதமர் மோடி மீண்டும் 2 வது முறையாக பதவியேற்ற பிறகு, நிதி ஆயோக் கூட்டம் இன்று பிற்பகல் நடைபெற்றது. பிரதமர் மோடி தலைமையில் நடைபெறும் இந்த 5வது நிதி ஆயோக் கூட்டத்தில் மாநில முதலமைச்சர்கள் கலந்து கொள்கின்றனர். அத்துடன் சிறப்பு விருந்தினர்களாக மத்திய அமைச்சர்கள் அழைக்கப்பட்டுள்ளனர். இதில் கலந்து கொள்வதற்கு தமிழக முதல்வர் பழனிசாமியும் டெல்லி சென்றுள்ளார். இந்நிலையில் பிரதமர் மோடியை […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சென்னையில் பிரபல ரவுடி வல்லரசு சுட்டுக்கொலை..!!

சென்னையில் பிரபல ரவுடி வல்லரசு போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டார்  சென்னையில் பிரபல ரவுடி வல்லரசும் அவனது கூட்டாளிகளும் எம்.எம் கார்டன் பகுதியில் அரிவாளுடன் அட்டகாசம் செய்வதாக காவல்துறைக்கு நேற்று தகவல் கிடைத்தது. இதையடுத்து அப்பகுதிக்கு சென்ற வியாசர்பாடி காவல்நிலைய போலீசார் பவுன்ராஜ், ரமேஷ் ஆகியோர் வல்லரசை பிடிக்க முயன்றனர். அப்போது இரு தரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் காவலர் பவுன்ராஜை வல்லரசு அரிவாளால் வெட்டினார். உடனே படுகாயமடைந்த காவலரை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இந்நிலையில் மாதவரம் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

ரயில் நிலையத்தில் “இளம் பெண்ணுக்கு அரிவாள் வெட்டு” இளைஞன் தற்கொலை முயற்சி..!!

சென்னை ரயில் நிலையத்தில் இளைஞன் ஒருவன் இளம் பெண்ணை அரிவாளால் வெட்டிவிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார்    சென்னை சேத்துப்பட்டு ரயில் நிலையத்தில் இரண்டாவது பிளாட் பாரத்தில் ஈரோட்டைச் சேர்ந்த சுரேந்தர் என்ற இளைஞரும், அதே ஊரை சேர்ந்த தேன் மொழி என்ற இளம்பெண்ணும் பேசிக்கொண்டு சென்று கொண்டிருந்தனர். அப்போது திடீரென அந்த இளைஞன் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் அப்பெண்ணை வெட்டினான். கழுத்தில் காயம் பட்ட அப்பெண் கீழே விழுந்தார். இளம்பெண்ணை வெட்டிய பிறகு அவர் ரயிலில் பாய்ந்து தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார். இதில் […]

Categories
பல்சுவை வானிலை

“ஆந்திரா, தெலுங்கானாவில் பருவமழை” வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு…!!

நாளை அல்லது நாளை மறுநாள்  ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் பருவமழை தொடங்குமென்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்துக்கொண்டு இருக்கின்ற இந்த வேளையில் கேரளா_வில் பருவமழை பெய்தது. இது தொடர்பாக தொடர்ந்து சென்னை வானிலை ஆய்வு மையம் தகவலை பரிமாறிக்கொண்டு இருக்கின்றது. இது குறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்தி குறிப்பில் , ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் வருகின்ற 16_ஆம் தேதிக்கு பிறகு பருவமழை பெய்யத் துவங்கும் என்று இந்திய வானிலை […]

Categories
பல்சுவை

தொடர் சரிவில் பெட்ரோல் , டீசல் விலை பொதுமக்கள் மகிழ்ச்சி…..!!

தொடர்ந்து பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறைந்துள்ளதால்  வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். தொடர்ந்து அதிகரித்து வந்த பெட்ரோல் மற்றும் டீசல் விலை தீடிரென சரிய தொடங்கியது. பின்னர் ஏற்றம் , இறக்கமாக இருந்து வருகின்றது . இதனால் வாகன ஓட்டிகள் தினம் தினம் என்ன விலை இருக்குமோ என்று சற்று குழம்பியே இருக்கின்றனர். ஒருநாள் அதிகமாகவும், ஒருநாள் குறைவாகவும், ஒருநாள் ஏற்ற இறக்கம் இல்லாமல் நிலையாகவும் இருந்து வருகின்றது. இதையடுத்து சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பாண்டவர் அணி “அடக்கத்தோடு செயல்படுங்கள்” ராதிகா ஆவேசம் ..!!

அடக்கத்தோடு செயல்பட முயலுங்கள் பாண்டவர் அணியினருக்கு நடிகை ராதிகா எச்சரிக்கை விடுத்துள்ளார். வருகின்ற 23ம் தேதி தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் நடைபெறுகின்றது . இந்த தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் வேட்பு மனு பரிசீலிக்கப்பட்டு ,  இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இந்நிலையில் பாண்டவர் அணியினர் நடிகர் சங்க விவகாரம் குறித்து ஒரு வீடியோவை வெளியிட்டு _ ள்ளார்கள். அதில் நடிகர் சரத்குமார் மீது பல்வேறு அடுக்கடுக்கான குற்றசாட்டை தெரிவித்திருந்தனர். இந்நிலையில் இந்த வீடியோ தொடர்பாக நடிகை ராதிகா வெளியிட்ட அறிக்கையில் , பாண்டவர் அணியினரை நோக்கி குறிப்பாக நடிகர் விஷாலுக்கு […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

நாகை மாவட்ட மீனவர்கள் 18 பேர் விடுவிப்பு…இலங்கை நீதிமன்றம் உத்தரவு…!!!

 எல்லையை  தாண்டி மீன்பிடித்ததாக  இலங்கை கடற்படையினரால் கைது செய்ப்பட்ட நாகை மாவட்டத்தை சேர்ந்த  18 மீனவர்கள்  விடுதலை செய்யப்பட்டனர். கடந்த ஏப்ரல் மாதம் 5ம் தேதி நாகைப்பட்டினம்  கோடியக்கரை கடற்பகுதியில் மீன்பிடித்துக்கொண்டிருந்த 18 மீனவர்களை எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி  இலங்கை கடற்படையினரால்  குற்றம் சாற்றப்பட்டு கைது செய்ப்பட்டனர்.  இதையடுத்து  இவ்வழக்கு பருத்தித்துறை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், வழக்கினை விசாரித்த நீதிபதிகள் மீனவர்கள் அனைவரையும் விடுவிக்க உத்தரவிட்டனர். இதனால் மீனவர்கள் ஓரிரு நாட்களில் தாயகம் திரும்புவர் என எதிர்பார்க்கப்படுகிறது.

Categories

Tech |