Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

கோடை சீசன் ஆரம்பம்… சுற்றுலா பயணிகள் உற்சாகம்…!!

ஊட்டியில்  கோடை சீசன் ஆரம்பித்துள்ளதால் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது. தமிழ்நாட்டின், நீலகிரி மாவட்டத்தில், நீலகிரி மலையின் மேல் உள்ள ஒரு அழகிய ஊர் ஊட்டி. உதகமண்டலம் என்ற பெயர், சுற்றுலா பயணிகளின் வசதிக்காக சுருக்கி ஊட்டி என்று அழைக்கப்பட்டது. இந்த அழகிய மலைப்பிரதேசதிற்கு வருடந்தோறும்  சுற்றுலா பயணிகள் கூட்டம் கூட்டமாக வந்து செல்கின்றனர். தற்போது கோடை கால சீசன் ஆரம்பித்துள்ளதால், கோடை வெப்பத்தில் இருந்து தங்களை காத்து கொள்ள தமிழ்நாட்டிலிருந்து மட்டுமல்லாமல் பல்வேறு மாநிலங்களிலிருந்தும் சுற்றுலா பயணிகள்  குவிந்த […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ரூ 467,88,00,000 பறிமுதல்…… இந்தியாவிலேயே முதலிடம் பிடித்த தமிழகம்..!!!

உரிய ஆவணமின்றி  467 கோடியே 88 லட்ச ரூபாய் தமிழகத்தில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. பாராளுமன்ற தேர்தலையொட்டி தமிழகத்தில் இதுவரை உரிய ஆவணங்களின்றி எடுத்து  செல்லப்பட்ட ‌‌183 கோடி ரூபாய் பணம்  பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே, தமிழ்நாட்டில் தான்  பணமும், தங்கமும் அதிகளவு சிக்கியுள்ளது என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. தேர்தல் நாள் அறிவித்தது முதல் இன்றுவரை, நாடு முழுவதும் பறிமுதல் செய்யப்பட்ட, பணம், தங்கம், மதுபானம், போதைப் பொருட்கள் உள்ளிட்டவற்றின் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

மாங்கரையில் பற்றியெரிந்த காட்டுத்தீ… நாசமான மூலிகை…!!

மாங்கரை அருகே மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் காட்டுத்தீ, வேகமாக பரவியதால் அரியவகை மூலிகைகள்,உள்ளீட்ட ஏராளமான மரங்கள் எரிந்து நாசமாகியுள்ளன.   கோயமுத்தூர் மாவட்டம் மாங்கரை அடுத்துள்ள காளப்ப நாயக்கன்பாளையம் பகுதிக்கு உட்பட்ட மலைப்பகுதியில் நேற்று மாலை திடீரென காட்டுத்தீ ஏற்பட்டது. காற்றின் வேகம் அதிகமானதால் காட்டு தீ  அங்கிருந்து மருதமலை எல்லை பகுதி வரை சுமார் 2 கிலோமீட்டர் தூரம் மளமளவென  பரவியது. இத்தகவலறிந்து விரைந்து வந்த வனத்துறையினர் மற்றும் தன்னார்வ தொண்டு அமைப்பினர் தீயை அணைக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.   இரவு நேரம் என்பதால்  தீயை […]

Categories
அரசியல் மாவட்ட செய்திகள் வேலூர்

ரூ 2,40,500 பறிமுதல்…கையும் களவுமாக சிக்கிய அரசியல் பிரமுகர்கள்….!!

நெமிலியில்  பணப்பட்டுவாடாவில் ஈடுபட்ட இருவரை  கைது செய்து ரூ  2 லட்சத்து 4 ஆயிரத்து 500 ரூபாயை பறிமுதல் செய்தனர். 2019 நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு   7 கட்டங்களாக நடைபெறுகின்றது. தமிழகத்தில்  நாடாளுமன்ற   தேர்தலுடன் சேர்த்து 18 சட்டமன்ற தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது .வருகின்ற  18_ ஆம் தேதி தமிழகம் முழுவதும் வாக்கு பதிவு நடைபெற உள்ள நிலையில்  தமிழ்நாடு  முழுவதும் பணப்பட்டுவாடாவை தடுக்க பறக்கும் படையினார் தீவிர சோதனையில் ஈடுபட்டுவருகின்றன. இந்த நிலையில் நெமிலி தேர்தல் […]

Categories
அரசியல் தேசிய செய்திகள் மாநில செய்திகள்

”வாய்திறக்காத மோடி” ப.சிதம்பரம் விமர்சனம்…..!!

தமிழ்நாட்டில் நேற்று நடந்த பிரச்சார கூட்டத்தில் பிரதமர் மோடி பேசாத சில விஷயங்களை ப.சிதம்பரம் சுட்டிக்காட்டியுள்ளார்.   தமிழகத்தில் நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு வருகின்ற ஏப்ரல் 18_ஆம் தேதி நடைபெற இருக்கின்றது. தமிழகத்தை பொறுத்தவரை இந்த தேர்தல் 5 முனை போட்டியாக பார்க்கப்படுகின்றது. அதிமுக தலைமையிலான கூட்டணியும் , திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியும் பிரதானமாக மோத இருக்கும் இந்த தேர்தல் களத்தில் அமமுக , மக்கள் நீதி மைய்யம் மற்றும் நாம் தமிழர் உள்ளிட்ட […]

Categories
கல்வி மாநில செய்திகள்

கோடை விடுமுறை…மாணவர்கள் உற்சாகம்…!!

தமிழ்நாடு முழுவதும்  பள்ளிகளுக்கு இறுதியாண்டு தேர்வு முடிந்தநிலையில் .  இன்றுமுதல் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. பிளஸ்-2விற்கான  அரசு பொதுத்தேர்வு கடந்த  மார்ச் 1-ஆம்  தேதி  தொடங்கி 19-ஆம்  தேதி முடிவடைந்தன.அதை தொடர்ந்து  பிளஸ்-1 மற்றும் எஸ்.எஸ்.எல்.சி அரசு பொதுத்தேர்வும் கடந்த மாதம்  நிறைவு பெற்றது . இதையடுத்து  பாராளுமன்ற தேர்தல் மற்றும் சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு  இடைத்தேர்தல் வருகிற 18-ந் தேதி தமிழகத்தில்  நடைபெறுவதால், விரைவில் பள்ளிகளில்  இறுதி தேர்வை  முடிக்க பள்ளிக்கல்விதுறை  உத்தரவுவிட்டனர். அந்த உத்தரவின்படி  1 முதல் 9 […]

Categories
பல்சுவை

பெட்ரோல் 6 காசும் , டீசல் 7 காசும் அதிகரிப்பு…!!

இன்று பெட்ரோல் 6 காசும் , டீசல் 7 காசும் விலை அதிகரித்து விற்பனை செய்யப்படுகின்றது. தொடர்ந்து அதிகரித்து வந்த பெட்ரோல் மற்றும் டீசல் விலை தீடிரென சரிய தொடங்கியது. பின்னர்  ஏற்றம் , இறக்கமாக இருந்து வருகின்றது . இதனால் வாகன ஓட்டிகள் தினம் தினம் என்ன விலை இருக்குமோ என்று சற்று குழம்பியே இருக்கின்றனர் . ஒருநாள் அதிகமாகவும் , ஒருநாள் குறைவாகவும் , ஒருநாள் ஏற்ற இறக்கம் இல்லாமல் நிலையாகவும் இருந்து வருகின்றது.   […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

மணல் கடத்தல் இருவர் கைது…மணல் லாரி பறிமுதல்…!!

அனுமதியின்றி மணல் அள்ளிய 2 பேரை போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்து லாரியை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். நாகை மாவட்டத்தில் மணல் கடத்தலை தடுக்க  மாவட்ட போலீஸ்  சூப்பிரண்டு உத்தரவின்படி பல்வேறு இடங்களில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில்  கீழ்வேளூர் போலீஸ் சரகம்   அருகே  போலீசார் சோதனையில் ஈடுபட்டபோது அந்த வழியாக வந்த லாரியை மறித்து நிறுத்தி அதில்  வந்த  2 பேரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.   போலீசார் நடத்திய விசாரணையில்  லாரியில் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

செயின் பறிப்பில் சிக்கிய வாலிபர்கள்… போலீசார் நடவடிக்கை…!!

  சூலூர் பகுதியில் தொடர் செயின் பறிப்பில்  ஈடுபட்ட 4 வாலிபர்களை போலீசார் கைதுசெய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு  சிறையில் அடைத்தனர். கோவை மாவட்டம் சூலூர் போலீஸ் நிலைய வட்டார பகுதிகளில் கடந்த சில மாதங்களாகவே தொடர்ந்ந்து செயின் பறிப்பு சம்பவங்கள் நடந்து வருகிறது. இதையடுத்து கருமத்தம்பட்டி டி.எஸ்.பி. பாஸ்கரன் உத்தரவின்படி  சூலூர் இன்ஸ்பெக்டர் தங்கராஜ், சப்-இன்ஸ்பெக்டர் பாண்டிராஜ் ஆகியோரின் தலைமையில் தனிப்படை அமைத்து அப்பகுதி மற்றும் சுற்றுவட்டரத்தில் போலீசார் தீவிர தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளன.கோவை மாவட்டம் சூலூர் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

விவகாரத்தால் வந்த விபரீதம்…!!

போடியில் கணவர் விவாகரத்து நோட்டீஸ் அனுப்பியதால், குழந்தையும் தாயும் விஷம் குடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  தேனி மாவட்டம் போடிநாயகனுறைச் சேர்ந்த பிரியங்கா, தனது கணவர் பல்லவராஜன் மீது  கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்துள்ளனர். இந்நிலையில் 15 மாத பெண் குழந்தையுடன் தாய் வீட்டில் வசித்து வந்துள்ளார். மேலும் பிரியங்காவுக்கு பல்லவராஜன் அண்மையில் விவாகரத்து நோட்டீஸ் அனுப்பியதாகக் கூறப்படுகிறது. இச்சம்பவம் தொடர்பாக பல்லவராஜன் குடும்பநல நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இதனால் மனமுடைந்த பிரியங்கா போடியில் உள்ள முருகன் கோவிலுக்கு சென்று  தனது மகளுக்கு விஷம் கொடுத்து […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

இளம்பெண் மாயம்… குமரியில் நீடிக்கும் அதிர்ச்சி…!!

களியக்காவிளையில்  இளம்பெண் மாயமானதை அடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திவருக்கின்றன.   கன்னியாகுமாரி மாவட்டம்  களியக்காவிளை பகுதியைச் சேர்ந்தவர் குமார். இவரது மகள் நிஷா 23 வயதான  இவர் பி.ஏ. முடித்து விட்டு வீட்டில் இருந்து உள்ளார் . சம்பவத்தன்று நிஷாவின்  பெற்றோர் வெளியே சென்றுள்ளனர் . பின்னர் வீடு திரும்பி பார்த்த பொழுது தனது மகள் நிஷா காணாமல்போனதை கண்டு அதிர்ச்சியடைந்து அக்கம்பக்கத்தில் தேடி பார்த்தனர். இதையடுத்து நிஷா மயமானதை உறுதி செய்த பெற்றோர் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

குமரியில் கல்லூரி மாணவி மாயம்…போலீசார் வழக்குப்பதிவு…!!

கோட்டார் பூங்கா கல்லூரி மாணவி மாயமானது குறித்து போலிசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலை அடுத்துள்ள  கோட்டார் பூங்கா நகரை  சேர்ந்தவர் சுபாஷ்போஸ். இவரது மகள் சோனியா. 20 வயதான சோனியா அங்குள்ள  கல்லூரியில்  3_ ஆம் ஆண்டு படித்து வருகிறார். சம்பவத்தன்று  வீட்டில் இருந்து கல்லூரிக்குச் செல்வதாக பெற்றோரிடம் கூறி விட்டு சென்ற சோனியா கல்லூரி வகுப்பு  முடிந்து நெடுநேரம் ஆகியும்  வீடு திரும்பவில்லை. சோனியா கல்லூரி முடிந்து  வீட்டுக்கு வராததால் அதிர்ச்சி  அடைந்த […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

தமிழக முதலமைச்சர் இன்று கரூர் வருகை…!!

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி  தேர்தல் பிரசாரத்துக்காக  கரூர், பெரம்பலூர் ஆகிய பகுதிகளில்  இன்று மாலை  வருகிறார். 2019 நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு   7 கட்டங்களாக நடைபெறுகின்றது. தமிழகத்தில்நாடாளுமன்ற  தேர்தலுடன் சேர்த்து 18 சட்டமன்ற தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடைபெறுவதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது. இடையடுத்து தமிழகத்தில் வருகின்ற 18_ ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுவதால் அரசியல் கட்சித்தலைவர்கள் தங்களது வேட்பாளர்களை ஆதரித்து  தீவிர பிரச்சாரம் செய்து வருகின்றன. இந்நிலையில்  முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்ய  கரூருக்கு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

4 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல்….. திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு…!!

தமிழகத்தில் காலியாக இருக்கும் 4 சட்டமன்ற தொகுதிகளுக்கு திமுக வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். 2019 நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு   7 கட்டங்களாக நடைபெறுகின்றது. மேலும் சட்டமன்ற தேர்தலுடன் சேர்த்து 18 சட்டமன்ற தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடைபெறுவதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது. மேலும் இதோடு சேர்த்து மீதமுள்ள திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, ஓட்டப்பிடாரம் ஆகிய தொகுதிகளுக்கு தேர்தல் அறிவிக்க வேண்டுமென்று எதிர்க்கட்சிகள் உள்ளிட்ட பலரும் வலியுறுத்தினார். ஆனால் நீதிமன்ற வழக்கை காரணம் காட்டி 3 சட்டமன்ற தொகுதி தவிர்த்து 18 சட்டமன்ற தொகுதிக்கு இடைத்தேர்தல் […]

Categories
அரசியல் தேனி மாநில செய்திகள்

“போபால் விஷவாயு கசிவு” யார் நியாயம் வழங்குவது….பிரதமர் மோடி கேள்வி..!!

போபால் விஷவாயு கசிவால் உயிரிழந்தவர்களுக்கு யார் நியாயம் வழங்குவது என்று பிரச்சார கூட்டத்தில் பிரதமர் மோடி கேள்வி எழுப்பினார். தமிழகத்தில் நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு வருகின்ற ஏப்ரல் 18_ஆம் தேதி நடைபெற இருக்கின்றது. தமிழகத்தை பொறுத்தவரை இந்த தேர்தல் 5 முனை போட்டியாக பார்க்கப்படுகின்றது. அதிமுக தலைமையிலான கூட்டணியும் , திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியும் பிரதானமாக மோத இருக்கும் இந்த தேர்தல் களத்தில் அமமுக , மக்கள் நீதி மைய்யம் மற்றும் நாம் தமிழர் […]

Categories
சென்னை மாநில செய்திகள்

காவலர்களுக்கான தபால் ஓட்டு சென்னையில் நடைபெறுகின்றது…!!

பாராளுமன்ற தேர்தலுக்கான காவலர்களுக்கு  தபால் வாக்குப்பதிவு சென்னையில் தொடங்கி நடைபெற்று வருகிறது.   தமிழகத்தில் வருகின்ற 18_ஆம் தேதி நடைபெறும் நாடளுமன்ற தேர்தலுடன் சேர்த்து 18 சட்டமன்றத்திற்க்கான இடைத்தேர்தல் வாக்குப்பதிவும் நடைபெற இருக்கின்றது.இந்நிலையில் வாக்குப்பதிவுக்கு இன்னும் 4 நாட்கள் தான் இருக்கும் நிலையில் வாக்குசாவடியில் பாதுகாப்பு பணியில் நிற்கும் காவலர்களுக்கான தபால் வாக்குப்பதிவு இன்று தொடங்கி நடைபெற்று வருகின்றது. அதில் வடசென்னை, மத்திய சென்னை, தென்சென்னை, திருவள்ளூர், ஸ்ரீபெரும்புதூர், காஞ்சிபுரம் ஆகிய பாராளுமன்ற தொகுதிகளுக்குட்பட்ட சென்னை பெருநகர பகுதி காவலர்கள் வாக்களித்து […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

பாலியல் வன்கொடுமை… பத்தாண்டு சிறை.. மகளிர் கோர்ட் அதிரடி உத்தரவு…

மாணவியை பாலியல் வன்கொடுமை  செய்த வாலிபருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை மற்றும் அபராதம் விதித்து தர்மபுரி மகளிர் கோர்ட்டு தீர்ப்பு அளித்துள்ளது.  தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அருகே இருக்கும் பில்பருத்தி பகுதியை சேர்ந்தவர் மருதப்பாண்டி.   27 வயதான இவர்  கடந்த  2014-ம் ஆண்டு அப்பகுதியை சேர்ந்த பள்ளி மாணவியை பாலியல் வன்ன்கொடுமை செய்ததற்காக அம்மாவட்ட போலீசாரால் கைது செய்ப்பட்டார் .  மேலும் இவ்வழக்கு தர்மபுரி மாவட்ட மகளிர் கோர்ட்டில் நடைபெற்றது.இதில்  அரசு தரப்பில் வக்கீல் ஆஜராகி வாதாடினார். இந்நிலையில்  […]

Categories
அரசியல் தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

விதி மீறலால் பறிபோன பதவி… வைகோ அதிரடி நடவடிக்கை…!!

தூத்த்துக்குடி  மதிமுக பொருளாளர்  நீக்கப்படுவதாக  வைகோ  அறிக்கை வெளியிட்டுள்ளார். 2019 நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு   7 கட்டங்களாக நடைபெறுகின்றது. தமிழகத்தில் நாடாளுமன்ற  தேர்தலுடன் சேர்த்து 18 சட்டமன்ற தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடைபெறுவதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது .இதற்கான பிரச்சாரத்தில் அணைத்து கட்சிகளும் தீவிரமாய் ஈடுபட்டுவருகின்றனர்.  திமுக கூட்டணியில் ம.தி.மு.க. சார்பில் ஈரோடு பாராளுமன்ற தொகுதி  ஒதுக்கீடு செய்ப்பட்டு வாக்கு சேகரிப்பும் நடைபெற்று வருகின்றது  இந்நிலையில்   இன்று  ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்ட அறிக்கையில் ,  தூத்துக்குடி வடக்கு மாவட்ட மதிமுக […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

தண்ணீர் லாரியில் சிக்கிய வாலிபர் பலி…!!

சென்னை அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர் தண்ணீர் லாரியில் சிக்கி உயிரிழந்ததை கண்டித்து  அவரது உறவினர்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.   சென்னையில் உள்ள புளியந்தோப்பில் கே.பி.கார்டன் 10-வது பிளாக்கில் குடிருப்பவர் சரவணன் இவருடைய வயது 25. இவர் சமையல் கியாஸ் ஏஜென்சியில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி கருத்து வேறுபாடு காரணமாக தனியாக வாழ்ந்துள்ளார்.   சரவணன் தனது தாயாருடன் வசித்து உள்ளார்.   இந்நிலையில் சரவணன் நேற்று மாலை தனது இருசக்கர வாகனத்தில் புளியந்தோப்பில் உள்ள எருக்கஞ்சேரி நெடுஞ்சாலை ஓரமாக சென்று   கொண்டிருந்தார். […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“யுவர் ஆண்டி இந்தியன்” என்று கூறிய H.ராஜா….. T.V_யை உடைத்தெறிந்த கமல் …!!

 H.ராஜா “யுவர் ஆண்டி இந்தியன்” என்று சொல்லும் போது TV_யை கமல் உடைப்பது போன்ற வீடியோ_வை பதிவிட்டுள்ளார். தமிழகத்தில் நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு வருகின்ற ஏப்ரல் 18_ஆம் தேதி நடைபெற இருக்கின்றது. தமிழகத்தை பொறுத்தவரை இந்த தேர்தல் 5 முனை போட்டியாக பார்க்கப்படுகின்றது. அதிமுக தலைமையிலான கூட்டணியும் , திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியும் பிரதானமாக மோத இருக்கும் இந்த தேர்தல் களத்தில் அமமுக , மக்கள் நீதி மைய்யம் மற்றும் நாம் தமிழர் உள்ளிட்ட […]

Categories
பல்சுவை வானிலை

தொடர்ந்து நிலையாக இருக்கும் பெட்ரோல் , டீசல் விலை….!!

பெட்ரோல் மற்றும் டீசல் விலை நேற்றும் இன்றும் எவ்வித மாற்றமும் இன்றி காணப்படுகின்றது தொடர்ந்து அதிகரித்து வந்த பெட்ரோல் மற்றும் டீசல் விலை தீடிரென சரிய தொடங்கியது. பின்னர்  ஏற்றம் , இறக்கமாக இருந்து வருகின்றது . இதனால் வாகன ஓட்டிகள் தினம் தினம் என்ன விலை இருக்குமோ என்று சற்று குழம்பியே இருக்கின்றனர் . ஒருநாள் அதிகமாகவும் , ஒருநாள் குறைவாகவும் , ஒருநாள் ஏற்ற இறக்கம் இல்லாமல் நிலையாகவும் இருந்து வருகின்றது.   இதையடுத்து சென்னையில் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

ரூ 13,50,00,000 பறிமுதல்…. வருமானத்துறையினர் அதிரடி…!!

சென்னையில் வருமான வரித்துறையினர் நடத்திய அதிரடி சோதனையில் பிரபல நிறுவனத்தில்  இருந்து ரூ 13.5 கோடி பறிமுதல் செய்ப்பட்டுள்ளது 2019 நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு   7 கட்டங்களாக நடைபெறுகின்றது. தமிழகத்தில் நாடாளுமன்ற  தேர்தலுடன் சேர்த்து 18 சட்டமன்ற தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடைபெறுவதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது . இதையடுத்து இந்தியா முழுவதும் தேர்தல் நடத்தை விதி அமலுக்கு வந்ததையடுத்து உரிய ஆவணம் இன்றி கொண்டுசெல்லும் பணம் பறக்கும்படையினரால் பறிமுதல் செய்ப்பட்டு வருகிறது.     மேலும் வருமானவரித்துறையினரும் […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

100 சதவீதம் வாக்குப்பதிவு… மாற்றுத்திறனாளிகள் பேரணி…!!

மாற்றுத்திறனாளிகள்  சார்பில் 100 சதவீதம் வாக்களிபதற்கான விழிப்புணர்வு பேரணி மாவட்ட ஆட்சியரால்  துவங்கப்பட்டது. தஞ்சாவூர் மாவட்டம் அருகே  மாற்றுத்திறனாளிகள் சார்பில் தேர்தல் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.  தஞ்சாவூர் ரயில் நிலையத்திலிருந்து துவங்கிய பேரணியை கொடியசைத்து மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை தொடங்கி வைத்தார். முக்கிய வீதிகள் வழியாக பேரணி நடந்தது. இந்த பேரணியில் வருகிற  18ம் தேதி நடைபெற உள்ள மக்களவை தேர்தல் மற்றும்  தஞ்சாவூர் சட்டமன்ற தொகுதி  இடைத்தேர்தலில் வாக்காளர்கள் 100 சதவீதம்  நேர்மையாக வாக்களிக்க வேண்டுமென வலியுறுத்தினர். மேலும் இதனை வலியுறுத்தி மாற்றுத்திறனாளிகள் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

ஓடும் ரயிலில் மர்ம நபர்கள் கைவரிசை… போலீஸ் வலைவீச்சு…!!

கோவை- சேலம் இடையே செல்லும் ரயிலில் பெண்ணிடம் நகையை திருடிச் சென்ற  மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் வசித்து வருபவர் காமராஜ். இவர் கோயமுத்தூரில் உள்ள ஆர்.எஸ்.புரத்தில்  ஒரு பழக்கடைஒன்றில்  கேஷியராக வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி சிவகாமி (வயது 48).  இவர் சேலத்தில் நடைபெறும் உறவினர் திருமண நிகழ்ச்சிக்காக நேற்று மதியம் புறப்பட்டார். கோவை ரயில் நிலையத்தில் ஆலபுழா- மத்தியபிரதேசம் செல்லும் பெக்காரோ ரயிலில் புறப்பட்டனர். கைப்பையில் வைத்திருந்த  நெக்லஸ். மோதிரம் மற்றும் தங்க நாணயம் என […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

பள்ளி மாணவி தூக்கிட்டு தற்கொலை…. இரணியில் சோகம் …!!

இரணி  அருகே 8_ஆம்  பள்ளி மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.   கன்னியாகுமாரி மாவட்டம் நாகர்கோவில் இரணி  காரங்காட்டில் உள்ள நுள்ளிவிளையைச் சேர்ந்தவர் பால்ராஜ். அஜிஷா எனும் இவரின் மகள்  நாகர்கோவிலில் 8-ம் வகுப்பு படித்து வந்தார். தற்போது பள்ளிகளுக்கு  இறுதித்தேர்வு நடைபெற்று வருகிறது. அஜிஷா நேற்று வழக்கம்போல் பள்ளிக்கு இறுதிதேர்வினை  எழுத சென்றிருக்கிறார் . தேர்வு எழுதி முடித்தி விட்டு மாலை வீட்டிற்கு திரும்பிய அஜிஷா சிறிது நேரம் விளையாடி வந்துள்ளார்.திடீரென அலறல் சத்தம் கேட்டது. இதையடுத்து அவரது […]

Categories
அரசியல் சென்னை மாவட்ட செய்திகள்

“தமிழகத்தில் நீட் தேர்வு நடந்தே தீரும் “பாஜக அமைச்சர் சர்ச்சசை பேச்சு !!!…

பாஜகவின் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் அவர்கள் தமிழகத்தில் நீட் தேர்வு என்பது நடைபெற்ற தீரும் என்று தெரிவித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது இந்தியாவில் மக்களவைத் தேர்தல் ஆனது 7 கட்டங்களாக நடைபெற இருக்கிறது இதனை அடுத்து தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் 18ம் தேதியன்று சட்டமன்ற இடைத்தேர்தல் உடன் மக்களவை தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் தரப்பில் அறிவிக்கப்பட்டது இதனையடுத்து தேர்தலில் போட்டியிட உள்ள அரசியல் கட்சிகள் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர் இதனையடுத்து மக்களவை தேர்தளுக்கு […]

Categories
பல்சுவை

பெட்ரோல் , டீசல் விலை உயர்ந்தது…!!

இன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை சற்று உயர்ந்து காணப்படுகின்றது. தொடர்ந்து அதிகரித்து வந்த பெட்ரோல் மற்றும் டீசல் விலை தீடிரென சரிய தொடங்கியது. பின்னர்  ஏற்றம் , இறக்கமாக இருந்து வருகின்றது . இதனால் வாகன ஓட்டிகள் தினம் தினம் என்ன விலை இருக்குமோ என்று சற்று குழம்பியே இருக்கின்றனர் . ஒருநாள் அதிகமாகவும் , ஒருநாள் குறைவாகவும் , ஒருநாள் ஏற்ற இறக்கம் இல்லாமல் நிலையாகவும் இருந்து வருகின்றது. இதையடுத்து சென்னையில் இன்று ஒரு லிட்டர் […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

ரேஷன் கடைக்கு புதிய கட்டிடம் கட்டித் தர மக்கள் கோரிக்கை…!!

பண்ருட்டியில் பழுதடைந்த நீர்த்தேக்க தொட்டி அறையில் இயங்கும் ரேஷன் கடைக்கு புதிய கட்டிடம் கட்டித் தர வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே காட்டாண்டி குப்பம் கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் 500க்கு அதிகமான குடும்பங்கள் வசித்து வருகின்றனர். கடந்த சில வருடங்களாக  இந்த பகுதி ரேஷன் கடை பழுதடைந்த நிலையில்  மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் இயங்கி வருகிறது. இது குறித்து இப்பகுதி பொதுமக்கள் கூறுகையில் எங்கள் பகுதிக்கு ரேஷன் கடைக்கான கட்டிடம்  கட்டப்படவில்லை […]

Categories
அரசியல் பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

“பிரச்சாரத்தின் போது பாமக விசிக இடையில் திடீர் மோதல் ” அதிர்ச்சியில் மக்கள் !!…

பிரச்சாரம் செய்யும்  வேளையில் பாமக விசிக இடையில் ஏற்பட்ட மோதல் சிதம்பரம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது இந்தியாவில் மக்களவைத் தேர்தல் ஆனது 7 கட்டங்களாக நடைபெற இருக்கிறது இதனை அடுத்து தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் 18ம் தேதியன்று சட்டமன்ற இடைத்தேர்தல் உடன் மக்களவை தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் தரப்பில் அறிவிக்கப்பட்டது இதனையடுத்து தேர்தலில் போட்டியிட உள்ள அரசியல் கட்சிகள் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்   சிதம்பரம் மக்களவை தேர்தல் தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

சத்தியமங்களம் அருகே கூலித்தொழிலாளி தற்கொலை…!!

 தஞ்சாவூர் அருகே தொழிலாளி வயிற்று வலி காரணமாக விஷம் குடித்து  தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டம்  கபிஸ்தலம் அடுத்துள்ள  சத்தியமங்களம் ஊராட்சியில் வாழ்க்கை கிராமத்தைச் சேர்ந்த  ராமலிங்கம்  (வயது 60) . இவர் விவசாயக்கூலி தொழிலாளியாக வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில்  தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டுள்ளார். மேலும் வயிற்றுவலி அதிகமானதால் மனமுடைந்த கூலித்தொழிலாளி வி‌ஷம் குடித்து மயங்கி விழுந்தார். மயங்கிய ராமலிங்கத்தை மீட்டு கும்பகோணம் அரசு மருத்துமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி  இறந்தார். இச் சம்பவம் குறித்து அவரது […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

தம்பதியினரிடம் கைவரிசை..! போலீஸ் வலைவீச்சு…!!

அவனியாபுரம் அருகே  பைக்கில் சென்ற பெண்ணின் கழுத்திலுள்ள  நகையை மர்மநபர்கள் பறித்து சென்ற காட்சி சிசிடிவியில் பதிவாகியுள்ளது. மதுரை மாவட்டம் அருகே மேல அனுப்பானடியில் வசித்து வரும் சுந்தரராஜனும்  மனைவி ராஜேஸ்வரியும்  மோட்டார் சைக்கிளில் சிந்தாமணி பகுதி வழியாக சென்று கொண்டிருந்தனர். அப்போது, அந்த வழியாக ஹெல்மெட் அணிந்து மோட்டார் சைக்கிளில்  வந்த 2 பேர், ராஜேஸ்வரியின் கழுத்தில் அணிந்திருந்த  2 சரவன் தங்க நகையை பறித்து சென்றனர். இதில் நிலைதடுமாறிய தம்பதியினர் இருவரும் மோட்டார்  சைக்கிலிருந்து  கீழே விழந்தனர். இதில் படுகாயமடைந்த  ராஜேஸ்வரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்பெண்ணிடம் நகை […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

கோடை வெயிலில் சுற்றுலா பயணிகளை கவர்ந்த பூங்கா…!!

 கோடை கால வெயிலில் குளிர்ச்சி அளித்து வரும் ஐந்திணை மரபணு பூங்காவிற்கு பொதுமக்கள் ஆர்வமுடன் வந்து செல்கின்றனர். ராமநாதபுரம் மாவட்டம் அருகே தோட்டக்கலைத்துறை சார்பில், அமைக்கப்பட்ட ஐந்திணை மரபணு பூங்கா சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்துள்ளது. இந்த பூங்கா கடந்த வருடம் திறக்கப்பட்டது. அங்கு சினிமா ‘சூட்டிங்’ எடுக்கவும் அனுமதித்துள்ளனர். இங்கு அமைந்துள்ள  நிலங்களின் சிறப்பிற்கு ஏற்றார் போன்று ஐந்திணை பூங்கா அமைக்கப்பட்டது.குறிச்சி பூங்கா சேலம் ஏற்காட்டிலும், முல்லை பூங்கா திண்டுக்கல் சிறுமலையிலும், நெய்தல் பூங்கா நாகப்பட்டினம் திருக்கடையூரிலும், மருதம் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ரூ 127,66,00,000 மற்றும் 98 கிலோ தங்கம் பறிமுதல்….. சத்ய பிரதா சாஹு தகவல்….!!

தமிழகத்தில் இதுவரை ரூபாய் 127.66 கோடி பணம் மற்றும் 98 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தெரிவித்துள்ளார். 2019 நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு   7 கட்டங்களாக நடைபெறுகின்றது. தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தலுடன் சேர்த்து 18 சட்டமன்ற தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் இரண்டாம் கட்ட வாக்கு பதிவாக நடைபெறுவதாக ஏப்ரல் 18ம் தேதி நடைபெறுமென தேர்தல் ஆணையம் அறிவித்தது. இந்தியாவில் மக்களவை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதிலிருந்து இந்தியா முழுவதும் பறக்கும் படையினர் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். மேலும் உரிய […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“13 ஆவணங்களை வைத்து வாக்களிக்கலாம்” தலைமை தேர்தல் அதிகாரி தகவல்..!!

வாக்காளர் அடையாள அட்டை  மட்டுமின்றி  அரசு அங்கீகரித்த 13 ஆவணங்களை வைத்து வாக்களிக்கலாம் என்று தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்தார்.   2019 நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு   7 கட்டங்களாக நடைபெறுகின்றது. தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தலுடன் சேர்த்து 18 சட்டமன்ற தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் இரண்டாம் கட்ட வாக்கு பதிவாக நடைபெறுவதாக ஏப்ரல் 18ம் தேதி நடைபெறுமென தேர்தல் ஆணையம் அறிவித்தது. மேலும்  அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் தமிழகத்தில்  வாக்கு நிலையில் பதிவுக்கு இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில் தலைமை தேர்தல் அதிகாரி சத்ய […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“ஓட்டுக்கு பணம் கொடுப்பது குற்றம்” விளம்பர பலகை வைக்க கோரிய மனு தள்ளுபடி…

ஓட்டுக்கு பணம் வாங்குவதும், கொடுப்பதும் குற்றம் என விளம்பர பலகை வைக்க கோரிய மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.  2019 நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு   7 கட்டங்களாக நடைபெறுகின்றது. தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தலுடன் சேர்த்து 18 சட்டமன்ற தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் இரண்டாம் கட்ட வாக்கு பதிவாக நடைபெறுவதாக ஏப்ரல் 18ம் தேதி நடைபெறுமென தேர்தல் ஆணையம் அறிவித்தது. இந்நிலையில் அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் பிரச்சாரத்தில் ஈடுபட்டும் வேட்பாளர்கள், அரசியல் கட்சி தலைவர்களுக்கு பொதுமக்களும், தொண்டர்களும் உற்சாக […]

Categories
பல்சுவை

மாற்றமின்றி பெட்ரோல், டீசல் விலை…..!!

இன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை எவ்வித மாற்றமுமின்றி காணப்பட்டது. தொடர்ந்து அதிகரித்து வந்த பெட்ரோல் மற்றும் டீசல் விலை தீடிரென சரிய தொடங்கியது. பின்னர்  ஏற்றம் , இறக்கமாக இருந்து வருகின்றது . இதனால் வாகன ஓட்டிகள் தினம் தினம் என்ன விலை இருக்குமோ என்று சற்று குழம்பியே இருக்கின்றனர் . ஒருநாள் அதிகமாகவும் , ஒருநாள் குறைவாகவும் , ஒருநாள் ஏற்ற இறக்கம் இல்லாமல் நிலையாகவும் இருந்து வருகின்றது. இதையடுத்து சென்னையில் இன்று ஒரு லிட்டர் […]

Categories
அரசியல் செய்திகள் சென்னை மாவட்ட செய்திகள்

“கருத்துக் கணிப்பு வெளியிட தடை” தலைமை தேர்தல் அதிகாரி உத்தரவு…!!!

பாராளுமன்ற தேர்தலில் கருத்து கணிப்பு வெளியிட தடை தலைமை தேர்தல் அதிகாரி சத்தியபிரத சாகு உத்தரவு 2019 நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு   7 கட்டங்களாக நடைபெறுகின்றது. தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுடன் சேர்த்து 18 சட்டமன்ற தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடைபெறுவதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது .  இந்நிலையில் தமிழகத்தில் வருக்குன்ற 18 ஆம் தேதி இரண்டாம் கட்ட வாக்கு பதிவாக 40 பாராளுமன்ற தொகுதி வாக்குப்பதிவு நடைபெறுகின்றது காலை  இந்நிலையில் மதுரை மக்களவை தொகுதியில் மட்டும் காலை ஏழு […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

அரசு மருத்துவமனை ஊழியருக்கு கத்திக்குத்து…!!

  சிவகங்கை அரசு மருத்துவமனைக்குள் நுழைந்து ஊழியர் ஒருவர் கத்தியால் குத்தி கொல்லப்பட்ட சம்பவம்  அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டம் நேரு பஸார்  தெருவில் வசித்து வருபவர் தமிழ்செல்வன். அவர்  அரசு மருத்துவமனையில் தற்காலிக ஊழியராக பணியாற்றி வருகிறார். வழக்கம் போல் வேலையில் ஈடுபட்டிருந்த போது, அவரைநோக்கி வேகமாக வந்த ஒக்கூரைச்  சேர்ந்த அருண்குமார் என்ற வாலிபர் தான்  மறைத்து வைத்திருந்த கத்தியால் தமிழ்ச் செல்வனை சரமாரியாக குத்தினார்.   இதில் ரத்த வெள்ளத்தில் துடி துடித்து  சரிந்து விழுந்த தமிழ்ச்செல்வன் சம்பவ இடத்திலேயே […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

“மணல் கொள்ளை மாட்டுவண்டிகள் பறிமுதல்”

சேத்துப்பட்டு-ஆரணியில் மணல் கடத்திய மாட்டு வண்டி சேத்துப்பட்டை அடுத்த உள்ள ஓதலவாடி கிராமம் அருகே உள்ள செய்யாறு  குப்பம் கிராமத்தை சார்ந்த ராமஜெயம் வயது 38 ஆறுமுகம் 68, சந்தோஷ் 21 ஆகிய மூவரும் மூன்று( 3) மாட்டு வண்டிகளில் தனித்தனியாக மணலினை கடத்தி வந்து கொண்டிருக்கிறார்கள். அந்த பகுதியில் ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்த  இன்ஸ்பெக்டர் நரசிம்மன், சப்-இன்ஸ்பெக்டர் சசிகுமார் மற்றும் போலீசார் 3 மாட்டு வண்டிகளையும் மூவரையும் மடக்கிப்பிடித்து அதனை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக ராமலிங்கம் […]

Categories
அரசியல் செய்திகள் மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

“தமிழகம் வருகிறார் மோடி “

  வரும் 13ம் தேதி ராமநாதபுரம் வருகை தருகிறார் பிரதமர் மோடி    தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து ராமநாதபுரத்தில்மோடி வருகிற 13-ந்தேதி தேர்தல் பிரசாரம் மேற்கொள்ள உள்ளார். இதன் பிறகு ராமநாதபுரம் பாரதிநகர் அம்மா பூங்கா அருகில் பிரமாண்ட மேடை மற்றும் பந்தல் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதுகுறித்து முரளிதரன் மாவட்ட பாரதிய ஜனதா கட்சித் தலைவர் கூறியதாவது: வருகின்ற 13-ந் தேதி காலை 10.30 மணிக்கு ஹெலிகாப்டரின் மூலம் ராமநாதபுரம் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

விடுதியில் மாணவர் தற்கொலை..!போலீசார் தீவிர விசாரணை…!!

பெரியநாயக்கன்பாளையம் பகுதியில்  பொறியியல் கல்லூரி மாணவர் பெண்  வேடமிட்டபடி விடுதி அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோயமுத்தூர் மாவட்டம் பெரியநாயக்கன் பாளையம் அருகே மத்தம்பாளையத்தில் உள்ள ஸ்ரீசக்தி பொறியியல் கல்லூரியில்  கேரள மாநிலம் மலப்புரத்தைச் சேர்ந்த எபின் ராபர்ட் என்ற மாணவர் எந்திரவியல் 3 ‘ஆம் ஆண்டு படித்து வந்தார்.கல்லூரி விடுதியில் தங்கி இருந்த எபினுக்கு நீண்ட நாட்களாகவே பெண்ணாக மாற வேண்டும் என்ற ஆசை இருந்ததாகச் தெரிவித்தனர். விடுதி அறையில் யாரும் இல்லாத நேரத்தில்  பெண்கள் அணியும் […]

Categories
அரசியல் கரூர்

“8 வழி சாலை” மேல்முறையீடு ? ஜான் பாண்டியன்.

வளர்ச்சியை முன்னோக்கியது.8 வழிச்சாலை திட்டம் ஆகவே தமிழக அரசு சார்பில் ஆளும்  ஆ .தி .மூ க சார்பில் மேல்முறையீடு செய்வதில் எந்தவித தவறுமில்லை என்று ஜான் பாண்டிணன் கூறியுள்ளார். கரூரில் ஜான்பாண்டியன் தமிழக மக்கள் முன்னேற்ற கழக நிறுவன தலைவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அந்த பேட்டியில் கூறியதாவது:- தேவேந்திர குல வேளாளர்களை  பற்றி இதுவரை பேசிடாத தி.மு.க. தேர்தல் சமயத்தில் பேசுவது தேர்தல் ஆதாயத்திற்காக தான்.இது முரணானது . தி.மு.க விற்கு தோல்வி பயம் […]

Categories
Uncategorized அரசியல்

தொட்டில் ஆட்டி தீவிர வாக்கு சேகரிப்பு

  வயல்வெளியில் வேலை பார்த்த கொண்டிருந்த  பெண்கள் தங்களது குழந்தைகளை மரக்கிளையில் தொட்டிலில்  கட்டி போட்டிருந்தனர். அங்கு வாக்கு திரட்ட சென்ற மன்சூர் அலிகான் குழந்தைகளின் தொட்டிலை  ஆட்டி வாக்கு சேகரித்தார் . திண்டுக்கல் மக்களாவை  தொகுதியில் நடிகர் மன்சூர் அலிகான்  நாம் தமிழர் கட்சியின் வேட்பாளராக போட்டியிடுகிறார். இவர்  மக்களிடையே பாரம்பரிய முறையில் அம்மியில் இயற்கையான மசாலா அரைப்பது, இளநீர் ,தேநீர் விற்பது, மீன் பிடிப்பது  காய்கறி முதலியவற்றை என வித்தியாசமானவகையில் மக்களிடையே செய்து பிரசாரத்தில் […]

Categories
பல்சுவை

பெட்ரோல், டீசல் விலையில் எவ்வித மாற்றமும் இல்லை…..!!

இன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை எவ்வித மாற்றமுமின்றி காணப்பட்டது. தொடர்ந்து அதிகரித்து வந்த பெட்ரோல் மற்றும் டீசல் விலை தீடிரென சரிய தொடங்கியது. பின்னர்  ஏற்றம் , இறக்கமாக இருந்து வருகின்றது . இதனால் வாகன ஓட்டிகள் தினம் தினம் என்ன விலை இருக்குமோ என்று சற்று குழம்பியே இருக்கின்றனர் . ஒருநாள் அதிகமாகவும் , ஒருநாள் குறைவாகவும் , ஒருநாள் ஏற்ற இறக்கம் இல்லாமல் நிலையாகவும் இருந்து வருகின்றது. இதையடுத்து சென்னையில் இன்று ஒரு லிட்டர் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

பள்ளி ஆசிரியர் தூக்கிட்டு தற்கொலை…!

சென்னை அருகே உள்ள பள்ளி வளாகத்திற்குள் ஆசிரியர் தூக்கு போட்டு  தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை கிழக்கு கடற்கரை சாலை நீலாங்கரை அடுத்து பாண்டியன் சாலையில் உள்ள தனியார் பள்ளியில் நாகர்கோயிலைச் சேர்ந்த ஜெனிஃபர் என்ற ஆசிரியை பணியாற்றி வந்ததார். இவர் கடந்த ஒரு வருட காலமாக பள்ளி வளாகத்திலேயே தங்கி 9, 11, 12 வகுப்பு மாணவர்களுக்கு பொருளியல் பாடம் எடுத்து வந்தார். இந்நிலையில் அவர் தங்கிய அறையில் கடிதம் எழுதி வைத்து விட்டு தூக்குபோட்டு […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

வெடிகுண்டு நிபுணர்கள் சோதனையால் விமானநிலையத்தில் பரபரப்பு..!!

சேலத்தில்  உள்ள விமான நிலையத்தில் பெண் பயணியிடம் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. ஜப்பான் நாட்டை சேர்ந்த பெண் பயணி ஒருவர் சென்னைக்கு  செல்வதற்காக சேலம் விமான நிலையத்தில் காத்திருந்தார். அவர் விமானத்தில் ஏறுவதற்கு முன்பு அவரது கைப்பை மெட்டல் டிடெக்டர் மூலம் சோதனைக்குட்படுத்தப்பட்ட போது வெடிபொருள் இருப்பது போன்று சிக்னல் அலாரம் ஒலித்தது, அதனால் அவரை விமானத்தில் செல்ல அனுமதிக்கப்படவில்லை. உடனே வெடிகுண்டு நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு, மோப்ப நாய் உதவியுடன் அவர்கள் சோதனை செய்தனர். அப்போது அந்தப் பெண்ணின் கைப்பையில் ரசாயனம் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

கட்டிட கான்டிராக்டர் வீட்டில் கொள்ளை…!

கவுண்டம்பாளையம் பகுதியில் கட்டிட கான்டிராக்டர் வீட்டிற்குள் நுழைந்து கொள்ளையடித்த சம்பவம்  அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் அருகே சுப்பிரமணியம்பாளையம் என் .பி .சி நகரில் வசித்து வரும் கட்டிட கான்டிராக்டர் கார்த்திக் என்பவரின் வீட்டின் கதவை உடைத்து பட்டப்பகலில் மர்ம ஆசாமிகள் புகுந்தனர். வேலைக்காரியான மூதாட்டியை தாக்கி விட்டு வீட்டில் இருந்த 33 சவரன் நகைகள் மற்றும் இருபது ஆயிரம் ரூபாய் ரொக்கப்பணத்தையும் கொள்ளையடித்து சென்றனர்.இச் சம்பவம் குறித்து கட்டிட காண்டிராக்டர் துடியலூர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். […]

Categories
கல்வி மாநில செய்திகள்

அரசு ஆசிரியர்களுக்கு ஆப்பு….. டியூசன் எடுத்தால் நடவடிக்கை…. நீதிமன்றம் உத்தரவு….!!

அரசுப் பள்ளி ஆசிரியர்கள் பணத்திற்கு டியூசன் எடுத்தால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று சென்னை ஐகோர்ட், தமிழக அரசுக்கு  உத்தரவிவு பிறப்பித்துள்ளது. இது குறித்து சென்னை உயர்நீதிமன்றம் தெரிவிகையில் , அரசுப்பள்ளிஇஎல் வேலை பார்க்கும்  ஆசிரியர்கள் இலாபநோக்கில் டியூசன் எடுப்பது சட்டவிரோதம். எனவே அரசுப்பள்ளி ஆசிரியர்கள் டியூசன் எடுக்கின்றார்களா என்று கண்காணித்து வேண்டும். மேலும் டியூசன் நடத்தும் அரசு ஆசிரியர்களுக்கு எதிராக தமிழக அரசு ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் சென்னை உயர்நீதிமன்றம் தமிழக அரசுக்கு சொல்லிய அறிவுறுத்தலில் , அனைத்து அரசு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

கமலை ஏமாற்றிய ரஜினி …… பிஜேபி_க்கு ஆதரவு…..!!

எங்களுடைய நட்பை கெடுத்து விடாதீர்கள் என்று கூறிய ரஜினி பாஜக_வின் தேர்தல் அறிக்கையை வரவேற்றுள்ளார். இன்று சென்னையில் உள்ள போயஸ் கார்டனில் உள்ள தனது இல்லத்தில் செய்தியாளார்களை  சந்தித்தார் . அப்போது நாடாளுமன்ற தேர்தலில் கமல்ஹாசனுக்கு ஆதரவு குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்களுக்கு “என்னுடைய அரசியல் பற்றி நான் ஏற்கனவே சொல்லிவிட்டேன் அதில்  எந்த மாற்றமும் கிடையாது. இதுக்கு மேல இத பத்தி பேச விரும்பவில்லை எங்கள் நட்பை கெடுத்து விடாதீர்கள்” என்று தெரிவித்தார். மேலும் பாஜக வெளியிட்ட தேர்தல் […]

Categories
அரசியல் கன்னியாகுமாரி

“என்னை இரண்டாக பிளந்தால் மட்டுமே முடியும்” முக.ஸ்டாலின் ஆவேசம்…!!

என்னை இரண்டாக பிளந்தால் மட்டுமே மக்களை மதத்தால் பிரிக்க முடியும் என்ற முக.ஸ்டாலின் கன்னியாகுமாரியில் பேசியுள்ளார். வருகின்ற ஏப்ரல் 18_ஆம் தேதி மக்களவை   மற்றும் 18 தொகுதிக்கான இடைத்தேர்தல் நடைபெறுகின்றது. இதனால் அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சார வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றன. கன்னியாகுமரி மக்களவை தொகுதியில்   காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் வசந்தகுமாரை ஆதரித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொண்டார். தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பேசிய ஸ்டாலின் , மக்களவை தேர்தலுக்காக பாஜக வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கை ஜீரோ அறிக்கை என்று விமர்சனம் செய்த ஸ்டாலின் […]

Categories

Tech |