மத்திய சிறையில் இருந்து பேராசிரியை நிர்மலா தேவி சொந்தப் பிணையில் விடுதலை செய்யப்பட்டார். விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் உள்ள தனியார் கல்லூரி மாணவிகளை பாலியல் துன்புறுத்தலுக்கு ஈடுபடுத்த முயன்றதாக அக்கல்லூரியின் பேராசியை நிர்மலா தேவியை காவல் துறையினர் கைது செய்தனர். இந்த வழக்கு தொடர்பாக ஏற்கனவே மதுரை பெண்கள் தனி சிறையில் இருந்து விடுதலையான நிர்மலா தேவி இரண்டு வாய்தாவுக்கு செல்லாததால் மீண்டும் கைது செய்யப்பட்டு தனிசிறையில் நவம்பர் 25ஆம் தேதி அடைக்கப்பட்டார். இதனையடுத்து இன்று நிர்மலா […]
Tag: Tamilnadu
முதல்வராக எண்ணுபவர்கள் வேணுமென்றால் நித்யானந்தாபோல் தனியாக தீவு வாங்கி, முதலமைச்சர் ஆகலாம் என்று ஸ்டாலினை அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார்.!! சென்னையில் ராஜாஜியின் 141-வது பிறந்தநாளையொட்டி சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் இருக்கும் அவரது உருவ சிலைக்கும், திருவுருவப் படத்திற்கும் அமைச்சர்கள் ஜெயக்குமார், மாஃபா பாண்டியராஜன் மற்றும் பெஞ்சமின் ஆகியோர் மலர்தூவி தங்களது மரியாதையை செலுத்தினர். இதைதொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார் கூறும்பொழுது, ஒரு குழப்பம் நிறைந்த கட்சி திமுக.மேலும் நீதிமன்றத்திடம் சென்று தேர்தலை ரத்து செய்யவும் முயற்சித்தனர். […]
ஜிபூம்பா என்றவுடன் வெங்காயம் வந்துவிடாது என்றும் எகிப்து, துருக்கியிலிருந்து வெங்காயம் இறக்குமதியானவுடன் நிலைமை சீராகும் எனவும் உணவுத் துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் வெங்காய விலை குறித்து அறிக்கை வெளியிட்டதையடுத்து அதற்கு பதிலளிக்கும் விதமாக திருவாரூரில் உணவுத் துறை அமைச்சர் காமராஜ் பத்திரிகையாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது, “தமிழ்நாட்டில் வெங்காய விலையை கருத்தில்கொண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு மேற்கொண்டுவருகிறது. அந்தவகையில் பண்ணைக் கடைகளை மானிய விலையில் வெங்காயம் 40 ரூபாய்க்கு விற்பனை […]
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடிகை நயன்தாரா சாமி தரிசனம் செய்தார். மூக்குத்தி அம்மன் என்னும் புதிய திரை படத்தில் அம்மன் வேடத்தில் நயன்தாரா நடித்து வரும் நிலையில் இயக்குனர் விக்னேஷ் சிவன் உடன் இணைந்து பல்வேறு கோவில்களுக்கு சென்று சாமி தரிசனம் செய்து வருகிறார். நேற்று கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு நடத்திய நயன்தாரா இன்று காலை திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு சென்று சுப்பிரமணியசாமி கோவில் பிரகாரத்தை சுற்றி வந்தார். இதனை […]
ஒரு கிலோ வெங்காயம் 25 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டதை அடுத்து, பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் முண்டியடித்துக்கொண்டு வெங்காயம் வாங்கிச் சென்ற சம்பவம் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. நாடு முழுவதும் வெங்காயத்திற்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக வெங்காயம் விலை 100 ரூபாய் முதல் 180 ரூபாய் வரை விற்பனையாகி வருகிறது. இதன் காரணமாக பொதுமக்கள், வியாபாரிகள் வெங்காயம் வாங்க முடியாமல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் விலை உயர்வு காரணமாக ஹோட்டல்களில் ஆம்லெட் உள்ளிட்ட உணவு வகைகளின் விலையும் […]
திருவள்ளூரில் ஒரு கிலோ வெங்காயம் 50 ரூபாய்க்கு கொடுத்ததால் மக்கள் சண்டைபோட்டுக் கொண்டு வாங்கினர். இந்தியா முழுவதும் வெங்காயத்தின் விலை ஒவ்வொரு நாளும் ஏறிக்கொண்டே செல்கிறது. விலை ஏற்றம் அடைவதால் சில உணவகங்களில் வெங்காயத்தை அதிகளவு சேர்த்து செய்யும் உணவுகளுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. தொடர் மழை காரணமாக விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக தமிழகம் உள்பட நாடு எங்கிலும் வெங்காயத்தின் விலை உச்சத்தில் இருக்கிறது. சென்னையின் புகழ்பெற்ற கோயம்பேடு மார்க்கெட்டில் 1 கிலோ சின்ன வெங்காயம் 200 ரூபாய் […]
சென்னை வடக்கு கடற்கரை காவல் நிலையத்தில் இருந்து தப்பி ஓடிய விசாரணை கைதியை கைது செய்து போலீசார் சிறையில் அடைத்தனர். சிறுமியிடம் தவறாக நடந்து கொண்டதாக கூறி சென்னை மண்ணடி அங்கப்பன் தெருவைச் சேர்ந்த 25 வயதான அருணை கைது செய்து நேற்று முன்தினம் இரவு காவல் நிலையத்தில் வைத்து போலீசார் விசாரித்தனர். அப்போது போலீசாரின் கவனத்தை திசை திருப்பி காவல்நிலையத்தில் முன்பக்க கதவின் மேல் ஏறி அங்கிருந்த சிறிய ஓட்டை வழியாக அருண் தப்பிவிட்டான். […]
உலகில் மனிதராக பிறந்த ஒவ்வொருவரும் அறிந்து கொள்ள வேண்டிய ஒன்று அடிப்படை மனித உரிமைகள். ஆகையால் இது குறித்த விரிவான தகவலை காண்போம். உலகெங்கும் டிசம்பர் 10ஆம் தேதி மனித உரிமை தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதன்படி ஐநா சபை டிசம்பர் 10 1948ஆம் வருடம் மனித உரிமைப் பிரகடனம் என்கின்ற 20க்கும் மேற்பட்ட விதிமுறைகள் அடங்கிய புத்தகம் ஒன்றை வெளியிட்டு அதில் உள்ள விதிமுறைகளை மீறுவதற்கு ஐக்கிய சபையுடன் ஒருங்கிணைந்து இருக்கும் எந்த நாட்டு மக்களுக்கும் […]
மனித உரிமை என்றால் என்ன? எவையெல்லாம் அடிப்படை உரிமைகள் என்பது குறித்து இந்த செய்தித்தொகுப்பில் விரிவாக காண்போம். உணவு உடை இருப்பிடம் என்ற மூன்றும் ஒரு மனிதனுடைய வாழ்க்கையின் அத்தியாவசிய தேவைகள் ஆக கருதப்படுகிறது. இந்த மூன்றையும் வைத்து மட்டுமே ஒரு மனிதன் தனது வாழ்க்கை முழுவதையும் கடந்து விட முடியுமா என்று கேட்டால் முடியாது என்றுதான் கூற வேண்டும். இந்த உலகில் பிறந்த ஒவ்வொருவரும் பிறப்பால் சமம்தான். ஆனால் இது தெரியாத சிலர் தாங்கள் தான் […]
மதுராந்தகம் ஏரியிலிருந்து மதகுகள் வழியாக நீர் கசிவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர் . செங்கல்பட்டு மாவட்டத்தின் மிகப்பெரிய ஏரியாக விளக்கும் மதுராந்தகம் ஏரி 694 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்டது. ஏரி முழு கொள்ளளவை எட்ட 4 அங்குலமுள்ளது. இந்த நிலையில் ஏரிகளில் இருந்து நீர் கசிவது விவசாயிகளை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. தானியங்கி மதகுகளில் துருப்பிடித்து விரிசல் ஏற்பட்டு இருப்பது இதற்கு காரணமாகும். ஏரியை பராமரிப்பதில் அதிகாரிகள் மெத்தனம் […]
சிலை தொடர்பான அனைத்து ஆவணங்களையும் அடுத்த மாதத்திற்குள் ஒப்படைக்க வேண்டும் என்று பொன் மாணிக்கவேலுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரியாக ஓய்வு பெற்ற ஐ.ஜி பொன்மாணிக்கவேலை நியமித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது .அவரது ஓர் ஆண்டு பதவி காலம் கடந்த மாதம் 30ஆம் தேதியுடன் முடிவடைந்தது. அதை தொடர்ந்து சிலை வழக்கு தொடர்பான அனைத்து ஆவணங்களையும் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு கூடுதல் டி.ஜி.பி இடம் ஒப்படைக்க […]
புதுச்சேரியில் கரும்பு தோட்டத்திற்குள் பதுங்கியிருந்த ரவுடி கும்பலை காவல்துறையினர் பிடிக்க முற்பட்டபோது இரு தரப்புக்கு இடையே மோதல் ஏற்பட்டதால் பரபரப்பு நிலவியது. கலிதீர்தால்குப்பம் பகுதியை சேர்ந்தவர் ரவுடி ஜனா. இவர் மீது தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பல வழக்குகள் நிலுவையில் உள்ளன. தலைமறைவாக இருக்கும் ரவுடி ஜனா ஆண்டியார் பாளையம் கரும்பு தோட்டத்திற்குள் பதுங்கியிருப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இந்த தகவலின் படி போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டபோது இரு தரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. மோதலில் […]
செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் அருகே அடகு கடையில் துப்பாக்கியுடன் நுழைந்து கொள்ளையடிக்க முயன்ற கும்பலை சி.சி.டிவி காட்சிகள் அடிப்படையில் போலீசார் தேடி வருகின்றனர். நெல்சன் என்பவர் அடகு கடை நடத்தி வருகிறார் நேற்றிரவு கைக்குட்டையால் முகத்தை மறைத்தபடி அங்கு சென்ற 3 பேர் கொண்ட கும்பல் துப்பாக்கியை காண்பித்து மிரட்டி கொள்ளையடிக்க முயன்றனர்.இதனைப் பார்த்து சாதுர்யமாக செயல்பட்ட அடகுக் கடைக்காரர் பாதுகாப்பு ஒலிபெருக்கியை இயக்கியதால் ஒலிபெருக்கி சத்தம் எழுப்பியதை கேட்ட கொள்ளையர்கள் அங்கிருந்து தப்பி ஓடினர். அவர்கள் […]
சென்னை போரூரில் ஏ.டி.எம் எந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயன்ற நடவடிக்கை தொடர்பான விசாரணை நடத்தி வருகின்றனர். பூந்தமல்லி சாலையில் கர்நாடக வங்கி கிளையில் ஏ.டி.எம் மையம் அமைந்துள்ளது .நேற்று இரவு காவலாளி பணியில் இல்லாத நேரத்தில் அங்கு நுழைந்த ஒருவன் ஏ.டி.எம் எந்திரத்தை ஆயுதங்கள் மூலம் உடைத்து கொள்ளையடிக்க முயன்று உள்ளான். ஐதராபாத்தில் உள்ள தலைமை கட்டுப்பாட்டு அறையில் சி.சி.டிவி கேமரா மேற்பார்வையின் போது இதனை கண்ட பாதுகாப்பு ஊழியர்கள் வங்கி அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். […]
வெளிநாட்டில்இருந்துஇறக்குமதிசெய்யப்பட்டவெங்காயத்தால் மக்களைவேதனையிலிருந்து நீக்கும் விதமாக வெங்காயம் விலை சரிவு […]
குளச்சல் கடல் பகுதியில் அடையாளம் தெரியாத கப்பல் ஒன்று நேற்று இரவு முதல் நின்று கொண்டிருப்பதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது. குமரி மாவட்டம் குளச்சல் கடல் பகுதியில் அதிகாலையில் மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள் அதனை பார்த்து இது எந்த நாட்டு கப்பல் என்று தெரியாததால் குளச்சல் கடலோர காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து விரைந்து வந்த கடலோர காவல் நிலைய போலீசார் சர்வதேச நீர் வழித் தடத்தில் இருப்பதாக குளச்சல் கடல் பகுதிக்கு இயந்திரக் […]
சென்னை வடக்கு கடற்கரை காவல் நிலையத்தில் போக்சோ வழக்கு கைதி காவல் நிலைய கதவின் ஓட்டை வழியாக கைவிளங்குடன் தப்பி ஓடிய சம்பவம் போலீசார் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. சிறுமி ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்த புகாரில் சென்னை மண்ணடி அங்கப்பன் பகுதியை சேர்ந்த 25 வயதான அருண் என்பவரை போலீசார் பிடித்தனர். ராஜாஜி சாலையில் உள்ள வடக்கு கடற்கரை காவல் நிலையத்தில் விசாரணைக்காக நேற்று இரவு அழைத்துச் செல்லப்பட்ட அவர் விலங்கிடப்பட்டு காவால்நிலையத்தில் வைக்கப்பட்டிருந்தார். போலீஸ் […]
உயர் நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக பயன்படுத்துவதற்கும் உச்ச நீதிமன்றக் கிளையை சென்னையில் அமைப்பதற்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் நிர்வாகிகள் முதலமைச்சரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் சட்டத்துறை அமைச்சர் சி.வி. சண்முகம் ஆகியோரை புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட வார்டு கவுன்சிலர் நிர்வாகிகள் சந்தித்து வழக்கறிஞர் சேமநல நிதியை உயர்த்தி வழங்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. மேலும் வழக்காடு மொழியாக […]
சி.பி.எஸ்.சி பாடத்திட்டத்திலோ அல்லது வேறு மாநிலத்திலோ பதினோராம் வகுப்பு தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றவர்கள், தமிழ்நாடு மாநில அரசு பாடத்திட்டத்தில் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வை எழுதலாம் என பள்ளிக்கல்வித்துறை அரசாணை வெளியிட்டுள்ளது. 2017 மற்றும் 2018 ஆம் கல்வியாண்டில் 11ஆம் வகுப்பு படித்து தேர்ச்சி பெற்றவர்கள் தற்போது அதே பாடத்திட்டத்தில் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வை எழுத அனுமதிக்கப்படுவர் என குறிப்பிடப்பட்டுள்ளது இதன் அடிப்படையில் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு […]
பெண் ஒருவரை தாக்கி,வீட்டுக்குள், அத்துமீற முயன்றவர்களை, காவலன் செயலி உதவியோடு காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னையில் உள்ள கொருக்குப்பேட்டையில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வாழ்ந்து வருபவர் அனிதா சுரானா. இவர் வீட்டில் இருந்த போது இருவர் வீட்டின் கதவை தட்டி கொரியர் வந்துள்ளதாக கூறியுள்ளனர் . அனிதாவுக்கு அவர்கள் மீது சந்தேகம் ஏற்பட்டுள்ளது. அவர் யோசித்துக்கொண்டிருக்கும் போதே , அவர்கள் அனிதாவை தாக்கி வீட்டிற்குள் நுழைய முயற்சி செய்தனர் . வீட்டிற்குள் இருந்த […]
பெட்ரோல் , டீசல் விலை உயர்ந்து விற்பனை செய்யப்படுவதால் வாகன ஓட்டிகள் கவலை அடைந்துள்ளனர். தொடர்ந்து அதிகரித்து வந்த பெட்ரோல் மற்றும் டீசல் விலை தீடிரென சரியத் தொடங்கியது. பின்னர் ஏற்றம் , இறக்கமாக இருந்து வருகின்றது . இதனால் வாகன ஓட்டிகள் தினம் தினம் என்ன விலை இருக்குமோ என்று சற்று குழம்பியே இருக்கின்றனர். ஒருநாள் அதிகமாகவும், ஒருநாள் குறைவாகவும், ஒருநாள் ஏற்ற இறக்கம் இல்லாமல் நிலையாகவும் இருந்து வருகின்றது. விலை நிர்ணயம் : சர்வதேச […]
காவலன் செயலி செயல்பாட்டை பற்றிய ஒரு விழிப்புணர்வு வீடியோ தமிழக காவல்துறையினரால் வெளியிடபட்டுள்ளது . உலகத்தில் பெண்களுக்கு நேரிடும் பிரச்சனைகளை மையமாக வைத்து ,பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பைக்கருதி தமிழ்நாடு காவல்துறை காவலன் என்ற ஒரு புதிய செயலியை செயல்பாட்டிற்கு கொண்டுவந்துள்ளது . காவல்துறை மூலமாக காவலன் செயலி பற்றிய விழிப்புணர்வு நடத்தப்பட்டு வருகின்றன. இதை அந்தந்த மாவட்ட காவல் ஆணையர்கள் கவனத்தோடு கண்காணித்து வர வேண்டும் என்று காவல்துறை தலைமை இயக்குனரான திரிபாதி அறிவுறுத்தியுள்ளார் . […]
தமிழகத்தில் நடைபெறவுள்ள ஊரக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என கமலஹாசன் அறிவித்துள்ளார். தமிழகத்தில் நடைபெறவுள்ள ஊரக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவரும், பிரபல நடிகருமான கமல்ஹாசன் அறிவித்துள்ளார்.மேலும், 2021-ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் வெற்றிப்பெற்று ஆட்சியை கைப்பற்றுவதே எங்கள் கட்சியின் நோக்கம் எனவும் கமல் கூறியுள்ளார். இது தொடர்பாக கமல் வெளியிட்டுள்ள அறிக்கையில்., தமிழகத்தில் நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தல் மக்களின் முழுமையான தேர்வாக இருக்காது என்ற உண்மை எல்லாரும் […]
சென்னையில் நூதனமாக திருடி ஐயப்ப பக்தனை போலீசார் கைது செய்துள்ளனர். சென்னை, கே.கே நகர், அசோக் நகர், விருகம்பாக்கம் உள்ளிட்ட இடங்களில் உள்ள கோவில்களில் நடைபெற்ற இருமுடி கட்டும் நிகழ்வில் தனக்குத்தானே மாலை போட்டுக் கொண்டு உலா வந்துள்ளான் 47 வயதான இந்த போலி ஐயப்ப பக்தன் செந்தில்குமார். கே.கே நகரில் உள்ள ஐயப்பன் கோவிலுக்கு வந்த அவன் சுற்றுமுற்றும் நீண்ட நேரமாக நோட்டமிட்டு உள்ளான் முத்துமாரியம்மாள் என்பவருக்கு இருமுடி கட்டும் போது அவரது குடும்பத்தினர் […]
வெங்காயம் விலை உயர்வை அடுத்து முருங்கைக்காய் விலை உயர்ந்துள்ளது தென்மேற்கு பருவமழை அதிகமாகப் பொய்த்து வருவதன் காரணமாக கர்நாடகம் மற்றும் மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் விளைச்சல் அடியோடு பாதிக்கப்பட்டது. இதன் காரணமாக மிக குறைவாகவே வெங்காய வரத்து கடந்த இரண்டு மாதங்களாக உள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை சின்ன வெங்காயம் தான் அதிகமாக விளையும் ஆனால் பெரிய வெங்காயத்தின் விலை உயர்வு அடுத்து சின்ன வெங்காயத்தின் விலையும் உயர்ந்தது.நவம்பர் மாதங்களில் அவற்றை 25 ரூபாய் முதல் 30 ரூபாய் […]
உலகநன்மைக்காக நெல்லை மாவட்ட மக்கள் இந்திரவிழா பூஜையில் ஈடுபட்டனர். நெல்லை மாநகரில் உலக நன்மைக்காகவும் மழைக்காகவும் விவசாயம் செழிக்க வேண்டும் எனவும் இந்திரவிழா கோலாகலமாக நடைபெற்றது. இந்த விழாவிற்கு தாமிரபரணி மற்றும் நீர்தீர்த்தத்தில் இருந்து எடுக்கப்பட்டு வந்த மண்ணை பசுவும் கன்றும் செய்தும், முளப்பாரி செய்தும் பெண்கள் இந்திர பூஜை செய்வர். அப்போது பாடல்களை பாடியும் கோலாட்டம் அடித்தும் வழிபடுவர். இதனால் விவசாயம் செழித்தும், மழை பெய்தும் உலக மக்களுக்கு நன்மை பயக்கும் என்பது நெல்லை மாவட்ட […]
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் பல நூற்றாண்டுகளுக்கு முன்பு உள்ள முதுமக்கள் தாழி கண்டெடுக்கப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையை அடுத்து உள்ள பெரிய கண்மாய் பகுதியில் மரக்கன்றுகள் நடும் பொழுது பல நூற்றாண்டுகளுக்கு முன்பு பயன்படுத்திய முதுமக்கள் தாழியை இளைஞர்கள் சிலர் கண்டுபிடித்துள்ளனர். இதனை கண்ட கண்டுபிடிப்பாளர்கள் காவல் துறை மூலமாக தொல்லியல் துறைக்கு தகவல் அனுப்பினர். இதையடுத்து முதுமக்கள் தாழி குறித்து அகழ்வாராய்ச்சி நடத்தப்படும் என அரசு அருங்காட்சியக காப்பாளர் தெரிவித்தார். மேலும் இதனை கண்டெடுத்த இளைஞர்களுக்கும் […]
தமிழகத்தின் பல்வேறு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பரவலாக மழை பெய்தது வந்த நிலையில், குமரி கடல் மற்றும் அதை ஒட்டிய வங்கக்கடலில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக ராயப்பேட்டை மயிலாப்பூர் சோழிங்கநல்லூர் தாம்பரம் ஆகிய இடங்களில் பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்தது. கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பகுதிகளிலும் மழை பெய்ததால், இதமான சூழல் நிலவியது. கடந்த சில நாட்களாக மழை பெய்து […]
3 வயது குழந்தையின் உயிரை காப்பாற்ற 1.10 மணி நேரத்தில் 90 கிலோ மீட்டர் துரத்தை அதிவேகத்தில் கடந்து குழந்தையின் உயிரை காப்பாற்றிய ஆம்புலன்ஸ் டிரைவருக்கு சமூகவலைதளைங்களில் பாராட்டுகள் குவிந்து வருகிறது. திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் கள்ளாங்கட்டு வலசு பகுதியில் வசித்து வருபவர் சங்கீதா .இவரது மகன் சந்தோஷ்க்கு (3) வயது ஆகிறது .இதனை தொடர்ந்து காய்ச்சலால் சந்தோஷ் வெள்ளக்கோவிலில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டான். திடீரென சந்தோசுக்கு வலிப்பு ஏற்பட்டதால் கோவையில் உள்ள மருத்துவமனைக்கு […]
டிஎன்பிஎல்-லில் 225 கோடி சூதாட்டம்….!!
தமிழ்நாடு பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டிகளில் 225 கோடி ரூபாய் வரை சூதாட்டம் நடந்திருப்பது இந்திய கிரிக்கெட் வாரியத்தின் விசாரணையில் அம்பலமாகி இருக்கிறது. இந்தியாவில் நடைபெறும் டி20 கிரிக்கெட் போட்டிகளில் சூதாட்டம் அதிகரித்துள்ளதாக புகார் எழுந்ததையடுத்து பிசிசிஐயின் ஊழல் தடுப்பு பிரிவு விசாரணை நடத்தியது தமிழ்நாட்டில் நடத்தப்படும் டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரில் அதிக அளவில் சூதாட்டம் நடந்திருப்பது இந்த விசாரணையில் தெரிய வந்துள்ளது. இந்த ஆண்டு நடைபெற்ற டி என் பி எல் தொடரில் மதுரை […]
திருவள்ளூர் மற்றும் ஆவடியில் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க மத்திய மந்திரியிடம் ,எம் .பி . தயாநிதிமாறன் கோரிக்கை விடுத்துள்ளார் . டெல்லியில் ரெயில்வே மந்திரி பியூஸ் கோயலை நேரில் சந்தித்துகோரிக்கை மனுவை கொடுத்த மத்திய சென்னை எம்.பி. தயாநிதி மாறன்.சென்னை எம்.ஜி.ஆர் சென்டிரல் ரெயில் நிலையத்தில் திருவள்ளூர் மற்றும் ஆவடி வழியாக 30-க்கும் மேற்பட்ட எக்ஸ்பிரஸ் ரெயில்கள் இயக்கப்படுகிறது . அதில் தினமும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்கின்றனர். […]
பெட்ரோல் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டு இருந்த நிலையில் இன்று மாற்றமின்றி விற்பனை செய்யப்படுகின்றது. தொடர்ந்து அதிகரித்து வந்த பெட்ரோல் மற்றும் டீசல் விலை தீடிரென சரியத் தொடங்கியது. பின்னர் ஏற்றம் , இறக்கமாக இருந்து வருகின்றது . இதனால் வாகன ஓட்டிகள் தினம் தினம் என்ன விலை இருக்குமோ என்று சற்று குழம்பியே இருக்கின்றனர். ஒருநாள் அதிகமாகவும், ஒருநாள் குறைவாகவும், ஒருநாள் ஏற்ற இறக்கம் இல்லாமல் நிலையாகவும் இருந்து வருகின்றது. விலை நிர்ணயம் : சர்வதேச […]
வளிமண்டல மேல் அடுக்கு சுழற்சியின் காரணமாக நாகப்பட்டினம் , புதுச்சேரி மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் கனமழை பெய்வதற்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது . தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை பெய்துவரும் நிலையில் குமரிக்கடல் பகுதியில் நிலவி வரும் வளிமண்டல மேல் அடுக்கு சுழற்சி காரணமாக நாகப்பட்டினம் , சிவகங்கை மற்றும் புதுச்சேரியில் அடுத்து 24 மணி நேரத்தில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது . இதுபோன்றே […]
அம்பேத்கரின் 63ஆவது நினைவு நாளை முன்னிட்டு நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் அம்பேத்கரின் சிலைக்கு அரசியல் தலைவர்களும் பல்வேறு இயக்கங்களும் பொதுமக்களும் மலர்த் தூவி அஞ்சலி செலுத்தி வருகின்றனர். திருவள்ளூர்: சட்ட மாமேதை அம்பேத்கரின் 63ஆவது நினைவு நாளையொட்டி திருவள்ளூர் மாவட்ட திமுக சார்பில் திருவள்ளூர் பேருந்து நிலையம் அருகே மாவட்டச் செயலாளர் ஆவடி சாமு நாசர், திருவள்ளூர் தொகுதி எம்எல்ஏ விஜி ராஜேந்திரன், பூந்தமல்லி தொகுதி எம்எல்ஏ கிருஷ்ணசாமி ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். […]
உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற இருப்பதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் க. அன்பழகன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். தமிழ்நாட்டில் ஒன்பது மாவட்டங்கள் தவிர எஞ்சிய மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தல் நடத்துவதற்கு உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து, உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக முன்னதாக வெளியிட்டிருந்த அறிவிப்பாணையை மாநில தேர்தல் ஆணையம் வாபஸ் பெற்றது. இந்நிலையில், உள்ளாட்சி தேர்தல் தொடர்பான அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்த திமுக திட்டமிட்டுள்ளது. […]
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை அருகே பள்ளி தலைமை ஆசிரியர் வீட்டில் 70 சவரன் தங்க நகை ஒரு லட்சம் ரூபாய் ரொக்கப் பணத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர். பெரம்பலூர் மாவட்டம் வேந்தட்டை பகுதியை அடுத்த சின்னாறு கிராமத்தில் உள்ள அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளியில் செல்வம் என்பவர் தலைமை ஆசிரியராக பணியாற்றி வருகிறார். நேற்று வழக்கம்போல் வீட்டை பூட்டிவிட்டு பணிக்குச் சென்ற அவர் மாலை வீட்டிற்கு திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு […]
மொக்க காரணத்திற்க்காக மனைவியை கணவனே கழுத்தை நெரித்து கொலை சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை வேளச்சேரி பகுதியை சேர்ந்த கார் ஓட்டுனர் ஆன ஜெயராஜும் அவரது மனைவி 24 வயதான இலக்கியாவும் காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள். இலக்கியா வேளச்சேரி ஃபீனிக்ஸ் வணிக வளாகத்தில் பணியாற்றி வந்தார். கடந்த ஒன்றாம் தேதி அன்று வீட்டில் ஜெயராஜன் அலறல் சத்தம் கேட்டு அருகில் இருப்பவர்கள் ஓடிவந்து பார்த்த பொழுது இலக்கியா தூக்கில் பிணமாக தொங்கினார். தன்னுடன் சண்டை […]
தெலுங்கானா பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்ட நான்கு குற்றவாளிகளும் என்கவுண்டர் செய்யப்பட்டது குறித்து பிக்பாஸ் பிரபலம் மீராமிதுன் கருத்து தெரிவித்துள்ளார். சமீபத்தில் தெலுங்கானா மாநிலத்தில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட பெண் மருத்துவர் வழக்கில் 4 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர். இதையடுத்து இன்று காலை விசாரணைக்காக நான்கு பேரையும் பிரியங்கா ரெட்டி அவர்களை கொலை செய்த இடத்திற்கு விசாரணைக்காக அழைத்துச் சென்ற பொழுது அவர்கள் தப்ப முயன்றதால் காவல் துறையினர் அவர்களை என்கவுண்டரில் சுட்டுக் […]
ஒன்பது மாவட்டங்கள் தவிர்த்து தமிழ்நாட்டின் பிற பகுதிகளில் உள்ளாட்சி தேர்தல் நடத்த உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளது. உள்ளாட்சி தேர்தலுக்கான வார்டு மறுவரையறையை முழுமையாக முடிக்காமல் தமிழ்நாடு தேர்தல் ஆணையம் உள்ளாட்சி தேர்தலை நடத்த முயற்சிப்பதாகவும், அதை விரைந்து முடிக்க உத்தரவிடக் கோரியும் திமுக, செ.கு. தமிழரசன் உள்ளிட்ட 12 பேர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்குகள் மீதான விசாரணை தலைமை நீதிபதி எஸ்.ஏ. போப்டே தலைமையிலான அமர்வு முன்பு நடைபெற்றது. அப்போது […]
உள்ளாட்சி தேர்தல் தொடர்பான அறிவிப்பை தமிழ்நாடு தேர்தல் ஆணையம் வாபஸ் பெற்றுள்ளது. வருகின்ற டிசம்பர் 27 மற்றும் 30 ஆகிய இரு தேதிகளில் தமிழ்நாட்டில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் நடத்தப்படும் என தமிழ்நாடு தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. இதையடுத்து தேர்தலுக்கான வேலைகளில் அரசியல் கட்சியினர் மும்முரமாக ஈடுபட்டு வந்தனனர். இந்நிலையில் உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக உச்ச நீதிமன்றம் புதிய தீர்ப்பு வழங்கியதையடுத்து, ஏற்கனவே வெளியிடப்பட்டிருந்த அறிவிப்பாணையை மாநில தேர்தல் ஆணையம் வாபஸ் பெற்றுள்ளது.
தாங்கள் மது அருந்தியதற்கு பணத்தை கொடுக்குமாறு தொழில் அதிபரை துப்பாக்கி முனையில் மிரட்டிய சினிமா விநியோகஸ்தர் உள்பட இரண்டு பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சென்னை பாண்டி பஜார் பகுதியைச் சேர்ந்தவர் ஹேமந்த். இவர் கட்டட உள்கட்டமைப்பு பணி செய்து வருகிறார். இவர் தொழில் சம்மந்தமாக பேச தனது நண்பர்களுடன் நட்சத்திர ஹோட்டலுக்கு செல்வதை வழக்கமாக கொண்டுள்ளார். இந்நிலையில் நவம்பர் 24 ஆம் தேதி வழக்கம்போல் தனது நண்பர்களை சந்திக்க ஜெமினி மேம்பாலம் அருகே உள்ள நட்சத்திர […]
மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மூன்றாவது ஆண்டு நினைவு தினத்தையொட்டி அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அஞ்சலி செலுத்தினார். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களுக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் பிரபலங்களும் நினைவிடத்திற்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வரும் நிலையில், ttv தினகரன் அவர்கள் பேரணியாக சென்று அஞ்சலி செலுத்தியுள்ளார். முன்னதாக அண்ணாசாலையில் தொடங்கி ஜெயலலிதா நினைவிடம் வரை நடைபெற்ற பேரணியில் டிடிவிதினகரன் முன்னாள் அமைச்சர் பழனியப்பன் முன்னாள் சட்டமன்ற […]
ரயிலில் பயணி ஒருவர் விட்டுச் சென்ற பையை நேர்மையாக ரயில்வே நிலைய அதிகாரிகளிடம் ஒப்படைத்த பெண் துப்புரவு பணியாளர் தமிழக ரயில்வே காவல்துறை இயக்குநர் சைலேந்திரபாபு நேரில் அழைத்து பாராட்டியுள்ளார். கடந்த செவ்வாய்கிழமையன்று கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயில் எழும்பூர் வந்த நிலையில், சிவசுப்பிரமணியம் என்ற பயணி ரயிலில் தனது பையை மறந்து விட்டுச் சென்றுள்ளார். யாரும் கண்டு கொள்ளாத நிலையில் கிடந்த பையை ரயிலில் துப்புரவு பணியை மேற்கொண்டிருந்த ராஜலட்சுமி என்பவர் ரயில்வே நிலைய அதிகாரிகளிடம் பத்திரமாக […]
சென்னை ஆவடி அருகே பஞ்சாப் நேஷனல் வங்கியின் ஏடிஎம் ஐ உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட நபரை காவல்துறையினர் கைது செய்தனர். சென்னை ஆவடி பகுதியை அடுத்த முத்தா புதுபேட்டையில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கி ஏடிஎம்மில் நள்ளிரவில்புகுந்த மர்ம நபர் ஒருவர் அங்கிருந்த 4 கண்காணிப்பு கேமராக்களிலும் கலர் பெயிண்ட் அடித்து திருட முயன்றுள்ளார். இதனை வங்கியின் மும்பை தலைமை அலுவலகத்திலிருந்து கண்காணித்த அதிகாரி ஒருவர் உடனடியாக முத்தாபுதுப்பேட்டை காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். இதனை […]
சிறுமிகளை வைத்து எடுக்கப்பட்ட சுமார் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆபாச வீடியோக்கள் மூன்று நாட்களில் இணையதளத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக காவல்துறை கூடுதல் இயக்குனர் ரவி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கடந்த 3 நாட்களில் காவல்துறையினரின் தொழில்நுட்ப குழுவினர் குழந்தைகள் வைத்து எடுக்கப்பட்ட 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆபாச படங்களின் லிங்குகளை பிளாக் செய்தும் அதனை இணையதளத்தில் இருந்து டெலிட் செய்தும் உள்ளனர். மேலும் பிற ஆபாச படங்களும் தொடர்ந்து இணையதளங்களில் இருந்து நீக்கப்பட்டு வருவதாக காவல் துறை கூடுதல் […]
தமிழ்நாட்டின் ஆளுமை மிக்க அரசியல் தலைவர் என்றால், அது வைகோ மட்டும்தான் என அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியிருக்கிறார். மதுரை விமான நிலையத்தில் அமைச்சர் செல்லூர் ராஜூ செய்தியாளர்களிடம் பேசுகையில், ‘ திமுகவைப் பொறுத்தவரையில் உள்ளாட்சித் தேர்தலை எதிர்கொள்ளத் தயாராக இல்லை. அதன் விளைவாக அதனுடைய தோழமை கட்சிகளையும் தற்போது தூண்டிவிட்டு பல்வேறு வழக்குகளைப் போட்டு வருகின்றது. புதிய மாவட்டங்கள் பிரித்தாலும் அதிலுள்ள பஞ்சாயத்துகளுக்கு எந்த வித பாதிப்பும் ஏற்படாது என்ற சட்டம் இருந்து வருகிறது. அவர்கள் […]
பெண்கள் குறித்து தான் தவறாகப் பேசவில்லை என்றும் தான் பேசிய கருத்து திரித்து கூறப்பட்டுள்ளது என இயக்குனர் பாக்யராஜ் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார். ‘திருவாளர் பஞ்சாங்கம்’ எனும் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் கலந்துகொண்ட பின்னர் இயக்குநர் பாக்யராஜ் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது ‘ பெள்ளாச்சி விவகாரத்தில் பெண்கள் கவனமாக இருந்தால், அச்சம்பவத்தை தவிர்த்திருக்கலாமே என்று மட்டும்தான் தான் கூறியதாகவும், ஆனால் அச்செய்தி திரித்துக் கூறப்பட்டது’ என்றும் கூறினார். இதனால் […]
மீனவர்கள் அனைவரும் பாதுகாப்பாக கரை திரும்ப தமிழ்நாடு அரசு தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருவதாக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்ததையடுத்து, தென்மேற்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய இந்தியப் பெருங்கடலில் நிலை கொண்டுள்ள குறைந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் தீவிரப் புயலாக மாறக் கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் வங்காள விரிகுடா மற்றும் குமரிக்கடற்கரைப் பகுதிகளில் கடலுக்கு மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என்றும்; ஆழ்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவர்கள் […]
புயலில் சிக்கிக் கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த மீனவர்கள் 400 பேரில் 250 பேர் கப்பலில் ஏறி உயிர் தப்பினர். கடந்த சில நாட்களாக மழை குறைந்ததைத் தொடர்ந்து தேங்காய்பட்டணம் மற்றும் கேரளா மாநிலத்தின் கொச்சியில் இருந்து குமரி மாவட்ட மீனவர்கள் சுமார் ஐநூறு படகுகளில் ஆழ்கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர். இந்நிலையில் ஆயிரக்கணக்கான மீனவர்கள் நேற்றைய தினம் கர்நாடக மாநிலம் மங்கலாபுரம், லட்சத்தீவு ஆழ்கடல் பகுதியில் ஏற்பட்ட புயல் காற்றில் பாதிப்படைந்துள்ளார்கள். மீனவர்களும் விசைப்படகுகளும் புயல் காற்றை எதிர்கொள்ள […]
நீட் தேர்வில் ஆள் மாறாட்டம் செய்ததாக மேலும் ஒரு மாணவரின் பெற்றோர் கைது செய்யப்பட்டுள்ளார். நீட் தேர்வில் ஆள் மாறாட்டம் செய்தது தொடர்பாக உதித்சூர்யா, பிரவீன், ராகுல், இர்பான் மற்றும் மாணவி பிரியங்கா என இதுவரை ஐந்து மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர் என பத்து பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இதில் மாணவர்கள் அனைவருக்கும் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை நிபந்தனையுடன் கூடிய பிணை வழங்கியது. அதற்கு அடுத்தபடியாகஅவர்களது பெற்றோர்களான வெங்கடேசன், சரவணன், […]