தமிழகத்தில் நாளை பலத்த மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் பலத்த மழை கொட்டி வருகின்றது. தென் மாவட்டமான திருநெல்வேலி , தூத்துக்குடி, விருதுநகர் மழையில் இருந்து தப்பவில்லை. அதே போல ராமநாதபுரம், கோயம்புத்தூர் , நீலகிரி, ஈரோடு, சேலம், நாமக்கல், கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களிலும் கனமழை பெய்து வருகின்றது.கனமழையால் தாழ்வான பகுதியில் வெள்ள பெருக்கு ஏற்பட்டு பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை […]
Tag: Tamilnadu
கடந்த பல ஆண்டுகளாய் தமிழ்நாட்டில் கல்ட் பெண்மணியாய் வாழ்ந்தவர் முன்னாள் முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதா. வெற்றிக்கான பாதை அவருக்கு அத்தனை சுலபமாய் கிடைத்து விடவில்லை. ஒரு வெற்றி பெற்ற நடிகையிலிருந்து உலகறிந்த அரசியல்வாதியாய் ஜெ. தன் வாழ்க்கைப் பாதையில் பல இன்னல்களைச் சந்தித்தே வந்தார். ஒரு வலுவான தன்னம்பிக்கையுள்ள பெண்ணாக பலருக்கும் காட்சியளித்தவர் உண்மையில் வெகுளியாகவும் அப்பாவியாகவும் இருந்துள்ளார். அவரது தனிப்பட்ட வாழ்க்கையில் அவர் எப்படி வாழ்ந்துள்ளார் என்பதைப் பற்றி பார்ப்போம். ஒவ்வொறு பிரகாசமான கண்களுக்குப் பின்னும் […]
பெட்ரோல் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டு இருந்த நிலையில் இன்று மாற்றமின்றி விற்பனை செய்யப்படுகின்றது. தொடர்ந்து அதிகரித்து வந்த பெட்ரோல் மற்றும் டீசல் விலை தீடிரென சரியத் தொடங்கியது. பின்னர் ஏற்றம் , இறக்கமாக இருந்து வருகின்றது . இதனால் வாகன ஓட்டிகள் தினம் தினம் என்ன விலை இருக்குமோ என்று சற்று குழம்பியே இருக்கின்றனர். ஒருநாள் அதிகமாகவும், ஒருநாள் குறைவாகவும், ஒருநாள் ஏற்ற இறக்கம் இல்லாமல் நிலையாகவும் இருந்து வருகின்றது. விலை நிர்ணயம் : […]
சர்க்கரை ரேசன் அட்டையிலிருந்து அரிசி ரேசன் அட்டைக்கு மாறிய பயனாளிகளுக்கு, அரிசி வழங்க 604 கோடி ரூபாய் ஒதுக்கி, தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. பொது விநியோகத் திட்டத்தில் 10 லட்சத்து 19 ஆயிரத்து 491 சர்க்கரை நியாய விலைக்கடை அட்டைகள் உள்ளன. இதனை வைத்திருப்பவர்களில் பெரும்பாலானோர், அட்டையை அரிசி பெறக்கூடிய அட்டைகளாக மாற்றம் செய்து தர கோரிக்கை விடுத்திருந்தனர். இதையடுத்து, குடும்ப அட்டைகளைத் தகுதியின் அடிப்படையில், அரிசி அட்டைகளாக மாற்றிக் கொள்ளலாம் எனத் தமிழ்நாடு அரசு […]
மேட்டுப்பாளையத்தில் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து 17 பேர் உயிரிழந்ததை தொடர்ந்து, அந்த சுற்றுச்சுவரை கட்டிய வீட்டின் உரிமையாளர் போலீசாரால் கைது செய்யப்படார் . கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அருகில் உள்ள நடூர் பகுதியில், மழையால் சுற்றுச்சுவர் இடிந்து அருகில் இருந்த வீடுகள் மீது விழுந்தது. சுற்றுச்சுவர் விழுந்ததில், அதனை ஒட்டிய வீடுகள் இடிந்து 17 பேர் பலியாகினர் . இந்த விபத்துக்கு காரணமான சுற்றுச் சுவரை கட்டிய வீட்டின் உரிமையாளரை கைது செய்ய வேண்டுமென்று வலியுறுத்தி அப்பகுதி […]
வேதாரண்யத்தில் பலத்த மழை மற்றும் கடல் சீற்றத்தின் காரணமாக மீனவர்கள் மீன் பிடிக்கச் செல்லவில்லை […]
மேட்டுப்பாளையத்தில் சுவர் இடிந்து விழுந்து 17 பேர் உயிரிழந்த இடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்த திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், தமிழ்நாடு அரசு மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே நடூர் என்ற பகுதியில் தனியாருக்குச் சொந்தமான வீட்டின் சுற்றுசுவர் இடிந்து விழுந்ததில் 17 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். அந்த சுவர் குறித்து பல முறை அரசு அதிகாரிகளிடம் முறையிட்டும், நடவடிக்கை எடுக்காமல் விட்டதே இத்தனை பேர் உயிரிழந்திருப்பதற்கு காரணம் என அப்பகுதியில் […]
நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்க இருக்கும் புதிய படத்தின் பெயர் வெளியாகியுள்ளது. நடிகர் சிவகார்த்திகேயன் அவர்கள் நடித்த ’நம்ம வீட்டு பிள்ளை’படம் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி கண்ட நிலையில் அவர் தற்போது ’ஹீரோ’ என்னும் படத்தை முடித்துள்ளார். இந்த படம் வருகின்ற 20ஆம் தேதி வெளியாகும் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது . இதனை அடுத்து இயக்குனர் ரவிக்குமார் அவர்கள் இயக்கி வரும் படத்தில் இப்போது சிவகார்த்திகேயன் நடித்து கொண்டிருக்கின்றார். இந்த […]
15 வயது சிறுமிக்கு ஒருவர் பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளதாக குழந்தைகள் நல குழுமத்திற்கு தகவல் கிடைத்ததையடுத்து அந்நபரை மகளிர் போலீசார் கைது செய்தனர். சென்னை, திருவல்லிக்கேணியில் உள்ள பறக்கும் ரயில் நிலையம் அருகில் 15 வயது சிறுமிக்கு ஒருவர் பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக குழந்தைகள் நல குழுமத்திற்கு தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து அதிகாரிகள், அண்ணா சதுக்கம் போலீசாருடன் அங்கு சென்று காண்காணித்த போது சிறுமியுடன் ஒருவர் சுற்றித்திரிவது தெரிந்தது.அந்த நபரை பிடித்து விசாரித்த போது […]
கனமழை காரணமாக 8 மாவட்டங்களில் உள்ள பள்ளிகளிக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது . தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது. ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் நீர்நிலைகள் நிரம்பி வருகின்றன. இந்நிலையில் நேற்று இரவு முதல் மழை பெய்து வருவதால் மாவட்டம் முழுவதும் பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் உத்தரவிட்டிருக்கிறார். சிவகங்கை , புதுக்கோட்டை மாவட்டங்களில் பள்ளிகளுக்கு அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் விடுமுறை […]
சென்னையில் கணவன் மனைவி இடையே ஏற்பட்ட தகராறில் மன உளைச்சல் அடைந்த கணவன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை குன்றத்தூர் பகுதியை அடுத்த விஜயலட்சுமி நகரை சேர்ந்தவர் பவானி. இவரது மகன் உதயகுமார் அமுதா என்ற பெண்ணை சில வருடங்களுக்கு முன்பாக காதலித்து திருமணம் செய்துகொண்டார். உதயகுமார் கார் மெக்கானிக் ஆக பணியாற்றி தனது மனைவியுடன் சரஸ்வதி நகர் அவென்யூ பகுதியில் வாழ்க்கையை நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் அவரது மனைவி அமுதா […]
கடந்த சில தினங்களாகவே பெய்து வரும் கன மழையினால் சென்னை புறநகர் பகுதிகளை சுற்றி மழை நீர் சூழ்ந்து வீடுகளுக்குள் வெள்ள நீர் புகுந்து பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். சென்ற வருடம் மழை பெய்யாததன் காரணமாக இந்த வருடம் மே மாதத்தில் ஏரிகள் அனைத்தும் வறண்டு காணப்பட்டதால் சென்னைவாசிகள் வரலாறு காணாத தண்ணீர் பஞ்சத்தை சந்தித்து வந்தனர். ஆகையால் சென்னைவாசிகள் வடகிழக்கு பருவமழை கைகொடுக்கும் என்று பெரிதும் நம்பிக்கை கொண்டிருந்தனர். அவர்களது நம்பிக்கையை வீணடிக்காமல் வடகிழக்கு பருவமழை […]
கடந்த 29ஆம் தேதி சுவர் இடிந்து மூன்று பேர் உயிரிழந்த குடும்பத்திற்கு திமுக தலைவர் ஸ்டாலின் ரூ. 1 லட்சம் நிவாரண நிதி வழங்கினார். கடலூரில் பெய்த தொடர் கனமழையால் கடந்த 29ஆம் தேதி கம்மியம்பேட்டை பகுதியில் நாராயணன் என்பவர் வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் நாராயணன், மனைவி மாலா மகேஸ்வரி, பேத்தி தனஶ்ரீ ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்த விபத்தில் மூன்று பேர் படுகாயமடைந்து தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் திமுக தலைவர் […]
உள்ளாட்சித் தேர்தலில் மக்கள் திமுகவுக்கு நாமம் போடுவார்கள் என்று அமைச்சர் ஜெயக்குமார் பேசியுள்ளார். சென்னை மெரினாவில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயகுமார், “தமிழ்நாடு மக்கள் எதிர்பார்த்த ஒன்றுதான் உள்ளாட்சித் தேர்தல், அடிப்படை கட்டமைப்பு வசதிகளை உள்ளாட்சி அமைப்புகள் மூலம் தான் செயல்படுத்த முடியும். இதனைக் கருத்தில் கொண்டே 2016ஆம் ஆண்டு தேர்தல் நடத்த அறிவிப்பு பிறப்பிக்கப்பட்டது. அதை எதிர்த்து நீதிமன்றம் சென்றது திமுக தான். உச்ச நீதிமன்றம் தேர்தல் நடத்த 2018ஆம் ஆண்டு உத்தரவிட்டபோதும், அவர்கள் எந்த […]
தமிழ்நாடு முதலமைச்சர் ஆக வேண்டுமென தனக்கும் ஆசை இருப்பதாக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சரும், அதிமுகவின் முக்கிய பரமுகருமான ஓ.எஸ். மணியன் தெரிவித்துள்ளார். கடந்த சில நாட்களாக நாகை மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் வேளாங்கண்ணி, பகுதியை சுற்றிலும் வெள்ளநீர் வீடுகளை சூழ்ந்து காணப்பட்டது. இந்நிலையில், தமிழ்நாடு கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஓ.எஸ். மணியன் பாதிக்கப்பட்ட பகுதிக்கு நேரில் சென்று பார்வையிட்டார். பின் அவருடன் வந்த அதிமுக தொண்டர்கள் தேங்கி […]
கிருஷ்ணகிரியில் தறிக்கெட்டு ஓடிய லாரி சுங்கச் சாவடி வசூல் மையத்தின் மீது மோதியதில் இருவர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி பகுதியில் உள்ள நகர நெடுஞ்சாலை பகுதியையொட்டி சுங்கச் சாவடி ஒன்று அமைந்துள்ளது. இதில் இன்று மதியம் வழக்கம் போல் சுங்கச்சாவடி ஊழியர்கள் பணிகளில் ஈடுபட்டிருந்தனர். அப்போது யாரும் எதிர்பாரத விதமாக அதிவேகத்தில் வந்த லாரி கட்டுபாட்டை இழந்து சுங்கசாவடி வசூல் மையம், அங்கு வந்த இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில் இருவர் […]
உள்ளாட்சித் தேர்தலை நடத்துவதில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உறுதியாக இருப்பதாகவும், தேர்தலில் அதிமுக எளிதில் வெற்றி பெறும் எனவும் சட்டப்பேரவை உறுப்பினர் ராஜன் செல்லப்பா கூறியுள்ளார். மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் பகுதியில் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் மூன்றாவது நினைவு தினத்தை முன்னிட்டு, ஆயிரம் நபர்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியை அதிமுக கிழக்கு மாவட்டச் செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான ராஜன் செல்லப்பா எம்எல்ஏ தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியதாவது, ‘தமிழ்நாட்டில் மாவட்டங்கள் 37 ஆக உயர்ந்திருக்கிறது. 6 […]
உடல் உறுப்பு தானத்தில் சிறந்து விளங்கியதற்காக மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை சார்பில் விருது வழங்கப்பட்டது. இதை சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பெற்றுக் கொண்டார். டெல்லியில் மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை சார்பில் 10ஆவது உடல் உறுப்பு தின விழா நடைபெற்றது. இந்த விழாவில் உடல் உறுப்பு தானத்தில் சிறந்து விளங்கியமைக்காக தமிழ்நாட்டிற்கு 5ஆவது முறையாக விருது கிடைத்துள்ளது. இவ்விருதினை மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன், மத்திய […]
சிலை கடத்தல் விசாரணை தொடர்பாக இதுவரை சேகரித்த ஆவணங்களை கூடுதல் காவல்துறை இயக்குனர் அபய் குமாரிடம் ஒப்படைக்குமாறு பொன் மாணிக்கவேலுக்கு தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவு சிறப்பு அதிகாரி பொன் மாணிக்கவேலின் பதவிக்காலம் இன்றுடன் நிறைவடைகிறது. இதையடுத்து சிலை கடத்தல் விசாரணை குறித்த ஆவணங்களை சிலை கடத்தல் பிரிவு கூடுதல் காவல்துறை இயக்குனர் அபய் குமார் சிங்கிடம் ஒப்படைக்குமாறு தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. சிலை கடத்தில் சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்ட பொன் மாணிக்வேல் பணிக்காலத்தை […]
கீழ்ப்பாக்கம் மனநல காப்பகத்தில், கடந்த மூன்று ஆண்டுகளில் எத்தனை பேர் இறந்துள்ளனர் என்ற விவரங்களை அறிக்கையாகத் தாக்கல் செய்ய மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. சென்னை கீழ்ப்பாக்கம் மனநல காப்பகத்தில் அனுமதிக்கப்பட்டிருந்த நோயாளிகளில், நான்கு பேர் கடந்த 10 நாட்களில், பல்வேறு காரணங்களால் மரணமடைந்துள்ளனர். இதனால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நோயாளிகளை வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காக, சென்னை ராஜிவ்காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இதுதவிர, கீழ்ப்பாக்கம் மனநல காப்பகத்தில் முழுநேர மருத்துவருடன் அவசர சிகிச்சைப் […]
முதலமைச்சர் பழனிசாமி எந்த தேர்தலாக இருந்தாலும் அதை சந்திக்க தயாராக உள்ளதாக தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர் கபில் தெரிவித்தார். சென்னை நுங்கம்பாக்கதில் உள்ள தனியார் விடுதியில் பிரதம மந்திரியின் தொழிலாளர் ஓய்வூதிய திட்டத்தின் கீழ் அமைப்பு சாராதொழிலாளர்கள் மற்றும் சிறு வணிகர்களுக்கு ஓய்வூதிய அட்டைகள் வழங்கும் விழா நடைபெற்றது. நிகழ்ச்சியில் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர் கபில், சென்னை மாவட்ட ஆட்சியர் சீதாலட்சுமி, தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு துறை செயலர் நஜிமுதீன், தொழிலாளர் ஆணைய செயலர் […]
ஈழத்தில் பன்றி வேட்டைக்குச் செல்லவிருந்த சீமானை பிரபாகரன் தடுத்து நிறுத்திய சம்பவம் வெளிவந்துள்ளது. ஈழ விடுதலைப் போரில் உயிரிழந்த விடுதலைப் புலிகளுக்கு மரியாதை செலுத்தும் விதமாக மாவீரர்கள் தினம் ஆண்டுதோறும் நவம்பர் 27ஆம் தேதி அனுசரிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், நாம் தமிழர் கட்சி சார்பிலும் மாவீரர்கள் தினம் மதுரையில் கடந்த 27ஆம் தேதி அனுசரிக்கப்பட்டது. இதில் அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உரையாற்றுகையில் பல்வேறு விவகாரங்கள் குறித்துப் பேசினார். அதில் ஒரு பகுதியாக பிரபாகரன் குறித்து […]
விடுதலை செய்ய முடியாவிட்டால், தன்னையும் தன் கணவரையும் கருணைக் கொலை செய்து விடுங்கள் என, பிரதமர் நரேந்திர மோடிக்கு நளினி உருக்கமாகக் கடிதம் எழுதியுள்ளார். முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் நளினி, முருகன் ஆகிய இருவரும் வேலூர் மத்திய சிறையில் உள்ள ஆண்கள், பெண்கள் பிரிவில் தனித்தனியே தண்டனை அனுபவித்து வருகின்றனர். இந்த வழக்கில், இவர்கள் உள்ளிட்ட ஏழு பேரையும் விடுதலை செய்வது தொடர்பாக தமிழ்நாடு ஆளுநர் முடிவெடுக்கலாம் என்று உச்ச நீதிமன்றம் கருத்து […]
அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் காலியாக உள்ள 1060 விரிவுரையாளர்கள் பணி நிரப்புவதற்கு விண்ணப்பிக்கலாம் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் காலியாக உள்ள 1, 060 விரிவுரையாளர்கள் பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இவர்களுக்கான விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலம் பெறுவதற்கான தேதி, விண்ணப்பிப்பதற்கான இறுதி நாள், கம்ப்யூட்டர் முறையில் தேர்வு நடைபெறும் நாள் மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு தேதிகள் விரைவில் அறிவிக்கப்படும். 2017 -18 கல்வியாண்டில் […]
தேனாம்பேட்டையில் உள்ள திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்திற்கு அடையாளம் தெரியாத நபர் வெடிக்குண்டு மிரட்டல் விடுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை தேனாம்பேட்டையில் உள்ளது திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயம். இங்கு வெடிக்குண்டு வைத்திருப்பதாக காவல் கட்டுப்பாட்டு அறைக்கு அடையாளம் தெரியாத நபர் செல்போன் மூலம் மிரட்டல் விடுத்துள்ளார். இதையடுத்து காவல்துறையினர் மோப்ப நாய், வெடிக்குண்டு நிபுணர்கள் உதவியோடு சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.இந்தி மொழியில் பேசிய அந்த நபர் குறித்து காவல் துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.
அரசு, அரசு உதவிபெறும் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு தினமும் காலை மற்றும் மாலையில் உடற் கல்வி கற்பிக்க வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது. தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் கண்ணப்பன் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பியுள்ள கடிதத்தில், ‘பள்ளி அளவில் மாணவர்கள் பாட சுமையை குறைத்து அவர்களை உடல் தகுதியுடனும், ஆரோக்கியத்துடனும், மன அளவில் தனித்திறமையுடனும், ஆளுமை திறமையுடனும் தயார் படுத்துவதற்கு பள்ளி நடைமுறையில் சில மாற்றங்களை கொண்டு வருவது மிகவும் அவசியமான […]
5,8ஆம் வகுப்பிற்கான பொதுத்தேர்வு அட்டவணையை அரசு தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ளது. அரசு தேர்வுகள் இயக்ககம் வெளியிடுட்டுள்ள அறிக்கையில், 5ஆம் வகுப்பிற்கான தேர்வு ஏப்ரல் 15ஆம் தேதி தொடங்கி 20ஆம் தேதி முடிவடைகிறது. இதில் ஏப்-15ஆம் தேதி தமிழ், ஏப்-17ஆம் தேதி ஆங்கிலம், ஏப்-20ஆம் தேதி கணக்கு ஆகிய தேர்வுகள் நடைபெறுகின்றன இதேபோல் 8ஆம் வகுப்பிற்கான தேர்வு மார்ச் 30ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 17ஆம் தேதி வரை நடைபெறும். இதில் மார்ச்-30ஆம் தேதி தமிழ், ஏப்-2ஆம் தேதி […]
தொடக்கக் கல்வித்துறையில் பணிபுரிய 97 வட்டார கல்வி அலுவலர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. தொடக்கக் கல்வித் துறையில் பணிபுரிய 97 வட்டார கல்வி அலுவலர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ” பள்ளிக்கல்வித் துறையின் கீழ், வட்டார கல்வி அலுவலருக்குரிய 2018 – 19ஆம் ஆண்டிற்கான காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க […]
மாணவி தற்கொலை வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளை நீதிக்கு முன் நிற்க வைப்போம் என தடயவியல் துறை இயக்குநர் உறுதியளித்துள்ளதாக பாத்திமா லத்தீப்பின் தந்தை அப்துல் லத்தீப் தெரிவித்துள்ளார். தற்கொலை செய்துகொண்ட மாணவி பாத்திமாவின் அலைபேசி கடவுச் சொல்லை மாணவியின் தந்தை அப்துல் லத்தீப் விசாரணை அதிகாரிகள் முன்னிலையில் தடயவியல் நிபுணர்களிடம் பதிந்து கொடுத்தார்.சென்னை ஐ.ஐ.டி விடுதி அறையில் கடந்த 8 ஆம் தேதி இரவு முதுகலை மனிதநேயம் (Humanities) முதலாம் ஆண்டு பயிலும் மாணவி பாத்திமா லத்தீப் […]
சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு வந்த பெண்ணை தாக்கிய வழக்கில், முன் ஜாமின் கோரி தீட்சிதர் தாக்கல் செய்த மனுவுக்கு காவல் துறை பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சிதம்பரம் நடராஜர் கோயிலில் நவம்பர் 16ஆம் தேதி இரவு முக்குருணி விநாயகர் சந்நதியில் அர்ச்சனை செய்யக் கோரிய, பெண்ணை தீட்சிதர் தாக்கிய சம்பவம் இணைய தளங்களில் வைரலாகப் பரவியது.இது தொடர்பாக தீட்சிதர் மீது சிதம்பரம் காவல் துறை வழக்குப் பதிவு செய்தது. இந்த வழக்கில் தன்னை காவல் துறையினர் […]
வத்தலக்குண்டு தனியார் விடுதியில் நடத்தப்பட்ட சோதனையில், முறைகேடாக விடுதியில் தங்கியிருந்ததாக 6 ஜோடிகளை காவல் துறையினர் கைது செய்தனர். திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு, கொடைக்கானல் பகுதிகளில் சுற்றுலாப் பயணிகள் அதிகம் வந்து செல்லக்கூடிய இடம் என்பதால் சுமார் 15க்கும் மேற்பட்ட தனியார் விடுதிகள் அங்கு செயல்பட்டு வருகின்றன.இந்தத் தனியார் விடுதிகளில் முறைகேடாக ஆண்கள் சிலர் பெண்களுடன் தங்கி செல்வதாக காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, வத்தலக்குண்டு தனியார் விடுதிகளில் காவல் துறையினர் சோதனையில் ஈடுபட்டனர். […]
சவுகார்பேட்டையில் பஜ்ஜி சரியில்லை என்று கூறிய நபரை வட இந்திய ஊழியர் கத்தியால் வெட்டியுள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை வியாசர்பாடி எம்ஜிஆர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஞானமணி. இவர் சென்னை சவுகார்பேட்டை, கிருஷ்ண ஐயர் தெருவில் உள்ள எலக்ட்ரிக்கல் கடையில் டெலிவரி பாயாக 13 வருடங்களாக வேலை செய்து வருகிறார். இந்நிலையில் பணி முடிந்த பிறகு ஞானமணி தன் நண்பருடன் சவுகார்பேட்டை கோவிந்தப்ப நாயக்கர் தெருவில், அமைந்துள்ள அமர ராம் என்பவருக்குச் சொந்தமான டீ […]
தமிழ்நாட்டில் கூடுதலாக மூன்று மருத்துவக் கல்லூரிகள் தொடங்க, மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. இது குறித்து தமிழ்நாடு அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழ்நாட்டில் கூடுதலாக மூன்று மருத்துவக் கல்லூரிகள் தொடங்க, அனுமதி வழங்குமாறு மத்திய அரசிற்கு கோரிக்கை வைக்கப்பட்டது. இந்தக் கோரிக்கை பல நாட்களாக நிலுவையில் இருந்த நிலையில், தற்போது தமிழ்நாட்டில் கூடுதலாக நாகை, திருவள்ளூர், கிருஷ்ணகிரி ஆகிய மூன்று பகுதிகளில் மருத்துவக் கல்லூரி தொடங்க, மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நான், எனக்கு, என்னிடம்’ என்று மட்டுமே பேசுகிறீர்களே… இதில் நீங்கள் யாரை முன்னிலைப்படுத்துகிறீர்கள்? உங்களது பேச்சுகளில் ஈழத்தமிழர்களின் தியாகம், விடுதலைப் புலிகளின் வீரம், பிரபாகரனின் நிர்வாகத் திறன் என்று எதையுமே காணவில்லையே. அதைத்தானே இந்த தலைமுறையிடம் கொண்டுபோய் சேர்க்க வேண்டும். வணக்கம் சீமான், தமிழீழ தேசியத் தலைவர் பிரபாகரனின் பிறந்த நாளை முன்னிட்டு நேற்று நீங்கள் ஆற்றிய உரையைக் கேட்க நேர்ந்தது. அதில், “ இறுதிப் போர் சமயத்தில் ஈழம் சென்றிருந்தேன். சுற்றிலும் பீரங்கி ஷெல் அடித்துக் […]
பெட்ரோல் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டு இருந்த நிலையில் இன்று மாற்றமின்றி விற்பனை செய்யப்படுகின்றது. தொடர்ந்து அதிகரித்து வந்த பெட்ரோல் மற்றும் டீசல் விலை தீடிரென சரியத் தொடங்கியது. பின்னர் ஏற்றம் , இறக்கமாக இருந்து வருகின்றது . இதனால் வாகன ஓட்டிகள் தினம் தினம் என்ன விலை இருக்குமோ என்று சற்று குழம்பியே இருக்கின்றனர். ஒருநாள் அதிகமாகவும், ஒருநாள் குறைவாகவும், ஒருநாள் ஏற்ற இறக்கம் இல்லாமல் நிலையாகவும் இருந்து வருகின்றது. விலை நிர்ணயம் : […]
நாம் உண்ணும் உணவில் சேர்க்கப்படும் அத்தியாவசிய பொருளான வெங்காயத்தின் விலை சதமடித்துள்ளதால் மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் வெங்காயம் கிலோ 50 ரூபாய் முதல் அதிகபட்சமாக 100 ரூபாய் வரையும், சின்ன வெங்காயம் அதிகபட்சமாக 120 ரூபாய் வரையும் விற்பனை செய்யப்படுகிறது. சில்லறை விற்பனை கடைகளிலும், சூப்பர் மார்கெட்டிலும் கிலோ 150 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. வெங்காயத்தின் விலை கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் ஏற்றம் இறக்கம் கண்டுவருகிறது. தமிழ்நாடு […]
குரூப் 2 தேர்வு குறித்து கருத்துகளை பதிவு செய்யலாம் என தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது. இது குறித்து தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் செயலாளர் நந்தகுமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், குரூப் 2 மற்றும் 2ஏ ஆகிய பிரிவுகளில் அடங்கிய பணிகளுக்கு முதல் நிலைத்தேர்வு மற்றும் முதன்மைத் தேர்வு நடத்த முடிவு செய்து அதற்கான புதிய பாடத்திட்டம் மற்றும் தேர்வுத்திட்டம் ஆகியவற்றை தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டது. முதல் நிலைத்தேர்வில் தமிழ் மற்றும் ஆங்கிலப் பாட […]
இந்தியாவில் விவாதிக்கப்பட வேண்டிய பல பிரச்னைகள் உள்ள நிலையில் இ-சிகரெட் தடைச் சட்டம் குறித்து விவாதிப்பது சந்தேகத்தை ஏற்படுத்துவதாக திமுக மக்களவை உறுப்பினர் செந்தில்குமார் தெரிவித்தார். இதுகுறித்து அவர், “இ-சிகிரெட் காரணமாக பாதிக்கப்படுபவர்கள் 1.02 விழுக்காடு மக்கள் மட்டுமே, இந்த விவாதத்திற்கு என்ன அவசரம். தேசிய அளவில் பல பிரச்னைகள் உள்ளன. குறிப்பாக பெண்களுக்கு அதிகாரம் அளித்தல், குழந்தைகள் பாதுகாப்பு, மருத்துவம், அனைவருக்கும் சமமான அதிகாரம் அளித்தல் போன்ற பிரச்சினைகள் உள்ளன. இதற்கு தரவேண்டிய முக்கியத்துவத்தை விட […]
ஆண்டிபட்டி, பெரியகுளம் ஆகிய இரு வேறு இடங்களில் சிறுமிகளை பாலியல் தொந்தரவு செய்த இருவருக்கு தேனி மகிளா நீதிமன்றம் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளது. தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகேயுள்ள மணியகரான்பட்டியைச் சேர்ந்தவர் உதயகுமார் (34). இவர் 2017ஆம் ஆண்டு 9 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை தந்துள்ளார். இதுகுறித்து ஆண்டிபட்டி மகளிர் காவல் துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து உதயகுமாரை நீதிமன்றக் காவலுக்கு உட்படுத்தினர். இது தொடர்பான வழக்கு விசாரணை நடைபெற்று வந்த நிலையில், […]
தமிழக அரசு வெளியிட்டுள்ள அதிரடி அரசானையால் தனியார் பள்ளிகள் கதிகலங்கி உள்ளனர். தமிழக பள்ளிக்கல்வித்துறை பல்வேறு மாற்றங்களை தொடர்ந்து செய்து வருகின்றது. சமீப காலமாகவே அதிரடியான அறிவிப்புகளை பள்ளி கல்வித்துறை அறிவித்து மக்களின் செல்வாக்கை அதிகம் பெற்ற துறையாக பள்ளி கல்வித்துறை செய்யப்பட்டு வருகின்றது. புதிய பாடத்திட்டம் வந்தது முதல் 11_ஆம் வகுப்புக்கு பொது தேர்வு , 1200 மதிப்பெண் 600_ஆக குறைக்கப்பட்டது வரை பல மாற்றம் நிகழ்ந்துள்ளது. அதே போல இதுவரை பள்ளிகளில்வியின் 10,11,12_ஆம் வகுப்பு […]
சமீபத்தில் அரசால் கொண்டு வரப்பட்ட கால்நடை ஆம்புலன்ஸ் எண், தனக்கு தெரியவில்லை என்று கூறிய அமைச்சர் கருப்பணன், அந்த எண்ணை 109 என்று மாற்றுங்கள் என்று சக அமைச்சர்களிடம் கூறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்தை அடுத்த பகுத்தம்பாளையத்தில் காங்கேயம் கால்நடை ஆராய்ச்சி மையத்தின் புதிய கட்டடம் திறப்பு விழா நடைபெற்றது. இதில் கால்நடை பாரமரிப்புத் துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன், பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன், சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி. கருப்பணன் […]
மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் மழை பெய்து வருவதால், சதுரகிரி கோயிலுக்குச் செல்ல வனத்துறை தடை போட்டுள்ளதால், ஏராளமான பக்தர்கள் ஏமாற்றத்துடன் காத்திருக்கின்றனர். விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிப்புத்தூர் அருகே உள்ள சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயில் தரையிலிருந்து சுமார் 4500 அடி உயரத்தில் உள்ளது. இந்தக் கோயிலுக்கு பிரதோஷம் மற்றும் அமாவாசையை முன்னிட்டு, பக்தர்கள் நான்கு நாட்கள் செல்ல வனத்துறை அனுமதி அளித்திருந்தது. இந்நிலையில் பிரதோஷத்தை முன்னிட்டு, தமிழ்நாட்டின் பல்வேறு பகுதியிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகை தந்தனர். […]
பொங்கல் பண்டிகையை கொண்டாட குடும்பத்திற்க்கு தலா ரூ 1000 வழங்கப்படுமென்று முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்தார். விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் அருகே ரூ. 70 கோடி மதிப்பில் நகராட்சிக்கு சொந்தமான 4.97 ஏக்கர் நிலத்தில் கட்டப்பட்டுள்ள அரசு சட்டக்கல்லூரி, எம்ஜிஆர் அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி புதிய கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன. இந்த கட்டடங்களின் திறப்பு விழா, விழுப்புரம் நகராட்சி தொடங்கப்பட்டதற்கான நூற்றாண்டு விழா; புதிதாக உருவாக்கப்பட்டுள்ள கள்ளக்குறிச்சி மாவட்டத்தைத் தொடக்கி வைக்கும் விழா ஆகிய […]
திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க வேண்டும் என குஜராத் முன்னாள் டிஜிபி மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார். நாடாளுமன்ற கூட்டத் தொடரில், பங்கேற்றுள்ள பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதி உறுப்பினர் பாரிவேந்தர் பேசுகையில், திருவள்ளுவர் எழுதிய திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்கக் கோரிக்கை எதுவும் தமிழ்நாடு அரசிடமிருந்தோ அல்லது மற்ற அமைப்புகளிடம் இருந்து வரப்பெற்றதா எனவும், அவ்வாறு வந்திருந்தது எனில் அதுகுறித்த நடவடிக்கை என்ன என்றும் கேள்வி எழுப்பினார். இதற்குப் பதிலளித்து பேசிய மனித வள மேம்பாட்டுத் துறை […]
உள்ளாட்சித் தேர்தலில் மேயர், நகராட்சி, பேரூராட்சித் தலைவர் பதவிகளுக்கு மறைமுக தேர்தல் நடத்தப்படுவதை எதிர்த்து உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மறைமுக தேர்தல் முறையை ரத்து செய்யக்கோரி மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் முகமது ரஸ்வி என்பவர், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், ”தமிழ்நாட்டிலுள்ள 15 மாநகராட்சிகளுக்கான மேயர்கள், 276 நகராட்சிகள், 561 பேரூராட்சிகள் ஆகியவைகளுக்கான தலைவர்கள் நேரடி தேர்தல் மூலம் தேர்வு செய்யப்பட்டனர். இப்போது இப்பதவிகளுக்கு […]
மலைவாழ் மக்கள் மேம்பாட்டிற்காக ’வந்தன் விகா கேந்திரம்’ எனும் புதிய திட்டத்தை ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் ராஜலட்சுமி தொடங்கி வைத்துள்ளார். சென்னை, அண்ணா நகரில் மலைவாழ் மக்களுக்கான புதிய திட்ட தொடக்க விழா நடைபெற்றது. விழாவில் கலந்துகொண்ட ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் ராஜலட்சுமி, ’வந்தன் விகா கேந்திரம்’ எனும் புதிய திட்டத்தை தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‘மலைவாழ் மக்கள் மலைகளில் கிடைக்கும் வளங்களை விற்பனை செய்து பயனடையும் வகையில், ‘வந்தன் விகாஸ் கேந்திரம்’ […]
பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு 4ஜி சேவையை உடனடியாக மத்திய அரசு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி, சேலம் பிஎஸ்என்எல் ஊழியர்கள் உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொண்டனர். பிஎஸ்என்எல் தொலைத்தொடர்பு நிறுவனத்திற்கு 4ஜி சேவையை வழங்க வேண்டும், ஊழியர்களுக்கு உரிய தேதியில் மாதச் சம்பளம் வழங்க வேண்டும், ஒப்பந்த ஊழியர்களுக்கு நிலுவையிலுள்ள ஊதியத்தொகையை உடனடியாக வழங்க வேண்டும் உள்ளிட்ட 11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பிஎஸ்என்எல் தொலைத்தொடர்பு ஊழியர்கள் பல்வேறு போராட்டங்களை நாடு முழுவதும் நடத்தி வருகின்றனர். அதன் ஒருபகுதியாக, சேலம் […]
கடல் சீற்றத்தால் நடுக்கடலில் தத்தளித்த நான்கு மீனவர்களை சக மீனவர்கள் மீட்டனர். ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரத்திலிருந்து 800-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குச் சென்றனர். இவர்கள் அனைவரும் கச்சத்தீவு பகுதியில் மீன்பிடித்து கொண்டு இருந்தனர்.இதில் அலெக்ஸ் என்பவருக்குச் சொந்தமான விசைப்படகு கடல் சீற்றம் காரணமாக கடலில் மூழ்கியதால், விசைப்படகில் இருந்த நான்கு மீனவர்களும் கடலில் தத்தளித்தனர். இதையறிந்த மீனவர் சங்கத் தலைவர் தேவதாஸ், கடலில் தத்தளிக்கும் மீனவர்களை மீட்கக் கோரி இந்திய […]
காவல்துறை பெண் உயரலுவலரை நாற்காலியில் அமர வைத்து காவல் துறையினர் தூக்கிச்சென்றனர். புதுச்சேரியில் வடக்கு பகுதி சட்டம் ஒழுங்கு கண்காணிப்பாளராக பணியாற்றியவர் ரச்சனா சிங் (ஐ.பி.எஸ்). இவர் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு, புதுச்சேரி பிராந்தியமான ஏனாம் பகுதிக்கு கண்காணிப்பாளராக பணி மாற்றம் செய்யப்பட்டிருந்தார். இரண்டு வருடங்களாக இங்கு பணியாற்றி வந்த நிலையில் தற்போது ஏனாம் பகுதியிலிருந்து மீண்டும் புதுச்சேரிக்கு பணி மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில், ரச்சனா சிங்-ஐ ஏனாமில் இருக்கும் காவலர்கள் நாற்காலியில் அமரவைத்து அவருடைய […]
தமிழ்நாட்டிலிருந்து இரு திராவிடக் கட்சிகளும் அகற்றப்படவேண்டும் என கூறும் தமிழருவி மணியன் ஒரு தொகுதியில் நின்று வென்று விட்டு பேசட்டும் என அமைச்சர் ஓ.எஸ். மணியன் கூறினார். நாகை மாவட்டம் தலைஞாயிறு அருகே தனியார் பேருந்து விபத்தில் 25க்கும் மேற்பட்டோர் காயமடைந்து, அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். காயமடைந்தவர்களைச் சந்தித்து கைத்தறித்துறை அமைச்சர் ஓ.எஸ். மணியன் ஆறுதல் கூறினார். அதையடுத்து செய்தியாளர்களிடம் பேசுகையில், ‘ நடிகர் சங்கத் தேர்தலில் நியாயமான முடிவை ஏற்படுத்த முடியாத மூத்த […]