Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

இன்று உதயமாகும் கள்ளக்குறிச்சி மாவட்டம் – தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர்!

இன்று நடைபெறவுள்ள விழாவில் முதலமைச்சர் பழனிசாமி கலந்துகொண்டு கள்ளக்குறிச்சி மாவட்டத்தை தொடங்கி வைக்க உள்ளார். விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் அருகே ரூ. 70 கோடி மதிப்பில் நகராட்சிக்கு சொந்தமான 4.97 ஏக்கர் நிலத்தில் கட்டப்பட்டுள்ள அரசு சட்டக்கல்லூரி, எம்ஜிஆர் அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி புதிய கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன. இந்த கட்டடங்களின் திறப்பு விழா, விழுப்புரம் நகராட்சி தொடங்கப்பட்டதற்கான நூற்றாண்டு விழா; புதிதாக உருவாக்கப்பட்டுள்ள கள்ளக்குறிச்சி மாவட்டத்தைத் தொடக்கி வைக்கும் விழா ஆகிய […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

94 ரன்கள் தான்….. கஷ்டப்பட்டு சேஸ் செய்த தமிழ்நாடு…..!!

சையத் முஷ்டாக் அலி டி20 தொடரின் சூப்பர் லெக் சுற்றில் தமிழ்நாடு அணி நான்கு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இந்த ஆண்டுக்கான சையத் முஷ்டாக் அலி டி20 தொடரின் சூப்பர் லெக் சுற்றுப் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகின்றன. இதில், குரூப் பி பிரிவுக்கான இன்றைய போட்டியில் தமிழ்நாடு அணி, பஞ்சாப் அணியுடன் பலப்பரீட்சை நடத்தியது. இதில், டாஸ் வென்ற தமிழ்நாடு அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. அதன்படி, முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை […]

Categories
பல்சுவை

”ரூ 80_ஐ நோக்கி பெட்ரோல் விலை” திணறும் மக்கள் …!!

பெட்ரோல் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே செல்வதால் பொதுமக்கள் கவலை அடைந்துள்ளனர். தொடர்ந்து அதிகரித்து வந்த பெட்ரோல் மற்றும் டீசல் விலை தீடிரென சரியத் தொடங்கியது. பின்னர் ஏற்றம் , இறக்கமாக இருந்து வருகின்றது . இதனால் வாகன ஓட்டிகள் தினம் தினம் என்ன விலை இருக்குமோ என்று சற்று குழம்பியே இருக்கின்றனர். ஒருநாள் அதிகமாகவும், ஒருநாள் குறைவாகவும், ஒருநாள் ஏற்ற இறக்கம் இல்லாமல் நிலையாகவும் இருந்து வருகின்றது. விலை நிர்ணயம் : சர்வதேச சந்தை கச்சா […]

Categories
செய்திகள் சென்னை

கிறிஸ்தவ திருமணங்களை பதிவு செய்து சான்றிதழ் வழங்க உத்தரவு!

கிறிஸ்தவ திருமணங்களை பதிவு செய்து சான்றிதழ் வழங்க உத்தரவிடக் கோரிய மனுவிற்கு பதிலளிக்கும்படி தமிழக பதிவுத் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.‌ தமிழகம் முழுவதும் உள்ள பிஷப்புகளும் பாதிரியார்களும் இந்திய கிறிஸ்துவ சட்டத்தின்படி கிறிஸ்தவர்களுக்கு திருமணம் செய்து வைக்கின்றனர். இந்தத் திருமணங்களை பதிவு செய்து சான்றிதழ் வழங்க பதிவுத்துறைக்கு உத்தரவிடக் கோரி வேலூரைச் சேர்ந்த பிஷப் நோகா யோவனராஜ் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். ‌அந்த மனுவில், கிறிஸ்துவ திருமணங்களை பதிவு செய்ய பதிவுத்துறை […]

Categories
மாநில செய்திகள்

”பெண்ணை தாக்கிய தீட்சிதர்” பூஜை போட்ட நீதிமன்றம்…. ஜாமீனுக்கு ஆப்பு …!!

சிதம்பரம் நடராஜர் கோயிலில் பெண்ணை தாக்கிய வழக்கில் முன்ஜாமீன் கோரி தீட்சிதர் தாக்கல் செய்த மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. சிதம்பரம் நடராஜர் கோயிலில் நவம்பர் 16ஆம் தேதி இரவு முக்குருணி விநாயகர் சன்னதியில் அர்ச்சனை செய்யச் சென்ற பெண்ணை தீட்சிதர் தாக்கிய சம்பவம் இணையதளங்களில் வைரலாக பரவியது. இது தொடர்பாக தீட்சிதர் மீது சிதம்பரம் காவல்துறை வழக்குப்பதிவு செய்தது. இந்த வழக்கில் தன்னை காவல்துறையினர் கைது செய்யக் கூடும் எனக்கூறி, முன்ஜாமீன் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

”பதவி மமதையில்பேசுறாங்க” காலம் பதில் சொல்லும் – டிடிவி அதிரடி ….!!

பதவி மமதையில் தன்னைப் பற்றி அவதூறாகப் பேசும் முதலமைச்சர் பழனிசாமி உள்ளிட்ட அதிமுகவினருக்கு காலம் தக்க பாடம் புகுட்டும் என்று அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். தூத்துக்குடியில் நடந்த அமமுக அமைப்புச் செயலாளர் ஹென்றி தாமஸ் இல்ல திருமண விழாவில் பங்கேற்ற அக்கட்சியின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் செய்தியாளர்களைச் சந்தித்தார்.அப்போது, ‘துரோகத்திற்கு எடுத்துக்காட்டாக இருக்கும் எடப்பாடி பழனிசாமி பொய்யை உண்மையாக்கி பேசும் திறன் பெற்றவர். மாநகராட்சி மேயரை, கவுன்சிலர்கள் தான் தேர்ந்தெடுக்க வேண்டும் […]

Categories
மாநில செய்திகள்

அமைச்சர் தான் காரணம் …. ”15 நாள் சாமியாராக இருப்பார்” ….. கதறி அழுத நிர்மலா தேவி …!!

கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள பேராசிரியை நிர்மலா தேவி, நீதிமன்றத்தில் கதறி அழதபடி வெளியேறினார். அப்போது ஆளும் கட்சியை சேர்ந்த அமைச்சர் ஒருவர் மிரட்டுவதாக அவரின் வழக்கறிஞர் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்தார். விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை தனியார் கல்லூரி பேராசிரியை நிர்மலா தேவி. இவர் மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த வழக்கில் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார்.இந்த நிலையில் நிர்மலா தேவிக்கு நீதிமன்ற பிணை கிடைத்தது. தொடர்ந்து அவர் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டார். இதற்கிடையில் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

என்ன பேசுனாங்க….. எனக்கு தெரியாது ….. பொன் ராதாகிருஷ்ணன் பளிச் ….!!

குருமூர்த்தி, பன்னீர்செல்வம் என்ன பேசினார்கள் என்பது எனக்குத் தெரியாது என முன்னாள் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், ‘உள்ளாட்சித் தேர்தலில் தனித்துப் போட்டியா அல்லது கூட்டணியா என்பதை பாஜக தலைமைதான் முடிவு செய்ய வேண்டும். அதைப் பற்றி கருத்து சொல்ல முடியாது’ என்றார். தொடர்ந்து, ‘மகாராஷ்டிராவில் ஆட்சி அமைக்க ஒரு மாதம் காலம் அவகாசம் கொடுத்தும் காங்கிரஸ், சிவசேனா, […]

Categories
சினிமா தமிழ் சினிமா

1 கோடியா ? 2 கோடியா ? ஏதும் வேண்டாம்…. உதறித்தள்ளிய ரவுடி பேபி …!!

பிரேமம் திரைப்படத்தில் நாயகியாக அறிமுகமான பின்பு நல்ல கதாப்பாத்திரங்களில் நடித்து வருகிறார் நடிகை சாய் பல்லவி. தொடர்ந்து இவருக்கு நாளுக்கு நாள் ரசிகர்களும் பெருகிக்கொண்டே இருக்கின்றனர். இந்த ஆண்டு வெளிவந்த என்.ஜி.கே திரைப்படத்தைத் தொடர்ந்து எந்தப் படத்திலும் சாய் பல்லவியை காணவில்லை. இந்நிலையில் சாய் பல்லவி செய்த ஒரு காரியத்தை பலரும் பாராட்டி வருகின்றனர். ஒரு பிரபல ஆடை நிறுவனத்தின் விளம்பரத்தில் சாய் பல்லவி நடிப்பதற்கு மறுத்ததே பாராட்டுக்குக் காரணம். அந்நிறுவனம் ஒரு கோடி ரூபாய்க்கு ஒப்பந்தம் […]

Categories
கல்வி மாநில செய்திகள்

”தண்ணீ குடிச்சா கண்காணியுங்க” ஆசிரியருக்கு புது உத்தரவு …!!

பள்ளிகளில் மாணவர்கள் தண்ணீர் அருந்துவதை கண்காணிக்கவும், அதன் நன்மைகள் குறித்து எடுத்துக் கூறவும் ஆசிரியர்களுக்கு பள்ளி கல்வித்துறை அறிவுரை வழங்கியுள்ளது. பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் கண்ணப்பன் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:-குழந்தைகள் தின விழாவின் போது மாணவர்கள் போதுமான அளவு தண்ணீர் அருந்த அவகாசம் அளிக்கப்பட வேண்டுமென பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். எனவே காலை, மாலை சிறு இடைவேளை மற்றும் மதிய உணவு நேரங்களில் மாணவர்கள் போதுமான அளவு தண்ணீர் அருந்த அறிவுரை வழங்கவும், மேற்பார்வையிடவும் […]

Categories
மாநில செய்திகள்

கருணாநிதியால் கொண்டுவரப்பட்ட ’திருநங்கை’ என்ற சொல்லை மாற்றப் போகிறதா அரசு?

மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியால் கொண்டுவரப்பட்ட, திருநங்கை என்ற சொல்லை அனைத்து அரசு ஆவணங்களிலும் நீக்கிவிட்டு, மூன்றாம் பாலினத்தவர் என்று அரச மாற்றப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது. குடும்பத்தால் புறக்கணிக்கப்பட்டு அவல நிலையான வாழ்க்கையை திருநங்கைகள் வாழ்ந்து வருகின்றனர். சினிமாவிலும் நிஜத்திலும் கேலிக்குரிய பொருளாகவே அவர்கள் பாவிக்கப்பட்டனர். அவர்களை அங்கீகரித்து காட்சிகள் வைக்கும் படங்களும் சொற்பமே.இந்த சூழலில், சொல்லவே நா கூசும் இழி சொற்களைக் கொண்டு அவர்களை அழைக்கும் பெயர்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாகவும், அவர்களின் வாழ்க்கைத் தரத்தை […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

ஆழ்துளைக் கிணறுகளில் விழும் குழந்தைகளை மீட்க புதிய கருவி… கண்டுபிடித்து அசத்திய விவசாயி..!!

ஒட்டன்சத்திரத்தில் ஆழ்துளைக்கிணற்றில் தவறி விழும் குழந்தையைக் கால தாமதமின்றி 30 நொடிகளில் மீட்க புதிய கருவியைக் கண்டுபிடித்து, விவசாயி அசத்தியுள்ளார். திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே உள்ள ஸ்ரீரங்கன் புதூரைச் சேர்ந்தவர் முத்துக்குமார். இவர் விவசாயத்தை பிரதானத் தொழிலாக செய்து வருகிறார். தமிழ்நாட்டையே உலுக்கிய மணப்பாறை சிறுவன் சுஜித் ஆழ்துளைக் கிணற்றில் சிக்கி, உயிரிழந்த சம்பவத்தையடுத்து, குழந்தையைக் காப்பற்றும் விதமாக 30 நொடிகளில் குழந்தையின் கையைப் பிடித்து தூக்கும் இயந்திரத்தை கண்டுபிடித்துள்ளார். குறிப்பாக, மின்மோட்டார் மூலம் இயங்கும் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

ஆசிரியர் திட்டியதால் மாணவி தற்கொலை… பள்ளியின் தலைமை ஆசிரியைக் கைது!

11ஆம் வகுப்பு மாணவி தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் பள்ளியின் தலைமை ஆசிரியையைக் காவல் துறையினர் கைது செய்தனர். தூத்துக்குடி ஆரோக்கிய புரத்தைச் சேர்ந்தவர் அந்தோணி கருணாகரன். இவருடைய மனைவி செல்வி. இவர்களுக்கு மரிய ஐஸ்வர்யா (16) என்ற மகளும், தாம்ஆண்ட்ரூஸ் என்ற மகனும் உள்ளனர். இவர்களில் மரிய ஐஸ்வர்யா அரசு உதவி பெறும் வி.வி.டி நினைவு மேல்நிலைப் பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மாணவி ஐஸ்வர்யா, மாடியில் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

கந்தூரி விழாவில் 2,300 கிலோ தடபுடலான பிரியாணி… மதப் பாகுபாடின்றி அனைவருக்கும் வழங்கல்.!!

வேடசந்தூர் பெரிய பள்ளிவாசலில் நபிகள் நாயகம் பிறந்த நாளையொட்டி, நடைபெற்ற மாபெரும் கந்தூரி விழாவில், மதப் பாகுபாடின்றி அனைத்து மக்களுக்கும் பிரியாணி வழங்கப்பட்டது. திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் பெரிய பள்ளி வாசலில் வருடந்தோறும் ரபியுல் அவ்வல் மாதத்தில், நபிகள் நாயகத்தின் பிறந்த நாளையொட்டி கந்தூரி விழா நடைபெறுவது வழக்கம். இவ்விழாவில், வேடசந்தூர் இஸ்லாமிய மக்கள் அனைவரும் கூட்டாக நன்கொடை வழங்கி 2,300 கிலோ கிராம் அரிசியில் சமையல் செய்து, அனைத்து மத மக்களுக்கும் காலை முதலே பிரியாணி […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

பேத்தியின் பிறந்தநாள் விழாவிற்குச் செல்லும் போது விபத்து… பாட்டி உயிரிழந்த சோகம்.!!

புதுக்கோட்டையில் பேத்தியின் பிறந்த நாள் விழாவைக் கொண்டாட சென்ற தம்பதியினரின் இரு சக்கர வாகனம் விபத்துக்குள்ளானதில் பாட்டி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் புதூரைச் சேர்ந்தவர்கள் அடைக்கலம் (65), ராஜாமணி (50) தம்பதியினர். இருவரும் பேத்தியின் பிறந்தநாள் விழாவிற்காக புதூரில் இருந்து குறுக்கப்பட்டியில் உள்ள மகள் வீட்டிற்கு இரு சக்கர வாகனத்தில் சென்றுள்ளனர். அப்போது புல்வயல் – காந்துப்பட்டி பிரிவுரோடு அருகே சென்றபோது, அடைக்கலத்திற்கு திடீரென மயக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் நிலை தடுமாறிய அவரால், […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

இலங்கையில் இருந்து கடத்தி வரப்பட்ட அரிய வகை ஆமைகள்.!!

இலங்கையில் இருந்து கடத்தி வந்த அரிய வகை ஆமைகள், விமான நிலையத்தில் வைத்து பறிமுதல் செய்யப்பட்டது. இலங்கையிலிருந்து ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் நேற்று திருச்சி விமான நிலையம் வந்தது. இதில் வந்த பயணிகளை மத்திய வான் நுண்ணறிவுப் பிரிவு அலுவலர்கள் சோதனை செய்தனர். அப்போது ராமநாதபுரத்தைச் சேர்ந்த இரண்டு பயணிகள், தாங்கள் எடுத்து வந்த உடைமைகளில் ஆமைகளை மறைத்துக் கொண்டு வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவர்களிடமிருந்து ஆமைகள் பறிமுதல் செய்யப்பட்டு வனத்துறையிடம் ஒப்படைக்கும் பணியில் அலுவலர்கள் ஈடுபட்டுள்ளனர். ஆமைகளைக் […]

Categories
மாவட்ட செய்திகள் வணிக செய்திகள்

வெங்காயம் விலை சதம் அடித்தது – பொதுமக்கள் அதிர்ச்சி

கோயம்பேடு மார்க்கெட்டில் வெங்காயம் விலை சதம் அடித்துள்ளது. ஓரிரு நாட்களுக்கு முன்பு வெங்காயம் ரூ .70 முதல் ரூ .80 வரை விற்பனை ஆனது .ஆனால் தற்போது வெங்காயத்தின் விலையோ ஏறுமுகமாக உள்ளது . ஆந்திரா வெங்காயம் ரூ 60 முதல் 70ரூபாயாக உள்ளது சாம்பார் வெங்காயம் ரூ 80 முதல் ரூ.100 வரை விற்பனையாகிறது . கோயம்பேடு மார்க்கெட்டில் வெங்காயம் விலை ரூ .90 முதல் 100 வரை உயர்ந்துள்ளது .இதனால் தெருவோர கடைகள், சூப்பர் மார்க்கெட்களில் […]

Categories
பல்சுவை

உயர்ந்து கொண்டே செல்லும் பெட்ரோல்… கவலையில் வாகன ஓட்டிகள்..!!

பெட்ரோல் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே செல்வதால் பொதுமக்கள் கவலை அடைந்துள்ளனர். தொடர்ந்து அதிகரித்து வந்த பெட்ரோல் மற்றும் டீசல் விலை தீடிரென சரியத் தொடங்கியது. பின்னர் ஏற்றம் , இறக்கமாக இருந்து வருகின்றது . இதனால் வாகன ஓட்டிகள் தினம் தினம் என்ன விலை இருக்குமோ என்று சற்று குழம்பியே இருக்கின்றனர். ஒருநாள் அதிகமாகவும், ஒருநாள் குறைவாகவும், ஒருநாள் ஏற்ற இறக்கம் இல்லாமல் நிலையாகவும் இருந்து வருகின்றது. விலை நிர்ணயம் : சர்வதேச சந்தை கச்சா […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

700 கிலோ கிராம் பிரமாண்ட கிறிஸ்துமஸ் கேக்…..!!

பொள்ளாச்சி தனியார் சொகுசு விடுதியில் 500 கிலோ உலர் பழங்களைக் கொண்டு, 700 கிலோ கிராம் கிறிஸ்துமஸ் கேக் தயாரிக்கும் பணி நேற்று தொடங்கியது. பொள்ளாச்சி உடுமலை சாலையில் உள்ள ஒரு தனியார் சொகுசு விடுதியில் 500 கிலோ கிராம் எடையுள்ள உலர்ந்த பழங்களான திராட்சை, முந்திரி, பிஸ்தா, பாதாம், அத்தி உள்ளிட்டவைகளை ஒன்றாகச் சேர்த்து, அதனுடன் வெளிநாட்டு மதுபானங்களைக் கலந்து பிரத்யேக கிறிஸ்துமஸ் கேக் தயாரிக்கும் பணிகள் நேற்று தொடங்கின. இந்தப் பணியை பொள்ளாச்சி வருவாய் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

திருமாவுக்கு சடங்கு….. ”வைரலாகும் அழைப்பிதழ்”…. அதிரடி காட்டும் அர்ஜுன் சம்பத் …!!

விசிக தலைவர் திருமாவளவனை இந்து மதத்திலிருந்து விலக்கி வைக்கும் நிகழ்வு நடைபெற உள்ளதாக அச்சிடப்பட்டுள்ள பத்திரிக்கை இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்து கடவுள் சிலைகள் குறித்து அண்மையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் கூறிய கருத்துகள் தமிழ்நாட்டில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து அவருக்கு பல இந்து அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் தங்களது கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர். இந்தச் சூழலில், இந்து மக்கள் கட்சி சார்பில், கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோயிலில் நவம்பர் 26 […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

மனைவியை நிர்வாணப்படுத்தி சித்திரவதை செய்த சைக்கோ ஆட்டோ டிரைவர்!!!

தனது மனைவி என்றும் பாராமல் நிர்வாணப்படுத்தி கொடுமைப்படுத்தி வந்த சைக்கோ ஆட்டோ ஓட்டுநரை கைது செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. சேலம் மாவட்டம் அன்னதானப்பட்டி அருகேயுள்ள மணியனூர் பகுதியைச் சேர்ந்தவர் சண்முகம் (42). ஆட்டோ ஓட்டுநரான இவருக்கு மனைவி கனகா (32), மூன்று குழந்தைகள் உள்ளனர். பத்து வருடத்திற்கு முன்பு கனகாவும், சண்முகமும் திருமணம் செய்து கொண்டனர். கனகாவிற்கு 17 வயதாக இருந்தபோது அவரது பெற்றோர் இறந்து விட்டனர். பின்னர் பாட்டி வீட்டில் வசித்து வந்தார். […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள் வைரல்

டிக்டாக் ‘லைக்’களுக்கு ஆசைப்பட்டு ‘லைஃப்’பை தொலைத்த இரு பெண்கள்.!

 டிக் டாக்கில் நடிப்புத்திறமையைக் காட்டிய இரு தோழிகளை, விலைமாதர்களாகச் சித்தரித்து அதே டிக்டாக்கில் பரப்பியதால், தோழிகளில் ஒருவர் குடும்பத்தைப் பிரிந்து வீதியில் தவிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார். மதுரை மாவட்டம் ஒத்தக்கடையைச் சேர்ந்தவர்கள் மீனாட்சி, கயல் தோழிகளான இவர்கள் இருவரும் பாரம்பரிய உடையான சேலையுடன் டிக்டாக்கில் நடிப்புத்திறமையை வெளிக்காட்டி வந்துள்ளனர். இருவரும் டிக்டாக் செயலிக்கு அடிமையானதால் லைக்ஸ்காக அவ்வப்போது ஆன்மீகம், நையாண்டி, நகைச்சுவை போன்ற வீடியோக்களை பதிவிட்டதாகக் கூறப்படுகிறது. எதற்கும் பயன்படாத இந்த லைக்குகளுக்கு ஆசைப்பட்டு மீனாட்சியும், கயலும் […]

Categories
அரசியல்

அதிமுகவின் அடிப்படை சட்ட விதிகளில் திடீர் மாற்றம்!!!

அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழுக் கூட்டம் வானகரம் ஸ்ரீ வாரு மண்டபத்தில் அவைத்தலைவர் மதுசூதனன் தலைமையில் நடைபெற்றது. இதில் முதலமைச்சர், துணை முதலமைச்சர், அதிமுக செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள் என ஆயிரக்கணக்கான அதிமுகவினர் கலந்துகொண்டனர். இக்கூட்டத்தின் தொடக்கத்தில் இறந்தவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. பின்னர் தொடர்ச்சியாக 23 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தொடர்ச்சியாக அதிமுகவின் கலைப்பிரிவு, வர்த்தக அணி மற்றும் தொழிநுட்ப அணி ஆகியவை அமைப்பு சாரா அணிகளாகச் செயல்பட்டு வந்தன. இந்நிலையில் இன்று நடந்த கூட்டத்தில் இந்த அணிகள் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

”நீட் தேர்வில் இருந்து விலக்கு” அதிமுக அதிரடி தீர்மானம் ….!!

அதிமுக பொதுக்குழு, செயற்குழு கூட்டத்தில் நீட் தேர்வில் இருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு அளித்தல் உள்ளிட்ட 23 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. 2017ஆம் ஆண்டு கூடிய பொதுக்குழு, செயற்குழு: ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர் செல்வம் இணைப்புக்குப் பின் கடந்த 2017 செப்டம்பர் 12ஆம் தேதி அதிமுக பொதுக்குழு கூடியது. அப்போது நடைபெற்ற பொதுக்குழுவில், சசிகலாவுக்கு வழங்கப்பட்ட பொதுச்செயலாளர் பதவி ரத்து செய்யப்பட்டதுடன், சசிகலாவால் நியமிக்கப்பட்ட டி.டி.வி. தினகரனின் பதவி உள்ளிட்ட சிலரின், அதிமுக உறுப்பினர் பதவியும் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

தனியார் நிறுவன உரிமையாளர் கொலை… வடமாநிலத் தொழிலாளர்களுக்கு தொடர்பா?

தனியார் நிறுவன உரிமையாளர் கொலை வழக்கில் வடமாநில தொழிலாளர்களுக்கு தொடர்பு உள்ளதா? என்ற கோணத்தில் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சென்னை வியாசர்பாடி பெரியார் நகரை சேர்ந்தவர் பிரபாகரன்(27). இவர் அம்பத்தூர் தொழிற்பேட்டையில் சான் பிளாஸ்டிங் என்ற தனியார் நிறுவனத்தை நடத்தி வருகிறார். இந்நிலையில் பிரபாகரன் நேற்று நிறுவனத்திற்கு சென்றவர் வீடு திரும்பவில்லை. இதனால் அச்சமடைந்த அவரது தந்தை ஆனந்தன், பிரபாகரனை தேடி நிறுவனத்திற்கு சென்று பார்த்த போது நிறுவனம் பூட்டியிருந்தது. இதில் சந்தேகமடைந்த அவர், […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

தொடங்கியது அதிமுக பொதுக்குழு, செயற்குழுக் கூட்டம்!

அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழுக் கூட்டம் சென்னையை அடுத்த வானகரத்தில் உள்ள தனியாா் திருமண மண்டபத்தில் தொடங்கியது. அதிமுகவின் செயற்குழு – பொதுக்குழுக் கூட்டம் அவைத்தலைவர் மதுசூதனன் தலைமையில், வானகரம் ஸ்ரீவாரு திருமண மண்டபத்தில் இன்று காலை 10:45 மணிக்குத் தொடங்கியது. அதிமுகவில் பொதுக்குழு உறுப்பினா்கள் சுமாா் 2,500 போ் வரையிலும், செயற்குழு உறுப்பினா்கள் ஆயிரம் போ் வரையிலும் உள்ளனா். கூட்டத்தில் பங்கேற்க வரும்போது அழைப்பிதழ்களுடன் வர வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளதால், பொதுக்குழு மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் அழைப்பிதழ்களுடன் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

வெளிநாடுகளிலிருந்து காபி பவுடர் போல் கஞ்சா… விற்பனையாளர் கைது..!

வெளிநாடுகளிலிருந்து காபி பவுடர் என ஆன்லைன் மூலம் உயர் ரக கஞ்சாவை வரவழைத்து விற்பனை செய்து வந்த சென்னை இளைஞர் கைது செய்யப்பட்டார். அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து ஆகிய நாடுகளிலிருந்து காபி பவுடா், பதப்படுத்தப்பட்ட மூலிகைகள் என்ற பெயரில் உலர் கஞ்சா பவுடா், உலர் கஞ்சா இலைகள் ஆன்லைன் மூலமாக பார்சல்களில் சென்னைக்கு வந்தன. அடிக்கடி இவ்வாறு வெளி நாடுகளிலிருந்து வரும் பார்சல்களை தபால் துறை, புலனாய்வுத் துறையினர் சோதித்துள்ளனர். காற்று புகாத வகையில் மிக நேர்த்தியாக […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

ரயில் நிலையத்தில் திருட்டில் ஈடுபட்டவர் கைது… நகைகள் பறிமுதல்.!!

சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பயணிகளின் நகை, கைப்பேசிகளை திருடி வந்த இளம்பெண் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பயணிகளின் நகைகள், கைப்பேசிகள் திருடுபோவதாக சென்ட்ரல் ரயில்வே காவல் துறையினருக்குத் தொடர்ந்து புகார்கள் வந்து கொண்டிருந்தன. இதனால் ரயில்வே காவல் துறையினர் தனிப்படை அமைத்து தீவிர கண்காணிப்பில் ஈட்டுப்பட்டு வந்தனர். இந்த நேரத்தில் சென்ட்ரல் ரயில் நிலைய நடைமேடை எண் 6-ல் சந்தேகத்திற்கிடமாக சுற்றித் திரிந்த பெண் ஒருவரை பிடித்து விசாரணை செய்யும் போது திருப்பத்தூர் […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

“குழந்தை தொடர் அழுகை” மூச்சு திணற திணற கொடூரமாக கொன்ற தாய்…… வேலூரில் பரபரப்பு…!!

வேலூரில் குழந்தை தொடர்ந்து அழுது கொண்டே இருந்ததன் காரணமாக தாயே பெற்ற குழந்தையை கொடூரமாக மூச்சு திணற கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் பவித்ரா. இவருக்கு திருமணமாகி ஓராண்டு முடிந்த நிலையில், ஒரு வயது மதிக்கத்தக்க பெண் குழந்தை ஒன்று உள்ளது. இவரது குழந்தை பெயர் மௌனிகா. இவரது கணவர் நேற்றைய தினம் வேலைக்கு சென்றிருந்த சமயத்தில் வீட்டில் பவித்ரா அவரது குழந்தையுடன் வீட்டு வேலை […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

23 வயதில் 8 மனைவிகள்…… 8 மனைவி புகார்……. காதல் மன்னன் குறித்து வெளியான அதிர்ச்சி தகவல்….!!

தஞ்சாவூரில் 23 வயதான  இளைஞர் ஒருவர் 8 பெண்களை ஏமாற்றி திருமணம் செய்த சம்பவம் பெரும்  அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சந்தோஷ் வெறும் 23 வயதான இவர் இதுவரை எட்டு பெண்களை காதலித்து திருமணமும் செய்துள்ளார். இதுவரை திருமணம் செய்த 8 பெண்களுடனும் ஒருவருக்கு ஒருவர் தெரியாமல் மாறி மாறி வெளியூருக்கு வேலைக்கு செல்வதாக கூறி குடும்பம் நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் சந்தோஷ் கடைசியாக திருமணம் செய்த எட்டாவது பெண் அவரை நீண்ட நாட்களாக […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

புறா பிடிக்க சென்ற வாலிபர் திடீர் மரணம்…….. விசாரணையில் தீவிரம் காட்டும் போலீஸ்…!!

கரூர் மாவட்ட தான்தோன்றி மலை அருகே புறா பிடிக்க சென்றவர் எதிர்பாராதவிதமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம் ஓமலூர் பகுதியைச் சேர்ந்தவர் வேல்முருகன். இவர் கரூர் மாவட்டம் தந்தோந்ன்றி மலைப் பகுதியில் தங்கியிருந்து கொத்தனார் ஆக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் வேல்முருகனும் அவரது நண்பர் ராஜாவும் காட்டுப்பகுதிக்குள் புறா பிடிக்க சென்றுள்ளனர். அப்பொழுது அங்கே இருந்த மொட்டை கிணறு ஒன்றில் புறா ஒன்று இருந்துள்ளது. அதனை பிடிப்பதற்காக கயிறு கட்டி கிணற்றினுள் இறங்கியுள்ளார் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

“மீண்டும் அட்டகாசம்” கிராமத்தில் புகுந்து ஆட்டை தூக்கி சென்ற சிறுத்தை….. அச்சத்தில் கிராம மக்கள்….!!

பவானிசாகர் அருகே கிராமத்துக்குள் சிறுத்தை புகுந்து ஆடு ஒன்றை தூக்கிச் சென்ற சம்பவம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. பவானிசாகர் பகுதியை அடுத்த புதுக்கீனுர் கிராமம் வனப்பகுதியை ஒட்டி காணப்படும். இந்த கிராமத்திற்கு சென்ற மாதம் சிறுத்தை ஒன்று புகுந்து அட்டகாசம் செய்து வந்தது. மேலும்  கால்நடைகளை தாக்கி வேட்டையாடியும் வந்தது. இதையடுத்து வனத்துறை அதிகாரிகள் சிறுத்தையை கூண்டு வைத்து பிடித்து மீண்டும் வனப்பகுதிக்குள் விட்டனர். இந்நிலையில் மீண்டும் அதே சிறுத்தை வனப்பகுதிக்குள் இருந்து தப்பி கிராமத்திற்குள் மீண்டும் புகுந்தது. […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

தொழிலதிபரை கொல்ல ரூ50,00,000……. பெட்ரோல் குண்டு வீசிய கூலிப்படை…… தொழிலதிபர் மனைவி மரணம்….!!

பிரபல தொழிலதிபரை கொல்லும் முயற்சியில் பெட்ரோல் குண்டு வீசியதில் தீக்காயமடைந்த தொழிலதிபரின் மனைவி நேற்று மாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே உள்ள உத்தனப்பள்ளி பகுதியில் வசித்து வருபவர் ஆனந்தபாபு. இவரது மனைவி நீலிமா. இவர் அப்பகுதியில் அட்டை பெட்டி தயாரிக்கும் தொழிற்சாலையை நடத்தி வருகிறார். இவரும் இவரது மனைவியும் கடந்த 11ஆம் தேதி வழக்கம்போல் தொழிற்சாலைக்கு காரில் சென்றுள்ளனர். ஆனால் திரும்பும்பொழுது வேலை இருந்ததால் ஆனந்தபாபு மனைவியை மட்டும் வீட்டிற்கு போகுமாறு […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

“தாத்தா-பாட்டியுடன் தனிமை” கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை…… கடலூரில் சோகம்….!!

கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே கல்லூரி மாணவி திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டம் வேப்பூர் பகுதியை அடுத்த சித்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன். இவருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். இவரது மனைவி கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் இயற்கை மரணம் அடைந்து விட்டார். சுப்பிரமணியன் ஊட்டியில் உள்ள தனியார் கம்பெனி ஒன்றில் பணிபுரிந்து வருகிறார். அவரது  மூத்த மகள் பிஎஸ்சி நர்சிங் படிப்பை முடித்துவிட்டு சென்னை தனியார் மருத்துவமனை […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

“கனமழை” நீரில் மூழ்கிய 1500 வீடுகள்…… வேதனையுடன் தத்தளிக்கும் பொதுமக்கள்….!!

கடலூர் மாவட்டத்தில் கொட்டித் தீர்த்த கன மழையினால் சுமார் 1500 வீடுகள் நீரில் மூழ்கிய படி காட்சியளித்தன. வடகிழக்கு பருவமழை தொடங்கிய நாள் முதல் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கன மழை பொழிந்து வருகிறது. குறிப்பாக கடலோர மாவட்ட பகுதிகளில் அதிகளவில் கனமழை பெய்து வந்துள்ளது. இதனிடையே வெப்பச் சலனம் காரணமாக நேற்று காலை முதல் மாலை வரை கடலூர் சிதம்பரம் உள்ளிட்ட பகுதிகளில் கன மழை வெளுத்து வாங்கி வந்துள்ளது. இதனால் கடலூர் லாரன்ஸ் சாலையில் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

“அதிவேகம்” தனியார் பள்ளி வாகனம் மோதி 5 வயது சிறுவன் பலி……. ஓட்டுநர் கைது…!!

கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சி அருகே தனியார் பள்ளி வாகனம் மோதி சிறுவன் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டம் பொள்ளாச்சி பகுதியை அடுத்த பொங்காளி ஊரைச் சேர்ந்த தர்மராஜ் என்பவர் விவசாய தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி லாவண்யா. இவர்கள் இருவருக்கும் ஜஸ்வந்த் என்ற 5 வயது குழந்தை உள்ளது. இந்நிலையில் ஜஸ்வந்த் அதே ஊரில் உள்ள அங்கன்வாடியில் படித்து வருகிறார். இந்நிலையில் நேற்றைய தினம் மாலை நேரத்தில் ஜஸ்வந்த் தனது வீட்டு […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

“கோர விபத்து” கார் மீது ஏறிய லாரி…… 80 வயது முதியவர் உட்பட 2 பேர் பலி…… லாரி டிரைவருக்கு போலீஸ் வலைவீச்சு….!!

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் பகுதியில் கார் மீது லாரி ஏறியதில் முதியவர் உட்பட இரண்டு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் பகுதியை சேர்ந்தவர் சுந்தரம். இவரது வயது எண்பது. இவரும் பெரம்பலூரை சேர்ந்த ராஜராஜன் என்ற இளைஞரும் விருத்தாச்சலம் பகுதியில் இருந்து கும்பகோணம் நோக்கி காரில் சென்று கொண்டிருந்தனர். காரை ராஜராஜன் ஓட்டி வந்தார். இதையடுத்து அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் பகுதியை அடுத்த நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த பொழுது […]

Categories
பல்சுவை

உயர்ந்த பெட்ரோல்… குறைந்த டீசல்… இன்றைய விலை நிலவரம்.!

பெட்ரோல் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே செல்வதால் பொதுமக்கள் கவலை அடைந்துள்ளனர். தொடர்ந்து அதிகரித்து வந்த பெட்ரோல் மற்றும் டீசல் விலை தீடிரென சரியத் தொடங்கியது. பின்னர் ஏற்றம் , இறக்கமாக இருந்து வருகின்றது . இதனால் வாகன ஓட்டிகள் தினம் தினம் என்ன விலை இருக்குமோ என்று சற்று குழம்பியே இருக்கின்றனர். ஒருநாள் அதிகமாகவும், ஒருநாள் குறைவாகவும், ஒருநாள் ஏற்ற இறக்கம் இல்லாமல் நிலையாகவும் இருந்து வருகின்றது.   விலை நிர்ணயம் : சர்வதேச சந்தை […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

போலீசை கொடூரமாக கழுத்தில் தாக்கிய பிரபல ரவுடி கைது……. சென்னையில் பரபரப்பு….!!

சென்னையில் பிரபல ரவுடி கூறிய தகடு போன்ற பொருளால் காவல்துறை அதிகாரி ஒருவரை தாக்கியதில் அவருக்கு கழுத்தில் படுகாயம் ஏற்பட்டுள்ளது. சென்னை காசிமேடு சிங்காரவேலன் நகரை சேர்ந்தவர் பல்சர் பாபு. இவர் பிரபல ரவுடி ஆவார். இவர் மீது சென்னை மற்றும் ஆந்திர மாநிலத்தின் காளகஸ்தி புத்தூர் காவல் நிலையங்களில் திருட்டு வழக்குகள் உள்ளன. இந்நிலையில் சென்ற வாரம் நடைபெற்ற கொள்ளை வழக்கு தொடர்பாக பல்சர் பாபு கைது செய்யப்பட்டு புத்தூர் காவல் நிலையத்தில் வைத்து விசாரிக்கப்பட்டார். […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அசிங்கப்பட்ட அமைச்சர்கள்….! ஆத்திரமடைந்த ஸ்டாலின்….!

அரசு விழாக்களில் கலந்துகொண்ட திமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் நந்தகுமார், நா.கார்த்திக் ஆகியோர் தொடரந்து அதிமுகவினரால் எதிர்க்கப்பட்டதையடுத்து திமுக தலைவர் ஸ்டாலின், சர்வாதிகாரபோக்கை தொடரும் அதிமுக அமைச்சர்களுக்கு திமுக தக்க பாடம் கற்பிக்கும் என்று தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு வேலூர் மாவட்டம் அணைக்கட்டு சட்டப்பேரவை தொகுதிக்கான முதலமைச்சர் சிறப்பு மக்கள் குறை தீர்ப்பு கூட்டம் தமிழ்நாடு வணிகத்துறை அமைச்சர் கே.சி. வீரமணி தலைமையில் நடைபெற்றது. அப்போது இக்கூட்டத்தில் கலந்துகொண்டு தன் கோரிக்கைகளை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

எங்களுக்கே இப்படீன்னா… மக்களின் நிலை?.. அசிங்கப்பட்ட அமைச்சர்கள்… ஆத்திரமடைந்த ஸ்டாலின்.!!

அரசு விழாக்களில் கலந்துகொண்ட திமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் நந்தகுமார், நா.கார்த்திக் ஆகியோர் தொடரந்து அதிமுகவினரால் எதிர்க்கப்பட்டதையடுத்து திமுக தலைவர் ஸ்டாலின், சர்வாதிகாரபோக்கை தொடரும் அதிமுக அமைச்சர்களுக்கு திமுக தக்க பாடம் கற்பிக்கும் என்று தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு வேலூர் மாவட்டம் அணைக்கட்டு சட்டப்பேரவை தொகுதிக்கான முதலமைச்சர் சிறப்பு மக்கள் குறை தீர்ப்பு கூட்டம் தமிழ்நாடு வணிகத்துறை அமைச்சர் கே.சி. வீரமணி தலைமையில் நடைபெற்றது. அப்போது இக்கூட்டத்தில் கலந்துகொண்டு தன் கோரிக்கைகளை […]

Categories
மாநில செய்திகள்

கோயில் நிலங்களில் வசித்தவர்களுக்கு பட்டா வழங்கும் அரசாணைக்கு இடைக்காலத் தடை.!!

கோயில் நிலங்களில் 5 ஆண்டுகளுக்கும் மேல் வசித்தவர்களுக்கு பட்டா வழங்கும் அரசாணைக்கு, இடைக்காலத் தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அரசுப் புறம்போக்கு மற்றும் கோயில் நிலங்களில் ஐந்து ஆண்டுகளுக்கு மேல் வசித்தவர்களுக்கு பட்டா வழங்கப்படும் என்று கடந்த ஆகஸ்ட் 30ஆம் தேதி வருவாய்த் துறை சார்பாக தமிழ்நாடு அரசு அரசாணை பிறப்பித்தது. சட்டவிரோதமாக நிலங்களை ஆக்கிரமிப்பவர்களுக்கு உதவும் வகையில், இந்த அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதால், அரசாணையை ரத்து செய்யக்கோரி சேலத்தைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் என்பவர் உயர் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

”ராவணன் தமிழ்ச் சமூகத்தின் தலைவன்” – திருமாவளவன்.!!

ராவணன் தமிழ்ச் சமூகத்தின் தலைவன் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் கூறியுள்ளார். பாபர் மசூதி வழக்கில் உச்ச நீதிமன்ற தீர்ப்பு நியாயமற்றது என்றும்; அதை மறுஆய்வு செய்ய வலியுறுத்தியும் சென்னை சேப்பாக்கத்தில் பாசிச எதிர்ப்பு கூட்டமைப்பின் சார்பில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் தமிழர் தேசிய இயக்கத்தின் தலைவர் பழ.நெடுமாறன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன், மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா, தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன், […]

Categories
கல்வி மாநில செய்திகள்

என்ன கொடுமை டா இது…!… டீச்சருக்கே இப்படினா? படிக்குறவுங்க பாவம் தான் …!!

முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான தேர்வில் உயிர்வேதியியல் பாடத்தில் ஒருவர் கூட தேர்ச்சி பெறவில்லை என்பது தேர்வு முடிவுகளில் தெரியவந்துள்ளது. உயிர்வேதியியல் 1 பணியிடம் ,வேதியியல் பாடத்தில் 27, தாவரவியல், வணிகவியல் பாடத்தில் தலா 18 இடங்கள், ஆங்கிலம் 21 காலிப்பணியிடம், கணக்கு 24 காலிப்பணியிடம், உடற்கல்வி இயக்குநர் நிலை 1-ல் 5 பணியிடம், இயற்பியல் 20 பணியிடம், அரசியல் அறிவியல் 8 காலிப்பணியிடம், விலங்கியல் 11 காலி பணியிடம் என 157 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டதில் இருந்தே நிரப்புவதற்கு […]

Categories
புதுச்சேரி மாவட்ட செய்திகள்

”எஸ்.ஐ தூக்கிட்டுத் தற்கொலை” புதுவையில் பரபரப்பு …!!

நெட்டுப்பாக்கம் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணியாற்றியவர், காவல் குடியிருப்புக் கட்டடத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். புதுச்சேரி நெட்டுப்பாக்கம் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக விமல்குமார் பணியாற்றி வந்தார். வில்லியனூரில் வீடு கட்டி குடும்பத்துடன் வசித்து வந்த இவர், இன்று மதியம் காவல் நிலையத்திற்கு அருகே உள்ள காவலர் குடியிருப்புக் கட்டடம் அருகே தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. விமல்குமார் குடும்பப் பிரச்னையில் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது வேறு ஏதேனும் பிரச்னையா […]

Categories
திண்டுக்கல் மாநில செய்திகள்

குண்டு விளாயட வந்திருக்கோமா? தாசில்தாரை திட்டிய திண்டுக்கல் சீனிவாசன் …!!

தாசில்தார் செல்போனில் பேசியதைக் கண்டு நிகழ்ச்சி மேடையில் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கோபமடைந்த சம்பவம் அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் நத்தம் தொகுதியில் தமிழ்நாடு அரசின் சார்பில் குறைதீர்ப்பு கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நத்தம் பேருந்து நிலையம் அருகேயுள்ள அம்மா சமுதாயக் கூடத்தில் நடைபெற்றது.மாவட்ட ஆட்சித் தலைவர் விஜயலட்சுமி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கலந்துகொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். நிகழ்ச்சி மேடையில் அமைச்சர் […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

காதலுக்கு எதிர்ப்பு! தாயே மகளை கொளுத்திய கொடூரம்!

காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து பெற்ற மகளையே மண்ணெண்ணெய் ஊற்றி கொளுத்தி தானும் தற்கொலைக்கு முயன்ற தாய் நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் வாழ்மங்கலம் கிராமத்தைச் சேர்ந்த கண்ணன், உமா மகேஸ்வரி தம்பதியின் 17 வயது மகள் ஜ‌னனி. பதினொன்றாம் வகுப்பு இடைநின்று வீட்டிலிருந்த ஜன‌னி, அதே பகுதியைச் சேர்ந்த ராஜ் குமார் என்ற இளைஞரைக் காதலித்து வந்துள்ளார். ராஜ் குமார் பட்டியலினத்தைச் சேர்ந்தவர் என்பதால், இவர்களது காதலுக்குப் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால் இரண்டு முறை வீட்டை […]

Categories
கல்வி பல்சுவை மாநில செய்திகள்

இன்ப அதிர்ச்சி… ”இனி ஷூ, சாக்ஸ்” துள்ளிகுதிக்கும் மாணவர்கள் …!!

அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 6ஆம் வகுப்பு முதல் 10ஆம் வகுப்புவரை பயிலும் மாணவர்களுக்கு காலணிகளுக்கு பதில் ஷூ, சாக்ஸ் வழங்குவதற்கு வரும் கல்வியாண்டில் அனுமதியளித்து பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாட்டில் தனியார் பள்ளி மாணவர்களுக்கு நிகராக அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கான சீருடையை பள்ளிக்கல்வித்துறை மாற்றியது. அதேபோல் மாணவர்களுக்கு காலணிகள் கடந்த 2012- 13 ஆம் கல்வி ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்தில் தற்போது மாற்றம் கொண்டு […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

திமுக போராட்டத்தால் வந்த சோகம்…. 16 பேர் காயம் , ஒருவர் கவலைக்கிடம் …!!

திமுக ஆர்ப்பாட்டத்திற்கு வந்த வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் அக்கட்சியின் தொண்டர்கள் 16 பேர் பலத்த காயமடைந்தனைர். திருவண்ணாமலையில் நடைபெற்ற திமுக கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்ள காஞ்சி ரோடு, அன்வராபாத் கிராமப் பகுதி மக்கள் 18 பேர் மினி லாரியில் வந்தனர். திருவண்ணாமலை அருகேயுள்ள புனல்காடு பகுதியில் வந்தபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த வாகனம், நிலைதடுமாறி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் வாகனத்தில் பயணம் செய்த 16 பேர் படுகாயமடைந்தனர். இதனையடுத்து காயமடைந்தவர்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் திருவண்ணாமலை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

யூடியூபில் படம் காட்டி….. ”மாணவிகளுக்கு ஆபாச தூண்டல்”…… பள்ளியில் நடந்த அசிங்கம் ..!!

தனியார் பள்ளியில் பயிலும் மாணவிகளிடம் பள்ளி தாளாளர் ஒருவர் இழிவான செயலில் ஈடுபட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டம் காந்திபுரம் கிராஸ்கட் சாலையின் ஐந்தாவது வீதியில் தனியார் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர் அரசு உதவி பெறும் இந்தப் பள்ளியில் மரிய ஆண்டனி என்பவர் கல்வி தாளாளராக பணியாற்றி வருகிறார். இவர் பள்ளி மாணவிகளிடம் தவறாக நடந்து கொள்வதாக புகார் வந்த நிலையில், ஒன்பதாம் வகுப்பு […]

Categories

Tech |