நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசனுக்கு நாளை அறுவை சிகிச்சை நடைபெறவுள்ளது. இதுதொடர்பாக மக்கள் நீதி மய்யம் கட்சியின் துணைத் தலைவர் மகேந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘கடந்த 2016ஆம் ஆண்டு எதிர்பாராமல் நடந்த விபத்தின் காரணமாக கமல்ஹாசனின் வலது காலில் முறிவு ஏற்பட்டது. அப்போது அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு அவரது காலில் டைட்டானியம் கம்பி பொருத்தப்பட்டது. அரசியல் மற்றும் சினிமாவில் அவருக்கு இருந்த தொடர் வேலைப்பளு காரணமாக அக்கம்பியை அகற்றுவதற்கான சூழல் அமையாமல் தள்ளிப் […]
Tag: Tamilnadu
நடிகர் சதீஸ் தனது திருமண அழைப்பிதழை தமிழ்நாட்டின் முதலமைச்சர், துணை முதலமைச்சருக்கு வழங்கினார். காமெடி நடிகர் சதீஷ் ‘தமிழ் படம்’ மூலம் அறிமுகமாகி பல்வேறு படங்களில் நடித்து வருகிறார். இவர், கத்தி, ரெமோ, ஆம்பள, தமிழ் படம் 2, உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். இவர் காமெடி நடிகராக மட்டும் அல்லாமல், கிரேஸி மோகனுடன் எட்டு வருடங்களாக திரைக்கதை எழுத்தாளராகப் பணியாற்றியுள்ளார். சினிமாவில் அறிமுகமாகி பல வெற்றிப் படங்களில் நடித்திருந்தாலும், நீண்ட நாட்களாக மணப்பெண் தேடியும் கிடைக்காமல் […]
சென்னை கொடுங்கையூரில் இருசக்கர வாகனம் மீது குப்பை லாரி மோதிய விபத்தில் தலைமைக் காவலர் உயிரிழந்தார். சென்னை மகாகவி பாரதியார் நகர் காவல் நிலையத்தில் நுண்ணறிவுப் பிரிவு மற்றும் தலைமை காவலராக பணிபுரிந்து வருபவர் பழனிக்குமார். மதுரை மாவட்டத்தைப் பூர்வீகமாகக் கொண்ட பழனிக்குமார் சென்னை மவுண்ட் காவலர் குடியிருப்புப் பகுதியில் தனது மனைவி விமலா, மூன்று பெண் குழந்தைகளுடன் வசித்து வந்தார். இந்த நிலையில் பழனிக்குமார் தனது பணியை முடித்துக்கொண்டு நள்ளிரவு 12:30 மணியளவில் வீட்டிற்குச் செல்வதற்காக […]
தனது அரசியல் சுய லாபத்திற்காகப் புலிகளின் பெயரைக் கொச்சைப்படுத்துவதா? என்று திமுகவுக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘விடுதலைப் புலிகளால் சோனியா காந்தியின் உயிருக்கு அச்சுறுத்தல் இருக்கிறது’ எனப் நாடாளுமன்றத்தில் திமுக எம்.பி. டி.ஆர்.பாலு பேசியிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவர் சோனியா காந்திக்கு வழங்கப்பட்ட (SPG) சிறப்புப் பாதுகாப்புப் படையின் உயரியப் பாதுகாப்பு ரத்து செய்யப்பட்ட விவகாரம் தொடர்பான விவாதத்தில் டி.ஆர்.பாலு […]
கோத்தபய ராஜபக்ச இலங்கை அதிபராகப் பொறுப்பேற்றிருப்பது ஈழத்தமிழர்களுக்கும் தமிழ்நாட்டுத் தமிழர்களுக்கும் பேராபத்தை ஏற்படுத்தக்கூடியது என்றும் கோத்தபய இந்தியா வருவதை கடுமையாக எதிர்ப்போம் என்றும் மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி தெரிவித்துள்ளார். திப்பு சுல்தானும், இந்திய சுதந்திரப்போரும் என்ற தலைப்பில் தஞ்சையில் நடைபெற்ற கருத்தரங்கில் மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி கலந்துகொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “இலங்கையில் தமிழர்களை கொன்று குவித்த கோத்தபய ராஜபக்சவும், மகிந்த ராஜபக்சவும் அதிகாரத்திற்கு வந்திருப்பது தமிழர்களுக்கு […]
இது இரு கட்சிகளுக்கு இடையிலான பிரச்னை மட்டும் இல்லை. லட்சக்கணக்கான ஏக்கர் பஞ்சமி நிலங்கள் எப்படி, சிட்டிசன் திரைப்படத்தில் வரும் அத்திப்பட்டி கிராமம் போல் காணாமல் போயின என்பதைக் கண்டறியும் பொறுப்பு அரசுக்கு இருக்கிறது. வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்து சமீபத்தில் வெளியான அசுரன் திரைப்படம் பார்த்துவிட்டு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், அசுரன் படம் மட்டுமல்ல பாடம். பஞ்சமி நில உரிமை மீட்பை மையமாக வைத்து சாதிய சமூகத்தைச் சாடும் – சாதி […]
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் ஏடிஎம்மில் பணம் எடுக்க உதவுவதாக கூறி பெண்ணிடம் இருந்து பத்தாயிரம் ரூபாயை நூதன முறையில் திருடிச் சென்ற நபரை காவல்துறையினர் கைது செய்தனர். விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே செல்வி என்ற பெண் கடந்த 15 ஆம் தேதி நேரு வீதியில் உள்ள ஸ்டேட் வங்கி ஏடிஎம்மில் பணம் எடுக்கச் சென்றுள்ளார். அப்பொழுது ஏடிஎம் அறையில் இருந்து நின்று கொண்டிருந்த நபர் ஒருவர் இயந்திரத்தில் பணம் இல்லை ஆனால் கணக்கில் எவ்வளவு இருக்கிறது […]
ராஜிவ் கொலை வழக்கில் சிறையில் உள்ள ராபர்ட் பயாஸூக்கு 30 நாட்கள் பரோல் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ராஜிவ் கொலை வழக்கில் சிறையில் உள்ள ராபர்ட் பயாஸூக்கு 30 நாள் பரோல் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மகன் தமிழ்கோவிற்கு திருமண ஏற்பாடுகளுக்காக ராபர்ட் பயாஸ் பரோல் கோரியிருந்தார்.இந்நிலையில் ஊடகங்களுக்கு பேட்டி அளிக்கக் கூடாது, அரசியல் கட்சித் தலைவர்களுடன் பேசக்கூடாது உள்ளிட்ட நிபந்தனைகளுடன் பயாஸுக்கு பரோல் வழங்கப்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டையில் திருமண மண்டபத்திலிருந்து ஒரு லட்சம் ரூபாய் மதிப்புள்ள கேமராவை திருடி சென்றவனை சிசிடிவி காட்சிகளை கொண்டு காவல்துறையினர் தேடி வருகின்றனர். கடந்த நவம்பர் 16ஆம் தேதி நடைபெற்ற திருமண விழா ஒன்றில் பதிவு செய்ய வந்த மாதேஷ் என்ற கேமரா மேன் அதிகாலை கேமராவுடன் கூடிய தனது தோல் பையை மண்டபத்திற்குள் வைத்துவிட்டு, தனது உதவியாளருடன் இயற்கை உபாதையை கழிக்க சென்றுள்ளார். இதனை நோட்டமிட்ட மண்டபத்தில் இருந்த இளைஞன் ஒருவன் கேமரா வைத்திருந்த […]
உலகிலேயே பாதுகாப்பான நகரமாக சென்னையை மாற்ற பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்கவேண்டுமென காவல்துறை கூடுதல் ஆணையர் தினகரன் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டார். அம்பத்தூர் காவல் மாவட்டத்திற்கு உட்பட்ட அம்பத்தூர், நசரத்பேட்டை, குன்றத்தூர், ஆவடி, திருநின்றவூர் ஆகிய பகுதிகளில் 12 நவீன ஏ.என்.பி.ஆர் கண்காணிப்பு கேமராக்கள், ஆயிரத்து 629 (1,629) கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளது. அதனை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரும் நிகழ்ச்சி போரூரில் நடைபெற்றது. இதில், கூடுதல் கமிஷனர் தினகரன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு கண்காணிப்பு கேமராக்களை தொடங்கி […]
தமிழ்நாடு தலைமைத் தகவல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ள ஆர். ராஜகோபால் ஐ.ஏ.எஸ் குறித்து இங்கே காண்போம்… தமிழ்நாடு தலைமைத் தகவல் ஆணையராக இருந்த ஷீலா பிரியா வயது மூப்புக் காரணமாக ஓய்வு பெற்றதை அடுத்து, ஆளுநரின் செயலராக இருந்த ஆர். ராஜகோபால், தலைமைத் தகவல் ஆணையராக அண்மையில் நியமிக்கப்பட்டுள்ளார். * ஆர்.ராஜகோபால் ஐ.ஏ.எஸ் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர். * 1984ஆம் ஆண்டு பேட்ச் ஐ.ஏ.எஸ் அதிகாரியாக பணி நியமனம் செய்யப்பட்டார் ; தமிழ், ஆங்கிலம், சமஸ்கிருதம் பயின்றவர். * மனைவி […]
மதுரையில் கருப்பு பணத்தை வெள்ளையாக மாற்ற வட்டியில்லா பணம் தருவதாக கூறி பலரிடம் லட்சக்கணக்கில் மோசடி செய்த பெண் ஒருவர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. மதுரை tpm நகரில் உள்ள பாண்டியன் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த செல்வி என்பவர், அரசியல்வாதிகள் சிலரின் பினாமி என்று தனது அறிமுகம் செய்து கொண்டுள்ளார். மேலும் அவர்களின் கருப்பு பணம் தன்னிடம் இருப்பதாகவும், அதனை வெள்ளையாக மாற்றவே வட்டியில்லாமல் கடன் கொடுப்பதாகவும் அவர் கூறியதாக சொல்லப்படுகிறது. இதையடுத்து ஒரு லட்சம் […]
ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட பெண்ணின் வயிற்றில் உடைந்த ஊசியை வைத்து தைத்து விட்டதாக புகார் எழுந்துள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி அடுத்த மரவட்டி வலசை பகுதியைச் சேர்ந்த கார்த்திக் இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த ரம்யா என்ற பெண்ணுக்கும் கடந்த ஓராண்டுக்கு முன்பாக திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் கருவுற்ற ரம்யா அப்பகுதிக்கு அருகாமையில் உள்ள உச்சிபுளி ஆரம்ப சுகாதார நிலையத்தில் தனது பிரசவத்திற்கான சிகிச்சையை தொடர்ச்சியாக பதிவு […]
விருதுநகர் மாவட்டம் முத்துராமலிங்கபுரம் அருகே முறையாக தலைக்கவசம் அணியாமல் சென்றதாக கூறப்படும் காவலர் நிலைதடுமாறி கீழே விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டம் எம் ரெட்டியாபட்டி காவல் நிலையத்தில் தனிப்பிரிவு காவலராக பணியாற்றி வந்த சாம் பிரேம் ஆனந்த் என்ற காவலர் முத்துராமலிங்கபுரம் அருகே இருசக்கர வாகனத்தில் வந்த கொண்டிருந்த பொழுது நாய் ஒன்று குறுக்கே வந்ததாக கூறப்படுகிறது. இதில் நிலைதடுமாறி சாலையில் வைக்கப்பட்டிருந்த தடுப்பில் மோதியதில் பலத்த காயம் ஏற்பட்டு, மருத்துவமனைக்கு கொண்டு […]
உள்ளாட்சித் தேர்தலில் அனைத்து கட்சிகளும் தனித்துப் போட்டியிட்டு, யாருக்குப் பலம் அதிகம் என்று பார்த்துவிடலாம் என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அனைத்து கட்சிகளுக்கும் சவால் விடுத்துள்ளார். விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே விவசாயப் பாசனத்திற்காக பிளவக்கல் பெரியாறு அணையை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி திறந்துவைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”ரஜினி – கமல் இணைந்தாலும் அவரது ரசிகர்கள் இணைய மாட்டார்கள். ரசிகர்கள் மத்தியில் பல பிரச்னைகள் உள்ளன. ரஜினி, கமல் ஒரு முடிவு எடுத்தால், மக்கள் […]
நடிகர் விவேக் தமிழ்நாட்டில் உள்ள வெற்றிடம் குறித்து, தனது பாணியில் நகைச்சுவையாக பதிலளித்துள்ளார். நடிகர் விவேக் நேற்று தனது 58-ஆவது பிறந்த நாளை கொண்டாடினார். அதன் ஒரு பகுதியாக நீலகிரி மாவட்டம் கோத்தகிரி தனியார் பள்ளியில் மரம் நடும் நிகழ்ச்சிக்கு நடிகர் விவேக் தலைமை தாங்கினார். அப்போது தனது பிறந்த நாளை பள்ளி மாணவ-மாணவிகளின் முன்னிலையில் கேக் வெட்டி கொண்டாடினார். பிறகு அதிக மழை தரக்கூடிய சோலை மரக்கன்றுகளை நட்டார். பின் மாணவ மாணவியரிடம் உரையாடிய பின், […]
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்த கணவன் தானும் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் பகுதியை அடுத்த கொடியும் புதூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன். இவர் தனது முதல் மனைவி இறந்த உடன் இரண்டாவதாக வண்ணமயில் என்பவரை திருமணம் செய்து கொண்டுள்ளார். இவர்கள் இருவருக்கும் இரண்டு மகள்கள் உள்ள நிலையில் தனக்கு சொந்தமான நிலத்தை முதல் மனைவி மகளுக்கு சுப்பிரமணி எழுதி வைத்தால் இரண்டாவது மனைவி […]
தமிழகத்தில் உள்ள கவுரவ விரிவுரையாளர்களை சிறப்பு தேர்வு மூலம் உதவிப் பேராசிரியர்களாக நியமிக்க உயர் கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. தமிழகம் முழுவதும் இருக்கக்கூடிய அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் கவுரவ விரிவுரையாளர்கள் கிட்டத்தட்ட 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பணியாற்றுகிறார்கள். அதாவது கவுரவ விரிவுரையாளர்களாக பணியாற்றி வரும் 4054 பேரை நிரந்தரப்படுத்த வேண்டும், இவர்களுக்கான ஊதியத்தை யுஜிசி விதிகளின்படி உயர்த்தி வழங்க வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை ஆசிரியர் சங்கங்கள் முன்வைத்து வருகின்றன. குறிப்பாக 10 ஆண்டுக்கு மேலாக கவுரவ […]
விவசாயிகள் சிறப்பு குறை தீர்க்கும் கூட்டத்தில் அவர்களின் குறைகளை கேட்டறியாமல் அலுவலர்கள் சிலர் தொடர்ந்து செல்ஃபோன் பயன்படுத்தியதால் விவசாயிகளிடையே சலசலப்பு ஏற்பட்டது. திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் மேல்மலை, கீழ்மலைக் கிராமங்களில் வசிக்கும் மக்களில் பெரும்பாலானோருக்கு விவசாயமே முக்கியத் தொழிலாக இருந்து வருகிறது. மாதந்தோறும் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டத்தில் கொடைக்கானல் சார்ந்த விவசாயிகள் கலந்து கொள்ள முடியவில்லை என்பதால், கொடைக்கானலில் குறை தீர்க்கும் கூட்டம் நடத்திட வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டது. […]
அம்பத்தூர் ஏரியில் நச்சு கலந்த நீரில் உள்ள மாசினால் மீன்கள் செத்து மிதக்கின்றன. சென்னை மாநகராட்சி மண்டலம் ஏழுக்கு உட்பட்ட அம்பத்தூர் ஏரி சுமார், 200 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்து அமைந்துள்ளது. இந்த ஏரியில் முழு அளவு நீர் நிரம்பினால் கூட, 0.04 டி.எம்.சி. தண்ணீர் மட்டுமே இருப்பு இருக்கும். தற்போதுள்ள 0.04 டிஎம்சி நீரிலும் முக்கால் வாசி கழிவுநீர் கலந்து இருப்பதுதான் கொடுமை. இந்த ஏரியை சுற்றியுள்ள திருமுல்லைவாயல், அம்பத்தூர், அயப்பாக்கம் ஐ.சி.எப். காலனி […]
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் உமா மகேஸ்வரி, அதிமுக மகளிரணிச் செயலாளர் போல் செயல்படுகிறார் என கூறிய திருமயம் சட்டமன்றத் தொகுதி திமுக எம்.எல்.ஏ ரகுபதி மீது காவல் துறையினர் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர். புதுக்கோட்டையில் கடந்த 17ஆம் தேதி கூட்டுறவு வார விழா நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் அதிமுக எம்.எல்.ஏக்கள் பெயரையும், அமைச்சர்கள் பெயரையும் அழைப்பிதழில் அச்சடித்து நிகழ்ச்சி நடைபெற்றது. அதனைக் கண்டித்து முன்னாள் அமைச்சரும் திருமயம் தொகுதி திமுக எம்.எல்.ஏ ரகுபதி பேசும்போது, […]
அம்பத்தூர் தொழிற்பேட்டையில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் பெங்களூரு பெண்களை பாலியல் தொழிலில் ஈடுபட வைத்த இருவரை காவல்துறையினர் கைது செய்தனர். சென்னை அம்பத்தூர் தொழிற்பேட்டை அருகே மண்ணூர்பேட்டையிலுள்ள தனியார் அடுக்குமாடிக் குடியிருப்பில் பாலியல் தொழில் நடைபெறுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்ற அம்பத்தூர் தொழிற்பேட்டை காவல்துறையினர், அடுக்குமாடிக் குடியிருப்பில் இருந்த ஒரு வீட்டை சோதனை செய்தனர். அதில் மருதுராஜ் (35), பிரபாகரன் (35) ஆகிய இருவரும் பெங்களூருவிலிருந்து மூன்று […]
தனி மனிதத் தாக்குதல்கள் மற்றும் அவதூறு நிகழ்த்தப்படுவது சிலருக்குப் பண்பாடாகவே இருக்கிறது என்று இயக்குநர் பா.ரஞ்சித், திருமாவளவனுக்கு ஆதரவாக குரல் கொடுத்திருக்கிறார். புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சனாதன கல்விக்கொள்கை எதிர்ப்பு மாநாடு சமீபத்தில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் கலந்துகொண்டு பேசிய அக்கட்சியின் தலைவர் திருமாவளவன், அயோத்தி தீர்ப்பை விமர்சித்து பேசியது பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.திருமாவளவனின் இந்த பேச்சுக்கு பல்வேறு இந்து அமைப்புகளும் தொடர்ந்து கண்டனக்குரல் எழுப்பி வருகின்றனர். அவர் மீது பல்வேறு காவல் நிலையங்களில் இந்து […]
தேனிலவுக்காக சிம்லா சென்ற புது மாப்பிள்ளை, பாராசூட் சாகசத்தில் ஈடுபட்டபோது காற்றின் வேகத்தில் அதன் கயிறு அறுந்ததால் பள்ளத்தாக்கில் சிக்கி உயிரிழந்தார். சென்னை அமைந்தகரையைச் சேர்ந்தவர்களான அரவிந்த், பிரீத்தி ஆகியோருக்கு கடந்த பத்தாம் தேதி திருமணம் நடைபெற்றது. திருமணம் முடிந்த சில தினங்களில் புது தம்பதி தேன் நிலவுக்காக சிம்லா சென்றுள்ளனர். சிம்லாவில் சில இடங்களைச் சுற்றிப்பார்த்த தம்பதி, பாராக்ளைடிங் எனப்படும் பாராசூட் சாகசத்தில் ஈடுபட்டுள்ளனர். இருவரும் தனித்தனியாக பாராசூட்டில் சாகசம் மேற்கொண்டுள்ளனர். இருவரின் பாராசூட்டிலும் தலா […]
மலேசியாவின் சிலாங்கூர் மாகாண அமைச்சர் முகமது கைருதீன் தமிழ்நாட்டின் பாரம்பரிய உடையான வேட்டி, சட்டை அணிந்து, விவசாயப் பணிகளை செய்து அசத்தியுள்ளார். திருவள்ளூர் மாவட்டம் ஆத்தூர் பகுதியில் உள்ள விவசாய நிலங்களை மலேசியாவின் சிலாங்கூர் மாகாணத்தின் விளையாட்டுத்துறை மற்றும் மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் முகமது கைருதீன் பார்வையிட்டார்.அப்போது தமிழ்ப் பாரம்பரிய முறைப்படி வேட்டி, சட்டை உடை அணிந்து வந்த அவர், உறி அடித்தும், மாடுகளை வைத்து ஏறு பூட்டியும் அசத்தினார். இதில் முத்தாய்ப்பாக தமிழ் மக்களுடன் இணைந்து […]
சமூக வலைதளங்களில் முன்பின் தெரியாதவர்களிடம் ‘friend request ,chatting’ போன்றவற்றில் ஈடுபட வேண்டாம் என மாணவர்களுக்கு சென்னை மாநகரக் காவல் ஆணையர் விஸ்வநாதன் வேண்டுகோள் விடுத்துள்ளார். குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமை தடுப்பு நாளையொட்டி நடைபெற்ற நிகழ்ச்சியில், சென்னை மாநகரக் காவல் ஆணையர் ஏ.கே. விஸ்வநாதன், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத் தடுப்புப்பிரிவு துணை ஆணையர் ஜெயலட்சுமி ஆகியோர் கலந்துகொண்டு ‘போக்சோ’ சட்டம் தொடர்பான விழிப்புணர்வு துண்டறிக்கைகளை பள்ளி குழந்தைகளுக்கு வழங்கினர். பின்னர், நிகழ்ச்சியில் பேசிய சென்னை […]
தமிழக முதல்வர் தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெற்று வருகின்றது. தமிழக அமைச்சரவை கூட்டம் செப்டம்பர் 7 _இல் நடைபெற்று முடிந்தது.இந்த நிலையில் ஒரு வாரத்திற்கு பிறகு மீண்டும் இன்று கூடி இருக்கிறது.இதில் பல்வேறு கொள்கை ரீதியான முடிவுகள் எடுக்கப்பட இருக்கின்றது . உள்ளாட்சித் தேர்தல் அடுத்த மாதத்தில் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்த நிலையில் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. இந்த கூட்டத்தில் உள்ளாட்சித் தேர்தலில் நேரடியாக மேயர் , நகராட்சி , பேரூராட்சி தலைவர்களை தேர்ந்தெடுக்கும் முறையை […]
ஐ.சி.எப் தொழிற்சாலை ஊழியர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை பட்டாபிராம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜாமணி (55). இவர் ஐ.சி.எப் இரயில் பெட்டித் தொழிற்சாலையில் சீனியர் டெக்னீசியனாக பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கு 2 மகன்கள், ஒரு மகள் உள்ளனர். உடல்நிலை சரியில்லாததால் நீண்ட நாட்களாக விடுமுறையில் இருந்த இவர், நேற்று முன்தினம் (நவ.17) பணிக்கு திரும்பினார். இந்நிலையில், தொழிற்சாலையின் அறையில் ராஜாமணி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதைப் பார்த்த சக ஊழியர்கள் அதிர்ச்சியடைந்தனர். […]
முறை மாப்பிள்ளையாக அறிமுகமாகி வெள்ளித்திரையில் தடம் பதித்து வெற்றிநடைபோடும் பாக்ஸர் நாயகனுக்கு இன்று 42ஆவது பிறந்தநாள்…! விடா முயற்சியால் போராடி வெள்ளித்திரையில் முத்திரை பதித்து பயணித்துக்கொண்டிருப்பவர் இளம் நடிகர் அருண் விஜய். தொட்டது துலங்கும் என்ற வாசகத்தை 24 ஆண்டு கால போராட்டத்திற்கு பின் நிரூபித்துக் காட்டியிருப்பவர் இந்த கலையுலக நட்சத்திரம். நடிகர் விஜய குமாரின் மகனாகப் பிறந்து இன்று தமிழ் சினிமா உலகை திரும்பிப் பார்க்கச் செய்திருக்கிறார். தந்தையால் சினிமா உலகில் அரங்கேறினாலும் தந்தையை மிஞ்சிய […]
தமிழ்நாடு அமைச்சரவை இன்று கூடவிருக்கிறது. இதில் உள்ளாட்சித் தேர்தல் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழ்நாட்டில் உள்ளாட்சித் தேர்தல் விரைவில் நடைபெறவிருக்கிறது. இதற்கான பணிகளில் தமிழ்நாடு அரசியல் கட்சிகள் முனைப்பு காட்டிவருகின்றன. மேலும், இந்தத் தேர்தலில் எப்படியாவது வெற்றி பெற்றுவிட வேண்டுமென்று அதிமுக தீவிரம் காட்ட தொடங்கியுள்ளது. மேலும், இது தொடர்பாக தமிழ்நாடு அமைச்சர்களும் மேடைகளிலும் செய்தியாளர் சந்திப்பிலும் பேசிவருகின்றனர். இந்நிலையில், முதலமைச்சர் பழனிசாமி தலைமையில் இன்று தமிழ்நாடு அமைச்சரவைக் கூட்டம் […]
திருமாவளவனை அவதூறாக சித்தரித்து சமூக வலைதளங்களில் புகைப்படம் பதிவிட்ட அதிமுக பிரமுகரை கைது செய்யக்கோரி, பூந்தமல்லி காவல்நிலையத்தில் விசிக-வினர் புகார் அளித்தனர். விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவரும், சிதம்பரம் தொகுதி எம்.பியுமான திருமாவளவன் சமீபத்தில் நடைபெற்ற மகளிர் மாநாட்டில் இந்து ஆலயங்கள் குறித்து பேசியது சர்சைக்குள்ளானது. இதற்கு இந்து அமைப்புகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், இது குறித்து திருமாவளவன் விளக்கம் அளித்திருந்தார். இந்த நிலையில், சென்னை அடுத்த பூந்தமல்லியில் வசிக்கும் அதிமுக […]
உள்ளாட்சித் தேர்தல் விரைவில் நடபெற சூழல் உருவாகி உள்ளது. இதில் அதிமுக கூட்டணியில் உள்ள தேமுதிக 3 மேயர் இடங்களை கேட்டுள்ளதாகவும், அதற்கு அதிமுக தயக்கம் காட்டி வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. உள்ளாட்சித் தேர்தல் ஜு ரம் தமிழ்நாட்டை தொற்றிக் கொண்டுள்ளது. மாநில தேர்தல் ஆணையம் உள்ளாட்சி தேர்தலை நடத்த 90 சதவீதம் தயாராகி விட்டது. அதேபோல அரசியல் கட்சிகளும் தொண்டர்களிடம் விருப்ப மனுக்கள் வாங்கி விட்டன. இருபெரும் கட்சிகளான அதிமுகவும், திமுகவும் கூட்டணி வைத்தே […]
அஜித்தின் ‘விஸ்வாசம்’ திரைப்படத்தின் வசூல் சாதனையை நடிகர் விஜய்யின் ‘பிகில்’ திரைப்படம் முறியடித்துள்ளது. விஜய் – அட்லி கூட்டணியில் வெளியான மூன்றாவது திரைப்படம் ‘பிகில்’. தீபாவளி ரிலீசாக கடந்த 25ஆம் தேதி உலகமெங்கும் வெளியிடப்பட்ட இந்தப் படம் ஒரே சமயத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியானது. ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிப்பில் வெளியான இத்திரைப்படத்தில் நயன்தாரா, யோகிபாபு, கதிர், ஆனந்தராஜ், ஜாக்கி ஷெராஃப் உள்ளிட்ட பல்வேறு நட்சத்திரங்களும் நடித்திருந்தனர். பெண்கள் கால்பந்தை மையமாக வைத்து […]
பயணங்கள் தொடரும்…! அடடே ஓ.பி.எஸ்.!
பத்து நாட்கள் அரசு முறை பயணமாக அமெரிக்கா சென்றிருந்த துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சென்னை திரும்பினார். துணை முதலமைச்சரும் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளருமான ஒ.பன்னீர்செல்வம், 10 நாட்கள் அரசுமுறை பயணமாக அமெரிக்கா சென்றிருந்தார். அவருடன் அவரது மகனும் தேனி நாடாளுமன்ற உறுப்பினருமான ஓ.ரவீந்திரநாத்தும் சென்றிருந்தார். இந்நிலையில் ஒ.பன்னீர்செல்வம் சென்னை திரும்பினார். சென்னை விமான நிலையத்திற்கு வந்த ஓபிஎஸ்ஸூக்கு கட்சி தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த ஓ.பன்னீர்செல்வம் பேசியதாவது:- கடந்த 10 […]
பெட்ரோல் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே செல்வதால் பொதுமக்கள் கவலை அடைந்துள்ளனர். தொடர்ந்து அதிகரித்து வந்த பெட்ரோல் மற்றும் டீசல் விலை தீடிரென சரியத் தொடங்கியது. பின்னர் ஏற்றம் , இறக்கமாக இருந்து வருகின்றது . இதனால் வாகன ஓட்டிகள் தினம் தினம் என்ன விலை இருக்குமோ என்று சற்று குழம்பியே இருக்கின்றனர். ஒருநாள் அதிகமாகவும், ஒருநாள் குறைவாகவும், ஒருநாள் ஏற்ற இறக்கம் இல்லாமல் நிலையாகவும் இருந்து வருகின்றது. விலை நிர்ணயம் : சர்வதேச சந்தை […]
ஆதிதிராவிட நலத்துறையை பட்டியல் சாதிகள் நலத்துறை என அறிவிக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் 76 இனங்களை பட்டியல் இனத்தவர்கள் எனக் கண்டறிந்து, அவர்களுக்காக ஆதிதிராவிடர் நலத்துறை ஏற்படுத்தப்பட்டது. இந்த ஆதிதிராவிடர் நலத்துறையின் பெயரை, பட்டியல் சாதிகள் நலத்துறை என அறிவிக்கக் கோரி சென்னையை சேர்ந்த மாரிமுத்து என்பவர் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார். அதில், பட்டியல் இனத்தவர்களுக்கான நலத்துறையின் பெயர், தவறாக மொழிபெயர்ப்பு செய்யப்பட்டிருப்பதாகவும், ஆதிதிராவிடர் என்பது பட்டியலினங்களில் உள்ள 76 […]
முக்கடல் சங்கமத்தில் ஐயப்ப பக்தர்கள் சீசனை முன்னிட்டு பக்தர்கள் பாதுகாப்பாகக் குளிப்பதற்காக பேரூராட்சி நிர்வாகம் சார்பில் பாதுகாப்பு மிதவை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சபரிமலை ஐயப்ப பக்தர்கள் சீசன் நேற்று தொடங்கி, வரும் 2020 ஜனவரி மாதம் 17ஆம் தேதி வரை 60 நாட்கள் நடைபெறுகிறது. இந்த சீசனில் லட்சக்கணக்கான ஐயப்ப பக்தர்கள் கன்னியாகுமரிக்கு வருகை தருகின்றனர். இங்கு வருகை தரும் ஐயப்ப பக்தர்கள் முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமத்தில் நீராடி பகவதியம்மனை வழிபட்டுச் செல்கின்றனர். இதையொட்டி, பக்தர்கள் […]
ராணிப்பேட்டையில் குற்றங்களை குறைக்க பொது மக்களும் இளைஞர்களும் காவல் பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள் என காவல் கண்காணிப்பாளர் மயில்வாகணன் தெரிவித்துள்ளார். வேலூர் மாவட்டத்திலிருந்து புதிதாக உருவாக்கப்பட்டுள்ள ராணிப்பேட்டை மாவட்டத்திற்கு புதிதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மயில்வாகணன் நியமிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து, இன்று அவர் வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பொறுப்பேற்றுக் கொண்டார். இதைத்தொடர்ந்து, ராணிப்பேட்டை மாவட்ட காவல் அலுவலர்கள், புதிய மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர். அப்போது பேசிய மயில்வாகணன், ராணிப்பேட்டையில் குற்றங்களைக் குறைக்க பொதுமக்களும் இளைஞர்களும் […]
மாநில அளவிலான கியூப் போட்டியில் சென்னையைச் சேர்ந்த மாணவர் முதல் பரிசை வென்றார். கியூப் விளையாட்டானது மனிதர்களின் மூளையையும் கைகளையும் வேகமாக செயல்பட வைத்து உடலையும் சுறுசுறுப்பாக வைப்பது மட்டுமின்றி, முடிவுகளை சரியாக எடுக்கவும் உதவும். இந்நிலையில், மாநில அளவிலான கியூப் போட்டி விருதுநகர் மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளியில் நடைபெற்றது. இதில், சென்னை, மதுரை, தூத்துக்குடி, திருநெல்வேலி, விருதுநகர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்து 98 மாணவ, மாணவிகள் மிகுந்த ஆர்வத்துடன் கலந்துகொண்டனர். இந்த போட்டியில், சென்னையைச் […]
தனியார் திருமண மஹாலில் பாட்டாளி மக்கள் கட்சியின் மாவட்ட பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் பேசிய பாமக தலைவர் ஜி.கே. மணி, ஆன்லைன் வர்த்தக முறை என்பது தேவையற்ற ஒன்று, கண்டனத்துக்குரியது என தெரிவித்தார். பாமக தலைவர் ஜி.கே. மணி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது, ‘இந்த உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாட்டாளி மக்கள் கட்சி போட்டியிட்டு எங்கள் கூட்டணி அதிகமான இடங்களில் மிகப்பெரிய வெற்றிபெறும் என்ற நம்பிக்கை இருக்கிறது. அதற்கு சான்றுதான் சமீபத்தில் நடந்து […]
எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலினுக்கு அரசைக் குறை கூறுவதைத் தவிர வேறு எந்த வேலையும் இல்லை என அமைச்சர் நிலோபர் கபில் கூறியுள்ளார். தமிழ்நாடு கட்டுமான மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்கள் நலவாரிய உறுப்பினர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா சென்னை ஷெனாய் நகரில் இன்று நடைபெற்றது. இதில் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர் கபில் கலந்துகொண்டு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில், ” எம்.ஜி.ஆர் முதலமைச்சராக இருந்த காலத்திலிருந்து இன்றுரை […]
சினிமாவில் சிகரெட்டை தூக்கிப் பிடித்து நடிப்பவர்களை எல்லாம் மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என ரஜினி, கமல் குறித்து கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் விமர்சித்தார். நாகை மாவட்டம் குத்தாலம் தாலுகாவில் தமிழ்நாடு முதலமைச்சரின் சிறப்பு குறை தீர்க்கும் திட்டத்தின் கீழ் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. விழாவில் மாவட்ட ஆட்சியர், கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் கலந்துகொண்டு 821 பயனாளிகளுக்கு ரூ. 3.55 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினர். […]
பலனை எதிர்பார்க்காமல் கடமையை செய்துவந்த சின்னப்பொன்னு நாய்க்கு ஏற்பட்ட அவலநிலை பற்றி விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு… பரபரப்பான சென்னை மாநகரின் சென்ட்ரல் அருகே உள்ள பூங்கா ரயில் நிலையத்திற்கு வந்து செல்லும் ஆயிரக்கணக்கான பயணிகளுக்கு மத்தியில் தன் நண்பர்களான ரயில்வே காவல் துறையினர் மற்றும் தமிழ்நாடு காவல் துறையினருடன் தன் கடமையை செவ்வனே செய்து வந்தாள் சின்னப்பொன்னு… ஆனால் அவளுக்கு இப்படி ஒரு கொடுமை நிகழும் என எதிர்பார்த்திருக்க மாட்டாள்… அங்கிருந்து வலுக்கட்டாயமாக அடித்து இழுத்துச் […]
தமிழ்நாட்டில் நிச்சயமாக வெற்றிடம் உள்ளது என பாஜக மூத்தத் தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். சுதந்திர போராட்ட வீரர் வஉசி-யின் நினைவு தினத்தை முன்னிட்டு பாஜக மூத்தத் தலைவரும், மத்திய முன்னாள் அமைச்சருமான பொன். ராதாகிருஷ்ணன் திருநெல்வேலி டவுனில் உள்ள வஉசி மணிமண்டபத்தில் அமைந்துள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் பொன். ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “தமிழ்நாட்டில் எம்ஜிஆர், ஜெயலலிதா, காமராஜருக்கு நிகரான வெற்றிடம் […]
ரஜினியுடன் அழகிரி இணைந்து அமர்ந்திருக்கும் சுவரொட்டிகளை மதுரை முழுவதும் ஒட்டி மு.க. அழகிரியின் ஆதரவாளர்கள் பரபரப்பை கிளப்பியுள்ளனர். தமிழ்நாட்டில் அரசியல் வெற்றிடம் இருப்பதாகவும், அதனை நடிகர் ரஜினிகாந்த் நிரப்புவார் எனவும் அண்மையில் செய்தியாளர்களுக்கு மு.க. அழகிரி பேட்டியளித்தார். இந்நிலையில், மதுரை தெருக்களில் அவரின் ஆதரவாளர்களால் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டி அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ‘எல்லாரும் எல்லாமும் பெற வேண்டும்’ என பெரிய எழுத்துகளில் இந்த சுவரொட்டியில் வாசகங்கள் இடம் பெற்றுள்ளன. ரஜினியும் அழகிரியும் அருகருகே அமர்ந்து பேசுவது […]
மாணவி ஃபாத்திமா தற்கொலை விவகாரத்தில் யாரைப் பாதுகாக்க முயற்சி நடக்கிறது என்று திமுக மக்களவை உறுப்பினர் கனிமொழி மக்களவையில் கேள்வியெழுப்பியுள்ளார். சென்னை ஐஐடியில் படித்த மாணவி ஃபாத்திமா லத்தீப், கடந்த எட்டாம் தேதி விடுதி அறையில், தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். இதற்கு முதலில், தேர்வில் மதிப்பெண் குறைந்ததால் தான் மாணவி தற்கொலை செய்தார் என்று கூறப்பட்டிருந்தாலும், பின் அவரின் அலைபேசி குறிப்புகள் மூலம் பேராசிரியர்கள் கொடுத்த மன அழுத்தம்தான் காரணம் என்று தெரிய வந்தது. தற்போது, […]
வேலூர் மக்களவைத் தொகுதியில் திமுக வேட்பாளராகப் போட்டியிட்டு, வெற்றி பெற்ற கதிர் ஆனந்த் மக்களவை உறுப்பினராக இன்று பதவியேற்றுக் கொண்டார். திமுக பொருளாளர் துரைமுருகனின் மகனும் வேலூர் மக்களவைத் தொகுதி உறுப்பினராக அண்மையில் தேர்ந்தெடுக்கப்பட்டவருமான கதிர் ஆனந்த் இன்று மக்களவையில் பதவிப்பிரமாணம் மேற்கொண்டார்.2019ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகளில், வேலூர் தொகுதியில் பணப்பட்டுவாடா புகார் எழுந்ததன் காரணமாக மே மாதத்தில் தேர்தல் நடைபெறவில்லை. பின்னர் வேலூரில் ஆகஸ்ட் மாதம் தேர்தல் நடத்தப்பட்டது. அந்த […]
டிசம்பர் 2-ல் உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான தேதி அறிவிப்பாணை வெளியிடப்படும் என்று மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் எப்போது நடைபெறும் என்று அனைவரும் எதிர்பார்த்து கொண்டுள்ளனர். அதிமுக சார்பில் விரைவில் தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்ட்டது இதையடுத்து டிசம்பர் 13 ஆம் தேதிக்குள் உள்ளாட்சி தேர்தல் தொடர்பான விவரங்களை அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும் என்று தமிழக தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் டிசம்பர் 2 ஆம் தேதி உள்ளாட்சித் தேர்தல் […]
’உங்கள் நான்’ நிகழ்ச்சியில் பேசிய இயக்குநர் எஸ்.ஏ. சந்திரசேகர், கமலும் ரஜினியும் இணைந்தால் தமிழ்நாட்டிற்கும் தமிழர்களுக்கும் நல்லது நடக்கும் என்று கூறினார். தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத ஆளுமையாக திகழ்பவர் நடிகர் கமல் ஹாசன். இவரின் 60 ஆண்டுகால திரைப்பயணத்தை சிறப்பிக்கும் விதமாக, ‘உங்கள் நான்’ என்ற விழா சென்னையில் நேற்று நடைபெற்றது. இவ்விழாவில், ரஜினிகாந்த், இளையராஜா, ஏ.ஆர். ரஹ்மான், விஜய் சேதுபதி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். விழாவில் நடிகர் விஜய்யின் தந்தையான எஸ்.ஏ. சந்திரசேகர் கமல் குறித்து […]
பெட்ரோல் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே செல்வதால் பொதுமக்கள் கவலை அடைந்துள்ளனர். தொடர்ந்து அதிகரித்து வந்த பெட்ரோல் மற்றும் டீசல் விலை தீடிரென சரியத் தொடங்கியது. பின்னர் ஏற்றம் , இறக்கமாக இருந்து வருகின்றது . இதனால் வாகன ஓட்டிகள் தினம் தினம் என்ன விலை இருக்குமோ என்று சற்று குழம்பியே இருக்கின்றனர். ஒருநாள் அதிகமாகவும், ஒருநாள் குறைவாகவும், ஒருநாள் ஏற்ற இறக்கம் இல்லாமல் நிலையாகவும் இருந்து வருகின்றது. விலை நிர்ணயம் : சர்வதேச சந்தை […]