Categories
அரசியல் மாநில செய்திகள்

நாளை மறுநாள் தமிழ்நாடு அமைச்சரவைக் கூட்டம்..!!

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நாளை மறுநாள் செவ்வாய்க்கிழமை அமைச்சரவை கூட்டம் கூடவுள்ளது. நீண்ட காலமாக தமிழ்நாட்டில் நடைபெற இருந்த உள்ளாட்சித் தேர்தல் வரும் டிசம்பர் மாத்திற்குள் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சூழலில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) காலை 11 மணிக்கு சென்னை தலைமைச் செயலகத்தில் அமைச்சரவைக் கூட்டம் கூடவுள்ளதாக அரசு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்தக் கூட்டத்தில் உள்ளாட்சித் தேர்தல், சென்னை காற்று மாசுபாடு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

என்னைத் தேடி நீங்கள் வரவேண்டாம்… உங்களை தேடி நான் வருகிறேன்: நாகை எஸ்.பி அதிரடி.!!

என்னைத் தேடி நீங்கள் வரவேண்டாம், உங்களை தேடி நான் வருகிறேன் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அறிவிப்பு பலகை வைத்து புகார் மனு வாங்கும் செயல் பொதுமக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது. நாகப்பட்டினம் மாவட்ட புதிய காவல் கண்காணிப்பாளராக செல்வநாகரத்தினம் கடந்த 7ஆம் தேதியன்று பொறுப்பேற்றுக்கொண்டார். இவர் வாரநாட்களில் புகார் அளிக்க வரும் பொதுமக்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தின் முதல் தளத்தில் உள்ள அவரது அறையில் சந்தித்து வருகிறார். இந்நிலையில், அலுவலகத்திற்கு புகார் கொடுக்க வரும் முதியவர்கள், […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

அம்பத்தூர் அருகே சோகம்… டெங்கு காய்ச்சலுக்கு 4 வயது சிறுமி பலி.!!

அம்பத்தூர் அருகே டெங்கு காய்ச்சல் பாதித்து நான்கு வயது சிறுமி பலியானது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அம்பத்தூர் அடுத்த புதூர் அன்பழகன் தெருவைச் சேர்ந்தவர் செல்வராஜ். தனியார் நிறுவனத்தில் வேலை செய்து இவருக்கு மனைவி மற்றும் மூன்று பெண் பிள்ளைகள் உள்ளனர். இதில் மூன்றாவது பிள்ளையான கேத்ரினுக்கு(4) கடந்த சில தினங்களாக டெங்கு காய்ச்சல் பாதித்ததால் போரூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்துள்ளார். இந்நிலையில் அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் கேத்ரீன் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். இந்த […]

Categories
மாநில செய்திகள்

21_க்குள்ள முடிவெடுங்க …. 15 நாளில் திறங்க…. எச்சரிக்கும் செந்தில் பாலாஜி …!!

நவம்பர் 21ஆம் தேதிக்குள் பேருந்து நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்கவிட்டால் திமுக சார்பில் போராட்டம் நடத்தப்படும் என சட்டப்பேரவை உறுப்பினர் செந்தில் பலாஜி தெரிவித்துள்ளார். கரூர் மாவட்டம் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள உழவர் சந்தையில் திமுக சார்பில் பொதுக்குழு தீர்மான விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது.இந்நிகழ்ச்சியில், அரவக்குறிச்சி சட்டப்பேரவை உறுப்பினர் செந்தில் பாலாஜி, திமுக துணை பொதுச்செயலாளர் பெரியசாமி, திமுக நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் என பலர் கலந்துகொண்டனர். அப்போது, சட்டப்பேரவை உறுப்பினர் செந்தில் பாலாஜி […]

Categories
மாநில செய்திகள்

பால் பாக்கெட் தூக்கி ஏறியப்படும்.. ”யாருக்கும் பலன் இல்லை”….மாத்தி யோசிங்க …..!!

பால் பாக்கெட்டுகளில் திருக்குறளை அச்சிடுவதை விட பொது மக்கள் தினசரி செல்லும் இடங்களில் திருக்குறளை பதிவு செய்ய தமிழ்நாடு அரசு முன்வரவேண்டும் என தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார். விருதுநகர் மாவட்டத்திற்கு வருகை தந்திருந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் செய்தியாளர்களிடம் பேசுகையில், சென்னை ஐஐடி மாணவி பாத்திமா பேராசிரியர்கள் அளித்த மன உளைச்சலால் காரணமாக தற்கொலை செய்து கொண்டுள்ளார். இது போன்ற நிகழ்வு சென்னை ஐஐடி மட்டுமல்லாது நாடு முழுவதும் உள்ள உயர்கல்வி நிறுவனங்களிலும் நடைபெறுகிறது. […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

”முழுமையாக வேலை கொடுங்க” சர்க்கரை ஆலை ஊழியர்கள் போராட்டம்…!!

ஆம்பூர் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் பணிபுரிந்த தற்காலி ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். வேலூர் மாவட்டம் ஆம்பூர் அருகே உள்ள வடபுதுப்பட்டு கிராமத்தில் 1961ஆம் ஆண்டு அப்போதைய முதலமைச்சர் காமராஜர் அவர்களால் தொடங்கப்பட்ட ஆம்பூர் கூட்டுறவு சர்க்கரை ஆலை தொடர்ந்து இயங்கி வருகிறது. இங்கு ஆரம்ப காலத்தில் சுமார் 1,500 ஊழியர்கள் பணிபுரிந்த நிலையில் தற்போது படிப்படியாக குறைந்து 250 ஊழியர்கள் மட்டுமே பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில் பருவகாலத்தில் அதிகளவு கரும்புகள் […]

Categories
பல்சுவை

”தொடர்ந்து உயரும் பெட்ரோல்” கடுப்பாகும் பொதுமக்கள் ….!!

பெட்ரோல் , டீசல் விலை மாற்றமின்றி விற்பனை செய்யப்படுவதால் வாகன ஓட்டிகள்  நிம்மதி அடைந்துள்ளனர். தொடர்ந்து அதிகரித்து வந்த பெட்ரோல் மற்றும் டீசல் விலை தீடிரென சரியத் தொடங்கியது. பின்னர் ஏற்றம் , இறக்கமாக இருந்து வருகின்றது . இதனால் வாகன ஓட்டிகள் தினம் தினம் என்ன விலை இருக்குமோ என்று சற்று குழம்பியே இருக்கின்றனர். ஒருநாள் அதிகமாகவும், ஒருநாள் குறைவாகவும், ஒருநாள் ஏற்ற இறக்கம் இல்லாமல் நிலையாகவும் இருந்து வருகின்றது.   விலை நிர்ணயம் : சர்வதேச சந்தை […]

Categories
மாநில செய்திகள்

வச்சுட்டாங்கையா ஆப்பு .. “பற்ற வைத்த பாஜக”.. பதறும் திமுக..!!

பஞ்சமி நிலம் விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில் முரசொலி அலுவலகம் அமைந்துள்ள இடம் குறித்து அந்நிறுவனத்துக்கு அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளது. முரசொலி அலுவலக நிலம் தொடர்பாக விளக்கமளிக்க உதயநிதி ஸ்டாலின் நேரில் ஆஜராக தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் அழைப்பாணை அனுப்பியுள்ளதுதிருநெல்வேலியில் தனுஷ் நடித்த அசுரன் படத்தை பார்த்த திமுக தலைவர் ஸ்டாலின் அப்படத்தில் பஞ்சமி நிலம் குறித்த காட்சிகள் இடம்பெற்றதைக் கண்டு படக்குழுவினரை வியந்து பாராட்டினார். இதையடுத்து பாமக நிறுவனர் ராமதாஸ் திமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலி அலுவலகம் […]

Categories
மாநில செய்திகள்

”பொது இடங்களில் திருக்குறள்” பதிவு செய்ய தொல். திருமாவளவன் வேண்டுகோள் …!!

பால் பாக்கெட்டுகளில் திருக்குறளை அச்சிடுவதை விட பொது மக்கள் தினசரி செல்லும் இடங்களில் திருக்குறளை பதிவு செய்ய தமிழ்நாடு அரசு முன்வரவேண்டும் என தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார். விருதுநகர் மாவட்டத்திற்கு வருகை தந்திருந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் செய்தியாளர்களிடம் பேசுகையில், சென்னை ஐஐடி மாணவி பாத்திமா பேராசிரியர்கள் அளித்த மன உளைச்சலால் காரணமாக தற்கொலை செய்து கொண்டுள்ளார். இது போன்ற நிகழ்வு சென்னை ஐஐடி மட்டுமல்லாது நாடு முழுவதும் உள்ள உயர்கல்வி நிறுவனங்களிலும் நடைபெறுகிறது. […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

”எங்களை யாராலும் அழிக்க முடியாது” துரைமுருகன் சூளுரை …!!

திமுகவை யாராலும் அழிக்க முடியாது என திமுக பொருளாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். திமுக பொதுக்குழு கூட்டம் சென்னை சைதாப்பேட்டையில் நடைப்பெற்றது. இதில் திமுக பொருளாளர் துரைமுருகன், எம்.பி தயாநிதி மாறன், எம்.பி. ஜெகத்ரட்சகன், எம்.எல்.ஏ மா.சுப்பிரமணியன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். கூட்டத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் பேசுகையில், “மகாராஷ்டிரா, ஹரியானா மாநிலங்களில் தனித்து ஆட்சி அமைப்பதாகக் கூறிய பாஜக கூறிய தற்போது தினறி வருகிறது. இந்த மாநிலங்களில் மோடி அலை என்ன ஆனது. தமிழ்நாடு […]

Categories
மாநில செய்திகள்

வச்சுட்டாங்கையா ஆப்பு …… ”பற்ற வைத்த பாஜக”…. பதறும் திமுக….!!

பஞ்சமி நிலம் விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில் முரசொலி அலுவலகம் அமைந்துள்ள இடம் குறித்து அந்நிறுவனத்துக்கு அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளது. முரசொலி அலுவலக நிலம் தொடர்பாக விளக்கமளிக்க உதயநிதி ஸ்டாலின் நேரில் ஆஜராக தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் அழைப்பாணை அனுப்பியுள்ளதுதிருநெல்வேலியில் தனுஷ் நடித்த அசுரன் படத்தை பார்த்த திமுக தலைவர் ஸ்டாலின் அப்படத்தில் பஞ்சமி நிலம் குறித்த காட்சிகள் இடம்பெற்றதைக் கண்டு படக்குழுவினரை வியந்து பாராட்டினார். இதையடுத்து பாமக நிறுவனர் ராமதாஸ் திமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலி அலுவலகம் […]

Categories
மாநில செய்திகள்

”பெண்களை அனுமதியுங்க” தீர்ப்பை அவமதிக்காதீங்க- கி. வீரமணி கருத்து …!!

சபரிமலையில் பெண்களை அனுமதிக்க மறுத்தால், உச்ச நீதிமன்றத்தை அவமதிப்பாகும் என திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி தெரிவித்துள்ளார். விருதுநகரில் நடைபெறும் பகுத்தறிவாளர் கழகப் பொன்விழா தொடக்க மாநாட்டில் பங்கேற்க மதுரை விமான நிலையம் வந்த திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி செய்தியாளர்களிடம் பேசினார்.அதில், “சபரிமலையில் பெண்களை அனுமதிக்கலாம் என்ற தீர்ப்புக்குத் தடையேதுமில்லை. அந்த வழக்கு ஏழு நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றப்பட்டுள்ளது. எனவே சபரிமலைக்கு பெண்கள் செல்ல தடையில்லாததால், பெண்களை அனுமதிக்க வேண்டும். இதனை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

”நல்லாட்சி நாயகன் எடப்பாடி பழனிசாமி” அமைச்சர் ராஜேந்திர பாலாஜி …!!

மக்கள் எங்கள் பக்கம் உள்ளதால் உள்ளாட்சித் தேர்தலில் நல்லாட்சி நாயகன் எடப்பாடி பழனிசாமி தலைமையில் உறுதியான வெற்றியை பெறுவோம் என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார். விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் தனியார் மண்டபத்தில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பால்வளத் துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கலந்துகொண்டார். இதில், 601 பயனாளிகளுக்கு இரண்டு கோடி மதிப்புள்ள நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர், ஸ்ரீவில்லிபுத்தூர் சட்டப்பேரவை உறுப்பினர் சந்திரபிரபா, சாத்தூர் சட்டப்பேரவை உறுப்பினர் ராஜவர்மன் ஆகியோர் […]

Categories
மாநில செய்திகள்

சேலத்தை பிரிங்க….. ”ஆத்தூரை மாவட்டமாக்குங்க”….. சீமான் கோரிக்கை …!!

சேலம் மாவட்டத்தைப் பிரித்து ஆத்தூரைத் தலையிடமாகக் கொண்ட புதிய மாவட்டத்தை உருவாக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசுக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கோரிக்கைவிடுத்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டிலிருந்த மாவட்டங்களைப் பிரித்துத் தனி மாவட்டமாக அறிவித்திருப்பதன் மூலம் மாவட்டங்களின் எண்ணிக்கை 37ஆக உயர்ந்து, அதற்கான அரசாணை தற்போது வெளியிடப்பட்டிருக்கிறது. பரப்பளவில் பெரியதாக இருக்கிற மாவட்டங்களை நிர்வாக வசதிக்காகத்தான் பிரிக்கப்படுகிறது என்று நம்புகிறேன். அதேநேரம், மாவட்டப்பிரிப்பு கோரிக்கையை நெடுநாளாகக் கொண்டிருக்கும் பெரிய […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சந்தானத்தின் ‘டிக்கிலோனா’ விளையாட்டில் இணைந்த நட்சத்திர பட்டாளம்

ஜென்டில்மேன் படத்தில் டிக்கிலோனா விளையாட்டை அறிமுகப்படுத்தி கவுண்டமணியிடம் உதை வாங்கி சிரிக்கவைத்தார் நடிகர் செந்தில். தற்போது அந்தத் தலைப்பை தனது புதிய படத்துக்கு வைத்துள்ள நடிகர் சந்தானம் தன்னுடன் இணைந்து டிக்கிலோனா ஆடவிருக்கும் நடிகர்கள் குறித்த விவரத்தை வெளியிட்டுள்ளார். சென்னை: சந்தானம் நடிப்பில் உருவாகும் ‘டிக்கிலோனா’ படத்தில் நடிக்கும் நடிகர்களின் விவரங்களை படக்குழுவினர்கள் வெளியிட்டுள்ளனர்.கே.ஜே.ஆர். ஸ்டுடியோஸ் மற்றும் சோல்ஜர் பேக்டரி சார்பில் பிரமாண்டமாக தயாராகிவரும் படம் ‘டிக்கிலோனா’. முழுக்க முழுக்க பொழுதுபோக்கு அம்சத்துடன் உருவாகும் இந்தப் படத்தில் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

”உச்சி முதல் பாதம் வரை” திமுக ஜெயிக்கும் ….. உளறி தள்ளிய அமைச்சர் …!!

நாடாளுமன்றத் தேர்தலில் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை திமுக வெற்றி பெற்றதாக அமைச்சர் கே.சி. வீரமணி உளறியிருப்பது அதிமுகவினரிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜெயலலிதா மறைவிற்கு பிறகு அதிமுகவில் அமைச்சர்கள் பலர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளிக்கும்போதும் சரி அரசு மற்றும் கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்கும்போதும் சரி பல்வேறு சர்ச்சைக்குரிய விவகாரங்களில் எக்குத்தப்பாக வாயை கொடுப்பதையும் சர்ச்சையில் சிக்குவதையும் வழக்கமாக வைத்துள்ளனர். குறிப்பாக அமைச்சர்கள் ஜெயக்குமார், செல்லூர் ராஜு, திண்டுக்கல் சீனிவாசன் உள்ளிட்டோர் நெட்டிசன்கள் முதல் சீனியர் சிட்டிசன்கள் வரை […]

Categories
அரசியல்

தேமுதிக நிர்வாகிகளுக்கு விருப்ப மனு விநியோகித்த விஜயகாந்த்….!!

உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட விரும்பும் தேமுதிகவினருக்கு அக்கட்சி தலைவர் விஜயகாந்த் இன்று விருப்ப மனுக்களை வழங்கினார். மக்களவைத் தேர்தலைத் தொடர்ந்து உள்ளாட்சித் தேர்தலிலும், அதிமுக தலைமையிலான கூட்டணியிலேயே தொடர்வதாக தேமுதிக அறிவித்துள்ளது.இந்நிலையில், உள்ளாட்சித் தேர்தல் அடுத்த மாதம் நடத்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், அதில் போட்டியிட விரும்பும் தேமுதிகவினர், அந்தந்த மாவட்ட அலுவலகங்களில் விருப்ப மனுக்களைப் பெறலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில், தேர்தலில் போட்டியிட விரும்பும் நிர்வாகிகளுக்கு அக்கட்சியின் […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: ”புதிய மாவட்ட ஆட்சியர்கள் நியமனம்” – அரசாணை வெளியிட்டது தமிழக அரசு …!!

புதிதாக உருவாக்கப்பட்ட 5 மாவட்டங்களுக்கு புதியபுதிதாக மாவட்ட ஆட்சியர்களை நியமித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தவுள்ளது.  தமிழகத்தில் வேலூர் , திருநெல்வேலி , விழுப்புரம் ஆகிய மாவட்டங்கள் பிரிக்கப்பட்டு புதிதாக மாவட்டங்கள் உருவாக்கப்பட்டது. அந்த வகையில் அதற்கான சிறப்பு IAS அதிகாரிகளை நியமித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. இதை தொடர்ந்து இன்று புதிதாக உருவாக்கப்பட்ட 5 மாவட்டத்துக்கு காவல் கண்காணிப்பாளர்  நியமனம் செய்து அரசாணை வெளியிட்டது. இந்நிலையில் தற்போது சிறப்பு அதிகாரிகளாக செயல்பட்டவர்களை மாவட்ட ஆட்சியராக […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

‘மேயர் பதவிக்கு உதயநிதி போட்டியிட்டால் மக்கள் பார்த்து கொள்வார்கள்’ – ஜி.கே.வாசன்

சென்னை மேயர் பதவிக்கு உதய நிதி போட்டியிட்டால் மக்கள் தகுந்த முடிவு எடுப்பார்கள் என்று ஜி.கே. வாசன் தெரிவித்தார். திருச்சியில் நடந்த கட்சி பிரமுகர் இல்லத் திருமண விழாவில் தமாகா தலைவர் ஜி.கே. வாசன் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார்.அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், “ரஃபேல் வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பை அனைவரும் ஏற்க வேண்டும். இதன் பின்னராவது எதிர்க்கட்சிகள் ஆக்கப்பூர்வ செயல்பாடுகளில் ஈடுபட வேண்டும். சென்னை ஐஐடியில் மாணவி மரணமடைந்த சம்பவத்தில் தொடர்புடையவர்கள் எந்த பதவியில் […]

Categories
மாநில செய்திகள் வேலைவாய்ப்பு

உதவிப் பேராசிரியர் பணிக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி!

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உதவிப் பேராசிரியர் காலி பணியிடங்களுக்கு இன்று மாலை 5 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. கல்லூரிக் கல்வித் துறையின் கட்டுப்பாட்டில் இயங்கும் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில், 2 ஆயிரத்து 331 (2,331) உதவிப் பேராசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளனர். இந்தப் பணியிடங்களுக்கு, அக்டோபர் 4ஆம் தேதி முதல் நவம்பர் 15ஆம் தேதி வரை, www.trb.tn.nic.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என்றும், சான்றிதழ் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஸ்டாலினுக்கு கை பட்டா குத்தம்…கால் பட்டா குத்தம் – அமைச்சர் காமராஜ் காட்டம்

வேண்டாத பொண்டாட்டிக்கு கை பட்டா குத்தம், கால் பட்டா குத்தம் என்பதுபோல திமுக தலைவர் ஸ்டாலினுக்கு நாங்கள் அவருக்கு வேண்டாதவர்களாக இருக்கிறோம் என்று அமைச்சர் காமராஜ் தெரிவித்தார். திருவாரூர் மாவட்டத்தில் அதிமுக சார்பில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுவதற்கான விருப்பமனு பெறும் நிகழ்ச்சி அதிமுக மாவட்ட செயலாளரும் உணவு துறை அமைச்சருமான காமராஜ் தலைமையில் நடைபெற்றது. இதில், உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட விரும்பும் வேட்பாளர்களுக்கு விண்ணப்ப படிவத்தினை வழங்கினார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் காமராஜ், […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அதிமுகவை பிறாண்டுவதிலேயே ஸ்டாலின் குறி – செல்லூர் ராஜு

 “திமுக தலைவர் ஸ்டாலின் அதிமுகவை பிறாண்டுவதிலேயே குறியாக இருக்கிறார்” என்று அமைச்சர் செல்லூர் ராஜூ நகைச்சுவையாக ஸ்டாலினை கலாய்த்துள்ளார். மதுரை மாநகராட்சிக்குட்பட்ட உள்ளாட்சி அமைப்புகளுக்கான 2019 மேயர், மாமன்ற உறுப்பினர் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் விருப்பமனு பெறும் நிகழ்வு மதுரை பெரியார் பேருந்து நிலையம் அருகேயுள்ள தனியார் விடுதியில் நடைபெற்றது. இதில் அமைச்சர் செல்லூர் ராஜு கலந்துகொண்டு வேட்பாளர்களின் விருப்ப மனுக்களை பெற்றுக்கொண்டார். இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் அமைச்சர் செல்லூர் ராஜூ கூறுகையில், “திமுக தலைவர் ஸ்டாலின் அதிமுகவை […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: புதிய மாவட்டங்களுக்கு SP நியமனம் – அரசாணை வெளியிட்டது தமிழக அரசு …!!

புதிதாக உருவாக்கப்பட்ட 5 மாவட்டங்களுக்கு புதிய SP நியமிக்கப்பட்டு தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தவுள்ளது. தமிழகத்தில் வேலூர் , திருநெல்வேலி , விழுப்புரம் ஆகிய மாவட்டங்கள் பிரிக்கப்பட்டு புதிதாக மாவட்டங்கள் உருவாக்கப்பட்டது. அந்த வகையில் அதற்கான IAS அதிகாரிகளை நியமித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. இதை தொடர்ந்து தமிழக அரசு 16 IPS அதிகாரிகளை இடமாற்றம் செய்து உத்தரவை பிறப்பித்துள்ளது. இதில் புதிதாக உருவாக்கப்பட்ட 5 மாவட்டத்துக்கு காவல் கண்காணிப்பாளர்  நியமனம் செய்யபட்டுள்ளனர். இதில் ,  […]

Categories
சினிமா தமிழ் சினிமா மாநில செய்திகள்

கலைமாமணி விருது பெற்ற விஜய் சேதுபதிக்கு வந்த சோதனை…!!

நடிகர் விஜய் சேதுபதிக்கு கலைமாமணி விருது அறிவிக்கப்பட்ட நிலையில் இன்று தனிப்பட்ட முறையில் அவருக்கு அமைச்சர் பாண்டியராஜன் விருதை வழங்கினார். ஆனால் இன்று வெளியாகவிருந்த ‘சங்கத்தமிழன்’ திரைப்படம் ரிலீசாவதில் தாமதம் ஏற்பட்டதால் ரசிகர்கள் சோகத்தில் உள்ளனர். கடந்த பிப்ரவரி மாதம் 28ஆம் தேதி தமிழ்நாடு அரசு நடிகர் விஜய் சேதுபதி உள்பட சில திரைத் துறையினருக்கு கலைமாமணி விருதை அறிவித்தது.ஆகஸ்ட் மாதமே இந்த விருது கொடுக்கப்பட்டது. ஆனால் படப்பிடிப்பில் பிசியாக இருந்ததால் விஜய் சேதுபதி அவ்விருதை பெற […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

தமிழ்நாட்டில் வெற்றிடம் இல்லை – தம்பிதுரை

“தமிழ்நாட்டில் தற்போது வெற்றிடம் ஏதுமில்லை மேலோகத்தில் சென்று பார்த்தால் வெற்றிடம் இருப்பது போல் தெரியும்” என்று நடிகர் ரஜினிகாந்தின் கருத்திற்கு, தம்பிதுரை கடுமையாக விமர்சித்து பேசியுள்ளார். கரூர் மாவட்டத்தில் உள்ள அதிமுக கட்சி அலுவலகத்தில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விரும்புவோருக்கான விருப்பமனு பெறும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் முன்னாள் மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை, அதிமுக கழக அமைப்புச் செயலாளர் பாப்பா சுந்தரம், தமிழ்நாடு போக்குவரத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற உறுப்பினர் கீதா உள்ளிட்ட […]

Categories
மாநில செய்திகள்

என் மகளின் சாவுக்கு காரணமானவர்கள் கைது செய்யப்பட வேண்டும் – பாத்திமாவின் தந்தை

 என் மகளின் சாவுக்கு காரணமானவர்கள் கைது செய்யப்பட வேண்டும் என ஐஐடியில் தற்கொலை செய்துகொண்ட பாத்திமாவின் தந்தை சென்னை விமான நிலையத்தில் பேட்டியளித்தார். கேரள மாநிலம் கொல்லத்தைச் சேர்ந்தவர் பாத்திமா லத்தீப். இவர் சென்னை ஐஐடியில் முதலாமாண்டு முதுகலை பட்டம் படித்துவந்தார். கடந்த சனிக்கிழமை பாத்திமா லத்தீப் தனது விடுதி அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.தற்கொலை குறித்து காவல் துறையினர் விசாரித்து வரும் நிலையில் மன அழுத்தத்தால் மாணவி தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்பட்டது. இந்நிலையில், இன்று சென்னை […]

Categories
விளையாட்டு

டோக்கியோ ஒலிம்பிக்கிற்கு தகுதிபெற்ற தமிழ்நாட்டு வீரர் மாரியப்பன் தங்கவேலு

உலக பாரா தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் வெண்கலம் வென்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த மாரியப்பன் தங்கவேலு டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு தகுதிபெற்றுள்ளார். 2019ஆம் ஆண்டுக்கான உலக பாரா தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள் துபாயில் நடைபெற்று வருகின்றன. இந்தத் தொடரில் உயரம் தாண்டுதல் போட்டியில் அமெரிக்க வீரர் சாம் க்ரூவ் 1.86 மீட்டர் உயரத்தைத் தாண்டி தங்கம் வென்றார். இதே போட்டியில் இந்திய வீரர் சரத் குமார் 1.83 மீட்டர் உயரத்தை தாண்டியதால் நூலிழையில் தங்கம் வெல்லும் வாய்பை நழுவவிட்டார். […]

Categories
மாநில செய்திகள்

பாத்திமா தற்கொலை : விசாரணையை தொடங்கியது மத்திய குற்றப்பிரிவு போலீஸ் ..!!

மாணவி பாத்திமா தற்கொலை விவகாரம் தொடர்பாக மத்திய குற்றப்பிரிவு போலீஸ் விசாரணையை தொடங்கியுள்ளது. மாணவி பாத்திமா தற்கொலை வழக்கு சென்னை மத்திய குற்றப் பிரிவுக்கு மாற்றப்பட்டு பிறகு நேற்று இருந்தே அதன் விசாரணையை மத்திய குற்றப்பிரிவு போலீசார்  தொடங்கினர்.  மத்திய குற்றப்பிரிவு விசாரணை குழுவினர் சென்னை ஐஐடி சென்று அங்குள்ள மூன்று பேராசிரியர்களிடம் விசாரணை நடத்தியதாக காவல்துறையினர் தெரிவிக்கிறார்கள்.  நேற்று சென்னை காவல் ஆணையர் விஸ்வநாதன் ஐஐடி_க்கு வந்து விசாரணை மேற்கொண்டார். இதையடுத்து மத்திய குற்றவியல் பிரிவு போலீசார் விசாரணை நடந்த […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

மலைப்பாதையில் வெங்காய லாரி கவிழ்ந்து விபத்து… போக்குவரத்து பாதிப்பு.!!

சத்தியமங்கலம் அருகே உள்ள திம்பம் மலைப்பாதையில் வெங்காய மூட்டைகள் ஏற்றிவந்த லாரி கவிழ்ந்ததால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. சத்தியமங்கலம் -மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் அடர்ந்த வனப்பகுதியில் 27 கொண்டை ஊசி வளைவுகளுடன் கூடியது திம்பம் மலைப்பாதை உள்ளது. இந்த மலைப்பாதை வழியாக தமிழ்நாடு, கர்நாடக மாநிலங்களுக்கிடையே பேருந்து மற்றும் சரக்கு லாரி போக்குவரத்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில், மைசூரிலிருந்து வெங்காய மூட்டைகள் பாரம் ஏற்றி வந்த லாரி ஒன்று உடுமலைப்பேட்டை செல்வதற்காக இன்று காலை 5 மணியளவில் […]

Categories
மாநில செய்திகள்

சென்னை ஐஐடி_யை முற்றுகையிட்டு திமுக மாணவரணி போராட்டம் …!!

மாணவி பாத்திமா தற்கொலைக்கு காரணமான பேராசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி திமுக மாணவரணியினர் போராட்டம் நடத்தி வருகின்றது. சென்னை ஐஐடி மாணவி பார்த்திபா தற்கொலை வழக்கில் பேராசிரியர் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி பல்வேறு அமைப்பினர் கடந்த இரண்டு நாட்களாக ஐஐடி முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இந்நிலையில் தற்போது திமுக மாணவரணி சார்பில் முற்றுகை போராட்டம் நடந்து கொண்டிருக்கிறது.திமுக மாணவர் அணி மாநில துணை செயலாள  தலைமையில் இந்த போராட்டம் […]

Categories
தேசிய செய்திகள் மாநில செய்திகள்

#BREAKING: ”பேனர் வைக்க தடை கோரிய மனு தள்ளுபடி” உச்சநீதிமன்றம் அதிரடி …!!

தமிழகத்தில் அரசியல் கட்சிகள் மட்டுமின்றி அரசும் பேனர் வைக்க தடை கோரிய வழக்கை  உச்சநீதிமன்றத்தில் தள்ளுபடி செய்துள்ளது. டிராபிக் ராமசாமி உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் தமிழகம் முழுவதும் பேனர் கலாச்சாரத்திற்கு தடை விதிக்க வேண்டும் , ஏனென்றால் பேனர் விழுந்து விழுந்து ஏராளமான சாலை விபத்துகள் , மரணம் ஏற்படுகிறது.இது தமிழகம் முழுவதும் சட்டம் ஒழுங்கு பிரச்சினையை ஏற்படுத்தும் அளவிற்கு பெரிய ஒரு பிரச்சனையாக உருவாகி வருகிறது. எனவே உச்ச நீதிமன்றம் தலையிட்டு உடனடியாக தமிழகம் முழுவதும் பேனர் வைக்க […]

Categories
மாநில செய்திகள்

கஜா கடந்து ஓராண்டு முடிந்தது…. மீண்டதா சோழநாடு?

மாநிலத்திற்கே சோறிட்ட டெல்டா மக்கள் இரண்டு துண்டு ரொட்டிகளுக்காக வாகனத்தின் பின்னால் ஓடிவந்த காட்சியெல்லாம் வரலாற்றில் அப்பியிருக்கும் அழிக்க முடியாத சோகம். கடந்த வருடம் இதே தேதி இந்நேரம் அந்த புயல் கரையை கடந்துவிட்டது. சோறுடைத்த சோழநாடு என்று பெயர் பெற்ற டெல்டா மாவட்டங்கள் அனைத்தையும் கஜா என்னும் அரக்க புயல் தனது அசுரக் கரங்களால் அலசிப் போட்டுவிட்டது. வயல்வெளிகள், தென்னந் தோப்புகள் என அனைத்தும் சின்னாபின்னமாகின. கால்நடைகள் கொத்துக் கொத்தாக சரிந்து விழ, வீட்டு ரேஷன் […]

Categories
மதுரை மாநில செய்திகள்

உள்ளாட்சித் தேர்தல் குறித்த ஆலோசனை கூட்டம் ….!!

உள்ளாட்சித் தேர்தல் குறித்த ஆலோசனை கூட்டம் மதுரையில் நடைபெற்று வருகின்றது. உள்ளாட்சித் தேர்தல் நடைபெற இருக்கக்கூடிய நிலையில் மாநில உள்ளாட்சி தேர்தல் ஆணையர் பழனிச்சாமி தலைமையிலான ஆலோசனைக் கூட்டம் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்று வருகின்றது . இதில் மதுரை மாவட்ட ஆட்சியர், திண்டுக்கல் , தேனி , விருதுநகர் ஆகிய நான்கு மாவட்ட ஆட்சியர்கள் கலந்து கொண்டு இருக்கிறார்கள். இதில் உள்ளாட்சித் தேர்தலில் நடைபெறக் கூடிய மாநகராட்சி , நகராட்சி , பேரூராட்சி , ஊராட்சியை சேர்ந்த அதிகாரிகள் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

உள்ளாட்சித் தேர்தல் நடக்காது – ஸ்டாலின் பரபரப்பு பேட்டி …!!

உள்ளாட்சித் தேர்தலை முறையாக நடத்த வேண்டும் என்றுதான் நீதிமன்றம் சென்றோம் என்று முக.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இன்று செய்தியாளர்களை சந்தித்த திமுக தலைவர் முக.ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்த போது , தேர்தலை நடத்தக்கூடாது என்பது எங்களுடைய நோக்கம் கிடையாது. முறையா நடத்தவேண்டும். இடஒதுக்கீடு முறையை சரி செய்து , முறையாக தேர்தல் நடத்துங்க என்று தான் நீதிமன்றத்துக்குப் போனோம் .  சட்டமன்றத்திலும் , மக்கள் மன்றத்திலும் நாங்கள் இதைத்தான் சொல்லி வருகின்றோம். ஆனால் அதிமுக இதை பற்றி கவலைப்படவில்லை. தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய ஊராட்சி பகுதிகளுக்கு […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

33,00,000 மதிப்பு… விமானத்தின் இருக்கையில் கேட்பாரற்று கிடந்ததங்க கட்டிகள்..!!

மஸ்கட்டில் இருந்து சென்னை வந்த விமான இருக்கையின் அடியிலிருந்து ஒரு கோடியே 33 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 3 கிலோ தங்க கட்டிகளை சுங்கத்துறை அலுவலர்கள் பறிமுதல் செய்தனர். சென்னை விமான நிலையத்திற்கு மஸ்கட்டிலிருந்து விமானம் ஒன்று வந்தது. இந்த விமானத்தில் வந்த பயணிகள் அனைவரும் இறங்கி சென்ற பின்னர், விமானத்தை ஊழியர்கள் சுத்தம் செய்து வந்தனர். அப்போது விமானத்தில் ஒருவரின் இருக்கைக்கு அடியில் கருப்பு டேப்பால் சுற்றப்பட்ட பார்சல் இருந்ததைக் கண்டு விமான நிலைய சுங்கத்துறைஅலுவலர்களுக்கு […]

Categories
மாநில செய்திகள்

பொதுப்பணித்துறை அதிகாரிகளுடன் முதல்வர் ஆலோசனை …!!

தமிழகத்தில் பொதுப்பணித்துறையால் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்து முதல்வர் பழனிசாமி ஆலோசனை மேற்கொண்டு வருகின்றார். பொதுப்பணித் துறை , கட்டடங்கள் , நீர்வளத்துறை ஆகிய துறைகளின் ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது. இதில் பொதுப்பணித்துறை மாநில, மண்டல பொறியாளர்கள் பங்கேற்ற்றுள்ளனர். மேலும் பொதுப்பணித்துறை முதன்மை செயலாளர் பங்கேற்றிருக்கிறார். தலைமைச் செயலகத்தில் நடைபெற்று வரும் இந்த ஆலோசனை கூட்டத்தில் குடிமரத்து பணிகள் குறித்தும் , அத்திக்கடவு அவிநாசி திட்டம்  குறித்து விவாதிக்கப்படுகின்றது. மேலும் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டுள்ளதா ? எந்த அளவுக்கு […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

மாணவிகளிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட கணித ஆசிரியர்…!!

அரசு நடுநிலைப்பள்ளி கணித ஆசிரியர், பள்ளி மாணவிகளிடம் ஆபாசமாக பேசி சில்மிஷத்தில் ஈடுபட்டதால் அவர் மீது போக்சோ சட்டம் பாய்ந்தது. நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த ஒடுவன் குறிச்சி பகுதியைச் சேர்ந்த மணி என்பவர் மகன் சுரேஷ்(37). இவர் கொங்களம்மன் கோவில் பகுதியில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளியில் கணித ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இப்பள்ளியில் 49 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.எட்டாம் வகுப்பில் எட்டு மாணவிகளும் ஒரு மாணவரும் படித்து வருகின்றனர். இப்பள்ளியில், பட்டியலினத்தைச் […]

Categories
மாநில செய்திகள்

மாணவி பாத்திமாவின் தந்தை முதல்வருடன் சந்திப்பு ….!!

ஐஐடி_யில் தற்கொலை செய்து கொண்ட மாணவி பாத்திமாவின் தந்தை இன்று தமிழக முதல்வரை சந்திக்க இருக்கின்றார். சென்னை ஐஐடி மாணவி பாத்திமா தற்கொலை செய்து கொண்ட வழக்கு விசாரணையை மத்திய குற்றவியல் பிரிவு போலீசார் கையில் எடுத்துள்ளனர்.இதற்கிடையே மாணவியின் பெற்றோர் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சந்தித்து கோரிக்கை மனு அளிக்க இருக்கிறார். இன்று மதியம் விமானம் மூலமாக அவருடைய பெற்றோர் சென்னை வருகிறார்கள்.அதன் பிறகு நேரடியாக தலைமைச் செயலகம் சென்று முதல்வரை சந்திக்க அனுமதி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டி…. பள்ளி மாணவர்கள் அசத்தல்.!!

மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டியில் 20-க்கும் மேற்பட்ட பள்ளிகளில் இருந்து 200-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் பங்கேற்று தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர். பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள டாக்டர் எம்ஜிஆர் நினைவு விளையாட்டு மைதானத்தில் தமிழ்நாடு பள்ளிக்கல்வித் துறை சார்பில் மாவட்ட அளவிலான பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நேற்று நடைபெற்றது. இப்போட்டிகளில் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள 20-க்கும் மேற்பட்ட பள்ளிகளில் இருந்து 200-க்கும், மேற்பட்ட மாணவ மாணவிகள் ஆர்வத்துடன் பங்கேற்று தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர். இதில் சிலம்பம், டேக்வாண்டோ, […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

”அதிரடி கைது… பாய்ந்த போக்சோ”…9-ஆம் வகுப்பு சிறுமி கர்ப்பம் ….. 8 பேர் பாலியல் தொல்லை ….!!

வேளாங்கன்னி பகுதியில் 15 வயது சிறுமியை தொடர்ச்சியாக மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பாமாக்கிய எட்டு பேரில் ஐந்து பேரை காவலர்கள் கைது செய்துள்ளனர். கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த சிறுமி ஒருவர் புதுச்சேரியிலுள்ள விடுதி ஒன்றில் தங்கி ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறார். இவர், கடந்த மே மாத விடுமுறைக்கு வேளாங்கன்னி பகுதியில் வேலைபார்த்து வரும் தனது பெற்றோரைப் பார்க்க வந்துள்ளார். அப்போது, அப்பகுதியைச் சேர்ந்த தாஸ்(41) என்பவர் சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்துள்ளார். இதனை அறிந்த […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

கல்யாண ஆசை….. பலமுறை பாலியல்….. கல்லூரி மாணவியை கர்ப்பம்… பாய்ந்தது போக்சோ சட்டம் …!!

திருமண ஆசை காட்டி 17 வயது கல்லூரி மாணவியை கர்ப்பமாக்கிய இளைஞர் மீது காவல் துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனர். கன்னியாகுமரி மாவட்டம் தேரூர் புதுகிராமம் காலனியைச் சேர்ந்த 17 வயது கல்லூரி மாணவி, ஆரல்வாய்மொழி பகுதியில் உள்ள கல்லூரியில் முதலாம் ஆண்டு பட்டப்படிப்பு படித்து வருகிறார். மாணவியின் உறவினரான சடையன்குளத்தை சேர்ந்த அசோக் என்பவர் அடிக்கடி மாணவியின் வீட்டுக்கு வருவது வழக்கம். இதனால் இருவரும் நெருக்கமாக பழக ஆரம்பித்தனர். உறவினர் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அதிமுகவின் ”தில்லுமுல்லு” முக.ஸ்டாலின் காட்டம் …!!

உள்ளாட்சித் தேர்தல் குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். உள்ளாட்சித் தேர்தல் குறித்த மு.க. ஸ்டாலினின் ஃபேஸ்புக் பதிவு பின்வருமாறு: ”உள்ளாட்சித் தேர்தலை நடத்துவதற்கு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்த தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணைய செயலாளர் பழனிச்சாமியை, திடீரென்று மாற்றியிருப்பது கண்டனத்திற்குரியது! உச்சநீதிமன்ற உத்தரவின் அடிப்படையில், தேர்தல் பணிகளைச் செய்து கொண்டிருந்தவரை மாற்றியது ஏன்? விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் “விசுவாசமாகப்” பணியாற்றியதற்காக விழுப்புரம் மாவட்ட ஆட்சித் தலைவர், மாநில தேர்தல் ஆணைய செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளாரா? […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

பிரிந்து சென்ற மனைவி …. ”மகளை துன்புறுத்திய தந்தை”…. CCTV பதிவால் அம்பலம் …!!

பெற்றத்தாயை பார்க்கச் சென்ற 9 வயது மகளை அவரது தந்தை கொடூரமாகத் தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டம் திருமங்கலம் கொடிமரத்தெருவில் வசித்துவரும் கூலித் தொழிலாளியான அப்துல் சமது (37) இவரது மனைவி மும்தாஜ். இவர்களுக்கு அரப்புஸ்ரா (9) என்ற பெண் குழந்தையும், அகமது (2) என்ற ஆண் குழந்தையும் உள்ளனர்.அப்துல் சரிவர வேலைக்குச் செல்லாததால் குடும்பத்தில் அடிக்கடி தகராறு ஏற்பட்டு அவ்வப்போது அவரது மனைவியை அடித்து துன்புறுத்தியுள்ளார். இதனால் மும்தாஜ் தன் தாய்வீட்டிற்குச் சென்றதும், […]

Categories
அரசியல்

’இவர் மூலம்தான் எடப்பாடி எனக்கு தூது விட்டார்’ – அமமுக பழனியப்பன்

அதிமுகவில் சேரும்படி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொழிலதிபதிபர் ஒருவர் மூலம் தனக்கு தூது விட்டதாக அமமுகவின் துணை பொதுச் செயலாளர் பழனியப்பன் கூறியுள்ளார். அமமுகவின் நாமக்கல் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொண்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய அக்கட்சியின் துணை பொதுச் செயலாளர் பழனியப்பன், ”அதிமுகவில் சேர நான் யாரையும் தூது விடவில்லை. ஆனால் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிதான், தொழிலதிபர் அன்பழகன் என்பவர் மூலம் என்னை அதிமுகவில் சேர தூதுவிட்டார். ஆனால் முதலமைச்சரின் தூதுக்கு நான் செவி […]

Categories
பல்சுவை

”2_ஆவது நாளாக பெட்ரோல் உயர்வு” வாகன ஓட்டிகள் முணுமுணுப்பு …!!

பெட்ரோல் , டீசல் விலை மாற்றமின்றி விற்பனை செய்யப்படுவதால் வாகன ஓட்டிகள்  நிம்மதி அடைந்துள்ளனர். தொடர்ந்து அதிகரித்து வந்த பெட்ரோல் மற்றும் டீசல் விலை தீடிரென சரியத் தொடங்கியது. பின்னர் ஏற்றம் , இறக்கமாக இருந்து வருகின்றது . இதனால் வாகன ஓட்டிகள் தினம் தினம் என்ன விலை இருக்குமோ என்று சற்று குழம்பியே இருக்கின்றனர். ஒருநாள் அதிகமாகவும், ஒருநாள் குறைவாகவும், ஒருநாள் ஏற்ற இறக்கம் இல்லாமல் நிலையாகவும் இருந்து வருகின்றது.   விலை நிர்ணயம் : சர்வதேச சந்தை […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

வெறும் 25 பந்தில் ஆட்டத்தை முடித்த தமிழ்நாடு அணி ….!!

சையத் முஷ்டாக் அலி டி20 தொடரின் மணிப்பூர் அணிக்கு எதிரான லீக் போட்டியில் தமிழ்நாடு அணி ஒன்பது விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. நடப்பு சீசனுக்கான சையத் முஷ்டாக் அலி டி20 தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில், குரூப் பி பிரிவுக்கான இன்றைய ஆட்டத்தில் தமிழ்நாடு – மணிப்பூர் அணிகள் மோதின. டாஸ் வென்ற தமிழ்நாடு அணியின் கேப்டன் தினேஷ் கார்த்திக், முதலில் பந்து வீச தீர்மானித்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்த மணிப்பூர் அணி […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

படம் தான் பிடிக்கும்…. அப்போ ரஜினியை பிடிக்காதா ? – அமைச்சர் ராஜேந்திர பாலாஜி…!!

நடிகர் ரஜினி மீது எந்த காட்டமும் தனக்கில்லை என்றும், அவர் படங்களைத் தான் மிகவும் விரும்பிப் பார்ப்பதாகவும் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியுள்ளார். விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பள்ளிக் கல்வித் துறை, பொது நூலகத் துறை சார்பாக திறன் மேம்பாட்டுத் திட்டம் மூலம் 1.05 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட இலவச போட்டித் தேர்வு மையத்தை பால்வளத் துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி திறந்து வைத்தார். தமிழ்நாட்டில் தனியார் பங்களிப்போடு தொடங்கப்பட்ட முதல் ஐஏஎஸ், […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

‘ஸ்டாலின் நாக்கில் சனி’ – அமைச்சர் ஜெயக்குமார் தாக்கு

ஸ்டாலின் நாக்கில் சனி இருப்பதால்தான் அனைத்தையும் தவறாகவே பேசுகிறார் என்று அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார். சென்னையில் குழந்தைகள் தின விழாவில் கலந்துகொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், ”சென்னை ஐஐடி மாணவி தற்கொலை தொடர்பாக மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். அந்த விசாரணை அறிக்கையின் அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார். காவல் துறையில் 350 கோடி ரூபாய் ஊழல் என்ற ஸ்டாலின் வைத்த குற்றச்சாட்டு குறித்த கேள்விக்குப் பதிலளித்த அவர், […]

Categories
மாநில செய்திகள்

மாசில்லா தமிழ்நாடு…. ”10,00,000 மாணவர்கள்” கின்னஸ் சாதனை… தொடங்கி வைத்த முதல்வர் …!!

 நெகிழி விழிப்புணர்வு குறித்து மாணவர்கள் உறுதிமொழியேற்ற கின்னஸ் சாதனை முயற்சியை முதலமைச்சர் பழனிசாமி தொடங்கிவைத்தார். சுற்றுச்சூழலுக்கு மாசு விளைவிக்கும் ‘பிளாஸ்டிக்’ எனப்படும் நெகிழிப் பயன்பாட்டைக் குறைக்க, தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. அந்த வகையில் நெகிழிப் பயன்பாடு குறித்து பள்ளி மாணவ, மாணவிகளுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுவருகிறது. அதனடிப்படையில், ‘நெகிழி மாசில்லா தமிழ்நாடு’ என்ற தலைப்பில் 10 லட்சம் பள்ளி மாணவர்கள் உறுதிமொழியேற்ற கின்னஸ் சாதனை முயற்சியை சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கிவைத்தார். […]

Categories
மாநில செய்திகள்

”ஐஐடி_யா மர்மத்தீவு போல இருக்கு” ஸ்டாலின் கண்டன அறிக்கை …!!

மாணவி ஃபாத்திமா லத்தீப்பின் தாயாரின் கூற்று, தமிழ் மண்ணின் மீது வைத்த நம்பிக்கை தகர்க்கப்பட்டதைக் காட்டுகிறது என திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”சென்னையில் உள்ள இந்தியத் தொழில்நுட்ப நிறுவனத்தின் (ஐஐடி) மாணவி, ஃபாத்திமா லத்தீப், தனக்குத் தரப்பட்ட மனஉளைச்சல் காரணமாக உயிரை மாய்த்துக் கொண்டிருப்பது பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலத்தைச் சேர்ந்தவரான அவர், தனது தற்கொலைக்கு முன்பு எழுதியுள்ள குறிப்பில், தனது மரணத்திற்குக் காரணமான பேராசிரியர்களின் பெயர்களை வெளிப்படுத்தி […]

Categories

Tech |