Categories
மாநில செய்திகள்

சென்னையில் நடிகர் விஜய்சேதுபதி அலுவலகம் முற்றுகை ….!!!

சென்னையில் உள்ள நடிகர் விஜய்சேதுபதி அலுவலகத்தை வணிகர்கள் முற்றுகை இட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர். சமீப காலமாக பிரபலமான நடிகர்கள் ஆன்லைன் வர்த்தகத்தை ஊக்குவிக்கும் விளம்பரங்களில் நடித்து வருகிறார்கள். அதை பிரபலப்படுத்தும் வகையில் விளம்பரம் செய்கின்றார்கள். ஒரு மாதத்திற்கு முன்னதாக மண்டி என்ற ஆன்லைன் செயலியானது அறிமுகப்படுத்தப்பட்டது. அந்த மண்டி என்ற செயலியை பிரபலப்படுத்த நடிகர் விஜய் சேதுபதி நடித்துள்ளார். இந்த மண்டி என்ற செயலியானது  வணிகர்கள் மற்றும் சிறு வணிகர்களின் வாழ்வாதாரத்தை பாதிப்பதாக வணிகர்கள் குற்றம் சாட்டிவந்தனர். இதையடுத்து […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

எரிவாயு குழாய்களுக்கு எதிர்ப்பு…… நிறுவனத்தாறுடன் விவசாயிகள் வாக்குவாதம்….. மதுரையில் பரபரப்பு….!!

எண்ணுரில் இருந்து மதுரைக்கு எரிவாயு குழாய்கள் பதிக்கும் திட்டத்தை விவசாய நிலங்களில் செயல்படுத்த பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து இருக்கின்றனர். எண்ணூரில் உள்ள காமராஜர் துறைமுகத்திற்கு கப்பல் மூலம் வரும் எரிவாயு பைப்லைன் மூலம் 215 கிலோ மீட்டர் தூரம் மதுரைக்கு கொண்டு செல்லும் திட்டம் ஏற்படுத்தப்பட்டது. இதற்காக நிலம் கையகப்படுத்த தற்பொழுது பொன்னேரி சுற்றுவட்டாரப் பகுதிகளில் விவசாயிகளிடம் நோட்டீஸ் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் நாலூர் ஊராட்சியில் கையகப்படுத்தப்பட உள்ள நிலங்களின் உரிமையாளர்கள் ஒருபுறம் எண்ணைய் நிறுவனம் அழைப்பை […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

நாயை காப்பாற்ற எண்ணி…… பெண்ணை கொன்ற ஆட்டோ ஓட்டுநர் கைது…….. சென்னையில் பரபரப்பு….!!;

சென்னை சென்ட்ரல் அருகே நாய் குறுக்கே வந்ததால் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் ஓரமாக உறங்கியவர்கள் மீது மோதியதில் பெண் ஒருவர் பலியானார். சென்னை தண்டையார்பேட்டை யைச் சேர்ந்த காளியப்பன் என்பவர் சென்ட்ரலிலிருந்து மூலபக்கம் நோக்கி தனது ஆட்டோவில் சென்று கொண்டிருந்தார். அப்போது சாலையின் நடுவே இரண்டு நாய்கள் ஓடியதால் அவற்றின் மீது மோதாமல் இருக்க காளியப்பன் பிரேக் பிடித்த பொழுது கட்டுப்பாட்டை இழந்து ஆட்டோ சாலையில் தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது மோதியது. இதில் அஞ்சல என்ற பெண் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

முதல் முறையாக ‘பிகில்’ படைக்கும் சாதனை …!!

மாஸ் ஹீரோக்களின் படங்கள் தற்போது சர்வதேச ரீதியாக வியாபாரமாகி வரும் நிலையில், தமிழ்ப் படங்கள் ரிலீசாகாத பல்வேறு நாடுகளிலும் வெளியிடப்பட்டு வருகின்றன. அந்த வகையில் ‘பிகில்’ திரைப்படம் முதல் முறையாக ஜோர்டனில் திரையிடப்படவுள்ளது. சென்னை: தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் ‘பிகில்’ திரைப்படம் ஜோர்டனில் முதல் முறையாக திரையிடும் தமிழ்ப் படம் என்ற சாதனை படைத்துள்ளது.கால்பந்து விளையாட்டை மையமாகவைத்து வெளிவந்த ‘பிகில்’ திரைப்படம் ரசிகர்களைக் கவர்ந்தது. படத்தில் இடம்பெற்ற ‘சிங்கப்பெண்ணே’ பாடல் பட்டிதொட்டியெங்கும் […]

Categories
பல்சுவை மாநில செய்திகள் வானிலை

தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு….. சென்னை வானிலை ஆய்வு மையம்….!!

வெப்பச் சலனம் காரணமாக அடுத்த இரண்டு நாட்களுக்கு தென்மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அந்தமான் கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதாகவும் இரண்டு மூன்று நாட்களில் மத்திய கிழக்கு வங்க கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனிடையே அரபிக்கடலில் அதி தீவிர புயலாக மாறி வரும் மஹா புயல் ஏழாம் தேதி அதிகாலை […]

Categories
நாமக்கல் பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

தொடர் சரிவில் முட்டை விலை… கோழிப் பண்ணையாளர்கள் கவலை..!!

முட்டை உற்பத்தி அதிகரிப்பால் தேக்கம் ஏற்பட்டு கடந்த நான்கு நாள்களில் முட்டை விலை 45 காசுகள் சரிந்துள்ளது என்று கோழிப் பண்ணையாளர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர். நாமக்கல்லில் நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில், முட்டை ஒன்றின் கொள்முதல் விலையை 3 ரூபாய் 87 காசுகளிலிருந்து நேற்று ஒரேநாளில் 17 காசுகள் குறைந்து 3 ரூபாய் 70 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது. கடந்த 1ஆம் தேதி முட்டை ஒன்றின் கொள்முதல் விலை 4 ரூபாய் 15 […]

Categories
மாநில செய்திகள்

மண்ணெண்ணெய் ஆட்டோக்களுக்கு உடனடி தடை……. காற்று மாசை தவிர்க்க அதிரடி நடவடிக்கை….!!

பீகாரில் காற்று மாசினை கட்டுப்படுத்த அம்மாநில அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. டெல்லியை போல பீகார் மாநிலமும் காற்று மாசினால் பாதிக்கப்பட்டுள்ளது. இதனை குறைக்க அம்மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. இதுகுறித்து அம்மாநில தலைமைச் செயலாளர் தீபக் குமார் செய்தியாளர்களிடம் கூறுகையில், 15 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் வாகனங்கள் இயக்கப்படுவதற்கு தடை விதிக்கப்படுவதாக கூறினார். மேலும் பாட்னா மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் 15 ஆண்டுகளுக்கு மேற்பட்ட சரக்கு வாகனங்கள் இயக்கவும் தடை […]

Categories
மாநில செய்திகள்

‘என்ன உடை அணிய வேண்டும் என்று எனக்குத் தெரியும் ‘ – ஜோதிமணி MP பதிலடி …!!

எனது உடைகளை விமர்சனம் செய்யும் பெண் வெறுப்பு நபர்களின் மனக்கசப்பை புரிந்து கொள்ள முடிகிறது. எந்தத் தருணத்திற்கு எந்த உடை அணிய வேண்டும் என்பது எனக்கு நன்றாகவே தெரியும் என்று ஜோதிமணி எம்.பி. விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்துள்ளார். ஐக்கிய நாடுகள் சபையில் இயங்கிவரும் விட்டல் வாய்சஸ் என்ற அமைப்பு ஆண்டுதோறும் உலக நாடுகளில் உள்ள இளம்பெண் அரசியல் தலைவர்களை அழைத்து மாநாடு நடத்துவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டிற்கான மாநாட்டில் 25 நாடுகளைச் சேர்ந்த பெண்களுக்கு […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

50,000 பணத்திற்காக…… பெண் கழுத்தறுத்து கொலை…… திருவாரூரில் அதிர்ச்சி சம்பவம்….!!

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே பெண் ஒருவர் கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்டார். திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி பகுதியை அடுத்த  மருதுவம் கிராமத்தைச் சேர்ந்த ராமச்சந்திரன். இவர்நேற்று மாலை வெளியே சென்று இருந்த பொழுது அவரது மனைவி ராஜேஸ்வரி மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார். இந்நிலையில் நீண்ட நேரமாக விளக்கு எரியாமல் இருப்பதை கண்ட அக்கம் பக்கத்தினர் அந்த வீட்டிற்கு சென்று பார்த்த பொழுது ராஜேஸ்வரி கழுத்தறுக்கப்பட்ட நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். பின் காவல்நிலையத்திற்கு தகவல் […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

நிரந்திர பாதை வேண்டும்……. பிணத்தை வைத்து சாலை மறியல்……. திருச்சியில் பரபரப்பு….!!

திருச்சி மாவட்டம் தொட்டியம் அருகே எம்பத்தூர்சத்திரம் என்கின்ற இடத்தில் மயானத்திற்கு நிரந்தர பாதை கேட்டு பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். திருச்சி மாவட்டம் என்பத்துர் சத்திரம் பகுதியை சேர்ந்தவர் தங்கம்மாள். இவர் வயது முதிர்வு காரணமாக திங்கள்கிழமை அன்று இறந்து போனார். இதனையடுத்து இவரை அடக்கம் செய்வதற்காக இவரது உறவினர்கள் காவிரிக்கரையில் உள்ள மயானத்திற்கு எடுத்துச் சென்றனர். செல்லும் வழியில் உள்ள மயான சாலை தனியாருக்கு சொந்தமானதாக இருப்பதாகவும், ஒவ்வொரு முறையும் அந்த சாலையை கடக்கும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

துப்பறிவாளன் 2 முதல் கட்ட படப்பிடிப்பு தொடக்கம்….!!

விஷால் நடித்த துப்பறிவாளன் 2 பாகம் படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு லண்டனில் தொடங்கியது. மிஷ்கின் இயக்கத்தில் விஷால் நடிப்பில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்ற துப்பறிவாளன் படத்தின் இரண்டாம் பாகம் துப்பறிவாளன் 2 என்ற பெயரில் படமாகிறது. முதல் பாகத்தை இயக்கிய மிஷ்கின் தான் இரண்டாம் பாகத்தையும் இயக்குகிறார். விஷால் நாயகனாக நடிக்க அவருக்கு ஜோடியாக புதுமுகம் ஆஷியா நடிக்கிறார். நாசர் , ரகுமான் , பிரசன்னா , கௌதமி , சுரேஷ் சக்ரவர்த்தி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

28 வருடங்களுக்குப் பிறகு இணையும் ராஜ்கிரண்-மீனா ….!!

குணச்சித்திர நடிகராக வலம் வரும் ராஜ்கிரண்னுடன் 28 ஆண்டுகளுக்கு பிறகு தமிழ் பிரபல நடிகை நடித்துள்ளார். ஒரு காலத்தில் ஹீரோவாக கலக்கிய நடிகர் ராஜ்கிரன் அரண்மனைக்கிளி , எல்லாமே என் ராசாதான் போன்ற படங்களையும் இயக்கியிருக்கிறார். தற்போது குணச்சித்திர நடிகராக வலம் வரும் ராஜ்கிரண் குபேரன் என்கின்ற படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதோடு அதில் ஒரு பாடலையும் எழுதி இருக்கிறார். இதில் ராஜ்கிரணுக்கு ஜோடியாக மீனா நடித்துள்ளார். என் ராசாவின் மனசிலே , பாசமுள்ள பாண்டியரே படங்களுக்குப் பிறகு […]

Categories
மாநில செய்திகள்

தமிழர்கள் காட்டுமிராண்டிகள்….. இருந்தா என்ன ? செத்தா என்ன ? கருணாஸ் ஆவேசம் …!!

திருவள்ளுவரை அவமதித்தவன் மண்ணிற்கு பாரம் என திருவாடானை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கருணாஸ் தெரிவித்துள்ளார். சிவகங்கையில் செய்தியாளர்களை சந்தித்த அவர் பன்முகத்தன்மையை வைத்துக்கொண்டுதான் உலக அளவில் இந்தியா அடையாளப்படுத்தப்பட்டு வருகிறது என்றும்,  உலகிற்கு பொதுவான திருவள்ளுவருக்கு மத சாயம் பூசுவது தவறு என்றும் கருணாஸ் தெரிவித்தார்.  மேலும் திருவள்ளுவர் மீது மாட்டு சாணி அடிப்பதற்கு என்ன இருக்கு? எப்பேர்ப்பட்ட மகான் அவர், இப்படி கீழ்த்தனமானவன் இந்த மண்ணுக்கு பாரமா? இவன்  இருந்தா என்ன ? செத்தா என்ன ? இவனை பிடிக்கனும் , விசாரணை  செய்யணும். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிகில் வசூல் சாதனை… சவால் விட்ட திரையரங்கம்….. !!

பிகில் படத்தின் வசூல் குறித்து திரையரங்கம் சவால் விட்டது சினிமா துறையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. விஜய் அட்லி கூட்டணியில் மூன்றாவது படமாக தீபாவளியை முன்னிட்டு கடந்த மாதம் அக்டோபர் 25ஆம் தேதி வெளியான படம் பிகில். இப்படம் வெளியாகி அன்றைய தினத்திலிருந்து கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. வழக்கமாக விஜய் படத்தின் வசூல் விவரங்கள் என்பது தமிழ் சினிமாவிற்கு மட்டுமல்லாது அவரது ரசிகர்கள் மத்தியிலும் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கும் காரணம். விஜயின் படங்கள் சமீப காலமாகவே தமிழ் சினிமாவின் […]

Categories
பல்சுவை

”பெட்ரோல் , டீசல் விலை உயர்வு” வாகன ஓட்டிகள் அதிர்ச்சி …..!!

பெட்ரோல் , டீசல் விலை உயர்ந்து விற்பனை செய்யப்படுவதால் பொதுமக்கள் வேதனை அடைந்துள்ளனர். தொடர்ந்து அதிகரித்து வந்த பெட்ரோல் மற்றும் டீசல் விலை தீடிரென சரியத் தொடங்கியது. பின்னர் ஏற்றம் , இறக்கமாக இருந்து வருகின்றது . இதனால் வாகன ஓட்டிகள் தினம் தினம் என்ன விலை இருக்குமோ என்று சற்று குழம்பியே இருக்கின்றனர். ஒருநாள் அதிகமாகவும், ஒருநாள் குறைவாகவும், ஒருநாள் ஏற்ற இறக்கம் இல்லாமல் நிலையாகவும் இருந்து வருகின்றது.   விலை நிர்ணயம் : சர்வதேச சந்தை கச்சா […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

நான் சாக போகிறேன்…. தற்கொலை செய்வதாக மிரட்டல்…. 4 மணி நேரத்திற்குப் பிறகு மீட்பு….!!

அய்யம்பாளையத்தில் தந்தையுடன் ஏற்பட்ட தகராறில் வீட்டிற்குள் இருந்த எரிவாயுவை பற்ற வைத்து தற்கொலை செய்வதாக மிரட்டிய மகனை நான்கு மணி நேர போராட்டத்திற்குப் பின்பு காவல் துறையினரும், தீயணைப்புத் துறையினரும் மீட்டனர். ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிபாளையம் அருகே உள்ள அய்யம்பாளையத்தைச் சேர்ந்தவர் காசிலிங்கம். இவரது இளைய மகனான கார்த்திக் (27) வேலைக்கு எதுவும் செல்லாமல் மது பழக்கத்திற்கு அடிமையாகியுள்ளார். இந்நிலையில் தந்தை காசிலிங்கத்திற்கும், கார்த்திக்கிற்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.அதன் பின்னர் வீட்டை விட்டு வெளியில் சென்ற கார்த்திக் அதிகளவு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

இயக்குநர் அவதாரம் எடுக்கும் ‘தர்புகா சிவா’ – படக்குழுவின் புதிய அறிவிப்பு ….!!

இசையமைப்பாளர் தர்புகா சிவா இயக்கும் புதிய படத்தின் பெயர் வரும் 8ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. ராஜ தந்திரம் படம் மூலம் நடிகராகவும், சசிகுமாரின் கிடாரி படம் மூலம் இசையமைப்பாளராகவும் அறிமுகமாகி முன்னணி இசையமைப்பாளர்கள் பட்டியலில் இடம்பெற்றிருப்பவர் தர்புகா சிவா. இசையமைப்பாளர், நடிகர் என பன்முகம் கொண்ட தர்புகா சிவா, இயக்குநர் அவதாரம் எடுத்து புதிய படத்தை இயக்கி வருகிறார்நிமிர், எனை நோக்கி பாயும் தோட்டா படங்களில் இவர் இசையமைத்த பாடல்கள் நல்ல வரவேற்பை […]

Categories
மாநில செய்திகள்

நீட் தேர்வு பயிற்சி மைய பண மோசடி – மாநில அரசிடம் விளக்கம் கேட்க நீதிமன்றம் உத்தரவு…..!!

நீட் பயிற்சி மையத்தில் பண மோசடியில் ஈடுபட்ட தலைமை ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிய வழக்கில், மாநில அரசிடம் உரிய விளக்கம் பெற்று தெரிவிக்க அரசு வழக்கறிஞருக்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த பரசுராமன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் பொது நல வழக்கைத் தாக்கல் செய்திருந்தார்.அதில், ’தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித் துறை சார்பில் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்குப் பயிற்சி அளிக்கும் வகையில் நீட் பயிற்சி வகுப்பு, தமிழ்நாடு முழுவதும் […]

Categories
மாநில செய்திகள்

விர்ச்சுவல் ரியாலிட்டியில் கீழடி பொருட்கள்: தயாராகும் உலகத்தர அருங்காட்சியகம்….!!

மெய்நிகர் (Virtual Reality) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி கீழடி அகழாய்வில் கிடைத்த பொருட்களைக் கொண்டு கொந்தகையில் அமையவிருக்கும் புதிய அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தவுள்ளதாக அமைச்சர் கே பாண்டியராஜன் கூறியுள்ளார். மதுரையில் கீழடி அகழாய்வு தொல்பொருட்கள் கண்காட்சியை பார்வையிட்ட பின் தமிழ் ஆட்சி மொழி மற்றும் தமிழ் பண்பாடுத் துறை அமைச்சர் கே பாண்டியராஜன் செய்தியாளர்களிடம் பேசினார்.அப்போது அவர், “கீழடி தொல்பொருட்களை மூன்று அறைகளில் கண்காட்சியாக வைத்துள்ளோம். ஆயிரக்கணக்கான மக்கள் தினமும் பார்த்துச் செல்கின்றனர். மதுரை விமான நிலையத்திலிருந்து 12 கி.மீ. […]

Categories
தேசிய செய்திகள் மாநில செய்திகள்

சுனாமி ஆழிப்பேரலை தாக்குதலிலிருந்து தப்பிப்பது எப்படி?

தமிழ்நாட்டு மக்களால் 2004 டிசம்பர் 26ஆம் தேதியை அவ்வளவு எளிதில் மறக்க முடியுமா? சுனாமி தாக்குதல் நடந்து ஆண்டுகள் 14 கடந்துவிட்டாலும், அது ஏற்படுத்திய தாக்கம் இன்னமும் ஓய்ந்தபாடில்லை. அதன் ஆங்காரமான சப்தம் காதோரம் ஒலித்துக்கொண்டே இருக்கிறது. ஆழிப்பேரலையில் சிக்கி கடலுக்குள் மரணித்த அந்த மக்களின் மரண ஓலத்தின் சப்தம், ஒருகணம் நம் உயிரை நிறுத்திவிடும். இதுபோன்ற ஆபத்தான இயற்கை பேரழிவிலிருந்து தப்பித்துக்கொள்வது எப்படி? ‘யானை வரும் பின்னே, மணியோசை வரும் முன்னே’ என்பது போல் சுனாமியை […]

Categories
மாநில செய்திகள்

ரூ 28,11, 900 அபராதம் …. பிளாஸ்டிக் பயன்படுத்தி நொந்து போன நிறுவனம் …!!

டிசம்பர் முதல் கடந்த அக்டோபர் மாதம் வரை பிளாஸ்டிக் பயன்படுத்திய நிறுவனங்களுக்கு 28,11, 900 ரூபாய் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் கமுதியைச் சேர்ந்த சிரஞ்சீவி உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் ஒரு பொதுநல வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், “கடந்த ஜூன் 25 அன்று சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை சார்பில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதித்து அரசாணை பிறப்பிக்கப்பட்டது. மீறுவோர் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. இதனை, அரசு ஜனவரி 1 முதல் நடைமுறைப்படுத்தியது. ஆனால், சில தினங்களுக்கு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

‘ஸ்டாலினின் விமர்சனங்கள் மக்களிடம் எடுபடாது’ – விஜய பாஸ்கர்

மலிவான அரசியல் செய்து வரும் ஸ்டாலினின் விமர்சனங்கள் மக்களிடம் எடுபடாது என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜய பாஸ்கர் கூறியுள்ளார். புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மேமோகிராம் என்று அழைக்கப்படும் மார்பக புற்றுநோயை கண்டறிவதற்கான கருவியை சுகாதாரத்துறை அமைச்சர் விஜய பாஸ்கர் திறந்து வைத்தார்.பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் விஜய பாஸ்கர் கூறுகையில், “தமிழ்நாடு சட்டப்பேரவையில் முதலமைச்சர் அறிவித்தபடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் மார்பக புற்றுநோய் கண்டறியும் கருவி அமைக்கப்படும் என்று அறிவித்ததன் கீழ் புதுக்கோட்டை […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

டயர் வெடித்துத் தீப்பற்றி எரிந்த கார்… தேசிய நெடுஞ்சாலையில் பரபரப்பு…!!

தேசிய நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்த காரின் டயர் வெடித்ததில், மேம்பால பக்கவாட்டில் மோதி கார் முழுவதும் தீப்பற்றி எரிந்த சம்பவம் பரபரப்பை எற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் பகுதியைச் சேர்ந்தவர் கிறிஸ்டோ (20). இவர் மருத்துவக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இன்று காலை நாகர்கோவிலிலிருந்து தனது ஸ்கோடா காரில் பாண்டிச்சேரி நோக்கி திருச்சி – மதுரை தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தபோது மணப்பாறை அருகே இவரது காரின் டயர் வெடித்ததுள்ளது. இதனால் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த […]

Categories
அரசியல் கன்னியாகுமாரி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

குமரியில் காலியான இரு விக்கெட்டுகள்: அஸ்தமனத்தை நோக்கி அமமுக…!

அமமுகவின் கிழக்கு மாவட்ட செயலாளராக இருந்த முன்னாள் அமைச்சர் பச்சைமால், எம்ஜிஆர் மன்ற இணைச்செயலாளராக இருந்த முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் நாஞ்சில் முருகேசன் ஆகியோரது தலைமையில் ஏராளமான அமமுகவினர் நாளை முதலமைச்சரை சந்தித்து தாய்க் கழகத்தில் இணைய சென்னைக்கு புறப்பட்டுச் சென்றனர். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவிற்குப் பின்னர் அதிமுக பல பிரிவுகளாக உடைந்தது. அதில் சசிகலா தலைமையில் டிடிவி தினகரன் அமமுக கட்சியினை தொடங்கினார். அதிமுகவினர் அனைவருமே தன்னுடன்தான் இருக்கின்றனர் என அவர் கூறி வந்தார். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘வரலாற்றை படமாக்க கால அவகாசம் தேவைப்படுகிறது’ – தி அயன் லேடி இயக்குநரின் எக்ஸ்கியூஸ்

‘தான் இயக்கும் படத்தின் கதையை எடுத்து முடிப்பதற்காக முக்கிய நடிகர்களின் தேதிகளுக்காக காத்துக்கொண்டிருப்பதாக’ இயக்குநர் பிரியதர்ஷினி அறிக்கை விடுத்திருக்கிறார். சமீபத்தில் முக்கியத் தலைவர்கள், பிரபலங்கள் பற்றிய வாழ்க்கை வரலாற்றை படமாக எடுக்கும் வழக்கம் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கையைப் படமாக்கும் வேலை தற்போது நடைபெற்று வருகிறது. இதைத்தொடர்ந்து இயக்குநர் பிரியதர்ஷினி  ‘தி அயன் லேடி’எனும் படத்தையும், இயக்குநர் விஜய் ‘தலைவி’ என்னும் படத்தையும் இயக்கி வருகின்றனர்.இதற்கிடையே தற்போது மூன்று முக்கிய நடிகர்களின் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

1 கிமீ தூரம் சூழ்ந்த நீர்……. தண்ணிரில் தத்தளிக்கும் கிராமம்…… நடவடிக்கை எடுக்குமா தமிழக அரசு…??

ஈரோடு மாவட்டம் கல்ராமொக்கை என்னும் கிராமத்தில் சுமார் ஒரு கிலோமீட்டர் தூரம் கிராமமக்கள் தண்ணீரில் தத்தளித்து நடந்து செல்லும் அவலம் ஏற்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையின் நீர்மட்டம் தற்போது 104.26 அடியாக உள்ளது. ஆகையால் அதனை சுற்றியுள்ள கிராமப் பகுதிகளில் தாழ்வான இடங்களில் நீர் ஆங்காங்கே தேங்கி காணப்படுகிறது. அதேபோல் சித்தனக்குட்டை பகுதியை அடுத்த கல்ரா மொக்கை என்னும் கிராமத்தில் தார் சாலைகளில் முழங்கால் பகுதியைத் தாண்டி நீர் தேங்கி காணப்படுகிறது. இதனால் ஊருக்குள் வரக்கூடிய […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

குழந்தையின் உயிரிழப்புக்கு நீதி கேட்டும் பெற்றோர்…..!!

மூன்று வயது குழந்தையின் உயிரிழப்புக்கு நீதி கேட்டு குழந்தையின் பெற்றோர் மாவட்ட ஆட்சியரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர். விருதுநகர் அருகே உள்ள ஒண்டிப்புலி நாயக்கனூரில் பஞ்சாயத்து சார்பாக மழைநீர் சேகரிப்புத் தொட்டி அமைக்க அந்த ஊரில் பல பகுதிகளில் பணி நடந்துவந்துள்ளது. இந்நிலையில் கடந்த 48 நாட்களுக்கு முன்பு மணிகண்டன் என்பவரின் வீட்டிற்கு அருகே 6 அடி அளவு கொண்ட மழை நீர் சேமிப்பு தொட்டி அமைக்க கிராம பஞ்சாயத்து சார்பாக குழி தோண்டப்பட்டுள்ளது.அப்போது அந்தப் பகுதியில் பெய்த […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

நள்ளிரவில்…… வாலிபர் படுகொலை…… முகம் சிதைந்த நிலையில் உடல் மீட்பு….. சேலத்தில் பரபரப்பு….!!

சேலம் மாவட்டத்தில் நள்ளிரவில் வாலிபர் ஒருவர் கொலை செய்யப்பட்டு முகம் சிதைந்த நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம் பள்ளப்பட்டி பகுதியை அடுத்த கோரிகாடு என்னும் கிராமத்தில் புதர் அருகே இன்று காலை 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் சடலமாக கிடந்தார். இரவோடு இரவாக கொலை செய்யப்பட்ட அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டு முகம் சிதைந்த நிலையில் காணப்பட்டது. இதனை கண்ட ஊர்மக்கள் பதற்றத்துடன் சேலம் காவல்துறையினருக்கு தகவல் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

“அதிகாரிகள் அலட்சியம்” குழிக்குள் விழுந்து பலியான 3 வயது சிறுவன்…… விருதுநகரில் சோகம்…!!

விருதுநகர் மாவட்டத்தில் அதிகாரிகளின் அலட்சியத்தால் 3 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டம் ஒண்டிப்புலி நாயக்கனூர் கிராமத்தில் பஞ்சாயத்து சார்பாக ஆங்காங்கே மழை நீர் சேகரிப்பு தொட்டி அமைக்க திட்டமிடப்பட்டது. அதன்படி அதற்கான வேலைகள் ஊர் முழுவதும் ஆங்காங்கே நடைபெற்று வந்த நிலையில் கடந்த 48 நாட்களுக்கு முன்பாக மணிகண்டன் என்பவரது வீட்டின் அருகே மழைநீர் சேகரிப்பு தொட்டிக்காக 6 அடியில் குழி தோண்டப்பட்டது. பின் மழை பெய்ய ஆரம்பித்ததன் காரணமாக […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சாதிய ஒடுக்குமுறைக்கு எதிராகக் களமிறங்கும் லாரன்ஸ்…..!!

லிங்குசாமி இயக்கத்தில் ராகவா லாரன்ஸ் ‘ரங்கஸ்தலம்’ படத்தில் நடிக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ‘காஞ்சனா 3’ படத்தின் வெற்றிக்குப் பிறகு ராகவா லாரன்ஸ் எந்த படத்தில் நடிக்கப்போகிறார் என காத்திருந்த அவரது ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது. தெலுங்கில் சுகுமார் இயக்கத்தில் ராம் சரண், சமந்தா ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்து வெளியான ‘ரங்கஸ்தலம்’ படத்தில் லாரன்ஸ் நடிக்கவுள்ளார். சாதிய ஒடுக்குமுறைக்கு எதிராக அரசியல் பேசும் படம் ‘ரங்கஸ்தலம்’. சுகுமார் இயக்கிய இத்திரைப்படம் டோலிவுட்டில் செம […]

Categories
அரசியல் திருநெல்வேலி மாநில செய்திகள்

திருமண நிகழ்ச்சியில் பேனர்: திமுக முன்னாள் எம்எல்ஏ மீது வழக்கு…..!!

திமுக முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் அப்பாவு இல்ல நிகழ்ச்சிக்காக பேனர்கள் வைக்கப்பட்டதை அடுத்து காவல் துறையினர் அவர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். நெல்லை மாவட்டம் பணகுடி அருகே உள்ள லெப்பை குடியிருப்பு பகுதியைச் சேர்ந்தவர் அப்பாவு. ராதாபுரம் தொகுதியின் முன்னாள் திமுக சட்டப்பேரவை உறுப்பினரான இவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இவரது இரண்டாவது மகனின் திருமண விழா கடந்த 1ஆம் தேதி நடைபெற்றது. பின்பு இந்த திருமண வரவேற்பு நிகழ்ச்சி பணகுடி மெயின் ரோட்டில் உள்ள ஜான் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

கார்த்தி வாயைத்திறந்தாலே……. அந்தப் படம் பிளாக்பஸ்டர்தான்….!

அம்மா சென்டிமென்ட், பாம்பு சென்டிமென்ட் என தங்களது படம் ஹிட்டாக பல சென்டிமென்டுகளை ஹீரோக்கள் பார்க்கும் வழக்கம் கோலிவுட்டில் தொன்றுதொட்டு வரும் வேளையில், வாயைத் திறந்தால் பிளாக்பாஸ்டர் என்று ஃபார்முலாவை நடிகர் கார்த்திக்கு கண்டுபிடித்துள்ளனர். நடிகர் கார்த்தி தான் நடிக்கும் படத்தில் வாயைத் திறந்தால் போதும் அது பிளாக்பஸ்டர் என்ற புதுவித டிரெண்டை அறிமுகப்படுத்தியுள்ளனர் மீம் கிரியேட்டர்கள்.தீபாவளி ஸ்பெஷலாக கடந்த வாரம் வெளியாகி ரசிகர்களை பெரிதும் கவர்ந்து திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் படம் கைதி. கார்த்தி நடித்திருக்கும் […]

Categories
மாநில செய்திகள்

‘ரஜினியை விட திறமையானவர்கள் நிறைய பேர் உள்ளனர்’ – கொந்தளித்த சீமான்

திருவள்ளுவருக்கு காவி வேட்டி அணிவித்து, உலக பொது மறையை மறைத்து தன் வயப்படுத்த நினைக்கிறது பாஜக என்று சீமான் தெரிவித்துள்ளார். திருச்சி விமான நிலையத்தில் 2018ஆம் ஆண்டு மே 19ஆம் தேதி மதிமுகவினரும், நாம் தமிழர் கட்சியினரும் மோதிக்கொண்டதில் மதிமுக தொண்டர் ஒருவரின் மண்டை உடைந்தது.இது தொடர்பாக திருச்சி விமான நிலைய காவல்துறையினர் இருதரப்பு மீதும் வழக்குப்பதிவு செய்தனர். இதில், நாம் தமிழர் கட்சி சார்பில் அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், பிரபு, கரிகாலன், இனியன் உள்ளிட்ட […]

Categories
மாநில செய்திகள்

தமிழர்கள் சோமாலியர்கள் ஆகிவிடுவார்கள் – முகிலன் எச்சரிக்கை….!!

புதிய வேளாண் ஒப்பந்த சட்டத்தால் தமிழர்கள் சோமாலியர்களாக மாறிவிடுவார்கள் என்பதால் அனைவரும் அச்சட்டத்தை எதிர்த்து போராட வேண்டும் என்று சமூக செயற்பாட்டாளர் முகிலன் கூறியுள்ளார். ஜல்லிக்கட்டுக்கு அனுமதி வேண்டி மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து கடந்த 2017ஆம் ஆண்டு மதுரை மாவட்டத்தில் அலங்காநல்லூர், தமுக்கம் மைதானம் உள்ளிட்ட பல இடங்களில் போராட்டம் நடத்தப்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்ட 64 பேர்மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்றுவரும் நிலையில், ஜல்லிக்கட்டு போராட்டம் தொடர்பான வழக்கில் இன்று மதுரை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

HBD Tabu – நடைபோடும் பூங்காற்றே… பூங்காற்றே…!!

தேசிய விருது பெற்ற நடிகை தபுவின் (tabu) 48ஆவது பிறந்தநாள் இன்று. அவரைப் பற்றி சிறு தொகுப்பு… ‘காதல் தேசம்’ படத்தின் மூலமாக தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் தபு. அதன்பிறகு ‘கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்’, ‘ஸ்நேகிதி’ என சில தமிழ் படங்களில் தபு நடித்திருக்கிறார். ஆனால் பாலிவுட், டோலிவுட்டில் அவர் மிக முக்கியமான நடிகை. இந்திய சினிமா பெருமை கொள்ளத்தக்க நடிகை தபு என்று சொன்னால் அது மிகையாகாது. ‘சாந்தினி பார்’, ‘மாச்சிஸ்’ ஆகிய படங்களில் நடித்ததற்கு சிறந்த […]

Categories
கல்வி பல்சுவை மாநில செய்திகள்

”மெட்ரிகுலேஷன் பள்ளிகளுக்கு செக்” எச்சரித்த பள்ளிக்கல்வித் துறை ….!!

தொடர் அங்கீகாரமின்றி செயல்பட்டுவரும் மெட்ரிகுலேஷன் பள்ளிகள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுத்து நிரந்தரமாக மூடப்படும் என்று பள்ளிக்கல்வித் துறை எச்சரித்துள்ளது. தமிழ்நாட்டில் இயங்கும் மெட்ரிகுலேஷன் பள்ளிகள் மூன்று ஆண்டிற்கு ஒருமுறை தொடர் அங்கீகாரம் பெறவேண்டும். இந்தாண்டு தொடர் அங்கீகாரம் பெறாமல் இயங்கிவரும் மெட்ரிகுலேஷன் பள்ளிகளின் பட்டியலை அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் வெளியிட்டனர். மேலும் விரைவில் பள்ளிகள் அங்கீகாரம் பெற வேண்டுமெனவும் அறிவுரை வழங்கினர். ஆனாலும் 200க்கும் மேற்பட்ட பள்ளிகள் தொடர் அங்கீகாரம் பெறாமல் இயங்கி வருகின்றன. இந்நிலையில், […]

Categories
மாநில செய்திகள்

ரயில் நிலையங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்….. திருட்டு செல்போனில் பேசிய இளைஞர் கைது….!!

ஈரோடு, தூத்துக்குடி உள்ளிட்ட ரெயில் நிலையங்களில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாக மிரட்டல் விடுத்த நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ஈரோடு தூத்துக்குடி சேலம் ஆகிய ரயில் நிலையங்களில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாக சென்னை காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு மர்ம நபர் ஒருவர் செல்போனில் மிரட்டல் விடுத்தார். இதனைத்தொடர்ந்து அந்த ரயில் நிலைய பகுதிகளில் நடத்தப்பட்ட தீவீர சோதனைக்கு பின்பு அவை வெறும் புரளி என்பது தெரியவந்தது. இதனிடையே செல்போனில் மிரட்டல் விடுத்த சந்தோஷ் என்பவரை காவல்துறையினர் கைது செய்தனர். பின் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

பயன்பாடற்ற ஆழ்துளை கிணறுகளை பயன்படுமாறு மூடினால் ரூ22,000 பரிசு……. மாவட்ட ஆட்சியர் அதிரடி சலுகை….!!

பயன்பாட்டில் இல்லாத ஆழ்துளை கிணற்றில் மழை நீர் சேகரிப்பு தொட்டி அமைப்பதற்கு 22,000 ரூபாய் வழங்கப்படும் என்று தேனி மாவட்ட ஆட்சியர் பள்ளவி பல்தேவ் தெரிவித்துள்ளார். தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே லட்சுமிபுரம் கிராமத்தில் பயன்பாட்டில் இல்லாத ஆழ்துளை கிணற்றில் மழை நீர் சேகரிப்பு தொட்டி அமைப்பது குறித்து செயல்முறை விளக்கம் மாவட்ட ஆட்சியர் பள்ளவி பல்தேவ் தலைமையில் நடைபெற்றது. அப்போது பேசிய அவர், ஆழ்துளை கிணற்றில் மழை நீர் தொட்டி அமைக்க 22 ஆயிரம் ரூபாயும் […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

30 லட்சம் செலவில் தடுப்பு சுவர்……. 3 மாதத்தில் இடிந்து விழுந்த அவலம்…… கொந்தளிப்பில் கிராம மக்கள்….!!

தஞ்சாவூர் மாவட்டம் ஆத்தூர் அருகே ஆற்றங்கரையை ஒட்டி 30 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்ட தடுப்புச் சுவர் மூன்று மாதங்கள் கூட நிறைவடையாத நிலையில் இடிந்து விழுந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. தஞ்சாவூர்மாவட்டம் ஆத்தூர் பகுதியை அடுத்த கிராம பகுதிகளில் வெண்ணாறு கரையோரம் இருநூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்நிலையில் கிராமத்திற்குள் மழைக்காலங்களில் ஆற்று நீர் புகுந்து செல்லும் அபாயம் ஏற்படுகிறது. பல ஆண்டு கால போராட்டத்திற்கு பிறகு இந்த பிரச்சனைக்கு தீர்வு காணும் விதமாக […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

1 1/2 கிலோ நகைகள் திருட்டு…… நகைக்கடையில் ஓட்டையிட்ட கொள்ளையர்களுக்கு போலீஸ் வலைவீச்சு….!!

காஞ்சிபுரம் மாவட்டம் படூர் அருகே நகை கடை சுவரில் துளையிட்டு கடைக்குள் இருந்த வெள்ளி பொருட்களை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர். காஞ்சிபுரமாவட்டம் படூர் கூட்டு ரோட்டில் நாராயணன் என்பவருக்கு சொந்தமான பவானி அடகு கடை மற்றும் பாத்திர கடை இயங்கி வருகிறது. இந்நிலையில் இரவில் கடை அடைக்கப்பட்டிருந்த சிறிது நேரத்திலையே கடையின் பின்பக்க சுவரில் துளையிட்டு உள்ளே சென்ற மர்ம நபர்கள் கடையிலிருந்த வெள்ளி மெட்டி, கொலுசு, வெள்ளி மோதிரம் என சுமார் அரை கிலோ […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

கடல் ஆமையை பாதுகாக்க ரூ2,00,00,000 ஒதுக்கீடு…….. அரசாணை வெளியிட்ட தமிழக அரசு….!!

நாகை மாவட்டம் கோடியக்கரை வன சரணாலயத்தில் கடலாமை பாதுகாப்பு மையம் அமைக்க இரண்டு கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. கடல் ஆமை மற்றும் கடல் சார்ந்த  அரிய வகை உயிரினங்களை பாதுகாக்க பாதுகாப்பு மையம் அமைக்க ரூ 2 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு  அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.அதில்,கடல் ஆமை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் உலகத் தரம் வாய்ந்த முப்பரிமான அருங்காட்சியகம் அமைக்கப்படும் எனவும்  அது சூரிய மின் சக்தியை கொண்டு இயங்கும் […]

Categories
பல்சுவை மாநில செய்திகள் வானிலை

காற்றழுத்த தாழ்வு பகுதி …. ”5 நாட்களுக்கு கடலுக்கு போகாதீங்க” மீனவர்களுக்கு எச்சரிக்கை …!!

புதிய காற்றழுத்தத்தாழ்வு பகுதியால் 5 நாட்கள் மீனவர்கள் கடலுக்கு செல்லவேண்டாமென்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இன்று செய்தியாளர்களை சந்தித்த வானிலை ஆய்வு மைய இயக்குனர் கூறும் போது , புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி அந்தமான் கடற்பகுதியில் உருவாகி உள்ளது. இது வடமேற்கு திசையில் நகர்ந்து அடுத்த இரண்டு மூன்று தினங்களில் மத்திய கிழக்கு வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் என்று தெரிவித்தார். அதே போல தமிழகத்தை பொறுத்தவரை இரண்டு […]

Categories
மாநில செய்திகள்

நீட் தேர்வை ஏன் திரும்ப பெறக்கூடாது ? உயர்நீதிமன்றம் காட்டம் …!!

நீட் தேர்வை ஏன் திரும்ப பெறக்கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.  நீட்தேர்வு ஆள்மாறாட்டம் குறித்த பல்லக்கு  கிருபாகரன் மற்றும் வேல்முருகன் அமர்வு விசாரித்தது இந்த வழக்கின் இன்றைய விசாரணையில் ஆள்மாறாட்டம் தொடர்பாக சிபிசிஐடி வழக்கறிஞர் தேசிய தேர்வு முகமையிடம் நீட் தேர்வு எழுதிய மாணவர்கள்  கைரேகை , ஆவணங்கள் பெறப்பட்டதாகவும் , தனியார் மருத்துவக் கல்லூரிகள் அரசு மருத்துக் கல்லூரி மற்றும் நிகர் நிலைப் பல்கலைக் கழகங்களில் விசாரணை நடைபெற்று வருவதாகவும், எவ்வளவு காலத்தில் விசாரணையை முடிக்க […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

திருமண விழாவில் அசிங்கமா பேசிய இளைஞர்…… கத்தி குத்தால் மரணம்……. தூத்துக்குடியில் பரபரப்பு….!!

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே திருமண வரவேற்பு வீட்டில் குடி போதையில் தகராறு செய்த இளைஞர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டார். தூத்துக்குடி  மாவட்டம் திருச்செந்தூர் அருகே  ராணி மகாராஜா புரத்தைச் சேர்ந்த மாரிமுத்து என்பவரது மகன் ராஜாவின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நேற்று இரவு நடைபெற்றது. அப்போது அதே ஊரைச் சேர்ந்த ரவிக்குமார் என்பவர் குடி போதையில் தகாத வார்த்தைகளால் பேசி தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதனை அடுத்து குமாரை மர்ம நபர் ஒருவர் கத்தியால் […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

15 அடி ஆழம்……. வீட்டின் பின்னால் திடீர் பள்ளம்…… குழப்பத்தில் போலீஸ்……. அச்சத்தில் கிராமமக்கள்….!!

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே வீட்டின் தரை பகுதியில் திடீரென பள்ளம் ஏற்பட்டது. விழுப்புரம் மாவட்டம்  செஞ்சி பகுதியை அடுத்த அஞ்சாச்சேரி கிராமத்தைச் சேர்ந்த ராமச்சந்திரன் என்பவர் நேற்று தன்னுடைய வீட்டை சுற்றியுள்ள செடிகளை அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்தார்.  அப்போது வீட்டின் சுவர் அருகே பள்ளம் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அந்தப் பள்ளம் சுமார் 10 அடி அகலம் 15 அடி ஆழத்திற்கு நீர் நிறைந்து காணப்பட்டது. இது பற்றி தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

+2 மாணவி பாலியல் பலாத்காரம்……. இளைஞன் போஸ்கோ சட்டத்தின் கீழ் கைது…….. சென்னையில் பரபரப்பு…..!!

சென்னை திருமுல்லைவாயல் பகுதியில் பிளஸ் 2 மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த இளைஞன் போஸ்கோ சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டான். சென்னை  திருமுல்லைவாயில் பகுதியை அடுத்த அரிக்கமேட்டுப் பகுதியை சேர்ந்த குருபிரசாத் என்பவன் பிளஸ்டூ மாணவி ஒருவரை காதலித்து வந்துள்ளார். அந்த மாணவியிடம் ஆசை வார்த்தை கூறி திருமணம் செய்து கொள்வதாகவும் வீட்டை விட்டு வருமாறு அழைத்த பொழுது மாணவி வர  மறுத்ததாக சொல்லப்படுகிறது. இதனால் அந்த மாணவியை கடந்த மாதம் முப்பதாம் தேதி குருபிரசாத் […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

“நில தகராறு” அதிமுக பிரமுகர் படுகாயம்……. 18 பேர் மீது வழக்கு…..!!

திருவாரூர் மாவட்டத்தில் நிலத்தகராறு ஏற்பட்ட தகராறில் அதிமுக முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் படுகாயம்அடைந்தார். திருவாரூர் மாவட்டம் மேட்டுப்பாளையம் பகுதியைச் சேர்ந்த பரமசிவத்தின் உறவினரான ஜெயமாலினி என்பவர் நிலம் வாங்கியது தொடர்பாக அதே ஊரைச் சேர்ந்த கோபாலன் என்பவருடன் பிரச்சினை இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று அந்த வயலில் வேலை செய்து கொண்டிருந்த ஜெயமாலினி மற்றும் பரமசிவம் ஆகியோர் உடன், அங்கு வந்த கோபால், ராமன் மற்றும் பலர் வாக்குவாதத்தில் ஈடுபட்டு கூரிய கற்களால் தாக்கியதாக […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

மின்னல் தாக்கி இளம்பெண் பலி… 2 பேர் காயம்..!!

விழுப்புரத்தில் மின்னல் தாக்கியதில் இளம்பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். காயமுற்ற இருவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். விழுப்புரம் அருகே உள்ள தளவானூர் பகுதியைச் சேர்ந்தவர் கர்ணன். இவரது மனைவி நித்யா என்கிற சிவப்பிரியா (23). நித்யாவும், அதேபகுதியைச் சேர்ந்த விசாலாட்சி என்பவரும் தென்பெண்ணை ஆற்றங்கரையோரம் ஆடு மேய்த்துக் கொண்டிருந்தார்கள். அப்போது திடீரென அப்பகுதியில் சூறாவளி காற்று மற்றும் இடியுடன் கூடிய கனமழை பெய்தது. அப்போது திடீரென இடி தாக்கியது. இதில் நித்யா சம்பவ இடத்திலேயே பலியானார். ஆபத்தான […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

மாஞ்சா நூல் அறுத்து 3 வயது குழந்தை பலி…. 2 பேரை கைது செய்தது போலீஸ் …!!

மாஞ்சா நூல் அறுத்து 3 வயது குழந்தை இறந்த விவகாரத்தில் 2 பேரை பொலிஸார் கைது செய்துள்ளார். நேற்று மாஞ்சா நூல் அறுத்து 3 வயது குழந்தை உயிரிழந்த சம்பவம் சென்னையில் சோகத்தை ஏற்படுத்தியது . இது தொடர்பாக ஆர்கே நகர் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். போலீஸ் நடத்திய விசாரணையில் அந்த மாஞ்சா நூல் காமராஜர் பகுதியில் இருந்து பறந்து வந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து நாகராஜ் என்பவரையும் ,  15 வயது சிறுவன் ஒருவனையும்  காவல்துறையினர் கைது செய்கிறார்கள். 2 பேரிடமும் காவல்துறையினர் […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

“மாணவர்களை காப்பாற்றிய SUNDAY” கனமழையில் இடிந்து விழுந்த பள்ளிக்கூடம்…… திருவள்ளூரில் பரபரப்பு….!!

திருவள்ளூர் மாவட்டம் மேலூர் பகுதியில் அரசு நிதி உதவிபெறும் தொடக்கப்பள்ளி இடிந்து விழுந்தது. திருவள்ளூர் மாவட்டம் மேலூர் பகுதியில் இயங்கி வரும் ANM என்ற அரசு நிதி உதவி பெறும் தொடக்கப் பள்ளியில் சுமார் 40க்கும் மேற்பட்ட மாணவர்கள் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை பயின்று வருகின்றனர். இந்நிலையில் பள்ளியில் பக்கவாட்டு சுவர்கள் கடந்த சில தினங்களாக பெய்த மழையில் நனைந்து பழுதடைந்து காணப்பட்டது. இந்நிலையில் நேற்று இரவு அந்த பள்ளியின் கட்டிடம் திடீரென இடிந்து […]

Categories

Tech |