Categories
மாநில செய்திகள்

ஆய்வில் குறை உள்ளது…….. 2050இல் நீரில் மூழ்குமா தமிழகம்…… வெதர்மேன் கருத்து….!!

2050இல் தமிழகத்தின் முக்கிய பகுதிகள் நீரில் மூழ்கும் என்று கூறப்பட்ட கருத்தில் குறை இருப்பதாக தமிழ்நாடு வெதர் மேன்  தெரிவித்துள்ளார். 2050ஆம் ஆண்டு தமிழகத்தில் உள்ள முக்கிய இடங்கள் நீரில் மூழ்கும் என்ற எஸ்ஆர்டிஎம் ஆய்வில் சிறிய குறை இருக்கிறது என்று தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். அம்பத்தூரில் பேசிய அவர், 2050க்குள் தமிழகத்தின் முக்கிய நகரங்கள் 3 மீட்டர் உயரம் வரை நீர் சூழ்ந்து மூழ்கும் என்று ஆய்வில் கணக்கிடப்பட்டு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. மூழ்கும் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

காவி உடையா ? கொதித்தெழுவார்கள்….. பதிலடி கொடுப்பார்கள்…. வைகோ ஆவேசம் …!!

திருவள்ளுவர் குறித்து பாஜக பதிவிட்டுள்ள கருத்து சர்சையை ஏற்படுத்திய நிலையில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார். கடந்த வெள்ளியன்று தமிழ்நாடு பாஜகவின் ட்விட்டர் பக்கத்தில் வெளியான பதிவு ஒன்று பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. பாஜக இட்ட அந்த பதிவில் காவி உடையணிந்து நெற்றியில் திருநீற்றைப் பூசியிருப்பது போல் திருவள்ளுவரின் படம் பதிவிடப்பட்டிருந்தது. இதற்க்கு திமுக உட்பட பல்வேறு கட்சிகள் கண்டனம் தெரிவித்தனர். அகர முதல எழுத்தெல்லாம் ஆதிபகவன் முதற்றே உலகு குறள் விளக்கம்: எல்லா எழுத்துக்களும் […]

Categories
தேசிய செய்திகள் மாநில செய்திகள்

“இந்தியப் பொருளாதாரத்தில் முக்கியப் பங்கு வகிக்கிறது கடல்வளம்” – வெங்கையா நாயுடு.!!

கடல்வளம் இந்தியப் பொருளாதாரத்தில் முக்கியப் பங்கு வகிப்பதாக குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார். சென்னை பள்ளிக்கரணையில் உள்ள தேசிய கடல் தொழில்நுட்பக் கழகத்தின் வெள்ளி விழாவில் குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு கலந்துகொண்டு உரையாற்றினார். இந்த நிகழ்வில், தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித், துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், அமைச்சர்கள் ஜெயக்குமார், உதயகுமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இதில் பேசிய குடியரசுத் துணைத் தலைவர், “கடல் வளம் இந்தியாவின் பொருளாதாரத்தில் முக்கியப் பங்கு வகிக்கின்றது. […]

Categories
மாநில செய்திகள்

திருக்குறளுக்கு புதிய விளக்கம் கொடுத்த ஹெச். ராஜா ட்வீட்டால் சர்ச்சை…!!

 ‘திருக்குறள் படித்து திருந்தப் பாருங்கள்’ என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் ட்வீட் செய்திருந்த நிலையில், அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாஜக தேசிய செயலாளர் ஹெச். ராஜா ட்வீட் செய்துள்ளார். கடந்த வெள்ளியன்று தமிழ்நாடு பாஜகவின் ட்விட்டர் பக்கத்தில் வெளியான பதிவு ஒன்று பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. பாஜக இட்ட அந்த பதிவில் காவி உடையணிந்து நெற்றியில் திருநீற்றைப் பூசியிருப்பது போல் திருவள்ளுவரின் படம் பதிவிடப்பட்டிருந்தது. மானுட நேயத்தைப் போதித்த திருவள்ளுவருக்கு மதச்சாயம் பூசுவது கண்டிக்கத்தக்கது […]

Categories
பல்சுவை

”பெட்ரோல் , டீசல் விலை குறைவு” வாகன ஓட்டிகள் நிம்மதி …..!!

பெட்ரோல் , டீசல் விலை குறைந்து விற்பனை செய்யப்படுவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தொடர்ந்து அதிகரித்து வந்த பெட்ரோல் மற்றும் டீசல் விலை தீடிரென சரியத் தொடங்கியது. பின்னர் ஏற்றம் , இறக்கமாக இருந்து வருகின்றது . இதனால் வாகன ஓட்டிகள் தினம் தினம் என்ன விலை இருக்குமோ என்று சற்று குழம்பியே இருக்கின்றனர். ஒருநாள் அதிகமாகவும், ஒருநாள் குறைவாகவும், ஒருநாள் ஏற்ற இறக்கம் இல்லாமல் நிலையாகவும் இருந்து வருகின்றது.   விலை நிர்ணயம் : சர்வதேச சந்தை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

‘வாரிசு இருந்தால்தான் அரசியலுக்கு வரமுடியும்’ – ஸ்டாலின் காட்டம்

வாரிசு இருந்தால்தான் அரசியலுக்கு வரமுடியும், வாரிசு இல்லையென்றால் எப்படி வர முடியும் என திமுக தலைவர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். புதுக்கோட்டையில் நடைபெற்ற திமுக நிர்வாகியின் இல்லத் திருமண விழாவில் அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் கலந்துகொண்டார். அப்போது அவர் பேசுகையில், ‘பெரியார், அண்ணா, கலைஞர் என அனைவரும் இன்றும் நம் உயிரோடு கலந்து உள்ளனர். அவர்கள் நம்மோடு இருக்கும் வரை எந்த கொம்பனாலும் இங்கு வந்து நுழைந்து விட முடியாது. வாரிசு அரசியலை பற்றி சிலர் விமர்சனம் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

”குறளை தப்பு இல்லாம சொல்லுங்க” அசிங்கபட்ட முக.ஸ்டாலின் ….!!

முக.ஸ்டாலின் திருக்குறளை தவறுமின்றி உச்சரித்தால் பாஜக பதிவை நீக்கி விடுகின்றோம் என்று பாஜக தெரிவித்துள்ளது. நேற்று தாய்லாந்தில் தாய் மொழியில் திருக்குறளை பிரதமர் மோடி வெளியிட்டார்.அதனை ஒட்டி தமிழக பாஜக சார்பில் டுவிட்டரில் காவி உடை நெற்றியில் விபூதியுடன் திருவள்ளுவர் படத்தை வெளியிட்டு செய்தி ஒன்று பதிவிடப்பட்டது. அதில் திருக்குறள் ஒன்றை பதிவிட்டு அதில் இறை நம்பிக்கை உள்ளவர்களை படிப்பவர்களுக்கு அவர்கள் கற்ற கல்வியால் என்ன பயன் என கேள்வி எழுப்பி உள்ளது அந்த குறளை கற்று திராவிடர் கழகமும் திமுகவை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

தமிழ் துரோகம் …. ”படிச்சு திருந்துங்க” …. பாஜகவுக்கு ஸ்டாலின் வேண்டுகோள் …!!

எத்தனை வர்ணம் பூசினாலும், உங்கள் வர்ண சாயம் வெளுத்துவிடும் என்று திமுக தலைவர் முக.ஸ்டாலின் ட்வீட் செய்துள்ளார். திருவள்ளுவர் தொடர்பான தமிழக அரசின் அதிகாரப்பூர்வ படத்தில் மதரீதியான அடையாளம் எதுவும் இருக்காது. இந்நிலையில் நேற்று தாய்லாந்தில் தாய் மொழியில் திருக்குறளை பிரதமர் மோடி வெளியிட்டார்.அதனை ஒட்டி தமிழக பாஜக சார்பில் டுவிட்டரில் காவி உடை நெற்றியில் விபூதியுடன் திருவள்ளுவர் படத்தை வெளியிட்டு செய்தி ஒன்று பதிவிடப்பட்டது. அதில் திருக்குறள் ஒன்றை வெளியிட்டுள்ளது. இறை நம்பிக்கை உள்ளவர்களை படிப்பவர்களுக்கு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

”காவி உடையில் வள்ளுவர்” நம்பி வாழும் கம்யூனிஸ்ட் ….. கிளம்பிய சர்சை …!!

காவி உடை நெற்றியில் விபூதியுடன் திருவள்ளுவர் படத்தை தமிழக பாஜக வெளியிட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளுவர் தொடர்பான தமிழக அரசின் அதிகாரப்பூர்வ படத்தில் மதரீதியான அடையாளம் எதுவும் இருக்காது. இந்நிலையில் நேற்று தாய்லாந்தில் தாய் மொழியில் திருக்குறளை பிரதமர் மோடி வெளியிட்டார்.அதனை ஒட்டி தமிழக பாஜக சார்பில் டுவிட்டரில் காவி உடை நெற்றியில் விபூதியுடன் திருவள்ளுவர் படத்தை வெளியிட்டு செய்தி ஒன்று பதிவிடப்பட்டது. அதில் திருக்குறள் ஒன்றை வெளியிட்டுள்ளது. இறை நம்பிக்கை உள்ளவர்களை படிப்பவர்களுக்கு அவர்கள் கற்ற […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

விபத்தில் இறந்த கணவன்….. தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட மனைவி….. காஞ்சிபுரத்தில் சோகம்….!!

காஞ்சிபுரம் மாவட்டத்தில்  விபத்தில் சிக்கி கணவர் இறந்த துக்கத்தில் அவரது  இளம் மனைவியும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  கன்னியாகுமாரி மாவட்டத்தை  சேர்ந்த பாலாஜி ரிஷித்தா ஆகியோருக்கு திருமணம் நடந்து ஓராண்டு நிறைவடைந்துள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை பணிக்கு  இருசக்கர வாகனத்தில் சென்ற பாலாஜி விபத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார். இதனால் துக்கம் தாளாது அவரது மனைவி ரிஷித்தா சனிக்கிழமை இரவு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். பிரேத பரிசோதனை முடிவில் கணவரின் […]

Categories
அரசியல் கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

சாலையை சரி பண்ணலைனா மறியல் தான்…… காங்கிரஸ் MP எச்சரிக்கை….!!

பழுதாக உள்ள தேசிய நெடுஞ்சாலைகளை சீரமைக்கவில்லையென்றால் சாலை மறியலில் ஈடுபடுவோமென காங்கிரஸ் MP வசந்த குமார் தெரிவித்துள்ளார். கன்னியாகுமரி மாவட்டத்தில் பழுதான தேசிய நெடுஞ்சாலைகளை உடனடியாக சீரமைக்க வில்லை என்றால் வருகின்ற 16ஆம் தேதி மாவட்டம் முழுவதும் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினர் வசந்த குமார் தெரிவித்துள்ளார். கன்னியாகுமரி மாவட்ட திமுக மற்றும் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டாக இணைந்து நாகர்கோவில் அரசு விருந்தினர் மாளிகையில் செய்தியாளர்களை சந்தித்த போது  அவர் […]

Categories
மாநில செய்திகள்

கனமழை, வரத்து குறைவு …… கண்ணீரை வர வைக்கும் வெங்காய விலை …!!

கன மழை மற்றும் வரத்துக் குறைவு காரணமாக மீண்டும் வெங்காயத்தின் விலை பல மடங்கு உயர்ந்துள்ளது. தமிழகத்தில் விற்பனை செய்யப்படும் பெரிய வெங்காயம் கர்நாடகா , ஆந்திரா மாநிலங்களில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. தற்போது அங்கு மழை பெய்து வருவதால் வெங்காயத்தின் வரத்து குறைந்து விலை அதிகரித்துள்ளது. கடந்த வாரம் கிலோ 50 ரூபாய்க்கு விற்கப்பட்ட நாசிக் வெங்காயம் தற்போது 65 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இதேபோல் ஆந்திர வெங்காயம் 30 ரூபாயில் இருந்து 45 ரூபாயாக அதிகரித்துள்ளது. சின்ன […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

வெளுத்து வாங்கிய கனமழை…… சரிந்து விழுந்த ஓட்டு வீட்டு…… நெல்லையில் பரபரப்பு…!!

நெல்லை மாவட்டம் வீரமணிபுரத்தில் நேற்று இரவு பெய்த மழையில் ஓட்டு வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்தது. நெல்லை  மாவட்டங்களில் கடந்த இரண்டு தினங்களாக மழை சற்று ஓங்கி இருந்த நிலையில், இன்று அதிகாலை முதல் மாவட்டத்திலுள்ள பல்வேறு இடங்களிலும் கனமழை பெய்தது. இந்த நிலையில் வீரமணிபுரத்தை  சேர்ந்த சிவகாமி அம்மாள் என்பவரின் பழைய ஓட்டு வீட்டின் மேற்கூரை மழையால் இடிந்து விழுந்து முற்றிலும் சேதமானது. உறவினர் இல்லத் திருமண விழாவிற்காக சிவகாமி அம்மாள் வீட்டை பூட்டிவிட்டு பேட்டை […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

கை கொடுத்த பருவ மழை…… கதிர் விட்ட மக்காசோளம்…… திகைப்பூட்டும் மகிழ்ச்சியில் விவசாயிகள்….!!

விழுப்புரம் மாவட்டம் கல்லிடைக்குறிச்சி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பருவ மழையை நம்பி பயிரிடப்பட்ட மக்காச் சோளப் பயிர்கள் செழித்து வளர்ந்து கதிர் விடுத்துள்ளனர். விழுப்புரம்  மாவட்டத்தில் மாணாவரி நீர்ப்பாசனத் திட்டத்தின் கீழ் கள்ளக்குறிச்சி, சின்னசேலம், கச்சராபாளையம், சங்கராபுரம் உள்ளிட்ட பல பகுதிகளில் மக்காச் சோளப் பயிர்கள் பல ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டுள்ளன. மக்காச் சோளப் பயிர்கள் விரிந்து வளரும் தன்மை கொண்டதால், பெரிய அளவில் பராமரிப்பு செலவு விதமான லாபத்தை ஈட்டித் தரக்கூடிய பயிர்கள் என்கின்றனர். […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

பஞ்சர் ஆன லாரி மீது மோதிய டூவீலர்…… கல்லூரி மாணவர்கள் 2 பேர் மரணம்….. சென்னையில் நிகழ்ந்த சோகம்…!!

சென்னை அம்பத்தூர் அருகே பாடி சாலையில்  பழுதாகி நின்ற லாரி மீது அதிவேகமாக சென்ற இருசக்கர வாகனம் மோதி விபத்துக்குள்ளானது. சென்னை அம்பத்தூர் பகுதியை அடுத்த  பாடி சாலையில் பழுதாகி நின்ற லாரி மீது அதிவேகமாக சென்ற இருசக்கர வாகனம் மோதி விபத்துக்குள்ளானது. இந்த  விபத்தில் பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் 3 பேர் சிக்கியுள்ளனர். பச்சையப்பன் கல்லூரி மாணவர்களான பிரசாந்த், சதீஷ் மற்றும் அவரது நண்பர் விஜய் ஆகியோர் திருமண நிகழ்ச்சிக்கு சென்று விட்டு பின்  சனிக்கிழமை […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

அணைக்குள்ள விடாதீங்க…… சிறுவர்களுக்கு ஆபத்து…… எச்சரிக்கும் சமூக ஆர்வலர்கள்….!!

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே உள்ள தொழுதூர் அணையின் வடிகட்டியில் ஆபத்தை உணராமல் சிறுவர்கள் குளித்து வருவதாக சமூக ஆர்வலர்கள் எச்சரித்துள்ளனர். கடலூர் மாவட்டத்தில் கடந்த 4 நாட்களாக கனமழை பெய்ததால் ஆங்காங்கே நீர் நிலைகள் நிரம்பி வருகின்றன.  இந்நிலையில் அணை அருகில் உள்ள சிறு கால்வாய் தொட்டியில் தண்ணீர் தேங்கி வருகின்றன. குறுகிய ஆழமுடைய சிமெண்ட் வடிகால் தொட்டியில் சிறுவர்கள் டைவ் அடித்து விளையாடுவதால் அவர்களது அடிப்பகுதியில் ஏற்படும் அபாயம் உள்ளதாகவும் சிறுவர்களை அணை பகுதிக்குள் […]

Categories
சினிமா தமிழ் சினிமா பல்சுவை

‘மன்னவன் வந்தானடி’ தேவதையின் அசத்தல் புகைப்படங்கள் ….!!

இயக்குநர் செல்வராகவனின் ‘மன்னவன் வந்தானடி’ படத்தில் சந்தானத்துக்கு ஜோடியாக நடிக்கிறார் நடிகை ஆதிதி போஹங்கர். 2010ஆம் ஆண்டில் இந்தி திரையுலகில் அறிமுகமான இவர், ‘ஜெமினிகணேசனும் சுருளிராஜனும்’ படத்தின் மூலமாக தமிழ் திரையுலகுக்கு அறிமுகமானார். இவரது லேட்டஸ்ட் புகைப்படங்கள் பின்வருவாறு.. அங்கே என்ன தெரிகிறது? ஸ்டைலிஷ் தமிழச்சி காட்டன் சாரி கட்டி வந்த கள்ளியே! சுடிதார் அணிந்து வந்த சொர்க்கமே! பாக்காத என் பச்ச கிளியே! எட்டிப் பார்க்கும் பட்டாம்பூச்சி மென் வெயிலில் ஒரு கோப்பைத் தேநீர் இளம்பச்சை […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

6 நாட்களுக்கு பிறகு…… தடை நீக்கம்…… கன்னியகுமாரியில் குளித்து மகிழும் சுற்றுலா வாசிகள்…!!

கன்னியாகுமரி மாவட்டம் திற்பரப்பு அருவியில் ஆறு நாட்களுக்குப் பிறகு சுற்றுலா பயணிகளுக்கு குளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் தொடர் மழை பெய்து வந்தாலும் சிற்றாறு அணையில் இருந்து உபரி நீர் வெளியேற்றப்பட்டு வந்ததாலும்  கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள திற்பரப்பு அருவியில் குளிக்க கடந்த 6 நாட்களாக சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. தற்போது மழையின் அளவு குறைந்துள்ளதால் அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று விடுமுறை தினம் என்பதால் […]

Categories
மாநில செய்திகள்

உண்மை என்ன என்பது மக்களுக்குத் தெரியும்… சுஜித் பெற்றோருக்கு டிடிவி தினகரன் ஆறுதல்…!!

மணப்பாறை அருகேயுள்ள சுஜித் இல்லத்திற்குச் சென்ற அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், சுஜித்தின் பெற்றோர்களுக்கு ஆறுதல் கூறினர். திருச்சி மணப்பாறை அடுத்துள்ள நடுக்காட்டுப்பட்டியில் ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்த இரண்டு வயது குழந்தை சுஜித் உயிரிழந்தார். அவரது மறைவுக்கு நாடே அஞ்சலி செலுத்தி வருகிறது. இந்நிலையில், சுஜித் இல்லத்திற்குச் சென்ற அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அங்கிருந்த சுஜித் உருவப்படத்திற்கு மரியாதை செலுத்தினார். தொடர்ந்து சுஜித்தின் பெற்றோர்களுக்கு ஆறுதல் கூறினார். அதனைத்தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “குழந்தையை […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

பெண் காவலரிடம் அடிதடி…… அத்துமீறல் வழக்கு…… முன்னாள் காவல் ஆய்வாளர் கைது….!!

சென்னை ஆலந்தூரில் பெண் காவலரை அடித்து துன்புறுத்திய புகாரின் பேரில் காவலர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.  சென்னை ஆலந்தூர் குடியிருப்பில் வசித்து வரும் காவலர் உமா மகேஸ்வரி என்பவருக்கும், டில்லிபாபு என்பவருக்கும் 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. டில்லி பாபு மடிப்பாக்கம் காவல் நிலையத்தில் பணிபுரிந்த சமயத்தில்  சரிவர பணிக்கு வராததால் காவல்துறை சார்பில் அவருக்கு விருப்ப ஓய்வு கொடுத்து பணியில் இருந்து நீக்கி விட்டனர். இந்நிலையில் டில்லி பாபு காவலராக பணிபுரிந்து வரும்  உமா மகேஸ்வரியை […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

“தடை நீக்கம்” சுருளி அருவியில் ஆனந்த குளியல்…….தேனியில் குவியும் கூட்டம்….!!

தேனி மாவட்டம் சுருளி அருவியில் நான்கு நாட்களுக்கு பிறகு தடை நீக்கப்பட்டு குளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.  தேனி மாவட்டத்தில் சுருளி அருவியில் குளிக்க  விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மிகவும் பிரபலமான சுற்றுலா மற்றும் ஆன்மிக தலமாக  சுருளி அருவி விளங்குவதால் அங்கு அதிகப்படியான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்த கனமழையால் சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் பாதுகாப்பு கருதி […]

Categories
பல்சுவை மாநில செய்திகள் வானிலை

18 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு……. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை….!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவக்காற்று காரணமாகா  பல்வேறு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை  ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வடகிழக்கு பருவக்காற்று மற்றும் வெப்ப சலனம் காரணமாக 18 மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, சிவகங்கை, விருதுநகர், திண்டுக்கல், மதுரை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர், விழுப்புரம், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, ராமநாதபுரம், […]

Categories
திருவண்ணாமலை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

80 மணி நேரம் மரணத்துடன் போராடிய தருணம் கொடுமையானது… சுஜித் நினைவாக கல்வெட்டு..!!

தென் அரசம்பட்டு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் சுஜித் நினைவாக கல்வெட்டு திறக்கப்பட்டது. திருவண்ணாமலை மாவட்டம் திண்டிவனம் சாலை, தென் அரசம்பட்டு கிராமத்தில் இயங்கிவரும் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில், மூடப்படாத ஆழ்துளைக் கிணறு ஒன்று மழைநீர் சேகரிப்புத் தொட்டியாக மாற்றப்பட்டது. அப்போது ஆழ்துளைக் கிணற்றில் விழுந்து உயிரிழந்த சுஜித்திற்கு மவுன அஞ்சலியும் சுஜித் நினைவாக கல்வெட்டும் திறக்கப்பட்டது. இதனை திருவண்ணாமலை ஆட்சியர் கந்தசாமி திறந்துவைத்தார். இந்தக் கல்வெட்டில், “நான் சுஜித் பேசுகிறேன், நான் திருச்சி மாவட்டம் நடுக்காட்டுப்பட்டி […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

அரசுப் பேருந்து லாரி மீது மோதி விபத்து… ஒருவர் பலி… 12 பேர் படுகாயம்..!!

சென்னையில் அரசுப் பேருந்து கண்டெய்னர் லாரி மீது மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழந்து, 12 பேர் பலத்த காயமடைந்தனர்.  சென்னை 200 அடி சாலையில் கண்டெய்னர் லாரி ஒன்று பாடியை நோக்கி வந்துகொண்டிருந்தது. அப்போது, கண்டெய்னர் லாரியின் பின்னால் நெல்லூரிலிருந்து கோயம்பேடு வரை செல்லும் அரசுப் பேருந்து வேகமாக வந்தது. அப்போது, லாரியை முந்த அரசுப் பேருந்து முயன்றபோது நிலைதடுமாறி லாரியின் பின்பக்கத்தில் வேகமாக மோதி விபத்துக்குள்ளானது. இதில் அரசுப் பேருந்தின் நடத்துநர் வீரமுத்து (42) என்பவர் சம்பவ […]

Categories
சினிமா தமிழ் சினிமா மாநில செய்திகள்

நடிகர் செந்திலிடம் மோசடி செய்தவர் கைது.!!

நடிகர் செந்திலுக்கு சொந்தமான கட்டடத்தை வாடகைக்கு எடுத்து மோசடி செய்த நபரை காவல் துறையினர் கைது செய்தனர். சென்னை சாலிகிராமம் அருகே உள்ள பாஸ்கர் காலனி மூன்றாவது தெருவில் நடிகர் செந்திலுக்கு சொந்தமான 10 அறைகள் கொண்ட கட்டடம் உள்ளது. இதை கடந்த 2013ஆம் ஆண்டு அதே பகுதியைச் சேர்ந்த சகாயராஜ் (52) என்பவர் மாதம் இரண்டரை லட்சம் ரூபாய்க்கு வாடகைக்கு எடுத்து “சர்வீஸ் அப்பார்ட்மெண்ட்” நடத்திவந்தார். இந்நிலையில் சகாயராஜ் கடந்த 6 மாதங்களாக செந்திலுக்கு வாடகை […]

Categories
மாநில செய்திகள்

சுஜித் குடும்பத்திற்கு அரசு சார்பில் ரூ. 10 லட்சம்…. அதிமுக சார்பில் ரூ. 10 லட்சம்…. முதல்வர் அறிவிப்பு..!!

சுஜித் குடும்பத்திற்கு தமிழ்நாடு அரசு சார்பில் ரூ. 10 லட்சமும் அதிமுக சார்பில் ரூ. 10 லட்சம் நிதியுதவியாக அளிக்கப்படும் என்று முதல்வர் பழனிசாமி அறிவித்தார். திருச்சி மணப்பாறை அருகே நடுக்காட்டுப்பட்டியில் கடந்த 25 ஆம்தேதி மாலை ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்த சுஜித் என்ற 2 வயது சிறுவனை மீட்க நடைபெற்ற 80 மணி நேரப் போராட்டம் தோல்வியில் முடிந்தது. சுஜித்துக்காக நாடே அஞ்சலி செலுத்திவருகிறது. இந்நிலையில், முதலமைச்ச எடப்பாடி பழனிசாமியும் துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வமும் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

சுஜித் உருவ படத்திற்கு முதல்வர் பழனிசாமி அஞ்சலி..!!

ஆழ்துளைக் கிணற்றில் விழுந்து பலியான குழந்தை சுஜித்துக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அஞ்சலி செலுத்தினார். திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகேயுள்ள நடுகாட்டுப்பட்டியில் 2 வயதான சுஜித்  கடந்த 25 ஆம் தேதி மாலை 5: 40 மணியளவில் வீட்டின் முன் விளையாடிக் கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக அழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்தான். அவனை மீட்க கடந்த 4 நாட்களாக 80 மணி நேரத்தையும் தாண்டி மீட்பு பணி நடைபெற்றது. ஓட்டு மொத்த தமிழகமும் சுஜித் எப்படியாவது உயிருடன் வர வேண்டும் […]

Categories
மாநில செய்திகள்

ஆழ்துளை கிணற்றில் சிறுவன் சுஜித் விழுந்தது முதல் இறுதி வரை..!!

ஆழ்துளை கிணற்றில் சிறுவன் சுஜித் விழுந்தது முதல் இறுதி வரை என்ன நடந்தது  திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகேயுள்ள  நடுகாட்டுப்பட்டியில் அக்டோபர் 25-ஆம் தேதி மாலை 5 : 40 மணிக்கு சிறுவன் (சுஜித் வயது 2) ஆழ்துளை கிணற்றில் விழுந்தான்.  இதையடுத்து மாலை 5 :55 மணிக்கு ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு சிறுவனுக்கு ஆக்சிஜன் தரப்பட்டது.  அதை தொடர்ந்து இரவு 7 : 15 மணிக்கு அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜன், விஜயபாஸ்கர் மீட்பு பணிகளை துரிதப்படுத்தினர். பின்னர் இரவு 8 […]

Categories
திருச்சி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இதயம் கனக்கிறது…. உன் மூச்சு சத்தம் தான் தந்தை ஸ்தானத்தில் இயங்க வைத்தது… அமைச்சர் விஜயபாஸ்கர் உருக்கம்..!!

உன் மூச்சு சத்தம் தான் என்னை மீட்பு பணியில் ஒரு தந்தை ஸ்தானத்தில் பாச பிணைப்பில் இணைந்து இயங்க வைத்தது என்று அமைச்சர் விஜயபாஸ்கர் உருக்கத்துடன் பதிவிட்டுள்ளார். திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகேயுள்ள நடுகாட்டுப்பட்டியில் 2 வயதான சுஜித்  கடந்த 25 ஆம் தேதி மாலை 5: 40 மணியளவில் வீட்டின் முன் விளையாடிக் கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக அழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்தான். அவனை மீட்க கடந்த 4 நாட்களாக 80 மணி நேரத்தையும் தாண்டி மீட்பு பணி […]

Categories
சினிமா தமிழ் சினிமா மாநில செய்திகள்

“சுஜீத்தின் மரணம் மனதிற்கு வேதனையளிக்கிறது”… நடிகர் ரஜினிகாந்த் இரங்கல்..!!

சுஜீத்தின் மரணம் மனதிற்கு மிகவும் வேதனையளிக்கிறது என்று நடிகர் ரஜினிகாந்த் இரங்கல் தெரிவித்துள்ளார். திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகேயுள்ள  நடுகாட்டுப்பட்டியில் சுஜித் வில்சன்  (2 வயது) சிறுவன் கடந்த 25 ஆம் தேதி மாலை 5: 40 மணியளவில் வீட்டின் முன் விளையாடிக் கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக அழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்தான். அவனை மீட்க கடந்த 4 நாட்களாக 80 மணி நேரத்தையும் தாண்டி மாநில மற்றும் தேசிய மீட்பு படையினர், தன்னார்வலர்கள் என அனைவரும் முயற்சித்தனர். ஆனால் பலன் கிடைக்கவில்லை. அவனை […]

Categories
மாநில செய்திகள்

சுஜித் குடும்பத்திற்கு முக ஸ்டாலின் ரூ.10,00,000 நிதியுதவி..!!

சுஜித் குடும்பத்திற்கு திமுக சார்பில் முக ஸ்டாலின் ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்கினார். திருச்சி மணப்பாறை அருகேயுள்ள  நடுகாட்டுப்பட்டியில் சுஜித் வில்சன் என்ற 2 வயது சிறுவன் கடந்த 25 ஆம் தேதி மாலை 5: 40 மணியளவில் வீட்டின் முன் விளையாடிக் கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக அழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்தான். அவனை மீட்க கடந்த 4 நாட்களாக 80 மணி நேரத்தையும் தாண்டி மாநில மற்றும் தேசிய மீட்பு படையினர், தன்னார்வலர்கள் என அனைவரும் முயற்சித்தனர். ஆழ்துளை கிணறு அருகே ரிக் இயந்திரம் மூலம் […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

இன்ப சுற்றுலா……. முடிவில் சோகம்……. மரத்தில் பைக் மோதி வாலிபர் பலி….!!

புதுக்கோட்டையில் சுற்றுலா சென்று வீடு திரும்பிய இளைஞர் வரும் வழியில் பைக் நிலை தடுமாறி மரத்தில் மோதி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் பகுதியை சேர்ந்தவர் அழகர்சாமி. இவர் விராலிமலையில் உள்ள ஒரு உணவு விடுதியில் தலைமை சமையல் கலைஞராக பணியாற்றி வந்தார். இந்நிலையில் அன்னவாசல் சித்தன்ன மலை பகுதியில் சுற்றுலா சென்று சுற்றி பார்த்துவிட்டு பின் வீட்டிற்கு தனது இருசக்கர வாகனத்தில் திரும்பியுள்ளார். வரும் வழியில் சித்தூர்பட்டி அருகே வேகமாக […]

Categories
திருச்சி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

சுஜித் உடல் அடக்கம் செய்யப்பட்டது… ஏராளமான பொதுமக்கள் அஞ்சலி..!!

அழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்த சுஜித்தின் உடலுக்கு பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று அஞ்சலி செலுத்தினர். திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகேயுள்ள  நடுகாட்டுப்பட்டியில் சுர்ஜித் வில்சன் என்ற 2 வயது சிறுவன் கடந்த 25 ஆம் தேதி மாலை 5: 40 மணியளவில் விளையாடிக் கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக அழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்தான். அவனை மீட்க கடந்த 4 நாட்களாக 80 மணி நேரத்தையும் தாண்டி மாநில மற்றும் தேசிய மீட்பு படையினர், தன்னார்வலர்கள் என அனைவரும் முயற்சித்தனர். ஆழ்துளை கிணறு […]

Categories
மாநில செய்திகள்

பள்ளி வளாகத்திற்குள் மாணவர்களை வெளுத்து வாங்கிய போலீஸ்…… வெறிசெயலுக்கு பெற்றோர்கள், பொதுமக்கள் கண்டனம்….!!

கேரளாவில் காவல்துறையினர்பள்ளி வளாகத்திற்குள் நுழைந்து ,மாணவர்களை தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  கேரள மாநிலம் வர்க்கலா பகுதியில் யூத் பெஸ்டிவல் என்ற பண்டிகை நடைபெற்று உள்ளது. அந்த பண்டிகையை கொண்டாடும் விதமாக பள்ளி மாணவர்கள் பள்ளி வளாகத்திற்குள் பட்டாசு வெடித்து கொண்டாடி உள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த பள்ளி முதல்வர் காவல்துறையினருக்கு தகவல் அளித்துள்ளார். இதையடுத்து அங்கு விரைந்த காவல்துறையினர் பள்ளி வளாகம் என்றும் பாராமல் மாணவர்களை சரமாரியாக தாக்கியுள்ளனர். இதில் பன்னிரண்டாம் வகுப்பு மாணவன் சதீஷ் என்பவர் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

தொடரும் குழந்தை பலி……. 5 வகுப்பு மாணவி மரணம்……. சென்னையில் சோகம்…!!

சென்னை திருவொற்றியூரில் பள்ளி குழந்தை டெங்கு காய்ச்சலுக்கு பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை திருவொற்றியூர் பகுதியை அடுத்த சிவசக்தி நகரை சேர்ந்தவர் முத்துக்குமார். இவர் ஓட்டுனராக பணியாற்றி வருகின்றார். இவரது மகள் தனியார் பள்ளி ஒன்றில் ஐந்தாம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் அவரது மகளுக்கு திடீரென உடல்நிலை சரியில்லாமல் காய்ச்சல் அதிகமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சையிலும் காய்ச்சல் சரியாகாமல் போக, மேற்கொண்ட சோதனையில் சிறுமிக்கு டெங்கு […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

மீண்டும்……. 2 வயது குழந்தை பலி…… சுர்ஜித்தை பார்த்த பின்பும் பெற்றோர்கள் அலட்சியம்….!!

தூத்துக்குடியைச் சேர்ந்த தம்பதியினர் தொலைக்காட்சியில் சுர்ஜித் மீட்பு பணியை பார்த்துக் கொண்டு அலட்சியமாக இருந்ததால் அவர்களது 2 வயது குழந்தை தண்ணீர் தொட்டியில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் திரேஸ்புரம் பகுதியை சேர்ந்த லிங்கேஸ்வரன், நிஷா ஆகிய தம்பதிக்கு ரேவதி சஞ்சனா என்ற 2 வயது பெண் குழந்தை உள்ளது. இவர்கள் இருவரும் நேற்றையதினம் ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த குழந்தை சுஜித் மீட்பு பணி குறித்து தொலைக்காட்சியில் கண்ணிமைக்காமல் ஆர்வமாக […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

“மின்சாரம் தடை” அலட்சியத்தால் 3 பேர் மின்சாரம் பாய்ந்து பலி…… கன்னியகுமாரியில் சோகம்…!!

கன்னியாகுமாரியில் மின்சாரம் வரவழைக்க கம்பியை ஈரக்கம்பால் இளைஞர்கள் 3 பேர் தட்டி மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் பேச்சிப்பாறை பகுதியை அடுத்த குற்றியாபுரம்  மலைக்கிராமத்தில் திடீரென மின்தடை ஏற்பட்டு விட்டது. இதனால் கிராம மக்கள் மிகுந்த அவதி அடைந்துள்ளனர். நீண்ட நேரமாகியும் மின்சாரம் வராததால் அந்த ஊர் இளைஞர்கள் மூன்று பேர் பேச்சிப்பாறை பகுதியில் உள்ள ஜீரோ பாயிண்ட் மின்சாரம்  கடத்தும் இடத்திற்கு சென்று அங்கிருந்த கம்பியை ஈரக்கம்பால் தட்டி மின்சார […]

Categories
திருச்சி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

#prayforsurjeeth: ”மீண்டு வா குட்டி பையா”…. சுர்ஜித்தின் வைரல் வீடியோ …!!

மணப்பாறை நடுக்காட்டுப்பட்டியில் ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த சுஜித் ஆடுவது போன்ற வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகின்றது. திருச்சி மணப்பாறை நடுக்காட்டுப்பட்டியில் அக்டோபர் 25ஆம் தேதி மாலை 5:30 மணியளவில் அழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்த இரண்டு வயது குழந்தை சுஜித்தை மீட்கும் பணி தற்போது 70 மணி நேரத்தை கடந்தும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.சுஜித்தை மீட்க ஆழ்துளைக் கிணற்றிற்கு அருகில் ரிக் இயந்திரம் மூலம் குழி தோண்டப்பட்டு வரும் பணி 29 மணி நேரத்தைக் கடந்து […]

Categories
திருச்சி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

BREAKING: ‘240,00,00,000 ஆண்டு ”பழமையான பாறைகள்” நில அமைப்பியல் பேராசிரியர்….!!

மணப்பாறை நடுக்காட்டுப்பட்டியில் ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த சுஜித்தை மீட்கும் பணி நான்காவது நாளாக 69 மணி நேரத்தைக் கடந்து தொடர்ந்து நடைபெற்று வருகிறது. திருச்சி மணப்பாறை நடுக்காட்டுப்பட்டியில் அக்டோபர் 25ஆம் தேதி மாலை 5:30 மணியளவில் அழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்த இரண்டு வயது குழந்தை சுஜித்தை மீட்கும் பணி தற்போது 69 மணி நேரத்தை கடந்தும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.சுஜித்தை மீட்க ஆழ்துளைக் கிணற்றிற்கு அருகில் ரிக் இயந்திரம் மூலம் குழி தோண்டப்பட்டு வரும் பணி […]

Categories
மாநில செய்திகள்

தேவர் ஜெயந்தி விழா: ஈபிஎஸ், ஓபிஎஸ் கூட்டாக அறிக்கை …!!

முத்துராமலிங்க தேவரின் 112ஆவது ஜெயந்தி விழா மற்றும் குருபூஜை வரும் 30ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதுதொடர்பாக அதிமுக ஒருங்கிணைப்பாளரும், துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும், முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளனர். அதில், ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் கிராமத்தில் அமைந்துள்ள முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் வரும் 30ஆம் தேதி காலை 9 மணியளவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் மலர் அஞ்சலி செலுத்த உள்ளனர். இந்த […]

Categories
திருச்சி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

#SaveSurjith : ”இதே போல ஆட மீண்டு வா ” …. வைரலாகும் வீடியோ ….!!

மணப்பாறை நடுக்காட்டுப்பட்டியில் ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த சுஜித்தை மீட்கும் பணி நான்காவது நாளாக 69 மணி நேரத்தைக் கடந்து தொடர்ந்து நடைபெற்று வருகிறது. திருச்சி மணப்பாறை நடுக்காட்டுப்பட்டியில் அக்டோபர் 25ஆம் தேதி மாலை 5:30 மணியளவில் அழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்த இரண்டு வயது குழந்தை சுஜித்தை மீட்கும் பணி தற்போது 69 மணி நேரத்தை கடந்தும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.சுஜித்தை மீட்க ஆழ்துளைக் கிணற்றிற்கு அருகில் ரிக் இயந்திரம் மூலம் குழி தோண்டப்பட்டு வரும் பணி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சிவமைந்தன் கார்த்தி சிவபக்தனாக ருத்ர தாண்டவம் – நடிகை ஆர்த்தி

‘கைதி’ படத்தில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் அமைத்திருக்கும் ஒவ்வொரு காட்சியையும் தான் நேசிப்பதாக நடிகை ஆர்த்தி தெரிவித்துள்ளார். நடிகர் கார்த்தி – இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் தீபாவளி விருந்தாக வெளியான படம் கைதி. மாநகரம் திரைப்படத்தைத் தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இந்த திரைப்படத்திற்கு ரசிகர்கள் வரவேற்பும், பாராட்டும் தெரிவித்துள்ளனர்.படம் பார்த்த அனைவருக்கும் கைதி டில்லியை பிடித்துப்போய்விட்டது. அந்த அளவுக்கு இப்படத்தில் கார்த்தி தனது நடிப்பால் மிரட்டியிருப்பது அவரை அடுத்த கட்டத்துக்கு கூட்டிச்சென்றுள்ளது. இந்தப் படத்தில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘தெறி’ பேபி… இனி ‘மாஸ் மகாராஜ்’ – தெலுங்கில் ஹீரோ யாருன்னு தெரியுமா…?!

விஜய் நடிப்பில் வெளியான ‘தெறி’ படம் தெலுங்கில் ரீமேக் செய்வது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது. தந்தை – மகன் என இரட்டை வேடங்களில் விஜய் நடித்து தீபாவளிக்கு வெளியான படம் பிகில். அட்லி இயக்கிய இந்தப் படத்துக்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார். பெண்களின் கால்பந்து விளையாட்டை மையமாக வைத்து உருவாகியுள்ள இப்படத்தில் விஜயின் மைக்கேல் கதாபாத்திரம் கால்பந்தாட்ட பயிற்சியாளராவும், ராயப்பன் கதாபாத்திரம் லோக்கல் டானாகவும் உருவாக்கப்பட்டுள்ளது. விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். மேலும், இந்துஜா, யோகி […]

Categories
மாநில செய்திகள்

“பயனற்ற ஆழ்துளைக் கிணறுகளை மூட வேண்டும்”… தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம்.!!

தமிழ்நாட்டில் பயனற்ற ஆழ்துளைக் கிணறுகளை உடனடியாக மூட வேண்டும் என தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் வலியுறுத்தியுள்ளது. தமிழ்நாடு முழுவதும் பயனற்ற நிலையில் உள்ள ஆழ்துளைக் கிணறுகளை உடனடியாக மூட வேண்டும் என தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் வலியுறுத்தியுள்ளது. இது குறித்து அந்த ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், திருச்சி மாவட்டம் மணப்பாறை நடுக்காட்டுப்பட்டியில் ஆழ்துளைக் கிணற்றில் இரண்டு வயது குழந்தை விழுந்தது மிகவும் வருத்தமாக உள்ளது. வரும் காலங்களில் இதுபோன்ற அசம்பாவிதங்கள் நடக்காத […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

பைக் மீது ஷேர் ஆட்டோ மோதிய விபத்தில் இளைஞர் பரிதாப பலி.!!

இருசக்கர வாகனம் மீது ஷேர் ஆட்டோ மோதிய விபத்தில் இளைஞர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். வேலூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த வெள்ளக்குட்டை பகுதியைச் சேர்ந்தவர் ராஜேஷ். இவர் திருப்பத்தூரிலிருந்து தனது இருசக்கர வாகனத்தில் சொந்த ஊருக்குத் திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது மண்டலவாடி அருகே இவர் வந்துகொண்டிருந்தபோது திடீரென எதிரே வந்த ஷேர் ஆட்டோ இவரது இருசக்கர வாகனத்தின் மீது மோதி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து பொதுமக்கள் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பின், விரைந்து […]

Categories
திருச்சி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

4_ஆம் நாளாக தொடரும் மீட்புப்பணி – 64 மணி நேரம் கடந்தது….!!

மணப்பாறை நடுக்காட்டுப்பட்டியில் ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த சுஜித்தை மீட்கும் பணி நான்காவது நாளாக 63 மணி நேரத்தைக் கடந்து தொடர்ந்து நடைபெற்று வருகிறது. திருச்சி மணப்பாறை நடுக்காட்டுப்பட்டியில் அக்டோபர் 25ஆம் தேதி மாலை 5:30 மணியளவில் அழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்த இரண்டு வயது குழந்தை சுஜித்தை மீட்கும் பணி தற்போது 64 மணி நேரத்தை கடந்தும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.சுஜித்தை மீட்க ஆழ்துளைக் கிணற்றிற்கு அருகில் ரிக் இயந்திரம் மூலம் குழி தோண்டப்பட்டு வரும் பணி […]

Categories
பல்சுவை

ஏற்றமும் இல்லை ….. இறக்கமும் இல்லை…. மக்கள் சந்தோசம் ….!!

பெட்ரோல் , டீசல் விலை மாற்றமின்றி விற்பனை செய்யப்படுவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தொடர்ந்து அதிகரித்து வந்த பெட்ரோல் மற்றும் டீசல் விலை தீடிரென சரியத் தொடங்கியது. பின்னர் ஏற்றம் , இறக்கமாக இருந்து வருகின்றது . இதனால் வாகன ஓட்டிகள் தினம் தினம் என்ன விலை இருக்குமோ என்று சற்று குழம்பியே இருக்கின்றனர். ஒருநாள் அதிகமாகவும், ஒருநாள் குறைவாகவும், ஒருநாள் ஏற்ற இறக்கம் இல்லாமல் நிலையாகவும் இருந்து வருகின்றது. விலை நிர்ணயம் : சர்வதேச சந்தை கச்சா […]

Categories
திருச்சி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

சுர்ஜித் மீட்புப்பணி : நிலவரம் என்ன ? மகனுடன் இரவு விசிட் அடித்த OPS …!!

நடுகாட்டுப்பட்டியில் ஆள்துளை கிணற்றில் விழுந்த சிறுவனை மீட்கும் இடத்துக்கு இரவு துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் வந்தடைந்தார். திருச்சி மாவட்டம் மணப்பாறையில் உள்ள நடுகாட்டுப்பட்டிஇஎல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது குழந்தை சுர்ஜித்_தை மீட்கும் பணி 54 மணி நேரத்தை தாண்டி நடைபெற்று வருகின்றது. சிறுவன் சுர்ஜித் 88 அடி ஆழத்தில் இருப்பதால் அதன் அருகில் 2 மீட்டரில் 1 மீட்டர் விட்டம் அளவில் குழி தோண்டும் பணி நடைபெற்று வருகின்றது. அதன்  வழியாக 3 தீயணைப்பு வீரர்களை […]

Categories
திருச்சி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

புயலாக வேலை செய்து 15 நிமிடங்களில் பழுதை சரிசெய்த மீட்பு பணியாளர்கள்!

பழைய ரிக் இயந்திரத்தில் ஏற்பட்ட பழுது வேகமாகச் சரி செய்யப்பட்டு மீட்பு பணிகள் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. மணப்பாறை அருகே ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்த சுஜித்தை மீட்கும் பணி 52 மணி நேரத்திற்கும் மேலாகத் தீவிரமாக நடைபெற்றுவருகிறது. பழைய ஆழ்துளைக் கிணற்றின் அருகே புதிதாக ஆழ்துளை அமைக்கும் பணி இன்று அதிகாலை தொடங்கி நடைபெற்றுவருகிறது. இந்நிலையில், பழைய ரிக் இயந்திரத்தில் திடீரென்று கோளாறு ஏற்பட மீட்பு பணிகள் தற்காலிகமாக  நிறுத்தி வைக்கப்பட்டது. புதிய இயந்திரத்தை பொருத்தும் பணிகள் […]

Categories
சினிமா தமிழ் சினிமா திருச்சி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

2010_த்திலே சொன்னேன்…. ”மெத்தனம் அவலம்” சுர்ஜித் குறித்து விவேக் வேதனை …!!

ஒன்பது ஆண்டுகளுக்கு முன்னர் வெளியான ‘பலே பாண்டியா’ திரைப்படத்தில் உள்ள ஒரு காட்சியை சுஜித்தின் சம்பவத்தோடு ஒப்பிட்டு நடிகர் விவேக் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இரண்டு வயது குழந்தை சுஜித் ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்ததையடுத்து பல்வேறு தரப்பினரும் தங்களுடைய வருத்தத்தை பல இடங்களில் பதிவு செய்துவருகின்றனர். அந்தவகையில் நடிகர் விவேக்-ம் தனது ஆதங்கத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். அதில், ஒன்பது ஆண்டுகளுக்கு முன்னர் வெளியான ‘பலே பாண்டியா’ திரைப்படத்தில் வந்த ஒரு […]

Categories

Tech |