தன்னுடன் பணிபுரியும் இளம் பெண்ணை காதலிக்க வற்புறுத்தி, தாக்கிய இளைஞரை காவலர்கள் கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர். கோவை அருகே உள்ள சரவணம்பட்டி கீரணத்தம் பகுதியில் உள்ள தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் இளம் பெண் ஒருவர் ஊழியராகப் பணியாற்றிவந்தார். அதே நிறுவனத்தில், திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளத்தைச் சேர்ந்த ரஞ்சித்(24) என்பவரும் பணியாற்றி வந்துள்ளார். ரஞ்சித் அந்த இளம் பெண்ணை காதலிப்பதாகக் கூறியுள்ளார். அந்தப்பெண் காதலை ஏற்க மறுத்து அவரை கண்டித்துள்ளார். இந்தச் சூழ்நிலையில் கடந்த […]
Tag: Tamilnadu
தமிழக பள்ளிக்கல்வித்துறை அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு பரபரப்பு சுற்றிக்கை அனுப்பியுள்ளது. தமிழக பள்ளிக்கல்வித்துறை மிகப் பரபரப்பான சுற்றறிக்கையை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ளது. அதில் குறிப்பிடப்பட்டுள்ள அம்சங்கள் என்னவென்றால் அதாவது பள்ளி , கல்லூரிகளில் இந்து மாணவர் , இளைஞர் முன்னணி மாணவர்களை ஒருங்கிணைப்பதாக தெரிவித்துள்ளது.பள்ளிகளை பொறுத்தவரை இந்து மாணவர், கல்லூரிகளை பொருத்தவரை இந்து இளைஞர் முன்னணி ஆகிய அமைப்புகளைச் சார்ந்தவர்கள் பள்ளியில் மதரீதியான செயல்பாடுகளில் ஈடுபடுவதாகவும் , இதனால் சட்டம் ஒழுங்கு பிரச்சனை […]
வண்ணாரப்பேட்டையில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி பொதுமக்களிடம் இருந்து செல்போன், கைப்பை திருடும் கும்பலை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சென்னை வண்ணாரப்பேட்டையில் உள்ள ஜவுளிக்கடைகளில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தண்டையார்பேட்டை, திருவொற்றியூர், பெரம்பூர், வியாசர்பாடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து பொதுமக்கள் துணி வாங்குவதற்காக குவிகின்றனர்.அந்த நேரத்தில் பொதுமக்களின் கூட்ட நெரிசலில் அவர்களுடைய நகை பறிப்பு, கைப்பேசி பறிப்பு போன்ற திருட்டுச் சம்பவங்களும் நடக்கின்றன. இதற்காக பழைய வண்ணராப்பேட்டை காவல் துறையினர் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைளை மேற்கொண்டுவருகின்றனர்.மேலும் கூட்ட […]
மணிரத்னம் படத்தில் பாடகராக ஒலித்த ஏ.ஆர். ரஹ்மான் மகன் அமீன், தற்போது தந்தையுடன் இணைந்து இசை பயிற்சி மேற்கொள்கிறார். இளம் இசைப்புயலாக அவர் உருமாறும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. மகன் அமீனுடன் இணைந்து இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.கடந்த 1990களிலிருந்து தனது இசையால் கட்டிப்போட்டு இந்திய சினிமா ரசிகர்களின் பேவரிட் இசையமைப்பாளராக திகழும் ஏ.ஆர். ரஹ்மான், தான் மேற்கொள்ளும் புது முயற்சிகள் குறித்து அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் அளிப்பார். […]
கீழடி அகழாய்வில் கண்டறியப்பட்ட சுடுமண் குழாய்களும், வடிகட்டி போன்ற அமைப்பும் நீர் மேலாண்மையில் கிமு 6ஆம் நூற்றாண்டிலேயே கீழடி மக்கள் சிறந்து விளங்கியிருப்பதை காட்டுவதாக, தமிழ்நாடு தொல்லியல் துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. மதுரைக்கு அருகே கீழடியில் மத்திய, மாநில தொல்லியல் துறையின் சார்பாக ஐந்து கட்ட அகழாய்வுகள் நடைபெற்றன. இந்த ஆய்வில் பல்வேறு வியக்கத்தக்க தொல்லியல் அடையாளங்கள் கிடைத்துள்ள நிலையில், இரண்டாம் அகழாய்வில் கண்டறியப்பட்ட செங்கல் கட்டுமானம், நீர் வடிகால் அமைப்பு, தொட்டி போன்ற அமைப்பின் தொடர்ச்சி […]
தாட்கோ மூலம் தொழில் தொடங்க இணையதளம் வாயிலாக ஆதிதிராவிட இனத்தைச் சேர்ந்தவர்கள் விண்ணப்பித்து பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் தகவல் தெரிவித்துள்ளார். தாட்கோ மூலம் ஆதிதிராவிடர்களுக்காகச் செயல்படுத்தப்படும் கீழ்கண்ட பொருளாதார மேம்பாட்டுத் திட்டங்களுக்கு இணையதளம் மூலம் விண்ணப்பிக்க மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள் விடுத்துள்ளார். கிருஷ்ணகிரி மாவட்டத்தில், தாட்கோமூலம் ஆதிதிராவிடர்களுக்கு 11 திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன: 1. அ) நிலம் வாங்கும் திட்டம் , ஆ) நிலம் மேம்படுத்துதல் திட்டம், இ) துரித மின் இணைப்பு வழங்கும் திட்டம் ஈ) […]
தொடர்ந்து கொட்டிய கனமழையால் தமிழக அணைங்கள் நிரம்பி வருகின்றது கடந்த 17_ஆம் தேதி தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி பெய்து வருகின்றது. அதே போல காவேரி நீர் பிடிப்பு பகுதியிலும் மழை வெளுத்து வருகின்றது. தொடர்ந்து கொட்டிய கனமழையால் மளமளவென தமிழக அணைகள் நிரம்பி வழிகின்றது. நாளுக்கு நாள் அணைகளுக்கு வரும் நீர் மட்டமும் அதிகரித்து வருகின்றது. அந்தவகையில் ஈரோடு மாவட்டத்தில் உள்ள பவானிசாகர் அணைக்கு தொடர்ந்து கொட்டிய மழையால் நீர்வரத்து 9,086 கனஅடியாக இருந்தது. தற்போது அது 8,500 கனஅடியாக குறைந்தது. […]
பெட்ரோல் , டீசல் விலை குறைந்து விற்பனை செய்யப்படுவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தொடர்ந்து அதிகரித்து வந்த பெட்ரோல் மற்றும் டீசல் விலை தீடிரென சரிய தொடங்கியது. பின்னர் ஏற்றம் , இறக்கமாக இருந்து வருகின்றது . இதனால் வாகன ஓட்டிகள் தினம் தினம் என்ன விலை இருக்குமோ என்று சற்று குழம்பியே இருக்கின்றனர். ஒருநாள் அதிகமாகவும், ஒருநாள் குறைவாகவும், ஒருநாள் ஏற்ற இறக்கம் இல்லாமல் நிலையாகவும் இருந்து வருகின்றது. விலை நிர்ணயம் : சர்வதேச சந்தை கச்சா எண்ணெய்யின் […]
திருப்பூரில் குடி போதையில் இருசக்கர வாகனம் ஓட்டி சென்ற காவல் அதிகாரியே பெண்ணின் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்ற சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டம் அவிநாசி எல்லைக்கு உட்பட்ட பெருமாநல்லூர் காவல் நிலையத்தில் காவல்துறை அதிகாரியாக பணிபுரிந்து வருபவர் மயில்சாமி. இவர் நேற்று மாலை நேரத்தில் தனது இருசக்கர வாகனத்தில் அவிநாசி அருகே சென்று கொண்டிருந்த பொழுது, சாலையின் ஓரமாக நடந்து சென்று கொண்டிருந்த பெண்ணின் மீது மோதிவிட்டு வாகனத்தை நிற்த்தாமல் சென்றுள்ளார். இதையடுத்து […]
கேரளா மாநிலத்தில் 2 வயது குழந்தை வாக்குச்சாவடி மையத்தில் வாக்களித்த வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகின்றனர். கேரள மாநிலம் ஆலப்புழாவில் நிகழ்ந்த தேர்தல் வாக்குப்பதிவு மையத்தில் இரண்டு வயது குழந்தை அவரது தாயுடன் வாக்குசாவடி மையத்திற்கு வந்துள்ளது. தனது தாய் வாக்கு செலுத்த மை வைத்ததைக் கண்டு தனக்கும் மை வைக்க வேண்டும் என்று குழந்தை அடம்பிடித்துள்ளது. இதையடுத்து அங்கிருந்த அலுவலர்கள் குழந்தைக்கும் விரலில் மை வைத்து விட்டனர். இந்நிலையில் வாக்கு செலுத்தியதுபோல் மை […]
நீலகிரி மாவட்டத்தில் கொலம்பை, பாரதிநகர் உள்ளிட்ட பகுதிகளில் பெய்த கனமழையால் 50-க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளன. நீலகிரி மாவட்டத்தில் வடக்கிழக்குப் பருவமழையின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது. குறிப்பாக உதகை, குன்னூர், கேத்தி, குந்தா, மஞ்சூர் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த 10 நாட்களாக கனமழை பெய்து வருகிறதுதொடர்மழையினால் மாவட்டம் முழுவதும் 100-க்கும் மேற்பட்ட இடங்களில் மண்சரிவு ஏற்பட்டு கிராமங்களுக்குச் செல்லும் சாலைகளும் துண்டிக்கபட்டுள்ளன. இந்நிலையில் உதகை அருகே உள்ள கொலகம்பை, பாரதிநகர் ஆகிய பகுதிகளில் நேற்று இரவு பெய்த […]
இந்தாண்டு விபத்தில்லாமல் தீபாவளி கொண்டாடுவதற்கு பள்ளி மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் கண்ணப்பன் தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளார். இது குறித்து பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் கண்ணப்பன், அனைத்துப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றரிக்கையில் கூறியுள்ளதாவது, “தீபாவளி பண்டிகை அக்டோபர் 27ஆம் தேதி வெகு விமரிசையாக கொண்டாடப்பட உள்ளது. இந்த மகிழ்ச்சிகரமான நாளில் சில இடங்களில் மக்கள் கவனக்குறைவாக பட்டாசு வெடிப்பதால் தீவிபத்து ஏற்பட்டு உயிர் மற்றும் பொருட் சேதங்கள் ஏற்படுகிறது. மேலும் […]
‘என்மீது பொய் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் மீது முதல் தகவல் அறிக்கை கிடைத்தவுடன் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று கன்னியாகுமரி மக்களவை உறுப்பினர் வசந்தகுமார் தெரிவித்தார். நாங்குநேரி தொகுதிக்குட்பட்ட கலங்குடி என்னும் இடத்தில் அனுமதியின்றி நுழைந்ததாக கன்னியாகுமரி தொகுதி மக்களவை உறுப்பினர் வசந்தகுமார் உட்பட நான்கு பேரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தினர். தேர்தல் அலுவலர் ஜான் கேப்ரியல் கொடுத்த புகாரின் அடிப்படையில் மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. நாங்குநேரி தொகுதி […]
நடிகர் தனுஷின் ‘அசுரன்’ படத்தை சமீபத்தில் பார்த்த ‘பிக்பாஸ்’ ஷெரின் அவரை வாழ்த்தி தனது ‘துள்ளுவதோ இளமை’ படத்தை நினைவுகூர்ந்து ட்வீட் ஒன்றை இட்டுள்ளார். நடந்து முடிந்த ‘பிக்பாஸ்’ சீசன்-3 நிகழ்ச்சியில் மிகவும் பக்குவப்பட்ட நபர் என்ற பெயர் எடுத்தவர் நடிகை ஷெரின். ‘மைதா மாவு’ என்றும் மக்களால் செல்லமாக அழைக்கப்படுபவர்.’பிக்பாஸ்’ நிகழ்ச்சியின் நடுவில் சில பிரச்னைகளை சந்தித்த அவர், பாராட்டுகளையும் பெற்றார். அதுமட்டுமின்றி முரணான விமர்சனங்களும் அவர் மீது தொடுக்கப்பட்டன. அதை அவர் பொறுமையாக கையாண்டவிதம் […]
நாகூர் அருகே கனமழை காரணமாக பக்கவாட்டு சுவர் இடிந்து விழுந்ததில் வீட்டில் இருந்த நபர் படுகாயங்கங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நாகை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் நேற்று இரவு கனமழை கொட்டித் தீர்த்தது. இதற்கிடையே நாகூரில் பனங்குடி பகுதியைச் சேர்ந்த கருணாநிதி என்பவர் தனது வீட்டில் அம்மா, அப்பாவுடன் உறங்கிக் கொண்டிருந்தார்.அப்போது இன்று அதிகாலை வீட்டின் பக்கவாட்டு சுவர் திடீரென இடிந்து விழுந்துள்ளது. இதில் கருணாநிதியின் பெற்றோர்கள் நல்வாய்ப்பாக உயிர் தப்பினர்ஆனால், கருணாநிதியின் இரண்டு கால்களிலும் சுவரின் கற்கள் […]
அங்காளம்மன் கோயிலுக்குச் சொந்தமான ரூ.6 கோடி மதிப்புள்ள நிலத்தை, வட்டாட்சியர் ரவி தலைமையிலான காவல் துறையினர் பாதுகாப்புடன் அளவீடு செய்து மீட்டனர். சேலம் செவ்வாய்பேட்டை அங்காளம்மன் கோயிலுக்குச் சொந்தமான 6 ஏக்கர் நிலம் பள்ளப்பட்டி, பெரிய ஏரிக்கரை பகுதியில் உள்ளது. இந்த நிலத்தைச் சிலர் ஆக்கிரமிப்பு செய்து, சட்ட விரோதமாக போலி பத்திரங்கள் தயார் செய்து விற்பனை செய்ய முயற்சி மேற்கொண்டனர்.தகவலறிந்த திருக்கோயில் தொண்டர்கள் சபை தலைவர் ராதாகிருஷ்ணன் அவர்களிடம் கூற, இதுதொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் […]
காவல்துறை ஆலோசனையை ஏற்று நெல்லை மீனாட்சிபுரம் பெண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளிட்ட நான்கு இடங்களில் மொத்தம் 12 சிசிடிவி கேரமாக்களை விஜய் நற்பணி இயக்கத்தினர் பொருத்தி கொடுத்துள்ளனர். நடிகர் விஜய் இயக்குநர் அட்லி கூட்டணியில் உருவாகியுள்ள திரைப்படம் பிகில். கால்பந்தாட்டத்தை மையமாக வைத்து கதைக்களம் அமைக்கப்பட்டுள்ள இந்தப் படத்தில், நயன்தாரா, ஜாக்கி ஷெராஃப், கதிர், விவேக் என மாபெரும் நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ளது. ‘மெர்சல்’ படத்தைத் தொடர்ந்து இந்தப் படத்திற்கும் ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார்.இந்தப் படம் தீபாவளியை முன்னிட்டு […]
கன்னியாகுமரியில் சபரிமலை சீசன் காலத்தில் அமைக்கப்படும் தற்காலிகக் கடைகளுக்கு 2020ஆம் ஆண்டு முதல் தடைவிதித்து சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. கன்னியாகுமரியைச் சேர்ந்த ராமகிருஷ்ணன் பொன்னையா என்பவர் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் ஒரு பொதுநல வழக்குத் தாக்கல் செய்திருந்தார். அதில், “மத்திய அரசு 2019 ஜனவரி மாதம் கொண்டுவந்துள்ள அறிவிக்கையின்படி கடற்கரை ஓரத்தில் எந்தவிதமான வணிக நோக்கிலான நடவடிக்கைகள் மேற்கொள்ளக் கூடாது எனத் தடைவிதித்துள்ளது. ஆனால், கன்னியாகுமரி காந்தி மண்டபத்திலிருந்து சூரிய மறையும் […]
நடிகர் ரஜினிகாந்த் கட்சித் தொடங்கினாலும் அல்லது பாஜகவில் இணைந்தாலும் தமிழ்நாட்டிற்கு எந்தவொரு பயனும் ஏற்படப்போவதில்லை என தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி செய்தியாளர்களிடம் பேசுகையில், “நாங்குநேரியில் மக்களவை உறுப்பினர் வசந்தகுமார் அத்துமீறி நுழையவில்லை. தேர்தலில் நெருக்கடி ஏற்படும்பொழுது அரசு இதுபோன்ற தவறான செயல்களில் ஈடுபடுகிறது. மக்களவை உறுப்பினரும் ஒரு கட்சியின் தலைவரும் எந்த ஒரு தவறான செயல்களிலும் ஈடுபட மாட்டார்கள். அரசு தனது […]
பாளையங்கோட்டையில் நடைபெற்ற மாநில அளவிலான சதுரங்கப் போட்டியில் கார்த்திக் எனும் 11 வயது சிறுவன் பாதியில் வெளியேற்றப்பட்டதற்கு அவனது தந்தை விளக்கம் அளிக்குமாறு அனைத்து இந்திய செஸ் கூட்டமைப்பிற்கு கடிதம் எழுதியுள்ளார். திருநெல்வேலி பாளையங்கோட்டையில் உள்ள தனியார் கல்லூரியில் மாநில அளவிலான சதுரங்கப் போட்டிகள் நடைபெற்றன. திருநெல்வேலி மாவட்ட செஸ் சங்கம் சார்பில் நடத்தப்பட்ட இந்தப் போட்டியில் 10, 13, 15 வயது எனப் பல்வேறு பிரிவுகளின் கீழ் நடத்தப்பட்ட போட்டியில் ஆண், பெண் குழந்தைகள் பங்கேற்றனர். […]
சேலம் சீலநாயக்கன்பட்டி தேசிய நெடுஞ்சாலை பகுதியில் மழைநீர் தேங்கி போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதால் அப்பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். வடகிழக்குப் பருவமழை அதிகமாகியுள்ளதால், தமிழகம் முழுவதும் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. இதனால் கடந்த சில நாட்களாகவே சேலத்தில் இரவு நேரங்களில் கனமழைவெளுத்து வாங்கி வருகிறது. இந்நிலையில் நேற்று இரவு பெய்த மழையினால் இன்று நகரின் பல முக்கிய பகுதிகளில் மழைநீர் தேங்கி போக்குவரத்துபாதிக்கப்பட்டுள்ளது.இதேபோல சீலநாயக்கன்பட்டியிலுள்ள திருச்சி to நாமக்கல் NH4 சர்வீஸ் சாலையில் மழைநீர் தேங்கி […]
பள்ளிகளில் பொது தேர்வுக்கு ஒதுக்கப்பட்ட 2.30 மணி நேரம் இனிமேல் 3 மணி நேரமாக ஒதுக்கப்படுமென்று அமைச்சர் தெரிவித்துள்ளார். தமிழக பள்ளிக்கல்வித்துறை பல்வேறு மாற்றங்களை தொடர்ந்து செய்து வருகின்றது. சமீப காலமாகவே அதிரடியான அறிவிப்புகளை பள்ளி கல்வித்துறை அறிவித்து மக்களின் செல்வாக்கை அதிகம் பெற்ற துறையாக பள்ளி கல்வித்துறை செய்யப்பட்டு வருகின்றது. புதிய பாடத்திட்டம் வந்தது முதல் 11_ஆம் வகுப்புக்கு பொது தேர்வு , 1200 மதிப்பெண் 600_ஆக குறைக்கப்பட்டது வரை பல மாற்றம் நிகழ்ந்துள்ளது. இந்நிலையில் […]
பவானிசாகர் அணையில் 12,750 கனஅடி நீர் திறந்துவிடப்பட்டது. இதனையடுத்து வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால் 100க்கும் மேற்பட்ட கிராமங்களில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் பெய்த கனமழையால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து 102 அடியை எட்டியது. 105 அடி உயரமுள்ள அணையில் 102 அடிக்கு மேல் நீர் தேக்கி வைக்கமுடியாத நிலையில் உள்ளது. எனவே, பாதுகாப்பு கருதி அணைக்கு வந்த 7,000 கனஅடி உபரி நீர் இன்று அதிகாலை வெளியேற்றப்பட்டது. அணை நீர் திறப்பு […]
அசோக் நகர் அருகே கஞ்சா போதையில் தனியாக இருந்த பெண்ணின் வீட்டிற்குள் புகுந்த இளைஞருக்கு பொதுமக்கள் தர்ம அடி கொடுத்தனர். சென்னை அசோக் நகர் அம்பேத்கர் குடிசைப் பகுதியில் வசித்து வருபவர் கைலாசம். ஆட்டோ ஓட்டுநராக பணிபுரிந்து வரும் இவரது மனைவி பெயர் லலிதா(35). கைலாசம் நேற்றிரவு ஆட்டோ ஓட்டச் சென்றபின், லலிதா தனது மகளுடன் வீட்டில் தனியாக தூங்கிக் கொண்டிருந்துள்ளார். தனியாக இருந்த லலிதாவின் வீட்டிற்குள் நள்ளிரவு ஒரு மணியளவில் கஞ்சா போதையில் ஒரு இளைஞர் வந்துள்ளார். அவரைக் […]
பிகில் கைதி உள்ளிட்ட எந்த திரைப்படங்களுக்கும் தீபாவளி சிறப்பு காட்சி அனுமதி இல்லை என்று செய்தி மற்றும் விளம்பர துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ ஆணிப்பூர்வமாக தெரிவித்துள்ளார். நடிகர் விஜய் இயக்குநர் அட்லி மூன்றவாது முறையாக கூட்டணி அமைத்துள்ள படம் பிகில். ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த திரைப்படம் தீபாவளிக்கு ரசிகர்களுக்கு விருந்து அளிக்கும் விதமாக அக்டோபர் 25ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது. இதற்கான டிக்கெட் விற்பனை தற்பொழுது தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், […]
நடிகர் விவேக் அஜித் , விஜயை சுட்டிக்காட்டி நடிகரும் , இயக்குனருமான சேரனை பாராட்டியுள்ளார். நடிகரும் , இயக்குனருமான சேரன் தனது ட்வீட்_டர் பக்கத்தில் ஒருவரின் மனதை எந்தவகையில் காயப்படுத்தினாலும் அது குற்றமே.. சோஷியல் நெட்வொர்க் என்ற பெயரில் அத்துமீறி ஆபாச வார்த்தைகளால் விமர்சனம் செய்யும்நிலை வளர்ந்துவிட்டது.. சிலரின் மனதில் காட்டுப்பேயாய் குடியேறியிருக்கும் இச்செயலை வன்மையாக கண்டிக்கிறோம் என்ற பதிவை பதிவிட்டிருந்தார். இதையே ரி_ட்வீட் செய்த நடிகர் விவேக் சேரன் சார்! உயர்ந்த நேர்மறைகளை பதிவிட்டு, எதிர்மறைகளை அலட்சியப்படுத்த கற்றுக்கொள்ள வேண்டும். […]
தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்த இளைஞர் ஒருவர், சுந்தர் நகரில் தான் வசித்து வந்த வீட்டில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் நகர்ப்புறப் பகுதியான சுந்தர் நகரில் வேதாரண்யத்தைச் சேர்ந்த முரளி என்ற இளைஞர் அடுக்கு மாடிக் குடியிருப்பொன்றில் தனது நண்பர்களுடன் வசித்து வந்தார். சிறுவாச்சூர் பகுதியிலுள்ள எம்.ஆர்.எஃப். நிறுவனத்தில் வேலை செய்து வந்த அவர், தனது குடும்பத்திலுள்ள பிரச்னைகளை தனது நண்பர்களிடம் அடிக்கடி கூறி மன வேதனையில் இருந்ததாக தெரிகிறது. […]
டெங்குவை கட்டுபடுத்த திமுக சார்பில் நிலவேம்பு கசாயம் வழங்கும் நிகழ்ச்சியை ஸ்டாலின் தொடங்கி வைத்தார். தமிழகத்தில் பல்வேறு பகுதியில் டெங்கு பரவி வருகின்றது. இதில் பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். தமிழக அரசும் , சுகாதாரத்துறையும் டெங்குவை கட்டுப்படுத்த பல்வேறு கட்ட நடவடிக்கையை எடுத்து வருகின்றனர். இந்நிலையில் டெங்கு பரவாமல் இருக்க திமுக சார்பில் நிலவேம்பு கஷாயம் வழங்கு நிகச்சி அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது. அதை அக்கட்சி தலைவர் முக.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். பின்னர் […]
சென்னை மற்றும் புதுவையில் அடுத்த இரண்டு நாட்களுக்கு மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் செய்தியாளர்களை சந்தித்த போது, மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டியுள்ள தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது. இது அடுத்து வரும் 24 மணி நேரத்தில் சற்று வலுப்பெற்று மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து செல்லும். அரபிக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு […]
ஓய்வூதியம் பெறுவோர்களுக்கான அகவிலைப் படியை தமிழ்நாடு அரசு உயர்த்தியுள்ளது. ஓய்வூதியம் பெறுவோர்களுக்கு அகவிலைப்படியை உயர்த்தி அளிப்பதற்கான உத்தரவை நிதித்துறைச் செயலாளர் எஸ். கிருஷ்ணன் தெரிவித்துள்ளார். அதன் படி ஓய்வூதியம் பெறுவோர்களுக்கான அகவிலைப்படியை 5% உயர்த்தி அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்தத் தொகையை கடந்த ஜூலை 1ஆம் தேதி முதல் கணக்கிட்டு கொடுக்க வேண்டும் என்றும், அனைத்து பொதுத்துறை, உள்ளாட்சித் துறை ஓய்வூதியம் பெறுவோர்க்கும் பொருந்தும் எனத் தெரிவித்துள்ளார். இந்நிலையில் சென்ற வாரம் அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை தமிழ்நாடு அரசு […]
கல்லூரி மாணவனுக்கு சினிமா ஆசை காட்டி ரூ1,20,000 பணத்தை தந்தை , மகன் இருவரும் சேர்ந்து சுவாகா செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை சேப்பாக்கம் பகுதியில் மாவட்ட செயலாளராக இருப்பவர் எஸ் எஸ் கண்ணன். இவர் சென்ற வருடம் நம்ம கதை என்ற தலைப்பில் தனது மகன் கவித்திறன், நிகாவித்திறன் ஆகியோரை வைத்து படம் ஒன்றை தயாரித்தார். அந்தப்படம் திரையரங்கில் ஓரிரு நாட்களே ஓடிய நிலையில் ரூட் பொருள் போன்ற அடுத்தடுத்து படங்களை தயாரிக்க உள்ளதாகவும் […]
ரஜினிகாந்த் பாஜகவில் இணைய வேண்டும் என்று பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். நடிகர் ரஜினிகாந்த தமிழ் சினிமாவில் கோலோச்சி இருப்பது நாம் அனைவரும் அறிந்ததே. அதே நேரம் அவர் புதிய அரசியல் கட்சி தொடங்கி அரசியலிலும் கோலோச்சுவேன் என்று அவர் கடந்த 2 வருடமாக சொல்லிக் கொண்டு இருக்கின்றார். வருகின்ற சட்டமன்ற தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் ரஜினியின் கட்சி போட்டியிடும் என்றும் சொல்லப்படுகின்றது. இதற்காக அவர் தனது படப்பிடிப்புகளில் மிக விரைவாக பணியாற்றி வருவதாகவும் திரைத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் இன்று செய்தியாளர்களின் […]
விஜய்-அட்லி கூட்டணியில் திரைக்கு வரவிருக்கும் பிகில் திரைப்படம் வெற்றி அடையுமா என்பது குறித்து பிரபல ஜோதிடர் பாலாஜி ஹாசன் கணித்திருக்கிறார். நடிகர் விஜய்-இயக்குநர் அட்லி கூட்டணியில் உருவாகியுள்ள திரைப்படம் பிகில். கால்பந்தாட்டத்தை மையமாக வைத்து கதைக்களம் அமைக்கப்பட்டுள்ள இந்தப் படத்தில், நயன்தாரா, ஜாக்கி ஷெராஃப், கதிர், விவேக் என மாபெரும் நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ளது. மெர்சல் படத்தைத் தொடர்ந்து இந்தப் படத்திற்கும் ஏ.ஆர். ரகுமான் இசையமைத்துள்ளார். இந்தப் படம் தீபாவளியை முன்னிட்டு வரும் 25ஆம் தேதி திரைக்குவருகிறது. […]
வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பாக முதலமைச்சர் தலைமையிலான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று வருகின்றது. வடகிழக்கு பருவமழை கடந்த 17ஆம் தேதி முதல் தொடங்கியதால் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. அடுத்த ஒரு சில தினங்களுக்கு பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில் ஏற்கனவே முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது குறித்தும் , இனி செய்ய வேண்டிய பணிகள் குறித்து முதல்வர் தலைமையில் ஆலோசனை நடைபெற்று வருகின்றது. தலைமை செயலகத்தில் […]
சேலத்தில் கூலி தொழிலாளி ஒருவரிடம் ஏடிஎம் கார்டில் பணம் எடுத்து தருவது போல நடித்து நூதன முறையில் கொள்ளையடிக்க முயன்ற 3 பேரை சங்ககிரி காவல்துறையினர் கைது செய்தனர். சேலம் மாவட்டம் தட்டப்பட்டி கிராமத்தை சேர்ந்த சண்முகம் சங்ககிரி திருச்செங்கோடு சாலையில் உள்ள ஸ்டேட் வங்கி ஏடிஎம்மில் பணம் எடுக்கச் சென்றுள்ளார். அப்போது அங்கிருந்த மூன்று பேர் அவருக்கு உதவி செய்வது போல நடிக்க அவரது ஏடிஎம் கார்டு பற்றிய ரகசியங்களை தெரிந்து கொண்டு பணம் […]
பூ வியாபாரிகள் குறித்து நடிகர் விஜய் தெரிவித்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியதால், பிகில் படத்தை புறக்கணிக்கப்போவதாக பூ வியாபாரிகள் அறிவித்துள்ளனர். பிகில் திரைப்பட இசை வெளியீட்டு விழா கடந்த செப்டம்ப்ர 19 – ஆம் தேதி சென்னையில் கோலகலமாக நடைபெற்றது. இவ்விழாவில் பேசிய நடிகர் விஜய், பூ வியாபாரம் செய்பவரை வெடி வியாபாரம் செய்ய வைத்தால் அவர்கள் அதில் தண்ணீர் தெளிப்பார்கள் என்றும் எந்த தொழிலை யாரிடம் ஒப்படைக்க வேண்டுமோ அந்த செயலை அவரிடம் தான் ஒப்படைக்க […]
2016 ஆம் ஆண்டு படிப்பை முடித்து செப்டம்பர் 9ஆம் தேதிக்கு முன் சட்ட பட்டம் பெற்றவர்களுக்கு சிவில் நீதிபதி தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. தமிழகத்தில் 176 சிவில் நீதிபதிகள் பதவிக்கான எழுத்துத் தேர்வு நவம்பர் 21ம் தேதி நடைபெற உள்ள நிலையில் 2016-ம் ஆண்டு செப்டம்பர் 9ஆம் தேதிக்கு பிறகு சட்ட பட்டத்தை பெற்றவர்கள் இந்தத் தேர்விற்கு விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் பத்மாவதி லட்சுமி சண்முகப்பிரியா உள்ளிட்ட பலர், சென்னை […]
இஸ்லாமியர்கள் குறித்து சர்சையாக பேசிய அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேச்சிக்கு எதிராக நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டம் புதிய சர்சையில் சிக்கியுள்ளது. நடந்து முடிந்த நாங்குநேரி சட்டமன்ற இடைத்தேர்தல் பிரசாரத்தில் கலந்து கொண்ட அமைச்சர் ராஜேந்திர பாலாஜி இஸ்லாமிய மக்களை இழிவு படுத்தும் வகையில் பேசியதாக சர்சை எழுந்து. இதனிடையே அமைச்சர் ராஜேந்திரபாலாஜி இஸ்லாமிய மக்களை இழிவு படுத்தும் வகையில் நான் பேசவில்லை என்று விளக்கம் கொடுத்தார். ஆனாலும் பல்வேறு இஸ்லாமிய அமைப்புகள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜிக்கு கண்டனம் தெரிவித்தனர். இதனிடையே திருச்சியில் […]
எல்லாமே பாத்ரூமுக்குள்ளே…..!!
சுரேஷ் காமாட்சியின் வி ஹவுஸ் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள ‘ரூம்’ திரைப்படத்தின் கதையில் பல காட்சிகள் பாத்ரூமுக்குள்ளேயே நிகழ்வதாக அமைக்கப்பட்டிருக்கிறது. சுரேஷ் காமாட்சியின் வி ஹவுஸ் புரொடக்ஷன்ஸ், அஸ்வின் கே. வின் மார்ச் 30 நிறுவனம் இணைந்து தயாரித்துள்ள படம் ‘ரூம்’. பார்த்திபன் நடித்த ‘அம்முவாகிய நான்’, ‘நேற்று இன்று’ ஆகிய படங்களை இயக்கிய பத்மாமகன் இப்படத்தை இயக்குகிறார். தமிழ், தெலுங்கு, கன்னடம், என மூன்று மொழிகளில் இப்படம் தயாராகிறது.தெலுங்கு திரையுலகத்தைச் சேர்ந்த அபிஷேக் வர்மா இப்படத்தின் […]
நேற்று பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்தாலும் ராமநாதபுரம் மாவட்டத்தில் தான் அதிகபட்ச மழை பதிவாகியுள்ளது. வடகிழக்கு பருவமழை தொடங்கி தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் அங்கங்கே மழை பெய்து வருகின்றது. தாழ்வான பகுதிகளில் நீர் தேங்கி இருப்பதையும் , கொட்டி வரும் கனமழையால் பல்வேறு மாவட்டங்களின் பள்ளி , கல்லூரிகளுக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளாக விடுமுறை விடுவதையும் தொடர்ந்து பார்த்து வருகின்றோம். இந்நிலையில் நேற்று இரவு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை கொட்டித்தீர்த்து வருகின்றது.சென்னை, திருவள்ளூர் மாவட்டத்தின் பல்வேறு […]
கனமழையால் அடுத்தடுத்து விடுமுறை என்ற அறிவிப்பு வந்து கொண்டே இருக்கின்றது. வடகிழக்கு பருவமழை தொடங்கி தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் அங்கங்கே மழை பெய்து வருகின்றது. தாழ்வான பகுதிகளில் நீர் தேங்கி இருப்பதையும் நாம் பார்த்து வருகின்றோம். கொட்டி வரும் கனமழையால் பல்வேறு மாவட்டங்களின் பள்ளி , கல்லூரிகளுக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளாக விடுமுறை விடப்பட்டுள்ளது. நேற்று இரவு முழுவதும் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. தொடரும் கனமழையால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளி , கல்லூரிகளுக்கு விடுமுறை […]
பல்வேறு பகுதிகளில் இரவில் கொட்டிய கனமழையால் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. வடகிழக்கு பருவமழை தொடங்கி தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் அங்கங்கே மழை பெய்து வருகின்றது. தாழ்வான பகுதிகளில் நீர் தேங்கி இருப்பதையும் நாம் பார்த்து வருகின்றோம். கொட்டி வரும் கனமழையால் பல்வேறு மாவட்டங்களின் பள்ளி , கல்லூரிகளுக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளாக விடுமுறை விடப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று இரவு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை கொட்டித்தீர்த்து வருகின்றது.சென்னை, திருவள்ளூர் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் மிதமான மழை பொன்னேரி, செங்குன்றம், […]
கனமழை காரணமாக இன்று இரண்டு மாவட்டங்களுக்கு விடுமுறை என்று அந்தெந்த மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளனர். வடகிழக்கு பருவமழை தொடங்கி தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் அங்கங்கே மழை பெய்து வருகின்றது. தாழ்வான பகுதிகளில் நீர் தேங்கி இருப்பதையும் நாம் பார்த்து வருகின்றோம். கொட்டி வரும் கனமழையால் பல்வேறு மாவட்டங்களின் பள்ளி , கல்லூரிகளுக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளாக நேற்று விடுமுறை விடப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று இரவு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை கொட்டித்தீர்த்து வருகின்றது.சென்னை, திருவள்ளூர் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் மிதமான […]
பெட்ரோல் , டீசல் விலை குறைந்து விற்பனை செய்யப்படுவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தொடர்ந்து அதிகரித்து வந்த பெட்ரோல் மற்றும் டீசல் விலை தீடிரென சரிய தொடங்கியது. பின்னர் ஏற்றம் , இறக்கமாக இருந்து வருகின்றது . இதனால் வாகன ஓட்டிகள் தினம் தினம் என்ன விலை இருக்குமோ என்று சற்று குழம்பியே இருக்கின்றனர். ஒருநாள் அதிகமாகவும், ஒருநாள் குறைவாகவும், ஒருநாள் ஏற்ற இறக்கம் இல்லாமல் நிலையாகவும் இருந்து வருகின்றது. விலை நிர்ணயம் : சர்வதேச சந்தை கச்சா எண்ணெய்யின் […]
பாபி சிம்ஹா- ரேஷ்மி மேனன் தம்பதிக்கு 2017ஆம் ஆண்டு பிறந்த பெண் குழந்தைக்குப் பிறகு இரண்டாவதாக குழந்தை பிறக்கவுள்ளது. இதைத்தொடர்ந்து ரேஷ்மி மேனனுக்கு வளைக்காப்பு நடைப்பெற்றது. தேசிய விருது பெற்ற நடிகரான பாபி சிம்ஹா கடந்த 2015ஆம் ஆண்டு ‘உறுமீன்’ படப்பிடிப்பில் நடிகை ரேஷ்மி மேனனை காதலித்து 2016ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். திருமணத்துக்கு பிறகு 2017ஆம் ஆண்டு பாபி சிம்ஹா- ரேஷ்மி மேனன் தம்பதிக்கு முத்ரா என்ற பெண் குழந்தை பிறந்தது. இப்போது இத்தம்பதியினர் இரண்டாவது […]
உதயநிதி – மிஷ்கின் கூட்டணியில் உருவாகியிருக்கும் ‘சைக்கோ’ படத்தின் டீஸர் வெளியீடு குறித்து படத்தயாரிப்பாளர்கள் அறிவிப்பு வெளியிட்டுள்ளனர். இதுவரை வரை இயக்கியுள்ள படங்களில் பாதியை, த்ரில்லர் பாணியில் உருவாக்கி தனக்கென தனி ரசிகர்கள் கூட்டத்தை வைத்திருப்பவர் இயக்குநர் மிஷ்கின். உதயநிதி, நித்யா மேனன், அதிதி ராவ், இயக்குநர் ராம் ஆகியோர் நடிப்பில் ‘சைக்கோ’ என்ற படத்தை தற்போது இயக்கி முடித்துள்ளார்.இந்தப் படத்தின் பணிகள் முடிவடைந்து ரிலீசுக்குத் தயாராகி வரும் நிலையில், படத்தின் டீஸர் வெளியீடு குறித்த அப்டேட்டை […]
டேட்ஸ் பிரச்னையால் ஐஸ்வர்யா ராஜேஷ் இந்தியன் 2 படத்திலிருந்து விலகினார். இப்போது இன்னொரு நகைச்சுவை நடிகரும் சில காரணங்களால் விலகியுள்ளார். ‘இந்தியன் 2′ படத்தில் முக்கிய கேரக்டரில் நடிக்க ஒப்பந்தமாகியிருந்த நடிகர் ஆர்.ஜே. பாலாஜி தற்போது விலகியுள்ளார்.’இந்தியன் 2’ முதற்கட்ட ஷுட்டிங் சென்னையில் நடைபெற்று முடிந்தது. இதனைத்தொடர்ந்து அடுத்தகட்ட ஷுட்டிங் கடந்த மாதம் தொடங்கி ஆந்திர மாநிலம் ராஜமுந்திரியில் நடைபெற்றது. இதன் பின்னர் போபாலில் சண்டைக் காட்சியை படமாக்க படக்குழுவினர்கள் திட்டமிட்டுள்ளனராம். இந்தப் படத்தில் கமல்ஹாசனுடன் நடிகர்கள் […]
தீபாவளிக்கு மறுநாள் திங்கள்கிழமையை அரசு விடுமுறை நாளாக அறிவித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. தீபாவளியைக் கொண்டாடப் பலரும் சொந்த ஊர் செல்வது வழக்கம். இந்தாண்டு தீபாவளி வரும் 27ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்படுகிறது. அதற்கு மறுநாள் வேலைநாள் என்பதால் ஊர் திரும்பச் சிரமமாக இருக்கும் என்றும் அதனால் திங்கள்கிழமையும் அரசு விடுமுறையாக அறிவிக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் கோரிக்கைவிடுத்தனர். இந்நிலையில், தீபாவளிக்கு மறுநாள் அக்டோபர் 28ஆம் தேதி (திங்கள்கிழமை) அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறையை ஈடுசெய்யும் […]
நீதிமன்றங்த்தில் மத்திய தொழிற்படையினரை பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்துவது தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய பாதுகாப்புக் குழுவுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 2015ஆம் ஆண்டு நவம்பர் முதல் சென்னை உயர் நீதிமன்றம், அதன் மதுரைக்கிளைக்கு சி.ஐ.எஸ்.எஃப். பாதுகாப்பு வழங்கப்பட்டுவருகிறது. அக்டோபர் 30ஆம் தேதியுடன் சி.ஐ.எஸ்.எஃப். பாதுகாப்பு நீட்டிப்புக்கான உத்தரவு முடியவுள்ள நிலையில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்ததுஅப்போது, மத்திய அரசின் வழக்கறிஞர் ராஜகோபாலன் ஆஜராகி, சி.ஐ.எஸ்.எஃப். பாதுகாப்பு இல்லாத இடங்களில் கொலை முயற்சிகள், போராட்டங்கள் போன்றவை […]
கொசுக்கள் உற்பத்தியாவதற்கு காரணமாக செயல்பட்ட சொமெட்டோ நிறுவனத்திற்குச் சென்னை மாநகராட்சி ஒரு லட்சம் அபராதம் விதித்துள்ளது. வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் சென்னை முழுவதும் மழைப்பொழிவு அதிகரித்துள்ளது. மழையினால் பல்வேறு நோய்த்தொற்றுகள் ஏற்படுவதைத் தடுக்க சென்னை பெருநகர மாநகராட்சியால் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருகின்றன. குறிப்பாக டெங்கு கொசுப்புழுக்கள் உற்பத்தியாகாமல் தடுக்க நகர் முழுவதும் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. சென்னை சேத்துப்பட்டில் செயல்படும் சொமெட்டோ தனது வளாகத்தில் நூற்றுக்கணக்கான பேக்குகளைத் திறந்த வெளியில் போடப்பட்டிருந்ததை சுகாதாரத் துறை அலுவலர் பிரியதர்சினி […]