மலேசியாவின் சிலாங்கூர் மாகாண அமைச்சர் முகமது கைருதீன் தமிழ்நாட்டின் பாரம்பரிய உடையான வேட்டி, சட்டை அணிந்து, விவசாயப் பணிகளை செய்து அசத்தியுள்ளார். திருவள்ளூர் மாவட்டம் ஆத்தூர் பகுதியில் உள்ள விவசாய நிலங்களை மலேசியாவின் சிலாங்கூர் மாகாணத்தின் விளையாட்டுத்துறை மற்றும் மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் முகமது கைருதீன் பார்வையிட்டார்.அப்போது தமிழ்ப் பாரம்பரிய முறைப்படி வேட்டி, சட்டை உடை அணிந்து வந்த அவர், உறி அடித்தும், மாடுகளை வைத்து ஏறு பூட்டியும் அசத்தினார். இதில் முத்தாய்ப்பாக தமிழ் மக்களுடன் இணைந்து […]
Tag: tamilpeople
கீழடியை முன்னிட்டு சிவகாளை, ஆதிச்சநல்லூர், கொடுமணல், உள்ளிட்ட பகுதிகளில் அகல் ஆய்வு மேற்கொள்ள மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. கீழடியில் கண்டெடுக்கப்பட்ட பொருள்கள் சுமார் நான்காயிரம் ஆண்டுகள் பழமையானது என மேற்கொண்ட அகழாய்வின் மூலம் தெரியவந்துள்ளது. கீழடியில் கண்டெடுக்கப்பட்ட பொருட்களை காண நாள்தோறும் கல்லூரி பள்ளி மாணவ மாணவிகளும் பொதுமக்களும் தொடர்ந்து வந்த வண்ணம் உள்ளதால், அது சுற்றுலாத்தலமாக மாறி விட்டது. இந்நிலையில் மதுரை தமிழ் சங்கத்தில் கீழடியில் கண்டெடுக்கப்பட்ட பொருட்கள் பொதுமக்களின் பார்வைக்காக கண்காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. […]
சிவகங்கை to மதுரை தேசிய நெடுஞ்சாலையில் ரூபாய் 16 கோடி மதிப்பில் அருங்காட்சியகம் அமைக்கப்பட்டு கீழடியில் கண்டெடுக்கப்பட்ட பொருட்கள் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்படும் என அதிமுக அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார் சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் தாலுகாவில் அமைந்துள்ள கீழடியில் கடந்த செப்டம்பர் 30ஆம் தேதியுடன் ஐந்தாம் கட்ட அகழாய்வுப் பணிகள் நிறைவு பெற்ற நிலையில், செப்டம்பர் 2ஆம் வாரத்திலிருந்தே இதனைப் பார்வையிடும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் இருந்தது. ஒரு கட்டத்தில் பிரபலம் வாய்ந்த சுற்றுலாத்தளம் […]
விடுதலைப் புலிகளுடனான சண்டையின் போது மனித உரிமை மீறல்களில் ஈடுபட்ட இலங்கை ராணுவ வீரர் ரவீந்திர செல்வா ராணுவ தளபதியாக நியமிக்கப்பட்டதற்கு உலக அளவில் எதிர்ப்பு கிளம்பியிருக்கிறது. இலங்கை ராணுவத்தின் புதிய தளபதியாக செல்வா நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார். இவரது நியமனத்திற்கு இந்தியா, கனடா உள்ளிட்ட நாடுகளில் இருக்கக்கூடிய பல்வேறு தமிழ் அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். விடுதலைப் புலிகளுக்கு எதிரான சண்டையின்போது ரவீந்திர செல்வா போர்க்குற்றங்களில் ஈடுபட்டதாக ஐநா மனித உரிமைக் கவுன்சில் தீர்மானத்தில் குறிப்பிடப்படபட்டிருப்பதை எதிர்ப்பாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். இந்நிலையில் கொழும்புவில் […]