கோடை வெயிலை சமாளிப்பதற்காக அதிராம்பட்டினம் மக்கள் தொடர்ந்து மண்பானைகளை வாங்கி செல்கின்றனர். தமிழகத்தில் கோடை வெயில் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகின்றது. இதனை சமாளிப்பதற்காக மக்கள் தொடர்ந்து வெள்ளரி பழம், தர்பூசணி, நுங்கு, இளநீர் போன்ற இயற்கை உணவு பொருட்களை தொடர்ந்து நாடி வருகின்றனர். மேலும் கிராமத்தில் உள்ள மக்கள் கோடை காலங்களில் மண்பானைகளை உபயோகிப்பது வழக்கமான ஒன்றாகும். அதிலும் குறிப்பாக தற்போது தஞ்சை மாவட்டத்தில் அக்னி நட்சத்திரம் தொடங்கி விட்டதால் அதிராம்பட்டினம் மண்பாண்ட வியாபாரிகள் […]
Tag: tanjore
லாரியை வழிமறித்து இரண்டு பேரை தாக்கிக் கொலை மிரட்டல் விடுத்த நபர்களை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள திருக்கானூர்பட்டி பகுதியில் தீன்முகம்மது என்பவர் வசித்து வருகிறார். இவருடைய நண்பரான முத்துவேல் என்பவரும் அதே பகுதியில் வசித்து வருகிறார். இவர்கள் இருவரும் டேங்கர் லாரியில் தஞ்சையிலிருந்து புதுக்கோட்டைக்கு சென்று கொண்டிருக்கும்போது அற்புதபுரம் பகுதியில் செந்தில்குமார் மற்றும் விஜயகுமார் ஆகிய இருவரும் லாரியை வழிமறித்து தீன்முகம்மது, முத்துவேல் இரண்டு போரையும் கட்டையால் தாக்கி கொலை […]
இருசக்கர வாகனம் மரத்தின் மீது மோதிய விபத்தில் ஒருவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள திருக்காட்டுப்பள்ளி பகுதியில் செல்வநாதன் என்பவர் வசித்து வந்தார். இவர் சம்பவம் நடந்த அன்று தனது மோட்டார் சைக்கிளில் சொந்த வேலைக்காக திருவையாறு வரை சென்றிருந்தார். பின்னர் அந்த வேலையை முடித்துவிட்டு மீண்டும் திருக்காட்டுப்பள்ளிக்கு திரும்பும்போது நிலை தடுமாறி சாலை ஓரத்தில் உள்ள மரத்தின் மீது இருசக்கரவாகனம் மோதி கீழே விழுந்து படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார். இதுகுறித்து […]
டேங்கர் லாரி மோதிய விபத்தில் தந்தை மகன் இருவரும் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்திள்ளது. தஞ்சை மாவட்டத்தில் உள்ள கும்பகோணம் பகுதியில் விஜயகுமார் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வந்தார். இவருடைய மகன் பாலச்சந்திரன் அதே பகுதியில் உள்ள பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் சம்பவம் நடந்த அன்று விஜயகுமார் தனது மகனான பாலச்சந்திரனை அழைத்துக்கொண்டு இருசக்கர வாகனத்தில் வெளியே புறப்பட்டுள்ளார். இவர்கள் இருவரும் சாக்கோட்டை பகுதியில் சென்று கொண்டிருந்தனர். அந்த சமயத்தில் இவர்கள் […]
கொரோனா தடுப்பூசியை 3,500 பேருக்கு போடப்பட்டுள்ளதாக வட்டார சுகாதார அலுவலர் டாக்டர் விஜயராஜ் கூறியுள்ளார். தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள பூதலூரில் வட்டார சுகாதார அலுவலர் டாக்டர் விஜயராஜ் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தபோது கூறியதாவது “இதுவரை பூதலூர் வட்டாரத்தில் கொரோனா தடுப்பூசி 3,500 பேருக்கு போடப்பட்டுள்ளது. மேலும் தினமும் 150 பேருக்கு குறையாமல் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு வருகின்றது. இந்த தடுப்பூசி போடும் பணியானது பூதலூர் வட்டாரத்தில் உள்ள மூன்று ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் திருக்காட்டுப்பள்ளி மற்றும் பூதலூர் அரசு மருத்துவமனைகளிலும் […]
பொங்கல் கரும்பு விதைக்கும் பணியை விவசாயிகள் மும்முரமாக மேற்கொண்டு வருகின்றனர். தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள திருக்காட்டுப்பள்ளி பகுதிகளில் விளைவிக்கப்படும் கரும்புக்கு தனி மவுசு உண்டு. அது ஏனென்றால் வளமான மண், காவிரி நீர் மற்றும் பாரம்பரிய விவசாய முறைகளை விவசாயிகள் கடைப்பிடிப்பதே ஆகும். அதன்படி பொங்கல் கரும்பு பயிரிடுவதற்கு சித்திரை மாதம் உகந்தது என்பதால் திருக்காட்டுப்பள்ளி விவசாயிகள் பொங்கல் கரும்பு விதைக்கும் பணிகளை மும்மரமாக மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி விதைக் கரும்பு கரணைகளை பாரம்பரிய விவசாயிகளிடமிருந்து பெறப்பட்டு வயல்களை […]
வாய்க்கால்களில் பள்ளங்கள் அமைத்து மழை நீர் சேகரிக்கும் பணி தொடங்கியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் பூதலூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட கிராமத்தில் தேசிய ஊரக வேலை வாய்ப்புத் திட்டத்தின் கீழ் பல்வேறு மேம்பாட்டுப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த பணிகள் மூலம் விவசாயத் தொழிலாளர்கள் பலரும் வேலைவாய்ப்பு பெற்று வருகின்றனர். இந்நிலையில் கோடை காலத்தில் பெய்யும் கோடை மழை நீரை சேமிக்கவும் அதன் மூலம் நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்தவும் கிராமப்புறங்களில் உள்ள வாய்க்கால்களில் தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்ட […]
கொரோனா பரவல் காரணமாக வடுவூரில் அமைந்துள்ள பறவைகள் சரணாலயம் மூடப்பட்டுள்ளது. கொரோனாவின் இரண்டாவது அலை தமிழகத்தில் வேகமாக பரவி கொண்டிருப்பதனால் மத்திய மாநில அரசுகள் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. இந்நிலையில் இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் 26ஆம் தேதி முதல் சினிமா தியேட்டர்கள், உடற்பயிற்சிக் கூடங்கள், சுற்றுலாத்தலங்கள், கோவில்கள் ஆகியவை மூட அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்பேரில் திருவாரூர் மாவட்டத்தில் வடுகூரில் அமைந்துள்ள பறவைகள் சரணாலயமும் மூடப்பட்டுள்ளது. அதாவது வடுவூர் […]
செல்போன் பறிப்பில் ஈடுபட்டு வந்த 4 வாலிபர்கள் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள கடந்த 27ஆம் தேதி தஞ்சையில் இருந்து வீரசிங்கம்பேட்டை மோட்டார் சைக்கிளில் கிருஷ்ணமூர்த்தி என்பவர் வந்து கொண்டிருந்தார். அவர் மெயின் ரோட்டில் வந்து கொண்டிருக்கும் போது 2 மோட்டார் சைக்கிளில் வந்த 4 பேர் அவரை வழிமறித்து அவரது செல்போனை பறித்து சென்று விட்டனர். இது குறித்து அவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் பேரில் காவல்துறையினர் […]
டிராவல்ஸ் நிறுவனத்தில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக ரூபாய் 3 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமாகி உள்ளன. தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள கும்பகோணம் புதிய பேருந்து நிலையம் அருகில் டிராவல்ஸ் நிறுவனம் ஒன்று உள்ளது. இதனை அண்ணாதுரை என்பவர் நடத்தி வருகிறார். இந்த டிராவல்ஸ் நிறுவனத்தின் தலைமை அலுவலகம் கோயம்புத்தூரில் இயங்கி வருகின்றது. இந்த நிறுவனத்திற்கு கும்பகோணத்தில் இருந்து சென்னைக்கும் சென்னையில் இருந்து கும்பகோணத்திற்கும் பயணம் செய்வதற்காக டிக்கெட் புக்கிங் செய்து தரப்படும். மேலும் பார்சல் சர்வீஸ் […]
அனுமதியின்றி மணல் அள்ளிய 3 வாலிபர்கள் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பாபநாசம் பகுதியில் இன்ஸ்பெக்டர் உமா மகேஸ்வரி மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் இளமாறன் ஆகியோர் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அந்த சமயத்தில் திருக்கருகாவூர் பகுதியில் உள்ள வெற்றாற்றில் இருந்து அனுமதியின்றி மணல் அள்ளிக் கொண்டிருந்தவர்களை காவல்துறையினர் கண்டனர். இதனை அடுத்து காவல்துறையினர் அவர்களை மடக்கிப் பிடித்து விசாரித்த போது வைரமுத்து, சின்னப்பா, சுரேஷ்குமார் ஆகிய 3 பேர் என்பது தெரிய வந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் […]
மன உளைச்சலில் வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சை மாவட்டத்தில் அரசநாடு பகுதியில் சுப்பிரமணியம் என்பவர் வசித்து வருகிறார். அவருக்கு கடந்த சில வருடங்களாக உடல்நிலை சரியில்லாமல் இருந்து வந்துள்ளது. அதனால் இவர் பல மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். ஆனால் எந்தவித முன்னேற்றமும் ஏற்படாததால் அவர் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார். இதனால் அவர் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் எலி மருந்தை எடுத்து சாப்பிட்டு விட்டு மயங்கி […]
வெயிலின் தாக்கத்தை சமாளிப்பதற்காக மக்கள் அதிகம் விரும்பி சாப்பிடக்கூடிய வெள்ளரி பழங்கள் அதிகளவில் விற்பனையாகிக் கொண்டிருக்கிறது. தஞ்சை மாவட்டத்தில் வெயில் சுட்டெரித்து வாட்டி வருகின்றது. அதனால் மக்கள் தாகத்தைத் தீர்ப்பதற்காக குளிர்பானங்களை நாடி வருகின்றனர். ஆனால் அதில் பெரும்பாலானோர் இயற்கையாக கிடைக்கும் உணவுகள் மீது ஆர்வம் காட்டி வருகின்றனர். குறிப்பாக நுங்கு, இளநீர் போன்றவைகள் ஆகும். இந்த வரிசையில் வரக்கூடியதுதான் வெள்ளரி பழங்களாகும். இந்த வெள்ளரி பழங்களானது சீசன் காரணமாக அதிராம்பட்டினம் பகுதியில் குவிந்து வருகின்றது. இதுகுறித்து […]
சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்ட நான்கு பேர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள திருக்காட்டுப்பள்ளி பகுதியில் மது விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு தகவல் ஒன்று கிடைத்துள்ளது. இந்த தகவலின் பேரில் அவர்கள் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அந்த சமயத்தில் மது விற்பனையில் ஈடுபட்டு சதீஷ் என்பவரையும் காவிரி ஆற்றுப் பாலம் அருகில் மது விற்பனையில் ஈடுபட்ட துரைராஜ் என்பவரையும் விஷ்ணம்பேட்டை பகுதியில் மது விற்ற சோமு என்பவரையும் பூண்டி நாகாச்சி வளைவு பகுதியில் […]
குடும்ப பிரச்சனை காரணமாக பெயிண்டர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சை மாவட்டத்தில் உள்ள வல்லம் பகுதியில் ஆரோக்கிய செல்வம் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மகன் மிலன்சுகுமாரன் என்பவர் பெயிண்டராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு பவதாரிணி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் கடந்த சில நாட்களாக கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் மிலன்சுகுமாரன் அய்யனார் கோவில் மண்டபத்தில் வைத்து விஷம் குடித்து தற்கொலை செய்து […]
மாணவியை ஆசை வார்த்தைகளைக் கூறி கடத்தி சென்ற வாலிபர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள அம்மாபேட்டை பகுதியில் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர் வசித்து வருகிறார். அதே பகுதியில் கூலி வேலை செய்யும் பரத் என்பவர் வசித்து வருகிறார். இவர்கள் இருவரும் கடந்த சில நாட்களாக காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில் பரத் மாணவிக்கு ஆசை வார்த்தைகளை கூறி கடந்த 23ஆம் தேதி கடத்தி சென்றதாக கூறப்படுகிறது. இதனால் மாணவியின் பெற்றோர் அம்மாபேட்டை காவல் நிலையத்தில் […]
சென்னை நோக்கி வந்த தனியார் பேருந்து திடீரென ஆற்றுக்குள் விழுந்ததால் பெண் உட்பட 5 பேரும் 5 பேர் படுகாயமடைந்துள்ளனர். தஞ்சை மாவட்டத்தில் உள்ள பட்டுக்கோட்டையில் இருந்து நேற்று காலை சரியாக 10.30 மணியளவில் ஒரு தனியார் பேருந்து சென்னைக்கு புறப்பட்டு சென்றுள்ளது. அந்தப் பேருந்தில் ஒரு பெண் உட்பட 5 பேர் பயணம் செய்துள்ளனர். இந்த பேருந்து பட்டுக்கோட்டையை அடுத்துள்ள சூரப்பள்ளம் அருகில் உள்ள ஆற்று பாலத்தில் சென்று கொண்டிருக்கும்போது திடீரென பஸ் ஆற்றுக்குள் பாய்ந்துள்ளது. […]
டிராக்டரில் பொருத்தப்பட்டிருந்த பேட்டரியை திருடிய குற்றத்திற்காக வாலிபர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பாபநாசம் பகுதியில் கிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சொந்தமான டிராக்டரை சம்பவம் நடந்த அன்று தெருவில் ஓரமாக நிறுத்திவிட்டு வீட்டிற்குள் சென்றுள்ளார். பின்னர் மறுநாள் காலை வந்து பார்த்தபோது டிராக்டரில் பொருத்தப்பட்டிருந்த ரூபாய் 5000 மதிப்புள்ள பேட்டரி […]
7 பம்பு செட்டுகளில் உள்ள மின் மோட்டார்களில் இருக்கும் ஒயர்களை திருடிய மர்ம நபர்களை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள பெருமாநல்லூர் கிராமத்தில் ராமநாதன் என்ற ஊராட்சி மன்ற தலைவர் வசித்து வருகிறார். அதே ஊரில் அ.ம.மு.க மூத்த நிர்வாகி வெங்கடேசன் என்பவரும் வசித்து வருகிறார். இவர்கள் இருவரும் ஒன்று சேர்ந்து அய்யம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் மனு அளித்துள்ளனர். அந்த புகார் மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது “பெருமாநல்லூர் பகுதியில் தங்களுக்கு சொந்தமான விவசாய […]
சாலையின் ஓரமாக வைக்கப்பட்டிருந்த பிளக்ஸ் சரிந்து விழுந்ததில் பெண் ஒருவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சை மாவட்டத்திலுள்ள மேட்டுப்பட்டி கிராமத்தில் ரவிச்சந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய தந்தை முத்துவீரப்பன் ஏற்கனவே மரணமடைந்துவிட்டார். இந்நிலையில் ரவிச்சந்திரன் கடந்த சில தினங்களுக்கு முன்பு மறைந்த தந்தை முத்துவீரப்பனின் பட திறப்பு விழாவிற்கு பிளக்ஸ் ஒன்றை வைத்துள்ளார். அந்த வழியாக புதுக்கோட்டை மாவட்டம் கிராமத்தைச் சேர்ந்த விஜயராணி என்பவர் தனது சகோதரர் இறந்த எட்டாவது நாள் நிகழ்வுக்கு சென்றுவிட்டு […]
எலிக்காக விஷம் கலந்து வைத்திருந்த வாழைப்பழத்தை வாலிபர் தின்று உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாட்டில் தஞ்சாவூர் மாவட்டத்தில் மதுக்கூர் கிராமத்தில் ராமச்சந்திரன்-தமிழ்ச்செல்வி என்ற தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு கார்த்திக், கவிதாஸ் என்ற 2 மகன்கள் இருந்தனர். இதில் கார்த்திக் முதல் வருடம் பி.பி.ஏ படித்துக் கொண்டிருந்தார். இந்நிலையில் தமிழ்ச்செல்வி வீட்டில் எலி தொல்லை அதிகமாக இருப்பதால் வாழைப்பழத்தில் எலி மருந்தை கலந்து அதனை டிவியின் மேல் வைத்துள்ளார். இதனையடுத்து கார்த்திக் மாலை விளையாடிவிட்டு வீட்டிற்கு […]
திருமணமாகாத இளைஞர்கள் ஒன்றுகூடி பேனர்கள் வைத்தது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது. தஞ்சை மாவட்டத்திலுள்ள ஆரம்ப கரம்பயம் கிராமத்தில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்திற்கு திருமணம் வரன் பார்க்க வருபவர்களிடம் சிலர் அவதூறு கூறி திருமணத்தை தடுத்து நிறுத்துகின்றனர். இதனால் பல இளைஞர்களின் திருமணம் நடைபெறாமல் இருக்கின்றது. அதனால் இளைஞர்களின் பெற்றோர்களும் வேதனையில் உள்ளனர். எனவே பாதிக்கப்பட்ட திருமணமாகாத சில இளைஞர்கள் ஒன்றுகூடி வேதனையை வெளிப்படுத்தும் விதமாக யார் மனதையும் புண்படுத்தாமல் ஒரு பேனர் […]
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆறுகளை சீரமைக்கும் பணிகளை தரமாக மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தியுள்ளது. தஞ்சை மாவட்டத்தில் காவிரி டெல்டா பகுதிகளில் கல்லணை, திருக்காட்டுப்பள்ளி, பூண்டி உள்ளிட்ட இடங்களில் நடைபெற்று வரும் ஆறு சீரமைப்புப் பணிகளை இந்திய கம்யூனிஸ்ட் வடக்கு மாவட்ட செயலாளர் பாரதி தலைமையில் பூதலூர் ஒன்றிய கவுன்சிலர் லதா, விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் ராமச்சந்திரன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டு பார்வையிட்டுள்ளனர். இதுகுறித்து இந்திய கம்யூனிஸ்ட் மாவட்ட செயலாளர் கூறுகையில் “காவிரி […]
வைதீஸ்வரன் கோவில் குடமுழுக்கையொட்டி 147 யாககுண்டங்கள் அமைக்கப்பட்டு கால பூஜைகள் நடைபெற்றுள்ளது. தஞ்சை மாவட்டத்தில் சீர்காழி பகுதியில் வைத்தீஸ்வரன் கோவில் உள்ளது. இப்போது தனி சன்னதியில் செல்வ முத்துக்குமார சுவாமி, நவக்கிரகங்களில் செவ்வாய்க்கு அதிபதியான அங்காரகன், தன்வந்திரி சுவாமிகள் அருள்பாலிக்கின்றனர். இந்த கோவிலில் 22 ஆண்டுகளுக்கு பிறகு வரும் 29-ஆம் தேதி குடமுழுக்கு விழா நடைபெற உள்ளது. இதனால் 147 யாககுண்டங்கள் அமைக்கப்பட்டு கால பூஜைகள் நடைபெற்று வருகின்றது. பின்னர் இந்த 147 யாககுண்டங்களில் 108 வகையான […]
அனுமதிக்கப்பட்ட பயணிகளை விட அதிக நபர்களை ஏற்றுக்கொண்ட கொண்டு சென்ற தனியார் பேருந்து பஸ் டிரைவருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. தஞ்சை மாவட்டத்தில் ராஜகிரி மற்றும் பண்டாரவாடை கிராமங்களில் காவல்துறை மற்றும் வருவாய் துறை சார்பில் பொது இடங்களில் முக கவசம் அணியாத 5 பேருக்கு தலா ரூபாய் 200 அபராதம் விதித்து மொத்தம் ஆயிரம் ரூபாய் வசூலிக்கப்பட்டது. இதனை அடுத்து பண்டாரவாடை கிராமத்தில் தனியார் பேருந்தில் அனுமதிக்கப்பட்ட பயணிகளை விட அதிக பயணிகளை ஏற்றிச் சென்றது தெரியவந்துள்ளது. […]
தொழிலாளி அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். தஞ்சை மாவட்டத்தில் திருப்புவனம் பகுதியில் மகாலிங்கம் என்ற கூலித்தொழிலாளி வசித்து வருகிறார். இவரும் மேலும் மூன்று பேரும் சேர்ந்து திருச்சி சாலையில் உள்ள காதிர் நகர் பகுதிகளில் இருக்கும் மனைகளில் வேலி அமைக்கும் பணிக்காக சென்றுள்ளனர். அவர்கள் பகலில் வேலை செய்துவிட்டு இரவில் அதன் அருகில் உள்ள கட்டிடத்தில் தங்கி வந்தனர். இந்நிலையில் சம்பவம் நடந்த அன்று இரவு மகாலிங்கம் கீழ்தளத்தில் […]
செல்போன் மூலம் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்த மூன்று வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தஞ்சை மாவட்டத்தில் கும்பகோணம் பகுதிகளில் செல்போன் மூலம் வாடிக்கையாளர்களுக்கு கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுக்கு தகவல் ஒன்று கிடைத்துள்ளது. இந்த தகவலின் பேரில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தனிப்படை ஒன்றை அமைத்துள்ளார். அதில் இந்த தனிப்படை கஞ்சா விற்பனை செய்பவர்களை ரகசியமாக நோட்டமிட்டு வந்தது. அதன்பின் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு கொண்டிருந்த ராமகிருஷ்ணன் வெங்கடேசன் தினேஷ் குமார் ஆகிய […]
ஒரே நாளில் 161 கடைகளில் 8 1/4 கோடிக்கு மது விற்பனை நடைபெற்றுள்ளது. தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருவதால் தமிழக அரசு கொரோனா பரவலை தடுக்கும் பொருட்டில் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றது. அந்த வகையில் தமிழகம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு நேர ஊரடங்கு அமல் படுத்தப்பட்டுள்ளது. அதனால் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன. அதேபோல் டாஸ்மார்க் கடைகளும் நேற்று மூடப்பட்டுள்ளன. அதனால் மது பிரியர்கள் தங்களுக்கு தேவையான மதுவை முதல் நாளே […]
தஞ்சை பெரிய கோவிலில் நடைபெற்ற சனி பிரதோஷம் பக்தர்கள் யாருமின்றி எளிமையான முறையில் நடைபெற்றுள்ளது. தஞ்சை பெரியகோவில் உலக பிரசித்தி பெற்ற கோவிலாகும். இது தமிழர்களின் கட்டிடக் கலைக்கு சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குகின்றது. இந்த கோவிலுக்கு உள் மாநிலத்தில் மட்டுமின்றி வெளி மாநிலத்திலும் வெளிநாட்டில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகளும் பக்தர்களும் வருவதுண்டு. ஆனால் கொரோனாவிற்கு பின்னர் வெளிநாட்டினரும் வெளி மாநிலத்தினரும் வருவதில்லை. இந்நிலையில் கொரோனா ஊரடங்கின் எதிரொலியாக கடந்த 16 பெரிய கோவில் மூடப்பட்டுள்ளது. இருப்பினும் […]
முன்விரோதம் காரணமாக வாலிபர் தலை துண்டித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள சிவகாமி நகரில் மணிகண்டன் என்பவர் வசித்து வந்துள்ளார். அதே பகுதியில் வசித்து வரும் முத்துராமன் என்பவருக்கும், மணிகண்டனுக்கும் இடையே முன் விரோதம் இருந்துள்ளது. மேலும் இவர்கள் இருவர் மீதும் காவல் நிலையத்தில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்நிலையில் வெளியூருக்கு சென்ற மணிகண்டன் தஞ்சாவூருக்கு வந்ததை சிலர் முத்துராமனுக்கு செல்போன் மூலம் தகவல் தெரிவித்துள்ளனர். இதனை அடுத்து ரெட்டிபாளையம் […]
காலை 8 மணி வரை பனிப்பொழிவின் தாக்கம் அதிகமாக இருந்ததால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டுள்ளனர். தமிழகத்தில் மாசி மாத தொடக்கத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தாலும் கடந்த இரண்டு நாட்களாக பனிப்பொழிவு அதிகமாக காணப்பட்டுள்ளது. இந்நிலையில் தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள தஞ்சை பெரிய கோவில் கோபுரம் தெரியாத அளவிற்கு காலை 8 மணி வரை பனிப்பொழிவு நீடித்துள்ளது. மேலும் தஞ்சை மாவட்டத்தில் உள்ள மணிமண்டபம், தொல்காப்பியர் சதுக்கம் கோபுரம் மற்றும் மேம்பாலங்கள் போன்றவை பனியால் […]
பெரியார் சிலை மீது காவி துண்டு போடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள ஒரத்தநாடு பைபாஸ் சாலையில் பெரியார் சிலை அமைந்துள்ளது. இந்த சிலை மீது காவி துண்டு போடப்பட்டு, தலையில் தொப்பி வைக்கப்பட்டிருந்ததை பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் அங்கு விசாரணை நடத்தியுள்ளனர். அதன்பின் திராவிட கழக பிரமுகர்கள் பெரியார் சிலை மீது போடப்பட்டிருந்த துண்டினையும், தலையில் வைக்கப்பட்டிருந்த தொப்பியையும் அகற்றியுள்ளனர். […]
ஆற்றில் குளித்துக் கொண்டிருக்கும்போது கூலித்தொழிலாளி நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள பணவெளி கிராமத்தில் அப்பாசாமி என்ற விவசாய கூலித்தொழிலாளி வசித்து வருகிறார். இவர் குளிப்பதற்காக அப்பகுதியில் உள்ள வேட்டாற்றிற்கு சென்றுள்ளார். தற்போது அனைத்து இடங்களிலும் பெய்து வரும் கனமழை காரணமாக ஆற்றில் அதிகளவு தண்ணீர் சென்று கொண்டிருந்தது. இதனால் குளித்துக்கொண்டிருந்த அப்பாசாமி திடீரென நீரால் இழுத்து செல்லப்பட்டார். இதனையடுத்து தன்னை காப்பாற்றுமாறு அப்பாசாமி சத்தம் போட, அருகிலிருந்தவர்கள் விரைந்து வந்து அவரை […]
மாட்டுப் பொங்கல் தினத்தை முன்னிட்டு தஞ்சை பெரியகோவிலில் உள்ள நந்தி பெருமானுக்கு 100 கிலோ காய்கறிகள் மற்றும் கனிகளால் அலங்காரம் செய்யப்பட்டது. தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள மாமன்னன் ராஜராஜ சோழன் கட்டிய தஞ்சை பெரிய கோயில் 1000 ஆண்டுகளை கடந்து நிற்கும் சிறப்பு வாய்ந்த கோவிலாகும். இந்த கோவிலில் மட்டுமே மிகப்பெரிய நந்தி பெருமாள் சிலை இருக்கிறது. இங்கு ஒரு டன் காய்கறி, பழங்கள், மலர்கள் போன்றவற்றால் நந்தி பெருமானுக்கு அலங்காரம் செய்து 108 பசுக்கள் வரிசையாக […]
தொடர்ந்து பெய்த கனமழை காரணமாக வீட்டின் சுவர் இடிந்து விழுந்து தாய், மகள் இருவரும் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள வீரக்குறிச்சி பகுதியில் வரப்பிரசாதம்-மேரி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு நிவேதா என்ற ஒரு மகள் உள்ளார். இந்நிலையில் மேரி தனது மகள் நிவேதா உடன் இரவு வீட்டில் தூங்கிக் கொண்டிருக்கும் போது தொடர்ச்சியாக பெய்த கனமழை காரணமாக அவரது வீட்டின் மண் சுவர் இடிந்து திடீரென வீட்டில் உட்புறமாக விழுந்துவிட்டது. இதனையடுத்து அருகில் […]
தஞ்சாவூர் மாவட்டத்தில் பேருந்து விபத்தில் உயிரிழந்த 3 பேரின் குடும்பத்துக்கு தலா 3 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டுள்ளார். தஞ்சாவூர் மாவட்டத்தில் நேற்று தனியார் பேருந்து ஒன்று திருக்காட்டுப்பள்ளியில் இருந்து தஞ்சை நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்போது அந்த தனியார் பேருந்து முன்னால் சென்ற லாரியை முந்தி செல்ல முயன்றபோது, எதிர்பாராதவிதமாக அங்குள்ள மின்சார கம்பியின் மீது மோதியது. இதில் பேருந்தில் பயணித்த 3 பயணிகளின் மீது மின்சாரம் பாய்ந்ததில் அவர்கள் […]
கத்தியை காட்டி மிரட்டி பணத்தை பறித்து சென்றவரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள வேப்பங்குடி கிராமத்தில் வசந்தகுமார் என்ற விவசாயி வசித்துவருகிறார். இவர் அங்குள்ள ஆற்று பாலத்தின் அருகில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அதே ஊரில் வசித்து வரும் முருகேசன் என்பவர் அங்கு வந்துள்ளார். இதனையடுத்து முருகேசன் திடீரென கத்தியை காட்டி மிரட்டி வசந்தகுமாரிடமிருந்த நூறு ரூபாயை பறித்து சென்றுள்ளார். இச்சம்பவம் குறித்து பூதலூர் காவல் நிலையத்தில் வசந்தகுமார் புகார் அளித்துள்ளார். […]
தனியார் பேருந்து முன்னே செல்லும் லாரியை முந்தி செல்ல முயன்ற போது அருகில் இருந்த மின்கம்பத்தில் உரசியதால் பேருந்தில் இருந்த மூன்று பயணிகள் உயிரிழந்தனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் தனியார் பேருந்து ஒன்று 50 பயணிகளுடன் தஞ்சையிலிருந்து திருவையாறுக்கு இன்று புறப்பட்டது. இந்நிலையில் பேருந்து வரகூர்-கண்டியூர் சாலையில் சென்று கொண்டிருந்த போது, முன்னே சென்ற லாரியை முந்தி செல்வதற்காக முயற்சி செய்தது. அப்போது அருகில் இருந்த மின் கம்பியின் மீது பேருந்து உரசியதால், பேருந்தில் பயணித்த 5 பேர் […]
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஏலம் மையத்தில் குவிக்கப்பட்டுள்ள வாழைதார்களை வியாபாரிகள் வாங்கி சென்றனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் வாழைத்தார் ஏலம் மையமானது திருக்காட்டுப்பள்ளி மார்க்கெட் பகுதியில் செயல்பட்டு வருகிறது. இங்கு சுற்றுவட்டார கிராம பகுதிகளிலிருந்து விவசாயிகள் வாழைத்தார்களை வெட்டிக் கொண்டுவந்து இந்த ஏல மையத்தில் வைத்து ஏலம் விடுவர். இந்நிலையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பல்வேறு கிராமங்களில் இருந்து விவசாயிகள் வாழைத்தார்களை கொண்டுவந்து இந்த ஏல மையத்தில் குவித்துள்ளனர். இதனையடுத்து காலை 10 மணியிலிருந்து வாழைத்தார்கள் ஏலம் துவங்கப்பட்ட […]
குடித்துவிட்டு தகராறு செய்த கணவனை மனைவி அரிவாளால் வெட்டி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள பழுக்காடு கிராமத்தில் தங்கவேல் என்ற விவசாயி வசித்து வருகிறார். இவருக்கு கருப்பாயி என்ற மனைவியும், இளங்கோ என்ற மகனும் உள்ளனர். இவருடைய மகனுக்கு திருமணமாகி மனைவி மற்றும் குடும்பத்தாருடன் தனியாக வசித்து வருகிறார். எனவே தங்கவேல் மற்றும் கருப்பாயி ஆகிய இருவரும் ஒரே வீட்டில் வசித்து வந்தனர். இதற்கிடையில் கணவன்-மனைவிக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து தங்கவேல் […]
கோடியக்கரை அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த மீனவர்களை இலங்கை கடற்படையினர் சிறை பிடித்து கொண்டு சென்றனர். தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள மல்லிப்பட்டினம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து நாகப்பட்டினம் மாவட்டத்தை சேர்ந்த மணிபாலன், சக்திவேல், ராஜா ஆகிய 3 பேரும் கடந்த 6ஆம் தேதி அஸ்வத் புருக்காலுதீன் என்பவருக்கு சொந்தமான நாட்டுப் படகில் மீன்பிடிக்க சென்றனர். இவர்கள் கோடியக்கரை அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்பொழுது சிறிய கப்பலில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இலங்கை படையினர் திடீரென மீனவர்களின் நாட்டுப்படகில் சுற்றிவளைத்தனர். […]
லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்த குற்றத்திற்காக போலீசார் இருவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள புதிய பேருந்து நிலையம் அருகில் லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்வதாக மருத்துவ கல்லூரி காவல் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெகதீசன் மற்றும் போலீசார், புதிய பேருந்து நிலையம் பகுதியில் தொடர்ந்து ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அச்சமயம் சந்தேகப்படும் வகையில் அப்பகுதியில் நின்று கொண்டிருந்த ஒருவரை பிடித்து விசாரித்த போது, அந்த நபர் சாமந்த […]
கடையின் ஓட்டை பிரித்து கொள்ளை அடிக்க முயற்சித்த சம்பவம் பரபரப்பை எற்படுத்தியுள்ளது தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள வல்லம் முக்கன் செட்டி தெருவில் முகமது இசாக் என்பவர் வசித்து வருகிறார். இவர் வல்லம் கடைவீதியில் பெட்டிக்கடை மற்றும் பஞ்சர் கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் இரவு கடையை அடைத்துவிட்டு மறுநாள் காலை சென்று கடையை திறந்தபோது கடைக்குள் மழைநீர் தேங்கி கிடப்பதை கண்டார். அதன் பின் மேலே பார்த்தபோது கடையில் உள்ள ஓடுகள் பிரிக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி […]
தலையில் கருப்பு துணி கட்டிக்கொண்டு வேளாண் திட்டங்களை திரும்ப பெற வேண்டி விவசாயிகள் ஆர்ப்பாட்டம் செய்தனர் தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள முல்லக் குடியில் விவசாய தொழிலாளர் சங்கம் மற்றும் பூதலூர் வடக்கு ஒன்றிய விவசாய சங்கம் சார்பில் விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டமானது டெல்லியில் போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையிலும், வேளாண் சட்டங்களை அரசு திரும்ப பெற வேண்டியும், அதனோடு கருப்பு தினமாக புத்தாண்டு தினத்தை அனுசரிக்க வேண்டியும் நடைபெற்றது. அப்போது விவசாயிகள் தலையில் […]
சாலையின் குறுக்கே மாடு வந்ததால் டிராக்டர் கவிழ்ந்து ஓட்டுநர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள நடுவூர் ஆதிதிராவிடர் தெருவில் விவேக் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் விவேக் அவரது ஊரில் இருந்து கொல்லாங்கரை நோக்கி டிராக்டரில் சென்று கொண்டிருந்தார். அப்போது கொல்லாங்கரை சாலையில் சென்று கொண்டிருந்த பொழுது, குறுக்கே ஒரு மாடு வந்ததை கண்ட விவேக் மாட்டின் மேல் டிராக்டர் மோதாமல் தடுப்பதற்காக டிராக்டரை […]
ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்கத்தினர், பேராவூரணி ஒன்றிய அலுவலக வளாகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள பேராவூரணி ஒன்றிய அலுவலக வளாகத்தில் வைத்து ஊரக வளர்ச்சித் துறை அலுவலர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் உள்ள உதவி பொறியாளர், ஒன்றிய பொறியாளர், பணி மேற்பார்வையாளர் மற்றும் உதவி இயக்குனர் நிலையிலான பணிகளுக்கான பதவி உயர்வுகளை உடனடியாக வழங்க வேண்டும் என வலியுறுத்தினர். இந்த ஆர்ப்பாட்டமானது மாநில செயற்குழு உறுப்பினர் […]
நான்காம் வகுப்பு படிக்கும் மாணவி 48 நினைவு சின்னங்களின் பெயர்களை ஒரு நிமிடத்தில் கூறி சாதனை படைத்துள்ளார். தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள அருளானந்த நகரில் பாலகிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு நதியா என்ற மனைவி உள்ளார். இத்தம்பதிகளுக்கு தயாநிதிதா என்ற ஒரு மகள் உள்ளார். இந்நிலையில் நான்காம் வகுப்பு படித்து வந்த தயாநிதிதா வரலாற்றுச் சின்னங்கள் மற்றும் அதனை கட்டியவர்களின் பெயர்களை வெறும் ஒரு நிமிடத்தில் கூறி இந்திய சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார். இந்தியன் ரெக்கார்டு […]
வெளிமாநில லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்த முதியவரின் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர். தஞ்சை மாவட்டத்திலுள்ள ஏனாதி கரம்பை என்ற பகுதியில் ராஜாக்கண்ணு என்பவர் வசித்து வருகிறார். இம்முதியவர் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள வடகாடு அருகிலுள்ள ஆவனம் கைகாட்டி என்ற பகுதியில் தடை செய்யப்பட்ட வெளிமாநில லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனை அடுத்து அந்த இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் அம்முதியவரிடருந்து ரூபாய் 2500 மதிப்புள்ள வெளிமாநில லாட்டரி […]
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு விவசாயி ஒருவர் ஒரு கரும்பின் விலை 20 என தன் வயலில் பேனர் வைத்துள்ளார் தமிழர் பண்டிகைகளில் மிகவும் முக்கியமான பண்டிகை தை மாதம் முதல் நாளில் கொண்டாடப்படும் பொங்கல் பண்டிகையாகும். அந்நாளில் மக்கள் புத்தாடை அணிந்து அரிசியை பொங்கலிட்டு கதிரவனுக்கு படைத்து வழிபடுவர். இப்பண்டிகையில் மிகவும் முக்கியத்துவம் பெறுவது கரும்பு ஆகும். தற்போது இக்கரும்புகளை கொள்முதல் செய்ய அதிகாரிகளும் வியாபாரிகளும் தீவிரமாக ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்நிலையில் தஞ்சாவூர் மாவட்டத்தில் ஒவ்வொரு […]
தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரியில் கொரோனா சிகிச்சை பெற்ற வந்த 9 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தஞ்சையில் நேற்று வரை 150 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 96 பேர் ஏற்கனவே குணமடைந்த வீடு திரும்பியுள்ள நிலையில் இன்று 9 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 105ஆக உள்ளது. மேலும் 45 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். இதேபோல தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை பெற்று வந்த 11 […]