மதுக்கடைக்கு மது பிரியர்கள் கூட்டம் கூட்டமாக வந்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகம் முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நேற்று நடைபெற்றுள்ளது. இதனால் மதுரை மாவட்டத்தில் உள்ள அரசு மதுபான கடைகளை மூடுவதற்கு உத்தரவிடப்பட்டது. ஆனால் திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றிய பகுதியில் தேர்தல் நடைபெறாததால் அங்கு மதுபான கடைகள் திறக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மது பிரியர்கள் போட்டி போட்டுக்கொண்டு கூட்ட நெரிசலில் நிலையூர் மதுக்கடைக்கு சென்று மதுபானங்களை வாங்கி சென்றுள்ளனர்.இதனால் காவல்துறையினர் அங்கு விரைந்து சென்று கூட்டத்தை […]
Tag: # Tasmac
தாராபுரத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளில் மது பிரியர்கள் சமூக இடைவெளியை பின்பற்றாமல் மதுவை வாங்கி செல்வதால் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. உலகெங்கிலும் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை வேகமாக பரவி வருகிறது. இதனை தடுக்கும் பொருட்டு தமிழக அரசு ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கும், பிற நாட்களில் இரவு நேர ஊரடங்கையும் அமல்படுத்தியுள்ளது. இந்நிலையில் திருப்பூர் மாவட்டத்திலுள்ள தாராபுரத்தில் இருக்கும் டாஸ்மாக் கடைகளில் மது பிரியர்கள் சமூக இடைவெளியை பின்பற்றாமல் மதுவினை வாங்கி செல்கின்றனர். இப்பகுதியில் கடந்த […]
டாஸ்மாக் கடை தொடர்ந்து 3 நாட்கள் மூடப்படுவதால் மதுபானங்களை வாங்க மது பிரியர்கள் குவிந்து விட்டனர். தமிழகத்தில் வருகிற 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக இன்று(ஞாயிற்றுக்கிழமை), நாளை(திங்கள்), மற்றும் நாளை மறுநாள்(செவ்வாய்) என மூன்று நாட்கள் டாஸ்மாக் கடை மூடப்படுகிறது. இந்நிலையில் கோயம்புத்தூர் மாவட்டத்தில் மூன்று நாட்கள் தொடர்ந்து டாஸ்மாக் கடை மூடப்படுவதால் மது பிரியர்கள் மதுபானங்களை வாங்க குவிந்து விட்டனர். அப்போது அரசு நெறிப்படுத்திய வழிமுறைகளை கடைபிடிக்காமல், கொரோனா தொற்று அச்சமில்லாமல் […]
டாஸ்மாக் கடைக்குள் பாம்பு நுழைந்து விட்டதால் மது பிரியர்கள் அலறியடித்து ஓடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டத்தில் உள்ள நெய்தலூர் காலனி பகுதியில் டாஸ்மாக் கடை அமைந்துள்ளது. இந்த டாஸ்மாக் கடையில் வியாபாரம் நடந்து கொண்டிருக்கும் போது, மதியம் சுமார் ஒரு மணி அளவில் டாஸ்மாக் கடைக்குள் வயல் வெளியிலிருந்து சாரை பாம்பு ஒன்று புகுந்துவிட்டது. இந்நிலையில் பாம்பைப் பார்த்ததும் மது வாங்க நின்ற மது பிரியர்கள் அலறியடித்துக் கொண்டு அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர். இதுகுறித்து […]
புதிதாக திறக்கப்பட்ட டாஸ்மாக் கடையை மூடக் கோரி கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள என்.புதூர் கிராமத்தில் புதிதாக டாஸ்மாக் கடை திறப்பதற்கு மும்முரமாக பணிகள் நடைபெற்று கொண்டிருந்தது. இதற்கு கிராண்டிபுரம் கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அண்ணாதுரையிடம் இது தொடர்பாக மனு ஒன்றை அளித்துள்ளனர். ஆனால் கிராம மக்களின் எதிர்ப்பை மீறி அப்பகுதியில் டாஸ்மாக் கடை அமைக்கப்பட்டு காலை 11 மணி அளவில் திறக்கப்பட்டுள்ளது. இது […]
புதிதாக திறக்கப்பட்ட டாஸ்மாக் கடையை மூடக்கோரி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள மூங்கில்துறைப்பட்டு பகுதியில் கடந்த 4 நாட்களுக்கு முன் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டது. இந்நிலையில் அந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் புதிதாக திறக்கப்பட்ட அந்த டாஸ்மாக் கடையை உடனடியாக மூடுமாறு திடீரென போராட்டம் செய்தனர். இதனையடுத்து மூலத்துறைபட்டு சப் இன்ஸ்பெக்டர் இளங்கோவன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அங்கு போராடியவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது பொதுமக்கள் வசித்து வரும் பகுதியில் […]
புத்தாண்டு தினமான நேற்று மது கடைகளில் விற்பனையானது ரூபாய் நாலரை கோடியை எட்டியுள்ளது. தமிழ் நாட்டில் கொண்டாடப்படும் தீபாவளி, பொங்கல் மற்றும் புத்தாண்டு போன்ற பண்டிகைக் காலங்களில் டாஸ்மாக் கடைகளில் மது விற்பனையானது அமோகமாக இருக்கும். இதற்காக பண்டிகை காலங்களில் மதுபானங்கள் இருப்பில் வைக்கப்பட்டு தட்டுப்பாடின்றி அதிகளவில் விற்பனை செய்யப்படும். இந்நிலையில் ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு ஒரு சில நாட்களுக்கு முன்னரே ஒவ்வொரு டாஸ்மாக் கடைகளுக்கும் அதிகளவு மதுபானங்கள் அனுப்பி வைக்கப்பட்டன. இதனையடுத்து புத்தாண்டு தினத்தன்று மது […]
தமிழகத்தில் டாஸ்மாக் பார்கள் திறக்கப்பட உள்ளதாக தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக மத்திய மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். இதனுடைய பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக மார்ச் முதல் கடந்த ஜூலை 31-ஆம் தேதி வரை கடுமையாக ஊரடங்கு பின்பற்றப்பட்டு வந்தது. இதன்படி, தமிழகத்தில் பல டாஸ்மாக் கடைகள் திறக்கப்படாமல் மூடப்பட்டிருந்தன. இதையடுத்து ஊரடங்கு தளர்வு ஏற்பட்டதைத் தொடர்ந்து, தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டது.இந்நிலையில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்ட […]
தமிழகத்தில் மதுபான கடைகள் திறந்தது குறித்து உயர்நீதிமன்ற மதுரை கிளை சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளது. கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக மத்திய மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இருப்பினும் இதன் பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக தொடர்ந்து பல மாநில அரசுகள் ஊரடங்கை தளர்வுகளுடன் தொடர்ந்து நீடித்து வருகின்றன. இந்த ஊரடங்கின் காரணமாக பல தொழில் துறைகள் முடங்கி தொழிலை முடக்கி சென்றாலும், நஷ்டம் இல்லாமல் லாபத்துடன் இயங்கக் கூடிய சிறப்பான துறையாக டாஸ்மாக் கடை […]
தமிழகத்தில் டாஸ்மாக் மதுக்கடைகள் திறந்த ஓரிரு நாட்களில் 100 கோடி ரூபாய்க்கு மேல் விற்பனையான மது வகைகள், தற்போது மக்களிடம் பணப்புழக்கம் இல்லாத காரணத்தால் கடும் சரிவை சந்தித்துள்ளது. தமிழகம் முழுவதும் 5,000-த்துக்கும் மேற்பட்ட டாஸ்மாக் மதுக்கடைகள் செயல்பட்டு வருகின்றன. இக்கடைகளில் சராசரியாக வார நாட்களில் ரூ.90 கோடியும், வார இறுதி நாட்களில் ரூ.100 கோடிக்கு மேல் விற்பனையாகும்.. கடந்த கொரோனா ஊரடங்கு தளர்வின் ஒரு பகுதியாக சென்னை தவிர்த்து பிற மாவட்டங்களில் டாஸ்மாக் மதுக்கடைகள் திறக்கப்பட்டன. […]
காரைக்காலில் மதுக்கடைகள் திறக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடைபெற்று வருகிறது. புதுச்சேரியில் மதுக்கடைகள் திறக்க ஆளுநர் கிரண் பேடி அனுமதி அளிக்கமால் இருந்த நிலையில் நேற்று முன்தினம் மது கடைகள் திறக்கலாம் என அறிவித்தார். அதனை தொடர்ந்து புதுச்சேரியில் மதுக்கடைகள் திறக்க நிபந்தனைகளும் அம்மாநில அரசு அனுமதி அளித்துள்ளது. மேலும் தமிழகத்தின் டாஸ்மாக் விலைக்கு நிகராக புதுச்சேரியில் மதுபானங்கள் விலையை உயர்த்தி புதுச்சேரி அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அரசின் அனுமதியை தொடர்ந்து இன்று புதுச்சேரியில் 64 நாட்களுக்கு […]
புதுச்சேரியில் 64 நாட்களுக்கு பிறகு மதுபான கடைகள் திறக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா வைரஸ் காரணமாக கடந்த மார்ச் 25ம் தேதி முதல் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. அன்று முதல் மதுக்கடைகளும் திறக்கப்படவில்லை. ஊரடங்கு காரணமாக பல்வேறு மாநிலங்களில் வரி வருவாய் இழப்பு ஏற்பட்டது. இதனையடுத்து நாடு முழுவதிலும் ஊடங்கு தளர்வுகளுக்கு இடையே பல்வேறு மாநிலங்கள் தங்களின் வரி வருவாயை பெருக்கி கொள்ள மதுகடைகளை திறந்தன. தமிழகத்திலும் சென்னை தவிர மற்ற பகுதிகளில் மதுக்கடைகள் திறக்கப்பட்டு மது விற்பனை […]
புதுச்சேரியில் மதுபானங்கள் விலை உயர்வதாக அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா வைரஸ் காரணமாக கடந்த மார்ச் 25ம் தேதி முதல் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. கடந்த 17ம் தேதி முதல் ஒரு சில தளர்வுகளுடன் 4ம் கட்ட ஊரடங்கு வரும் 31ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு காரணமாாக பல்வேறு மாநிலங்களில் வரி வருவாய் இழப்பு ஏற்பட்டது. இதனையடுத்து நாடு முழுவதிலும் பல்வேறு மாநிலங்கள் தங்களின் வரி வருவாயை பெருக்கி கொள்ள மதுகடைகளை திறந்தன. தமிழகத்திலும் சென்னை […]
தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் ரூ.103 கோடிக்கு மது விற்பனை நடைபெற்றுள்ளது. தமிழகத்தில் முதல் இரண்டு நாட்கள் மட்டும் ரூ. 100 கோடிக்கு மேல் மது விற்பனையாகியிருந்த நிலையில் அதனை தொடர்ந்து டாஸ்மாக் மதுவிற்பனை ரூ.100 கோடிக்கு கீழ் குறைந்தது. முதல் நாள் ரூ.163.5 கோடி, இரண்டாம் நாள் ரூ.133 கோடி, 3வது நாள் ரூ. 100 கோடிக்கும், நான்காம் நாள் ரூ. 91 கோடி, ஐந்தாம் நாள் ரூ. 98.5 கோடிக்கும் மது விற்பனை ஆகியுள்ளது. […]
தமிழகத்தில் முதல் இரண்டு நாட்கள் மட்டும் ரூ. 100 கோடிக்கு மேல் மது விற்பனையாகியிருந்த நிலையில் அதனை தொடர்ந்து டாஸ்மாக் மதுவிற்பனை ரூ.100 கோடிக்கு கீழ் குறைந்துள்ளது. முதல் நாள் ரூ.163.5 கோடி, இரண்டாம் நாள் ரூ.133 கோடி, 3வது நாள் ரூ. 100 கோடிக்கும், நான்காம் நாள் ரூ. 91 கோடி, ஐந்தாம் நாள் ரூ. 98.5 கோடிக்கும் மது விற்பனை ஆகியுள்ளது. நேற்று தமிழகம் முழுவதும் 98.5 கோடிக்கு மது விற்பனை செய்யப்பட்டுள்ள நிலையில் […]
தமிழகத்தில் டாஸ்மாக் மது விற்பனையில் மதுரை மண்டலமே முதலிடம் பெற்றுள்ளது. தமிழகத்தில் மதுக்கடைகளை மூட வேண்டும் என்ற சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்த தமிழக அரசு மதுக்கடைகளை திறக்க அனுமதியை பெற்றது. இதனை தொடர்ந்து நேற்று சென்னை தவிர்த்து பிற மாவட்டங்களில் மதுக்கடைகள் திறக்கப்பட்டன. காலை முதலே காத்துக் கிடந்து மது பிரியர்கள் மதுவை வாங்கி சென்றனர். அனைத்து மதுக்கடைகளையும் சமூக இடைவெளி கடைபிடிக்க டோக்கன் வழங்கப்பட்டது. ஒரு மணி நேரத்துக்கு 70 […]
காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டத்தில் மொத்தம் 24 மதுக்கடைகள் இயக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் பொன்னையன் தெரிவித்துள்ளார். காஞ்சிபுரத்தில் 10 கடைகள், வாலாஜாபாத்தில் 3 மதுக்கடைகள், உத்திரமேரூரில் 3 மதுக்கடைகள் மட்டுமே திறக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். ஸ்ரீபெரும்புதூர், குன்றத்தூர் வட்டங்கள், சென்னை காவல் நிலைய எல்லைக்குட்பட்டது என்பதால் அங்கு மதுக்கடைகள் திறக்கப்படாது என தெரிவித்துள்ளார். தமிழகத்தில் இன்று முதல் டாஸ்மாக் கடைகளைத் திறக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. டாஸ்மாக் வழக்கில் தமிழக அரசின் […]
மதுபானம் வாங்க ஞாயிறு முதல் திங்கள் வரை வண்ண டோக்கன்கள் வழங்க டாஸ்மாக் நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது. குறிப்பிட்ட வண்ண டோக்கன் உள்ளவர்கள், குறிப்பிட்ட நாளில் டாஸ்மாக் கடைக்கு சென்று மது வாங்கிக் கொள்ளலாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. சிவப்பு, மஞ்சள், பச்சை, நீலம் உள்ளிட்ட 7 வண்ணங்களில் மது வாங்க டோக்கன் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு வண்ண டோக்கனுக்கு மதுபானம் விற்பனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அதில் குறிப்பிட்டுள்ள […]
தமிழகத்தில் மதுக்கடைகளை மூட வேண்டும் என்ற சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால் தமிழகத்தில் மார்ச் 24ம் தேதியில் இருந்து டாஸ்மாக் மதுபான கடைகள் மூடப்பட்டது. இந்த நிலையில் மே 7ம் தேதி மதுக்கடைகளை திறக்க தமிழக அரசு உத்தரவிட்டது. இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்த நிலையில் தமிழக உத்தரவை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த […]
டாஸ்மாக் மதுபானங்களை ஆன்லைன் மூலம் விற்க உத்தரவிட கோரிய வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால் தமிழகத்தில் மார்ச் 24ம் தேதியில் இருந்து டாஸ்மாக் மதுபான கடைகள் மூடப்பட்டது. இந்த நிலையில் மே 7ம் தேதி மதுக்கடைகளை திறக்க தமிழக அரசு உத்தரவிட்டது. இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்த நிலையில் தமிழக உத்தரவை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு கடந்த 6ம் […]
பாஜகவை ரஜினிகாந்த் கண்டிக்க வேண்டும் என்று மக்களவை உறுப்பினர் ரவிக்குமார் தெரிவித்துள்ளார். தமிழக அரசாங்கம் டாஸ்மாக் மதுக்கடைகளை மூடுவதற்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. இந்த மனு நாளை விசாரணைக்கு வர இருக்கிறது. தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யக் கூடாது என்று தமிழகத்தில் உள்ள ஒட்டுமொத்த கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்தன. அந்த வகையில் தேமுதிக தலைவர் விஜயகாந்த், மக்கள் நீதி மைய தலைவர் கமலஹாசன், திமுக தலைவர் மு.க ஸ்டாலின் […]
தமிழகத்தில் ஆன்லைன் மூலமாக மது விற்பனைக்கு உயர்நீதிமன்றம் அனுமதி அளித்திருந்த நிலையில் அதற்கு தடை கோரி வழக்கு தொடரப்பட்டுள்ளது. கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால் தமிழகத்தில் மார்ச் 24ம் தேதியில் இருந்து டாஸ்மாக் மதுபான கடைகள் மூடப்பட்டது. இந்த நிலையில் மே 7ம் தேதி மதுக்கடைகளை திறக்க தமிழக அரசு உத்தரவிட்டது. இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்த நிலையில் தமிழக உத்தரவை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு […]
தமிழக அரசு மதுக்கடைகளை திறக்க எடுக்கும் முயற்சிக்கு நடிகர் ரஜினிகாந்த கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகம் பாதித்த பகுதிகள் மற்றும் சென்னை மாவட்டம் தவிர்த்து பிற பகுதிகளில் உள்ள டாஸ்மாக் மது கடைகள் திறக்கப்படும் என்று தமிழக அரசு உத்தரவிட்டது. இந்த உத்தரவை அடுத்து 2 நாட்கள் தமிழகத்தில் மது விற்பனை தமிழகத்தில் ஜோராக நடைபெற்றன. அதேநேரத்தில் உயர்நீதிமன்றம் பிறப்பித்த வழிகாட்டல்கள் மது விற்பனையில் மீறப்பட்டதுள்ளதாக பல்வேறு விமர்சனகள் எழுந்தது. மேல்முறையீடு: இதனைத் தொடர்ந்து […]
தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை மூட சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதற்கு எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல் முறையீடு செய்துள்ளது. கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால் தமிழகத்தில் மார்ச் 24ம் தேதியில் இருந்து டாஸ்மாக் மதுபான கடைகள் மூடப்பட்டது. இந்த நிலையில் மே 7ம் தேதி மதுக்கடைகளை திறக்க தமிழக அரசு உத்தரவிட்டது. தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் தமிழக அரசு டாஸ்மாக்கை திறக்க முடிவு […]
தமிழகத்தில் ஊரடங்கு நிறைவடையும் வரை டாஸ்மாக் கடைகளை மூட உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆன்லைன் மூலம் மட்டுமே விற்பனை செய்ய உத்தரவிட்டுள்ளது. நீதிமன்ற உத்தரவுகள் மீறப்பட்டதால் சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால் தமிழகத்தில் மார்ச் 24ம் தேதியில் இருந்து டாஸ்மாக் மதுபான கடைகள் மூடப்பட்டது. இந்த நிலையில் மே 7ம் தேதி மதுக்கடைகளை திறக்க தமிழக அரசு உத்தரவிட்டது. தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா […]
மதுக்கடைகளை திறக்கும் உத்தரவை ரத்து செய்ய கோரி உயர்நீதிமன்றத்தில் மக்கள் நீதி மய்யம் வழக்கு தொடர்ந்துள்ளது. கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால் தமிழகத்தில் மார்ச் 24ம் தேதியில் இருந்து டாஸ்மாக் மதுபான கடைகள் மூடப்பட்டது. இந்த நிலையில் மே 7ம் தேதி மதுக்கடைகளை திறக்க தமிழக அரசு உத்தரவிட்டது. தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் தமிழக அரசு டாஸ்மாக்கை திறக்க முடிவு செய்ததற்கு பலரும் […]
தமிழகத்தில் நேற்று டாஸ்மாக் திறந்த முதல் நாளில் ரூ.170 கோடிக்கு மது விற்பனையாகியுள்ளது. தமிழகத்தில் 43 நாட்களுக்கு பின்னர் நேற்று மதுக்கடைகள் திறப்பட்ட நிலையில் அதிகபட்சமாக மதுரையில் ரூ. 37 கோடிக்கு மது விற்பனையாகியுள்ளது. சென்னை புறநகர் பகுதியில் ரூ.34 கோடியும், திருச்சி மண்டலத்தில் ரூ.32 கோடியும், சேலம் மண்டலத்தில் ரூ.33 கோடியும், கோவை மண்டலத்தில் ரூ. 34 கோடி என ஒட்டு மொத்தமாக நேற்று ஒரே நாளில் ரூ.170 கோடி மது விற்பனை செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் […]
தமிழகத்தில் நேற்று டாஸ்மாக் திறந்த முதல் நாளில் மதுபானங்கள் ரூ.170 கோடிக்கு விற்பனையானது. அதிகபட்சமாக மதுரையில் ரூ. 37 கோடிக்கு மது விற்பனை நேற்று நடைபெற்றது. சென்னை புறநகர் பகுதியில் ரூ.34 கோடியும், திருச்சி மண்டலத்தில் ரூ.32 கோடிக்கும் மது விற்பனை செய்யப்பட்டுள்ளது. சேலம் மண்டலத்தில் ரூ.33 கோடியும், கோவை மண்டலத்தில் ரூ. 34 கோடியும் மது விற்பனை செய்யப்பட்டுள்ளது. பொதுவாக தீபாவளி, புத்தாண்டு தினங்களில் ரூ. 120 கோடி முதல் ரூ.200 கோடி வரை விற்பனையாகும் […]
தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை மூட வலியுறுத்தி தன்னார்வலர் ஒருவர் காந்தி வேடமிட்டு தனியாக போராட்டம் நடத்தினார். கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக ஊரடங்கு உத்தரவு கடந்த மார்ச் 24ஆம் தேதி முதல் இந்தியாவில் பிறப்பிக்கப்பட்டு பொதுமக்கள் அத்தியாவசியப் பொருட்களை வாங்குவதற்காக மட்டுமே தங்களது வீடுகளை விட்டு வெளியேறும் சூழ்நிலை யில் இருந்து வந்தனர். இந்நிலையில் 43 நாட்களுக்குப் பிறகு இன்று மதுபான கடைகள் திறக்கப்பட்டு மது விற்பனை அமோகமாக நடைபெற்றது. திறந்த முதல் நாளே ஆங்காங்கே கூட்டம் கூடுவது, […]
தமிழகத்தில் இனி ஒரு நபருக்கு 3 நாளுக்கு ஒருமுறை மட்டுமே மதுபானம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடும் எதிர்ப்புக்கு பிறகு இன்று முதல் பெரும்பாலான பகுதிகளில் மதுபான கடைகள் திறக்கப்பட்டு விற்பனை நடைபெற்று வருகின்றன. இதுவரை ஓரளவு கட்டுப்பாட்டில் இருக்கும் கொரோனா மதுக்கடைகள் திறந்தபின் தாறுமாறாக அதிகரித்து விடக்கூடாது என்பதில், தமிழக அரசும், காவல் துறையினரும் கவனமாக செயல்பட்டு வருகின்றனர். அதன்படி, பல்வேறு மாவட்டங்களில் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வரும் சூழ்நிலையில், தற்போது புதிய அறிவிப்பை […]
மதுரையில் இன்று பச்சை அட்டைதாரர்களுக்கு மட்டுமே மதுபானம் வழங்கப்படும் என அம்மாநகராட்சி தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பதிப்பு நாளுக்குநாள் அதிகரித்து வரும் சூழ்நிலையில், மதுபான கடைகளை திறக்க தமிழக அரசு உத்தரவிட்டு இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் மேலும் கொரோனா வைரஸ் பரவுவதற்கு ஏராளமான வாய்ப்புகள் இருப்பதாக சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்து வரும் சூழ்நிலையில், முறையான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவதாக அரசு சார்பில் அவ்வப்போது விளக்கங்கள் அளிக்கப்பட்டு வருவதுடன், நடைமுறைப்படுத்தப்பட்டும் வருகின்றன. அந்த வகையில், […]
தமிழகத்தில் மதுக்கடைகளில் மதுபிரியர்கள் அதிகளவில் கூட்டமாக கூடி மது வாங்கி செல்கின்றனர். தமிழகத்தில் சென்னை தவிர்த்து மற்ற இடங்களில் டாஸ்மாக் மது கடைகள் திறக்கப்பட்டு இருக்கின்றது. ஆதார் அட்டையுடன் டாஸ்மாக் கடை முன்பாக மது பிரியர்கள் குவிந்திருக்கும் காட்சிகளைப் பார்க்க முடிகிறது. 7ஆம் தேதி காலை 10 மணி முதல் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படும் என்று தமிழக அரசு இரண்டு நாட்களுக்கு முன்பு அறிவிப்பு வெளியிட்டது. சென்னை மற்றும் நோய் கட்டுப்பாட்டு பகுதிகளை தவிர மற்ற இடங்களில் டாஸ்மாக் […]
நாளை சென்னை மாவட்டத்தில் உள்ள குடிமகன்கள் பிற மாவட்டங்களுக்குச் சென்று மது வாங்கினால் கைது செய்யப்படுவார்கள் என வடக்கு மண்டல ஐஜி எச்சரிக்கை விடுத்துள்ளார். கொரோனா பாதிப்பை தடுப்பதற்காகவே 17ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சில தளர்வுகள் உடன், தனிக் கடைகள் இயங்க தமிழக அரசால் அனுமதிக்கப்பட்டது. அந்த வரிசையில், மதுபான கடைகளையும் இயங்க தமிழக அரசு அனுமதித்துள்ளது. மே 7 ஆம் தேதியான நாளை முதல் சென்னை மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளை தவிர […]
சேலம் மாவட்டம் ஓமலூரில் டோக்கன் ஒன்றிற்கு ஒரு ஃபுல் மட்டுமே வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக நாடு முழுவதும் மே 17-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. சில தளர்வுகளுடன் தனிக் கடைகள் செயல்பட்டு வந்தாலும், அதிக கூட்டங்கள் நிலவும் வணிக வளாகங்கள், திரையரங்குகள், உள்ளிட்ட பகுதிகளுக்கு தடை நீட்டிக்கப்பட்டு உள்ளது. அவ்வாறு இருக்கையில், அதிக கூட்டம் கூடும் மதுபான கடைகளுக்கு வருகின்ற மே 7-ஆம் தேதி முதல் அதிக கூட்டம் கூடும் மதுபான […]
தமிழகத்தில் டாஸ்மாக் கடையை திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக 5 சிறுவர்கள் 30 கிலோமீட்டர் வரை வெயிலில் நடைபயணம் மேற்கொண்ட சம்பவம் நெட்டிசன்கள் மற்றும் குடிமகன்களிடையே குற்ற உணர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக மே 17 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த சூழ்நிலையில் மால்கள், திரையரங்குகள், வணிக வளாகங்கள் உள்ளிட்ட அதிக கூட்டம் கூடும் இடங்களுக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. மாநில அரசுகளும், அதற்கு தடை விதித்திருக்கும் பட்சத்தில், அதிகளவில் கூடும் இடமான மதுபான […]
தமிழகத்தில் நாளை டாஸ்மாக் மதுக்கடைகளை திறக்க தடை இல்லை என உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால் தமிழகத்தில் மார்ச் 24ம் தேதியில் இருந்து டாஸ்மாக் மதுபான கடைகள் மூடப்பட்டது. இந்த நிலையில் மே 7ம் தேதி மதுக்கடைகளை திறக்க தமிழக அரசு உத்தரவிட்டது. தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் தமிழக அரசு டாஸ்மாக்கை திறக்க முடிவு செய்ததற்கு பலரும் […]
கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால் தமிழகத்தில் மார்ச் 24ம் தேதியில் இருந்து டாஸ்மாக் மதுபான கடைகள் மூடப்பட்டது. இந்த நிலையில் மே 7ம் தேதி மதுக்கடைகளை திறக்க தமிழக அரசு உத்தரவிட்டது. தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் தமிழக அரசு டாஸ்மாக்கை திறக்க முடிவு செய்ததற்கு பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் தமிழக உத்தரவை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு […]
டாஸ்மாக் மதுக்கடைகள் நாளை திறக்கப்பட உள்ள நிலையில் கூட்டத்தை கட்டுப்படுத்த காவல்துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. அதன்படி, * காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை 50 வயதுக்கு மேற்பட்டோரை மட்டுமே அனுமதிக்க வேண்டும். * மதியம் 1 மணி முதல் மதியம் 3 மணி வரை 40-லிருந்து 50 வயதுக்குட்பட்டவர்களுக்கு அனுமதி. * மதியம் 3 மணி முதல் மாலை 5 மணி வரை 40 வயதுக்குட்பட்டவர்களுக்கு அனுமதி. தமிழகத்தில் கொரோனா பரவலை […]
தமிழகத்தில் மதுக்கடைகள் திறக்கப்படுவதை கண்டித்து மக்கள் அனைவரும் நாளை கருப்புச்சின்னம் அணியுமாறு திமுக தலைமையிலான கூட்டணி கட்சி கேட்டுக்கொண்டுள்ளது. தமிழகத்தில் சென்னையை தவிர்த்து பிற பகுதிகளில் மதுபான கடைகள் திறக்கப்பட இருக்கும் நிலையில், அதற்கு திமுக கூட்டணி எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து மு.க.ஸ்டாலின் மற்றும் கூட்டணி காட்சிகளில் அங்கம் வகிக்கும் அனைத்து கட்சி தலைவர்கள் கூட்டாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில், தமிழக அரசு கொரோனா தடுப்பு ஏற்பாடுகளை முறையாக செய்யாமலும், வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டோருக்கு நிவாரணம் அளிக்காமலும் […]
தமிழகத்தில் நாளை முதல் சில நிபந்தனைகளுடன் டாஸ்மாக் மதுபான கடைகள் திறக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. டாஸ்மாக் மதுக்கடைகள் நாளை திறக்கப்பட உள்ள நிலையில் கூட்டத்தை கட்டுப்படுத்த காவல்துறை நடவடிக்கை எடுத்துள்ளனர். அதன்படி நாளை முதல் மதுபானக் கடைகள் தொடங்க உள்ள நிலையில் பாதுகாப்பு விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. அதில், ஒவ்வொரு கடைக்கும் தலா 2 காவலர்கள், 2 ஊர்க்காவல் படையினர், 1 தன்னார்வலர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த தமிழக அரசு உத்தரவிட்டது. ஒவ்வொருவருக்கும் இடையே 6 […]
டாஸ்மாக் கடை திறக்கும் முடிவை தமிழக அரசு திரும்பப் பெற வேண்டுமென எம்.பி கனிமொழி வலியுறுத்தியுள்ளார். கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு தொடர்ந்து நீக்கப்பட்டாலும், ஒருசில தளர்வுகளுடன் கடைகளைத் திறக்கலாம் வணிகர்கள் வியாபாரங்களை மேற்கொள்ளலாம் என்று தமிழக அரசு உத்தரவிட்டது. அந்த வகையில், டாஸ்மாக் கடைகளை திறக்கவும் முடிவுகள் எடுக்கப்பட்டு வருகின்றன. வருகின்ற ஏழாம் தேதி முதல் டாஸ்மாக் கடைகள் செயல்படும் என்றும் அறிவித்தது. இதற்கு பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனங்களை தெரிவித்து […]
தமிழகத்தில் நாளை டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட உள்ள நிலையில் மதுபானங்களின் விலையை ரூ.20 வரை தமிழக அரசு உயர்த்தியுள்ளது. கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால் தமிழகத்தில் மார்ச் 24ம் தேதியில் இருந்து டாஸ்மாக் மதுபான கடைகள் மூடப்பட்டது. தமிழகத்தில் 40 நாட்களுக்கும் மேலாக டாஸ்மாக் மதுபான கடைகள் மூடப்பட்டு உள்ளன. இந்த நிலையில் ஊரடங்கு மே 17ம் தேதி நீட்டித்த மத்திய அரசு, அந்தந்த மாநில அரசுகள் சில தளர்வுகளை […]
திருப்பூரில் மதுபாட்டில்கள் வாங்க வரும்போது குடையுடன் வரவேண்டும் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக மே 17ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டிருக்கும் போதிலும், ஒரு சில தளர்வுகளுடன் தனிக் கடைகள் திறக்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது. அந்த வகையில், டாஸ்மாக் கடைகளை திறக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி, வருகின்ற மே 7-ஆம் தேதி முதல் டாஸ்மாக் கடைகள் சென்னையை தவிர தமிழகத்தின் மற்ற அனைத்து இடங்களிலும் திறக்கப்பட்டு மது […]
டாஸ்மாக் கடையை திறப்பது பணம் மற்றும் பதவிக்காக செய்யும் செயலாகும் என பிரபல தயாரிப்பாளர் கருத்து தெரிவித்துள்ளார். கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக விதிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக கிட்டத்தட்ட 40 நாள்களுக்கு மேலாக மதுபான கடைகள் தமிழகம் மட்டுமல்லாமல் நாடு முழுவதும் மூடிக் கிடந்தது. இந்நிலையில் வருகின்ற மே 7-ஆம் தேதி தமிழகத்தில் மதுபானக் கடை திறக்க உள்ளதாக வந்த அறிவிப்பை தொடர்ந்து, மது பிரியர்கள் அனைவரும் மிகுந்த உற்சாகத்தில் இருக்கின்றனர். ஆனால் இது குறித்து பல்வேறு சமூக […]
மே 7 ஆம் தேதி அழிவின் ஆரம்பம் என சமூக வலைத்தளங்களில் ஹாஷ்டாக் ஒன்று வைரலாகி வருகிறது. கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக நாடு முழுவதும் மே 3ம் தேதியுடன் முடிவடைய இருந்த ஊரடங்கு உத்தரவை, மே 17 வரை மீண்டும் மத்திய அரசு நீட்டித்துள்ளது. இருப்பினும் பல்வேறு தகவல்களின் அடிப்படையில், தனிக் கடைகள் இயங்கும் என்றும், அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அந்த வகையில், முடி வெட்டும் கடை, அழகு நிலையங்கள் உள்ளிட்டவற்றைத் தவிர பிற தனிக் கடைகள் […]
மது பிரியர்களுக்காகதான் டாஸ்மாக் கடை ஓபன் செய்யப்படுவதாக அமைச்சர் செல்லூர் ராஜு கருத்து தெரிவித்துள்ளார். கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக நாடு முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு பொதுமக்கள் தங்களது வீடுகளுக்குள் முடங்கிக் கிடக்கின்றனர். மே 3ம் தேதியுடன் ஊரடங்கு முடிவடைய இருந்த நிலையில், மே 17 வரை மீண்டும் ஊரடங்கானது மத்திய அரசால் நீட்டிக்கப்பட்டது. இருப்பினும் பல்வேறு தளர்வுகளின் அடிப்படையில், தனிக் கடைகள் குறிப்பிட்ட நேரத்திற்கு திறக்கலாம் என அரசு கூறியிருந்தது. அந்த வகையில், டாஸ்மாக் […]
கோயம்பேட்டை காப்பாற்ற இயலாத அரசு டாஸ்மாக்கை திறக்குமாம் என தமிழக அரசு டாஸ்மாக் கடைகளை திறக்க அனுமதி அழித்துள்ளது குறித்து கமலஹாசன் ட்விட்டரில் கண்டனம் தெரிவித்துள்ளார். கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால் தமிழகத்தில் மார்ச் 24ம் தேதியில் இருந்து டாஸ்மாக் மதுபான கடைகள் மூடப்பட்டது. தமிழகத்தில் 40 நாட்களுக்கும் மேலாக டாஸ்மாக் மதுபான கடைகள் மூடப்பட்டு உள்ளன. இந்த நிலையில் ர் மே 7ம் தேதி மதுக்கடைகளை திறக்க தமிழக […]
தமிழகத்தில் மதுபானக்கடைகளை திறக்கும் முடிவு மனமுவந்து எடுக்கப்பட்ட முடிவு அல்ல என அமைச்சர் செல்லூர் ராஜூ விளக்கம் அளித்துள்ளார். மேலும், கள்ள சாராயத்தை ஒழிப்பதற்காகவும், வெளிமாநிலங்களுக்கு சென்று மது வாங்குவதை தடுப்பதற்காகவும்தான் மதுபானக்கடைகளை திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறியுள்ளார். தமிழகத்தில் மார்ச் 24ம் தேதியில் இருந்து 40 நாட்களுக்கும் மேலாக டாஸ்மாக் மதுபான கடைகள் மூடப்பட்டு உள்ளன. இந்த நிலையில் ஊரடங்கு மே 17ம் தேதிவரை மேலும் 2 வாரங்களுக்கு நீடிக்கப்பட்ட பொழுது, மத்திய அரசு மதுபான […]
மூடிய மதுபான கடைகளை திறக்க வேண்டாம் என நடிகர் யோகிபாபு கருத்து தெரிவித்துள்ளார். கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக நாடு முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக அத்தியாவசியப் பொருட்களை தவிர அனைத்து கடைகளும் மூடப்பட்டுள்ளன. இதில் வரலாற்றிலேயே முதல் முறையாக அதிக நாட்கள் மதுபான கடைகள் மூடப்பட்டிருப்பது இதுவே முதல் முறையாகும். ஆகவே ஊரடங்கு முடிந்தபின் முன்னாள் முதல்வர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்கள் சொன்ன பூரண மதுவிலக்கை கருத்தில் கொண்டு, மதுபான கடைகளை […]
தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளதால் அரசுக்கு ரூ 2,500 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதால் அதிக வரி விதிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது… அசுர வேகத்தில் பரவிவரும் கொரோனா பரவலைத் தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் அனைத்து அத்தியாவசிய கடைகளை தவிர மற்ற அனைத்து கடைகளும் மூடப்பட்டுள்ளன. குறிப்பாக மதுக்கடைகளும் மூடப்பட்டுள்ளதால் குடிமகன்கள் சிரமப்படுவதோடு மட்டுமில்லாமல் அரசுக்கும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.. தமிழகத்தில் மொத்தம் அரசின் 5,300 டாஸ்மாக் கடைகள் மூலம் மதுபானங்கள் விற்பனை செய்யப்படுகின்றன. […]