தமிழகத்தில் 144 தடை உத்தரவு முடியும்வரை மதுபான கடைகள் திறக்கவே கூடாது என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக நாடு முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி பொதுமக்கள் அத்தியாவசிய பொருட்களை வாங்குவதற்காக மட்டுமே தங்களது வீடுகளை விட்டு வெளியே வருகின்றனர். இந்நிலையில் இன்று தமிழகத்தில் பல டாஸ்மார்க் கடை மூடப்பட்டு உள்ளதை எண்ணி சிலர் வருத்தம் தெரிவித்து வருகின்றனர். பலர் மதுவுக்கு பதிலாக உடலுக்கு தீங்கு விளைவிக்கும் திரவத்தை அருந்தி […]
Tag: # Tasmac
கள்ளச்சாராயம் விற்பனை தொடர்பாக தமிழகத்தில் இதுவரை 949 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் மே 3ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய பொருட்களான மளிகை, காய்கறிகள் மற்றும் மருந்து பொருட்கள் தவிர மற்ற அனைத்து கடைகளுக்கும் மூடப்பட்டுள்ளன. இந்த சூழலில் டாஸ்மாக் கடைகளும், பார்களும் அடைக்கப்பட்டுள்ளதால் மதுப்பிரியர்கள் செய்வதறியாது தவித்து வருகிறார்கள். தமிழகம் முழுவதும் போதைக்காக ஷேவிங் லோஷன், வார்னிஷ், மெத்தனால் , கள்ளச்சாராயத்தை குடித்து கிட்டத்தட்ட 10 […]
கடலூர் ஆலப்பாக்கத்தில் போதைக்காக மெத்தனால் குடித்த இருவர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் கொரோனோவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1204 ஆக உயர்ந்துள்ளது. இதில் 10 வயதுக்குட்பட்ட குழந்தைகள், சிறார்கள் என 33 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் ஏப்., 14ம் தேதி வரை பிறப்பிக்கப்பட்டிருந்த ஊரடங்கு உத்தரவு மே 3ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால் மே 3ம் தேதி வரை தமிழகத்தில் டாஸ்மாக் மதுக்கடைகள் திறக்கப்படமாட்டாது என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதனால் மது […]
தமிழகத்தில் உள்ள அனைத்து மதுபான கடைகளிலும் மின்னணு முறையில் கட்டணம் செலுத்தும் முறையை விரைவில் அறிமுகப்படுத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பல வருடங்களாகவே தமிழகத்தின் பெரும்பாலான மதுபானக் கடைகளில் மதுபானம் நிர்ணயிக்கப்பட்ட விலையை விட கூடுதல் விலைக்கு விற்கப்படுவதாக புகார்கள் தொடர்ந்து எழுந்த வண்ணம் இருந்தன. இதனை தடுக்கும் விதமாக டாஸ்மாக் நிறுவனம் “பாயிண்ட் ஆப் சேல்” என்ற முறையை அறிமுகப்படுத்த உள்ளது. இதன் மூலம் கட்டணங்கள் அனைத்தும் கிரெடிட் கார்ட், டெபிட் கார்ட், க்யூ […]
மதுக்கடைகளை இடமாற்றம் செய்வது தொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி டாஸ்மாக் வேண்டாம் என கிராம சபைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றினால் அதை நடைமுறைப்படுத்துவதில் தயக்கம் ஏன்? என கேள்வி எழுப்பியுள்ளார். டாஸ்மாக் கடை அமைக்க பொதுமக்களிடம் கருத்து கேட்பதை ஏன் சட்டமாக்க கூடாது? தேர்தல் நேரத்தில் மதுவிலக்கு அளிப்போம் என வாக்குறுதி அளிக்கும் கட்சிகள், ஆட்சிக்கு வந்தால் கடைபிடிப்பதில்லை. மது கடைகள் குறைந்துள்ளதாக கூறும் தமிழக அரசு, மது […]
சட்டவிரோதமாக இயங்கி வரும் மதுக்கூடங்களில், ஆய்வுக்குச் செல்லும் அதிகாரிகள் தாக்கப்படுவதாகவும், அதுகுறித்து புகார் அளித்தால் போலீசார் நடவடிக்கை எடுக்க மறுப்பதாகவும் சிஐடியு டாஸ்மாக் ஊழியர் சங்கத்தினர் ஈரோடு மாவட்டக் காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்துள்ளனர். புளியம்பட்டி நகராட்சிப் பகுதியில் 6 டாஸ்மாக் மதுபானக் கடைகள் உள்ளன. இவற்றில் இரண்டு கடைகளில் மட்டுமே பார் வைத்துக்கொள்ள அரசு அனுமதி வழங்கியுள்ளது. மீதமுள்ள நான்குக் கடைகளை ஒட்டி சட்ட விரோதமாக ஆளும் கட்சியினரின் 24 மணி நேரமும் மது விற்பனையுடன் […]
அண்டை மாநிலங்களை போன்று மதுபானம் குறைந்தவிலைக்கு தமிழ்நாட்டில் விற்கப்படவில்லை என மதுபிரியர்கள் வேதனையடைந்துள்ளனர். பொள்ளாச்சி மற்றும் வால்பாறை ஆனைமலை சுற்றுவட்டார பகுதியில் தினசரி கூலி வேலைக்குச் செல்பவர்கள் அதிகம் உள்ளனர். மேலும், இப்பகுதியில் 30க்கும் மேற்பட்ட அரசு மதுபானக்கடைகள் செயல்படுகிறது. இந்நிலையில், தமிழ்நாடு அரசு மதுபானக்கடைகளில் எவ்வித முன்னறிவிப்புமின்றி மதுபானங்களின் விலை திடீரென்று உயர்த்தப்பட்டுள்ளது. இந்த அறிவிக்கப்படாத விலையேற்றத்தால் தாங்கள் மிகவும் சிரமப்படுவதாக தெரிவிக்கின்றனர் மது பிரியர்கள். இதுகுறித்து மது பிரியர்கள் கூறுகையில், “கேரளா, கர்நாடகா, ஆந்திரா […]
டெல்லியில் மது விற்பனை செய்யும் 125 கடைகள் இன்று முதல் மூடப்படுகின்றன. டெல்லியில் பீர் மற்றும் ஒயின் மது வகைகளை விற்பனை செய்வதற்காக மட்டும் உரிமம் பெற்ற கடைகளில் அதிகாரிகள் நடத்திய திடீர் சோதனையில் அங்கு முறைகேடுகள் நடைபெற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அவ்வாறு முறைகேடுகளில் ஈடுபட்ட 125 மதுபானக் கடைகள் வெள்ளிக்கிழமை முதல் மூடப்பட வேண்டும் என்று டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி சம்பந்தப்பட்ட 125 மது கடைகள் இன்று முதல் மூடப்படுகின்றது.
பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தியதால் அரியப்பம்பாளையம் பகுதியில் புதியதாக திறக்கப்பட்ட டாஸ்மாக் கடை இரண்டே மணி நேரத்தில் மூடப்பட்டது. ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த அரியப்பம்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் புதியதாக டாஸ்மாக் கடை கட்டப்பட்டு, ஞாயிற்றுக்கிழமை திறக்க தயாரானது. ஆனால் புதிய டாஸ்மாக் கடைக்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தால் கடை திறக்கப்படவில்லை. இந்நிலையில், டாஸ்மாக் கடை திடீரென்று திறக்கப்பட்டது. மதுபான பிரியர்களின் கூட்டம் அலைமோதியதால் அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து கடை திறப்புக்கு எதிர்ப்பு […]
செங்கல்பட்டை அடுத்த பாலூர் அருகே புதியதாக திறக்கப்பட்ட மதுபான கடையின் பின்புற சுவற்றில் துளையிட்டு சுமார் 2 லட்சம் ரூபாய் மதிப்புள்ள மது பாட்டில்கள் கொள்ளை அடிக்கப்பட்டு உள்ளன. செங்கல்பட்டு அருகே சாஸ்திரம் பாகம் பகுதியில் கடந்த ஓராண்டுக்கு முன்பு புதியதாக டாஸ்மாக் கடை ஒன்று திறக்கப்பட்டது. நேற்று இரவு அந்த கடையின் பின்பக்க சுவரில் துளையிட்டு உள்ளே நுழைந்த மர்ம நபர்கள் கடையில் இருந்த சிசிடிவி கேமராக்களை உடைத்துவிட்டு கல்லாவில் இருந்த 20 ஆயிரம் ரூபாய் […]
வேலூரில் டாஸ்மாக் கடையில் விற்பனையாளரிடம் ரசீது கேட்ட இளைஞரை விற்பனையாளர் தாக்கும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே உள்ள டாஸ்மாக் கடையில் மதுபானம் வாங்கியதற்காக விற்பனையாளரிடம் இளைஞர் ஒருவர் ரசீது கேட்டுள்ளதாக சொல்லப்படுகின்றது. அதற்க்கு அந்த விற்பனையாளர் அந்த இளைஞருக்கு இடையே தகராறு ஏற்பட்டு வாக்குவாதம் முற்றி கைகலப்பாகியுள்ளது. இதனால் அந்த இளைஞரை எட்டி உதைத்து தாக்கும் சம்பவம் சமூக தளத்தில் வேகமாக பரவி வருகின்றன அருகே டாஸ்மாக் கடை விற்பனையாளர் அட்டூழியத் தாக்குதலில் மயங்கி விழுந்த இளைஞர் முகத்தில் தண்ணீர் […]
உப்புக்கோட்டையில் டாஸ்மாக் கடை திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தேனி மாவட்டம் உப்புக்கோட்டை அருகில் உள்ள டொம்புச்சேரி கிராமத்தில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இந்தப்பகுதி பஸ் நிறுத்தத்தில் இருந்து 200 மீட்டர் தொலைவில் புதிதாக டாஸ்மாக் மதுக்கடை திறக்கப்பட்டது. இந்த கடை முறையான அனுமதி இல்லாமல் திறக்கப்பட்டதாக எழுந்த புகாரையடுத்து கடந்த சில நாட்களுக்கு முன்பு மூடப்பட்டது. இந்நிலையில் மீண்டும் இந்த டாஸ்மாக் கடையை திறக்க இருப்பதாக தகவல் பரவியது.இதற்க்கு […]