Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

மாணவர்களை அடித்தாரா….? ஆசிரியர் செய்த செயல்…. அதிகாரியின் அதிரடி உத்தரவு…!!

மாணவர்களை அடித்த ஆசிரியரை பணியிடை நீக்கம் செய்து அதிகாரி அதிரடியாக உத்தரவிட்டுள்ளார். தர்மபுரி மாவட்டத்திலுள்ள ஒட்டப்பட்டி பகுதியில் அரசு உயர்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் சதீஷ்குமார் என்பவர் கணித ஆசிரியராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் சதீஷ்குமார் சரியாக படிக்கவில்லை என்று சில மாணவர்களை அடித்துள்ளார். இதுதொடர்பாக வந்த புகார்களின் அடிப்படையில் கல்வித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தியுள்ளனர். இந்நிலையில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கணேசமூர்த்தி சதீஷ்குமாரை பணியிடை நீக்கம் செய்து அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.

Categories

Tech |