Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஒதுக்கப்படும் சஞ்சு சாம்சன்: பந்திற்கு பதிலாகப் பரத் தேர்வு!

இந்திய அணியின் விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த் காயம் காரணமாக விலகியதையடுத்து, அவருக்குப் பதிலாக கே.எஸ். பரத் தேர்வுசெய்யப்பட்டுள்ளார். இந்திய – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டியின்போது இந்திய அணி விக்கெட் கீப்பர் ரிஷப் பந்திற்கு காயம் ஏற்பட்டது. இதையடுத்து இரண்டாவது போட்டியிலிருந்து ரிஷப் விலகினார். இவருக்குப் பதிலாக இந்திய அணிக்கு கே.எஸ். பரத் தேர்வுசெய்யப்பட்டுள்ளார். ரசிகர்கள் சஞ்சு சாம்சன் தேர்வுசெய்யப்படுவார் என எதிர்பார்த்த நிலையில், பரத் தேர்வுசெய்யப்பட்டுள்ளது விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

அடுத்த இரு போட்டிகள் பட்டாஸாக இருக்கப்போகிறது : கங்குலி நம்பிக்கை!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்துள்ளதால், அடுத்த இரு போட்டிகள் ரசிகர்களுக்கு விருந்தாக அமையும் என பிசிசிஐ தலைவர் கங்குலி தெரிவித்துள்ளார். இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் மோதிய முதல் ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது. இதனை கடந்த சில ஆண்டுகளில் இந்திய அணியின் பெரும் தோல்வி என ரசிகர்கள் கூறிவருகின்றனர். உலகின் தலைசிறந்த பந்துவீச்சுக் கூட்டணியை ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்கள் சிதறடித்தது இந்திய அணியின் மனஉறுதியைப் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஐசிசியின் டெஸ்ட், ஒருநாள் அணிகளுக்கான கேப்டன் இவரே…!

 2019ஆம் ஆண்டுக்கான ஐசிசியின் டெஸ்ட் மற்றும் ஒருநாள் அணிகளுக்கான கேப்டனாக விராட் கோலி அறிவிக்கப்பட்டுள்ளார். கடந்த ஆண்டு கடைசியாக இந்திய அணி வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒருநாள் தொடரைக் கைப்பற்றியது. இதையடுத்து விராட் கோலி பேசுகையில், ” உலகக்கோப்பைத் தொடரின் கடைசி 30 நிமிடங்களைத் தவிர்த்து பார்த்தால் 2019இல் இந்திய அணிக்கு சிறப்பான ஆண்டாக அமைந்தது” என்றார். அவர் கூறியதுபோல் இந்திய அணிக்கு கடந்த ஆண்டு சிறப்பாகவே அமைந்தது. குறிப்பாக ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடர், […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

எனது பேட்டிங் மாற்றத்திற்கு இவரே காரணம்: சேவாக்..!!

எனது டெஸ்ட் பேட்டிங் மாற்றத்திற்கு இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மன்சூர் அலி கான் பட்டோடியின் அறிவுரையே காரணம் என இந்திய முன்னாள் வீரர் சேவாக் தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டில் சிறப்பாக செயல்பட்ட வீரர்களுக்கு பிசிசிஐ சார்பாக விருது வழங்கும் விழா நேற்று நடைபெற்றது. இதில் ஏராளமான முன்னாள் , இந்நாள் வீரர்கள், வீராங்கனைகள் கலந்துகொண்டனர். இந்த விழாவில் மன்சூர் அலி கான் பட்டோடியின் ஏழாவது நினைவு தினத்தையொட்டி சேவாக் உரையாற்றினார். அதில், ” பட்டோடி நினைவு […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

உலகக்கோப்பை அரையிறுதி: ”நான் ஏன் டைவ் அடிக்கவில்லை” – மௌனம் கலைத்த தோனி!

உலகக்கோப்பைத் தொடரின் அரையிறுதிப் போட்டியில் ரன் அவுட் ஆனபோது, ”நான் ஏன் டைவ் அடிக்கவில்லை” என தன்னை கேட்டுக்கொண்டதாக தோனி தெரிவித்துள்ளார். 2019ஆம் ஆண்டு நடந்த உலகக்கோப்பைத் தொடரின் அரையிறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணிக்கு எதிராக இந்திய அணி விளையாடியது. அதன் கடைசி இரண்டு ஓவர்களில் இந்திய அணியின் வெற்றிக்கு 31 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், தோனி ரன் அவுட்டாகியது ரசிகர்களை பேரதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. அந்த ரன் அவுட் இந்தியாவின் உலகக்கோப்பைக் கனவையும் சுக்குநூறாக்கியது. அதையடுத்து தோனியும் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

மழையால் போட்டி தாமதம்…. டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சு.!!

இலங்கை அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது. இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்கவுள்ளது. இதன் முதல் போட்டி இன்று இரவு 7 மணிக்கு கவுகாத்தில் நடைபெறவுள்ளது. இதில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் விராட் கோலி பந்துவீச்சைத் தேர்வு செய்தார். மூன்று போட்டிகள் கொண்ட தொடர் என்பதால் முதல் போட்டியில் வெற்றிபெறும் அணிக்கு தொடரை வெல்லும் சாதகம் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

கோலியின் உருவப்படத்தை பழைய மொபைல் போன்களால் செதுக்கிய ரசிகர்!

பழைய மொபைல் போன்கள், கம்பிகளை வைத்து இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் கோலியின் உருவப்படத்தை அவரது தீவிர ரசிகர் செதுக்கிய காணொலி சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. இந்தியா – இலங்கை அணிகளுக்கு இடையிலான மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரின் முதல் டி20 போட்டி கவுகாத்தியில் இன்று இரவு 7 மணிக்கு தொடங்குகிறது. இந்நிலையில், இப்போட்டி தொடங்குவதற்கு முன்னதாக, இந்திய அணியின் கேப்டன் கோலிக்கு கவுகாத்தி நகரைச் சேர்ந்த அவரது தீவிர ரசிகர் ராகுல் பாரெக் என்பவர் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

#INDvSL முதலாவது டி20 : விராட் கோலி காயம்… களம் இறங்குவாரா?… ரசிகர்கள் அதிர்ச்சி!

இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி பயிற்சியின்போது தனது விரலில் ஏற்பட்ட காயம் காரணமாக, இலங்கை அணியுடனான முதலாவது டி20 போட்டியில் பங்கேற்பது சந்தேகமாகியுள்ளது. இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடவுள்ளது. இவ்விரு அணிகளுக்கும் இடையிலான முதலாவது டி20 போட்டியானது ஜனவரி 5ஆம் தேதி அஸ்ஸாம் மாநிலம் கவுகாத்தியில் தொடங்கவுள்ளது. இந்நிலையில் இப்போட்டிக்காக நேற்று தீவிர பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது இந்திய அணியின் கேப்டன் விராட் கோலியின் இடக்கை சுண்டுவிரலில் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

எனக்கு ஒன்னும் தெரியாது… CAA குறித்து கருத்து சொல்ல விருப்பமில்லை – விராட் கோலி!

குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்து பொறுப்பற்ற முறையில் கருத்து சொல்ல விரும்பவில்லை என்று இந்திய அணியின் விராட் கோலி தெரிவித்துள்ளார்.  மத்திய பாஜக அரசு நிறைவேற்றியுள்ள குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்த புதிய சட்டத்தினால் நாட்டு மக்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் பிரதமர் மோடி சில விளக்கங்களைக் கொடுத்தாலும், போராட்டங்கள் ஓய்வதாக இல்லை. ஏனெனில், இன்று இல்லாவிட்டாலும் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

தோனியுடன் கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடிய ரிஷப் பண்ட்.!!

இந்திய வீரரான ரிஷப் பண்ட், தோனியுடன் கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடிய புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரான தோனி உலகக் கோப்பை தொடருக்குப் பின் எந்த ஒரு போட்டியிலும் விளையாடாமல் உள்ளார். இதனால், அவரது ஓய்வுக் குறித்து பலரும் பலவிதமான கருத்துகளை தெரிவித்துவந்த நிலையில், இது குறித்து தன்னிடம் அடுத்த ஆண்டு ஜனவரி வரை கேட்க வேண்டாம் என தோனி தெரிவித்திருந்தார். அதேசமயம், தோனிக்குப் பதிலாக இந்திய அணியில் இளம் விக்கெட் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

இந்த 2 டீம் வேஸ்ட்… அந்த 2 டீம் பெஸ்ட்… என்ன சொல்கிறார் மைக்கேல் வாகன்..!!

ஐசிசி வெளியிட்டுள்ள டெஸ்ட் தரவரிசை பட்டியலில் நியூசிலாந்து, இங்கிலாந்து ஆகிய அணிகளுக்கு கொடுக்கப்பட்டுள்ள இடங்களுக்கு அவை தகுதியானவை இல்லை என இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் விமர்சித்துள்ளார். இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வா கன் அவ்வபோது ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் சர்ச்சைக்குரிய வகையில் வீரர்கள் குறித்து கருத்துகள் பதிவிடுவதை வழக்கமாக வைத்துள்ளார். இது மட்டுமின்றி சில ஊடகங்களுக்கு பேட்டியளிக்கும் சமயத்திலும் இவர் இது போன்ற கருத்துகளை வெளியிடுவதுண்டு. அந்த […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

நான் இல்லாத குறையை அவர் போக்கிட்டாரு… ஆனால் எதையும் மறக்கவில்லை… தவான் இஸ் பேக்..!!

இந்திய அணியின் தொடக்க வீரரான ஷிகர் தாவன் காயத்திலிருந்து மீண்டதும் இலங்கை, ஆஸ்திரேலிய அணிகளுடனான இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். இந்திய அணியின் தொடக்க வீரராக வலம் வருபவர் ஷிகர் தவான். இவர் சையது முஷ்தாக் அலி கோப்பை தொடரில், காயம் காரணமாக இடம்பெறவில்லை.அவருக்கு மாற்றாக தொடக்க வீரர் வாய்ப்பு கே.எல். ராகுலுக்கு வழங்கப்பட்டது. கிடைத்த வாய்ப்பை சரியாகப் பயன்படுத்திய அவர், தற்போது தொடக்க வீரர் வரிசையில் தவானுக்கு போட்டியாக அமர்ந்துள்ளார். அவரைத் தொடர்ந்து மயங்க் அகர்வால், ப்ரித்வி […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

’இவரின் சாதனை குறிப்பிடப்படாமலே போய்விட்டது’ – பிசிசிஐ தலைவர்..!!

இந்திய அணியின் நட்சத்திர சுழற்பந்துவீச்சாளராக வலம் வந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த ரவிச்சந்திரன் அஸ்வின், இந்த 10 ஆண்டுகளில் அதிக சர்வதேச விக்கெட்டுகளைக் கைப்பற்றிய வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். இந்திய அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளராக வலம் வருபவர் (தற்போது டெஸ்டில் மட்டும்) ரவிச்சந்திரன் அஸ்வின். 2010ஆம் ஆண்டு முதல் இந்திய கிரிக்கெட் அணியில் கலக்கி வரும் இவரின் கேரம் பால் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் பல நட்சத்திர பேட்ஸ்மேன்கள் மண்ணை கவ்வியுள்ளனர். இதனால் அணியில் சேர்ந்த […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

இவரு என்னப்பா தப்பு செஞ்சாரு… இவர சேர்க்கவே இல்ல… ஹர்பஜன் ஆவேசம்..!!

இலங்கை, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடருக்கான இந்திய அணியில் சூர்யகுமார் யாதவிற்கு வாய்ப்பு வழங்காதது குறித்து இந்திய தேர்வுக்குழுவிடம் ஹர்பஜன் சிங் கேள்வி எழுப்பியுள்ளார். உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் மும்பை அணியின் நட்சத்திர வீரராக திகழும் சூர்யகுமார் யாதவ், தற்போது நியூசிலாந்து ஏ அணிக்கு எதிரான தொடரில் பங்கேற்கும் இந்திய ஏ அணியில் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அதேசமயம், இலங்கை, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடருக்கான இந்திய அணியில் இவருக்கு வாய்ப்பு வழங்காதது குறித்து இந்திய அணியின் சுழற்பந்துவீச்சாளர் ஹர்பஜன் சிங் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

எதிர்காலத்த பத்தி கவலை இல்ல… செமையா ஆடுறாங்க… பொல்லார்ட் பெருமிதம்..!!

இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டிக்கு பிறகு பேசிய வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் பொல்லார்ட், “எங்கள் அணியின் எதிர்காலம் பற்றி இனி கவலை இல்லை” என்றார். இது தொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறுகையில், நேற்று (டிச.22) நடந்து முடிந்த கடைசி ஒருநாள் போட்டியில் இந்திய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணியை வீழ்த்தி, ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. “இந்த தோல்வி எனக்கு மிகவும் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

2019 கிறிஸ்துமஸ் பரிசு…. ஃபினிஷராக மாறிய ஜடேஜா, ஷர்துல் தாகூர்; இந்தியா த்ரில் வெற்றி!

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராகக் கட்டாக்கில் நடைபெற்ற மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி நான்கு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று தொடரை 2-1 என்ற கணக்கில் வென்றது. இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட தொடரின் கடைசி ஒருநாள் போட்டி கட்டாக்கில் இன்று நடைபெற்றது. ஏற்கனவே நடைபெற்ற முதல் இரண்டு ஒருநாள் போட்டிகளில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியை பதிவு செய்த நிலையில், இப்போட்டியில் யார் வெற்றிபெறுவார் என்ற எதிர்பார்ப்பு […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

இந்த நாட்டு காரங்க தான் செமையா பவுலிங் போடுறாங்க….. உண்மையை உடைத்த ஸ்டெய்ன்..!!

இந்திய டெஸ்ட் அணியின் வேகப்பந்துவீச்சாளர்களே தற்போதுள்ள சிறந்த வேகப்பந்துவீச்சாளர்கள் என்று தென் ஆப்பிரிக்க அணியின் வேகப்பந்துவீச்சாளர் ஸ்டெயின் தெரிவித்துள்ளார். தென் ஆப்பிரிக்க அணியின் வேகப்பந்துவீச்சாளரான டேல் ஸ்டெயின், தனது அசாத்தியமான பந்துவீச்சால் உலக கிரிக்கெட்டில் தடம் பதித்தவர். இவர் 93 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்று 439 விக்கெட்டுகளைக் கைப்பற்றியிருக்கிறார். இவர் சமீபத்தில் ட்விட்டரில் ரசிகர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதிலளித்தார். அப்போது ஒரு ரசிகர் எந்த அணியின் பந்துவீச்சு சிறந்தது என நீங்கள் நினைக்கிறீர்கள் என்று கேள்வியெழுப்பினார். இதற்கு […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ICC டெஸ்ட் தரவரிசை : நாங்கதான் கெத்து… முதலிடத்தில் இந்தியா..!!

ICC கடந்த டிசம்பர் 13_ஆம் தேதி வெளியிட்ட டெஸ்ட் கிரிக்கெட் அணிகளுக்கான தரவரிசை பட்டியலில் இந்தியா தொடர்ந்து முதலிடம் வகிக்கின்றது. ♣ இந்தியா                          புள்ளி 120    தரவரிசை : 1 ♣ நியூஸிலாந்து              புள்ளி 112   தரவரிசை : 2 ♣ சவுத் ஆப்பிரிக்கா       புள்ளி 102   தரவரிசை : 3 […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஹிட்மேன், ராகுல் வெறியாட்டம்… நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ… தொடரை சமன் செய்த இந்தியா..!!

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்தியா   107 ரன்கள் வித்தியாசத்தில் அபார  வெற்றி பெற்றது.  இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் மோதும் இரண்டாவது ஒருநாள் போட்டி விசாகப்பட்டினம் உள்ள ACA -VDCA  அரங்கத்தில் நேற்று மதியம் 1: 30 மணிக்கு நடைபெற்றது. அதில் டாஸ் வென்ற  வெஸ்ட் இண்டீஸ் அணி  முதலில் பவுலிங்கை தேர்வு செய்தது. அதன்படி இந்திய அணியின் தொடக்க வீரரான ஹிட்மேன் ஷர்மா மற்றும் கே.ல்.ராகுல் களம் இறங்கினர். […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

என்னா அடி… மரண அடி அடித்த ஹெட்மயர், ஹோப்… இந்தியாவை ஊதி தள்ளிய வெஸ்ட் இண்டீஸ்..!!

ஹெட்மயர் மற்றும் ஹோப் அதிரடி ஆட்டத்தால் இந்திய அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணி  வென்றது. இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி சென்னை சேப்பாக் மைதானத்தில் நடைபெற்றது . டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ்அணி  பவுலிங்கை  தேர்வு செய்தது.இந்த போட்டியில்  இந்திய அணியில் ஷிவம் டுபே அறிமுகம் ஆனார். K.L.ராகுல் மற்றும்  ரோகித் ஷர்மா  இருவரும் இந்திய அணியின்  தொடக்க வீரர்களாக களம் இறங்கினர்.அதில்  லோகேஷ் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

மீண்டும் அணிக்காக T20-யில் களம் இறங்கிய பிராவோ..!!!

T20 கிரிக்கெட்டில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் தலைசிறந்த வீரராக கருதப்படும் டுவெயின்  பிராவோ மீண்டும் சர்வதேச கிரிக்கெட்டிற்கு திரும்பியுள்ளார். வெஸ்ட் இண்டீஸ் அணியின் அனுபவமிக்க  வேகப்பந்து வீச்சாளரான டுவெயின் பிராவோ அந்த அணியின்  சிறந்த ஆல்-ரவுண்டராக  திகழ்கிறார் .தன்னுடைய துல்லியமான பந்து வீச்சினால் எதிரே உள்ள பேட்ஸ்மேனை  மிரட்டுவதால் T 20கிரிக்கெட்டில்   டெத் ஓவர் ஸ்பெஷலிஸ்ட் என்று அழைக்கப்படுகிறார் .ஆனால், வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரியத்தில் ஏற்பட்ட சில  மோதல் காரணமாக  அனைத்து வகையான சர்வதேச கிரிக்கெட்டில் இருந்தும் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

வெறித்தனமாக ஆடிய கிங் கோலி…T20 தரவரிசையில் முன்னேற்றம்…!!!

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான போட்டியில் வெறித்தனமான ஆட்டத்தை வெளிப்படுத்திய கிங் கோலி சர்வதேச  T 20 பேட்ஸ்மேன்  தரவரிசை பட்டியலில் முதல் 10 இடத்திற்குள் முன்னேறியுள்ளார்.  இந்திய  அணியின் கேப்டனான  விராட் கோலி 3- வகை கிரிக்கெட் போட்டியிலும் பேட்ஸ்மேன்   தரவரிசை பட்டியலில் முதல் 10 இடத்திற்குள் முன்னேறியுள்ளார் . சமீப  காலமாக ICC  டி20 தொடரில் அவருக்கு ஓய்வு அளிக்கபட்டது.அதனால் T 20 பேட்டிங்க் தரவரிசையில் முதல் இடத்தில் இருந்து வெளியே  தள்ளப்பட்டார். இந்நிலையில் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

400 சிக்சர்களை விளாசி ரோஹித் புதிய சாதனை!

இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கிடையிலான மூன்றாவது டி20 போட்டியில் இந்திய அணியின் ரோஹித் சர்மா சர்வதேச கிரிக்கெட்டில் தனது 400ஆவது சிக்சரை விளாசி அசத்தினார். இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கிடையிலான மூன்றாவது, கடைசி டி20 போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றுவருகிறது. இந்தப் போட்டியில் முதலில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க வீரர் ரோஹித் சர்மா, இன்னிங்ஸில் காட்ரோல் வீசிய […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

மூன்றாவது டி20: தொடரைக் கைப்பற்றியது இந்தியா!

இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கிடையிலான மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டியில் இந்திய அணி 67 ரன்கள் வித்தியாசத்தில் வென்று தொடரைக் கைப்பற்றியது. இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கிடையிலான மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டி மும்பையிலுள்ள வான்கடே மைதானத்தில் இன்று நடைபெற்றது. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பீல்டிங்கைத் தேர்வு செய்து விளையாடியது. அதன்படி களமிறங்கிய இந்திய அணியில் ரோஹித் சர்மா, கே.எல். ராகுல், விராட் கோலி […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

பொல்லார்ட் புத்திசாலித்தனமான வீரர்… புகழ்ந்த ரோஹித் சர்மா..!!

இந்திய அணியின் தொடக்க வீரர் ரோகித் சர்மா, பொல்லார்ட்டை புத்திசாலித்தனமான வீரர் என்று புகழ்ந்து கூறினார். இன்று இரவு 7 மணிக்கு   இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் 3-வது மற்றும் கடைசி T 20 போட்டி மும்பையில் நடைபெறவுள்ளது.  இரண்டு  அணிகளும் தலா ஒரு ஆட்டத்தில் வென்றுள்ளன. ஹதராபாத்தில் நடந்த முதல் போட்டியில் இந்தியா  வெற்றி பெற்றுள்ளது. திருவனந்தபுரத்தில் நடந்த இரண்டாவது போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் இந்திய அணியை வீழ்த்தியது. இதனால் இன்றைய போட்டியை வென்று  மகுடம் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ரிஷப் பண்ட், தோனியாக மாற 15 வருடம் ஆகும் – கங்குலி..!!

இந்திய கிரிக்கெட் அணியின் இளம் விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த் குறித்து பிசிசிஐ தலைவர் கங்குலி கருத்து தெரிவித்துள்ளார். இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி உலகக் கோப்பை தொடருக்குப்பின் இந்திய அணியில் இடம்பெறாமல் இருந்துவருகிறார். இந்திய அணியின் ஒப்பற்ற விக்கெட் கீப்பரான தோனியின் ஓய்வுக்குப்பின் அந்த இடத்தை யார் நிரப்புவார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது. ஒருபுறம் தோனியின் ஓய்வு எப்போது என பலரும் கேள்வி எழுப்பிவரும் நிலையில், அவரது இடத்தை நிரப்புவதற்காக இளம் விக்கெட் கீப்பர் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

360 டிகிரியிலும் இந்தியாதான் டாப்…..!!

ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசைப் பட்டியலில் இந்திய அணி 360 புள்ளிகளுடன் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் அறிமுகமானப் பின், இந்திய அணி வெஸ்ட் இண்டீஸ், தென் ஆப்பிரிக்கா அணி இரண்டு அணிகளுக்கு எதிரான டெஸ்ட் தொடரையும் வென்று அசத்தியது. அந்த வகையில், இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட வங்கதேச அணி இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றது. இந்தூரில் நடைபெற்ற இதன் முதல் போட்டியில் இந்திய அணி ஒரு இன்னிங்ஸ் மற்றும் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

வரலாற்றுச் சிறப்பு மிக்க டெஸ்ட் தொடரில் டாஸ் வென்ற வங்கதேச அணி பேட்டிங்!

 இந்திய – வங்கதேச அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி பேட்டிங்கைத் தேர்வு செய்துள்ளது. இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேச அணி தற்போது இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் ஏற்கனவே நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 130 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி […]

Categories
விளையாட்டு

மீண்டும் ஏமாற்றம்…!… தல தோனி இல்லை…. இந்திய அணி அறிவிப்பு …!!!

மேற்க்கிந்திய தீவு அணிக்கெதிரான தொடரில் களமிறங்கும் இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. டிசம்பர் மாதம் இந்தியா சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் மேற்க்கிந்திய தீவு அணி 3 20 ஓவர் மற்றும் 3 50 ஓவர் போட்டிகள் விளையாட இருக்கின்றது. இதில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது மஹேந்திர சிங் தோனி. உலக கோப்பை தொடருக்கு பின் அணியில் இருந்து ஓரங்கட்டப்பட்ட தோனி இந்த தொடரில் எடுக்கப்படுவார் என்று எதிர்பார்த்த ரசிகர்களுக்கு மீண்டும் ஏமாற்றமே நிகழ்ந்துள்ளது.  மேற்க்கிந்திய தீவு அணி தொடரில் அறிவிக்கப்பட்டுள்ள இந்திய […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

தோனியின் டெஸ்ட் சாதனையை முறியடித்த கிங் கோலி ….!!

டெஸ்ட் போட்டிகளில் அதிக இன்னிங்ஸ் வெற்றிகளைப் பெற்ற இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனியின் சாதனையை கோலி முறியடித்துள்ளார். இந்திய கிரிக்கெட் வீரர் தோனி 2014ஆம் ஆண்டு டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வுபெற்ற பிறகு கோலி இந்திய அணியின் கேப்டன் பொறுப்பை ஏற்றுக்கொண்டு அணியை சிறப்பாக வழிநடத்திவருகிறார். குறிப்பாக, 71 ஆண்டுகளுக்குப் பிறகு ஆஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் தொடரை வென்ற முதல் இந்திய அணியின் கேப்டன் என்ற சாதனையை கோலி இந்த ஆண்டு ஜனவரியில் படைத்தார். தனது சிறப்பான […]

Categories
கிரிக்கெட் தேசிய செய்திகள் விளையாட்டு

கூட்டம் தேவையில்லை… “ஆஹா செம்ம டேஸ்ட்”… ஜாலியாக இனிப்பு சாப்பிட்டு போட்டியை ரசித்த கம்பீர்..!!

டெல்லியில் காற்று மாசு குறித்த ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொள்ளாமல் கவுதம் கம்பீர் ஜாலியாக கிரிக்கெட்  போட்டியை பார்க்க சென்றதால் இணையவாசிகள் அவரை விமர்சனம் செய்து வருகின்றனர். சமீபகாலமாக டெல்லியில் காற்று மாசு தொடர்பான பிரச்சனை மிகப்பெரிய அளவில் பேசப்பட்டு வருகிறது. காரணம் இதுவரை இல்லாத அளவுக்கு டெல்லியில் காற்று மாசு ஏற்பட்டுள்ளது. இந்த சூழ்நிலையில் தான் டெல்லியில் காற்று மாசு குறித்து விவாதிப்பதற்காக நகர அபிவிருத்தி குழுவின் உறுப்பினர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் இக்குழுவின் உறுப்பினறும், டெல்லி கிழக்கு […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

முதல் டெஸ்ட்: மயாங்க் அகர்வால் மீண்டும் சதம் – இந்தியா அபாரம்

இந்தியா – வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய வீரர் மயாங்க் அகர்வால் சதம் அடித்துள்ளார். இந்தியா – வங்கதேச அணிகளுக்கிடையேயான டெஸ்ட் தொடரின் முதல் போட்டி இந்தூரில் நேற்று தொடங்கியது. இதில் டாஸ் வென்று பேட்டிங் செய்த வங்கதேச அணி இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் முதல் இன்னிங்ஸில் 150 ரன்களுக்கு சுருண்டது. அந்த அணியில் அதிகபட்சமாக முஷ்பிகுர் ரஹிம் 43, கேப்டன் மொமினுள் ஹாக் 37 ரன்கள் அடித்தனர்.இந்திய […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

கே.எல். ராகுலை வென்ற ஷ்ரேயாஸ் அய்யர் …!!

இந்திய கிரிக்கெட் வீரர்கள் கே.எல். ராகுல், ஷ்ரேயாஸ் அய்யர் ஆகியோர் ஜிம்மில் ரோப் சேலஞ்சு போட்டியில் பங்கேற்ற வீடியோவை பிசிசிஐ ட்விட்டரில் வெளியிட்டுள்ளது. இந்தியா – வங்கதேச அணிகளுக்கிடையே மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. டெல்லியில் நடைபெற்ற இத்தொடரின் முதல் போட்டியில் இந்திய அணியை ஏழு விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி வங்கதேச அணி அதிர்ச்சியளித்தது. இதனால் தொடரில் 1-0 என வங்கதேச அணி முன்னிலை வகிக்க இரு அணிகளுக்குமிடையேயான இரண்டாவது போட்டி […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

#WIvIND : தொடரை வென்று கெத்து காட்டிய இந்திய மகளிர் அணி..!!

வெஸ்ட் இண்டீஸ் மகளிர் கிரிக்கெட் அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை இந்திய மகளிர் அணி கைப்பற்றியுள்ளது. வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் செய்துவரும் இந்திய மகளிர் கிரிக்கெட் அணி மூன்று ஒருநாள், ஐந்து டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடிவருகிறது. இதில் நடைபெற்ற முதலிரண்டு ஒருநாள் போட்டிகளில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியைப் பதிவு செய்தது. இந்நிலையில், இந்தத் தொடரின் வெற்றியாளரை தீர்மானிக்கும் கடைசி ஒருநாள் போட்டி நேற்று விவியன் ரிச்சர்ட்ஸ் மைதானம் ஆன்டிகுவாவில் நடைபெற்றது. இதில், டாஸ் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

“அங்கிளான விராட் கோலி”… ரிஷப் பண்ட் குறும்பு..!!

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் தனது 31ஆவது பிறந்தநாளை கொண்டாடிய நிலையில், இளம் வீரர் ரிஷப் பண்ட் கோலியை ‘அங்கிள்’ என வாழ்த்திய சம்பவம் ரசிகர்களை கவர்ந்துள்ளது. இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி நேற்று தனது 31ஆவது பிறந்தநாளைக் கொண்டாடினார். இவருக்கு முன்னாள் கிரிக்கெட் வீரர்கள், இந்திய அணி வீரர்கள், ரசிகர்கள் என பல்வேறு தரப்பினரும் வாழ்த்துகளை தெரிவித்தனர். அதில் இந்திய அணியின் இளம் வீரர் ரிஷப் பண்ட்  தனக்கே உரித்தான குறும்பு தனத்துடன் கோலிக்கு […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

“பிசிசிஐக்கு சிறந்த தேர்வாளர்கள் தேவை”… அதிரடி காட்டிய யுவராஜ்..!!

இந்திய கிரிக்கெட் அணி வீரர்களை தேர்வு செய்ய வேறு நல்ல தேர்வாளர்கள் தேவை என்று இந்திய அணியின் முன்னாள் நட்சத்திர ஆல்ரவுண்டர் யுவராஜ் சிங் தெரிவித்துள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி ஆல்-ரவுண்டரான யுவராஜ் சிங் கடந்த சில மாதங்களுக்கு முன் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தார். அதன்பின் வெளிநாட்டு டி20 தொடர்களில் மட்டும் அவர் பங்கேற்றுவருகிறார். இந்த சூழலில் நேற்று மும்பையில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், கிரிக்கெட் வீரர்களை தேர்வு செய்வது என்பது அவ்வளவு […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

”வரலாற்றை மாற்றி எழுதிய வங்கதேசம்” இந்திய அணியுடன் முதல் வெற்றி….!!

இந்தியா – வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டியில் வங்கதேசம் அணி ஏழு விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி வரலாற்று சாதனையைப் படைத்துள்ளது. இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேச அணி தற்போது டி20 தொடரில் விளையாடி வருகின்றது. இன்று டெல்லி அருண் ஜெட்லி கிரிக்கெட் மைதானத்தில் தொடங்கிய முதலாவது டி20 போட்டியில் வங்கதேசம் அணி டாஸ் வென்று ஃபீல்டிங்கைத் தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய இந்திய அணி முதல் ஓவரிலேயே கேப்டன் ரோஹித் சர்மாவின்(9) விக்கெட்டை இழந்தது. […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

சொற்ப ரன்னில் ஆட்டமிழந்தாலும், சாதனைப் படைத்த ரோஹித்…!!

இந்திய – வங்கதேச அணிகளுக்கு இடையிலான முதலாவது டி20 போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா ஒன்பது ரன்களில் வெளியேறினார். இந்திய – வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டி20 போட்டி டெல்லியிலுள்ள அருண் ஜெட்லி, கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் முதலில் டாஸ் வென்ற வங்கதேச அணி ஃபீல்டிங்கைத் தேர்வு செய்தது. அதன் படி இந்திய அணியின் தொடக்க வீரர்களான கேப்டன் ரோஹித் சர்மா, ஷிகர் தவான் ஆகியோர் களமிறங்கினர். இதில் ரோஹித் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

முதல் டி20: ஷகிப் இல்லாமல் இந்தியாவுக்கு ஈடுகொடுக்குமா வங்கதேசம்?

இந்தியா – வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி இன்று நடைபெறுகிறது. தீபாவளி பண்டிகையின்போது வெடித்த பட்டாசுகளால் டெல்லியில் வசித்துவரும் பொதுமக்கள் முகமூடியுடன் அலைந்து திரிந்துவரும் வேளையில், இந்தியா – வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி இன்று நடைபெறுகிறது.இந்தியாவுக்கு பயணம் வருவதற்கு முன்னதாக வங்கதேச வீரர்கள் போராட்டம், அதைத்தொடர்ந்து ஷகிப் அல் ஹசனுக்கு விதிக்கப்பட்ட இரண்டு ஆண்டுகள் தடை என வங்கதேச அணி நிர்வாகத்திடையே பல்வேறு சர்ச்சைகள் எழுந்தன. இதனையெல்லாம் சமாளித்து இந்தியா […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

#INDvBAN T20I தொடர்… தூக்கி எறியப்பட்ட கோலி…. தலைமை தாங்கும் ஹிட் மேன்..!!

வங்கதேச அணிக்கு எதிரான 3 டி20 மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடருக்கான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது   வங்கதேச அணி வருகின்ற நவம்பர் மாதம் இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20, 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில்  விளையாடவுள்ளது. இப்போட்டிகளுக்கான மைதானங்கள், தேதிகள் அடங்கிய அட்டவணை சமீபத்தில் வெளியாகியது. இந்நிலையில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாடு வாரியம் (BCCI) வங்கதேச அணிக்கு எதிரான  3 டி20 மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணியை அறிவித்தது. வங்கதேசத்துக்கு  […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

#INDvsBAN…. போட்டியை காண ரூ 50 மட்டுமே… ரசிகர்களை ஈர்க்க ஈடன் கார்டன் அறிவிப்பு ..!!

இந்தியா – வங்கதேச அணிகளுக்கு இடையிலான 2-ஆவது டெஸ்ட் போட்டிக்கான டிக்கெட் விலை 50 ரூபாயாக குறைப்பதாக ஈடன் கார்டன்ஸ் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள வங்கதேச அணி 3 டி20, இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளது. இப்போட்டிகளுக்கான மைதானங்கள், தேதிகள் அடங்கிய அட்டவணை சமீபத்தில் வெளியாகியது.இதில் இவ்விரு அணிகளும் மோதும் 2-வது டெஸ்ட் போட்டியானது கொல்கத்தாவிலுள்ள ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடக்கவிருக்கிறது. இப்போட்டியை காண வங்கதேச பிரதமரான ஷேக் ஹசினா நேரில் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ராஞ்சி மைதானத்துக்கு ராணுவ ஜீப்பில் வந்த தோனி….!!

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி தனது புதிய காரில் இந்தியா – தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் போட்டி நடைபெற்ற ராஞ்சி மைதானத்திற்கு வந்திருந்தார். இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான தோனி பல சாதனைகளுக்கு சொந்தக்காரர் ஆவார். உலகக்கோப்பை தொடருக்குப்பின் ராணுவப் பயிற்சி, சிறிய ஓய்வு என இந்திய அணியில் இருந்து விலகியிருக்கும் தோனி, அவரது சொந்த ஊரான ராஞ்சியில் நடைபெற்ற இந்தியா – தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் போட்டியைக் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

தப்பு பண்ணிட்டிங்க ரோகித்… அப்பமே வந்திருந்தீங்கன்னா… புகழ்ந்து பேசிய அக்தர்.!!

ரோஹித் சர்மா தன்னைத் தானே பழிவாங்கிக் கொண்டதாக பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் சோயப் அக்தர் தெரிவித்துள்ளார். ஒருநாள் போட்டிகளில் மட்டுமல்ல, டெஸ்ட் போட்டிகளிலும் தான் தலை சிறந்த ஓபனிங் பேட்ஸ்மேன் என்பதை இந்திய வீரர் ரோஹித் சர்மா நிரூபித்திக் காட்டியுள்ளார். ராஞ்சியில் நடைபெற்றுவரும் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில், அவர் 212 ரன்கள் அடித்து பல்வேறு சாதனைகளைப் படைத்தார். குறிப்பாக, ஒருநாள், டெஸ்ட் போட்டிகளில் இரட்டை சதம் அடித்த நான்காவது வீரர் என்ற […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

71 ஆண்டுகால சாதனை முறியடிப்பு… பிராட்மேனை தூக்கி வீசிய “ஹிட் மேன்”..!!

உள்நாட்டு டெஸ்ட் போட்டி சராசரியில் ஆஸ்திரேலிய ஜாம்பவான் டான் பிராட்மேனை பின்னுக்குத் தள்ளி அவரது 71 ஆண்டுகால சாதனையை இந்தியாவின் ரோகித் சர்மா முறியடித்துள்ளார். இந்தியா-தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான கடைசி டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் தொடக்க ஆட்டகாரர் ரோஹித் சர்மா சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது முதலாவது இரட்டை சதமடித்து அசத்தினார். ரோஹித் 249 பந்துகளை எதிர்கொண்டு தனது இரட்டை சதத்தை பதிவு செய்தார். இதன் மூலம் இவர் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் பல்வேறு […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஒரே சதம் …… இரண்டு சாதனை ….. ரோஹித் புதிய ரெக்கார்டு …..!!

இந்திய அணியின் தொடக்க வீரர் ரோஹித் சர்மா தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இரண்டு சாதனைகளை புரிந்துள்ளார். இந்தியா – தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி ராஞ்சியில் இன்று தொடங்கியது. டாஸ் வென்று பேட்டிங்கை தொடங்கிய இந்திய அணிக்கு தென் ஆப்பிரிக்க பந்துவீச்சாளர்கள் அதிர்ச்சியளித்தனர். ரபாடா பந்துவீச்சில் மயாங்க் அகர்வால் 10, புஜாரா 0 என அடுத்தடுத்து வெளியேறினர். அவர்களைத் தொடர்ந்து கேப்டன் விராட் கோலியும் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

அதிரடி சதமடித்த ரோஹித் 117*…. அசத்திய ரஹானே 83*… வலுவான நிலையில் இந்திய அணி..!!

இந்தியா – தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய வீரர் ரோஹித் சர்மா சதமடித்து அசத்தியுள்ளார். இந்தியா – தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடரின் 3-ஆவது மற்றும் கடைசி போட்டி, ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் நடைபெற்று வருகிறது. இதில், முதலில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி, களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க வீரர்கள் மயங்க் அகர்வால், ரோஹித் சர்மா நிதானமான […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

தென் ஆப்பிரிக்கா உடனான மூன்றாவது டெஸ்ட் – இந்தியா பேட்டிங்….!!

இந்தியா – தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கைத் தேர்வு செய்துள்ளது. இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்க அணி தற்போது டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. ஏற்கனவே மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் இரண்டு போட்டிகளிலுமே இந்திய அணி வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றியது. இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கும் இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டி ராஞ்சியில் இன்று தொடங்குகிறது. Virat […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

#INDvSA: சதமடித்து ஆட்டமிழந்த மயாங்க் அகர்வால் …..!!

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில், சதம் அடித்து இந்திய அணியின் தொடக்க வீரர் மயாங்க் அகர்வால் ஆட்டமிழந்துள்ளார். புனேவில் இந்தியா – தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்று நடைபெற்றுவருகிறது. இதில், முதலில் பேட்டிங் செய்துவரும் இந்திய அணியில் ரோகித் சர்மா-மயாங்க் அகர்வால் ஆகியோர் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். கடந்த போட்டியில் இரு இன்னிங்ஸிலும் சதம் விளாசி ஆட்டநாயகன் விருதை வென்ற ரோகித் சர்மா இப்போட்டியில் 14 ரன்களுக்கு நடையைக் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

#INDVSA: சொதப்பிய ஹிட்மேன்… கைகொடுத்த மயாங்க் அகர்வால்?

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய வீரர் ரோகித் சர்மா 14 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இந்திய-தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்று புனேவில் நடைபெற்றுவருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்துவருகிறது. அதன்படி இந்திய அணியில் ரோகித் சர்மா, மயாங்க் அகர்வால் ஆகியோர் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். கடந்த டெஸ்ட் போட்டியில் பேட்டிங்கில் இரண்டு இன்னிங்ஸிலும் சதம் விளாசி மாஸ் காட்டிய ரோகித் சர்மா இப்போட்டியில் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ICC டெஸ்ட் தரவரிசை : “தொடர்ந்து முதலிடத்தில் இந்தியா”…!!

ICC கடந்த செப்., 16_ஆம் தேதி வெளியிட்ட டெஸ்ட் கிரிக்கெட் அணிகளுக்கான தரவரிசை பட்டியலில் இந்தியா தொடர்ந்து முதலிடம் வகிக்கின்றது. ♣ இந்தியா                             புள்ளி 115    தரவரிசை : 1 ♣ நியூஸிலாந்து                 புள்ளி 109   தரவரிசை : 2 ♣ சவுத் ஆப்பிரிக்கா      புள்ளி 108   தரவரிசை : 3 ♣ இங்கிலாந்து        […]

Categories

Tech |