Categories
டெக்னாலஜி

கடந்த இரண்டு மாதங்களில்…. மக்களை வெகுவாக கவர்ந்த சிறந்த ஸ்மார்ட்போன்கள்…. இதோ மொத்த லிஸ்ட்….!!!

இந்தியாவில் இந்த ஆண்டு தொடங்கி, கடந்த 2 மாதங்களில் ஏராளமான ஸ்மார்ட்போன்கள் அறிமுகமாகி உள்ளன. அவற்றுள் சாம்சங், ஒன்பிளஸ், மோட்டோரோலா, ஜியோமி, ரியல்மி, ஒப்போ, விவோ, ஆசஸ் போன்ற நிறுவனங்கள் மிகவும் தரமிக்க ஸ்மார்ட் போன்களை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளன. இந்த நிலையில், மக்களிடம் கடந்த 2 மாதங்களில் வெளியாகி, பெரும் வரவேற்பை பெற்ற ஸ்மார்ட்போன்கள் பற்றி இங்கு பார்க்கலாம். ஆசுஸ் ROG போன் 5- 6.78 இன்ச் டிஸ்பிளே, Qualcomm Snapdragon 888 SoC, 18GB  LPDDR5 […]

Categories
டெக்னாலஜி பல்சுவை

“பேஸ்புக் கிளாசிக் டிசைன்” செப்டம்பர் முதல்… நியூ அப்டேட்….!

பல ஆண்டுகளாக இருந்த பேஸ்புக் கிளாசிக்கல் டிசைனை செப்டம்பர் மாதம் அந்த நிறுவனம் மாற்ற உள்ளது. கணினியில் பேஸ்புக் பயன்படுத்தி வரும் பயனாளர்களின் பழைய இணையப்பக்கம் செப்டம்பர் முதல் மாற்றப்பட உள்ளது. பல ஆண்டுகளாக பிரௌசர் வழியாக பேஸ்புக் வலைத்தள பக்கத்தை பயனர்கள் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் செயலியின் மேம்பாட்டுப் பணிகளில் பேஸ்புக் நிறுவனம் ஈடுபட்டுள்ளது. உலக அளவில் பல கோடி மக்கள் பேஸ்புக் செயலியையும் அதன் பிரத்தியோக வசதிகளையும் அனுபவித்து வருகின்றனர். செல்போனில் சேமிப்பு திறனில் […]

Categories
டெக்னாலஜி

மாஸ் காட்டும் ஜியோ ”Amount கம்மி … validity அதிகம்” புதிய ரீசார்ஜ் பிளான்…

புதிய தொலைத்தொடர்பு நிறுவனமான ஜியோ குறைந்த விலையில் அதிக நாட்களை கொண்ட புதிய திட்டங்களை  அறிமுகம் செய்துள்ளது. இந்திய தொலைத்தொடர்பு சந்தையில் முகேஷ் அம்பானியின் ஜியோ நிறுவனத்தால் ரீசார்ஜ் திட்டங்களில் அதிக மாற்றங்கள் கொண்டு வரப்பட்டது . பல்வேறு புதிய திட்டங்களை அந்நிறுவனம் அறிவித்து வருகிறது. இந்த வரிசையில் ரூ.49 மற்றும் ரூ.69 மதிப்புகளில் மேலும் ஒரு புதிய திட்டம் அறிமுகமாகியுள்ளது. இதில் ரூ.49 திட்டத்தில் 14 நாட்களுக்கு அன்லிமிடெட் ஜியோ அழைப்பு , 250 நிமிடங்கள் […]

Categories
டெக்னாலஜி பல்சுவை

ஆஹா… ”பல் துலக்க புதிய தொழில்நுட்பம்” கிருமி தொற்றை விரட்டிய ஜியோமி …!!

மின்னணு சாதனங்களை தயாரிப்பில் ஆதிக்கம்  செலுத்தி வரும் ஜியோமி நிறுவனம் பற்பசையை வெளியிடும் (டிஸ்பென்சர்) சாதனத்தை அறிமுகப்படுத்தி அசத்தியுள்ளது. பல் துலக்குவது தினமும் வாடிக்கையாக மேற்கொள்ளும் நிகழ்வு . பொதுவாக நாம் பல்துலக்கி முடித்ததும் டூத் பிரஷ்ஷை ஆங்காங்கே போட்டுவிடுவோம். குறிப்பாக பாத்ரூம் தொடங்கி வீட்டின் சன்னல் வரை எதாவது ஒரு இடத்தில் வைத்து விடுகின்றோம். மறுநாள் அதனை எடுத்து சிறிது நீரில் ஈரமாக்கிய பின்பு மீண்டும் பற்பசையை வைத்து பல் துலக்குவோம். தினமும் பல் துலக்குகின்றோம் […]

Categories
உலக செய்திகள் டெக்னாலஜி பல்சுவை

கொரோனா எதிரொலி – ரெட்மி மொபைல் விலை ஏற்றம்!

கோவிட் -19 (கொரோனா) தொற்று காரணமாக ஸ்மார்ட்போன் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதால் ரெட்மி நோட் 8 விலை 500 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. சீனாவின் ஹூபே மாகாணத்தில் முதலில் பரவிய கோவிட்-19 (கொரோனா வைரஸ்) தற்போது அந்நாடு முழுவதும் மிக வேகமாக பரவிவருகிறது. இதனால் சீனாவின் பல முக்கிய பகுதிகள் முடங்கியுள்ளதால், அந்நாட்டு பொருளாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக சர்வதேச அளவில் விற்கப்படும் மொபைல்போன் உள்ளிட்ட எலக்ட்ரானிக் பொருள்கள் சீனாவில்தான் அதிகம் உற்பத்தி செய்யப்படுகிறது. அதேபோல, இந்தியாவில் விற்பனை செய்யப்படும் […]

Categories
டெக்னாலஜி தேசிய செய்திகள்

உச்சநீதிமன்ற உத்தரவு…. ”சிக்கலில் ஏர்டெல்”…. முடங்கும் வோடாபோன், ஐடியா ..!!

மத்திய அரசுக்கு செலுத்த வேண்டிய தொகையை உடனே செலுத்துமாறு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருப்பது வோடபோன் உட்பட பல நிறுவனங்களின் நெட்வொர்க் சேவையை முடங்க கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தகவல் தொழில்நுட்ப சேவை அளித்து வரும் ஏர்டெல் , வோடபோன் உள்ளிட்ட நிறுவனங்கள் லைசென்ஸ் அலைவரிசை கட்டணத்தில் பல ஆயிரம் கோடி ரூபாய் செலுத்தாமல் இழுத்தடித்தனர். இப்பிரச்சினையில் தலையிட்ட உச்சநீதிமன்றம் கட்டணத்தை உடனடியாக வசூல் செய்யுமாறு தகவல் தொழில்நுட்பத் துறைக்கு உத்தரவிட்டது. இதனையடுத்து பிப்ரவரி 20ஆம் தேதி 10 ஆயிரம் […]

Categories
உலக செய்திகள் டெக்னாலஜி

275,000,000 போலிகள் …. ”செக் வைத்த ஆய்வறிக்கை” பேஸ்புக்கில் அதிர்ச்சி …!!

பேஸ்புக்-கில் 275 மில்லியன் போலி கணக்குகள் இருக்கலாம் என்று சோஷியல் நெட்வர்க்கிங் சைட் அதிர்ச்சியான தகவல் தெரிவித்துள்ளது. உலகம் முழுவதும் உள்ள நெட்டிசன்களால் , இணையதள விரும்பிகளால் அதிகம் பயன்படுத்தப்படும் சமூக ஊடகம் பேஸ்புக். இதில் சுமார்  2.5 பில்லியன் பேர் கணக்கு வைத்திருக்கின்றனர் . கடந்தாண்டு இருந்த பேஸ்புக் பயனாளர்களின் எண்ணிக்கையோடு இதனை ஒப்பிடுட்டால் இது 8 சதவீதம் அதிகம் என்று பேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது. குறிப்பாக, இந்தியா, இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட நாடுகளில் உள்ள […]

Categories
டெக்னாலஜி பல்சுவை

மீண்டும் ரியல்மியிடம் தோற்ற ரெட்மி

2018ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் ரியல்மி 263 விழுக்காடு உயர்ந்துள்ளநிலையில், ரெட்மி வெறும் 9.2 விழுக்காடு மட்டுமே வளர்ச்சியடைந்துள்ளது. சர்வதேச அளவில் இரண்டாவது மிகப் பெரிய ஸ்மார்ட்போன் சந்தையாக திகழும் இந்தியாவில், சீன நிறுவனங்களான ரெட்மி, விவோ, ஓப்போ, ரியல்மி ஆகிய நிறுவனங்களே தொடர்ந்து ஆதிக்கத்தை செலுத்திவருகிறது. குறிப்பாக 2019ஆம் ஆண்டு, ரெட்மி மற்றும் ரியல்மி நிறுவனங்களுக்கிடையே உச்சகட்ட மோதல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், இந்திய ஸ்மார்ட்போன் சந்தையின் தற்போதைய நிலை குறித்து விளக்கிய ஐடிசி (International Data Corporation) […]

Categories
டெக்னாலஜி பல்சுவை

ரெட்மியின் புகழ்பெற்ற இந்த மொபைல் இனி வராது – அதிர்ச்சியில் ரசிகர்கள்

ரெட்மி நிறுவனத்தின் புகழ்பெற்ற Redmi K20 pro ஸ்மாடர்ட்போன்களின் உற்பத்தி நிறுத்தப்படுவதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது. ரெட்மி நிறுவனத்தின் ஃபிளாக்ஷிப் (அதிக விலைகொண்ட ஸ்மார்ட்போன்) வரிசையில் வெளியாகி பெரும் ஹிட் அடித்த மாடல் Redmi K20 pro. ரூ. 25 ஆயிரத்திற்கு வெளியான இந்த ஸ்மார்ட்போன் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. இந்த Redmi K20 pro மாடல் கடந்த ஆண்டு (2019) மே மாதம் சீனாவில் வெளியானது. இந்நிலையில் சீனாவின் பிரபல சமூக வலைதளமான வைபோவில் […]

Categories
டெக்னாலஜி பல்சுவை

அசத்தும் அம்சங்களுடன்…”ஸ்மார்ட் ஸ்பீக்கர்” இந்தியாவில்..!

இந்திய சந்தையில்  ஆப்பிள் நிறுவனத்தின் புதிய ஹோம்பாட் ஸ்மார்ட் ஸ்பீக்கர் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது .  உலகின் முதன்மை நிறுவனமான ஆப்பிள் நிறுவனம் தற்போது  இந்தியாவில் ஹோம்பாட்  என்கிற  ஸ்மார்ட் ஸ்பீக்கரை அறிமுகம் செய்துள்ளது. புதிய ஹோம்பாட் ஸ்பீக்கருக்கு ஐ.ஒ.எஸ். மற்றும் ஐபேட் ஒ.எஸ். 13.3.1 அப்டேட் வழங்கப்பட்டுள்ளது.  இந்தியாவுக்கான  புதிய அப்டேட்டில் ஆங்கில மொழி சிரி குரல்களில் இணைக்கப்பட்டுள்ளது. 2017 ஆப்பிள் சர்வதேச டெவலப்பர்கள் மாநாட்டில் இந்த சாதனம்  அறிமுகம் செய்யப்பட்டது. அறிமுகமானதும் அமெரிக்கா, ஆஸ்திரேலியா  மற்றும் […]

Categories
டெக்னாலஜி பல்சுவை

என்னடா இது… ”மடிக்கும் ஸ்மார்ட்போன்” அசத்தலான அம்சங்களுடன் …!!

சாம்சங் நிறுவனம் மடிக்கும்  வகையில் ஸ்மார்ட் போனை அறிமுகம் செய்துள்ளது வாடிக்கையாளர்களை கவர்ந்துள்ளது. சாம்சங் நிறுவனம் 2020 ஆண்டுக்கான தனது முதல் ஃபிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போன் சீரிஸ் மாடல்களை வருகின்ற பிப்ரவரி 11_ஆம் தேதி அறிமுகம் செய்ய உள்ளது. இந்த ஆண்டு சாம்சங் கேலக்ஸி எஸ்20, கேலக்ஸி எஸ்20 பிளஸ் மற்றும் கேலக்ஸி எஸ்20 அல்ட்ரா என மூன்று ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்யலாம்  என்று  எதிர்பார்க்கப்படுகின்றது. இதோடு கேலக்ஸி எஸ் சீரிஸ் மாடல்களுடன் சாம்சங் தனது இரண்டாம் தலைமுறைக்கான , […]

Categories
டெக்னாலஜி பல்சுவை

36,000,00,00 பேர்…. தொடுடா..! பாக்கலாம்…. யாராலும் நெருங்க முடியாத உயரத்தில் ஜியோ …!!

கடந்தாண்டு நவம்பர் மாதத்தில் 36.9 கோடி வாடிக்கையாளர்களைக் கொண்டு மிகப்பெரிய தொலைத்தொடர்பு நிறுவனமாக ரிலையன்ஸ் ஜியோ உள்ளதாக இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (டிராய்) தெரிவித்துள்ளது. இது தொடர்பாக டிராய் வெளியிட்ட தகவலில் கூறியிருப்பதாவது: வோடபோன் ஐடியா நிறுவனம் 33.62 கோடி வாடிக்கையாளர்களையும் பாரதி ஏர்டெல் 32.73 கோடி வாடிக்கையாளர்களையும் கொண்டுள்ளன. அக்டோபர் மாதம் 120.48 கோடியாக இருந்த மொத்த தொலைபேசி வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை நவம்பர் மாதம் 2.4 விழுக்காடு குறைந்து 117.58 கோடியாக உள்ளது. ஒட்டுமொத்த […]

Categories
டெக்னாலஜி பல்சுவை

2020இல் உங்க மொபைலில் வாட்ஸ்அப் வேலைசெய்யாது?

வரும் சில மாதங்களில் ஏகப்பட்ட ஸ்மார்ட்போன் மாடல்களுக்கு பிரபல செயலியான வாட்ஸ்அப் செயல்படாது என்ற அதிர்ச்சி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. வரும் 2020ஆம் ஆண்டுமுதல் பல பழைய ஸ்மார்ட்போன் மாடல்களில் வாட்ஸ்அப் செயலி செயல்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து ஃபேஸ்புக் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “விண்டோஸ் நிறுவனம் அதன் விண்டோஸ் 10 இயங்குதளத்தில் இயங்கும் ஸ்மார்ட்போன்களுக்கு வழங்கிவரும் சேவையை இன்றுடன் (டிசம்பர் 31) நிறுத்திக்கொள்கிறது. இதனால், வாட்ஸ்அப் செயலியும் இன்றுமுதல் விண்டோஸ் ஸ்மார்ட்போன்களில் இயங்காது. அடுத்துவரும் சில […]

Categories
தேசிய செய்திகள்

பாஜக ஆட்சியில் செல்ஃபோன் கட்டணம் மிகவும் குறைவு’ – ரவிசங்கர் பிரசாத்

பாரதிய ஜனதா ஆட்சியில் செல்போன் சேவை கட்டணம் குறைவாக இருப்பதாக மத்திய தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்திருக்கிறார்.  ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் தான் ஒரு ஜிபி இணைய சேவை பெற 269 ரூபாய் வரை வாடிக்கையாளர்கள் செலவிட நேர்ந்ததாகவும் தற்போதைய ஆட்சியில் ஒரு ஜிபி 11 ரூபாய் 78 காசுகளுக்கு வழங்கப்படுகிறது என்றும் அமைச்சர் தெரிவித்திருக்கிறார். தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் அறிவுறுத்தலின் பேரில் இந்த கட்டணம் வசூலிக்கப்படுவதாக அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் […]

Categories
டெக்னாலஜி பல்சுவை

மிட் ரேஞ்ச் மான்ஸ்டர் ரெட்மியா… கடைக்குட்டி சிங்கம் ரியல்மியா… வெல்லப்போவது யார்?

இந்திய ஸ்மார்ட்போன் சந்தையைப் பிடிக்க ரெட்மி, ரியல்மி ஆகிய நிறுவனங்கள் கடும் போட்டியை நடத்திவருகின்றன. இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் தற்போது பெரும் புயலைக் கிளப்பியிருப்பது சீன நிறுவனங்களான ரெட்மி, ரியல்மி ஆகிய நிறுவனங்களுக்கிடையே நடக்கும் போர்தான்.சீனாவைச் சேர்ந்த சியோமி நிறுவனம் பட்ஜெட் மற்றும் மிட்ரேஞ்ச் ஸ்மார்ட்போன்களுக்காக 2013ஆம் ஆண்டு ரெட்மி என்ற இணை நிறுவனத்தைத் தொடங்கியது. தொடக்கம் முதலே தூள் கிளப்பிய ரெட்மி பட்ஜெட் செக்மென்ட்டின் தனிக்காட்டு ராஜாவாகவே நீண்ட காலம் இருந்தது. ரெட்மியின் அசுர வளர்ச்சியால் […]

Categories
டெக்னாலஜி பல்சுவை

சந்தைக்கு புதிய என்ட்ரி…. டிக் டாக் வெளியிட்ட முதல் ஸ்மார்ட்போன்…!!

டிக்டாக் நிறுவனம் தனது புதிய கண்டுபிடிப்பான ஸ்மார்டிசன் ஜியாங்குவோ புரோ 3 (Smartisan Jianguo Pro3) ஸ்மார்ட் போனை அறிமுகம் செய்துள்ளது. டிக் டாக் நிறுவனம் தனது ஒரு செயலியில் அனைத்து மக்களையும் தன்பக்கம் ஈர்த்து சாதனைப்படுத்தியது. தற்போது ஸ்மார்ட்போன் சந்தையில் ஸ்மார்டிசன் ஜியாங்குவோ புரோ 3 என்ற புதிய கைப்பேசி மூலமாக டிக் டாக் செல்போன் தயாரிப்பில் கால் பதித்துள்ளது. இதனை உறுதி செய்யும் வகையில் பைட் டான்ஸ் நிறுவனம் அதிகார்ப்பூரவாக செல்ஃபோனை வெளியிட்டுள்ளது. இந்த […]

Categories
டெக்னாலஜி தேசிய செய்திகள்

அதிர்ச்சி…. 13,00,000 பேர் ….. ”கிரெடிட், டெபிட் கார்டு” தகவல் விற்பனை ….!!

இந்தியாவைச் சேர்ந்த 13 லட்சம் கிரெடிட், டெபிட் கார்டுகளின் தகவல்கள் டார்க் வெப் தளத்தில் விற்பனைக்கு வந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டார்க் வெப் என்பது இணையதளத்தின் ஒரு அங்கமாக இருந்தாலும், அனைவராலும் இந்த டார்க வெப்-க்கு செல்ல முடியாது. சர்வதேச அளவில் போதைப்பொருள், ஆள் கடத்தல் உள்ளிட்ட பல்வேறு சட்டவிரோத நடவடிக்கைகளுக்கும் இந்த டார்க வெப்தான் பயன்படுத்தப்படுகிறது. தற்போது, டார்க் வெப்பிலுள்ள ஜோக்கர்ஸ் ஸ்டாஷ் (Joker’s Stash) என்ற தளத்தில் 13 லட்சம் இந்திய பயனாளர்களின் […]

Categories
உலக செய்திகள் கிரிக்கெட் டெக்னாலஜி விளையாட்டு

தோனி, சச்சின் மிகவும் ஆபத்தான பிரபலங்கள்….!!

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி, கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் ஆகியோரது பெயர்கள் மிகவும் ஆபத்தான பிரபலங்களின் பட்டியலில் முதலிரண்டு இடங்களை பிடித்துள்ளன. இந்தியாவில் பெரும்பாலான மக்கள் ஸ்மார்ட்போன் உபயோகித்துவருகின்றனர். இதனால் அவர்கள் அதிகமான நேரங்களில் இணையத்திலேயே தங்கள் பொழுதையும் கழிக்கின்றனர். அதிலும் சில வலைதளங்களில் தங்களுக்குப் பிடித்த பிரபலங்களின் நிகழ்ச்சிகளையும், விளையாட்டுப் போட்டிகளையும் பார்க்கவும் செய்கின்றனர்.இப்படியான நிகழ்ச்சிகளை காண்பதற்கு ஒரு சில நிறுவனங்கள் கட்டணங்கள் விதிக்கின்றன. ஆனால் கட்டணம் செலுத்தாமல் இந்த நிகழ்வுகளை இலவசமாக பார்க்க […]

Categories
டெக்னாலஜி பல்சுவை

ஃபேஸ்புக்_க்கு இடமில்லை….. உலகளவில் தூக்கி எறியப்பட்டது …!!

இந்தாண்டுக்கான சர்வதேச அளவில் தலைசிறந்த 10 நிறுவனங்கள் பட்டியலில் ஃபேஸ்புக் நிறுவனம் இடம்பெறவில்லை. உலகளவில் தலைசிறந்த நிறுவனங்களைத் தொகுத்து Global Brand Consultancy Interbrand’s annual Ranking என்ற பட்டியல் ஒவ்வொரு ஆண்டும் வெளியிடப்படுவது வழக்கம். அதேபோல இந்தாண்டு வெளியான பட்டியலில் பலருக்கும் அதிர்ச்சியளிக்கும் விதமாக ஃபேஸ்புக் நிறுவனம் தலைசிறந்த 10 நிறுவன பட்டியலில் இடம்பெறவில்லை.இந்தப் பட்டியலில் ஆப்பிள் நிறுவனம் முதலிடத்தில் உள்ளது. தொடர்ந்து கூகுள், அமேசான், மைக்ரோசாஃப்ட், கோகோ கோலா நிறுவனங்கள் முறையே இரண்டு, மூன்று, […]

Categories
டெக்னாலஜி தேசிய செய்திகள் பல்சுவை

யப்பா….!! 117,10,00,000 இவளோ பேர் ….. வச்சு இருக்காங்களா ?

கைபேசி வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை 117 கோடியாக அதிகரித்துள்ளது என்று இந்திய தொலைத்தொடா்பு ஒழுங்குமுறை ஆணையம் தெரிவித்துள்ளது. இன்று செல்போன் இன்றி தனியொருவர் யாருக்கும் பொழுது போகாது என்பது உண்மையே. ஒரு தனக்கென்று 1 இல்ல 4 செல்போன் வரை வைத்து பயன்படுத்துவதை நாம் பார்த்துள்ளோம். தனிமையில் இருக்கும் ஒருவர் கையில் செல்போன் இருந்தால் அவர்களுக்கு நேரம் செல்வதே  அந்தவகையில் மனித வாழ்க்கையோடு பிரிக்க முடியாத ஒரு இடத்தை செல் போன் பிடுத்துள்ளது. அண்மையில் செல் போன் சேவைக்குகளை […]

Categories
டெக்னாலஜி பல்சுவை

”கெத்தா நடந்து வரான்” ரெட்மி நோட் 8 ….!

ரெட்மி நிறுவனம் தனது அடுத்த மாடலாக ‘ரெட்மி நோட் 8’ என்ற புதிய மொபலை வெளியிட்டுள்ளது. டெல்லியில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் ரெட்மி நிறுவனம் பட்ஜெட் செக்மென்டில் தனது அடுத்த பாய்ச்சலாக ‘ரெட்மி நோட் 8’ என்ற புதிய மொபைல் மாடலை வெளியிட்டுள்ளது. 6.39 இன்ச் IPS எல்இடி டிஸ்பிளே ஸ்னாப்டிராகன் 665 பிராசஸர் 48 மெகாபிக்சல் கேமரா+ 8 மெகாபிக்சல் வைட் ஆங்கிள் கேமரா + 2 மெகாபிக்சல் மைக்ரோ கேமரா + 2 மெகாபிக்சல் […]

Categories
மாநில செய்திகள்

போலி செய்தி, வதந்தி…. ”இனி புதிய சட்டம்”….. செக் வைத்தது மத்திய அரசு….!!

சமூக வலைத்தளங்களில் தவறான தகவல்களை பரப்பப்படுவதை கண்காணிக்க புதிய சட்டம் இயற்றப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. சைபர் குற்றங்களை தடுக்க சமூக வலைதளங்கள் உடன் ஆதார் எண்ணை கட்டாயமாக்க கோரி ஆண்டனி கிளமென்ட் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.இந்த வழக்கு உயர் நீதிபதிகள் சத்தியநாராயணன் , சேஷசாயி ஆகியோர் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.அப்போது பொதுமக்கள் தங்கள் கருத்துக்களை பகிர தளம் அமைத்துக் கொடுத்து விட்டு அதில் பரப்பப்படும் தகவல்களுக்கு வாட்ஸ்அப் நிறுவனம் பொறுப்பேற்க […]

Categories
டெக்னாலஜி தேசிய செய்திகள் பல்சுவை

#BREAKING: ”ஆயிரக்கணக்கான கணக்குகள் முடக்கம்” ட்வீட்_டர் அதிரடி …!!

போலியாக செயல்படும் ஆயிரக்கணக்கான ட்வீட்_டர் கணக்குகளை அந்நிறுவனம் முடங்கியுள்ளது. காஷ்மீர் 320 சிறப்பு சட்ட பிரிவு நீக்கப்பட்ட பிறகு கஷ்மீரில் மக்கள் துன்புறுத்தப்படுகிறார்கள், கொடுமை படுத்தப்படுகிறார்கள் , மனித உரிமை மீறல்கள் என்றெல்லாம் பல்வேறு தவறான தகவல்கள் பாகிஸ்தானில் இருந்து ட்வீட்_டர் மூலமாக வெளியிடப்பட்டன.இந்த தவறான தகவலுடன் , பல தவறான வீடியோக்களும் வெளியிடப்பட்டன.அதாவது உலகில் வேறு பகுதியில் நடந்த பிரச்சனைகள் , அங்குள்ள வன்முறை குறித்து வீடியோக்களை காஷ்மீரில் நடந்தது போன்று தவறான தகவல்களை  பரப்புவது  கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து […]

Categories
டெக்னாலஜி பல்சுவை மாநில செய்திகள்

”இந்திய சட்டத்தை கடைபிடிக்கணும்” வாட்ஸ் அப் நிறுவனம் மீது நீதிமன்றம் அதிருப்தி….!!

சமூகவலைதள நிறுவனங்கள் மீது சென்னை உயர்நீதிமன்றம் அதிருப்தியை தெரிவித்துள்ளது. சைபர் குற்றங்களை தடுக்க சமூக வலைதள கணக்குகளில் ஆதார் எண்ணை கட்டாயமாக இணைக்க கோரிய வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வருகின்றது. இன்று நடைபெற்ற விசாரணையில் சமூக வலைதளத்தில் பரப்பப்படும் தவறான கருத்துக்கு அந்தந்த நிறுவனம் பொறுப்பேற்க முடியாது என்று வாட்ஸ் அப் நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டது. இதற்க்கு அதிருப்தி தெரிவித்த சென்னை உயர்நீதிமன்றம் , ஒரு செயலியை பயன்படுத்தும்போது அதனால் ஏற்படும் விளைவுக்கு அந்த செயலி தான் பொறுப்பாக […]

Categories
டெக்னாலஜி தேசிய செய்திகள் பல்சுவை

யார் பெஸ்ட் ? Jio Fiber ஆ…. Airtel ஆ…. BSNL ஆ….. ப்ராட்பேண்ட் திட்டத்தின் ஒப்பீடு..!!

Jio Fiber vs Airtel vs BSNL ஆகிய ப்ராட்பேண்ட் திட்டங்களின் ஓர் ஒப்பீடு அனைத்து பயனாளர்களையும் கவர்ந்துள்ளது. தொலைத்தொடர்பு துறையில் வேகமாக வளர்ந்து வரும் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் அதிவேக ப்ராட்பேண்ட் சேவையான ஜியோ பைபர் சேவையை ரூ 699_க்கு இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இதனுடன் பல சலுகைகளுடன் சேர்த்து இணைய சேவையை வழங்குகின்றது. ஜியோ பைபர் 1Gbps வரையிலான அதிவேக இணைய சேவையை வழங்குகிறது. Jio Fiber திட்டம் :  ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தனது பைபர் சேவையை ஆறு […]

Categories
டெக்னாலஜி பல்சுவை

இன்ஸ்டாகிராம் பிழையை கண்டறிந்தவருக்கு 7,20,000 ரூபாய் பரிசு…!!!

இன்ஸ்டாகிராம் செயலியில் இருந்த பிழையை கண்டறிந்த சென்னை வாலிபருக்கு 7.2 லட்சம் ரூபாய் பரிசு தொகை அறிவிக்கப்பட்டுள்ளது. இன்ஸ்டாகிராமில் பிழை இருப்பதை கண்டறிந்த சென்னையை சேர்ந்த லக்‌ஷமன் முத்தையா என்பவருக்கு ரூ. 7.2 லட்சம் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த முறையை போன்று இம்முறையும் இன்ஸ்டாகிராமில் பாஸ்வேர்டு ரீசெட் குறியீடுகளை வழங்கும் முறையில் இருக்கும் தவறை கொண்டு பல பயனர்களின்  பாஸ்வேர்டு ரீசெட் குறியீடுகளை உருவாக்கி ஹேக் செய்ய முடியும் என்பதை கண்டறிந்துள்ளார்.  இதனை உறுதிப்படுத்திய ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் பாதுகாப்பு குழு  லக்‌ஷமன் முத்தையாவுக்கு ரூ. […]

Categories
டெக்னாலஜி பல்சுவை

சியோமி ரெட்மி பிராண்டின் புதிய ரெட்மி கே20 ப்ரோ ஃபிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போன் அறிமுகம் .. !!

இந்தியாவில்  புதிய ரெட்மி கே20 ப்ரோ ஃபிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போனை சியோமி ரெட்மி பிராண்டு  அறிமுகப்படுத்தியது . தற்போது இந்தியாவில்  சியோமியின் ரெட்மி பிராண்டு புதிதாக  ரெட்மி கே20 ப்ரோ என்ற  ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்துகிறது .இந்த புதிய  ஸ்மார்ட்போனில் 6.39 இன்ச் ஃபுல் H.D. +  AMOLED  டிஸ்ப்ளே, குவால்காம் ஸ்னாப்டிராகன் 855 பிராசஸர், அதிகபட்சம் 8 G.B. RAM , கேம் டர்போ 2.0 மற்றும் ஆண்ட்ராய்டு பை இயங்குதளம் சார்ந்த MIUI 10 னும் உள்ளது.  தெளிவாக […]

Categories
டெக்னாலஜி பல்சுவை

REDMI மொபைல்ஸ் : புதிய வரவாக REDMI K20 ப்ரோ அறிமுகம்….!!

REDMI நிறுவனம் புதியதாக REDMI K20 ப்ரோ  என்ற ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. சியோமியின் ரெட்மி பிராண்டு தன்னுடைய  ரெட்மி கே20 ப்ரோ என்ற ஸ்மார்ட்போன் மடலை  அறிமுகம் செய்தது. இந்த வகை புதிய ஸ்மார்ட்போனில் 6.39 இன்ச் ஃபுல் HD PLUS  AMOLED டிஸ்ப்ளே, குவால்காம் ஸ்னாப்டிராகன் 855 பிராசஸர், அதிகபட்சம் 8 G.B ROM , கேம் டர்போ 2.0, ஆண்ட்ராய்டு பை இயங்குதளம் சார்ந்த MIUI 10 வழங்கப்பட்டுள்ளது. இதில் புகைப்படங்களை எடுக்க வசதியாக 48 MP பிரைமரி […]

Categories
டெக்னாலஜி பல்சுவை

T.C.L  நிறுவனத்தின் முதல் 4K A.I ஆண்ட்ராய்டு 9 TV அறிமுகம்……!!

T.C.L  நிறுவனத்தின் முதல் 4K A.I ஆண்ட்ராய்டு 9 TV இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. T.C.L  நிறுவனம் இந்தியாவின் முதல் 4K  A.I ஆண்ட்ராய்டு 9 டி.வி.யை அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய 55-இன்ச் P8E டி.வி.யில் ஹேன்ட்ஸ்-ஃப்ரீ வாய்ஸ் சர்ச் தொழில்நுட்பத்துடன் கூடிய  பெசல் லெஸ் ஸ்கிரீன் கொடுக்கப்பட்டுள்ளது. இதனுடைய விற்பனை அமேசான் இணையத்தில் ஏற்கனவே தொடர்ந்து நடைபெற்று வருகிறது. T .C .L . P8E 55 இன்ச் டி.வி_யை குறிப்பிட்ட எல்லையில் இருந்து வாய்ஸ் கமெண்ட் மூலம் […]

Categories
டெக்னாலஜி பல்சுவை

ட்விட்டரில்  தமிழ் உள்பட ஏழு இந்திய மொழிகள் பயன்படுத்தும் வசதி ..!!

சமூக வலைத்தளமான ட்விட்டரில்  தமிழ் உள்பட ஏழு இந்திய மொழிகள்  பயன்படுத்தும் வசதி  விரைவாக  அறிமுகப்படுத்தபட இருக்கின்றது . கணினிகளுக்கான ட்விட்டர் வலைத்தளம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. ட்விட்டரை பயன்படுத்துவோர் இனி ஏழு இந்திய மொழிகளில் தங்கள் தகவல்களை பகிர்ந்து கொள்ளலாம்.  இனி வரும் வாரத்தில் இந்த புதிய அமைப்பின் அம்சங்களுக்கான அப்டேட் வழங்கப்படும். இது ட்விட்டர் தளத்தில் மேற்கொள்ளப்படும் மிகப்பெரிய அப்டேட்டாக விளங்குகிறது . இதனை பயன்படுத்துவோர் தங்கள் அனுபவத்தை கைபேசி தளங்களில் இருப்பதை போன்றே  உள்ளது . இந்தியாவின்  ட்விட்டர் தளத்தில் இனி  தமிழ், இந்தி, , மராத்தி, உருது, குஜராத்தி,பெங்காலி […]

Categories
டெக்னாலஜி பல்சுவை

ரியல்மி பிராண்டின் டூயல் கேமரா கொண்ட புதிய ஸ்மார்ட்போன் அறிமுகம் …!!

ரியல்மி பிராண்ட நிறுவனம் தனது புதிய டூயல் கேமரா கொண்ட  ஸ்மார்ட்போனை  அறிமுகம் செய்கிறது . இந்தியாவில் ரியல்மி பிராண்டு நிறுவனம் அறிவித்தப்படி  தனது  ரியல்மி 3i ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்தது. புதிய ஸ்மார்ட்போனில் 6.2 இன்ச் H.D + 19:9 ரக டிஸ்ப்ளே, மீடியாடெக் ஹீலியோ பி 60 12 N.M . பிராசஸர், அதிகபட்சம் 4 G.B .RAM  ஆண்ட்ராய்டு 9.0 பை சார்ந்த கலர் ஒ.எஸ். 6.0 வழங்கப்பட்டுள்ளது. புகைப்படங்களை எடுக்க 13 M.B.  பிரைமரி கேமரா மற்றும்  […]

Categories
டெக்னாலஜி பல்சுவை

ரூ. 19,999 -க்கு பாப்-அப் கேமரா, இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் கொண்ட ஸ்மார்ட்போன் அறிமுகம் ….

ரூ. 19,999 -க்கு பாப்-அப் கேமரா, இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் கொண்ட ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படுகிறது . ரியல்மி நிறுவனத்தின் ரியல்மி எக்ஸ் ஸ்மார்ட்போன் சீனாவை தொடர்ந்து  இந்தியாவில் அறிமுகம் செய்யப்படுகிறது . புதிய ரியல்மி  x  ஸ்மார்ட்போனில்  6.53 இன்ச் ஃபுல்  H.D+  AMOLED டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 710 பிராசஸர், அதிகபட்சம் 8 G.B .RAM   , ஆறாம் தலைமுறை இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் வசதி கொடுக்கப்பட்டுள்ளது. இந்த  ஸ்மார்ட்போனின்  வெப்பத்தை குறைப்பதற்கு  புதிய ஜெல் கூலிங் சிஸ்டம் இணைக்கப்பட்டுள்ளது. […]

Categories
டெக்னாலஜி பல்சுவை

“ஏர்டெல் சேவை சரியாக கிடைப்பதில்லை” பயனாளர்கள் புகார்..!!

பல்வேறு பகுதிகளில் பயனாளர்கள் ஏர்டெல் சேவை சரியாக கிடைக்கவில்லை என்று புகார் அளித்து வருகின்றனர்  பல்வேறு பகுதிகளில் ஏர்டெல் பயனர்கள் இண்டெர்நெட் வசதி கிடைக்காமலும் இன்கம்மிங், அவுட்கோயிங் வசதியில் பிரச்னை ஏற்பட்டுள்ளதாகவும் புகார் தெரிவித்து வருகின்றனர். இதில் சிலர் இண்டெர்நெட் கிடைக்கிறது ஆனால் போன் செய்ய முடியவில்லை என்றும் புகார் தெரிவித்து வருகின்றனர். பயனர்கள் தங்களது பிரச்னைகளை ஏர்டெல் ட்விட்டருக்கு டேக் செய்து தெரிவித்து வருகின்றனர். இதற்க்கு ஏர்டெல் நிறுவனமும் பயனாளர்களின் புகார்களுக்கு பதிலளித்து வருகிறது. ஏர்டெல் […]

Categories
டெக்னாலஜி பல்சுவை

பேஸ்புக் நிறுவனத்திற்கு 3,42,000 கோடி ரூபாய் அபராதம்..!!

பயனாளர்களின் தனிப்பட்ட தகவல்களை கேம்பிரிட்ஜ் அனாலிட்டிகா நிறுவனத்திற்கு பகிர்ந்ததாக பேஸ்புக் நிறுவனத்திற்கு 3,42,000 கோடி  ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. பயனாளர்களின் தனிப்பட்ட தகவல்களை , கேம்பிரிட்ஜ் அனாலிட்டிகா என்ற அரசியல் ஆலோசனை நிறுவனத்திற்கு  ஃபேஸ்புக் நிறுவனம் பகிர்ந்ததாக புகார் எழுந்தது. தகவல்களை அனாலிட்டிகா நிறுவனம் திருடியதாக ஃபேஸ்புக் ஒப்புக்கொண்டு, அதற்காக மன்னிப்பும் கோரியது. அதை தொடர்ந்து கடந்த வருடம் மார்ச் மாதம் இந்த புகார் தொடர்பான விசாரணையை அமெரிக்க வர்த்தக ஆணையம் தொடங்கியது. இந்த விசாரணையில், பயனர்களின் தனிப்பட்ட தகவல்களை பிறருக்கு பகிர்வதில்லை […]

Categories
டெக்னாலஜி பல்சுவை

அமேசானில் ப்ரைம் டே சேல்…. 18 -24 வயதுக்குட்பட்ட இளைஞர்களுக்கு 50% ப்ரைம் கேஷ்பேக்…!!

அமேசான் ப்ரைம் திட்டத்தில் இணைய விரும்பும் இளைஞர்களுக்கு 50 சதவிகித கேஷ்பேக் ஆஃபர் வழங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அமேசானில் ப்ரைம் டே சேல் வருகிற 15-ம் தேதி தொடங்க உள்ளது. இந்தநிலையில் 18 -வயது முதல் 24 -வயதுக்கு உட்பட்ட இளைஞர்களுக்கு 50% ப்ரைம் கேஷ்பேக் சலுகையை வழங்குகிறது. இளைஞர்கள் அமேசான் ப்ரைம் திட்டத்தில் இணைய விரும்பினால் 50 சதவிகிதம் அதாவது 500 ரூபாய் கேஷ்பேக் ஆக வழங்கப்படும். அமேசான் ப்ரைம் திட்டத்தில் இணைவதற்கான கட்டணம் 999 ரூபாய். […]

Categories
டெக்னாலஜி பல்சுவை

இந்தியாவில் 15 மில்லியன் ஸ்மார்ட்ஃபோன்களை தாக்கிய மால்வேர்..!!

உலக அளவில் சுமார் 25 மில்லியன் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்ஃபோன்களை மால்வேர் ஒன்று தாக்கியுள்ளது கண்டறியப்பட்டுள்ளது. ”ஏஜெண்ட் ஸ்மித்” என்றதொரு மால்வேர் சர்வதேச அளவில் சுமார் 25 மில்லியன் ஸ்மார்ட்ஃபோன்களைத் தாக்கியுள்ளது. தொழில்நுட்ப ஆய்வின் அடிப்படையில் இந்தியாவில் மட்டும் சுமார் 15 மில்லியன் ஸ்மார்ட்ஃபோன்களை ‘ஏஜெண்ட் ஸ்மித்’ மால்வேர் தாக்கியுள்ளது. கூகுளுக்குத் தொடர்புடைய ஒரு அப்ளிகேஷனாகவே ஸ்மார்ட்ஃபோனில் இருக்கும் அந்த மால்வேர் மெல்ல ஃபோனில் இருக்கும் மற்ற ஆப்ஸ்களையும் தாக்கத் தொடங்குகிறது. ஆண்ட்ராய்டு பயனாளர்களுக்கே தெரியாமல் இந்தத் தாக்குதல் […]

Categories
டெக்னாலஜி பல்சுவை

சாம்சங் போலி ஆஃப் டவுன்லோடு செய்து “1,00,00,000 பேர் ஏமாற்றம்”..!!

சாம்சங் ஸ்மார்ட்ஃபோனில் ஆண்ட்ராய்டு அப்டேட் செய்ய 1,00,00,000 பயனர்கள்  தவறான ஒரு போலி ஆப் ஒன்றை பதிவிறக்கம் செய்து ஏமாற்றமடைந்துள்ளனர்.  ஆண்ட்ராய்டு மொபைல் போன்களை அப்டேட் செய்ய நாம் அனைவரும் உபயோகப்படுத்தும் ஒரே தளம் கூகுள் ப்ளே ஸ்டோர் (Google Play Store). அந்த வகையில் கூகுள் ப்ளே ஸ்டோர் மூலம் சாம்சங் ஸ்மார்ட் போனில் அப்டேட் செய்ய முயற்சி செய்த பயனாளர்களில் சர்வதேச அளவில் சுமார்  1,00,00,000 பேர் தவறாக ஒரு போலி ஆப் ஒன்றை பதிவிறக்கம் செய்துள்ளனர். பல தரப்பட்ட […]

Categories
டெக்னாலஜி பல்சுவை

“ரூ 148 விலையில் 3 G.B Data” ஏர்டெல் அதிரடி சலுகை..!!

ஏர்டெல் நிறுவனம்  தங்களது  வாடிக்கையாளர்களுக்கு  புதிதாக 3 ஜி.பி. டேட்டா (3 G.B Data) வழங்கும் சலுகையை அறிவித்துள்ளது. பாரதி ஏர்டெல் நிறுவனம் ரூபாய். 148 விலையில் புதியதொரு  பிரீபெயிட் சலுகையை அறிவித்துள்ளது. இதில் பயனர்களுக்கு 3 G.B Data, அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் உள்ளிட்டவை 28 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. ஏற்கனவே ஏர்டெல் நிறுவனம் ரூ. 145 விலையில் சலுகையை வழங்குகிறது.இந்த சலுகையில் பயனாளர்களுக்கு  ரூ. 145 டாக்டைம், 1 G.B Data உள்ளிட்டவை 42 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. ஸ்பெஷல் ரீசார்ஜ் […]

Categories
டெக்னாலஜி பல்சுவை

“4 கேமராவுடன் Infinix Hot 7 ஸ்மார்ட் போன்” இந்தியாவில் விரைவில் அறிமுகம்..!!

இன்ஃபினிக்ஸ் நிறுவனம் ஹாட் 7 சீரிஸ் (Hot 7 Series) ஸ்மார்ட்போன்களை விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யவுள்ளது. கடந்த மாதம் இந்நிறுவனம் இன்ஃபினிக்ஸ் ஹாட் 7 ப்ரோ (Infinix Hot 7 Pro) ஸ்மார்ட்போன்களை  இந்தியாவில் அறிமுகம் செய்த நிலையில், தற்போது இன்ஃபினிக்ஸ் ஹாட் 7 ப்ரோ மாடலை விட உயர்ந்த வெர்ஷனை அறிமுகம் செய்ய போகிறது.   இந்த ஸ்மார்ட்போன் இன்ஃபினிக்ஸ் ஹாட் 7 (Infinix Hot 7) என்று அழைக்கப்பட உள்ளது. இந்த புதிய  ஸ்மார்ட்போன் ப்ளிப்கார்ட் […]

Categories
டெக்னாலஜி பல்சுவை

“அமர்நாத் யாத்திரை செல்வோருக்கு “ரூ 102 விலையில் சலுகை” ஜியோ அதிரடி..!!

அமர்நாத் புனித யாத்திரை செல்வோருக்கு என ஜியோ நிறுவனம் பிரத்யேகமாக புதிய சலுகையை அறிவித்துள்ளது.  ஜம்மு- காஷ்மீரில் ரிலையன்ஸ் ஜியோ (GIO) நிறுவனம் ரூ. 102 விலையில் அதிரடியாக புதிய சலுகையை அறிவித்துள்ளது. அமர்நாத் புனித யாத்திரை செல்வோருக்கென அறிவிக்கப்பட்டுள்ள இந்த புதிய சலுகையில் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் மற்றும் தினமும் 100 S.M..S பலன்கள் 7 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. இதுதவிர ரிலையன்ஸ் ஜியோ ரூ. 98 விலையில் வழங்கும் பிரீபெயிட் சலுகையில் பயனர்களுக்கு தினமும் 2 G.P DATA […]

Categories
டெக்னாலஜி

“பயனாளர்களை நாங்கள் ஒருநாளும் வேவு பார்க்கவில்லை”- இன்ஸ்டாகிராம் சி.இ.ஓ உறுதி..!!

இன்ஸ்டாகிராம் பயனாளர்களின் மெசேஜ் மற்றும் பதிவுகளை நாங்கள் ஒருநாளும் வேவு பார்க்கவில்லை என அந்நிறுவனத்தின் சி.இ.ஓ ஆடம் மொசெரி தெரிவித்துள்ளார். சமீபத்தில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சம்பந்தமே இல்லாத தேவையற்ற தேடப்படாத விளம்பரங்கள் வருவது ஏன்? என தனியார் டிவி நிகழ்ச்சி ஒன்றில் இன்ஸ்டாகிராம் சி.இ.ஓ ஆடம் மொசெரியிடம் கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு பதிலளித்த சி.இ.ஓ ஆடம், “இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வரும் விளம்பரங்கள் எதேர்ச்சையாகத்தான் வருகின்றன. நீங்கள் தேடாத, ஆனால் நீங்கள் சமீபத்தில் பேசிய ஒரு விஷயம் குறித்த விளம்பரங்கள் […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

“திரளாக வாக்களியுங்கள்” வாக்காளர்களுக்கு மோடி வேண்டுகோள்….!!

முதல்கட்ட தேர்தல் நடைபெறும் மாநிலங்களில் அனைவரும் திரளாக வந்து வாக்களியுங்கள் பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார். மக்களவை தேர்தல் ஏப்ரல் 11_ஆம் தேதி தொடங்கி 7 கட்டமாக நடைபெறுமென்று இந்திய தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. அந்த வகையில் முதல் கட்ட வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது . முதற்கட்டமாக 20 மாநிலங்களில் 91 தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு நடைபெற்று வருகின்றது. அதே போல ஆந்திரா, அருணாசல பிரதேசம், சிக்கி, […]

Categories
டெக்னாலஜி தேசிய செய்திகள்

“எல்லாரும் ஓட்டு போடுங்க” நினைவு படுத்தும்GOOGLE……!!

இன்று வாக்குப்பதிவை நினைவு கூர்ந்து அனைவரும் வாக்குபதிவில் கலந்து கொள்ள வேண்டுமென்ற வகையில் GOOGLE தனது வலைத்தளத்தை மாற்றியமைத்துள்ளது. மக்களவை தேர்தல் ஏப்ரல் 11_ஆம் தேதி தொடங்கி 7 கட்டமாக நடைபெறுமென்று இந்திய தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. அந்த வகையில் முதல் கட்ட வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது . முதற்கட்டமாக 20 மாநிலங்களில் 91 தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் வாக்களிப்பது நமது […]

Categories
டெக்னாலஜி பல்சுவை

போலி செய்திகளுக்கு ஆப்பு வைக்கும் Whats App…..!!

போலி செய்திகளை கண்டறிய வாட்ஸ் அப் புதிய வசதியை அறிமுகம் செய்துள்ளது. வாட்ஸ் அப் இன் முக்கிய பிரச்சனையாக இருப்பது போல் செய்திகள் பரவுவது. இதனை தடுக்க வாட்ஸ் அப்  நிறுவனம் பல மாறுதல்களைக் கொண்டு வருகிறது. பயனாளர்களின் தேவைக்கு ஏற்பவும் பயன்பாட்டுக்கு எளிதாகவும் அவ்வப்போது அப்டேட் கொடுத்து வருகிறது.இந்நிலையில் வதந்தியை தடுக்க புதிய நடைமுறையை கொண்டு வந்துள்ளது வாட்ஸ் அப் . வதந்தி என சந்தேகிக்கும் குறிப்பிட்ட தகவலை 91 96 43 00 08 88 என்ற […]

Categories
டெக்னாலஜி தேசிய செய்திகள் பல்சுவை

4ஜி வசதியில் இந்திய நகரங்கள் மோசமான நிலை…. ஆய்வில் வெளியானது தகவல்…!!

இந்தியாவிலேயே ஜார்க்கண்ட் மாநிலத்தின் தன்பாத் நகரில்தான் 4ஜி வசதி சிறப்பாக இருப்பதாக ஆய்வு வெளியாகியுள்ளது. லண்டனைச் சேர்ந்த ஓபன் சிக்னல் என்ற தனியார் நிறுவனம் இந்தியாவில் 4ஜி வசதி குறித்த ஆய்வை மேற்கொண்டது. இந்திய அளவில் உள்ள முக்கிய நகரங்களில் ஆய்வு செய்யப்பட்டு அங்கு உள்ள 4ஜி_யின் வசதி குறித்து தகவலை வெளியிட்டுள்ளது. அதன்படி இந்தியாவில் ஜார்கண்ட் மாநிலத்தின் தன்பாத்  நகரில் 95.3 சதவீதம் 4ஜி வசதி சிறப்பாக இருப்பதாக கூறப்பட்டுள்ளது. அடுத்தபடியாக 95% பெற்ற ஜார்கண்ட் தலைநகரம் ராஞ்சி இருக்கிறது. அதே […]

Categories

Tech |