லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில்உருவான ‘மாஸ்டர்’ திரைப்படம் 2020 ஏப்ரல் மாதம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டு அதற்கான வியாபாரங்கள் முழுவதும் பேசி முடிக்கப்பட்டன. ஆனால் கொரோனோ ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் படத்தை வெளியிட முடியாத சூழல் ஏற்பட்டது. இதனிடையே விஜய்யின் மாஸ்டர் திரைப்படத்தில் குட்டி ஸ்டோரி என்னும் பாடல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. தற்போது அப்பாடல் தெலுங்கில் “சிட்டி ஸ்டோரி” என்னும் தலைப்பில் வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதனால் விஜய் ரசிகர்கள் […]
Tag: #Telugu
‘மைதான்’ திரைப்படத்தின் புதிய ரிலீஸ் தேதி குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. ‘தனாஜி’ படத்தைத் தொடர்ந்து அஜய் தேவ்கான் நடிப்பில் உருவாகிவரும் படம் ‘மைதான்’. அமித் ரவீந்திரநாத் இயக்கும் இப்படத்தை ஜீ ஸ்டுடியோஸ், பே வியூ புரோஜக்ட்ஸ், ஃப்ரெஷ் லைம் பிலிம்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன. சயத் அப்துல் ரஹீமின் வாழ்க்கை வரலாற்றைத் தழுவி உருவாகிவரும் இப்படத்தில் சயத் அப்துல் கதாபாத்திரத்தில் அஜய் தேவ்கான் நடிக்கிறார். இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் உருவாகியுள்ள இப்படம் […]
மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 3ஆம் ஆண்டு நினைவுநாளையொட்டி, நடிகை கங்கனா ரணாவத் ஜெயலலிதாவின் உருவப்படத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினார். மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 3ஆம் ஆண்டு நினைவு நாள் நேற்று அனுசரிக்கபட்டது. இதனையொட்டி, பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத், ஜெயலலிதாவின் உருவப்படத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தியுள்ளார். ஜெயலலிதா உருவப்படத்திற்கு கங்கனா மலர்தூரி மரியாதை செய்யும் புகைப்படத்தை சினிமா விமர்சகர் தரண் ஆதர்ஷ் தனது ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். பாலிவுட் குயினாக வலம் வரும் கங்கனா […]
தெலுங்கு சினிமாவில் பிரபல பாடகிகளில் ஒருவராக வளம் வரும் பிரணவி, பிரபல இயக்குனர் ஒருவர் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறியுள்ளார். தெலுங்கு சினிமாவில் பிரபல பாடகிகளில் ஒருவர் பிரணவி. இவர் ஸ்ரீ ராமதாசு, ஹேப்பி டேஸ், எமதொங்கா, லயன் உள்ளிட்ட பல படங்களில் பாடி புகழ் பெற்றுள்ளார். சில ஆண்டுகளுக்கு முன்பு நடன இயக்குனரான ரகு மாஸ்டரை திருமணம் செய்து கொண்டார். தற்போது இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. சமீபத்தில் அவர் அளித்த ஒரு பேட்டியில், சினிமாவில் நான் பாட வாய்ப்பு தேடிய சமயத்தில் பலர் தனக்கு […]
சர்கார் படத்தில் விஜய்க்கு வில்லியாக நடித்த வரலட்சுமி அடுத்ததாக பிரபல தெலுங்கு நடிகருக்கு வில்லியாக நடிக்கஉள்ளார். 2017-ஆம் ஆண்டு பிரதீப் கிருஷ்ணமூர்த்தி இயக்கத்தில் சிபிராஜ் நடிப்பில் வெளிவந்த சத்யா படத்தில் வில்லத்தனம் கலந்த போலீஸ் அதிகாரியாக வரலட்சுமி நடித்துள்ளார். அதன் பின்பு ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளிவந்த சர்கார் படத்திலும் வில்லி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். தமிழ் சினிமாவில் தனக்கென்று தனி பாதையை அமைத்துக் கொண்ட வரலட்சுமிக்கு தற்போது தெலுங்கு சினிமாவில் இருந்தும் வாய்ப்புகள் வரத் தொடங்கியுள்ளது. இந்நிலையில் தெலுங்கு சினிமாவில் மாஸ் ஹீரோவாக […]
கடந்த ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட்டான ராட்சசன் படம் குறித்த செய்திக்கு நடிகை அமலாபால் கோபமாக பதிலளித்திருக்கிறார். ராம்குமார் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான படம் ‘ராட்சசன்’. விஷ்ணு விஷால், அமலா பால் இணைந்து நடித்த இந்தப் படம் ரசிகர்களை கவர்ந்து சூப்பர் ஹிட் படமானது. தற்போது இந்த படம் தெலுங்கில் ரீமேக் செய்யப்பட்டு வருகின்றது. இந்நிலையில், இந்த படத்தில் தமிழில் விஷ்ணு விஷால் சூப்பராக நடித்துள்ளார். விஷ்ணு விஷாலை போல தெலுங்கு நடிகர் பெல்லம்கொண்டா ஸ்ரீனிவாசால் நடிக்க முடியாது எனறு அமலாபால் கூறியதாக தெலுங்கு இணையதளங்களில் […]
ஆனந்த் இயக்கத்தில் விஷால் நடிப்பில் உருவாக இருக்கும் படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமை போவதாக தகவல் வெளியாகியுள்ளது. விஷால் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியாகிய படம் இரும்புத்திரை. பி.எஸ்.மித்ரன் இயக்கிய இந்த படம் சைபர் குற்றங்களை மையப்படுத்தி உருவாகியிருந்தது. கதாநாயகியாக சமந்தாவும், வில்லனாக அர்ஜூனும் நடித்த இந்த படம் நல்ல வரவேற்பை பெற்றுத்தந்தது. இந்த படத்திற்கு தெலுங்கிலும் நல்ல வரவேற்பு கிடைத்தது. இதையடுத்து இரும்புத்திரை படத்தின் இரண்டாம் பாகத்தை உருவாக்கும் முயற்சிகள் நடந்துவந்தன, தற்போது திரைக்கதையும் தயாராகி வருகிறது. இந்த படத்தை […]
நடிகை ஸ்ருதிஹாசன் 2 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் நடிப்பை தொடருவதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழில் பல படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் நடிகை ஸ்ருதி ஹாசன். தமிழில் பிரபல நடிகர்களுடன் சேர்ந்து நடித்த இவர் 2 ஆண்டுகளாக சினிமாவிலிருந்து விலகியிருந்தார். சமீபத்தில் இவர் தனது காதலனுடன் திருமணம் செய்துகொண்டு செட்டில் ஆக போவதாக தகவல் பரவியது இதற்கு ஸ்ருதி மறுப்பு தெரிவித்தார். இது குறித்து தற்போது நடிகை ஸ்ருதஹாசன் விரைவில் தமிழ், தெலுங்கு படங்களில் நடிக்க […]