’96’ படத்தின் தெலுங்கு வெர்ஷனான ஜானு படத்தின் ட்ரெய்லரை படக்குழு நேற்று வெளியிட்டுள்ளது. விஜய் சேதுபதி, த்ரிஷா நடிப்பில் 2018ஆம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்ற படம் ’96’. இத்திரைப்படத்தை ஒளிப்பதிவாளர் பிரேம்குமார் இயக்கியிருந்தார். ஒளிப்பதிவாளராக பணிபுரிந்திருந்தாலும் பிரேம்குமார் ’96’ திரைப்படத்தில்தான் இயக்குநராக அறிமுகமானார். திரைப்படம் வெளியான பிறகு கலவையான விமர்சனங்களைப் பெற்றது. இதைத்தொடர்ந்து இப்படம் கன்னடத்தில் ’99’ என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டது. அதில் பாவனாவும், கணேஷும் நடித்திருந்தனர். இப்போது தெலுங்கில், த்ரிஷா கதாபாத்திரத்தில் […]
Tag: Telugucinema
ஜேஎன்யு மாணவர்கள் மீதான தாக்குதலைக் கண்டித்து இந்தியா கேட் பகுதியில் நடைபெற்ற போராட்டத்தில் பாலிவுட் பிரபலங்கள் பலரும் இணைந்து தங்களது ஆதரவைத் தெரிவித்தனர். டெல்லி ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை ஆசியர்கள் பொதுக்கூட்டம் நடைபெற்றுக்கொண்டிருந்தபோது அங்கு முகமூடி அணிந்து ஊடுருவிய அடையாளம் தெரியாத நபர்கள் சிலர் மாணவர்கள், பேராசிரியர்களைச் சரமாரியாகத் தாக்கினர். இரும்புக் கம்பிகள், கம்புகளைக் கொண்டு நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலில் மாணவர்கள், பேராசிரியர்கள் பலர் படுகாயமடைந்தனர். இந்தச் சம்பவம் நாடு முழுவதும் பெரும் […]
நடிகை கேத்ரின் தெரசா வயதான நடிகருக்கு ஜோடியாக நடிக்கரூ.1 கோடி சம்பளம் கேட்டதாக தகவல் வெளியாகி உள்ளது நடிகர் கார்த்தியின் “மெட்ராஸ்” திரை படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் கேத்ரின் தெரசா. இவர் கணிதன்,கலகலப்பு-2 உள்ளிட்ட பல படங்களிலும் நடித்துள்ளார். சமீபத்தில் திரைக்கு வந்த அருவம் திரை படத்தில் சித்தார்த்துக்கு ஜோடியாக நடித்து இருந்தார். இப்போது தெலுங்கிலும் முன்னணி நடிகையாக இருக்கிறார். இந்த நிலையில் தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணா கதாநாயகனாக நடிக்க இருக்கும் புதிய திரை படத்துக்கு கதாநாயகியை […]
பழம்பெரும் தெலுங்கு நடிகரும், எழுத்தாளருமான கொல்லபுடி மாருதி ராவ் உடல்நலக் -குறைவால் சென்னையில் காலமானார். சுவாதி, முத்தியம், பிரேமா, லீடர் உள்ளிட்ட 250க்கும் மேற்பட்ட தெலுங்கு திரைப்படங்களில் நடித்தவர் பழம்பெரும் நடிகர் கொல்லபுடி மாருதி ராவ் (வயது 80). 1939ஆம் ஆண்டு ஆந்திரமாநிலம் விஜயநகரம் என்ற இடத்தில் பிறந்த இவர், தெலுங்கு திரையுலகின் பல்வேறு முன்னணி நடிகர்களுடன் நடித்திருக்கிறார். நகைச்சுவை மற்றும் குணச்சித்திர நடிகரான மாருதி ராவ் ஆந்திர அரசின் உயரிய விருதுகள் உள்ளிட்ட பல்வேறு விருதுகளைப் […]
தெலுங்கு சினிமா எனக்கு ஒரு வீடு போலத்தான் என்று நடிகை ஸ்ருதிஹாசன் தெரிவித்துள்ளார். தமிழ், தெலுங்கு, இந்தி என பிஸியாக நடித்துவரும் ஸ்ருதிஹாசன், தொலைக்காட்சி தொகுப்பாளராகவும் வலம் வருகிறார். அமெரிக்கன் தொலைக்காட்சித் தொடர் ஒன்றில் நடிப்பதன் மூலம் ஹாலிவுட்டிலும் காலெடுத்து வைத்துள்ளார். தற்போது இவர் ‘ஃப்ரோசன் 2’ படத்தில் ‘எல்சா’ என்னும் கதாபாத்திரத்திற்கு டப்பிங்கும் கொடுத்துள்ளார். இசையமைப்பாளர், பாடகர், நடிகை, ட்ப்பிங் ஆர்ட்டிஸ்ட் என பன்முகத் தன்மையுடன் இவர் வலம் வந்துகொண்டிருக்கிறார். இவர் சமீபத்தில் தெலுங்கு சினிமா […]
கன்னடம் மற்றும் தெலுங்கு மொழித் திரைப்படங்களில் நடித்து வருபவர் நடிகை நபா நட்டேஷ். இவர் சமீபத்தில் நடத்திய அசத்தல் போட்டோ ஷூட்டின் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளன. இதில் மாடர்ன் டிரஸ் , சேலை என இரண்டு மாறுபட்ட தோற்றங்களில் தோன்றி ரசிகர்களை கிறங்க வைத்துள்ளார். இதோ அந்த புகைப்படங்கள் : இந்த லுக் ஓகேவா…! கேசுவலா இருப்போம் எப்பவும் ரசிகர்களை மயக்கும் விழிக்காரி இப்படித்தான் எப்போவும் என்ன அப்படி பாக்குறீங்க… தங்கத் தாரகை அழகிப்பெண்ணே
நடிகை அமலா நீண்ட நெடிய இடைவெளிக்குப் பின் திரைத்துரையில் அடி எடுத்து வைக்கிறார். 28 ஆண்டுகளுக்குப் பின் இயக்குநர் ஸ்ரீ கார்த்திக் இயக்கத்தில் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் தயாராகும் படத்தில் நடிக்க நடிகை அமலா ஒப்பந்தம் ஆகியிருக்கிறார். கடந்த 1980-ஆம் ஆண்டு டி. ராஜேந்தர் இயக்கத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற ‘மைதிலி என்னை காதலி’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகி ரஜினி, கமல் என முன்னணி நடிகர்களுடன் இணைந்து இவர் நடித்த படங்கள் […]
தமிழ்த் திரையுலகின் சிறந்த காதல் காவியமாக திகழ்ந்த தேவதாஸ் படத்தின் கதாநாயகனாகவும், சிவாஜி கணேசனின் லேண்ட்மார்க் திரைப்படமான நவராத்திரி தெலுங்கு ரீமேக்கிலும் நடித்தவர் அக்கினேனி நாகேஷ்வர ராவ். அவரது பெயரில் ஏஎன்ஆர் தேசிய விருதுகள் திரைத்துறையில் சிறந்து விளங்குவோருக்கு ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது. தெலுங்கு சினிமாவில் ஜாம்பவான் நடிகராகத் திகழ்ந்த அக்கினேனி நாகேஷ்வர ராவ் பெயரில் வழங்கப்படும் தேசிய விருதுக்கு மறைந்த நடிகை ஸ்ரீதேவி மற்றும் பழம்பெரும் நடிகை ரேகா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். தமிழ் சினிமாவில் […]
மகேஷ் பாபு நடிப்பில் திரைக்கு வரவிருக்கும் ‘சரிலேரு நீக்கெவரு’ திரைப்படத்தில் நடிகை விஜயசாந்தியின் கதாபாத்திரத்திற்கான பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. தெலுங்கின் முன்னிணி நடிகராக வலம் வருபவர் மகேஷ்பாபு. இவர் நடிப்பில் ‘சரிலேரு நீக்கெவரு’ என்ற அதிரடி ஆக்ஷன் திரைப்படம் உருவாகி வருகிறது. 2020 ஜனவரியில் வெளியாகும் இந்தப் படத்தின் இறுதிகட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. பாரா மிலிட்டரி அதிகாரியாக மகேஷ் பாபு மிரட்டும் இந்தப்படத்தில் லேடி சூப்பர் ஸ்டார் விஜயசாந்தி, கீதா கோவிந்தம் படப்புகழ் ராஷ்மிகா, […]
‘அசுரன்’ படத்தை தெலுங்கில் ரீமேக் செய்ய படத்தின் தயாரிப்பாளர் கலைப்புலி தாணு முடிவு செய்துள்ளார். எழுத்தாளர் பூமணியின் ‘வெக்கை’ நாவலுக்கு ‘அசுரன்’ என்ற பெயரில் தனுஷ் – வெற்றிமாறன் கூட்டணி திரைவடிவம் கொடுத்து ரசிகர்களை மெய்சிலிர்க்க வைத்துள்ளனர். இப்போது இந்தப் படம் தெலுங்கு ரசிகர்களுக்கும் விருந்தாக பரிமாறப்படவுள்ளது. படத்தில் ஜிவி பிரகாஷின் பின்னணி இசை பெரிதும் பேசப்பட்டது. பஞ்சமி நில அரசியலை முன்வைத்து பேசிய இப்படம் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்து 100 கோடி ரூபாய்க்கு மேல் […]
அசுரன் படம் பார்த்துவிட்டு படக்குழுவினருக்கு மகேஷ் பாபு தனது பாரட்டுகளை சமூக வலைதளம் மூலமாகத் தெரிவித்துள்ளார். தனுஷ் – வெற்றிமாறன் கூட்டணியில் நான்காவது படமாக சமீபத்தில் வெளியான படம் அசுரன். பிரபல எழுத்தாளர் பூமணியின் ”வெக்கை” நாவலை அடிப்படையாகக் கொண்டு அமைந்துள்ள இந்தப் படம், ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இதில் மஞ்சு வாரியார், அம்மு அபிராமி, பசுபதி, பாலாஜி சக்திவேல், கென் கருணாஸ் உள்ளிட்டோரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். திரைத்துறை பிரபலங்களும் அரசியல் கட்சித் தலைவர்களும் […]
தெலுங்கு திரைப்பட நகைச்சுவை நடிகர் வேணு மாதவ் உடல்நலக் குறைவால் காலமானார். தெலுங்கு திரைப்பட நகைச்சுவை நடிகர் வேணு மாதவ் உடல்நலக் குறைவால் காலமானார். 39 வயதான வேணு மாதவ் கடந்த 3 ஆண்டுகளாக சிறுநீரக கோளாறு காரணமாக அவதிப்பட்டு வந்துள்ளார். இந்நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த வேணு மாதவ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். நகைச்சுவை நடிகர் வேணு மாதவ் தெலுங்கில் போக்கிரி, ருத்ரமாதேவி, பிருந்தாவனம் உட்பட 600-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். தமிழிலும் ‘என்னவளே’, ‘காதல் சுகமானது’ உள்ளிட்ட ஒரு சில படங்களில் நடித்துள்ளார். இவரது மறைவுக்கு […]
சமீர் இயக்கத்தில், விஜய் தேவரகொண்டா தயாரிக்கும் படத்தில் சின்னத்திரை ஹிரோயின் நாயகியாக நடித்துள்ளார். சின்னத்திரையின் நயன்தாரா என்று அழைக்கப்படும் வாணிபோஜன் விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘ஆஹா’ சீரியலில் மூலம் அறிமுகமானார். பின்னர் ‘தெய்வமகள்’ சீரியலில் நடித்தார். இந்த சீரியலின் மூலம் பிரபலமானார். இந்நிலையில் வாணி தற்போது தெலுங்கில் விஜய் தேவரகொண்டா தயாரிக்கும் படத்தில் ஹீரோயினாக நடிக்கவுள்ளார். சமீர் இயக்கம் இப்படத்தில் தருண் பாஸ்கர் இப்படத்தில் நாயகனாக நடிக்கிறார். இது குறித்து வாணி கூறுகையில் “தனக்கு தெலுங்கு மொழி சரியா தெரியாது என்றாலும் கூட படக்குழுவினர் […]