கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆனைமலையில் புகழ்பெற்ற மாசாணி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இன்று சந்திர கிரகணம் நடைபெற உள்ளதால் மதியம் 2 மணி முதல் கோவில் நடை அடைக்கப்படுகிறது. நாளை வழக்கம் போல கோவில் நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெறும் என கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர். இதேபோல் செஞ்சேரிமலையில் இருக்கும் புகழ்பெற்ற மந்திரகிரி வேலாயுத சுவாமி கோவில், பொள்ளாச்சி சுப்பிரமணிய சுவாமி கோவில், மாரியம்மன் கோவில் உள்ளிட்ட கோவில் நடையும் சந்திர கிரகணத்தை முன்னிட்டு இன்று […]
Tag: temple
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சிவபுரி பட்டியில் அமைந்துள்ள தர்மவர்ஷினி உடனுறை தான்தோன்றீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் தனி சன்னதியில் வடுகபைரவர் உள்ளார். இந்நிலையில் தேய்பிறை அஷ்டமி நாளான நேற்று வடுக பைரவருக்கு சிறப்பு பூஜை நடைபெற்றுள்ளது. முன்னதாக கோவில் முன்பு ரவி குருக்கள் தலைமையில் சிறப்பு யாக வேள்விகள், 21 வகையான சிறப்பு அபிஷேகம், விபூதி காப்பு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு தீபாராதனை நடைபெற்றுள்ளது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வடுகபைரவரை தரிசனம் செய்தனர்.
மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் ஆவணி திருவிழா நேற்று தொடங்கி 3 நாட்கள் நடக்க உள்ளது. நேற்று அதிகாலை 4.30 மணிக்கு கணபதி ஹோமம், காலை 6 மணிக்கு உற்சவ மூர்த்திக்கு பஞ்சாபிஷேகம், உஷபூஜை, பஜனை, சத்சங்கம் நடந்தது. தொடர்ந்து மதியம் 12 மணிக்கு உச்சபூஜை, மாலையில் சுமங்கலி பூஜை, மாலை 6.30 மணிக்கு சாயரட்சை தீபாராதனை, இரவு 8 மணிக்கு அத்தாழ பூஜை நடைபெற்றது. 13-ஆம் தேதி(இன்று) காலை 10 மணிக்கு பஜனை, 10.45 மணிக்கு […]
உலகிலேயே மிக உயரமான முருகன் சிலையுடன் கூடிய கோவிலுக்கு கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. சேலம் மாவட்டத்திலுள்ள புத்திரகவுண்டன்பாளையத்தில் மிக உயரமான முருகன் சிலையுடன் கூடிய கோவில் அமைந்துள்ளது. இங்கு வருகிற ஏப்ரல் மாதம் 6-ஆம் தேதி கும்பாபிஷேகம் நடத்துவதற்கு தேவையான ஏற்பாடுகள் நடைபெறுகிறது. இங்குள்ள முருகன் சிலை 146 அடி உயரம் கொண்டதாகும். இந்த முருகன் சிலையை தரிசனம் செய்வதற்காக ஹெலிகாப்டர் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மலேசிய நாட்டின் பத்துமலையில் இருக்கும் முருகன் சிலை 140 அடி உயரம் […]
தபால் மூலம் பழனி முருகன் கோவிலின் பிரசாதத்தை வீட்டிலிருந்தே பெற்று கொள்ள புதிய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள தலைமை தபால் நிலைய முதல்நிலை அஞ்சல் அதிகாரி ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் பழனி முருகன் கோவில் நிர்வாகம் தபால் துறையுடன் ஒரு ஒப்பந்தத்தை ஏற்படுத்தி இருப்பதாக தெரிவித்துள்ளார். அந்த ஒப்பந்தத்தின்படி கொரோனா காலகட்டங்களில் பக்தர்கள் கோவிலுக்கு செல்ல முடியாத காரணத்தால் தங்களது வீடுகளில் இருந்தே பழனி பஞ்சாமிர்தம், ராஜ அலங்கார திருவுருவப்படம், விபூதி […]
மொபட் மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள ஐயங்கார் குளம் பகுதியில் மங்கையற்கரசி என்பவர் வசித்து வருகிறார். அதே பகுதியில் இவருக்கு உறவினரான மைதிலி என்ற பெண்ணும் வசித்து வந்துள்ளார். இவர்கள் இருவரும் மொபட்டில் கோவிலுக்கு சென்றுவிட்டு, வீடு திரும்பி உள்ளனர். இந்நிலையில் இவர்களது மொபட் ஐயங்கார்குளம்-மோரணம் சாலையில் சென்று கொண்டிருந்த போது, எதிர்பாராதவிதமாக பின்னால் வந்த மோட்டார் சைக்கிள் இவர்களின் மொபட்டின் மீது மோதி விட்டது. […]
கோவில் சுவரில் தலையை மோத செய்து தொழிலாளி அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்தில் உள்ள சொரத்தூர் பகுதியில் சிவகங்கை என்பவர் வசித்துவருகிறார். இவர் ஒப்பந்த தொழிலாளியாக என்.எல்.சி நிறுவனத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர் ஆவார். அப்பகுதியில் உள்ள மாரியம்மன் கோவிலில் விசேஷ பூஜைகள் நடைபெற்றதால் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்துள்ளனர். இந்நிலையில் கோவிலுக்கு சென்ற சிவகங்கை பூஜைகள் முடிந்த பின்னர் பக்தர்கள் அனைவரும் வீட்டிற்கு சென்ற பிறகு […]
வருகின்ற 25ஆம் தேதி ஆதிகேசவ பெருமாள் கோவிலில் புதிய கொடி மரம் நாட்டும் விழா நடைபெறுகிறது. கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆதிகேசவபெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவில் ஆலயம் 13 மலைநாட்டுத் திருப்பதிகளில் ஒன்றாகவும், 108 வைணவ தலங்களில் ஒன்றாகவும் சிறப்பு பெற்றது. இந்த கோவிலில் கும்பாபிஷேகம் நடந்து 416 ஆண்டுகள் ஆன நிலையில் இந்து சமய அறநிலையத் துறையும், பக்தர்கள் சங்கமும் இணைந்து இக்கோவிலுக்கு கும்பாபிஷேகம் நடத்த முயற்சி செய்து வருகின்றனர். இதன் முதற்கட்டமாக கடந்த 2007ஆம் […]
திருப்பதியில் மீண்டும் சுப்ரபாத சேவையானது வருகின்ற 15ஆம் தேதி வெள்ளிக்கிழமை அதிகாலை முதல் துவங்க உள்ளதாக தேவஸ்தான அதிகாரிகள் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆந்திர மாநிலத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோவிலில் அதிகாலை வேளையில் சுப்ரபாத சேவை நடைபெறும். ஆனால் இந்த சேவையானது மார்கழி மாதத்தில் மட்டும் ரத்து செய்யப்பட்டு அதற்கு பதிலாக தமிழில் ஆண்டாள் அருளிய திருப்பாவை பாசுரங்கள் பாராயணம் செய்யப்பட்டு வருகின்றது. இந்நிலையில் வருகின்ற புதன் கிழமை மார்கழி மாதமானது நிறைவு பெற்றாலும் வியாழக்கிழமை அன்று […]
கோவில் பணியாளர்களுக்கு பொங்கலுக்காக 1000 ரூபாயை வழங்குவதாக இந்து சமய அறநிலையத்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் பிரபாகரன் ஒரு சுற்றறிக்கை வெளியிட்டுள்ளார், அதில் திருக்கோவில் பணியாளர்களுக்கு ரூபாய் 1000 பொங்கல் கருணை கொடையாக வழங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதோடு பகுதி நேரம், முழு நேரம், தொகுப்பூதியம், தினக்கூலி பணியாளர்கள் உட்பட முதுநிலை அல்லாத மற்றும் முதுநிலையில் உள்ள அனைத்து திருக்கோவில் பணியாளர்களுக்கும் இந்த கருணை கொடை தொகையை வழங்க […]
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு 2 அடி உயரமுள்ள 50 3/4 பவுன் மதிப்பிலான தங்கம் காணிக்கையாக வழங்கப்பட்டது ஆண்டு தோறும் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு சென்று ஏராளமான பக்தர்கள் முருகரை தரிசித்து வருவது வழக்கம். இந்நிலையில் சென்னை சேத்துப்பட்டு ஜி ஸ்கொயர் பில்டர்ஸ் நிறுவனம் சார்பில் சுப்ரமணிய சுவாமிக்கு 50 முக்கால் பவுன் மதிப்பிலான இரண்டடி உயரமுள்ள தங்கவேல் காணிக்கையாக செலுத்தப்பட்டது. அப்போது ஓய்வு பெற்ற கால்நடைத்துறை உதவி இயக்குனர் பாலசுப்பிரமணிய ஆதித்தன், உதவி […]
கோவில் உண்டியலை உடைத்து திருடிய 2 வாலிபர்களைப் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். நாமக்கல் மாவட்டத்தில் உள்ள வரகூராம்பட்டியில் தண்ணீர் பந்தல் முனியப்பன் கோவில் உள்ளது. அந்த கோவிலில் கடந்த 29ஆம் தேதி இரவு உண்டியலை உடைத்து பணம் திருடப்பட்டது. இச்சம்பவம் குறித்து கோவிலில் பொருத்தப்பட்டிருந்த இரண்டு கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து பார்த்தபோது அதில் இரண்டு வாலிபர்கள் உண்டியலை உடைத்து பணத்தை திருடும் காட்சி பதிவாகியுள்ளது. இதனையடுத்து திருச்செங்கோடு ரூரல் காவல் நிலையம் புகார் […]
புத்தாண்டு நாளான இன்று திருச்செந்தூர் கோவில் கடற்கரையில் பக்தர்கள் குளிக்க தடை விதிக்கப்பட்டதால் கடற்கரை வெறிச்சோடி காணப்பட்டது தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆண்டுதோறும் ஆங்கில புத்தாண்டு தினத்தன்று லட்சக்கணக்கான பக்தர்கள் புனித கடலில் நீராடிவிட்டு முருகனை தரிசித்து செல்வார்கள். தமிழ் மாதம் மார்கழி முதல் நாளிலிருந்து தினமும் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை மட்டுமே பக்தர்கள் சாமியை தரிசனம் செய்வதற்கு அனுமதிக்கப்படுகின்றனர். இதனைத் தொடர்ந்து ஆங்கிலப் புத்தாண்டான […]
தஞ்சாவூர் மாவட்டம் சிதம்பரம் நடராஜர் கோவில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவில். அந்தக் கோவில் மிகப் பிரபலமடைந்ததற்கான முக்கியகாரணம் கோவில்களில் அவ்வபோது மர்மமான, பிரமிக்க வைக்க கூடிய சில சம்பவங்கள் நடக்கும். முற்றிலும் மர்ம முடிச்சுக்களை அதிகம் கொண்டிருக்கும் கோவிலாக இருப்பதால் அதன் மீது பக்தர்கள் மற்றும் தமிழக மக்களுக்கு கவனம் அதிகமாக இருக்கும். இந்நிலையில், சிதம்பரம் நடராஜர் கோவிலில் வடக்கு கோபுரத்தில் உள்ள பன்னிரண்டு கலசங்களில் ஒன்றைக் காணவில்லை என்ற புகைப்படம் சமூக வலைதளங்களில் சமீபத்தில் […]
பழனி முருகனை தரிசிக்க விரும்பும் பக்தர்கள் முன்பதிவு செய்ய வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளனர். கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக மத்திய மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். இதனுடைய பாதிப்பை கட்டுப்படுத்த ஊரடங்கு பல கட்டமாக தொடர்ந்து அமலில் இருந்ததால், கோவில்கள் அனைத்தும் மூடப்பட்டிருந்தன. தற்போது படிப்படியாக தளர்வுகள் ஏற்பட்டு வருவதை தொடர்ந்து, மத வழிபாடுகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி, மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் காலை 6 மணி முதல் மதியம் 12.30 […]
புதுச்சேரியில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பானது அதிகரித்து வருகிறது. இதுவரை 51 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா வைரஸ் பரவலை தடுக்க மே 1ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவானது நீடிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் புதுச்சேரியில் ஜூன் 1 முதல் வழிபாட்டு தலங்களில் பொதுமக்கள் வழிபட அனுமதிக்க வேண்டும் என பிரதமர் மோடிக்கு புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி கடிதம் எழுதியுள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்னர் இந்து முன்னணி சார்பில் கோவில்களை திறக்க வேண்டும் என […]
சென்னையில் உள்ள பிரபல கோயில்களில் ஆதரவற்றோர்களுக்கும், சாலையோரம் வசிக்கும் மக்களுக்கும் உணவு தயாரிக்கப்பட்டு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. கொரோனா பாதிப்புகளை தடுக்க நாடு முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன்படி, பொதுமக்கள் தங்கள் வீட்டுக்குள்ளேயே முடங்கி இருக்கின்றன. இந்நிலையில் அத்தியாவசிய பொருட்களை மட்டுமே வாங்க மக்கள் வெளியே சென்று வருகின்றனர். இவ்வாறு இருக்கையில் முதியோர், வீடுகளின்றி தவிக்கும் ஆதரவற்றவர்களுக்கு உணவு கிடைப்பதில் இக்காலகட்டத்தில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதை உணர்ந்த சில தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் அவர்களுக்கு […]
கோவிலில் பிச்சை எடுத்தவர் 8 லட்சத்தை அந்த கோவிலுக்கு நன்கொடையாக கொடுத்தது அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது ஆந்திர மாநிலத்தை சேர்ந்த யாதி ரெட்டி என்பவர் சாய்பாபா கோயில் முன்பு சுமார் ஏழு ஆண்டுகளாக பிச்சை எடுத்து வந்துள்ளார். இந்நிலையில் திடீரென கோவிலுக்கு ரூபாய் எட்டு லட்சத்தை அவர் நன்கொடையாக வழங்கினார். இதுகோவிலை சேர்ந்தவர்கள் மனதிலும் அக்கம் பக்கத்திலிருந்த மக்கள் மனதிலும் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. இதுகுறித்து அவரிடம் கேட்டபோது “40 ஆண்டுகளாக ரிக்ஷ ஒட்டிக்கொண்டிருந்த நான் எனது […]
பலருக்கு குல தெய்வம் யார் என்பது ஏன் தெரியாமல் உள்ளது? இதற்குக் காரணம் பூர்வ ஜென்மத்தில் ஏற்பட்ட சாபம் அல்லது முன்னோர்கள் செய்த அலட்சியமே காரணம் . முன்னர் எல்லாம் வீட்டில் உள்ள பெரியவர்கள் தமது மகன்களுக்கு தாம் வணங்கும் குல தெய்வம் யார், அந்த ஆலயம் எங்கு உள்ளது என்பதைக் கூறுவார்கள். சில வருடங்களுக்கு ஒரு முறையாவது தமது குல தெய்வ ஆலயத்துக்கு சென்று பூஜித்து விட்டு வருவார்கள். வீடுகளில் குல தெய்வ உண்டியல் இருக்கும். […]
சாதாரணமாக ஏழேழு ஜென்மங்களுக்கும் குலதெய்வம் குடும்பங்களைக் காப்பாற்றும் என்பது பெரிய நம்பிக்கை. ஏழேழு ஜென்மம் என்பது 7×7 அதாவது 49 ஜென்ம ஆண்டுகள் என்பது ஒரு கணக்கு. 49 என்பதின் கூட்டுத் தொகை 4+9 = 13 . இந்த எண்தான் ஒருவருடைய வம்சத்தை நிர்ணயிக்கும் முக்கியமான எண். ஒருவர் இறந்து விட்டால் பதிமூன்றாம் நாள் அன்று கிரேக்கியம் என்ற நல்ல காரியத்தை செய்வது பழக்கம். அன்றுதான் உடலை விட்டு வெளியேறிய ஆத்மா சொர்கத்தை அடைகின்றது என்று […]
செம்மையான மனதினைப் பெறுவதற்காகத் தான் தினந்தோறும் “திருக்கோவில் வழிபாடு அவசியம்” என ரத்தினச் சுருக்கமாய் பெரும் மகத்துவத்தை ஆன்றோர்கள் சொல்லி வைத்துள்ளார்கள். பழமையான & புராதனமான (முறைப்படி பூஜை நடைபெற்றுவரும்) திருக்கோவில்களில்=அதுவும் சித்தர்கள் அருளிய அல்லது ஜீவசமாதி அடைந்த கோவில்களில் மிகுதியான பிரபஞ்ச சக்தி (காந்த சக்தி) இருக்கும் இந்த தெய்வீக சக்தி பல அரிய ஆற்றல்களை கொண்டது. இது ஆத்ம பலத்தினை தரவல்லது. இயன்றளவு கோவில்களுக்கு அடிக்கடி செல்வதன் மூலம் நமது மூளையின் நரம்பு மண்டலங்கள் […]
சிம்மம் ராசி அன்பர்களே, இன்று ஆசைகள் நிறைவேற ஆலய வழிபாட்டை நீங்கள் கண்டிப்பாக மேற்கொள்ளவேண்டும். எதையும் ஒரு முறைக்கு, பல முறை யோசித்து செய்யுங்கள். நண்பர்கள் வழியில் மாற்றம் ஏற்படும்.பயணங்களில் கொஞ்சம் கவனமாக இருங்கள். உடல் நோய்கள் நீங்கி ஆரோக்கியத்தை கொடுக்கும். மனக்குழப்பம் நீங்கும். ஆனால் பிறருடன் பழகும் பொழுது நிதானம் இருக்கட்டும். தொழில் வியாபாரம் முன்னேற்றம் இருக்கும். தொழில் தொடர்பான காரியங்கள் வெற்றியை கொடுக்கும். பொருளாதாரத்தில் முன்னேற்றம் இருக்கும். பழைய பாக்கிகளை வசூலிப்பதில் வேகம் இருக்கும். […]
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் பக்தர்கள் செலுத்திய உண்டியல் காணிக்கை ரூபாய் ஒரு கோடியே 33 லட்சத்து 535 ரூபாய் ஆகும். தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் உண்டியல் எண்ணும் பணி நேற்று கோவிந்தம்மாள் திருமண மண்டபத்தில் வைத்து நடைபெற்றது. இந்த பணியை கோவில் செயலாளர் தலைமை தாங்கி பார்வையிட்டார். இதில் குரு குலதெய்வ பாடசாலை உழவார பணி குழுவினர் மற்றும் கோவில் பணியாளர்கள் உண்டியல் எண்ணும் பணியில் ஈடுபட்டனர். அப்போது […]
பெப்ரவரி 14 காதலர்கள் யாரும் கோவிலிற்குள் செல்ல அனுமதி இல்லை என அர்ஜுன் சம்பத் தெரிவித்துள்ளார். பெப்ரவரி 14 நாடு முழுவதும் காதலர் தினத்தை கொண்டாட காத்திருக்கும் நிலையில் தஞ்சை பெரிய கோவிலிற்க்கு பிரார்த்தனை செய்ய வந்திருந்த இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத் செய்தியாளர்களிடம் கூறியதாவது, “வருகிற 14ம் தேதி காதலர் தினம் கொண்டாடும் காதலர்கள் யாரையும் பெரிய கோவில் மட்டுமின்றி எந்த கோவிலுக்குள் அனுமதிக்க கூடாது. அதுமட்டுமில்லாமல் காதலர் தினத்தை பொது இடங்களில் […]
தஞ்சை பெரிய கோவிலில் குடமுழுக்கு விழாவை தமிழில் நடத்தக்கூடிய வழக்கின் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. திருமுருகன், மணியரசன், செந்தில்நாதன் உள்ளிட்ட பலர் தஞ்சை பெரிய கோவில் குடமுழுக்கு விழாவில் தமிழில் தேவாரம் திருவாசகம் ஆகியவை உச்சரித்து குடமுழுக்கு நடத்த வேண்டுமென்று வழக்கு தொடர்ந்தனர்.மேலும் மனுதாரர்கள் சார்பில் வைக்கப்பட்ட வாதத்தில் குடமுழுக்கு விழாவிற்காக அச்சிடப்பட்ட அழைப்பிதழில் தமிழ் மொழிக்கு முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை. இதை ஏற்க முடியாது என்றும் சொல்லப்பட்டது. இதனையடுத்து இந்து சமய அறநிலைத்துறை சார்பில் குடமுழுக்கு நடைபெறும் […]
தஞ்சை பெரிய கோவிலில் குடமுழுக்கு விழாவை தமிழில் நடத்தக்கூடிய வழக்குகளில் இன்று தீர்ப்பு வழங்கப்பட இருக்கின்றது. திருமுருகன், மணியரசன், செந்தில்நாதன் உள்ளிட்ட பலர் தஞ்சை பெரிய கோவில் குடமுழுக்கு விழாவில் தமிழில் தேவாரம் திருவாசகம் ஆகியவை உச்சரித்து குடமுழுக்கு நடத்த வேண்டுமென்று வழக்கு தொடர்ந்தனர்.மேலும் மனுதாரர்கள் சார்பில் வைக்கப்பட்ட வாதத்தில் குடமுழுக்கு விழாவிற்காக அச்சிடப்பட்ட அழைப்பிதழில் தமிழ் மொழிக்கு முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை. இதை ஏற்க முடியாது என்றும் சொல்லப்பட்டது. இதனையடுத்து இந்து சமய அறநிலைத்துறை சார்பில் குடமுழுக்கு […]
தஞ்சை பெரிய கோவிலில் குடமுழுக்கு விழாவை தமிழில் நடத்தக்கூடிய வழக்குகளில் நாளை தீர்ப்பு வழங்கப்பட இருக்கின்றது. திருமுருகன், மணியரசன், செந்தில்நாதன் உள்ளிட்ட பலர் தஞ்சை பெரிய கோவில் குடமுழுக்கு விழாவில் தமிழில் தேவாரம் திருவாசகம் ஆகியவை உச்சரித்து குடமுழுக்கு நடத்த வேண்டுமென்று வழக்கு தொடர்ந்தனர்.மேலும் மனுதாரர்கள் சார்பில் வைக்கப்பட்ட வாதத்தில் குடமுழுக்கு விழாவிற்காக அச்சிடப்பட்ட அழைப்பிதழில் தமிழ் மொழிக்கு முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை. இதை ஏற்க முடியாது என்றும் சொல்லப்பட்டது. இதனையடுத்து இந்து சமய அறநிலைத்துறை சார்பில் குடமுழுக்கு […]
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே 4 ஆயிரம் கிலோ கறியுடன் பிரம்மாண்டமான அசைவ விருந்து நடைபெற்றது. ஓசூர் அருகே திம்மஞ்சந்திரம் கிராமத்தில் ஸ்ரீசப்பல் அம்பாள் கோவிலில் நடைபெற்ற திருவிழாவில் கறி விருந்து பரிமாறப்பட்டது. இதற்காக 60 ஆடுகள் ,2டன் கோழிக்கறி மற்றும் 1டன் வெண்பன்றி இறைச்சி வெட்டப்பட்டு சமைக்கப்பட்டன இதில் கேழ்வரகு களி அரிசி சாதம் ஆகியவற்றுடன் மூன்று வகைகளிலும் உணவு விருந்தாக பராமரிக்கப்பட்டது .ஓசூர் சுற்றுவட்டாரங்களில் 50 கிராமங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் இந்த கறி விருந்தில் […]
தஞ்சை பெரிய கோவிலில் வரும் பிப்ரவரி 5ஆம் தேதி குடமுழுக்கு நடைபெறுவதையொட்டி பர்மாவில் இருந்து கொடிமரம் வந்துள்ளது. 23 ஆண்டுகளுக்கு பிறகு தஞ்சை பெரிய கோயிலில் குடமுழுக்கு விழா வருகிற பிப்ரவரி 5ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த குடமுழுக்கு விழாவினை முன்னிட்டு தற்போது தஞ்சை பெரிய கோவிலில் பழைய கொடிமரம் அகற்றப்பட்டு புதிதாக கொடிமரம் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த கொடி மரமானது பர்மாவிலிருந்து கொண்டுவரப் பட்டுள்ளது. இதன் மதிப்பு சுமார் ஒன்பது லட்சத்துக்கும் அதிகமாக இருக்கும் என […]
சேலத்தில் பூட்டு முனியப்பன் கோவிலை இடிக்கப்போவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சேலம் அஸ்தம்பட்டி அருகே ஐயப்பன் திருமாளிகை பகுதியில் உள்ள பிரசித்திபெற்ற பூட்டு முனியப்பன் கோவிலில் எந்த பிரச்சனையாக இருந்தாலும் சரி மனதில் வேண்டிக்கொண்டு கோவிலில் பூட்டு போட்டு சென்றால் வேண்டியது நிறைவேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. அதுதான் அந்த கோவிலின் பெயர் காரணம். சேலம் மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த பொதுமக்கள் இந்த கோவிலுக்கு வந்து செல்கின்றனர். […]
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே முனியாண்டி கோயிலில் நடைபெற்ற மெகா பிரியாணி திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள வடக்கம்பட்டி முனியாண்டி சாமி கோயிலில் 85வது ஆண்டு பிரியாணி திருவிழா நடைபெற்றது. இந்த விழாவிற்கு தமிழகம் ஆந்திரா கேரளா உள்ளிட்ட மாநிலங்களிலிருந்து ஸ்ரீ முனியாண்டி விலாஸ் ஹோட்டல் நடத்திவரும் உரிமையாளர்கள் தங்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டனர். இதையொட்டி நடத்தப்பட்ட ஊர்வலத்தில் பெண்கள் தேங்காய் பழம் பூ தட்டுகளை தலையில் சுமந்தபடி […]
தமிழுக்கு கிடைத்தது அங்கீகாரம்….. தஞ்சை பெரிய கோவிலின் குடமுழுக்கு தமிழ் முறைபடி நடக்கவேண்டும் என ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ வலியுத்தியுள்ளார். அவரது அறிக்கையில் 1010-ஆம் ஆண்டு ராஜராஜ சோழனால் கட்டி முடிக்கப்பட்ட தஞ்சை பெரிய கோவிலில் இறுதியாக 1996 ஆம் ஆண்டு குடமுழுக்கு நடைபெற்றதாக தெரிவித்துள்ளார். 23 ஆண்டுகளுக்கு பிறகு இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் நடைபெறவுள்ள குடமுழுக்கை தமிழ் முறைப்படி நடக்க வேண்டும் என தஞ்சை பெரிய கோவில் உரிமை மீட்புகுழு கோரிக்கை விடுத்து இருப்பதையும் […]
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் மீண்டும் நாளை முதல் சுப்ரபாத சேவை தொடங்க உள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தினமும் அதிகாலை 3 மணிக்கு சுப்பிரபாதம் பாடி சாமியை துயிலெழுப்பி, அதன்பின் பூமாலை அர்ச்சனை உள்ளிட்ட சேவைகளை தேவஸ்தனம் நடத்தி வருகிறது. மார்கழி மாதத்தில் மட்டும் சுப்பிரபாதத்திற்கு பதிலாக ஆண்டாள் பாடிய திருப்பாவை பாசுரங்கள் பாடப்படுவது வழக்கம். அதன்படி டிசம்பர் 17 முதல் திருமலையில் சுப்ரபாத சேவை நிறுத்தப்பட்டு திருப்பாவை பாசுரங்கள் பாடப்பட்டு வருகின்றன. இன்று போகி பண்டிகையுடன் […]
கோவில் உண்டியலை உடைத்து மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே கீழையூரில் உள்ள பழமை வாய்ந்த வீரட்டானேஸ்வரர் கோவிலில் நேற்று இரவு புகுந்த மர்ம நபர்கள் ஜன்னல் கம்பிகளை அறுத்து கோவிலில் உள்பகுதிக்குள் நுழைந்துள்ளனர் .பின்னர் அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களை உடைத்த கொள்ளையர்கள் அங்குள்ள 4 உண்டியல்களின் பூட்டை உடைத்து அதிலிருந்து சுமார் 3 லட்சம் ரூபாயை கொள்ளையடித்துச் சென்றிருக்கிறார்கள். காலையில் வழக்கம்போல் கோவிலை திறக்க வந்த […]
சபரிமலையின் கோவில் வருமானம் 100கோடி ரூபாயை தாண்டியுள்ளது. சபரிமலை ஐயப்பன் கோவில் கடந்த மாதம் 16ம் தேதி மண்டல பூஜைக்காக நடை திறக்கப்பட்டது. கோவில் நடை திறக்கப்பட்ட நாளில் இருந்து பல்லாயிரம் கணக்கான மக்கள் வந்த வண்ணம் உள்ளனர். இதனால் கடந்த ஆண்டுகளை வீட இந்த ஆண்டுகள் இந்த ஆண்டுகளின் வருவாய் கணிசமாக அதிகரித்துள்ளது . கடந்த ஆண்டு 60கோடியாக இருந்த ஆண்டு வருவாயை இந்த ஆண்டு 100 கோடி ரூபாயை எட்டியுள்ளதாக கோவில் நிறுவனத்தினர் தெரிவித்துள்ளனர் […]
கோயிலுக்கு பால் ஏற்றி வந்த லாரியின் பின்பக்க சக்கரத்தில் விழுந்து பக்தர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அங்கு உள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு அபிஷேகம் செய்வதற்காக பால் ஏற்றி வந்த லாரியின் பின்பக்க சக்கரத்தின் முன்பு 45 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் திடீரென படுத்தார் . அடுத்த சில நொடிகளில் சக்கரம் ஏறியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.இந்நிலையில் இறந்தவர் யார்? எதற்காக இந்த முடிவை மேற்கொண்டார்? என்று […]
மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் மழை பெய்து வருவதால், சதுரகிரி கோயிலுக்குச் செல்ல வனத்துறை தடை போட்டுள்ளதால், ஏராளமான பக்தர்கள் ஏமாற்றத்துடன் காத்திருக்கின்றனர். விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிப்புத்தூர் அருகே உள்ள சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயில் தரையிலிருந்து சுமார் 4500 அடி உயரத்தில் உள்ளது. இந்தக் கோயிலுக்கு பிரதோஷம் மற்றும் அமாவாசையை முன்னிட்டு, பக்தர்கள் நான்கு நாட்கள் செல்ல வனத்துறை அனுமதி அளித்திருந்தது. இந்நிலையில் பிரதோஷத்தை முன்னிட்டு, தமிழ்நாட்டின் பல்வேறு பகுதியிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகை தந்தனர். […]
அத்திவரதர் வைபவத்தில் கலந்து கொண்ட திருவள்ளூர் மாவட்ட காவல்துறைக்கு 2 நாட்கள் விடுமுறையை அறிவித்து மாவட்ட SP உத்தரவிட்டுள்ளார். காஞ்சிபுரத்தில் புகழ்பெற்ற கோவிலாக விளங்கும் வரதராஜ பெருமாள் 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை 46 நாட்கள் அத்திவரதர் வைபவம் நடைபெறும். இங்குள்ள அனந்தசரஸ் குளத்துக்குள் இருந்து 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை அத்திவரதர் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளிப்பார்.இந்த வைபவ நிகழ்ச்சி கடந்த ஜூலை மாதம் 1_ஆம் தேதி முதல் நடைபெற்று வந்தது. முதல் 31 நாட்கள் ( ஜூலை 31) […]
அத்திவரதர் வைபவம் நேற்றோடு நிறைவடைந்த நிலையில் இன்று அத்திவரதர் அனந்தசரஸ் குளத்துக்குள் செல்கின்றார். காஞ்சிபுரத்தில் புகழ்பெற்ற கோவிலாக விளங்கும் வரதராஜ பெருமாள் 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை 46 நாட்கள் அத்திவரதர் வைபவம் நடைபெறும். இங்குள்ள அனந்தசரஸ் குளத்துக்குள் இருந்து 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை அத்திவரதர் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளிப்பார்.இந்த வைபவ நிகழ்ச்சி கடந்த ஜூலை மாதம் 1_ஆம் தேதி முதல் நடைபெற்று வந்தது. முதல் 31 நாட்கள் ( ஜூலை 31) வரை சயன கோலத்தில் […]
அத்திவரதர் தரிசனம் நாட்களை நீடிக்க கோரிய பொதுநல வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ்நாடு இந்து மகாசபை சார்பிலும் , மற்றொருவர் தரப்பிலும் இரண்டு பொதுநல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது.அதில் அத்திவரதர் தரிசனத்தை மேலும் 48 நாட்கள் நீடிக்க வேண்டும் என்றும் , 48 நாட்கள் மட்டும் தான் அத்திவரதரை தரிசிக்க வேண்டுமென்றஆகமவிதி ஏதும் இல்லாத நிலையில் அதை நீட்டிக்கலாம் என்றும் , மற்றொரு வழக்கில் தனக்கான வழிபாட்டு உரிமை பாதிக்கப்பட்டிருப்பதாகவும், அனைவரும் தரிசிக்கும் முறை […]
அத்திவரதர் தரிசனத்தை மேலும் நீடிக்க முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் அத்திவரதர் தரிசனம் ஜூலை 1_ஆம் தேதி முதல் நடைபெற்று வருகின்றது. 45 நாட்கள் நடைபெறும் இந்த தரிசனத்தை மேற்கொள்ள தமிழகம் மட்டுமில்லாமல் இந்தியா முழுவதும் உள்ள லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசித்து செல்கின்றனர். அத்திவரதர் தரிசனம் இன்னும் மூன்று நாட்கள் மட்டுமே இருப்பதால் கட்டுக்கடங்காத கூட்டம் இருந்து வருகின்றது.வருகின்ற 17-ஆம் தேதி முதல் அத்திவரதர் மீண்டும் குளத்தில் வைக்கப்பட இருக்கின்ற சூழலில் அத்திவரதர் தரிசனத்தை […]
அத்திவரதர் தரிசனத்தை மேலும் 48 நாட்களுக்கு நீட்டிக்க வேண்டுமென்று சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் அத்திவரதர் தரிசனம் ஜூலை 1_ஆம் தேதி முதல் நடைபெற்று வருகின்றது. 45 நாட்கள் நடைபெறும் இந்த தரிசனத்தை மேற்கொள்ள தமிழகம் மட்டுமில்லாமல் இந்தியா முழுவதும் உள்ள லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசித்து செல்கின்றனர். அத்திவரதர் தரிசனம் இன்னும் மூன்று நாட்கள் மட்டுமே இருப்பதால் கட்டுக்கடங்காத கூட்டம் இருந்து வருகின்றது.வருகின்ற 17-ஆம் தேதி முதல் அத்திவரதர் மீண்டும் குளத்தில் வைக்கப்பட இருக்கின்ற சூழலில் […]
அத்திவரதர் வைபவ நிகழ்ச்சி நடைபெறும் 3 நாட்கள் காஞ்சிபுரம் நகர பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை விடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. காஞ்சீபுரம் மாவட்டத்தில் உள்ள வரதராஜபெருமாள் கோவிலில் இருக்கும் வசந்த மண்டபத்தில் கடந்த ஜூலை 1_ஆம் தேதி முதல் அத்திவரதர் பக்தர்களுக்கு காட்சியளித்து வருகிறார். முதல் நாளிலிருந்தே அத்திவரதரை தரிசிக்க பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த லட்சக்கணக்கான மக்கள் வரிசையில் காத்து கிடந்து அத்திவாரத்தாரை வழிபட்டு வருகின்றனர்.இந்நிலையில் வருகின்ற 13-ஆம் தேதி முதல் 16_ஆம் தேதி வரை அத்திவரதர் வைபவம் நிகழ்ச்சி நடைபெற இருக்கின்றது. இதற்காக […]
புதுச்சேரியில் வில்லியனூர் திருக்காமீஸ்வரர் கோவில் தேரோட்டத்தில் முதல் அமைச்சர் நாராயணசாமி கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்து தொடங்கி வைத்தார். புதுச்சேரியில் 12 நாட்கள் நடைபெறும் பழமை வாய்ந்த வில்லியனூர் திருக்காமீஸ்வரர் கோவில் திருவிழா அப்பகுதியில் மிகவும் பிரபலமானது. கடந்த ஜூலை 25ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய இவ்விழாவின் முக்கிய நிகழ்வான ஆடிப்பூரத் திருவிழா இன்று நடைபெற்றது. இதில் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி கலந்துகொண்டார். பின் சுவாமி தரிசனம் செய்த அவர் தேரை வடம்பிடித்து இழுத்து […]
மதுரையில் பழங்கால கோவில் இருந்த இடம் தெரியாமல் அதன் மேல் கட்டம் கட்டிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது . மதுரையில் பழங்காநத்தம் ரவுண்டானம் அருகே குடியிருப்பு பகுதிகள் மற்றும் ஏராளமான கடைகள் உள்ளன. இங்கு ஒரு கடையை அதன் உரிமையாளர் இடித்து விட்டு புதிதாக கட்டிடம் கட்டும் பணியில் ஈடுபட்டார் . இதற்கிடையில் அதன் அருகே கோயில் மண்டபம் போன்ற சுவடுகள் காணப்பட்டதால் , இதுபற்றி தகவலறிந்த அப்பகுதி மக்களும், சிவனடியார்களும் அங்கு சென்று பார்த்தபோது பராமரிப்பில்லாத […]
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நாளை ஆலிவர ஆச்சாரம் நடைபெற உள்ளதையொட்டி பக்தர்கள் மாலை 5 மணி வரை மட்டுமே அனுமதிக்கப்படவுள்ளனர் . திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நாளை ஆலிவர ஆச்சாரம் நடைபெற உள்ளதையொட்டி கோவிலை சுத்தப்படுத்தும் பணிகள் நடைபெற்றன.கருவறை,ஆனந்த நிலையம்,பகல வடா சன்னதி,யோக நரசிம்மர் சன்னதி மற்றும் வரதராஜ சுவாமி சன்னதி உள்ளிட்ட அனைத்து இடங்களும் தண்ணீரால் சுத்தம் செய்யப்பட்டு,பச்சை கற்பூரம்,மஞ்சள்,குங்குமம் உள்ளிட்ட மூலிகை கலவைகள் அனைத்து இடங்களிலும் தெளிக்கப்பட்டன.இதையடுத்து கோவில் திருமஞ்சனத்தை ஒட்டி இன்று சர்வ தரிசனம்,திவ்ய தரிசனம், குழந்தையுடன் பெற்றோர்கள் செல்லும் தரிசனம், […]
காஞ்சிபுரம் அத்திவரதரை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இன்று வழிபட இருப்பதையடுத்து கோவிலை சுற்றி 3 அடுக்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் வரதராஜப் பெருமாள் கோவிலில் அத்திவரதர் உற்சவம் நடைபெற்று வருகிறது. நாளுக்கு நாள் அத்திவரதரை காண வரும் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து கொண்டே செல்கிறது. இதுவரை 11,20,000 பேர் அத்திவரதரை வழிபட்டு சென்றுள்ளதாக புள்ளிவிவர தகவல் வெளியாகியுள்ளது.இந்நிலையில் அத்திவரதரை தரிசிக்க குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இன்று வருகை தர இருக்கிறார். இதனை முன்னிட்டு கோவிலைச் சுற்றி […]
அத்திவரதரின் 8ஆம் நாள் வைபவதில் இளஞ்சிவப்பு பட்டாடையில் பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார். காஞ்சிபுரம் மாவட்டத்தில் அத்திவரதரின் வைபவ நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. 48 நாட்கள் மட்டுமே நடைபெறும் அத்திவரதர் உற்சவதின் எட்டாம் நாளான இன்று அத்திவரதர் இளஞ்சிவப்பு நிற பட்டாடை அணிந்து பக்தர்களுக்கு அருள் தருகிறார்.வழக்கம் போல் இன்று அதிகாலை 5 மணியளவில் கோயில் நடை திறக்கப்பட்டு அத்திவரதர், பொதுமக்களுக்கு காட்சியளித்து வருகிறார் . 40 வருடங்களுக்கு ஒரு முறை மட்டும் தரிசனம் கொடுக்கும் அத்திவரதரை காண சிறியவர்களில் இருந்து பெரியவர்கள் வரை அதிகமானோர் […]
சமயபுரம் மாரியம்மன் கோவிலில் பக்தர்களிடமும் மொட்டையடிக்க கூடுதலாக பணம் வசூலித்த 13 பேரை கோவில்நிர்வாகம் சஸ்பண்ட் செய்துள்ளது. தமிழகத்தில் மிகவும் பழமைவாய்ந்த மற்றும் சக்தி வாய்ந்த கோவிலாக சமயபுர மாரியம்மன் கோவில் மக்களால் பார்க்கப்படுகிறது . இக்கோவிலில் வருடம் தோறும் பல்லாயிரக்கணக்கான மக்கள் தங்களது நேர்த்தி கடனை செலுத்தி விட்டு செல்வது வழக்கம் .இதில் பெரும்பாலானோர் மொட்டையடித்து தங்களது நேர்த்தி கடனை செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் மொட்டை அடிக்க கூடுதல் பணம் வசூலிப்பதாக புகார் எழுந்துள்ளது.மொட்டை […]
அரசு பள்ளி சேதமடைந்ததால் கோவிலில் வைத்து கற்றுக்கொடுக்கப்படும் கல்வியை கற்க பருவமடைந்த மாணவிகளுக்கு அனுமதி இல்லை என்று கோவில் நிர்வாகம் கூறியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் கிளாக்குளம் கிராமப் பகுதியில் உள்ள அரசு பள்ளியில் அக்கிராமத்தைச் சேர்ந்த ஏராளமான மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்நிலையில் அரசு பள்ளி கூடம் மிகுந்த சேதமடைந்து இடிந்து விழும் நிலைக்கு தள்ளப்பட்டு இருந்தது. அதே பள்ளியறையில் வகுப்புகள் தொடர்ந்தால் ஏதேனும் அசம்பாவிதம் ஏற்பட்டு விடும் என்று அருகில் உள்ள […]