கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் புகழ்பெற்ற திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஐப்பசி மாத திருமூல மகோற்சவம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கோவில் மடாதிபதி ஜீயர் முன்னிலையில் மணவாளமா முனிகளுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமியை தரிசனம் செய்தனர்.
Tag: temple festival
ஈரோடு மாவட்டத்தில் உள்ள டி.மேட்டுப்பாளையம் பகுதியில் புகழ்பெற்ற பெரிய மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இங்கு நேற்று திருவிழா நடைபெற்றதால் 50-க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த ஆயிரகணக்கான பக்தர்கள் பொங்கல் வைத்தும், மாவிளக்கு எடுத்தும் அம்மனை வழிபட்டனர். இதனையடுத்து கோவிலில் நடைபெற்ற சிறப்பு பூஜைகளில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு நேர்த்தி கடனை செலுத்தியுள்ளனர். இந்த திருவிழாவிற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலைத்துறை ஆய்வாளர் நித்யா, பரம்பரை அறங்காவலர் மற்றும் கோவில் நிர்வாகிகள் சிறப்பாக செய்துள்ளனர்.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள வத்திராயிருப்பு பகுதியில் முத்தாலம்மன் கோவில் அமைந்துள்ளது. இங்கு கடந்த 5- ஆம் தேதி இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு தேரோட்ட விழா சிறப்பாக தொடங்கியது. நேற்று முன்தினம் சிறப்பு அலங்காரத்தில் முத்தாலம்மன் தேரில் அமர்ந்திருந்தார். அப்போது ஏராளமான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். இந்த விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமியை தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் சிறப்பாக செய்துள்ளனர்
கோவில் திருவிழா கொடி ஏற்றத்துடன் தொடங்கியது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள கோவில்பட்டியில் செண்பகவல்லி அம்மன் உடனுறை அருள்மிகு பூவன நாதசுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது. இங்கு கொடியேற்றத்தை முன்னிட்டு அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டது. இதனை அடுத்து சுவாமி மற்றும் அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடைபெற்ற பிறகு காலை 7 மணி முதல் 8 மணிக்குள் கொடியேற்றப்பட்டது. இன்று முதல் தொடங்கிய திருவிழா வருகிற 22-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. திருவிழாவில் 9-ஆம் நாள் […]
தூத்துக்குடி மாவட்டத்தில் புகழ்பெற்ற குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் அமைந்துள்ளது. இங்கு புரட்டாசி மாத பௌர்ணமியை முன்னிட்டு திருவிளக்கு பூஜை நடத்துவதற்காக காலை 6 மணிக்கு நடை திறக்கப்பட்டு 8 மணிக்கு கால சந்திப்பூஜை, மதியம் 12 மணிக்கு உச்சிக்கால பூஜை, மாலை 5.30 மணிக்கு சாயரட்சை பூஜை நடைபெற்றுள்ளது. இந்நிலையில் இரவு 7:30 மணிக்கு 108 திருவிளக்கு பூஜை நடைபெற்ற பிறகு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றுள்ளது. இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு […]
திருவாரூர் மாவட்டத்தில் உள்ள மன்னார்குடி உப்புக்கார தெருவில் முத்து மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆவணி திருவிழா நடைபெற்று கொண்டிருக்கிறது. இந்நிலையில் விழாவின் 7-ம் நாள் திருவிழாவை முன்னிட்டு நேற்று முளைப்பாரி எடுத்து ஊர்வலமாக சென்று கோவிலில் வைத்து பெண்கள் அம்மனை வழிபாடு செய்தனர். முன்னதாக முளைப்பாரி மன்னார்குடி திருப்பாற்கடல் தெரு குளக்கரையில் இருந்து ஊர்வலமாக காந்தி ரோடு, கடைத்தெரு வழியாக கோவிலை அடைந்தது. பின்னர் முத்து மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற கிறிஸ்தவ ஆலயங்களில் ஒன்றான திருச்சிலுவைநாதர் ஆலயத்தில் 443-வது மகிமை திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. நேற்று காலையில் மணப்பாடு மறைவட்ட முதன்மை குரு ஜான் செல்வம் தலைமையில் திருப்பலி நடந்ததையடுத்து ஆலயம் முன்புள்ள கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டது. இந்த விழாவில் பங்குத்தந்தைகள் மனோ, ஜான் சுரேஷ், டென்னிஸ் வாய்ஸ், சில்வஸ்டர், டிமெல், பாலன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். தொடர்ந்து பதினோரு நாட்கள் தினமும் திருப்பலி, மறையுரை, நற்கருணை ஆசீர் நடக்கிறது. 9-ஆம் […]
ஆதிகேசவ பெருமாள் கோவிலில் நடைபெறும் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு 5 இடங்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள திருவட்டார் ஆதிகேசவபெருமாள் கோவிலில் சுமார் 418 ஆண்டுகளுக்கு பிறகு வருகிற 6-ஆம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. கடந்த 29-ஆம் தேதி முதல் கும்பாபிஷேக விழா தொடங்கி தினமும் பூஜைகள் நடந்து வருகிறது. இந்நிலையில் கோவிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் குலசேகரம், நாகர்கோவில், தக்கலை, மார்த்தாண்டம், அழகிய மண்டபம் ஆகிய […]
நந்தி நாதேஸ்வரர் ஆலயத்தில் மாசிமகம் கோலாகலமாக தொடங்கியுள்ளது. நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள வடக்கு பொய்கை நல்லூர் நந்தி நாதேஸ்வரர் ஆலயத்தில் வருடந்தோறும் மாசிமக பிரம்மோற்சவ விழா நடைபெறுவதுண்டு. அதேபோல் இந்த வருடமும் விக்னேஸ்வர பூஜையுடன் மாசிமக பிரம்மோற்சவ விழா சிறப்பாக தொடங்கியுள்ளது. இந்நிலையில் நந்தி நாதேஸ்வரர் ஆலயத்திலுள்ள கொடிமரத்தில் கொடி ஏற்றப்பட்டுள்ளது. இதனையடுத்து நந்தி நாதேஸ்வரருக்கு அபிஷேக, ஆராதனைகளும் நடைபெற்றது. இந்த விழாவில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் பெற்றுள்ளனர்.
உலகநாயகி அம்மன் சமேத லட்சுமிபுரீஸ்வரர் ஆலய குடமுழுக்கில் பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர். மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள திருநன்றியூர் கிராமத்தில் தருமபுரம் ஆதீனத்துக்கு சொந்தமான உலகநாயகி அம்மன் சமேத லட்சுமிபுரீஸ்வரர் ஆலயம் இருக்கிறது. அஸ்த நட்சத்திரத்திற்கு உரிய தலமான இந்த ஆலயத்தில் குடமுழுக்கை முன்னிட்டு கடந்த 20-ஆம் தேதி முதல் யாகசாலை பூஜைகள் நடைபெற்று வந்துள்ளது. இதனையடுத்து கோவில் விமான கலசத்தில் புனித நீர் ஊற்றப்பட்டு குடமுழுக்கு நடைபெற்றுள்ளது. இதில் பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை […]
மகா மாரியம்மன் கோவில் திருவிழாவானது விமர்சையாக நடை பெற்றுள்ளது. திருச்சி மாவட்டத்தில் கடந்த 10ஆம் தேதி பெரியார் நகரில் உள்ள மகா மாரியம்மன் கோவில் திருவிழா காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் துவங்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து மேளதாளங்கள் முழங்க காவிரி ஆற்றின் அய்யாளம்மன் படித்துறையில் இருந்து யானை மீது வைத்தபடியும், தலையில் சுமந்தபடியும் திரளான பக்தர்கள் அலகு குத்தியும், பால்குடம் எடுத்தும் கோவிலுக்கு ஊர்வலமாக சென்று உள்ளனர். இதனை தொடர்ந்து பக்தர்கள் கோவிலில் தீ மிதித்து தங்களது நேர்த்தி […]
மொண்டிபாளையம் பெருமாள் கோவில் தேரோட்டத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்து கோஷங்களை எழுப்பினர். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள கடந்த 21ஆம் தேதி மேல திருப்பதி என்று போற்றப்படும் மொண்டிபாளையம் ஸ்ரீதேவி, பூதேவி சமேத வெங்கடேச பெருமாள் கோவில் தேர் திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கி விட்டது. இந்த விழாவில் தினமும் சிறப்பு பூஜைகள், திருவீதி உலா என நிகழ்ச்சிகள் களைகட்டியது. இந்த விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக காலை 6 மணிக்கு ஸ்ரீதேவி பூதேவி […]