மாலி நாட்டில் வெள்ளிக்கிழமை நிகழ்த்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலில் 54 பேர் பலியாகினர். இந்தத் தாக்குதலுக்கு ஐஎஸ் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. ஆப்பிரிக்க நாடான மாலியின் கிழக்குப் பகுதியிலுள்ள இன்டெலிமனே (Indelimane) ராணுவ தளத்தில், வெள்ளிக்கிழமை நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதலில் 53 ராணுவ வீரர்கள் உள்பட 54 பேர் பலியாகினர்.இத்தாக்குதலைத் தொடர்ந்து இன்டெலிமனே பகுதியில் ராணுவம் குவிக்கப்பட்டுள்ளதாகவும், நிலைமை தற்போது கட்டுக்குள் உள்ளதாகவும் மாலி நாட்டின் தகவல் தொடர்புத் துறை அமைச்சர் யயா சங்கரே (Yaya Sangare) தெரிவித்துள்ளார். இந்நிலையில், […]
Tag: Terrorist Attack
ஜம்மு காஷ்மீரில் தாக்குதல் நடத்த சுமார் 250 பயங்கரவாதிகள் எல்லை கட்டுப்பாட்டு கோடு அருகே முகாமிட்டு உள்ளதாக இந்திய உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு அண்மையில் ரத்து செய்தது. இதற்கு கடும் கண்டனம் தெரிவித்த பாகிஸ்தான் இந்தியாவுடனான உறவை குறைத்துக் கொண்டது.மேலும் சீனாவின் உதவியுடன் ஐநா உள்ளிட்ட சர்வதேச அமைப்புகளிடம் காஷ்மீர் விவகாரத்தை எழுப்பியது. ஆனால் பெரும்பாலான நாடுகள் காஷ்மீர் பிரச்சனை இந்தியாவின் உள்நாட்டு விவகாரம் என தெரிவித்து விட்டனர். […]
பயங்கர ஆயுதங்களுடன் ஜம்முவின் கத்துவா பகுதியில் லாரி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காஷ்மீர் விவகாரத்தில் பாகிஸ்தான் சர்வதேச கவனத்தை திசை திருப்புவதற்காக பயங்கரவாதத்தை கையில் எடுத்திருக்கிறது.கஷ்மீரில் மிகப்பெரிய தாக்குதலை நடத்த பயங்கரவாத முகாம்கள் பாகிஸ்தானில் அமைக்கப்பட்டிருப்பதாகவும் , பயங்கரவாதிகள் இந்திய எல்லையில் முகாமிட்டு இருப்பதாகவும் செய்தி வெளியாகியது. இந்நிலையில் இதை உறுதி செய்யும் விதமாக தற்போது லாரி ஒன்று பிடிபட்டுள்ளது.ஜம்முவின் கத்துவா பகுதியில் பயங்கர ஆயுதங்களுடன் லாரி பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது . இது தீவிரவாதிகளின் சதி […]
பலுசிஸ்தான் மாகாணத்தில மசூதியில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் 4 பேர் பலியாகி 32 பேர் காயமடைந்துள்ளனர். வடமேற்கு மாநிலமாக இருக்கக்கூடிய பலுசிஸ்தான் தலைநகரம் குச்லாக் பகுதியில் இருக்க கொடிய மசூதியில் போலீஸ் வாகனத்தை குறி வைத்து நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் வாகனத்தில் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதில் 4 உயிரிழப்பதாகவும் 32 பேர் காயமடைந்திருப்பதாகவும் சொல்லப்படுகின்றது.காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். பலுசிஸ்தான் பகுதி ஏராளமான பழங்குடி மக்கள் வசித்து வருகிறார்கள். தலிபான் இயக்கம் வலுவாக இருக்க கூடிய பகுதியாகும். இங்கு […]