இடைத்தேர்தல் பயத்தால் மக்கள் நீதி மய்யம் போட்டியிடவில்லை என்று அமைச்சர் தங்கமணி விமர்சித்துள்ளார். தமிழகத்தில் காலியாக உள்ள நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி ஆகிய இரண்டு தொகுதிக்கான இடைத்தேர்தல் தேர்தல் தேதி நேற்று அறிவிக்கப்பட்டது . அதன்படி செப்டம்பர் 23 ஆம் தேதி முதல் செப்டம்பர் 30 வரை வேட்புமனுத்தாக்கல் செய்யலாம் என்றும், வேட்புமனு பரிசீலனை அக்டோபர் ஒன்றாம் தேதியும், வேட்பு மனுக்களை திரும்பப் பெற அக்டோபர் 3 ஆம் தேதியும், கடைசியாக அக்டோபர் 21-ல் இடைத்தேர்ல் நடைபெறும் என்றும், வாக்கு எண்ணிக்கை அக்டோபர் 24_ஆம் தேதியும் நடைபெறும் என தேர்தல் […]
Tag: #thangamani
சென்னை சிட்லபாக்கம் பக்கத்தில் நடந்த 2 மின் விபத்துகளுக்கு மின்சார வாரியம் பொறுப்பல்ல என்று மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி விளக்கமளித்துள்ளார். சென்னை அண்ணா சாலையில் உள்ள மின்வாரிய தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி சிட்லபாக்கம் சேது ராஜ் மரணத்திற்கு சேதமடைந்த மின்கம்பம் தான் காரணம் என்று கூறுவதை மறுத்தார். சேது ராஜ் இறப்பதற்கு முன்பாக அவ்வழியாக சென்ற காங்கிரீட் லாரி மின்கம்பத்தை சேதப்படுத்தி விட்டதாக குறிப்பிட்டு அந்த மின்கம்பம் நல்ல நிலையில் இருந்ததற்கு […]
10,000 விவசாயிகளுக்கு 2 வாரத்திற்குள் மின் இணைப்பு கொடுக்கப்படும் என்று மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார். தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சட்டமன்றத்தில் அறிமுகப்படுத்திய முதல்வர் குறைதீர்க்கும் திட்டம் தற்பொழுது அமுல்படுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம் மக்கள் அதிகாரிகளிடம் குறையாக அளிக்கும் மனுவை நேரடியாக முதல்வரே பெற்று அதனை பரிசீலித்து உடனடியாக தீர்வு காண முடியும். இந்த திட்டம் தமிழக மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றிருந்தத நிலையில், மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி அவர்கள் விவசாயிகளுக்கு ஆதரவாக முதல்வர் மற்றொரு திட்டத்தை வெளியிட இருப்பதாக […]
மதுபானம் அருந்துபவர்கள் அளவாக குடித்தால் எந்த பிரச்சினையும் இல்லை என்று பேரவையில் அமைச்சர் தங்கமணி கூறியுள்ளார். தமிழக சட்டப்பேரவை கூட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. துறைசார்ந்த மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வரும் நிலையில் இன்று பேரவையில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை மீதான மானியக் கோரிக்கை விவாதம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய காங்கிரஸ் கட்சி MLA பிரின்ஸ் கூறுகையில் , மதுபானங்களின் தரம் குறைவாக உள்ளதால் உயிரிழப்பு ஏற்படுவதாக குற்றம்சாட்டினார்.இதற்கு பதிலளித்து பேசிய அமைச்சர் தங்கமணி , மதுபானம் […]
தமிழகத்தில் 6,132 ஆக இருந்த மதுபான கடைகளின் எண்ணிக்கை 5,152 ஆக குறைக்கப்பட்டுள்ளதாக சட்ட பேரவையில் அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார். கடந்த பிப்ரவரி 8ஆம் தேதி தமிழக சட்டசபை கூட்டத்தொடர் தொடங்கி அரசின் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு அதன் மீதான விவாதம் நடைபெற்றது. நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்றதன் காரணமாக மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெறாமல் சட்ட சபை ஒத்திவைக்கப்பட்டது.இதனைத் தொடர்ந்து ஜூலை 28ம் தேதி மீண்டும் சட்டசபை கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதனைத் தொடர்ந்து இன்று […]