அமமுக_வில் இருந்து விலகிய தங்க தமிழ் செல்வனுக்கு திமுக கொள்கை பரப்பு செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. மக்களவை தேர்தலில் அமமுக_வின் தோல்வியை அடுத்து அங்கிருந்து விலகி திமுகவில் இணைந்த தங்க தமிழ் செல்வன் மற்றும் வி.பி கலையரசனுக்கு திமுக_வில் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. திமுகவின் மிக முக்கியமான பொறுப்பான கொள்கை பரப்புச் செயலாளராக தங்கத்தமிழ்செல்வன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். அதேபோன்று கலையரசனுக்குஇலக்கிய அணி இணைச் செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. திமுகவின் கொள்கைப்பரப்பு செயலாளராக திருச்சி சிவா, ராஜா ஆகியோர் இருந்து வந்த நிலையில் மூன்றாவது தங்கத்தமிழ்செல்வன் அந்தப் பொறுப்பு கொடுக்கப்பட்டு […]
Tag: #ThangaTamilSelvan
திமுகவில் இணைந்த தங்க தமிழ்செல்வன், பதவியை கேட்டு பெறமாட்டேன் என்றும், உழைப்பை பார்த்து அவர்கள் கொடுப்பார்கள் என்று பேசியுள்ளார். அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் கொள்கை பரப்பு செயலாளரான தங்கத்தமிழ் செல்வன், அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரனை தரக்குறைவாக விமர்சித்தார். தரக்குறைவாக பேசிய ஆடியோ சமூக வலைத்தளங்களில் பரவி வைரலானது. இதனால் தமிழக அரசியலில் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து டிடிவி தினகரன், தங்க தமிழ் செல்வன் கட்சியில் இருந்து நீக்கப்படுவார் என்றும், புதிய கொள்கை பரப்பு செயலாளர் அறிவிக்கப போவதாகவும் தெரிவித்தார். […]
அமமுகவில் கொள்கை பரப்பு செயலாளராக இருந்த தங்க தமிழ்செல்வன் ஸ்டாலினை சந்தித்து திமுகவில் இணைத்து கொண்டார். அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் கொள்கை பரப்பு செயலாளரான தங்கத்தமிழ் செல்வன், அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரனை தரக்குறைவாக விமர்சித்த ஆடியோ சமூக வலைத்தளங்களில் பரவி வைரலானது. இதனால் டிடிவி தினகரன், தங்க தமிழ் செல்வன் கட்சியில் இருந்து நீக்கப்படுவார் என்றும், புதிய கொள்கை பரப்பு செயலாளர் அறிவிக்க போவதாகவும் தெரிவித்தார். இந்த நிலையில் அமமுகவின் கொள்கை பரப்பு செயலாளராக இருந்த தங்க […]
அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தில் தங்க தமிழ்செல்வனுக்கும் , TTV தினகரனுக்கு இடையே ஏற்பட்ட மோதல் தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த இரண்டு நாட்களாக அ.ம.மு.க_வில் TTV தினகரன் மற்றும் தங்கத்தமிழ் செல்வனிடையே ஏற்பட்ட மோதல் தமிழக அரசியலை பரபரப்பாக்கி வருகின்றது. இதில் TTV தினகரனை அ.ம.மு.க_வில் இருந்து நீக்கியாக TTV_யும் , அ.ம.மு.க.வில் இருந்து என்னை நீக்கவில்லை அப்படி நீக்கினாலும் கவலையில்லை என்று தங்கத்தமிழ்ச்செல்வமும் தெரிவித்துள்ளனர்.மேலும் அ.தி.மு.க.வில் இணைய சொல்லி என்னை யாரும் தொடர்புகொள்ளவில்லை , தி.மு.க. […]
என்னை பார்த்தால் தங்க தமிழ்செல்வன் பொட்டிப் பாம்பாக அடங்கிவிடுவார் என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். அதிமுக இரண்டு அணிகளாக பிரிந்ததையடுத்து அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என்ற கட்சியை தொடங்கி, நடத்துவது வரை டிடிவி தினகரனுக்கு ஆதரவாகவும், நம்பிக்கைக்குரியவராகவும் தங்க தமிழ் செல்வன் இருந்து வந்தார். தேனி மாவட்டத்தை சேர்ந்த தங்க தமிழ் செல்வன் அமமுகவின் கொள்கை பரப்பு செயலாளராக நியமிக்கப்பட்டார். நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் தேனி தொகுதியில் ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத்தை எதிர்த்து போட்டியிட்டார். ஆனால் தோல்வியை தழுவினார். […]
ரவீந்திரநாத் பாராளுமன்ற உறுப்பினர் என்று எழுதப்பட்ட கல்வெட்டை அகற்ற துணை முதலமைச்சர் ஓ.பி.எஸ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தங்க தமிழ்செல்வன் வலியுறுத்தியுள்ளார் தமிழகத்தில் வேலூர் தொகுதியை தவிர்த்து 38 பாராளுமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் கடந்த மாதம் ஏப்ரல் 18-ம் தேதி நடைபெற்றது. தேனி தொகுதியில் அ.தி.முக சார்பில் ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் குமார் போட்டியிட்டுள்ளார். அவரை எதிர்த்து அ.ம.முக சார்பில் தங்க தமிழ்செல்வன் களத்தில் உள்ளார். நாளை மறுநாள் 19-ம் தேதி மீதமுள்ள திருப்பரங்குன்றம் , அரவக்குறிச்சி, […]
மதுரையில் தங்கத் தமிழ்ச்செல்வன் தங்கியிருந்த விடுதி அறையில் தேர்தல் பறக்கும்படையினர் அதிரடி சோதனை நடத்தினர். வருகின்ற 19ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் அ.ம.மு.க கொள்கைப் பரப்புச் செயலாளர் தங்கத்தமிழ்ச்செல்வன், திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் வேட்பாளர் மகேந்திரனை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். இதற்காக அவர் கடந்த சில நாட்களாக ஜெய்ஹிந்த்புரம் ஸ்ரீதேவி ஹோட்டலில் அறை எடுத்து தங்கியிருக்கிறார்.அவரது அறையில் வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக பணம் மற்றும் பரிசு பொருட்கள் பதுக்கி வைத்திருப்பதாக தேர்தல் கட்டுப்பாட்டு அறைக்கு புகார் வந்த்து. இதனையடுத்து தேர்தல் […]