மரங்கள் அடர்ந்த பகுதியில் வைக்கப்பட்டிருந்த கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். தஞ்சாவூர் மாவட்டம் தம்பிக்கோட்டை மறவக்காடு கிராமத்தில் இருந்து உப்பளம் செல்லும் சாலையோரத்தில் ஒரு பாலித்தீன் பைகளில் ஏதோ கிடப்பதாக அதிராம்பட்டினம் போலீசாருக்கு நேற்று மாலை தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலின் பேரில் பட்டுக்கோட்டை கடலோர பாதுகாப்பு குழுமம் இன்ஸ்பெக்டர் மஞ்சுளா சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் ஐயப்பசாமி மற்றும் நுண்ணறிவு பிரிவு போலீசார் என அனைவரும் அப்பகுதிக்கு விரைந்துள்ளனர். இதில் உப்பளம் செல்லும் சாலையின் ஓரத்தில் புதரில் […]
Tag: #Thanjavur
மனோராவில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் அனைத்து பணிகளையும் கலெக்டர் நேரில் சென்று ஆய்வு செய்துள்ளார். தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள சரபேந்திரராஜன்பட்டிணத்தில் மனோரா சுற்றுலா தளம் அமைந்திருக்கிறது. இந்த மனோரா சுற்றுலா தளம் மாவீரன் நெப்போலியனை ஆங்கிலேயர்கள் வாட்டர்லு என்ற இடத்தில் தோற்கடித்ததன் நினைவாக ஆங்கிலேயரின் நண்பன் மராட்டிய மன்னன் இரண்டாம் சரபோஜி வெற்றியின் நினைவுச் சின்னமாக கட்டப்பட்டிருக்கிறது. இங்கு சென்னை முதல் கன்னியாகுமரி வரை உள்ளவர்களும் மற்றும் வெளிநாட்டினரும் வந்து செல்கின்றனர். இந்நிலையில் நாளடைவில் சுற்றுலாத்தளமான மனோரா மிகவும் […]
முன்விரோத காரணத்தால் வாலிபரை அருவாளால் வெட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்துள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள முத்துப்பிள்ளை மண்டபம் முல்லை நகர் பகுதியில் வின்சென்ட் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் இவருக்கும் அதே பகுதியில் வசிக்கும் ஆகாஷ் என்பவருக்கும் முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இதனால் வின்சென்ட் தனது வீட்டு வாசலில் அமர்ந்து செல்போன் பார்த்துக் கொண்டிருக்கும் போது அங்கு வந்த ஆகாஷ் கையில் வைத்திருந்த அருவாளால் வின்சென்டை சரமாரியாக வெட்டி உள்ளார். இதில் படுகாயம் அடைந்த வின்சென்டை அக்கம்பக்கத்தினர் […]
வயலில் நடவு பணியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் போது மின்சாரம் தாக்கி பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள தென்கொண்டார் இருப்பு கிராமத்தில் ராஜப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சாரதாம்பாள் என்ற மனைவி இருந்துள்ளார். இவர் விவசாய கூலிதொழில் செய்து வந்துள்ளார். இந்நிலையில் தனது உறவினரான கவுசல்யா என்பவர் வீட்டிற்கு வந்திருந்த நிலையில் அருகில் இருக்கும் வயலில் நடவு பணிக்கு சென்றுள்ளார். அப்போது நடவு பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த வயலில் அறுந்து கிடந்த மின்கம்பியை […]
தந்தை மற்றும் மகன் ஆகிய 2 பேரும் கடலின் அலையில் சிக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள கவிபாரதி பகுதியில் பாலகுரு என்பவர் வசித்து வருகிறார். இவர் ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு பாலாஜி என்ற மகன் இருந்துள்ளார். இவர் தனியார் நிறுவனத்தில் என்ஜினீயராக பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கு திருமணமாகி சுந்தரி என்ற மனைவியும், ரக்சன் மற்றும் ரிஷிவந்திகா என 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் விடுமுறை நாள் என்பதினால் குடும்பத்தினருடன் பாலாஜி […]
வயலில் வேலை செய்து கொண்டிருந்த விவசாயி மீது மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள தலையாமங்கலம் புதுத்தெருவில் ஜெயராமன் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் விவசாயியான இவர் அ.ம.மு.க ஊராட்சி கழகச் செயலாளராகவும் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் ஜெயராமன் அதே பகுதியில் வசிக்கும் விவசாயி ஒருவருக்கு சொந்தமான நிலத்தை ஒத்திக்கு எடுத்து அதில் சாகுபடி செய்து வந்துள்ளார். அதன்பின் நிலத்தில் நடவு நடுவதற்கான பணியில் ஈடுபடுவதற்காக விஜயகுமார் என்பவருடன் டிராக்டரில் வயலுக்கு சென்றுள்ளனர். […]
நிலைவாசல் தலையில் விழுந்ததால் சிறுமி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள பாரதிதாசன் தெருவில் ஸ்ரீதர் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணமாகி மேகலா என்ற மனைவியும், ப்ரீத்தி என்ற மகளும் உள்ளனர். இவர் இரண்டாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் நிலைவாசலை வீட்டின் சுவரில் சாய்த்து வைத்திருந்தை சிறுமி பிடித்து விளையாடிய போது திடீரென அவரின் மீது சாய்ந்து விழுந்ததுள்ளது. இதில் ப்ரீத்திக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு உயிருக்கு போராடிக் கொண்டிருந்த அவரை […]
சாலையில் முகககவசம் அணியாமல் வந்த பொதுமக்களுக்கு அதிகாரிகள் அபராதம் விதித்துள்ளனர். தஞ்சாவூர் மாவட்டத்தின் சுற்றுவட்டாரப் பகுதிகளில் காவல்துறையினர் பொதுமக்கள் கொரோனா விதிமுறைகளை பின்பற்றுகிறார்களா என தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சாலையில் முககவசம் அணியாமல் வரும் பொதுமக்களுக்கு அபராதம் விதித்துள்ளனர். இதனையடுத்து காவல் நிலையம் அருகாமையில் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் ஆனந்தன் மற்றும் அலுவலர்கள் அவ்வழியில் முககவசம் அணியாமல் சென்றவர்களுக்கு அபராதம் விதித்துள்ளனர்.
முன்னாள் படை வீரர்களின் குழந்தைகள் ராணுவ கல்லூரியில் சேர்வதற்கு விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார். தஞ்சாவூர் மாவட்டத்தில் ராஷ்டிரிய இந்திய ராணுவ கல்லூரி டேராடூனில் அமைந்திருக்கிறது. இந்த கல்லூரியில் ஜூலை மாதம் 2022-ஆம் ஆண்டின் பருவத்தில் சேர்வதற்கான தேர்வு வருகின்ற டிசம்பர் மாதம் 18-ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இது குறித்த விவரங்கள் அடங்கிய முழு தொகுப்பு www.ri-mc.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டு இருக்கிறது. அதன்பின் இந்த இணையதள முகவரியில் விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து அடுத்த மாதம் […]
மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்த குற்றத்திற்காக காவல்துறையினர் போக்சோ சட்டத்தில் கீழ் ஆசியரை கைது செய்தனர். தஞ்சாவூர் மாவடத்திலுள்ள கும்பகோணம் பகுதியில் சேகர் என்பவர் வசித்து வருகிறார். இவர் கும்பகோணத்தில் உள்ள பள்ளி ஒன்றில் கணித ஆசிரியராக பணிபுரிகிறார். இவர் தான் பணிபுரியும் பள்ளியில் பயிலும் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து ஆசிரியரால் பாலியல் தொல்லைக்கு உள்ளாக்கப்பட்ட மாணவிகள் அப்பள்ளி தலைமையாசிரியரிடம் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரை ஏற்ற தலைமை ஆசிரியர் பள்ளியின் சார்பாக […]
ஊரடங்கு காரணமாக தர்பூசணி மற்றும் கிர்ணிப் பழத்தின் விலை கடுமையாக சரிந்துள்ளது. கொரோனாவின் இரண்டாவது அலை பரவல் காரணமாக மத்திய மாநில அரசுகள் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதன்படி தமிழ்நாடு அரசு கடந்த 10-ஆம் தேதி முதல் வருகின்ற 24 ஆம் தேதி வரை முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் அத்தியாவசியமற்ற கடைகள் அனைத்தும் மூடப்பட்டு உள்ளது. இந்த ஊரடங்கு காரணமாக சாலையோர பழ வியாபாரிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் வெயில் வாட்டி வதைக்கும் இந்த நேரத்தில் […]
முழு நேர ஊரடங்கால் சாலைகள் மக்கள் நடமாட்டமின்றி வாகனப் போக்குவரத்து இன்றி வெறிச்சோடி காணப்பட்டது. தமிழகத்தில் கொரோனாவின் இரண்டாவது அலை வேகமாக பரவிக் கொண்டிருக்கும் நிலையில் ஞாயிற்றுகிழமை முழு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. தஞ்சை மாவட்டத்தில் இரவு 10 மணிக்கு மேல் பொது மக்கள் நடமாட்டம் குறைந்து வெறிச்சோடி காணப்பட்டது. தஞ்சை, கும்பகோணம், ஒரத்தநாடு, மதுக்கூர், பட்டுக்கோட்டை, பேராவூரணி, பூதலூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களிலும் பரபரப்பாக காணப்படும் இடங்கள் ஊரடங்கால் மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி […]
சமூக இடைவெளி இல்லாத கடைகளில் ரூபாய் 500, முககவசம் அணியாதவர்களுக்கு ரூபாய் 200 அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. கொரோனாவின் இரண்டாவது அலை உலகம் முழுவதும் வேகமாக பரவி கொண்டிருக்கும் நிலையில் தமிழகத்தில் உள்ள தஞ்சை மாவட்டத்தில் மதுக்கூரில் கருணா விதிமுறைகளை மீறுபவர்களுக்கு அபராதம் விதிக்க மாவட்ட வருவாய் அதிகாரி முத்துமீனாட்சி, தாசில்தார் தரணிகா ஆகியோர் ஆய்வு செய்தனர். அந்த சமயத்தில் மக்கள் அதிகம் கூடும் இடங்களான முக்கூட்டு சாலை, பேருந்து நிலையம், இந்தியன் வங்கி உள்ளிட்ட பகுதிகளில் பேரூராட்சி […]
டிக் டாக் பதிவிடுவதில் ஏற்பட்ட மோதலில் மகள் மற்றும் தாய்க்கு இருவர் கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சை மாவட்டத்தில் உள்ள மருதகுளம் கிராமத்தைச் சேர்ந்தவர் சோமசுந்தரம். இவருடைய மனைவி இளஞ்சியம். இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். அதில் இரண்டாவது மகளின் பெயர் திவ்யா. இவர் கள்ளச்சி என்ற பெயரில் டிக் டாக் செய்துவருகிறார். இந்த நிலையில் மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த சந்திரன் மற்றும் தேனி மாவட்டத்தைச் சேர்ந்த சுகந்தி இருவருடனும் டிக்டாக்கில் திவ்யாவிற்கு […]
சொத்து தகராறில் இரண்டு பேரை கத்தியால் குத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள குத்தாலம் சுவாமிமலை பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. இவருடைய மனைவி கல்யாணி. இந்த தம்பதிகளுக்கு 3 மகள்கள் உள்ளனர். அவர்கள் அனைவருக்கும் திருமணமாகி விட்டது. இந்நிலையில் மூத்த மருமகனின் பெயர் பாண்டியன், இரண்டாவது மருமகன் ஆத்மநாதன், மூன்றாவது மருமகன் பாலசண்முகம். இந்நிலையில் கிருஷ்ணமூர்த்தி பணி ஓய்வுக்குப் பின்னர் வந்த பணத்தை பங்கிட்டுக் கொள்வது தொடர்பாக மூன்று மருமகளுக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்துள்ளது. […]
பொது இடத்தில் போலீசாரிடம் ரகளை செய்த பெண்ணை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தஞ்சை மாவட்டத்தில் புதிய பஸ் நிலையம் முன்புறம் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருக்கும் போது ஒரு பெண் முகக்கவசம் அணியாமல் ஸ்கூட்டியில் வந்து கொண்டிருந்தார். அவரை நிறுத்தி முக கவசம் அணியாமல் இருந்ததால் அபராதம் ரூபாய் 200 செலுத்துமாறு காவல்துறையினர் கூறியுள்ளனர். அப்போது அந்த பெண் போலீசாரை பார்த்து “எல்லோரும் உழைச்சுதான் சாப்பிடுகிறோம். இந்த அளவு சிறிய முகக்கவசத்திற்கு ரூபாய் 200 கட்ட […]
குடும்ப பிரச்சனை காரணமாக விவசாயி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள அக்கரைப்பேட்டை கிராமத்தில் விவசாய ஆண்டிஅய்யா என்பவர் வசித்து வந்தார். இவர் கடந்த 18ஆம் தேதி குடும்ப பிரச்சினை காரணமாக விஷம் குடித்துவிட்டு தனது வீட்டில் மயங்கி கிடந்துள்ளார். உடனடியாக அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றுள்ளனர். அங்கு அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் அவருக்கு தொற்று உறுதியானதை அடுத்து […]
விவசாயி சாலையில் நடந்து சென்று கொண்டிருக்கும் போது டிராக்டர் மோதி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள அலமேலுபுரம் பூண்டி கிராமத்தில் வசித்து வருபவர் விவசாயி மஹாலிங்கம். இவர் தனது வீட்டிலிருந்து வெளியே வந்து நடந்து சென்று கொண்டிருந்தார். அவர் பூண்டி மாதா கோவில் அருகில் சாலையில் சென்று கொண்டிருக்கும் போது பின்னால் வந்த டிராக்டர் அவர் மீது மோதியுள்ளது. இதில் அவர் படுகாயம் அடைந்துள்ளார். உடனடியாக அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக தஞ்சாவூர் […]
கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நோயாளி தன்னை தனிமைப்படுத்திக் கொள்ளாமல் தெருக்களில் சுற்றித் திரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள புதுப்பட்டினம் கிராமத்தில் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்ட ஒருவர் வீட்டில் தன்னை தனிமைபடுத்தி சிகிச்சை பெற்றுக் கொள்வதாகக் கூறியுள்ளார். ஆனால் அந்த நபர் தன்னை தனிமைப்படுத்திக் கொள்ளாமல் தெருக்களில் சுற்றித் திரிவதாகவும் அதனால் மற்றவர்களுக்கும் கொரோனா தொற்று ஏற்படும் அபாயம் இருப்பதாகவும் அப்பகுதி மக்கள் புதுப்பட்டினம் கிராம நிர்வாக அலுவலரிடம் புகார் அளித்துள்ளனர். இந்த புகாரின் பேரில் […]
உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் கல்லூரி மாணவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள கபிஸ்தலம் பகுதியில் பழனிச்சாமி என்ற விவசாயி வசித்து வருகிறார். இவருடைய மகள் சிவசங்கரி என்பவர் அதே பகுதியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.எஸ்சி இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். சிவசங்கரிக்கு நீண்ட நாட்களாக குடல் புண் இருந்து வந்துள்ளது. இதனால் அவர் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். ஆனாலும் குடற்புண் குணமடையாத காரணத்தினால் […]
வீடு புகுந்து கொலை மற்றும் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட ஐந்து பேர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள கும்பகோணம் பகுதியில் ராமநாதன் செட்டியார் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வந்தார். இவர் அப்பகுதியில் எண்ணெய் வியாபாரம் செய்து வந்தார். இவர் கடந்த 15ஆம் தேதி தனது வீட்டில் டிவி பார்த்துக் கொண்டிருக்கும் போது உள்ளே புகுந்த மர்ம நபர்கள் ராமநாதனிடம் நகை பணத்தை கேட்டு மிரட்டியுள்ளனர். உடனடியாக ராமநாதன் வீட்டில் இருந்த நகை […]
காணாமல் போன கணவனை தேடித் தருமாறு மனைவி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள திருவையாறு பகுதியில் ரவி என்பவர் வசித்து வருகிறார். இவருடைய வீட்டிற்கு உறவினரான கேரள மாநிலத்தைச் சேர்ந்த லட்சுமணன் மற்றும் அவருடைய மனைவி அனுசுயா வருவது வழக்கமான ஒன்று. அப்படி ஒருநாள் அவர்கள் வந்திருக்கும்போது தஞ்சையில் உள்ள தனியார் மருத்துவமனையில் உடல் பரிசோதனை செய்து கொள்வார்கள். கடந்த சில நாட்களுக்கு முன்பு அதே போல் இருவரும் வந்து ரவியின் வீட்டில் தங்கியுள்ளனர். […]
சாலையில் ஓரமாக நின்று கொண்டிருந்த லாரியின் மீது ஸ்கூட்டி மோதியதில் இருவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள கோட்டப்பட்டி கிராமத்தில் வசித்து வந்தவர் கலியராஜ். இவரது வீட்டிற்கு அருகில் ஜெயந்தி என்பவர் வசித்து வந்தார். கலியராஜும் ஜெயந்தியும் ஒரு ஸ்கூட்டியில் பூதலூர் நோக்கி வந்து கொண்டிருக்கும் போது அய்யனார்புரம் சாலையில் நின்று கொண்டிருந்த டாரஸ் லாரியின் பின் பக்கம் மோதியுள்ளது. இதில் இருவரும் சம்பவ இடத்திலேயே பலியாகினர். இந்த சம்பவம் நடந்த போது டாரஸ் […]
அனுமதியின்றி ஆற்றில் திருட்டுத்தனமாக மணல் அள்ளிய 2 பேர் காவல்துறையினர் கைது செய்யப்பட்டுள்ளனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள நெய்வேலி வடபாதி கிராமத்தைச் சேர்ந்தவர் பார்த்திபன். அதே பகுதியில் வசித்து வருபவர் சாதிக் பாட்சா. இவர்கள் இருவரும் சேர்ந்து நெய்வேலி பகுதியில் உள்ள ஆற்றில் திருட்டுத்தனமாய் மணல் அள்ளி நெய்வேலி சோளம் பகுதியில் சென்று கொண்டிருக்கும்போது ரோந்து பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த காவல்துறையினரால் மடக்கிப் பிடிக்கப்பட்டுள்ளனர். இதனை அடுத்து காவல்துறையினர் இவர்கள் இருவரையும் கைது செய்து அவர்களிடமிருந்த மணலையும் கடத்தலுக்கு […]
கணவன் மனைவி பிரச்சனையில் சமாதானம் செய்ய சென்ற விவசாயி கத்தியால் குத்தப்பட்டு பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள ஒரத்தநாடு பகுதியில் இருக்கும் வால் பட்டறையில் சூசைராஜ் என்பவர் வேலை செய்து வருகிறார். இவர் அதே பகுதியில் தனது மனைவியுடன் வாடகை வீட்டில் வசித்து வருகிறார். இந்நிலையில் நேற்று இரவு அவர் குடிபோதையில் வீட்டுக்கு வந்து தனது மனைவியிடம் தகராறு செய்துள்ளார். அப்போது அந்த வழியாக சென்ற விவசாயி ராஜேந்திரன் அதனை தட்டி கேட்டுள்ளார். இதில் […]
அதிகாரி ஒருவர் தன்னை கொரோனாவிலிருந்து பாதுகாத்துக் கொள்வதற்காகவே வேப்பிலையை வித்தியாசமான முறையில் பயன்படுத்தியது அனைவரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளது. கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் கொரோனா வேகமாக பரவி மிகப்பெரிய அழிவை ஏற்படுத்தி உள்ளது. தற்போது கொரோனாவின் இரண்டாவது அலை பயங்கர வேகமெடுத்து பரவி வருகின்றது. மேலும் நாளுக்கு நாள் நோயாளிகளின் எண்ணிக்கை கூடிக்கொண்டே போகின்றது. தமிழகத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் விழிப்புணர்வும் மக்களிடையே தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அலுவலர்களுக்கான கூட்டம் […]
மகாலிங்க ஸ்வாமி கோவிலில் மருதா நாட்டியாஞ்சலி விழா 300க்கும் மேற்பட்ட கலைஞர்களால் நடைபெற்றுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள திருவிடைமருதூர் மகாலிங்கசுவாமி கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவிலாகும். இந்த கோவிலில் ஆண்டுதோறும் சிவராத்திரி விழா வெகுவிமரிசையாக நடைபெறுவது வழக்கம். அதேபோல் நேற்றுமுன்தினம் சிவராத்திரி விழாவையொட்டி மாலை 6 மணி முதல் நான்கு கால பூஜை நடைபெற்று சிறப்பு அபிஷேகங்களும் நடைபெற்று ஸ்வாமி மலர்களால் அலங்கரிக்கப்பட்டு பூஜைகள் நடத்தப்பட்டுள்ளது. பின்னர் மருதா நாட்டியாஞ்சலி குழுவினரின் பத்தாவது […]
சட்டவிரோதமாக ஆறுகளில் இருந்து லாரிகள் மூலம் மணல் அள்ளியவர்களை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தஞ்சை மாவட்டத்திலுள்ள மெலட்டூர், அய்யம்பேட்டை, பாபநாசம் ஆறுகளில் சட்டவிரோதமாக மணல் அள்ளபடுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் ஒன்று கிடைத்துள்ளது. இந்த தகவலின் பேரில் துணை போலீஸ் சூப்பிரண்டு ஆனந்த் தலைமையிலான காவல்துறையினர் அப்பகுதிகளில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அந்த சமயத்தில் மெலட்டூர், அய்யம்பேட்டை, பாபநாசம் ஆறுகளில் இருந்து மணல் கடத்தி வந்த லாரிகளை காவல்துறையினர் பறிமுதல் […]
கட்டுமானத் தொழிலாளர்கள் தங்கள் கூலியை பேனர்கள் மூலம் தெரிவித்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சை மாவட்டத்தில் உள்ள கட்டுமான பணியாளர்கள் சிவகங்கை பூங்கா, வெள்ளைப் பிள்ளையார் கோவில், கொடிமரத்து மூலை ஆகிய பகுதிகளில் ஒன்று சேர்ந்து அங்கிருந்து பிரிந்து தங்களுடைய வேலைக்கு செல்வது வழக்கமான ஒன்றாகும். இந்நிலையில் அவர்கள் 2021 ஆம் ஆண்டிற்கான கட்டுமானப் தொழிலாளர்களின் கூலி இவ்வளவு என அப்பகுதிகளில் பேனர் கட்டி வைத்துள்ளனர். இந்த பேனரில் கட்டுமான தொழிலாளர்களின் 2021 ஆம் ஆண்டிற்கான 8 மணி […]
உரிய ஆவணங்களின்றி எடுத்துச் செல்லப்பட்ட ரூபாய் 2 லட்சத்து 1115 ரூபாய் காவல்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தமிழக சட்டமன்ற தேர்தல் வருகின்ற ஏப்ரல் மாதம் நடைபெற உள்ள நிலையில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ளது. தஞ்சை மாவட்டம் முழுவதும் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டு செல்லப்படும் பணம், பொருட்கள் அனைத்தும் பறிமுதல் செய்யப்படுகின்றன. தஞ்சை மாவட்டத்தில் உள்ள மதுக்கூர் பகுதியில் காவல்துறையினர் வாகன […]
தஞ்சை பெரிய கோவிலின் கோபுரங்களில் ராட்சத மின் விளக்குகள் பொருத்தப்பட்டு சோதனை செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகின்றது. உலக அளவில் பிரசித்தி பெற்ற கோவில்களில் தஞ்சை பெரிய கோவிலும் ஓன்றாகும். இந்த கோவில் கட்டிடக்கலைக்கு சிறந்த எடுத்துக்காட்டாகும். இந்த கோவில் ராஜ ராஜ சோழனால் கிபி. 10 நூற்றாண்டு கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இந்த கோவிலில் கடந்த மாதம் 5 ஆம் தேதி குடமுழுக்கு நடைபெற்றுள்ளது. இந்த நிலையில் மாமல்லபுரத்தில் இருக்கும் கோபுரங்கள் ஜொலிப்பதை போல் தஞ்சை […]
பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய 6 பேரை குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். தஞ்சை மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த விக்னேஸ்வரன், லட்சுமணன், ஐயப்பன், ராஜதுரை, வீரமணி, சரத்குமார் ஆகிய 6 பேர் மீதும் பல்வேறு வழக்குகள் இருப்பதால் அவர்களை உடனடியாக குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் என மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உத்தரவிட்டார். இந்த உத்தரவின் பேரில் தஞ்சை ஊரக உட்கோட்ட துணை போலீஸ் சூப்பிரண்டு ஆனந்த் மேற்குறிப்பிட்ட […]
15 வயது மாணவியை கர்ப்பமாக்கிய மாணவன் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள திருவையாறு பகுதியில் 15 வயது சிறுமி வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார். இந்த மாணவிக்கு அதே பகுதியில் 17 வயதான 10 ஆம் வகுப்பு படிக்கும் மாணவனுடன் காதல் ஏற்பட்டுள்ளது. இதனால் இருவரும் நெருங்கி பழகி வந்துள்ளனர். இந்த நிலையில் அந்த மனைவி பள்ளியில் மயங்கி விழுந்துள்ளார். இதனால் மாணவி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். […]
நிலமற்ற விவசாயிகளுக்கு அனைத்து கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என சுய உதவிக்குழுவினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள கொள்ளுக்காடு கிராமத்தில் அனைத்து கடன்களையும் ரத்து செய்ய வேண்டும் இல்லையென்றால் நாங்கள் வருகின்ற சட்டமன்ற தேர்தலை புறக்கணிப்போம் என மகளிர் சுய உதவிக் குழுவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த ஆர்ப்பாட்டம் கிழக்கு கடற்கரை சாலையில் ஓரமாக அமர்ந்து கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமாக நடைபெற்றுள்ளது. இதுகுறித்து அவர்கள் கூறியதாவது “விவசாய கடன், மகளிர் சுய உதவி குழு கடன், நகை […]
பெட்ரோல் டீசல் விலை உயர்வை திரும்பப் பெற கோரி மோட்டார் சைக்கிள் ஊர்வலம் நடந்துள்ளது. தஞ்சை மாவட்டத்தில் உள்ள திமுக இளைஞரணி சார்பில் பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து நேற்று மோட்டார் சைக்கிள் ஊர்வலம் நடந்துள்ளது. இந்த ஊர்வலம் திருச்சிற்றம்பலத்தில் தொடங்கி காலகம், கொன்றைக்காடு, ஆண்டவன் கோவில் வழியாக பேராவூரணியில் சென்று முடிவடைந்துள்ளது. இதில் மாவட்ட கவுன்சிலர் அலிவலம் மூர்த்தி, மாநில மீனவர் அணி துணை அமைப்பாளர் ஜெயபிரகாஷ், ஒன்றிய பொறுப்பாளர் இளங்கோவன், அன்பழகன், ஒன்றிய […]
குரங்குகளால் தூக்கிச் செல்லப்பட்ட குழந்தையை அகழியில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சை மாவட்டத்தில் உள்ள மேலரங்கம் பகுதியில் வீடுகளின் முன்புறத்தில் ராஜராஜ சோழன் காலத்தில் கட்டப்பட்ட அகலி ஒன்று இருக்கிறது. இப்பகுதியில் குரங்குகள் அதிகம் பெருகி வருவதால் வீடுகளில் புகுந்து வீட்டில் உள்ள பொருட்களை தூக்கி சென்று விடுவதாகவும் புகார்கள் அதிக அளவில் உள்ளது. இந்நிலையில் மேலவீதி கோட்டை பகுதியில் ராஜா என்பவர் பெயிண்டர் தொழில் செய்து வருகிறார். இவருடைய மனைவி புவனேஸ்வரிக்கு […]
நாம் தமிழர் கட்சி முன்கூட்டியே வேட்பாளர்களை அறிவித்து களத்தில் இறங்கி பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறது. தமிழகத்தில் சட்டசபை தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதற்கு முன்பே தி.மு.க வினர் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளனர். தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் பல மாவட்டங்களுக்கு நேரடியாக சென்று பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். இதற்கு போட்டியாக அ.தி.மு.க வினர் பிரச்சாரத்தை தொடங்கி முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பல மாவட்டங்களுக்கு சென்று பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். ஆனால் அ.தி.மு.க, தி.மு.க கட்சிகளில் கூட்டணி கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் […]
மின்கம்பத்தின் மீது மோதியதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இரண்டு பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள எட்டிவயல் கிராமத்தைச் சார்ந்தவர் சிதம்பரம். இவருடைய மகன் மணிகண்டன். அதே பகுதியைச் சார்ந்த மருதுவின் மகன்கள் மணிகண்டன் மற்றும் சக்திவேல். இந்த மூவரும் பட்டுக்கோட்டையில் உள்ள முருகன் கோவிலில் நடந்த திருமணத்திற்காக வந்து விட்டு ஒரே மோட்டார் சைக்கிளில் ஊருக்கு சென்றுள்ளனர். அவர்கள் கொட்டகுடி அய்யனார் கோவில் பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருக்கும் போது எதிர்பாராமல் […]
குடும்ப வறுமை காரணமாக தாய் இரண்டு மகள்களுக்கு விஷம் கொடுத்து தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள திருச்சிற்றம்பலம் பகுதியை சார்ந்தவர் மதிவாணன்-புவனா தம்பதியினர். இவர்களுக்கு அட்சயா, ஹேமாஸ்ரீ என்ற 2 மகள்கள் உள்ளனர். கடந்த சில ஆண்டுகளாகவே போதிய பணம் இல்லாத காரணத்தினால் குடும்பத்தில் வறுமை நிலவி வந்துள்ளது. அதனால் புவனா மிகுந்த மனவேதனைக்கு ஆளாகி தற்கொலை செய்துகொள்ள வேண்டுமென முடிவு செய்துள்ளார். அதன்பின் இன்று காலை புவனா […]
கோவிலின் பூட்டை உடைத்து நகை, பணம், சாமி சிலை ஆகியவற்றை திருடிய மர்ம நபர்களை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள திருவாவடுதுறை ஆற்றங்கரை பகுதியில் வேம்பு மாரியம்மன் கோயில் ஒன்று அமைந்துள்ளது. இந்த கோவிலில் வீரமணி என்பவர் பூசாரியாக உள்ளார். இவர் கடந்த 31ம் தேதி இரவு சாமிக்கு பூசையை முடித்து விட்டு கோவிலை பூட்டி விட்டு சென்றுள்ளார். அதன் பின் நள்ளிரவில் கோவிலுக்குள் புகுந்த கொள்ளையர்கள் கோவிலுக்குள் வைக்கப்பட்டிருந்த 4 கிராம் […]
ஸ்கூட்டரும் மோட்டார் சைக்கிளும் மோதிக்கொண்டதில் ஒருவர் பலியான சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். தஞ்சை மாவட்டத்தில் உள்ள சமத்துவபுரம் பகுதியை சேர்ந்த ஷேக் உசைன் தனியார் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வந்தார். இவரது வீட்டிற்கு அருகில் உள்ள முரளிகுமார் பெயிண்டராக வேலை செய்து வருகிறார். ஷேக் உசைன் முரளிகுமார் இருவரும் நெருங்கிய நண்பர்களாக பழகி வந்துள்ளனர். கடந்த 2 நாட்களுக்கு முன்பு ஷேக் உசைனை வல்லத்தில் விடுவதற்காக முரளிகுமார் தனது இருசக்கர வாகனத்தில் அழைத்துச் […]
திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் தந்தையின் சிலையுடன் மேடைக்கு வந்த மூத்த சகோதரிகளால் தங்கை இன்ப அதிர்ச்சி அடைந்துள்ளார். தஞ்சை மாவட்டத்திலுள்ள பட்டுக்கோட்டையை சேர்ந்த தொழில் அதிபர் செல்வம்-கலாவதி தம்பதியினர். செல்வம் கடந்த 2012ஆம் ஆண்டு இறந்துவிட்டார். செல்வத்திற்கு 3 மகள்கள் உள்ளனர். அவர்களில் இரண்டு மகள்களுக்கு செல்வம் உயிரோடு இருக்கும்போதே திருமணம் நடந்துள்ளது. கடைசி மகளான லக்ஷ்மி பிரபாவுக்கு கிஷோருக்கும் தற்போது திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. திருமணத்தின் போது தந்தை இல்லை என்பதால் லட்சுமி பிரபா மிகுந்த வருத்தத்தில் […]
இருசக்கர வாகனம் தொழிலாளி மீது மோதிய விபத்து குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். தஞ்சை மாவட்டத்தில் உள்ள மடிகை கிராமத்தை சார்ந்தவர் ரத்தினம். இவர் கூலி வேலை செய்து வந்தார். இவர் கடந்த 29 ஆம் தேதி காலை பட்டுக்கோட்டை சாலையில் நடந்து சென்றுள்ளார். ஒரத்தநாடு அரசு மருத்துவமனையில் ஊழியராக பணிபுரியும் சிவகுமார் என்பவர் நேற்று முன்தினம் காலை ஒரத்தநாடு பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அந்த சமயத்தில் எதிர்பாராத விதமாக சாலையின் ஓரமாக […]
மது விற்பனை செய்த இரண்டு பேரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பூதலூர் இன்ஸ்பெக்டர் முருகேசன் தலைமையிலான காவல்துறையினர் வெட்டையம்பட்டி பகுதியில ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது வெட்டையம்பட்டி குளக்கரை அருகில் நின்று கொண்டிருந்த இரண்டு பேரை அழைத்து விசாரித்தனர். அதில் அவர்கள் வெட்டையம்பட்டியை சார்ந்த ரெங்கசாமி, முருகானந்தம் என்பதும் அந்தப் பகுதியில் அவர்கள் மது விற்றதும் தெரியவந்தது. உடனே காவல்துறையினர் அவர்கள் இருவரையும் கைது செய்து அவர்களிடமிருந்த 10 மது பாட்டில்களையும் […]
தடை செய்யப்பட்ட பொருட்களை விற்பனை செய்ததற்காக மொத்தம் 177 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தஞ்சை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தேஷ்முக் சேகர் சஞ்சய்க்கு பல்வேறு இடங்களில் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்வதாக தொடர்ந்து புகார்கள் வந்து கொண்டே இருந்தது. இந்த புகாரின் பேரில் அவர் மாவட்டம் முழுவதும் சோதனை நடத்தும் படி போலீசாரிடம் உத்தரவிட்டுள்ளார். இந்த உத்தரவின் பேரில் தஞ்சை கிழக்கு போலீசார் 5 இடங்களிலும், தெற்கு போலீசார் 7 இடங்களிலும், மருத்துவ கல்லூரி […]
வயிற்று வலியால் துடித்து வந்த கல்லூரி மாணவன் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தஞ்சை அருகே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சை மாவட்டத்திலுள்ள வல்லம் பகுதியில் இருக்கும் எம்ஜிஆர் நகரை சேர்ந்தவர் துரைராஜ். இவருடைய மகன் வல்லரசு என்பவர் ஒரு தனியார் கல்லூரியில் இளநிலைப் பட்டப் படிப்பில் இரண்டாம் ஆண்டு படித்துக் கொண்டிருக்கிறார். கடந்த சில நாட்களாக வல்லரசு கடும் வயிற்று வலியால் அவதிப்பட்டுக் கொண்டிருந்தார். இதனால் வல்லரசு மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி இருந்ததால் […]
மோட்டார் சைக்கிள்களுக்கு வாட்டர் சர்வீஸ் செய்து கொண்டிருக்கும்போது திடீரென தாக்கிய மின்சாரத்தால் மெக்கானிக் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சை மாவட்டத்தில் உள்ள வடக்கு வாசல் கங்கா நகரைச் சேர்ந்தவர் லட்சுமணன். இவர் மெக்கானிக் தொழில் செய்து வருகிறார். இவர் அதே பகுதியில் இருக்கும் மெக்கானிக் ஷாப் ஒன்றில் இருசக்கர வாகனத்திற்கு வாட்டர் சர்வீஸ் செய்து கொண்டிருக்கும் போது தரையில் கிடந்துள்ள சேதமடைந்த மின் ஒயரில் மிதித்திருக்கிறார். அப்போது எதிர்பாராத விதமாக அவரை மின்சாரம் தாக்கி உள்ளது. […]
குப்பையில் தவறவிட்ட ஒரு பவுன் மோதிரத்தை மீட்டுக்கொடுத்த பெண் தூய்மைப் பணியாளரை பொதுமக்கள் பாராட்டியுள்ளனர். தஞ்சை மாவட்டத்தில் உள்ள திருநாகேஸ்வரம் பேரூராட்சியில் அசோக் நகரைச் சேர்ந்தவர் முத்து – அனந்தலட்சுமி தம்பதியினர். இவர் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தில் பணியாற்றும் தூய்மைப் பணியாளர் பாக்கியம் என்பவரிடம் சில நாட்களுக்கு முன்பு வீட்டில் உள்ள குப்பைகளோடு பூஜை அறையில் இருந்த பழைய பூக்களையும் அளித்துள்ளார். பின்னர் பூஜை அறைக்கு சென்று பார்த்தபோது அங்கு வைக்கப்பட்டிருந்த ஒரு பவுன் மோதிரம் இல்லாததை […]
லாரி டிரைவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தஞ்சை மாவட்டத்திலுள்ள திருவையாறு பகுதியில் இருக்கும் மணல் மேட்டை சேர்ந்தவர் ராமலிங்கம்-முத்துலட்சுமி தம்பதியினர். லாரி டிரைவர் தொழில் செய்து வரும் இவருக்கு ஜெகதீசன், வர்ஷா என்ற இரு பிள்ளைகள் உள்ளனர். மேலும் ராமலிங்கம் பள்ளியக்ரஹாரம் பைபாஸ் சாலையில் ஒரு டாஸ்மாக் கடையில் பார் நடத்தி வருகிறார். அந்த பாருக்கு செல்லும் வழியில் சாலைகள் மழைநீரால் சேதமடைந்து இருப்பதனால் மணல் அடிக்குமாறு ராமலிங்கம் ரகுவரன் […]
தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே அருமுலை கிராமத்தை ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா டிஜிட்டல் கிராமமாக மாறியுள்ளது. தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள அருமுலை கிராமத்தை தத்தெடுத்து டிஜிட்டல் கிராமமாக ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா மாற்றியுள்ளது. இது தொடர்பாக நடைபெற்ற விழாவில் ஸ்டேட் பாங்க் இந்தியா பொது மேலாளர் திரு ஸ்ரீ வினோத் சேஸ்வால் பங்கேற்று டிஜிட்டல் பரிவர்தனை தொடங்கி வைத்தார். அருமுலை கிராமத்தை டிஜிட்டல் மயமாக மாற்றிய ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா […]