கருணாநிதி முதல்வராக இருந்த போது தஞ்சை பெரிய கோவிலில் ஏன் தமிழில் குடமுழுக்கு நடத்த வில்லை என்று அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் வைத்தியலிங்கம் கேள்வி எழுப்பியுள்ளார். தஞ்சை கீழவாசலில் நடந்த எம்ஜிஆர் பிறந்த நாள் விழாவில் பங்கேற்று பேசிய அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் வைத்தியலிங்கம் தஞ்சை குடமுழுக்கு குறித்து பேசினார். அதில், 1997இல் தஞ்சை பெரிய கோவிலில் கும்பாபிஷேகத்தை அன்றைக்கு முதல்வராக இருந்த கலைஞர் கருணாநிதி அவர்கள் தமிழில் கும்பாபிஷேகம் நடத்த வில்லை. இன்றைக்கு மு க […]
Tag: #Thanjavur
தஞ்சை பெருவுடையார் கோவில் குடமுழுக்கை தமிழில் நடத்த வலியுறுத்தி தஞ்சையில் மாநாடு நடைபெற்று வருகிறது. 23 ஆண்டுகளுக்கு பிறகு தஞ்சை பெரியகோவிலில் வரும் பிப்ரவரி 5ம் தேதி குடமுழுக்கு நடைபெற உள்ளது. இதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் குடமுழுக்கு தமிழில் நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. இதனை வலியுறுத்தும் விதமாக தஞ்சையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இந்து வேத மறுமலர்ச்சி இயக்கம் சார்பில் வேள்வி நடத்தப்பட்டது. தமிழிலேயே அனைத்து வேதங்களும் […]
தஞ்சை மாவட்டத்திற்கு பிப்ரவரி 5ஆம் தேதி விடுமுறை என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. தஞ்சையை ஆட்சி செய்த ராஜராஜ சோழனால் கட்டப்பட்ட பெரியகோவில் உலக பாரம்பரிய சின்னமாக விளங்கி வருகிறது. வரலாற்று சிறப்புமிக்க சுற்றுலாத் தலமாகவும் இருக்கும் பெரிய கோவிலில் 22 ஆண்டுகளுக்குப் பிறகு பிப்ரவரி 5ஆம் தேதி குடமுழுக்கு திருவிழா நடைபெற இருக்கின்றது. இதற்கு தமிழகம் மட்டுமல்லாமல் நாட்டின் பல்வேறு பகுதியில் உள்ள ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்வார்கள். மக்களின் கூட்டம் தஞ்சையில் அதிகமாக இருக்க […]
தஞ்சையில் உள்ள வேலம்மாள் போதி கேம்பஸ் சிபிஎஸ்இ பள்ளியில் உரிய அனுமதி பெறாமல் விடுதி நடத்தி வருவதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில் வருமான வரித்துறை சோதனையின்போது மாணவ மாணவிகள் விடுதியில் இருந்து வேறு இடத்திற்கு பெற்றோர்களுக்கு தெரியாமல் மாற்றப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் வேலம்மாள் சிபிஎஸ்இ பள்ளியில் உரிய அனுமதி இன்றி விடுதி நடத்தி வருவதாக வந்த புகாரின் பேரில் தஞ்சாவூர் மாவட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் விடுதியில் சோதனை செய்யப் போவதாக […]
தமிழுக்கு கிடைத்தது அங்கீகாரம்….. தஞ்சை பெரிய கோவிலின் குடமுழுக்கு தமிழ் முறைபடி நடக்கவேண்டும் என ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ வலியுத்தியுள்ளார். அவரது அறிக்கையில் 1010-ஆம் ஆண்டு ராஜராஜ சோழனால் கட்டி முடிக்கப்பட்ட தஞ்சை பெரிய கோவிலில் இறுதியாக 1996 ஆம் ஆண்டு குடமுழுக்கு நடைபெற்றதாக தெரிவித்துள்ளார். 23 ஆண்டுகளுக்கு பிறகு இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் நடைபெறவுள்ள குடமுழுக்கை தமிழ் முறைப்படி நடக்க வேண்டும் என தஞ்சை பெரிய கோவில் உரிமை மீட்புகுழு கோரிக்கை விடுத்து இருப்பதையும் […]
தமிழ் வழிபாட்டு முறையை மீட்டெடுக்கும் நோக்கில் தஞ்சைப் பெருவுடையார் கோயில் குடமுழுக்கு விழாவினை தமிழ் முறைப்படி நடத்திட வேண்டும் என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “வரும் பிப்ரவரி 5ஆம் நாள் நடைபெறவிருக்கும் தஞ்சை பெரிய கோயில் திருக்குடமுழுக்கு விழாவினைத் தமிழ் வழிபாட்டு முறையில் நடத்த வேண்டுகோள் விடுத்து, தஞ்சைப் பெரியகோயில் உரிமை மீட்புக்குழு நடத்துகிற மாநாடு முன்வைத்திருக்கும் கோரிக்கை அனைவருடைய கவனத்திற்குமானது. திராவிடக் கட்டடக்கலை என உலக […]
தஞ்சையில் இருதரப்புக்கிடையே நடந்த மோதலில் 2 பேர் மரணம் அடைய ஒருவர் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். தஞ்சாவூர் மாவட்டம் வடக்கு வாசல் பகுதியை அடுத்த இரட்டை பிள்ளையார் கோவிலை சேர்ந்தவர் செபஸ்டின். இவரும் இவரது நண்பருமான சதீஷ்குமார் ஆகியோர் வடக்குவாசல் சிரேஸ்சத்திரம் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடை எதிரே நின்று பேசிக்கொண்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த 4 பேர் இருவரிடமும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். வாக்குவாதம் முற்ற தகராறாக மாறியது. இதையடுத்து ஆத்திரமடைந்த நான்கு பேரும் செபஸ்டின் […]
தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் நெல் விவசாயத்திற்கு அடுத்தபடியாக, வாழையை அதிக அளவில் விவசாயிகள் சாகுபடி செய்து வருகிறார்கள். வாழையை முதன்மை பயிராகவும் ஊடுபயிராகவும் சில விவசாயிகள் செய்து வருகிறார்கள். கடந்த ஆண்டு கஜா புயலின் போது தென்னை மரங்களுக்கு இணையாக வாழைப் பயிர் அதிகம் சேதம் அடைந்தது. காய்ப்பு தரும் நேரங்களில் கஜா புயல் அடித்ததால் அனைத்து வாழை மரங்களும் வேரோடு பெயர்ந்தும், வாழைத்தார்களின் கனம் தாங்காமலும் கீழே விழுந்து […]
பெரிய கோயிலில் காதல் ஜோடிகள் நடந்துகொள்ளும் முறை பக்தர்கள் முகம் சுளிக்கும் வகையில் இருப்பதாக உள்ளது.மேலும் கோயிலின் புனிதம் கெடுகிறது என பொதுமக்கள் வேதனை தெரிவித்துள்ளனர். தமிழர்களின் கட்டடக்கலை மற்றும் சிற்பக்கலைக்கு எடுத்துக்காட்டாகவும் மற்றும் உலகப் பாரம்பரிய சின்னமாகவும் விளங்குகிறது தஞ்சைப் பெருவுடையார் கோயிலில். இந்த கோவிலுக்கு தினம்தோறும் உள்நாடு மற்றும் வெளிநாட்டைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் கோயிலைத் தரிசித்துச் செல்கின்றனர். இந்நிலையில் கடந்த சிலநாட்களாக குடமுழுக்குத் திருப்பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பெரிய […]
பெரிய கோயிலில் பக்தர்கள் முகம் சுளிக்கும் வகையில் நடந்து கொள்ளும் காதல் ஜோடிகளால், புனிதம் கெடுகிறது என பொதுமக்கள் வேதனை தெரிவித்துள்ளனர். தமிழர்களின் கட்டடக்கலை மற்றும் சிற்பக்கலைக்கு எடுத்துக்காட்டாகவும் யுனெஸ்கோவால் உலகப் பாரம்பரிய சின்னமாகவும் விளங்கி வரும் தஞ்சைப் பெருவுடையார் கோயிலில் தினம்தோறும் உள்நாடு மற்றும் வெளிநாட்டைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் கோயிலைத் தரிசித்துச் செல்கின்றனர். இந்நிலையில் கடந்த சிலநாட்களாக குடமுழுக்குத் திருப்பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பெரிய கோயிலுக்கு வரும் காதல் ஜோடிகள், […]
217 பள்ளிகள் பங்கேற்ற அறிவியல் கண்காட்சியில் ராக்கெட் ஏவுதலை தத்ரூபமாக செய்துகாட்டி அரசுப் பள்ளி மாணவர்கள் அசத்தியுள்ளனர். நாகை, திருவாரூர், தஞ்சாவூர் உள்ளிட்ட 3 மாவட்டங்களுக்கு இடையேயான மூன்று நாட்கள் நடைபெறும் அறிவியல் கண்காட்சி நாகையில் இன்று தொடங்கியது. தனியார் கல்லூரி மற்றும் நாகை பத்திரிகையாளர் மன்றம் சார்பாக நடைபெற்ற அறிவியல் கண்காட்சியை நாகை கோட்டாட்சியர் பழனிக்குமார் தொடங்கி வைத்தார். கண்காட்சியில் நாகை, திருவாரூர், தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 217 பள்ளிகளில் இருந்து 5200 மாணவ, […]
தஞ்சை மாவட்டம் திருவோணத்தில் காவல்துறையினரை கத்தி மற்றும் கட்டையை காட்டி மிரட்டியும் பல்லால் கடித்து காயப்படுத்தியும் தப்பி ஓடிய கள்ளச்சாராய வியாபாரிகளை காவல்துறையினர் தேடி வருகின்றனர். தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையை அடுத்த திருவோணம் பகுதியில் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்ப்பதாக அருண்பாண்டியன், இளங்கோவன் ஆகியோர் பற்றிய தகவல்காவல்துறையினருக்கு தெருவிக்கப்பட்டது. அதனையடுத்து அருண்பாண்டியன் மற்றும் இளங்கோவன் ஆகிய இருவரும் ஒரு திருமணத்தில் கலந்து கொள்ள இருப்பதை அறிந்து அங்கு சென்ற காவல் துறையினர் அவர்களை பிடிக்க முயன்ற […]
திருவள்ளுவர்,பாரதியார்,அப்துல்கலாம்,இயற்கை விவசாயி,நம்மாழ்வார் போன்று வேடம் அணிந்தவர்கள் உடன் வந்து வேட்பாளர் ஒருவர் வேட்பு மனுத்தாக்கல் செய்தது புதுமையாக இருந்தது. தஞ்சாவூர் ஒன்றியம் நாஞ்சிகோட்டை கிராம ஊராட்சித் தலைவர் பதவிக்கு 10க்கும் மேற்பட்டோர் வேட்புமனு தாக்கல் செய்துள்ள நிலையில் தென்னரசு என்பவர் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார். வேட்பு மனு தாக்கல் செய்ய வந்தபோது பலரது கவனத்தையும் ஈர்க்கும் வகையிலும், தான் நேர்மையானவன் என்ற செய்தியை மக்களுக்கு அளிக்கும் வகையிலும் திருவள்ளுவர்,பாரதியார்,அப்துல்கலாம்,இயற்கை விவசாயி,நம்மாழ்வார் போன்று வேடம் அணிந்தவர்களை உடன் […]
கேன்களில் அடைத்து சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை தயாரிக்கும் நிறுவனங்கள் அதற்கான ஒழுங்குமுறை சட்டத்தை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என உணவு தரக்கட்டுப்பாட்டு அலுவலர் தெரிவித்துள்ளார். தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் கிரேட்டர் தமிழ்நாடு அடைக்கப்பட்ட குடிநீர் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் 6 ஆம் ஆண்டு தொடக்க விழா, சங்கத்தின் துணைத் தலைவர் சந்திரபிரபு தலைமையில் நடைபெற்றது . தலைவர் அனந்தநாராயணன், அன்பு, ஞானசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், உணவு தரக்காட்டுப்பாட்டு ஆணைய மாவட்ட நியமன அலுவலர் டாக்டர் புஷ்பராஜ் கலந்து […]
தஞ்சாவூரில் 23 வயதான இளைஞர் ஒருவர் 8 பெண்களை ஏமாற்றி திருமணம் செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சந்தோஷ் வெறும் 23 வயதான இவர் இதுவரை எட்டு பெண்களை காதலித்து திருமணமும் செய்துள்ளார். இதுவரை திருமணம் செய்த 8 பெண்களுடனும் ஒருவருக்கு ஒருவர் தெரியாமல் மாறி மாறி வெளியூருக்கு வேலைக்கு செல்வதாக கூறி குடும்பம் நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் சந்தோஷ் கடைசியாக திருமணம் செய்த எட்டாவது பெண் அவரை நீண்ட நாட்களாக […]
கோத்தபய ராஜபக்ச இலங்கை அதிபராகப் பொறுப்பேற்றிருப்பது ஈழத்தமிழர்களுக்கும் தமிழ்நாட்டுத் தமிழர்களுக்கும் பேராபத்தை ஏற்படுத்தக்கூடியது என்றும் கோத்தபய இந்தியா வருவதை கடுமையாக எதிர்ப்போம் என்றும் மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி தெரிவித்துள்ளார். திப்பு சுல்தானும், இந்திய சுதந்திரப்போரும் என்ற தலைப்பில் தஞ்சையில் நடைபெற்ற கருத்தரங்கில் மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி கலந்துகொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “இலங்கையில் தமிழர்களை கொன்று குவித்த கோத்தபய ராஜபக்சவும், மகிந்த ராஜபக்சவும் அதிகாரத்திற்கு வந்திருப்பது தமிழர்களுக்கு […]
போலி ஆவணங்கள் மூலம் தொழிலதிபரை ஏமாற்ற முயன்ற ரியல் எஸ்டேட் அதிபர்கள் இருவரைக் காவல்துறையினர் கைது செய்தனர். தஞ்சாவூரைச் சேர்ந்தவர் தொழிலதிபர் பாலசுப்பிரமணியம். இவர் சென்னை கோடம்பாக்கத்தில் நிலம் வாங்க முடிவெடுத்து, கமலக் கண்ணன் என்ற ரியல் எஸ்டேட் அதிபரை அணுகியுள்ளார். இதனையடுத்து கோடம்பாக்கத்தில் 1.25 கிரவுண்ட் நிலம் விற்பனைக்கு வருவதாகக் கமலக்கண்ணன் கூறியுள்ளார். நிலம் தொடர்பான ஆவணங்களைத் தருமாறு தொழிலதிபர் பாலசுப்பிரமணியம் கேட்டுள்ளார். அப்போது முகமது பாட்ஷா என்பவரது நிலம் எனக்கூறி, ஆவணங்கள் சிலவற்றைக் கமலக் […]
தஞ்சாவூர் மாவட்டம் ஆத்தூர் அருகே ஆற்றங்கரையை ஒட்டி 30 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்ட தடுப்புச் சுவர் மூன்று மாதங்கள் கூட நிறைவடையாத நிலையில் இடிந்து விழுந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. தஞ்சாவூர்மாவட்டம் ஆத்தூர் பகுதியை அடுத்த கிராம பகுதிகளில் வெண்ணாறு கரையோரம் இருநூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்நிலையில் கிராமத்திற்குள் மழைக்காலங்களில் ஆற்று நீர் புகுந்து செல்லும் அபாயம் ஏற்படுகிறது. பல ஆண்டு கால போராட்டத்திற்கு பிறகு இந்த பிரச்சனைக்கு தீர்வு காணும் விதமாக […]
தொடர் மழையால் இந்தாண்டில் 2 மாதங்களில் 3வது முறையாக மேட்டூர் அணை நீர்மட்டம் 120 அடியை எட்டியது. கடந்த 17_ஆம் தேதி தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி பெய்து வருகின்றது. அதே போல காவேரி நீர் பிடிப்பு பகுதியிலும் மழை வெளுத்து வருகின்றது. தொடர்ந்து கொட்டிய கனமழையால் மளமளவென மேட்டூர் அணை நீர் மட்டம் உயர்ந்தது. இதை தொடர்ந்து இந்த ஆண்டில் 3வது முறையாக முழு கொள்ளளவான 120 அடியை எட்டியது.மேட்டூர் அணையின் நீர் மட்டம் கடந்த 86 […]
மூன்றாவது முறையாக மேட்டூர் அணை முழு நீர்மட்ட அளவை எட்டவுள்ள நிலையில், உபரி நீர் திறக்கப்படவுள்ளதால் காவிரி கரையோர மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கடந்த சில நாள்களாக மேட்டூர் அணையிலிருந்து திறக்கப்படும் நீரின் அளவு 20 ஆயிரம் கனஅடியிலிருந்து படிப்படியாக குறைக்கப்பட்டு இன்று 350 கனஅடியாக திறக்கப்பட்டது.காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளான கர்நாடக மாநிலத்தில் மழை பெய்துவருவதால், மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து அதிகரித்தது. இந்நிலையில், இன்று மாலை நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 118 […]
மாயனூர் கதவணையிலிருந்து திருச்சி, தஞ்சை மாவட்ட பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. கரூர் மாவட்டம் மாயனூர் கதவணையில் இருந்து புதிய கட்டளை வாய்க்காலில் தண்ணீர் திறக்க அரசு உத்தரவிட்டதை அடுத்து சட்டமன்ற உறுப்பினர் கீதா மதகுகளிலிருந்து தண்ணீர் திறந்து விட்டார். இந்தநிகழ்ச்சியில் கரூர் மாவட்ட ஆட்சியர் அன்பழகன், தஞ்சை மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை ஆகியோர் பங்கேற்று காவிரி நீருக்கு மலர்கள் நவதானியம் தூவி வரவேற்றனர். முதல் கட்டமாக வினாடிக்கு 100 கனஅடி வீதமும் போக போக வினாடிக்கு 400 […]
கும்பகோணத்தில் பெண்கள் உள்ள வீட்டின் முன்பு வந்து செல்போன் பேசக்கூடாது என கண்டித்த முதியவரை கொலை செய்த 2 இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர். தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே இன்னம்பூர் கிராமத்தைச் சேர்ந்த 65 வயதான ரத்தினம் கூலி தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். அதே பகுதியில் வசித்து வரும் பிரகாஷ் என்ற பெயர் கொண்ட 2 இளைஞர்கள் அவரது வீட்டின் அருகே நின்று செல்போனில் அடிக்கடி பேசி வந்துள்ளனர். இதை பார்த்த ரத்தினம் அவர்கள் இருவரையும் கண்டித்து, தட்டிக் […]
தஞ்சை பெரிய கோவிலை ஆளில்லா குட்டி விமானம் மூலம் வீடியோ எடுத்த நபர் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தஞ்சையை ஆட்சி செய்த ராஜராஜ சோழனால் கட்டப்பட்ட பெரியகோவில் உலக பாரம்பரிய சின்னமாக விளங்கி வருகிறது. வரலாற்று சிறப்புமிக்க சுற்றுலாத் தலமாகவும் இருக்கும் பெரிய கோவிலில் 22 ஆண்டுகளுக்குப் பிறகு அடுத்த ஆண்டு குடமுழுக்கு திருவிழா நடத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கான வேலைகளில் இந்து சமய அறநிலை துறை ஈடுபட்டுள்ளது. கோவில் பிரகாரத்தில் நடைபாதையை […]
ஒரத்தநாட்டில் முகநூல் காதலால் கால்நடை கல்லூரி மாணவி மர்மமான முறையில் உயிர்இழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது ஈரோடு மாவட்டம் பாலவாடி கிராமத்தை சேர்ந்த சுப்ரமணியன் என்பவரது 20 வயது மகள் இந்துமதி இவர் தஞ்சையில் உள்ள ஒரத்தநாடு அரசு கால்நடை கல்லூரியில் 3ஆம் வருடம் கல்லுரி மாணவிகள் விடுதியில் தங்கி படித்து வருகிறார்.எப்பொழுதும் மொபைலும் கையுமாக அலையும் இந்துமதி முகநூல் சார்டிங்கில் மூழ்கி கிடந்துள்ளார் .இதனால் சிவகங்கை மாவட்டம் இளையான் குடியை அடுத்த டி. புதுக்கோட்டையை சேர்ந்த சதீஷ்குமார் என்பவரது நட்பு […]
ராமலிங்கம் கொலை வழக்கு தொடர்பாக தேசிய புலனாய்வு துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் பல்வேறு பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டது. தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகேயுள்ள திருபுவனம் தூண்டில்விநாயகம்ப்பேட்டையை சேர்ந்த ராமலிங்கம் வாடகை பாத்திரக்கடையி ன் உரிமையாளர் ஆவார். இவர் கடந்த பிப்ரவரி 5_ம் தேதி அரிவாளால் வெட்டி கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக திருவிடைமருதூர் போலீசார் 16 பேர் மீது வழக்குபதிவு செய்து 11 பேரை கைது செய்தனர். மார்ச் 14 _ம் தேதி தேசிய புலனாய்வு துறைக்கு மற்றபட்ட இந்த வழக்கு நேற்று விசாரணை […]
ராமலிங்கம் கொலை வழக்கு தொடர்பாக தேசிய புலனாய்வு துறையினர் திருச்சி பாலக்கரையில் உள்ள பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அலுவலகத்தில் சோதனை நடத்தி வருகின்றனர். தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகேயுள்ள திருபுவனம் தூண்டில்விநாயகம்ப்பேட்டையை சேர்ந்த ராமலிங்கம் வாடகை பாத்திரக்கடையி ன் உரிமையாளர் ஆவார். இவர் கடந்த பிப்ரவரி 5_ம் தேதி அரிவாளால் வெட்டி கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக திருவிடைமருதூர் போலீசார் 16 பேர் மீது வழக்குபதிவு செய்து 11 பேரை கைது செய்தனர். இந்த வழக்கு மார்ச் 14 _ம் தேதி தேசிய புலனாய்வு […]
பாபநாசம் அருண் மொழி பேட்டையில் மின்னணு வாக்கு பதிவு இயந்திரம் கோளாறு காரணமாக 4 மணி நேரத்திற்கு பிறகு வாக்கு பதிவு செலுத்தப்பட்டு வருகிறது தமிழகத்தில் 38 மக்களவைத் தொகுதிகளுக்கான பாராளுமன்ற தேர்தலும், 18 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகின்றது. இதற்காக இன்று தமிழகம் முழுவதும் சுமார் 67 ஆயிரத்து 820 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குபதிவில் வாக்காளர்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்களிக்கின்றனர். சினிமா பிரபலங்கள் பலரும், அரசியல் […]