விவசாய நிலத்தில் குப்பைகளை எரித்துக்கொண்டிருக்கும் போது சேலையில் பிடித்த தீயினால் பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் உள்ள கம்மநாயக்கம்பட்டி கிராமத்தில் வசித்து வருபவர் சின்னச்சாமி. இவருடைய மனைவியான சின்னதாய் என்பவர் தனக்கு சொந்தமான விவசாய நிலத்தில் தேங்கிக் கிடக்கும் குப்பைகளை சேகரித்து அதில் தீயை பற்ற வைத்துள்ளார். அந்த சமயத்தில் வேகமாக வீசிய காற்றினால் எதிர்பாராதவிதமாக சின்னத்தாயின் சேலையில் தீப்பற்றியுள்ளது. இதை அவர் கவனிக்காமல் வேலையில் மும்முரம் காட்டியுள்ளார். பிறகு மளமளவென தீ […]
Tag: #tharmapuri
அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் தொடர்ந்து இரண்டாவது நாளாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தர்மபுரி மாவட்டத்திலுள்ள அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் இரண்டாவது நாளாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த போராட்டத்தில் அவர்கள் வலியுறுத்திய கோரிக்கைகளாவது அகவிலைப்படியுடன் கூடிய ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம் வழங்க வேண்டும், ஓய்வு பெறும் போது பணி கொடையாக அங்கன்வாடி ஊழியர்களுக்கு தலா ரூபாய் 10 லட்சமும் உதவியாளர்களுக்கு தலா ரூபாய் 5 லட்சமும் வழங்கப்பட வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி […]
வயலில் உள்ள மின்சாரம் தாக்கி பெண் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் உள்ள சின்னகுரும்பட்டி கிராமத்தில் வசித்து வந்தவர் நாகம்மாள். இவர் அவருடைய வீட்டின் அருகே உள்ள நிலத்தில் புல் அறுப்பதற்காக சென்றுள்ளார். அவர் சென்று வெகு நேரமாகியும் திரும்ப வராததால் குடும்பத்தினர்கள் அதிர்ச்சி அடைந்து அங்கு சென்று பார்த்துள்ளனர். அப்போது அங்குள்ள வயலில் மின்சாரம் தாக்கி நாகம்மாள் இறந்து கிடந்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்ததும் தர்மபுரி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து […]
லாரி மோதியதில் கூலித்தொழிலாளி பலியான சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். தர்மபுரி மாவட்டத்திலுள்ள கோரஅள்ளி பகுதியில் வசித்து வந்தவர் கூலித்தொழிலாளி குமரேசன். இவர் சம்பவம் நடந்த அன்று வீட்டில் வெளியே செல்வதாக கூறிவிட்டு இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். பின்னர் அவர் அங்குள்ள பஸ் நிலையம் அருகே சென்றபோது இருசக்கர வாகனம் நிலைதடுமாறியதில் கீழே விழுந்துள்ளார். அந்த சமயத்தில் இருசக்கர வாகனத்தின் பின்னே வந்த லாரி அவர் மீது எதிர்பாராமல் ஏறியுள்ளது. இதில் குமரேசன் சம்பவ […]
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் கேஸ் சிலிண்டர், பெட்ரோல், டீசல் ஆகியவற்றின் விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தர்மபுரி மாவட்டத்தில் தொலைபேசி நிலையம் முன்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் பெட்ரோல், டீசல், கேஸ் சிலிண்டர் போன்றவற்றின் விலை உயர்வை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அதில் நடுத்தர மற்றும் ஏழை எளிய மக்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் கேஸ் சிலிண்டர், டீசல், பெட்ரோல் ஆகியவற்றின் விலை உயர்வை மத்திய அரசு உடனடியாக திரும்ப பெற்றுக்கொள்ள வேண்டும். மேலும் உடனடியாக இது […]
ஆடு திருடிய வாலிபரை காவல்துறையினர் அதிரடியாக கைது செய்துள்ளனர். தர்மபுரி மாவட்டத்தில் உள்ள சீங்கேரி கிராமத்தில் முத்தப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவர் அவருடைய வீட்டில் ஆடுகளை வளர்த்து வருகிறார். இவர் சம்பவம் நடந்த அன்று ஒரு ஆட்டை சந்தையில் விற்பனை செய்வதற்காக மேக்கலாம்பட்டி கிராமத்தில் உள்ள ஒரு உறவினர் வீட்டில் ஆடை கட்டி போட்டுவிட்டு சென்றுள்ளார். பின்னர் மறுநாள் காலை வந்து பார்த்தபோது ஆடு திருடு போயிருந்தது தெரிய வந்துள்ளது. இதுகுறித்து காவல்நிலையத்தில் அவர் புகார் […]
பிறந்து 28 நாட்களான பச்சிளம் குழந்தை மர்மமான முறையில் இறந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அந்தேரிகொட்டாய் கிராமத்தில் வசித்து வருபவர் சின்னமுத்து-சாலம்மாள் தம்பதியினர். இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். இதனையடுத்து மீண்டும் கர்ப்பம் தரித்து கடந்த 30 நாட்களுக்கு முன்பு அவருக்கு ஒரு பெண் குழந்தை பிறந்துள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் பிறந்த குழந்தை மர்மமான முறையில் இறந்துள்ளது. இந்த சம்பவம் குறித்து நூலஅள்ளி கிராம நிர்வாக […]
அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியர் ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. தர்மபுரி மாவட்டத்திலுள்ள அவ்வையார் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் பணியாற்றி வந்த ஆசிரியை ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து கோவையில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் அந்த ஆசிரியை அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும் அவருடன் இருந்த மற்ற ஆசிரியர்களுக்கும் வகுப்பில் இருந்த மாணவர்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு அவர்களுக்கு தனிமைப்படுத்தபட்டுள்ளார்கள். இதனையடுத்து அந்தப் பள்ளியில் கொரோனா தொற்று பரவாத வகையில் பாதுகாப்பு பணிகள் […]
புடவையில் தொட்டில் கட்டி விளையாடும் போது கழுத்து இறுக்கி சிறுமி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பாகல்பட்டியை சார்ந்தவர் பன்னீர்செல்வம்-தமிழரசி தம்பதியினர். இவர்களுக்கு 3 பிள்ளைகள் இருந்தனர். பன்னீர்செல்வம் பெங்களூரில் தங்கி பணிபுரிந்து வருகிறார். அவரது மனைவியான தமிழரசி கூலிவேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் தமிழரசி நேற்று முன்தினம் கூலி வேலைக்கு சென்ற பிறகு மூன்று பிள்ளைகளும் புடவையில் தொட்டில் கட்டி விளையாடிக் கொண்டிருந்துள்ளனர். அப்போது புடவை செல்வராணி என்ற குழந்தையின் கழுத்தில் […]
மகளின் தவறான உறவை கண்டித்த தந்தை கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பிடமனேரி பகுதியை சார்ந்தவர் செல்வம்-சிவகாமி தம்பதியினர். செல்வம் மீன் வியாபாரியாக தொழில் செய்து வந்தார். கணவன் மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டதால் கடந்த நான்கு வருடங்களாக இவர்கள் பிரிந்து வாழ்கின்றனர். சிவகாமி தனது மூத்த மகளான ஜெயப்பிரியா மற்றும் அவருடைய கணவர் திருப்பதியுடன் கிருஷ்ணகிரியில் வசித்து வருகிறார். செல்வம் கடந்த 30ஆம் தேதி தனது மகளை பார்ப்பதற்காக கிருஷ்ணகிரிக்கு […]
பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து மாவட்ட கலெக்டர் அலுவலகத்தின் முன்பு மறியலில் ஈடுபட்ட அரசு ஊழியர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தர்மபுரி மாவட்டத்திலுள்ள அரசு ஊழியர்கள் கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று முன்தினம் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இவர்களின் கோரிக்கைகளாவது கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட உயிரிழந்த அரசு ஊழியர்களின் குடும்பங்களுக்கு ரூபாய் 50 லட்சம் வழங்க வேண்டும். கொரோனா பரவல் தடுப்பு பணியில் ஈடுபடும் அனைத்து ஊழியர்களுக்கும் சிறப்பு ஊதியம் அளிக்கப்பட வேண்டும். அரசுத் […]
பேருந்தை இயக்கிய போது எதிர்பாராத விதமாக அதில் அடிபட்டு 3 வயது பெண் குரங்கு இறந்துவிட்டது. கர்நாடகா மாநிலம் பெங்களூருக்கு தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல்லில் இருந்து அந்த மாநில அரசு பேருந்து இரவு நேரத்தில் புறப்பட்டு உள்ளது. இந்த பேருந்தை ஆனந்த் என்பவர் ஓட்டிச் சென்றுள்ளார். இந்த டிரைவர் பிலிகுண்டுலு பகுதியில் பேருந்தை நிறுத்திவிட்டு வனப்பகுதி சாலையில் நின்று கொண்டிருந்த குரங்குகளுக்கு பழங்களை கொடுத்துள்ளார். அதன்பின் பேருந்தை இயக்கிய போது, பேருந்தில் மூன்று வயதான பெண் குரங்கு […]
பள்ளி மாணவியை கடத்திய வாலிபர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். தர்மபுரி மாவட்டத்திலுள்ள நாகமரையை சார்ந்தவர் சின்னமுத்து. இவருடைய மகன் விஜய் என்பவர் கார் டிரைவராக பணிபுரிந்து வருகிறார். அதே பகுதியில் உள்ள பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்துக்கொண்டிருக்கும் ஒரு மாணவியை விஜய் கடத்தியதாக கூறப்படுகிறது. இந்த கடத்தல் குறித்து மாணவியின் பெற்றோர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இந்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் லதா போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக இருந்த […]
சந்தன மரம் வெட்டியவரை வனத்துறையினர் அதிரடியாக மடக்கிப் பிடித்து கைது செய்துள்ளனர். தர்மபுரி மாவட்டத்திலுள்ள சீரானபுரம் காப்புக்காட்டில் அருணா என்ற வனவர் வசித்து வருகிறார். அவருடன் சேர்ந்து வனக்காவலர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அந்த சமயத்தில் மாதேஷ் என்பவர் சந்தன மரத்தை வெட்டிக் கொண்டிருந்தார். மாதேஷ் வன காவலர்களை கண்டதும் அவர்களிடமிருந்து தப்பி ஓட முயற்சித்துள்ளார். ஆனால் காவலர்கள் அவரை மடக்கிப் பிடித்துள்ளனர். பின்பு வனத்துறையினர் மாதேஷை கைது செய்து அவரிடம் இருந்த 3 கிலோ […]
ஆற்றில் பள்ளி மாணவி மூழ்கி உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்திலுள்ள பத்தல அள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் ராமன்-காவிரியம்மாள் தம்பதியினர். இவர்களுக்கு மணிகண்டன் மதியழகன் மற்றும் முத்துலட்சுமி என்ற மூன்று பிள்ளைகள் இருந்தனர். முத்துலட்சுமி அந்த பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 1௦ ஆம் வகுப்பு படித்து கொண்டிருந்தார். கடந்த 28ஆம் தேதி காவிரியம்மாள் முத்துலட்சுமி மற்றும் அவரது தோழியான சஞ்சனா இருவரையும் அழைத்துக்கொண்டு நாகாவதி ஆற்றுக்குத் சென்றுள்ளார். அந்த ஆற்றில் கால்வாய் அமைப்பதற்காக ஆங்காங்கே […]
கூலி தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். தர்மபுரி மாவட்டத்திலுள்ள மொரப்பூர் பகுதியில் இருக்கும் போடிநாயக்கன்பட்டியைச் சார்ந்தவர் வேலு-கல்பனா தம்பதியினர். கூலித் தொழிலாளியாக வேலை செய்து வரும் இவருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். வேலு நீண்ட நாளாக தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு கொண்டிருந்தார். இதனால் மனமுடைந்த அவர் நேற்று முன்தினம் தனது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து […]
வாலிபர் தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தர்மபுரி மாவட்டத்திலுள்ள பாலக்கோடு பகுதியில் இருக்கும் செம்மநத்தத்தை சார்ந்தவர் கௌரி செட்டி. இவருடைய மகன் நடராஜன் என்பவர் பாலக்கோடு பகுதியில் செல்போன் கடை நடத்தி வந்துள்ளார். நடராஜன் அவருடைய உறவுக்கார பெண்ணை திருமணம் செய்ய எண்ணி பெண்ணின் பெற்றோரிடம் பெண் கேட்டும் கொடுக்க மறுத்துள்ளனர். இந்நிலையில் அந்த பெண்ணுக்கு வேறு ஒருவருடன் திருமணம் நடைபெற்றுள்ளது. இதனால் மனமுடைந்த நடராஜன் நேற்று வீட்டில் தனியாக […]
தருமபுரி மாவட்டத்தில் முதல் முறையாக ஒருவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. தமிழகத்தில் புதிதாக 54 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 1,683 ஆக உயர்ந்துள்ளது. இன்று மட்டும் 90 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனா பாதித்து சிகிச்சை பெற்று வந்தவர்களில் மொத்தம் 752 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கொரோனா பாதிக்கப்பட்ட இருவர் இன்று உயிரிழந்துள்ளனர். இதுவரை கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 20ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மேலும் […]
வேலூர்,தர்மபுரி, திண்டுக்கல் போன்ற மாவட்டங்களில் நேற்று மழை நன்றாக பெய்துள்ளது. அக்கினிநட்சத்திரம் ,தொடங்கிய நிலையில் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் கூடிக்கொண்டே போகும் நிலையில் ,திருத்தணியில் 113 டிகிரியும், வேலூரில் 110 டிகிரியும் வெப்பம் பதிவாகியுள்ளது . தமிழகத்தில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்த நிலையில் , நேற்று மாலை வேலூரில், பலத்த மழை ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பெய்தது . அதே போல் ,தர்மபுரியில் நேற்று மாலை […]
தர்மபுரியில் சூறாவளி காற்றுடன் பெய்த கன மழையில் 7 கிராமங்கள் உட்பட இருநூறுக்கும் மேற்பட்ட வீடுகள் மற்றும் மரங்கள் தென்னைகள் சேதமடைந்துள்ளது. தர்மபுரியில் சூறாவளி காற்றுடன் பெய்த கன மழையில் பஞ்சாயத்து ஊராட்சிக்கு உட்பட்ட வெங்கட்டம்பட்டி, தேமங்கலம், குட்டூர், புதூர் சவுளுக்கொட்டாய், கோடியூர் ஆவாரங்காட்டூர் ஆகிய 7 கிராமங்களில் இருநூறுக்கும் மேற்பட்ட வீடுகளின் மேற்கூரைகள் சேதமடைந்டுள்ளன. சூறாவளி காற்றுடன் பெய்த மழையினால் மின் கம்பங்கள் சாய்ந்து அந்த பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.இதையடுத்து அப்பகுதியில் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து வருவாய்த்துறையினர் […]
ஒகேனக்கலில் தொழிலாளர் தினம் மற்றும் கோடை விடுமுறையையொட்டி, அதிகளவில் சுற்றுலாப் பயணிகள் குவிந்த வண்ணம் உள்ளனர் தர்மபுரி மாவட்டத்தில் புகழ்பெற்ற சுற்றுலாத்தலமான ஒகேனக்கல்லுக்கு தமிழகம், மற்றும் அருகில் உள்ள மாநிலங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் வந்து மகிழ்ந்து செல்கின்றனர்இந்நிலையில் இன்று கோடை விடுமுறை மற்றும் தொழிலாளர் தினம் என்பதால் வழக்கத்திற்கு மாறாக சுற்றுலா பயணிகள் அதிகளவில் வந்திருந்தனர். வருகை தந்த சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் பரிசல், படகு சவாரி செய்தும், மெயினருவியில் குளித்தும் விடுமுறையை கழித்து மகிழ்ந்தன.மேலும் […]
கள்ள காதலனுடன் வாழ ஆசைப்பட்டு சொந்த கணவனே மனைவியை கொலை செய்தது தருமபுரி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது தர்மபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி அருகே உள்ள கிராமத்தை சேர்ந்தவர் மணி என்பவரது மகன் வெங்கடேசன் கட்டிட தொழிலாளியான இவர் முனியம்மாள் என்பவரை சில மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார் இந்நிலையில் வெங்கடேசன் தனது மனைவி முனியம்மாளுடன் தனது மாமியார் வீட்டுக்கு சென்றுள்ளார் . மாமியார் வீட்டில் விருந்து தனது வீட்டிற்கு புறப்பட்ட வெங்கடேசன், தனது மனைவியுடன் மோட்டார் […]