Categories
தேனி மாவட்ட செய்திகள்

‘தமிழ்நாட்டிலும் கொரோனாவா?’ தேனி மருத்துவமனையில் இருவர் அனுமதி

கொரோனா வைரஸ் அறிகுறியுடன் இரண்டு நபர்கள் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதால் தமிழ்நாடு மக்களிடையே பெரும் பரபரப்பு நிலவி வருகிறது. சீனாவில் கடந்த ஒரு மாதமாக அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் பாதிப்பால் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். மேலும் பல ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் ஜப்பான், ஹாங்காங், அமெரிக்கா உள்பட பல்வேறு நாடுகளிலும் கொரோனா வைரஸ் தாக்குதல் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து கேரள மாநிலத்தில் 20க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா வைரஸ் பாதித்துள்ளதாகக் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

ஒன்றரை வயதில் உலக சாதனை புரிந்த குழந்தை…!!

உலக நாடுகளின் கொடிகளை பார்த்தவுடன் அவற்றின் பெயர், இந்திய நாட்டின் தலைவர்கள், விளையாட்டு வீரர்களின் புகைப்படங்களைக் கண்டவுடன் அவர்களின் பெயர்களைக் கூறி அசத்தி ஒன்றரை வயதில் உலக சாதனை புரிந்த தேனியைச் சேர்ந்த சிறுவன் குறித்த சிறப்பு செய்தி தொகுப்பு  தேனி அருகே உள்ள ரத்தினம் நகரைச் சேர்ந்தவர் வருசை பீர் மைதீன் – நபிலாபேகம் தம்பதியினர். இவர்களது இரண்டரை வயது குழந்தை முகமது நதீனிடம் குழந்தைப் பருவத்திலேயே பழங்கள், பூக்கள் படங்களைக் காட்டி அதன் பெயர்களைக் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

இளைஞர்கள் நினைத்தால் எதுவும் சாத்தியமே – குமுளி மக்கள் பாராட்டு

குமுளி மலைப்பாதையில் சாலையின் இரு பக்கமும் குவிந்து கிடந்த 4.5 டன் பிளாஸ்டிக் கழிவுகளை இளைஞர்கள் நல அறக்கட்டளையினர் அகற்றியதால் பொதுமக்கள் இளைஞர்களுக்கு பாராட்டு தெரிவித்தனர். உலகம் முழுவதும் உலக இளைஞர் தினம் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. இளைஞர்களைப் போற்றும் இந்தத் தினத்தில் இளைஞர்கள் பொதுமக்களுக்கு தங்களால் இயன்ற, தேவையான நலத்திட்டங்களை செய்துவருகின்றனர். இதன் தொடர்ச்சியாக தமிழ்நாடு – கேரளா எல்லைப் பகுதியான குமுளி மலைப்பாதையில், குவிந்து கிடந்த பிளாஸ்டிக் பைகளை இளைஞர் குழுவினர் அகற்றினர். தேனி […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை உயர்த்த நடவடிக்கை ….!!

முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்துவதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என முல்லைப் பெரியாறு அணை கட்டிய கர்னல் ஜான் பென்னிகுவிக்கின் 179ஆவது பிறந்தநாள் விழாவில் துணை முதலமைச்சர் ஓ.பி.எஸ் பேட்டியளித்துள்ளார். தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்ட மக்களின் நீராதாரமாகத் திகழ்வது முல்லைப் பெரியாறு அணை. ஆங்கிலேயர்கள் ஆட்சிக் காலத்தில் பல்வேறு இடர்பாடுகளுக்கிடையே தனது சொத்துக்களை விற்று அதனை கட்டி முடித்தவர் கர்னல் ஜான் பென்னிகுவிக். […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

“தித்திக்கும் பொங்கல்”…கரும்பு விளைச்சல் அமோகம் …!!

 கரும்பு விளைச்சல் அமோகமாக இருப்பதால் விவசாயிகள் பெரும் மகிழ்ச்சியில் உள்ளனர் . பொங்கல் பண்டிகை என்றாலே அனைவருக்கும் நியாபகம் வருவது கரும்புதான் .அப்படிப்பட்ட சுவையான கரும்பு தேனி மாவட்டம்,பெரியகுளம் அருகே தேவதானப்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் அதிக அளவு  பயிரிடப்பட்டுள்ளது .பொங்கல் பண்டிகை நெருங்கி வரும் நிலையில் போதிய மழையால் தற்போது கரும்புகள் அறுவடை செய்வதற்கு தயார் நிலையில் இருக்கின்றன . கடந்த ஆண்டு 10கரும்புகள் கொண்ட 1கட்டு 300ரூபாய்க்கு வாங்கப்பட்ட நிலையில்,இந்த ஆண்டு 400ரூபாய்க்கு […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

“நியூட்ரினோ ஆய்வு திட்டத்திற்கு எதிர்ப்பு” தொடரும் பரபரப்பு ….!!

நியூட்ரினோஆய்வு திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து , போரட்டம் நடத்தி வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தேனி மாவட்டம் அம்பரப்பர் மலை பகுதியில் அமைய உள்ள நியூட்ரினோஆய்வு திட்டத்திற்கு கிராம மக்களும் , இயற்கை ஆர்வலர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறை ஆகிய துறை சார்பாக இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.நுண்துகள் மற்றும் பிரபஞ்ச யுக்திகளை கண்டறியும் ஆய்வாக இது அமைகின்றது. இந்த ஆய்விற்காக மலையை குடைந்து ஆய்வுமையத்தை தேனிமாவட்டத்தில் அமைக்கின்றனர். இது அங்குள்ள கிராமப்புரவாசிகள் மற்றும் இயற்கை […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

57 வயது மூதாட்டி பலாத்காரம் செய்து கொலை…. தேனியில் கொடூரம் ..!!

தேனியில் 57 வயதான மூதாட்டியை பலாத்காரம் செய்து கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் ஓடைத்தெருவில் சேர்ந்தவர் மூதாட்டி சாந்தி.  57 வயதான மூதாட்டி சாந்தி அருகேயுள்ள உழவர் சந்தையில் சிறு, சிறு வேலைகள் செய்து தனது வாழ்க்கையை நடத்தி வந்தார்.நேற்று இரவு மூதாட்டி வேலை செய்து கொண்டு இருக்கும் போது  அங்கே வந்த ஒரு கும்பல் மூதாட்டியை கொடூரமாக பலாத்தகாரம் செய்துள்ளனர். இதில் அந்த மூதாட்டி உயிரிழந்துள்ளார். பின்னர் காலை மூதாட்டியின் சடலத்தை […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

விவகாரத்தால் வந்த விபரீதம்…!!

போடியில் கணவர் விவாகரத்து நோட்டீஸ் அனுப்பியதால், குழந்தையும் தாயும் விஷம் குடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  தேனி மாவட்டம் போடிநாயகனுறைச் சேர்ந்த பிரியங்கா, தனது கணவர் பல்லவராஜன் மீது  கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்துள்ளனர். இந்நிலையில் 15 மாத பெண் குழந்தையுடன் தாய் வீட்டில் வசித்து வந்துள்ளார். மேலும் பிரியங்காவுக்கு பல்லவராஜன் அண்மையில் விவாகரத்து நோட்டீஸ் அனுப்பியதாகக் கூறப்படுகிறது. இச்சம்பவம் தொடர்பாக பல்லவராஜன் குடும்பநல நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இதனால் மனமுடைந்த பிரியங்கா போடியில் உள்ள முருகன் கோவிலுக்கு சென்று  தனது மகளுக்கு விஷம் கொடுத்து […]

Categories

Tech |