அரசு வழங்கிய இலவச வீட்டு மனை பட்டா நிலத்தை தனிநபர்கள் ஆக்கிரமிப்பு செய்ததால் கிராம மக்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். தென்காசி மாவட்டத்தில் உள்ள ஏ.பி. நாடானூரில் 9 பேருக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அரசு கொடுத்த நிலத்தில் 2 பேர் நிலங்கள் தவிர மற்ற இடங்களை சிலர் போலி பட்டா மற்றும் பத்திரம் தயார் செய்து கிரையம் செய்ததாக கூறப்படுகின்றது. இது பற்றி அப்பகுதி மக்கள் ஏற்கனவே போராட்டம் நடத்தி, […]
Tag: thenkasi
குளத்தில் மூழ்கி மாணவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள செல்லாத்தாயார்புரம் அம்மன் கோவில் பகுதியில் பொன்னுதுரை என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கண்ணன் என்ற மகன் இருந்துள்ளார். இவர் தனியார் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் தனது நண்பர்களுடன் குளத்திற்கு கண்ணன் குளிக்க சென்றுள்ளார். அப்போது கண்ணன் எதிர்பாராவிதமாக தண்ணீரில் மூழ்கியுள்ளார். இதனை பார்த்த நண்பர்கள் அதிர்ச்சி அடைந்து சத்தம் போட்டு அருகில் இருந்தவர்களை வரவழைத்து கண்ணனை மீட்டு சிகிச்சைக்காக அரசு […]
மணல் கடத்தலில் ஈடுபட்ட நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தென்காசி மாவட்டத்தில் உள்ள மேலஇலந்தைகுளம் பகுதியில் தேவர்குளம் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக வந்த டிராக்டரை சந்தேகத்தின் பேரில் நிறுத்தி சோதனை செய்ததில் மணல் கடத்தி வந்தது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் டிரக்டரை ஒட்டி வந்த யாகப்பராஜ் என்பவரை கைது செய்துள்ளனர். மேலும் மணல் கடத்தலுக்கு பயன்படுத்திய டிராக்டரையும் காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
ஆட்டோ ஓட்டுநரை சரமாரியாக வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள சின்னக் கோவிலாங்குளம் பகுதியில் இளங்கோவன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஆட்டோ ஓட்டுநராக வேலைப்பார்த்து வந்துள்ளார். இவருக்கு உஷா என்ற மனைவி உள்ளார். இவர்களுக்கு ஒரு மகள் உள்ளனர். இந்நிலையில் வாக்களிப்பதற்காக சொந்த ஊருக்கு வந்த இளங்கோவன் வீட்டிலிருந்து வெளியே சென்றுள்ளார். ஆனால் நீண்ட நேரம் ஆகியும் வீட்டிற்கு வராத காரணத்தினால் குடும்பத்தினர்கள் பல இடங்களில் அவரை தேடியுள்ளனர். அப்போது ஆலங்குளம் […]
மன உளைச்சலில் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியதுள்ளது. தென்காசி மாவட்டத்தில் உள்ள குலாளர் பகுதியில் காளிராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சந்திரா என்ற மனைவி உள்ளார். இவர்களுக்கு திருமணமாகி ஜீவா என்ற மகன் இருந்துள்ளார். இவர் தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி படித்து வந்துள்ளார். இந்நிலையில் காளிராஜிக்கு மது அருந்தும் பழக்கம் இருப்பதாக தெரியவந்துள்ளது. அதன்பின் அவர் தினமும் குடித்து விட்டு மனைவியிடம் தகராறில் ஈடுபடுவதாக கூறப்படுகிறது. இதனால் மகன் ஜீவா […]
வேளாண்மை கூட்டுறவு வங்கியில் நகை கடன் வழங்க மறுத்ததால் பொதுமக்கள் வங்கியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தென்காசி மாவட்டத்தில் உள்ள மருக்காலங்குளம் வேளாண்மை கூட்டுறவு வங்கியில் கடந்த பிப்ரவரி மாதம் நகை கடன் வழங்குவதற்காக பொதுமக்களுக்கு டோக்கன்கள் வழங்கப்பட்டுள்ளது. அதன்பின் நேற்று டோக்கன்கள் வழங்கிய நபர்களை நகைக்கடன் பெற்றுக்கொள்வதற்காக வங்கிக்கு அதிகாரிகள் வரச்சொல்லியுள்ளனர். அதனால் பொதுமக்கள் நேற்று வேளாண்மை கூட்டுறவு வங்கிக்கு சென்றுள்ளனர். இந்நிலையில் அதிகாரிகள் திடீரென்று யாருக்கும் நகைக் கடன் வழங்கப்படமாட்டாது என அறிவித்ததையடுத்து ஏமாற்றமடைந்த பொதுமக்கள் […]
நெல்லை மாவட்டத்தில் மேலும் 17 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தை பொறுத்தவரை நேற்று வரை சுமார் 410 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 360 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 49 பேர் சிகிச்சை பெற்று வந்தனர். இந்த நிலையில் இன்று 17 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதால் கொரோனோவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கையானது 427ஆக உயர்ந்துள்ளது. மேலும் 66 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார். […]
நெல்லை மாவட்டத்தில் சலூன் கடை உரிமையாளர் உட்பட 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 403ஆக உயர்ந்துள்ளது. மேலும் 345 பேர் குணமடைந்துள்ள நிலையில் தற்போது 53 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். ஒருவர் உயிரிழந்துள்ளார். தென்காசியில் 5 பேருக்கும் புதிதாக கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தென்காசி மாவட்டத்தில் இதுவரை 111 பேர் கொரோனோவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 88 பேர் இதுவரை குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில் தற்போது […]
இன்று நெல்லை மாவட்டத்தில் புதிதாக 32 பேருக்கும், தென்காசியில் புதிதாக 2 பேருக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் பல்வேறு தளர்வுகளுடன் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு மே 31ம் தேதி வரை கடைபிடிக்கப்படுகிறது. மேலும் ஊரடங்கு நீட்டிப்பு மற்றும் தளர்வுகள் குறித்து மருத்துவக் குழு நிபுணர்களோடு எடப்பாடி பழனிசாமி இன்று ஆலோசனை நடத்த உள்ளார். இருப்பினும் தமிழகத்தில் கொரோனா தாக்கம் குறைந்த பாடில்லை. தமிழகத்தில் மொத்தமாக கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 17,082 ஆக அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக […]
கடலூர், திருவாரூர், அரியலூர், தஞ்சையை தொடர்ந்து தென்காசி மாவட்டத்திலும் நாளை முழு ஊரடங்கு பிறப்பிக்கப்படும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 2,526 ஆக அதிகரித்துள்ளது. மேலும் இதுவரை 28 பேர் உயிரிழந்துள்ளனர். இன்று மேலும் ஒரு உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. அதிகபட்சமாக சென்னையில் மட்டும் மொத்தம் 1,082 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில், அரியலூரில் புதியதாக 19 பேருக்கு கொரோனோ பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் அம்மாவட்டம் ஆரஞ்சு மண்டலத்திலிருந்து சிவப்பு மண்டலமாக மாற்றப்பட்டுள்ளது. […]