Categories
சென்னை மாவட்ட செய்திகள்

வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளையடிக்க முயன்ற கும்பல்…. துணிந்து விரட்டிய இளைஞர்கள்!

 அம்பத்தூர் அருகே வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி செய்த கும்பலை, அப்பகுதி இளைஞர்கள் துரத்தியதில் இருசக்கர வாகனத்தை விட்டுவிட்டு தப்பி ஓடினர். சென்னை அம்பத்தூர் மேனாம்பேடு இந்திரா நகர் பகுதியில் வசித்து வருகிறார் சத்தியராஜ். இவர் அம்பத்தூர் தொழிற்பேட்டை பகுதியில் இருக்கும் தொழிற்சாலையில் வேலைபார்த்து வருகின்றார். இந்த சூழலில் கொரோனா தொற்று காரணமாக ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளதால் இவர் குடும்பத்துடன் கடந்த 24ஆம் தேதி சொந்த ஊரான புதுக்கோட்டைக்குச் சென்றுள்ளார். இந்நிலையில், இன்று அதிகாலை 2 […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

உஷார்: தாகமா இருக்கு கொஞ்சம் தண்ணி கொடுங்க … சிக்கிய இளைஞருக்கு 7 ஆண்டு சிறை தண்டனை..!

திருச்சி: புத்தூர் அருகே தாகத்திற்குத் தண்ணீர் கேட்பதுபோல் நடித்து, 10 சவரன் செயின் பறித்த இளைஞருக்கு, ஏழு ஆண்டு சிறை தண்டனை விதித்து மாவட்ட தலைமை குற்றவியல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. திருச்சி புத்தூர் கனரா வங்கி காலனியைச் சேர்ந்தவர் சுபா (40). 2014ஆம் ஆண்டு நவம்பர் ஆறாம் தேதி வீட்டின் முன்பு சுபா நின்றுகொண்டிருந்துள்ளார். அப்போது அவ்வழியே வந்த இளைஞர் ஒருவர், தனக்குத் தாகமாக உள்ளதாகக் கூறி குடிக்க தண்ணீர் வேண்டும் எனக் கேட்டுள்ளார். இதையடுத்து சுபா […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

காவல் நிலையம் அருகிலேயே மூதாட்டியிடம் நகையைப் பறித்த பலே திருடர்கள்..!

காவல் நிலையம் அருகில் சென்றுகொண்டிருந்த மூதாட்டி ஒருவர் கழுத்தில் அணிந்திருந்த, 12 சவரன் தங்க நகைகளை அடையாளம் தெரியாத நபர்கள் பறித்துச் சென்ற சம்பவம் நிகழ்ந்துள்ளது. சேலம் சூரமங்கலம் கென்னடி நகர் பகுதியில் வசித்துவரும் சந்திரா (72) என்ற மூதாட்டி, தனது வீட்டிலிருந்து சூரமங்கலம் காவல் நிலையத்திற்கு அருகிலுள்ள உழவர் சந்தையில் காய், கனிகளை வாங்கிக் கொண்டு வீடு திரும்பியபோது, அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் தலைக்கவசம் அணிந்துவந்த இரண்டு நபர்கள், மூதாட்டி கழுத்தில் அணிந்திருந்த 12 சவரன் […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

வீடு புகுந்து மீனை ருசித்து சாப்பிட்ட திருடர்கள் ….!!

விழுப்புரம் மரக்காணம் அங்கே திருவடியில் அரசுப் பொறியாளர் செந்தில்குமார் வீட்டுக்குள் புகுந்த அவர்கள் பேண்ட் பாக்கெட்டில் இருந்த பணத்தை திருடிச் சென்றனர். நாட்டின் பல்வேறு பகுதிகளில் கொள்ளை சம்பவமானது என்பது தினமும் வாடிக்கையான நிகழ்வாக அரங்கேறி வருகின்றது.இதில் பல்வேறு பகுதிகளில் திருடச் செல்லும் திருடர்கள் பல்வேறு குசும்புத்தனத்தை செய்து வருவதும் வாடிக்கையாக இருந்து வருகின்றது.கொள்ளை அடித்த கடை சுவற்றில் நாமம் போட்டுவைத்து , பணம் இல்லை என்று அறிந்த கொள்ளையர்கள் கடிதம் எழுதி வைத்துச் சென்றது , வீடுகளுக்கு […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

கூட்ட நெரிசலில் ….. செல்போன் , பைக் ….. சிக்கிய தீபாவளி திருடர்கள் …!!

வண்ணாரப்பேட்டையில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி பொதுமக்களிடம் இருந்து செல்போன், கைப்பை திருடும் கும்பலை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சென்னை வண்ணாரப்பேட்டையில் உள்ள ஜவுளிக்கடைகளில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தண்டையார்பேட்டை, திருவொற்றியூர், பெரம்பூர், வியாசர்பாடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து பொதுமக்கள் துணி வாங்குவதற்காக குவிகின்றனர்.அந்த நேரத்தில் பொதுமக்களின் கூட்ட நெரிசலில் அவர்களுடைய நகை பறிப்பு, கைப்பேசி பறிப்பு போன்ற திருட்டுச் சம்பவங்களும் நடக்கின்றன. இதற்காக பழைய வண்ணராப்பேட்டை காவல் துறையினர் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைளை மேற்கொண்டுவருகின்றனர்.மேலும் கூட்ட […]

Categories
உலக செய்திகள்

ரூ8,88,00,000 ”தங்க டாய்லெட்” தூக்கிய திருடர்கள்…..!!

பிரிட்டனில் தங்க டாய்லெட்_டை திருடர்கள் திருடிச் சென்றது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். பணம் பத்தும் செய்யும் , பணம் என்றால் பிணம் கூட வையை திறக்கும் என்பார்கள். அதே போல பணத்துக்காக டாய்லெட்-டை திருடர்கள் திருடிச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆம் திருடு போனது சாதாரண  டாய்லெட் அல்ல. தங்கத்தால் செய்த  டாய்லெட். இதோட மதிப்பு ரூபாய் 8 கோடியே 88 லட்சமாகும். பிரிட்டன் நாட்டின் முன்னாள் வின்ஸ்டன் பிறந்த பிளென் ஹெய்ம் மாளிகையில் வைப்பதற்காக இத்தாலிய கலைஞரால் வடிவமைக்கப்பட்ட […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

பூட்டை உடைத்து 21 பவுன் நகை மற்றும் ரூ.2 லட்சம் கொள்ளை மர்மநபர்கள் கைவரிசை…!!

கொட்டாம்பட்டி அருகில்  வீட்டின் பூட்டை உடைத்து 21 பவுன் நகை மற்றும் ரூ.2 லட்சத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.  மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டி அடுத்துள்ள குன்னாரம்பட்டியை சேர்ந்தவர் துரைப்பாண்டி. 60 வயதான இவர் விவசாயியாக உள்ளார் . சம்பவத்தன்று  துரைப்பாண்டியும், அவரது மனைவியும் சேக்கிபட்டியில் உள்ள தங்களது தோட்டத்திற்கு சென்றுள்ளார். இதனால் துரைப்பாண்டி வீடு பூட்டிக்கிடப்பதை அறிந்த  மர்ம நபர்கள் பூட்டை உடைத்து பீரோவில் உள்ள வைக்கப்பட்டிருந்த 21 பவுன் நகைகள் […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

கடையை உடைத்து ரூ 2,00,000 மதிப்புள்ள பொருள்கள் திருட்டு….. மர்ம நபர்கள் கைவரிசை…!!

கும்மிடிப்பூண்டியில் கடையின் பூட்டை உடைத்து ரூ 2 லட்சம் மதிப்புள்ள பொருள்கள் கொள்ளை போன சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி பஜாரில் உள்ள சாமிரெட்டி பகுதியில் வாடகை கட்டிடத்தில் கடை நடத்தி வருபவர் மனாராம். எலக்ட்ரிக் மற்றும் இரும்பு கடை நடத்தி வந்த இவர் சம்பவத்தன்று  காலை வழக்கம் போல கடையை திறக்க  சென்றார். அப்போது  கடையின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்த மனாராம் பின்னர் கடைக்குள்  சென்று பார்த்தபோது  கல்லாப்பெட்டி உடைக்கப்பட்டு  அதில் இருந்த ரூ.47 ஆயிரம் மற்றும் ரூ.2 […]

Categories

Tech |