தொழிற்சாலையில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள சின்னசேலம் பகுதியில் தொழிற்சாலை உரிமையாளரான ரவிசங்கர் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் சின்னசேலம் சுற்றுவட்டார பகுதிகளில் வசிக்கும் 100-க்கும் அதிகமான பெண்கள் அவரின் தொழிற்சாலையில் வேலை பார்த்து வருகின்றனர். அதன்பின் இரவு நேரத்தில் பணிகளை முடித்ததும் ரவிசங்கர் தொழிற்சாலையை பூட்டி விட்டு தனது வீட்டிற்கு சென்று தூங்கியுள்ளார். அப்போது தொழிற்சாலை திடீரென தீப்பிடித்து எரிந்துள்ளது. இதனை பற்றி தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் […]
Tag: thii vipathu
குளத்தில் குளிக்க சென்ற சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள குளத்து மேட்டு பகுதியில் ஏழுமலை என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு குபேரன் என்ற மகன் இருந்துள்ளார். இவர் அதே பகுதியில் இருக்கும் தனியார் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் குபேரன் தனது தம்பி வேலு மற்றும் நண்பர்கள் ஆகாஷ், லெவின், சஞ்சய் ஆகியோருடன் சேர்ந்து குளத்தில் குளிப்பதற்கு சென்றுள்ளார். அப்போது சிறுவர்கள் குளித்து கொண்டிருந்த நிலையில் […]
விநாயகர் சிலைகளை கரைக்க சென்ற இடத்தில் திடீரென பற்றி எரிந்த தீயால் பொதுமக்கள் அலறியடித்து ஓடியுள்ளனர். கடலூர் மாவட்டத்திலுள்ள சில்வர் பீச்சில் விநாயகர் சிலைகளை தனிநபர்கள் சென்று கரைக்கலாம் என காவல்துறை அறிவித்திருந்த நிலையில் திடீரென காவல்துறையினர் அங்கு சிலைகளை கரைக்க தடைவிதித்துள்ளனர். இதனால் விநாயகர் சிலைகளை தண்ணீரில் கரைக்க மாற்று இடத்தை தேர்வு செய்துள்ளனர். இந்நிலையில் சில்வர் பீச்சுக்கு செல்கின்ற வழியில் இருக்கும் உப்பனாற்றில் பொதுமக்கள் சிலைகளை வைத்து கற்பூரம் ஏற்றி வழிபட்டுள்ளனர். அப்போது ஒரு […]
மனநலம் பாதிக்கப்பட்ட பிளம்பர் உடலில் தீ வைத்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள சின்ன அருங்கால் கிராமத்தில் கன்னியம்மன் கோவில் பகுதியில் செல்வம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பிளம்பராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் 2 வருடங்களாக சிறிது மனநிலை பாதிக்கப்பட்ட காரணத்தினால் வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்துள்ளார். அப்போது திடீரென தனது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்டுள்ளார். அவரின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த […]
திடீரென வீட்டில் தீப்பிடித்த காரணத்தினால் 50 ஆயிரம் மதிப்புள்ள பொருட்கள் அனைத்தும் சேதம் அடைந்துள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள பாக்கம் மேல்புதூர் பகுதியில் ஏழுமலை என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஜெயா என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் இரவு நேரத்தில் வீட்டு வேலைகளை முடித்து விட்டு ஜெயா தூங்கச் சென்றுள்ளார். அப்போது திடீரென வீட்டில் தீப்பிடித்து புகை மூட்டம் ஏற்பட்டதனால் அதிர்ச்சி அடைந்த ஜெயா வெளியே ஓடி வந்துள்ளார். ஆனால் அதற்குள் தீ கொழுந்து விட்டு எரியத் […]