பால் பாக்கெட்டுகளில் திருக்குறளை அச்சிடுவதை விட பொது மக்கள் தினசரி செல்லும் இடங்களில் திருக்குறளை பதிவு செய்ய தமிழ்நாடு அரசு முன்வரவேண்டும் என தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார். விருதுநகர் மாவட்டத்திற்கு வருகை தந்திருந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் செய்தியாளர்களிடம் பேசுகையில், சென்னை ஐஐடி மாணவி பாத்திமா பேராசிரியர்கள் அளித்த மன உளைச்சலால் காரணமாக தற்கொலை செய்து கொண்டுள்ளார். இது போன்ற நிகழ்வு சென்னை ஐஐடி மட்டுமல்லாது நாடு முழுவதும் உள்ள உயர்கல்வி நிறுவனங்களிலும் நடைபெறுகிறது. […]
Tag: #Thirukkural
திருவள்ளுவர் குறித்து சர்ச்சைக்குரிய படத்தை வெளியிட்ட பாஜகவை சிதம்பரம் தன் ட்விட்டர் பக்கத்தில் விமர்சித்துள்ளார். தமிழ்நாடு பாஜக தன் ட்விட்டர் பக்கத்தில் நவம்பர் 1ஆம் தேதி பதிவு ஒன்றை வெளியிட்டு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. பாஜக இட்ட அந்தப் பதிவில் காவி உடையணிந்து நெற்றியில் திருநீறு பூசியிருப்பது போல் திருவள்ளுவரின் படம் இருந்தது.இதனைத் தொடர்ந்து, தஞ்சாவூர் மாவட்டம் பிள்ளையார்பட்டியிலுள்ள திருவள்ளுவர் சிலை மீது அடையாளம் தெரியாத நபர்கள் கறுப்பு மை பூசியும் மாட்டுச் சாணத்தை வீசியும் சென்றனர். […]
திருவள்ளுவரை அவமதித்தவன் மண்ணிற்கு பாரம் என திருவாடானை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கருணாஸ் தெரிவித்துள்ளார். சிவகங்கையில் செய்தியாளர்களை சந்தித்த அவர் பன்முகத்தன்மையை வைத்துக்கொண்டுதான் உலக அளவில் இந்தியா அடையாளப்படுத்தப்பட்டு வருகிறது என்றும், உலகிற்கு பொதுவான திருவள்ளுவருக்கு மத சாயம் பூசுவது தவறு என்றும் கருணாஸ் தெரிவித்தார். மேலும் திருவள்ளுவர் மீது மாட்டு சாணி அடிப்பதற்கு என்ன இருக்கு? எப்பேர்ப்பட்ட மகான் அவர், இப்படி கீழ்த்தனமானவன் இந்த மண்ணுக்கு பாரமா? இவன் இருந்தா என்ன ? செத்தா என்ன ? இவனை பிடிக்கனும் , விசாரணை செய்யணும். […]