கூலி தொழிலாளி அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள குடியான்குப்பம் ராம கவுண்டர் வட்டம் பகுதியில் ரத்த காயங்களுடன் ஆணின் சடலம் கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் போலீசருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் அந்த நபரின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்கு பதிந்த போலீசார் நடத்திய விசாரணையில் சடலமாக மீட்கப்பட்ட நபர் கூலி தொழிலாளியான கோவிந்தராஜ்(50) […]
Tag: thirupathur
திருப்பத்தூர் மாவட்டம் பள்ளி பகுதியில் அண்ணாதுரை என்பவர் வசித்து வருகின்றார். அதே பகுதியில் கொத்தூர் கிராமத்தில் முருகன் என்பவர் வசித்து வருகின்றார். இவர்கள் இருவருமே உறவினர்கள் ஆவர். இவர்கள் இருவருக்கும் முன் விரோதம் இருந்து வந்துள்ளது. அதனை மனதில் வைத்துக் கொண்டு இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்படுவது வழக்கம். இந்நிலையில் முருகன் தனது கை துப்பாக்கியை காட்டி அண்ணாதுறையை மிரட்டி உள்ளார். பின்னர் இவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டுள்ளனர். இதில் அண்ணாதுரைக்கு பலத்த […]
சிறுமியை கடத்தி சென்று திருமணம் செய்த வாலிபர் போலீஸ் விசாரணைக்கு பயந்து தீக்குளித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்திலுள்ள வாணியம்பாடி சி.எல் காலனி பகுதியில் திருநாவுக்கரசு(21) என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த 14-ஆம் தேதி திருநாவுக்கரசு அதே பகுதியில் வசிக்கும் சிறுமியை கடத்தி சென்று திருமணம் செய்துள்ளார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் வாணியம்பாடி டவுன் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்த போலீசார் விசாரணை […]
லாரி சக்கரத்தில் சிக்கி அக்காள்-தங்கை பலியான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்திலுள்ள வீராங்குப்பம் பகுதியில் தண்டபாணி-அனுராதா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு ஜெயஸ்ரீ(16), வர்ஷா ஸ்ரீ(12) என்ற இரண்டு மகள்கள் இருந்துள்ளனர். இதில் ஜெயஸ்ரீ புதுகோவிந்தாபுரம் பகுதியில் இருக்கும் தனியார் பள்ளியில் 11-ஆம் வகுப்பும், வர்ஷா ஸ்ரீ 6-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளனர். கடந்த 2 நாட்களுக்கு முன்பு தண்டபாணி தனது மகள்களை மோட்டார் சைக்கிளில் பள்ளிக்கு அழைத்து சென்றுள்ளார். இந்நிலையில் ஆம்பூர் ஓ.ஏ.ஆர் […]
திருப்பத்தூர் மாவட்டம், புதுப்பேட்டை அருகே அக்ராவரம் கிராமத்தில் மலை மீது சீனிவாச பெருமாள் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் புரட்டாசி மாத விழா கொடியேற்றத்துடன் தொடங்கியுள்ளது. இந்நிலையில் சீனிவாச பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை மற்றும் அன்னதானம் நடைபெற்றுள்ளது. அடுத்த மாதம் (அக்டோபர்) 15-ஆம் தேதி வரை தொடர்ந்து 5 சனிக்கிழமை சிறப்பு அபிஷேகம், ஆராதனை, அன்னதானம் நடைபெற உள்ளது. நேற்று நடைபெற்ற விழாவில் நாட்டறம்பள்ளி, திருப்பத்தூர், வாணியம்பாடி, உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் […]
வாட்ஸ்அப் மூலம் புகார்களை தெரிவிக்கலாம் என நகராட்சி நிர்வாகத்தினர் அறிவித்துள்ளனர். திருப்பத்தூர் நகராட்சியில் 36 வார்டுகள் இருக்கிறது. இங்கு குடிநீர் வினியோகம், பொது சுகாதாரம், மழை நீர் தேங்கியுள்ள இடங்கள், தெருவிளக்கு போன்ற அடிப்படை வசதிகள் குறைபாடுகள் ஏற்படுகிறது. இதுகுறித்து பொதுமக்கள் வாட்ஸ் அப் மூலம் புகார் அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி 7397392682 (நகராட்சி பொறுப்பாளர்), 7397392681 (ஆணையாளர்), 9380403604 (துப்புரவு அலுவலர்) ஆகியோரின் செல்போன் வாட்ஸ்அப் எண்ணில் புகார்களை அனுப்பலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
லாரி பள்ளத்தில் தலைகீழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள வாணியம்பாடியில் இருந்து நேற்று முன்தினம் இரவு நேரத்தில் லாரி ஒன்று வேலூர் நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் ஜமீன் பகுதியில் சென்ற போது திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி தாறுமாறாக ஓடி சாலையோரம் இருந்த பள்ளத்தில் தலைகீழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. அப்போது தேசிய நெடுஞ்சாலை ரோந்து பணி போலீசார் லாரி அருகே சென்று பார்த்தபோது ஓட்டுனரும், கிளீனரும் தப்பி ஓடினர். […]
விவசாய கிணற்றில் தவறி விழுந்து கூலித்தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள மாக்கனூர் பகுதியில் சக்கரவர்த்தி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலி தொழிலாளியாக வேலைப் பார்த்து வந்துள்ளார். இவருக்கு புஷ்பா என்ற மனைவியும், ஒரு மகளும் உள்ளனர். இந்நிலையில் விவசாய கிணறு அருகில் சக்கரவர்த்தி நடந்து சென்று கொண்டிருக்கும் போது திடீரென கால் தவறி கிணற்றில் விழுந்துள்ளார். இதனை அறியாமல் அவரின் உறவினர்கள் பல இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை. பின்னர் […]
உழவர் சந்தையை மறு உத்தரவு வரும் வரை மூடி வைக்க வேண்டும் என கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஜோலார்பேட்டை நகராட்சிக்கு உட்பட்ட 4-வது வார்டு சந்தைக்கோடியூர் பகுதியில் இருக்கும் மெயின் ரோட்டில் வாரந்தோறும் புதன்கிழமை நாளன்று சந்தை நடைபெறுவது வழக்கமாக இருக்கிறது. இந்நிலையில் அந்த சந்தையில் சந்தைக்கோடியூர் உட்பட பல பகுதிகளிலிருந்து அதிகமான அளவில் பொதுமக்கள் வந்து மலிவு விலையில் காய்கறிகளை வாங்கி செல்கின்றனர். இருப்பினும் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து வருகின்ற […]
முககவசம் அணியாமல் வந்த பெண்ணிற்கு சப்-இன்ஸ்பெக்டர் 500 ரூபாய் அபராதம் விதித்துள்ளார். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள சாலைகளில் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக காவல்துறையினர் முககவசம் அணியாமல் வருபவர்களை கண்டித்து அபராதம் விதித்து வருகின்றனர். இந்நிலையில் செட்டியப்பனூர் பகுதியில் போக்குவரத்து காவல்துறை சப்-இன்ஸ்பெக்டர் பன்னீர்செல்வம் தீவிர வாகன சோதனையிலும் மற்றும் கண்காணிப்பிலும் ஈடுபட்டுள்ளார். அப்போது அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த ஒரு தம்பதியை நிறுத்தி இருவரில் ஒருவர் முககவசம் அணியாததால் 500 ரூபாய் அபராதம் செலுத்த […]
தண்டவாளத்தை கடக்க முயன்ற மாணவி ரயிலில் அடிபட்டு உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள வளத்தூர் மோசன்பேட்டை 4-வது தெருவில் நாவஸ்கரீம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தன்சியா என்ற மகள் இருந்துள்ளார். இவர் 4-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் தன்சியா காலை கடன் கழிப்பதற்காக தண்டவாளத்தை கடக்க முயன்ற போது ரயிலில் அடிப்பட்டுள்ளார். பின்னர் அவரை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி தன்சியா […]
கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை குறித்து கலெக்டர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் வைத்து கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகளில் உள்ளாட்சி பிரதிநிதிகள் ஈடுபடுவது குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றுள்ளது. இதற்கு மாவட்ட கலெக்டர் அமர்குஷ்வாஹா தலைமை தாங்கியுள்ளார். அப்போது அவர் கூறியதாவது, இம்மாவட்டத்தில் கொரோனா மற்றும் ஒமைக்ரான் பாதிப்பைக் கட்டுப்படுத்த ஊராட்சி அளவில் கமிட்டி உருவாக்கி அதில் ஊராட்சி மன்ற தலைவர், கிராம செவிலியர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், […]
வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள வெள்ளகுட்டை பகுதியில் கோவர்த்தனன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பட்டப் படிப்பை முடித்து விட்டு வேலை தேடி வந்துள்ளார். இந்நிலையில் இவர் தனது வீட்டில் தனியாக இருந்த போது திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இது பற்றி தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். […]
நகராட்சியை கண்டித்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள தொழிலாளர்கள் சி.ஐ.டி.யு சங்கம் சார்பாக நகராட்சியை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தலைவர் பொன்னுசாமி தலைமை தாங்கியுள்ளார். இதில் மாவட்ட செயலாளர் சரவணன், முருகேசன் மற்றும் சின்ன கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்துள்ளனர். இதனை அடுத்து ஆர்ப்பாட்டத்தை கூட்டமைப்பு தலைவர் ரங்கன் தொடங்கி வைத்து பேசியுள்ளார். அப்போது அவர் கூறியதாவது, குப்பைகள் கொட்ட இடம் ஒதுக்கித் தருமாறும், பேட்டரி வண்டிகளை நகராட்சி நிர்வாகமே […]
மனைவியை பிரிந்து தனியாக வசித்து வந்த விவசாயி மர்மமான முறையில் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள பையனப்பள்ளி எம்.ஜி.ஆர் நகர் பகுதியில் அன்பழகன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஒரு விவசாயி. இவருக்கு சரிதா என்ற மனைவியும், 3 பிள்ளைகளும் உள்ளனர். இதில் தென்னரசு மற்றும் பூவரசம் ஆகிய 2 மகனும் வெளிநாட்டில் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில் சரிதாவுக்கும் அன்பழகனுக்கும் இடையே கள்ளக்காதல் தொடர்பாக பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இதனால் கணவன்-மனைவி இருவருக்கும் […]
அரசு மருத்துவமனையில் வேலை பார்த்து வருகின்ற செவிலியருக்கு ஒமைக்ரான் தோற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் ஒருவர் செவிலியராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் அவருக்கு கடந்த சில நாட்களாக காய்ச்சல் மற்றும் தொண்டை வலி இருந்து வந்ததாகக் கூறப்படுகின்றது. இதனையடுத்து அவர் தற்போது கொரோனா பரிசோதனை செய்துள்ளார். பின்னர் வெளியான பரிசோதனை முடிவில் அவருக்கு புதிய வகையான ஒமைக்ரான் தொற்று அறிகுறி இருப்பதாக தெரியவந்துள்ளது. இதைத் தொடர்ந்து அவரை அரசு மருத்துவமனையில் […]
காளை விடும் விழா நடத்துவதற்கு விண்ணப்பித்த 24 மணி நேரத்தில் அனுமதி வழங்கப்படும் என கலெக்டர் தெரிவித்துள்ளார். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள கலெக்டர் அலுவலகத்தில் வைத்து காளை விடும் விழா நடத்துவது பற்றி ஆலோசனை கூட்டம் நடைபெற்றுள்ளது. இந்த கூட்டத்திற்கு கலெக்டர் அமர்குஷ்வாஹா தலைமை தாங்கியுள்ளார். இதில் சி.என். அண்ணாதுரை எம்.பி, எம்.எல்.ஏ-க்களான அ.செ. வில்வநாதன், நல்லதம்பி, தேவராஜ் ஆகியோர் முன்னிலை வகித்துள்ளனர். அப்போது கலெக்டர் கூறியதாவது, இம்மாவட்டத்தில் காளை விடும் விழா நடத்துபவர்கள் மாவட்ட நிர்வாகத்திடம் […]
தொடர்ந்து நடைபெற்று வருகின்ற மணல் கொள்ளையை தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருப்பத்தூரில் உள்ள பாலாற்றின் கரையோரத்தில் இருக்கும் பகுதிகளில் மண் சாலை ஏற்படுத்தி லாரி, மாட்டு வண்டி மற்றும் டிராக்டர் மூலமாக பகல், இரவு என பாராமல் மணல் கொள்ளை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கடந்த நவம்பர் மாதம் பெய்த வடகிழக்கு பருவமழை காரணத்தினால் பாலாற்றில் வெள்ளம் ஏற்பட்டு தற்போது வரை தண்ணீர் செல்கிறது. இதனால் மணலுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது. […]
பாரத பிரதமரின் விவசாய நிவாரண தொகை வராத காரணத்தினால் விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பாரதப் பிரதமரின் விவசாய நிவாரண தொகையான 2000 ரூபாயை இந்தியா முழுவதும் பல மாநிலங்களில் வசிக்கும் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் புதுப்பேட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் வசிக்கும் 50-க்கும் அதிகமான விவசாயிகளுக்கு தனியார் வங்கியில் தங்கள் கணக்கில் இரண்டு தவணைகளும் பிரதமர் விவசாய நிதி வரவில்லை என கூறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ […]
விபத்தில் சிக்கிய லாரி ஓட்டுனரை தீயணைப்பு வீரர்கள் போராடி மீட்டுள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள நாற்றம்பள்ளி பேருந்து நிறுத்தத்தில் லாரி மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் முன்பகுதி பலத்த சேதம் அடைந்துள்ளது. இதில் லாரி ஓட்டுனர் இடிபாட்டில் சிக்கி உள்ளார். இது பற்றி தகவல் அறிந்த தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று லாரியின் முன் புறத்தை கடப்பாறையால் உடைத்து லாரி ஓட்டுநரை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அங்கு மருத்துவர்களால் […]
ரயில் தண்டவாளத்தின் அருகில் இருக்கும் நடைமேடையில் பாம்பு ஒன்று வந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. திருப்பத்தூரில் இருக்கும் ரயில் நிலையத்தில் பயணிகள் ரயிலுக்காக காத்திருந்த போது முதலாவது நடைமேடையில் கொடிய விஷமுள்ள பாம்பு ஒன்று புகுந்துள்ளது. இதை பார்த்த பயணிகள் அலறியடித்து ஓட்டம் பிடித்துள்ளனர். பின்னர் பாம்பு பிடிக்கும் வாலிபரை வரவழைத்து பாம்பை பிடித்துள்ளனர்.
லாரியில் கடத்தி வரப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை அதிகாரிகள் கைப்பற்றி உள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் ஒரு சில பகுதிகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக நகராட்சி அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்தத் தகவலின் பேரில் நகராட்சி துப்புரவு ஆய்வாளர் விவேக் தலைமையிலான குழு சேலம் மெயின் ரோடு அருகில் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சென்னையில் இருந்து வந்த லாரியை மடக்கி சோதனை செய்ததில் 3 டன் பிளாஸ்டிக் பொருட்கள் இருந்ததை காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர். பின்னர் […]
மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பெறப்பட்ட மனுக்கள் மீது உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள கலெக்டர் கூட்ட அரங்கத்தில் வைத்து மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றுள்ளது. இதற்கு கலெக்டர் அமர்குஷ்வாஹா தலைமை தாங்கி உள்ளார். இந்த கூட்டத்தில் பொதுமக்கள் கலந்து கொண்டு இலவச வீட்டுமனைப்பட்டா, கூட்டுறவு கடன் உதவி, குடிநீர் வசதி, வேலைவாய்ப்பு, மாற்றுத் திறனாளிகள் நலத் திட்ட உதவிகள், முதியோர் உதவி தொகை என […]
15 வயது முதல் 18 வயது வரை இருக்கும் நபர்களுக்கு கொரோனா தடுப்பூசி முகாம் தற்போது நடைபெற்று வருகிறது. திருப்பத்தூர் மாவட்டத்தின் கலெக்டர் அமர்குஷ்வாஹா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியதாவது, இம்மாவட்டத்தில் 15 வயது முதல் 18 வயது வரை இருக்கும் நபர்களுக்கு தடுப்பூசி போடும் முகாம் தற்போது பள்ளி, கல்லூரிகளில் மருத்துவ குழுக்கள் மூலமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இம்மாவட்டத்தில் இருக்கும் 54,000 மாணவ-மாணவிகளுக்கும் வருகின்ற 8-ஆம் தேதிக்குள் தடுப்பூசி செலுத்த வேண்டுமென திட்டமிடப்பட்டிருக்கிறது. இதில் […]
புத்தாண்டு தினம் அன்று 19 குழந்தைகள் அரசு மருத்துவமனையில் பிறந்திருப்பதாக டாக்டர் குமாரவேல் தெரிவித்துள்ளார். திருப்பத்தூரில் இருக்கும் அரசு மருத்துவமனையில் புத்தாண்டு நாளன்று 19 குழந்தைகள் பிறந்துள்ளது. அதில் 13 பெண் குழந்தைகள் மற்றும் ஆறு ஆண் குழந்தைகள் பிறந்துள்ளது. இந்நிலையில் இது பற்றி மருத்துவ அலுவலர் டாக்டர் குமாரவேல் கூறியதாவது, இம்மாவட்டத்தின் அரசு மருத்துவமனையில் கடந்த ஆண்டு மட்டும் 6,412 குழந்தைகள் பிறந்துள்ளது. அதன்பின் அரசு மருத்துவமனைகளில் நடந்த மகப்பெரு சிகிச்சையில் இம்மாவட்டத்தின் மருத்துவமனை முதலிடம் […]
இருசக்கர வாகனம் மீது மினிலாரி மோதி வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள மேல்பள்ளிப்பட்டு பகுதியில் சக்திவேல் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சவுண்ட் சர்வீஸ் கடையில் பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் வாடகைக்கு கொடுத்திருந்த பந்தல் மற்றும் நாற்காலிகள் உள்ளிட்ட இரும்பு சாமான்களை ஏற்றி வருமாறு மினிலாரி வைத்திருக்கும் பாலாஜி என்பவர் ராஜாவை அனுப்பி வைத்துள்ளார். அதன்பின் பாலாஜியுடன் பணியாட்களான சங்கர் மற்றும் சக்திவேல் ஆகிய இருவரும் பொருட்களை ஏற்றி வருவதற்காக சென்றுள்ளனர். […]
கிணற்றில் முழ்கி வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள பெரியகுப்பம் பகுதியில் செல்வகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு உதயகுமார் என்று தம்பி இருந்துள்ளார். இவர் கட்டிட மேஸ்திரியாக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு சுமதி என்ற மனைவியும் ஏழு மாத ஆண் குழந்தையும் உள்ளனர். இந்நிலையில் உதயகுமாரும் செல்வகுமாரும் விவசாய கிணற்றுக்கு அருகில் அமர்ந்து பேசிக் கொண்டிருக்கும் போது எதிர்பாராத விதமாக செல்வகுமார் கிணற்றில் தவறி விழுந்துள்ளார். இதைப் பார்த்து அதிர்ச்சி […]
சி.ஐ.டி.யு தொழிற்சங்கம் சார்பாக காத்திருப்பு போராட்டம் நடைபெற்றுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள அரசு போக்குவரத்து பணிமனை முன்பாக சி.ஐ.டி.யூ சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம், காத்திருப்பு போராட்டம் நடைபெற்றுள்ளது. இதில் தருமபுரி மண்டல பொதுச்செயலாளர் முரளி தலைமை தாங்கியுள்ளார். இந்நிலையில் இந்த ஆர்ப்பாட்டத்தை சி.ஐ.டி.யு ஒருங்கிணைப்பாளர் கேசவன் தொடங்கி வைத்து பேசியுள்ளார். அதன்பின் இம்மாவட்டத்தில் போக்குவரத்து பணிமனை சி.ஐ.டி.யு கிளை தலைவர் சுதாகர் மற்றும் செயலாளர் முகுந்தன் ஆகியோர் பணிமனை முன்பாக பெயர் பலகையை திறந்து வைத்து வாயிற் […]
நிலப்பிரச்சினை தகராறில் வாலிபர் அடித்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள பூங்குளம் பகுதியில் முனுசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு முரளி மற்றும் தமிழரசன் என இரு மகன்கள் உள்ளனர். இந்நிலையில் இவர்கள் இருவரும் தங்களுக்குச் சொந்தமான 3 ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்து வந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பாக முரளி திடீரென மர்மமான முறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. அதன்பின் அண்ணன் மற்றும் தம்பி […]
கர்நாடகாவிலிருந்து கடத்தி வரப்பட்ட குட்காவை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள லட்சுமிபுரம் பகுதியில் காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக வந்த ஒரு மினி லாரியை நிறுத்தி சோதனை செய்ததில் புைகயிலை பாக்கெட்கள், பான்மசாலா மற்றும் குட்கா ஆகியவை 150 மூட்டைகளில் கர்நாடகாவில் இருந்து சென்னைக்கு கடத்தி வந்ததாக ஓட்டுநர் கூறியுள்ளார். இதனை அடுத்து மினி லாரி ஓட்டுனரான கிஷ்கிந்தா ரோடு பகுதியில் வசிக்கும் முத்து என்பவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். […]
காவல்துறை அதிகாரிகள் பொதுமக்களுடன் இணைந்து ஆங்கிலப் புத்தாண்டை கொண்டாடி உள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள பேருந்து நிறுத்தத்தில் காவல் நிலையம் சார்பாக பொதுமக்கள் மற்றும் காவல்துறையினரின் நண்பர் என விழிப்புணர்வை ஏற்படுத்தும் வண்ணம் அனைத்து காவல்துறையினரும் பொதுமக்களுடன் இணைந்து ஆங்கில புத்தாண்டை கொண்டாடி உள்ளனர். இதில் துணை காவல்துறை சூப்பிரண்டு சுரேஷ் பாண்டியன் தலைமை தாங்கி கேக் வெட்டி கொண்டாடி உள்ளார். இந்நிலையில் பேருந்து நிறுத்தத்தில் இருந்த பொதுமக்களுக்கு அவர்கள் கேக் வழங்கியுள்ளனர். இதனை அடுத்து இந்நிகழ்ச்சியில் […]
வேன் மோதி பேருந்து ஓட்டுனர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள பிள்ளையார் கோவில் பகுதியில் சித்தார்த் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பேருந்து ஓட்டுநராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் இவர் தனது நண்பரான ஜெயசீலன் என்பவருடன் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருக்கும் போது தூய நெஞ்சக் கல்லூரி அருகாமையில் சென்ற நிலையில் திடீரென வேன் மோதியது. இந்த விபத்தில் பலத்த காயமடைந்த இருவரையும் அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துமனைக்கு […]
வாலிபருக்கு ஒமைக்ரான் தோற்று உறுதி செய்யப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள கும்மிடிகான்பட்டி கிராமத்தில் 30 வயதுடைய வாலிபர் ஒருவர் வசித்து வருகிறார். இவர் துபாயில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் இவர் துபாயில் இருந்து தற்போது இந்தியா திரும்பியுள்ளார். இதில் அவர் அங்கிருந்து கொரோனா தொற்று இல்லை என சான்று பெற்று வந்துள்ளார். அதன்பின் சென்னை வந்ததும் அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு சொந்த ஊருக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதனை அடுத்து அவர் அங்கிருந்து […]
மாற்றுத் திறனாளிகள் நலத் துறையின் சார்பாக மாவட்ட அளவிலான கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் வைத்து நடைபெற்றுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள கலெக்டர் கூட்ட அரங்கத்தில் வைத்து மாற்றுத் திறனாளிகள் நலத் துறை சார்பாக மாவட்ட அளவிலான கூட்டம் நடைபெற்றுள்ளது. இதற்கு மாவட்ட கலெக்டர் அமர்குஷ்வாஹா தலைமை தாங்கி உள்ளார். இந்நிலையில் இம்மாவட்டத்தில் நடைபெற்று வருகின்ற மாற்றுத்திறனாளிகள் சிறப்பு முகாம்களிலும் மற்றும் மக்கள் தீர்ப்பு நாள் கூட்டத்தின் வாயிலாகவும் இதுவரை 18, 573 மனுக்கள் பெறப்பட்டு இருக்கிறது. இதன் […]
17-வது நாளாக தொழிளார்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள வடபுதுப்பட்டி பகுதியில் கூட்டுறவு சர்க்கரை ஆலை அமைந்திருக்கிறது. இந்நிலையில் இந்த சர்க்கரை ஆலையானது கடந்த 3 ஆண்டுகளாக செயல்பாட்டில் இல்லாமல் இருக்கிறது. இதனை அடுத்து அரவை பருவத்தை தொடங்க வேண்டியும் மற்றும் தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகையை வழங்க கோரியும், 30-க்கும் அதிகமான தொழிலாளர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் 17-வது நாளாக கஞ்சி காய்ச்சி அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தனது மகளுடன் நகைக்கடைக்கு சென்ற பெண் தவறவிட்ட கைப்பையை வாலிபர் ஒருவர் எடுத்துச் சென்ற காட்சி சி.சி.டிவியில் பதிவாகியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள நியூ டவுன் பகுதியில் வசிக்கும் கவுசர் என்ற பெண் தனது மகளுடன் நகைக் கடைக்கு சென்றுள்ளார். இந்நிலையில் ஆட்டோவிலிருந்து அவர் இறங்கிய போது கையில் வைத்திருந்த கைப்பை அவருக்கு தெரியாமலேயே நழுவிக் கீழே விழுந்து விட்டது. இதை அறியாமல் அவர்கள் கடைக்குள் சென்று நகை வாங்கி பணம் கொடுக்கும் சமயத்தில் கைப்பையை பார்த்த […]
இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருக்கும் போது பெண் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள திருமலைகுப்பம் பகுதியில் சற்குணம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஏ.டி.எம் எந்திரத்தில் பணத்தை எடுத்து விட்டு பஸ்சுக்காக பேருந்து நிலையத்தில் காத்திருக்கின்றனர். அப்போது அவ்வழியாக வந்த சதீஷ் என்பவரின் இருசக்கர வாகனத்தில் இருவரும் லிப்ட் கேட்டு ஏறி சென்றுள்ளனர். இதனை அடுத்து ஆர்.பட்டி அருகாமையில் சென்ற போது ஓடும் இருசக்கர வாகனத்திலிருந்து சற்குணம் திடீரென மயக்க […]
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பரிசு தொகுப்பாக 21 பொருட்கள் வினியோகம் செய்ய முன்னேற்பாடு பணிகள் நடந்து வருகிறது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள செவ்வாத்தூர் ஊராட்சி மதுரா கவுண்டப்பனூர் கிராமத்தில் இருக்கும் ஆறு ஏக்கர் பரப்பளவில் சிறு விளையாட்டு அரங்கம் அமைக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த இடத்தை கலெக்டர் நேரில் சென்று ஆய்வு செய்துள்ளார். அதன்பின் குனிச்சியில் இருக்கும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக கிடங்கில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட இருக்கும் பொங்கல் பரிசு […]
தேசிய நெடுஞ்சாலையில் அடிக்கடி விபத்துகள் நடைபெறும் இடங்களை காவல்துறை சூப்பிரண்டு பாலகிருஷ்ணன் நேரில் சென்று ஆய்வு செய்துள்ளார். வேலூர் பகுதியில் இருந்து கிருஷ்ணகிரி நோக்கி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் அடிக்கடி விபத்துகள் நடைபெறும் இடங்களை திருப்பத்தூர் மாவட்ட காவல்துறை சூப்பிரண்டு பாலகிருஷ்ணன் திடீரென பார்வையிட்டு ஆய்வு செய்துள்ளார். அப்போது அடிக்கடி செல்போன் பறிப்பு மற்றும் வழிப்பறி நடைபெறும் இடங்களுக்குச் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்துள்ளார். இதனை அடுத்து குற்றங்கள் மற்றும் விபத்துகளை தடுக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் […]
காவல் நிலையம் முன்பாக தி.மு.க-வினர் முற்றுகையிட்டு புகார் அளித்துள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள காவல் நிலையத்தை பேரணாம்பட்டு தெற்கு ஒன்றிய தி.மு.க மாணவரணி அமைப்பாளர் சத்திய திருநாவுக்கரசு மற்றும் ஊராட்சி மன்ற தலைவர் பாரதி உள்ளிட்ட தி.மு.க-வினர் முற்றுகையிட்டு புகார் அளித்துள்ளனர். இதில் எம்.எல்.ஏ மீது அவதூறு பரப்பிய நபர் மீது நடவடிக்கை எடுக்குமாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இ-சேவை மையம் மூலமாக பொதுமக்களுக்கு 22 வகையான சான்றிதழ்கள் வழங்கப்பட்டு வருகின்றது. திருப்பத்தூர் மாவட்டத்தில் பேரிடர் மேலாண்மைத் துறை மற்றும் வருவாய்த் துறையின் கீழ் இ-சேவை மையத்தின் மூலமாக தற்போது பொதுமக்களுக்கு 22 வகையான சான்றிதழ்கள் வழங்கப்பட்டு வருகின்றது. இதனை அடுத்து பழங்குடியினர்களுக்கான ஜாதிச் சான்றிதழ் இணைய தளத்தின் மூலமாக வழங்கப்படயுள்ளது. இந்தச் சான்று கோரிக்கை விண்ணப்பிக்கும் பழங்குடியினர் இ-சேவை மையம் மூலமாக விண்ணப்பித்து பெற்றுக் கொள்ளலாம் என மாவட்ட கலெக்டர் அமர்குஷ்வாஹா தெரிவித்துள்ளார்.
தண்டவாளத்தில் வேலை பார்த்துக் கொண்டிருக்கும் போது ஊழியர் மீது ரயில் மோதி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள தெக்குப்பட்டு சிகரானப்பள்ளி பகுதியில் மணி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வினோத் குமார் என்ற மகன் இருந்துள்ளார். இவர் ரயில் நிலையத்தில் டிராக் மேனாக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் கன்னிகாபுரம் பகுதியில் தண்டவாளம் பராமரிப்பு பணியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் போது எதிர்பாராவிதமாக இவர் மீது ரயில் மோதியது. இந்த விபத்தில் வினோத்குமார் சம்பவ […]
தொழிற்சாலை ஊழியரை தாக்கிய குற்றத்திற்காக 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணாபுரம் பகுதியில் கவுதம் ராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் இருக்கும் தொழிற்சாலையில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் கவுதம் ராஜ்க்கும் வாணியம்பாடி பகுதியில் வசிக்கும் நண்டு என்பவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் கவுதம் ராஜை நண்டு என்பவருடைய நண்பர்கள் தாக்கியுள்ளனர். இதில் படுகாயம் அடைந்த கவுதம் ராஜை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு […]
தண்டவாளத்தில் கிடந்த சடலம் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள திருமால் நகர் பகுதியில் சாந்தகுமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் டைல்ஸ் மற்றும் ரியல் எஸ்டேட் வியாபாரம் செய்து வந்திருக்கிறார். இவருக்கு மேகலா என்ற மனைவியும், 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் சாந்தகுமார் திடீரென ரயிலில் அடிபட்டு தண்டவாளம் அருகில் இறந்த நிலையில் கிடந்துள்ளார். இது பற்றி தகவல் அறிந்த ரயில்வே காவல்துறையினர் மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து […]
அரசு மருத்துவமனையில் கர்ப்பிணிப் பெண்களின் வார்டில் நாய் சுற்றித்திரிந்து பொதுமக்களை அச்சுறுத்தி வருகிறது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைக்கு நாள்தோறும் ஆயிரத்திற்கும் அதிகமான நோயாளிகள் சிகிச்சை பெற்று செல்கின்றனர். இந்நிலையில் இங்கு 100-க்கும் அதிகமான உள்நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால் மருத்துவமனையில் எப்போதும் மக்கள் கூட்டம் இருந்து கொண்டே இருக்கின்றது. இதில் அரசு மருத்துவமனையில் குப்பை கழிவுகளை அகற்றுவது இல்லை எனவும், கால்வாய்களை தூர்வாரவில்லை என்றும், இரவு நேரங்களில் மின் விளக்குகளை போடுவதில்லை என்று […]
மளிகை பொருட்கள் வாங்க சென்ற மாணவன் மீது லாரி மோதி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள கலந்திரா ராசன் வட்டம் பகுதியில் தட்சிணா மூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பிரவீன்குமார் என்ற மகன் இருந்துள்ளார். இவர் தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்துள்ளார். இந்நிலையில் மளிகைப் பொருட்கள் வாங்கி விட்டு வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருக்கும் போது மண்டலவடி கூட்டு ரோடு அருகில் சென்ற நிலையில் பின்னால் வந்த டேங்கர் லாரி எதிர்பாராதவிதமாக […]
இளம் பெண்ணை தற்கொலைக்கு தூண்டிய கணவன் உள்பட 4 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள போளிப்பாக்கம் கிராமத்தில் முத்துமாரியம்மன் கோவில் தெருவில் கார்த்திகேயன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி தொழிலாளியாக வேலைப் பார்த்து வருகிறார். இவருக்கு ஜீவா என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் ஜீவா தனது வீட்டின் படுக்கை அறையில் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இது பற்றி தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஜீவாவின் உடலை […]
மின்சாரம் தாக்கி கல்லூரி மாணவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள புதுப்பேட்டை முத்தானூர் பகுதியில் விஷ்வா என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அரசு கலைக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்துள்ளார். இந்நிலையில் விஷ்வா தனது வீட்டின் தண்ணீர்த் தொட்டியில் நீரேற்றி உள்ளார். அதன்பின் தொட்டி நிறைந்ததும் மின் மோட்டாரின் சுவிட்சை ஆப் செய்துள்ளார். அப்போது மின்சாரம் தாக்கி அவர் தூக்கி வீசப்பட்டுள்ளார். இதனை அடுத்து அவரை குடும்பத்தினர் மீட்டு சிகிச்சைக்காக அரசு […]
சிறுமியை திருமணம் செய்து கர்ப்பமாக்கிய வாலிபரை போக்சோ சட்டத்தில் மகளிர் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் ஒருவர் தனது குடும்பத்துடன் வசித்து செங்கல் சூளையில் வேலை பார்த்து வருகிறார். இவரின் 15 வயதுடைய மகளை அதே செங்கல் சூளையில் வேலை பார்க்கும் லட்சுமணன் என்பவர் காதலித்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பாக அவரின் மகளை லட்சுமணன் திருமணம் செய்துள்ளார். அதன்பின் தற்போது சிறுமி 8 மாத கர்ப்பிணியாக இருக்கின்ற […]
இறந்தவரின் உடலை ஓடை புறம்போக்கு நிலத்தில் புதைப்பதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஏலகிரி மலையில் இருக்கும் தாயனூர் கிராமத்தில் 150-க்கும் அதிகமான குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள். இந்நிலையில் இங்கு யாராவது இறந்து விட்டால் அவரது உடலை பொதுமக்கள் ஊருக்கு வெளியே இருக்கும் ஓடை புறம்போக்கு இடத்தில் அடக்கம் செய்து வந்துள்ளனர். அதன்பின் கடந்த 7 வருடங்களுக்கு முன்பாக நீரோடையில் உடலை புதைக்கக் கூடாது என்பதைக் கருதி சுடுகாட்டுக்கு அரசு சார்பாக இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. […]